ராதே கிருஷ்ணா 29-01-2014
From the album: Timeline Photos
By பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்ரமணியன்
தை அமாவாசையின் சிறப்பு;
-----------------------------------------
அமாவாசை அல்லது அமைவாதல் என்பது சந்திரன் தோன்றாத அல்லது முழுவதும் மறைந்திருக்கும் நாளாகும். வானியலின்படி, பூமியைச் சுற்றிவருகின்ற சந்திரன் பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் வரும் நாளே அமாவாசையாகும்.
பிதுர்களுக்கு திதி கொடுப்பதை ஏதோ செய்யக் கூடாத செயலாகப் பலரும் கருதுகிறார்கள். திதியன்றும், அமாவாசை நாளிலும் வாசலில் கோலமிடுவது கூடாது என்பதால் அசுபமான நாளாக சிலர் எண்ணுகின்றனர். முன்னோர் வழிபாட்டில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்ற நோக்கத்திலேயே பிதுர்க்கடன் நாளன்று கோலமிடுவது போன்ற செயல்களைத் தவிர்க்க சொல்லியுள்ளனர்.
இந்த நாளில் புண்ணிய நதிகளிலும்,கடலிலும் நீராடி பிதுர்களுக்கு திதி கொடுப்பது மிகவும் சிறப்பாகும்.
முன்னோரது ஆசி பெற அமாவாசை, வருஷதிதி, மகாளயபட்ச நாட்கள் உகந்தவை. இவை புண்ணிய நாட்களாகும். கேளிக்கை, சுபநிகழ்ச்சிகளை இந் நாட்களில் தவிர்க்க வேண்டும் என்பது விதி. இதன் காரணமாக இந்த நாளை ஆகாத நாளாக எடுத்துக் கொள்ளக் கூடாது. தை அமாவாசை நாளில் நம் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
தை அமாவாசை நாளில் உடை, உணவை ஏழைகளுக்கு தானமாக கொடுத்து நாம் அளவற்ற நன்மைகள் அடையலாம்.தடைபட்ட திருமணம், நீண்ட நாள்பட்ட நோய் நொடிகள், மன வருத்தம் ஆகியவை விலகி சந்தோஷமும் மனநிறைவும் நம் இல்லத்திலும், உள்ளத்திலும் ஊற்றெடுக்கும்.
அமாவாசை தினத்தன்று எந்தக் கிரகமும் திதி தோஷம் பெறுவதில்லை.இதன் காரணமாக அமாவாசை திதியில் சில விடயங்கள் மேற்கொண்டால் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைய முடியும். மருந்து உண்ணுதல், நோயாளிகள் குளித்தல் உள்ளிட்ட பல விடயங்களை அமாவாசை திதியன்று துவங்கலாம் என சித்த நூல்கள் கூறுகின்றன.
எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும் அமாவாசையன்று செய்தால் அதற்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். சர்ப்பதோஷம், சனி, செவ்வாய் கிரகங்களால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் இந்த மாதிரியானவற்றிற்கு அமாவாசை திதியன்று பரிகாரம் செய்வது நல்லது. ராகு-கேது பரிகாரம் மட்டுமல்லாது, மற்ற வகைப் பரிகாரங்களும் செய்வதற்கு அமாவாசை திதி ஏற்றதாகும்.
குறிப்பு;வரும் வியாழக்கிழமை(தை 17,30-01-2014) தை அமாவாசையாகும்.
அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

தை அமாவாசையின் சிறப்பு; -----------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக