சனி, 4 ஜனவரி, 2014

ஆஞ்சநேயரின் பஞ்சமுகத்திற்கான காரணம்:

ராதே கிருஷ்ணா 04-01-2014


ஆஞ்சநேயரின் பஞ்சமுகத்திற்கான காரணம்:










Status Update
By Hinduism
ஆஞ்சநேயரின் பஞ்சமுகத்திற்கான காரணம்:

இராமருக்கும், இராவணனுக்கும் போர் நடந்தது. இதில் இராவணன் நிராயுதபாணியானான். இதனால் இராமர் இராவணனை கொல்ல மனமின்றி,”இன்று போய் நாளை வா’ என திருப்பி அனுப்பிவிட்டார்.

இராமர் இவ்வாறு செய்தது தன்னை திருத்துவதற்குத்தான் என்பதை இராவணன் உணரவில்லை. மீண்டும் இராமருடன் போர் செய்ய நினைத்த இராவணன், “மயில் இராவணன்’ என்ற மற்றொரு அசுரனது துணையுடன் போருக்கு கிளம்பினான்.

இராமரை அழிப்பதற்காக மயில் இராவணன் கொடிய யாகத்தை நடத்த திட்டமிட்டான்.இந்த யாகம் நடந்தால் இராம-லட்சுமணனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்த விபீஷணன், யாகத்தை தடுத்து நிறுத்த ஆஞ்சநேயரை அனுப்பும்படி இராமரிடம் கூறினான்.

இராமர் கூறியதன் பேரில் ஆஞ்சநேயர் யாகத்தை தடுத்து நிறுத்த கிளம்பும் முன் நரசிம்மர், ஹயக்கிரீவர், வராகர், கருடன், ஆகியோரை வணங்கி ஆசி பெற்றார்.இந்த தெய்வங்கள் அனைவரும் போரில் அனுமன் வெற்றிபெற தங்களின் உருவ வடிவின் சக்தியை அனுமனுக்கு அளித்தனர். இதன்மூலம் ஆஞ்சநேயர் பஞ்சமுகம் கொண்டு விஸ்வரூபம் எடுத்து மனித குல வாழ்விற்காக மயில் இராவணனை அழித்தார்.

இப்படி பஞ்ச முகத்தில் விசேஷ அவதாரம் எடுத்ததால், பக்தர்களின் தீர்க்க முடியாத குறைகளை தீர்த்து வைக்கும் அருளாற்றல் கொண்டவராக “பஞ்சமுக ஆஞ்சநேயர்’ விளங்குகிறார். அத்துடன் வெற்றியையும் வளத்தையும் குறிக்கும் வகையில் “ஜய மங்களா’ என்றும் அழைக்கப்படுகிறார்.

பஞ்ச முகத்தில் விசேஷ அவதாரம் எடுத்ததால் உள்ள ஆஞ்சநேயரை வழிபடுபவர்களுக்கு நரசிம்மரின் அருளால் எடுத்த காரியங்களில் வெற்றியும், லட்சுமி கடாட்சமும், ஹயக்கிரீவரின் அருளால் உண்மையான அறிவாற்றல், ஆன்மிக பலமும், வராகரின் அருளால் மனத்துணிவும், கருடனின் அருளால் அனைத்து விதமான நஞ்சின் ஆபத்து விலகும் தன்மையும், ஆஞ்சநேயரின் அருளால் மன அமைதியும், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.








Photos from Mannargudi Sitaraman Srinivasan's post in Sage of Kanchi
By Mannargudi Sitaraman Srinivasan
பெரியவாளிடம் அளவற்ற பக்தி கொண்ட ஒரு முதியவர், காலகதி அடையும் தறுவாயில் தன் மகனை அழைத்து சில விஷயங்களை சொல்லும் போது, தான் ஒருவரிடம் நூறு ரூபாய் கடன் வாங்கியதாகவும், அதை அவன் திருப்பித் தரவேண்டும் என்று சொல்லிவிட்டு இறந்தார்.

அப்போது மகனுக்கே 62 வயது. கிராமத்தில் கர்ணம் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். சம்பளமோ 15 ரூபாய்தான். அப்பாவின் கடைசி வாக்கை காப்பாற்ற கஷ்டப்பட்டு மூன்று வருஷங்களில் எப்படியோ 100 ரூபாய் சேர்த்தார்.

இதில் வேடிக்கை என்னவென்றால், அப்பாவுக்கு கடன் குடுத்தவர் யாரென்றே மகனுக்குத் தெரியாது! சேமித்த பணத்தை யாரிடம் கொடுப்பது?

மஹாபெரியவா - திக்கற்றவருக்கு தெய்வமே துணை!

ஓடினார் பெரியவாளிடம்! விவரத்தை சொன்னார்.

“மடத்ல ஒரு நாள் தங்கு” உத்தரவானது.

மறுநாள் காலை பெரியவா அவரிடம் “இங்கேர்ந்து நேரா…………நீ ஆலத்தம்பாடி கிராமத்துக்கு போ! அங்க இருக்கும் அக்ரஹாரத்ல கடைசியா இருக்கும் வீட்ல இருக்கறவர்கிட்டதான் ஒங்கப்பா கடன் வாங்கினார்”.

ஆலத்தம்பாடி அக்ரஹாரத்தில் பெரியவா சொன்ன வீட்டுக்கு சென்றால்…… ஆச்சர்யம்! அந்த வீட்டுப் பெரியவர் ஏற்கனவே காலகதி அடைந்துவிட்டார்.

அவருடைய மகனிடம் விஷயத்தை சொன்னதும், அவருக்கு ஒரே வியப்பு!

“எங்கப்பாவும் செத்துப் போகும்போது சில விஷயங்கள்லாம் சொன்னார்…….. ஆனா, உங்கப்பாவுக்கு குடுத்த கடன் பத்தின விஷயத்தை சொல்லவேயில்லையே! அதுனால, இந்த பணத்தை நான் வாங்கிக்க மாட்டேன்” திட்டவட்டமாக சொல்லிவிட்டார்.

அவரையும் அழைத்துக் கொண்டு பெரியவாளிடம் வந்தார்.

ரெண்டுபக்கத்து நியாயத்தையும் கேட்டதும், பெரியவா முகத்தில் புன்னகை.

“இங்கதான் தர்மம் இருக்கு. இன்னொர்த்தர் சாமானை வாங்கறப்போ… நமக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். ஆனா, அதை திருப்பித் தரணும்னா…… யோசிப்போம்!

அதுனால, கடன் வாங்கின பாவத்துக்கு பரிகாரமே இல்லை.

இங்க, ஒங்க ரெண்டு பேரோட விவகாரம் எப்டி?

வாங்கினவர் திருப்பித் தரணும்..ன்னு நெனைக்கிறார்…….. குடுத்தவரோட பிள்ளையோ, அப்பா தங்கிட்ட அதைப் பத்தி சொல்லாததால, வாங்கிக்க மாட்டேங்கறார்…… ஆனா, தர்மம் ஒங்களுக்கு தெரியாது இல்லியா?

அடுத்தவா பொருளுக்கு ஆசைப்படாதவன் தர்மத்தை காப்பாத்தறான்.

ரெண்டு பேரும் சேர்ந்து காமாக்ஷி கோவிலுக்கு போய், இந்த பணத்தை அங்க உண்டியல்ல போட்டுடுங்கோ! அது அவளோட பணம்” ஆசீர்வாதம் பண்ணினார்.





















Status Update
By Mannargudi Sitaraman Srinivasan
பெரியவர் வெறும் சாஸ்திர சம்பிரதாயங்களை மட்டும் பிடித்துக்கொண்டு இருப்பவர் அல்ல; மனிதாபிமானத்தை, மனித நேயத்தையே விரும்பியவர்

ஒருமுறை ‘திருவாடனை’ என்னும் ஊரிலிருந்து பக்தர்கள் கூட்டம் பெரியவாளைத் தரிசிக்க வந்தது. பெரியவர்கள் அன்று காஷ்ட மௌனம் இருந்தார். அதாவது, ஒரு சிறு சப்தம் கூட எழுப்பாமல், முழுமையான மௌனத்தில் இருப்பார். வருடத்தில் ஒருநாள் அவர் இப்படி காஷ்ட மௌனம் இருப்பது வழக்கம். முப்பது வருடங்களுக்கும் மேலாக அவர் கடைப்பிடித்து வந்த வழக்கம் இது. ஒருமுறை, அன்றைய பாரதப் பிரதமர் திருமதி இந்திராகாந்தி வந்த சமயத்தில்கூடப் ...பெரியவர் தம் மௌன விரதத்தை விட்டுக் கொடுக்கவில்லை.

அன்றைக்குத் திருவாடனை ஊரிலிருந்து வந்திருந்த பக்தர் கூட்டத்தில் சங்கரன் என்பவரும் இருந்தார். அவர் பிரிட்டிஷ் ஆட்சியின்போது தேச விடுதலைக்காகப் போராடி, ஆங்கிலேயர்களிடம் தடியடி பட்டு, இரு கண் பார்வையையும் இழந்தவர்.

மடத்துச் சிப்பந்தி ஒருவர், வந்திருந்த பக்தர் ஒவ்வொருவரையும் பெரியவாளுக்கு அறிமுகம் செய்துவைக்க, பெரியவர் மௌனமாகவே ஆசி வழங்கிக்கொண்டு இருந்தார்.

சங்கரன் முறை வந்தபோது, அவரையும் பெரியவருக்கு அறிமுகம் செய்தார் மடத்துச் சிப்பந்தி. சங்கரனை பெரியவருக்கு ஏற்கெனவே தெரியும். சங்கரனைப் பார்த்ததும் பெரியவர் உரத்த குரலில், “என்ன சங்கரா? எப்படி இருக்கே? சௌக்கியமா? உன் மனைவியும் குழந்தைகளும் நன்னா இருக்காளா? இன்னும்கூட உன்னால முடிஞ்ச வரைக்கும் தேசத் தொண்டு செஞ்சுண்டு இருக்கே போலிருக்கே?” என்று கேட்டு, ஆசீர்வதித்தார்.

சங்கரனுக்கு ரொம்ப சந்தோஷம். அதே நேரம், மடத்து சிப்பந்திகளுக்கும் மற்றவர்களுக்கும் பெரிய ஆச்சரியம்… முப்பது வருஷமாகக் கடைப்பிடித்து வரும் மௌன விரதத்தை முறித்து விட்டாரே பெரியவர் என்று!

எல்லோரும் பிரசாதம் வாங்கிக்கொண்டு அங்கிருந்து அகன்ற பின்பு, சிப்பந்திகள் தயங்கித் தயங்கிப் பெரியவரிடம் சென்று, “பெரியவா எதுக்காக மௌன விரதத்தை முறிச்சுட்டீங்க? எல்லாருக்கும் மௌனமா ஆசி வழங்கினது போலவே இந்தச் சங்கரனுக்கும் ஆசி வழங்கியிருக்கலாமே? இவர் என்ன அவ்வளவு பெரிய ஆளா?” என்று கேட்டனர்.

பெரியவர் புன்னகைத்தபடியே, “எல்லாரையும் போல சங்கரனை நடத்தக் கூடாது. இவனுக்குப் பாவம் கண் தெரியாது. என்னைப் பார்த்து ஆசி வாங்கணும்னு அவ்வளவு தூரத்திலேர்ந்து வந்திருக்கான். அவனால் என்னைப் பார்க்க முடியாது. நானும் மௌனமா ஆசீர்வாதம் பண்ணினேன்னா, அது அவனுக்குப் போய்ச் சேராது. நான் அவனைப் பார்த்தேனா, ஆசீர்வாதம் பண்ணினேனான்னு அவனுக்குத் தெரியாது. மனசுக்குக் குறையா இருக்கும். வருத்தப்படுவான். இந்தத் தேசத்துக்காகத் தன் கண்களை தானம் செஞ்சவன் அவன். அவனுக்காக நான் என் ஆசாரத்தை விட்டுக் கொடுத்தேன்னா ஒண்ணும் குடிமுழுகிப் போயிடாது. அதனால எதுவும் குறைஞ்சுடாது. அவனோட தியாகத்துக்கு முன்னாடி என்னோட ஆசாரம் ஒண்ணுமே இல்லே!” என்றார் நிதானமாக.

பெரியவர் வெறும் சாஸ்திர சம்பிரதாயங்களை மட்டும் பிடித்துக்கொண்டு இருப்பவர் அல்ல; மனிதாபிமானத்தை, மனித நேயத்தையே விரும்பியவர்; இந்த விஷயத்தில் மற்றவர்களுக்குத் தாமே ஒரு வழிகாட்டியாகவும் திகழ்ந்தார் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஓர் உதாரணம்!

















From the album: Timeline Photos
By Mannargudi Sitaraman Srinivasan
கோர்ட் கேஸ் எதுக்கு?
(பெரியவா வாக்கு பொய்க்குமா?)

கேரளாவை சேர்ந்த ஒரு பக்தர் தன் மனைவியுடன் பெரியவாளை தர்சனம் பண்ண வந்தார். அவருடைய க்ஷேமலாபங்களை விஜாரித்தார் பெரியவா.

"பரம்பரை குடும்ப சொத்து நிலம், வீடு, ரொக்கம் எல்லாமே இன்னும் பாகம் பிரிக்காம இருக்கு...என்னோட தம்பி சிறுவயஸ்லேர்ந்தே யாருக்கும் அடங்காம, ரொம்ப மொரட்டு ஸ்வபாவம்...இப்போ தனியா வேற எடத்துல இருக்கான். பாகம் பிரிச்சுக் குடுத்துடலாம்.ன்னு நெனைச்சேன். ஆனா அவனுக்கு எதுவுமே ஒத்து வரலே! போறாததுக்கு இப்போ எம்மேல கேஸ் வேற போடப்போறதா கேள்விப்பட்டேன்...பெரியவாதான் எனக்கு துணை" என்றார்.

"சரி, ஸூட் போட்டா அதுக்கு எவ்ளவ் ரூவாய்க்கு ஸ்டாம்ப் வாங்க வேண்டியிருக்கும்? அப்றம்..வக்கீல் பீஸ்?"

அவர் எத்தனையோ ஆயிரங்கள் என்று கணக்கு சொன்னார்.

"ஒன்னோடது பழங்கால சொத்து. அதுனால ரிஜிஸ்ட்ரார் ஆபீஸ்லேர்ந்து டாகுமென்ட்ஸ் தேடிப்பிச்சு வாங்கும்படி ஆறதுண்டே! அப்டி எதாவுது இருக்குமோல்லியோ? இருந்தா,அதுக்கு எவ்ளவ் ஆகும்? சரி. கேஸ்..ன்னா லேஸ்ல முடியாது. எத்தனை நாளாகும்னு நெனைக்கறே?"

"வர்ஷக்கணக்கா ஆகலாம் பெரியவா...."

"ஆனாவுட்டு, ஒனக்குத்தான் சாதகமாகும்னும் சொல்லறதுக்கில்லையோன்னோ? சரி. ஒனக்கே சாதகமாறதா வெச்சுப்போம். ஒன்னோட தம்பி "அப்பீல்" ன்னு போனான்னா....காலம் பாட்டுக்கு இழுத்துண்டே போலாம்தானே? ரிஸீவர் வெக்கறாமாதிரி ஸிச்சுவேஷன் வரலாமோன்னோ?"

"வரலாம்......"

"அப்போ, ஒங்களோட குடும்ப சண்டை "ஹிந்து"ல வந்து ஊர் ஒலகம் எல்லாரும் பாக்குமோன்னோ?"

"ஆமா..பெரியவா" பக்தரின் சுரத்து இறங்கிக்கொண்டே வந்தது.

"பாரு. வ்யாஜ்யம்..ன்னு போனியானா, waste of money, waste of time, waste of energy ..ன்னெல்லாம் சொல்றாளே, அது மூணும் ஒனக்கு வந்து சேரும். இல்லியா? குடும்ப கௌரவத்துக்கும் ஹானி. நன்னா யோசிச்சுப் பாரு! இத்தனையானாலும் பரவாயில்லேன்னு ஒனக்கு படறதா..ன்னு பாரு.."

பக்தர் எந்த எண்ணத்தோடு வந்தாரோ, அந்த எண்ணம் அவரை விட்டுப்போய் வெகுநேரம் ஆகியிருந்தது.

"பெரியவா சொல்றது சரிதான்....கேஸ் வேணாம்னு தோணறது. ஆனா, மேக்கொண்டு என்ன பண்ணலாம்னு பெரியவாதான் வழி காட்டணும்"

"அண்ணா-தம்பி பிரிஞ்சா பிரிஞ்சுடறவாளா? அவன் யாரு? நீ யாரு? எத்தன சண்டை வந்தாலும் சேரணும்னு நெனச்சா சேந்து ஓட்டிக்கற ஒறவு இல்லியா? இந்த எண்ணத்தை நன்னா வளத்துக்கப் பாரு.."

[ஸ்ருங்கேரி-காஞ்சி விஷயமாக ஒருத்தர் பெரியவாளிடம் "என்னமோ சொல்லிக்கறாளே, ரெண்டு மடத்துக்கும் சண்டைன்னு? நெஜந்தானா?"

பெரியவா உடனே அவரை மிரட்டும் தொனியில்,

"இதபாரு...அண்ணா-தம்பி சண்டை போட்டுக்கறது உண்டா இல்லியா? ஏன்? கொழந்தையா இருக்கறச்சே நீ ஒன்னோட அண்ணா,தம்பிட்ட சண்டை போட்டதே இல்லியா?அந்த மாதிரிதான். நாங்க அண்ணா-தம்பி. அப்டித்தான் ஸ்வாதீனமா சண்டை போட்டுப்போம்! போ!" என்றாரே பார்க்கலாம்! அடியார் பயந்தே போய்விட்டார். உடனே பெரியவா சிரித்துக்கொண்டே பரிவான குரலில்,

"மனுஷ்யான்னு இருந்தா எங்கேயானாலும் அபிப்ராய பேதம் இருக்கத்தான் இருக்கும்.அப்டி என்னமோ இதுல வந்துடுத்து. எல்லாருமே ஒரு தாய் வயத்துக் கொழந்தேள்தான்! எதுனால சண்டை?யார்கிட்ட ஞாயம்?ன்னு கேட்டுண்டு போகாம, "சண்டை நிக்கணும். சமரசம் ஆகணும்"ன்னு அந்த அம்பாள்ட்ட வேண்டிக்கணும்" என்றார்.]

இப்போது கேரளா பக்தரிடம் "நீயும், ஆத்துக்காரியுமா என்ன பண்ணறேள்..னா, நெறைய்ய புஷ்பம்,பழம் வாங்கிண்டு நேரா ஒன் தம்பியாத்துக்கு ப்ரியமா போங்கோ! அவனும் நன்னா உபசாரம் பண்ணுவான். அவன்ட்ட, "போனது போச்சு. நீ யாரு? நா யாரு? சொத்து ஓங்கிட்டேயே இருந்தாலும் எங்கிட்டே இருக்காப்லதான் ! ஆனாலும், நானும் காலக்ஷேபம் பண்ணறதுக்கு ஒனக்கு தோண்றதை எனக்கு குடு"ன்னு சொல்லு" என்று கூறி, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது மாதிரி இல்லாமல், இரும்பு குண்டுக்குள் வாழைப்பழத்தை ஊசியாக்கி எப்படியோ ஏற்றிவிட்டார்! அவருடைய அன்பின் சக்தியால்தான்! கேரள பக்தர் விடைபெற்றுக்கொண்டு போனதும் பெரியவா சொன்னார்,

"ரொம்ப காலம் கழிச்சு இவாளைப் பாத்ததும், அதுவும் இவாளா தேடிண்டு போனதும், தம்பிக்கு பாதி விரோதம் போய்டும்...அப்புறம் இவன் சமரசமா பேசினா முழு விரோதமும் போய்டும். கோர்ட், கேஸு எதுவும் இல்லாம, தம்பியே இவனுக்கு சேர வேண்டியத குடுத்துடுவான். நாம நல்லபடியா போனா, யாரானாலும் நல்லபடியா நடந்துப்பா" என்றார்.

பெரியவா வாக்கு பொய்க்குமா? அண்ணன் தம்பி சமரசமானார்கள்.


































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக