வெள்ளி, 17 ஜனவரி, 2014

அறநிலைய துறை கட்டுபாட்டில் இல்லாமல் ஹிந்து கோவில்கள் மிக சரியாக நிர்வகிக்கப்படும்

ராதே கிருஷ்ணா 18-01-2014



அறநிலைய துறை கட்டுபாட்டில் இல்லாமல் ஹிந்து கோவில்கள் மிக சரியாக நிர்வகிக்கப்படும்

அறநிலைய துறை கட்டுபாட்டில் இல்லாமல் ஹிந்து கோவில்கள் 


Status Update
By உறையூரில் தாமரை
அறநிலைய துறை கட்டுபாட்டில் இல்லாமல் ஹிந்து கோவில்கள் மிக சரியாக நிர்வகிக்கப்படும் என்பதற்கு சரியான உதாரணம் திருச்சி கண்டோன்மெண்ட்டில், கோர்ட் வளாகத்தின்அருகே உள்ள - சுவாமி ஐயப்பன் கோயில் !

பொதுவாக – ஆலயங்களின் நோக்கம் -பக்தி,
ஆன்மிக வளர்ச்சி தொடர்புடையதாகவே இருக்கும்.சில ஆலயங்கள் கல்விப்பணியிலும் கவனம் செலுத்துகின்றன...

ஆனால் – சற்று வித்தியாசமாகவும், பாராட்டத்தக்க வழிமுறைகளைக் கொண்டதாகவும் உள்ள ஒரு ஆலயம் திருச்சி சுவாமி ஐயப்பன் கோயில்...

சமூக சேவையை முக்கியமாக மேற் கொண்டிருக்கிறது இந்த ஆலயம் -

கண் தானம், ரத்த தானம், உடல் உறுப்புகள் தானம்,
(இறப்பிற்கு பிந்தைய) உடல் தானம் இவற்றை ஊக்குவிக்கும் விதங்களில் செயல்படுகிறது.

இங்கு சுத்தம், ஒழுக்கம், மற்றும் ஒழுங்குமுறை இரண்டும் கடுமையாக வலியுறுத்தப்படுகிறது.
உள்ளே நுழையும் முன்னரே, காலணிகள் பெற்றுக் கொள்ளப்பட்டு டோக்கன் கொடுக்கப்படுகிறது. (இலவசம் )

கால், கைகளை சுத்தம் செய்து கொண்டு உள்ளே போக – 3 நல்ல தண்ணீர்க் குழாய்கள்.

ஆண்கள் அரைகால் பேண்ட் மற்றும் கைலி அணித்து செல்ல அனுமதி இல்லை .. பெண்கள் துப்பட்டா போட்டு தான் உள்ளே செல்ல வேண்டும்.. துப்பட்டா இல்லை என்றால் கோவில் நிர்வாகம் தரும் துப்பட்டாவை அணிந்து சென்று கோவிலை விட்டு வெளி செல்லும் பொழுது திருப்பி தந்து விட வேண்டும் ..

எந்த இடத்திலும், எந்தவித உண்டியலும் கிடையாது.
ஊழியர்கள், அர்ச்சகர் உட்பட யாருக்கும் பணம் கொடுக்கக் கூடாது.
தீபாராதனை தட்டிலும் பணம் போடக்கூடாது. (இது குறித்தும் அங்கங்கே அறிவிப்பு பலகைகள் !)

கற்பூரம் கொளுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆலய வளாகத்தில் மவுனம் அவசியம்.

செல்போன் பயன்படுத்தக் கூடாது. மீறி செல்போன் அழைப்பு மணி ஒலித்தால் – ஆலய ஊழியர்கள் செல்போனை வாங்கி
வைத்துக் கொண்டு விடுவார்கள். 24 மணி நேரம் கழித்தே செல்போன் திரும்ப கொடுக்கப்படும். இது பற்றிய அறிவிப்பும் நுழை வாயிலிலேயே !

ஆலயம் முழுவதும் மணம் பரப்பும் அருமையான மலர்ச்செடிகள்.
அருமையான வாசகங்களைக் கொண்டு ஏகப்பட்ட கல்வெட்டுக்கள். (பெற்ற தாயின் முக்கியத்துவத்தையும்,
கல்வி கற்றுத் தரும் ஆசிரியருக்கு காட்ட வேண்டிய
மரியாதை குறித்தும், சமூகக் கடமைகள் குறித்தும்
வலியுறுத்தி )

இந்தியா முழுவதும் உள்ள புண்ணியஸ்தலங்களிலிருந்து,
ஆறுகளிலிருந்து – எடுத்து வரப்பட்ட 1008 கற்கள் இங்கு பதிக்கப்பட்டிருக்கின்றன. அந்த இடங்கள் பற்றிய தகவலும் வைக்கப்பட்டிருக்கிறது.

விரும்பும் யாருக்கும், இங்கு பிராணாயாமம், யோகா – தேவாரம், திருவாசகம் (இலவசமாக) கற்றுத் தரப்படுகிறது.

உட்கார்ந்து மௌனமாக தியானிக்க அருமையான ஒரு தியான மண்டபம்.

இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் -
இது முற்றிலும் தனியாரால் நிர்வகிக்கப்படும் ஒரு கோயில். ஆனால் பொதுமக்கள் எல்லாரும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஒரு முறை சென்று வந்தால் - ஊருக்கு ஒரு கோயில் இப்படி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று உங்களை அவசியம்
எண்ண வைக்கும் -

திருச்சிக்கு வரும் பொழுது அவசியம் வாருங்கள் -

இந்த கோவில் முகப்பில் காணப்படும் வாசகம் -

” RELIGION UNITES – NOT DIVIDES “


























































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக