புதன், 29 ஜனவரி, 2014

கங்கைக் கரை குஹன்

ராதே கிருஷ்ணா 29-01-2014

கங்கைக் கரை குஹன்

கங்கையை கடப்பதற்காக குஹனுடைய ஓடத்தில் ஏறிய  ஸ்ரீராமன் , கரையை அடைந்ததும்  , ஒடக்கூலி கொடுத்த போது , அதை வாங்க மறுத்து விட்டான் குஹன் :
அதற்கான காரணத்தை அவர்  கேட்டபோது , 
'' ஐயனே ...நாம் இருவரும் ஒரே தொழில் செய்து வருகிறோம் !......ஒரே தொழில் செய்பவர்கள் ஒருவருக்கொருவர் கூலி கொடுப்பதோ , வாங்கவோ கூடாது !''
என்றான் குஹன் :..ஸ்ரீராமனுக்கு ஏதும் புரியவில்லை :
'' என்ன ...ஒரே தொழிலா ? ''
வியப்புடன் கேட்ட ஸ்ரீராமனுக்கு பணிவுடன்  பதிலளித்தான் குஹன் :
'' ஆம் ஐயனே !....நான் எனது ஓடத்தின் மூலமாக மனிதர்களை ஏற்றி கொண்டு , கங்கை ஆற்றை கடந்து சென்று அடியவர்களை கரை சேர்க்கிறேன் !....அது போல ' சம்சாரம் ' என்ற கடலில் அகப்பட்டு தத்தளித்து கொண்டிருக்கும் மனிதர்களை ' கருணை ' என்ற ஓடத்தில்,   ஏற்றி கொண்டு ' வீடுபேறு ' என்ற கரையில் சேர்க்கிறீர்கள் !...அதனால் நாமிருவரும் செய்யும் தொழில் ஒன்றே என்று கூறினேன் ஐயனே !''
அவனின் வார்த்தைகள் கேட்டு , புன்னகையுடன் அவனை ஆலிங்கனம் செய்து கொண்டார் ஸ்ரீராமன் :
அனைவருக்கும் காலை வணக்கம் !

From the album: Timeline Photos
By Thangam Krishnamurthy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக