ஞாயிறு, 24 நவம்பர், 2019

ஐந்தாம் வேதம்

ராதே கிருஷ்ணா 25-11-2019





தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்? 
தசரதன் ஒரு பிள்ளையை வேண்டினார். 
ஆனால்அவருக்கு நான்கு பிள்ளைகள் பிறந்தன 
இது ஏனென்று உங்களுக்குத் தெரியுமா? 
தர்மம் நான்கு வகைப்படும் 
🌻அதில் முதலாவது சாமான்ய தர்மம். 
*பிள்ளைகள் பெற்றோரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் 
சீடன் குருவிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? 
கணவன் மனைவியிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? 
இத்தகைய சாமான்ய தர்மங்களைத் தானே பின்பற்றி எடுத்துக் காட்டினான் இராமர்*. 
 🌻இரண்டாவது சேஷ தர்மம். 
 *சாமானிய தர்மங்களை ஒழுங்காகச் செய்து கொண்டு வந்தால் கடைசியில் ஒரு நிலை வரும். 
அந்த நிலையில் பகவானுடைய பாதங்களைத் தவிர வேறு ஒன்றும் சதம் அல்ல என்ற நினைப்பு ஏற்படும். 
இத்தகைய தர்மத்துக்கு சேஷ தர்மம் என்று பெயர் 
இதைப் பின்பற்றிக் காட்டினான் இலட்சுமணன்*. 
🌻மூன்றாவது விசேஷ தர்மம் 
*தூரத்தில் இருந்து கொண்டே எப்போதும் பகவானின் சிந்தனையாகவே இருப்பது விசேஷ தர்மம். 
இது சேஷ தர்மத்தைக் காட்டிலும் கடினமானது. 
இதைக் கடைப்பிடித்துக் காட்டியவன் பரதன்*. 
🌻நான்காவது விசேஷதர தர்மம். 
*பகவானை விட அவருடைய அடியார்களுக்குத் தொண்டு செய்வதே முக்கியம் எனக் கருதுவது விசேஷதரதர்மம். 
சத்ருகன் பாகவத உத்தமனாகிய பரதனுக்குத் தொண்டு செய்தே கரையேறி விட்டான்.* 
ஆகஇந்த நான்கு தர்மங்களையும் இராமாவதாரத்தில் நான்கு புத்திரர்கள் மூலம் உலகுக்கு எடுத்துக் காட்டவே தசரதருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன!🙏🙏🙏 
🙏சர்வம் கிருஷ்ணார்ப்பணம்🙏 


ஐந்தாம் வேதம்  J K  SIVAN   
       நாராயணன்  தான்  பிரபஞ்சம்  
நாம்  தொடர்ந்து  குருக்ஷேத்திர  யுத்த  களத்தில் தான் இருக்கிறோம்.  அம்பு படுக்கையில் கிடந்தவாறு பீஷ்ம பிதாமகர்  யுதிஷ்டிரனுக்கு  சொல்லும்  நீதி நெறி உரைகள் நாமும் கேட்கிறோம்.  அவர் சொல்வதை மேலும் கேட்போம். 
'' யுதிஷ்டிரா,   வியாசரின் புத்திரர் சுகர் ப்ரம்ம நிலை அடைந்த ரிஷி.   அவரை  எல்லோரும்  சுகப்ரம்மம் என்று தான் அழைப்பார்கள் .  அவர் சக்தி படைத்துஎங்கும் நிறைந்தவராகஎங்கும்,எதுவுமாகி விட்டார்ப்ரம்மம்      அல்லவாஅவர் தன்னை விட்டு பிரிந்து இவ்வாறு உயர்ந்த நிலையை அடைந்தது ஒருபக்கம் வியாசருக்கு மகிழ்ச்சியும் மறுபுறம் வருத்தமும் தந்தது.    ''சுகா'' என்று மகனை விளித்து குரல் கொடுக்கிறார்மூவுலகும் அது எதிரொலிக்கிறதுஎங்கும் வியாபித்து இருக்கும் சுகரின் காதில் அது விழுகிறது. 
வியாசருக்கு  வானம் பூமிமலை  காடு  கடல்  சூழ்ந்த  மூவுலகுமே  சுகரின் பதில்  குரலாக  கேட்கிறது ஒரே வார்த்தையில் ''போ'  '(Sambho வில் வருமே அந்த போ ) என்று எதிரொலிக்கிறதுவியாசர் இவ்வாறு மகனின் குரல் கேட்டு ஆனந்தமடைகிறார்அவரது தியானம் கலைகிறதுமலைகள்கணவாய்கள்நதிகள்நீர் வீழ்ச்சிகள் அனைத்தும் ''போபோ ''என்று சுகரின் குரலை எதிரொலிக்கின்றனஎழுந்து நடக்கிறார்வழியே மந்தாகினி நதியில் குளித்துக் கொண்டிருக்கும் அப்ஸரஸ் கந்தர்வ பெண்கள் வியாசரைப் பார்த்ததும் நாணிகோணிஉடலைஉடையால் மறைத்துக் கொள்கிறார்கள்அவர்கள் சுகரை எதிர்கொள்ளும்போது அவ்வாறு வெட்கம் கொள்ளவில்லையேபேதம் அடையவில்லை. 
வியாசருக்கு புரிந்து விட்டதுதான் இன்னும் தனது மகன் சுகரின் புலன்களை வென்ற அபேத நிலை அடையவில்லை என்பதை உணர்கிறார்எதிரே மஹாதேவன் சிவன் தரிசனம் தருகிறார். 
''கிருஷ்ண த்வைபாயனாவியாஸாஎன்னை வேண்டி ஒரு மகனை  நீ  பெற்றாய்பரிசுத்தமான ப்ரம்ம ஞானம் பெற்றவனை அடைந்தாய்வியக்க  வேண்டியவன் நீ  ஏன் வருந்துகிறாய்?. இனி எங்கும் எப்போதும் உனது  நிழல் உருவில் உன் மகன்  உன்னோடுஇருப்பான்''-- 
''இப்படித்தான் யுதிஷ்டிரா,பரமசிவன் வியாசரிடம் சொன்னார்'' என்கிறார் பீஷ்மர். 
ஆம்  இன்னொரு விஷயம்  ஞாபகம் வருகிறது. 
நாரதர்  ஒருமுறை நாராயணனிடம் கேட்டதை உனக்கு சொல்கிறேன்.    க்ரித யுகத்தில் மனுவின் காலத்தில்,  பரமாத்மா நாராயணன் தர்மத்தின் நான்கு உருவாக அவதரித்தார்.    நரன் ,நாராயணன்ஹரிகிருஷ்ணன் என்று.    நரனும்  நாராயணனும் பத்ரியில் தவ முனிவர்கள். 
நாரதர் பத்ரியில் ரிஷி நாராயணனை தரிசித்து ஆசி  பெற்று மேரு மலையில் சற்று இளைப்பாறி பிறகு  அதன் வட மேற்கே உள்ள திருப்பாற்கடலைப் பார்க்கிறார்.   மேருவிலிருந்து வடக்கே ஒரு வெள்ளைத்தீவு கண்ணில் படுகிறது.   அதை நோக்கி நடக்கிறார்.   அங்குள்ளோர் பசி தாகம் இல்லாதவர்கள்கண்கள் இமைக்காது நறுமணம் வீசும் வெள்ளை நிற மேனியுடையவர்கள்.பாபமற்றவர்கள்.இடியைப் போன்ற குரல் வலிமை வாய்ந்த தேகம்தெய்வீக மானவர்கள்.  தலை குடையைப் போல் இருக்கும்.நான்கு கைகள்.அறுபது வெண்ணிற  பற்கள்,   இதோடு எட்டு சின்ன பற்கள்.  பல நாக்குகள்.   உள்ளங்காலில் நூற்றுக் கணக்கான ரேகை கோடுகள்.   (இதெல்லாம் மஹா பாரதத்தில் சாந்தி பர்வ முடிவுப் பகுதியில் வியாசரின் வர்ணனைகள்எனதல்ல) 
'தாத்தா,  இது என்ன அதிசயமாக இருக்கிறதே.   ஒன்றும் சாப்பிடாமலே இவ்வளவு சக்தியாயார் இவர்கள்?'' என்கிறான் யுதிஷ்டிரன். 
''நிதானமாக  கேள்அவசரப்படாதே.    ஒரு கல்பத்தின் முடிவில் பிரஹஸ்பதியின் சிஷ்யனாக உபரிச்சரன் என்கிற ராஜா தனது குருவின் பாதம் பணிந்து சிறந்த மாணவனாக கல்வி கற்கிறான்அவனுக்கு வசு என்றும் பெயர் உண்டுசித்ர சிகண்டிகள் என்ற பெயர் கொண்ட ஏழு ரிஷிகள்  பயிற்சித்த  ஜீவனை பாபங்கள் தொடராமல் அகற்றும் யாக யஞ முறைகளை,வித்தைகளை,  உபரிச்சரன்  குருவிடம் கற்கிறான்சிறந்த அரசனாகிறான்தனது குரு பிருஹஸ்பதியை ஹோதாவாக சிறப்பித்து செய்யும் அஸ்வமேத யாகத்தில் பிரம்மனின் புத்திரர்கள்   ஏகதாத்விதாத்ரிதா ஆகியோர்  ஸதஸ்யர்கள் (  ஒரு ஸதஸில் ( மேடை கூட்டத்தில்)  முன்னின்று சரிவர நடத்துபவர்கள்).எண்ணற்ற ரிஷிகள் முனிவர்கள் ஆகியோர் அந்த யாகத்தில் பங்கு கொண்டனர்.தேவர்கள் நேராக உருவத்தோடு வந்து ஹவிர்பாகத்தை ஏற்றுக்கொள்ள நாராயணன் மட்டும் அருவமாக வந்து ஏற்றுக்கொண்டதில் குரு பிரஹஸ்பதி கோபம் அடைகிறார்ராஜாவும் மற்றோரும் அவரை சமாதானப் படுத்தினார்கள்நாராயணனை நேரில் காண எல்லோரும் தவமிருந்த இடம் தான் இந்த வெள்ளைத்தீவு.  அந்த தவத்தின் பலனாகவே அவர்கள் இவ்வாறு பாபமற்று சிறந்து விளங்குகிறார்கள்'' என்கிறார் பீஷ்மர்.   அப்போது வெள்ளை வெளேர் என்று ஒளியாக நாராயணன் காட்சியளித்தார் அவர்களுக்கு. 
நாராயணன் நாரதரிடம் பல வர்ண ஒளிப்பிழம்பாக தனது உருவத்தைக் காட்டிய போது அதிசயிக்கி 
றார்அப்பப்பாஆயிரக்கணக்கான கண்கள்நூற்றுக்கணக்கான தலைகள்ஆயிரமாயிரம் கால்கள்வயிறுகள்கைகள் இத்யாதி. 
''நாரதாநீ எனது பிரதம பக்தன்உனக்கு என்ன வேண்டுமோ கேள்என்றான் நாராயணன். 
''சுவாமிதங்கள் தரிசனமே எனது பாக்யம்'' என்கிறார் நாரதர். 
''நாரதா,   இந்த தீவு மக்கள் புண்யசாலிகள்தவ ஸ்ரேஷ்டர்கள்ரஜோ தமோ குணம் நீங்கி சத்வ குணம் ஒன்றே கொண்டவர்கள்அன்ன ஆகாராதிகள் தேவையற்றவர்கள்என்னையே நினைவில் கொண்டவர்கள்என்னை வாசுதேவன்புருஷன் என்று பிரார்த்திப்பவர்கள்பஞ்ச பூதங்களும் என்னில் அடக்கம் என உணர்ந்தவர்கள்ஓவ்வோர் பிறவிக்கும் இந்த பஞ்சபூதமே ஆதாரம்எல்லா பிறவிகளின் மனதும் என் பெயராலே ப்ரத்யும்னன் எனப்படும்காரணமாகவும் காரியமாகவும் ப்ரபஞ்சமாகவும் நான் ப்ரத்யும்னனிலிருந்து அநிருத்தனா கிறேன்ஈசானன் என்றும் எனக்கு பெயர் உண்டுஒவ்வொரு செயலிலும் நான் உண்டு என்பதால்  வாசுதேவன் என்றும் க்ஷேத்ரஞன் என்றும் என்னை அறிவார்கள்.ஹிரண்யகர்பன்நான்முகன்பிரமன் எனப்படுவோனும் என்னில் இருந்து தான் உருவானவன்ருத்ரன் என் நெற்றியில் உருவானவன்ஏகாதச ருத்ரர்கள் என் வலது பாகத்தில் தோன்றியவர்கள்பன்னிரு ஆதித்யர்கள் இடதுபாகம் உருவானவர்கள்முன்னால்  முன்னே அஷ்ட வசுக்களும் பின்னே அஸ்வினி குமார்களும் உருவானவர்கள்பிரஜாபதிகள் , சப்த ரிஷிகளும் அவ்வாறே என்னில் தோன்றியவர்கள்என்னிலிருந்து நான்கு வேதங்கள்அம்ரிதம்,யாக யஞங்கள் உண்டாயினஎன்னுள்ளே தான் லட்சுமி சரஸ்வதி பூமிஆகியோர் சகலரும்  வாசம்''  என்கிறார் நாராயணன். 
அந்தந்த யுகத்தில் நாராயணன் தோன்றி ஹிரண்யகசிபுஹிரண்யாக்ஷன்மஹாபலிராவணன்பாணாசுரன்,நரகாசுரன்ஆகியோரை வதம் செய்ய அவதரித்ததை கூறுகிறார்.'' 
பீஷ்மர் இதைச் சொல்லி முடித்தவுடன் யுதிஷ்டிரனும் மற்ற பாண்டவர்களும் நாராயணனை துதித்து தியானம் செயகின்றனர். '' 
நைமிசாரண்யத்தில் சுதர் மற்ற ரிஷிகளுக்கு சொன்னது இது. 
''வைசம்பாயனர் இவ்வாறு ஜனமேஜயனுக்கு மஹா பாரதத்தை வர்ணித்தார் '' என்று முடிக்கிறார்.  மஹாபாரதத்தைக்   கேட்ட ஜனமேயஜன் சாஸ்திரங்களில் சொல்லியிருப்பது போல் தனது ராஜ்யத்தை ஆண்டான்ரிஷிகள் நீங்கள் எல்லோரும் மிகவும் சிரத்தையோடு தக்க முறையில் உங்கள் யாக யஞங்களையும் தவங்களையும் வேத சாஸ்திரங்களையும் அனுசரித்து இந்த நைமிசாரண்யத்தில் வசித்து வருகிறீர்கள்சௌனகன் நடத்தும் மிகப்பெரிய வேள்விக்கு வந்திருக்கிறீர்கள்.  யாகத்தில் தியானத்தில் தவத்தில் பரமாத்மன் நாராயணனை பூஜியுங்கள்நானும் இதுவரை வம்சாவளியாக இந்த அழகிய சரித்திரத்தை கேட்கும் பாக்யம் கிடைத்தது'' என்கிறார் சுதர் . 


ரீரகோத்தம தீர்த்தர் மூல ப்ருந்தாவனம் 
                                  
ஸ்ரீ.ரகோத்தமதீர்த்தரின் இளமைப் பருவம் 
ஒருமுறைஸ்ரீ ரகுவர்ய தீர்த்தர்யாத்திரை நிமித்தம்,ஸ்வர்ணவதா கிராமத்திற்கு விஜயம் 
செய்தார்.அவ்வூரிலுள்ளஜமீன்தார்,சுப்பபட்டா,கங்கா பாய் தம்பதிகள்ஸ்வாமியை பிஜைக்குஅழைத்தனர்தங்களுக்கு குழந்தை  வரம் தரஆசி வேண்டினர்ஸ்வாமியும் அவ்வாறே அருள்வதாகவும்பிறக்கும் குழந்தையைமடத்திற்கு அளிக்க வேண்டும் எனக் கூறஅவர்கள் சம்மதித்தனர்.குழந்தை பிறந்தவுடன்அதை மடத்திற்கு அளித்தனர்ஸ்வாமியும்குழந்தைக்கு "ராமசந்திராஎனப்பெயரிட்டுவியாசகூர்ம சாலிக்கிராமத்திற்கு அபிஷேகம் செய்த பாலை ஊட்டி வளர்த்தினார் 
சந்யாசமும்குரு அருளும்:- 
ஸ்ரீ.ரகுவர்ய தீர்த்தர்ராமசந்திரர்க்குஅவரது ஏழாவது வயதில்மடத்தின் மூலம் உபநயனம் 
மற்றும் எட்டாம் வயதில்சந்யாசம் வழங்கி "ஸ்ரீ ரகோத்தம தீர்த்தர்"என ஆசி அளித்தார். 
குருவின்அறிவுரையை ஏற்று,ஸ்ரீ.ரகோத்தம தீர்த்தர்,தனது கல்வி ஞானத்தை பண்டிதர்  
ஸ்ரீ.அடய வரதாச்சார்யாவிடம் பயின்றார்ஒரு முறைஅவ்வூரில் உள்ள தளபதி ஒருவர்ஸ்ரீ.அடைய வரதாச்சாரையும்ஸ்ரீ ரகோத்தம தீர்த்தரையும் துவாதசி போஜனத்திற்கு அழைத்தார்.பூஜைநிமித்தம்ஸ்ரீ ரகோத்தமதீர்த்தர் அங்கு தாமதமாகச் சென்றார்இவர்செல்வதற்கு முன்பேமற்றவர்கள் உணவு உட்கொள்ள ஆரம்பித்திருந்தனர்ஸ்ரீ ரகோத்தம தீர்த்தருக்கு மனம் வாடியதுமறு நாள் அதிகாலைஅவரது கனவிலேபகவான்ஸ்ரீ.ரகுவர்ய தீர்த்தர் வடிவில் தோன்றிஸ்ரீ ரகோத்தம தீர்த்தர் நாவினிலே,  பீஜாட்சர எழுத்துக்களை எழுதிதத்துவத்திலே ஞானம் அடையவும்அவருடைய சீடர்களுக்கு நேரிடையாக பாடம் போதிக்கவும்எளிய வாழ்வினை விடுத்து ராஜாங்க வாழ்வினை மேற்க் கொள்ளவும் அருள் செய்து மறைந்தார்மறுநாள் முதல்,சீடர்களுக்கு பாடபோதனை 
செய்தார்இவரது போதனையில் சீடர்கள் மட்டுமின்றிஸ்ரீஅடைய வரதாச்சார்யரும் 
வசீகரிக்கப் பட்டணர். " நியாய சுதாவில்ஒரு கடினமான பகுதிக்குமிக எளிமையாக 
விளக்கம் அளித்ததைக் கேட்ட ஸ்ரீ.அடைய வதாச்சாரியர்ஸ்ரீ ரகோத்தம தீர்த்தரை வீழ்ந்து வணங்கி சரணடைந்தார் 
அவரைச் சமாதானப் படுத்திய ஸ்ரீ.ரகோத்தமர்அவரிடம் இன்று முதல் உத்திராதி மடத்தில்முதல் தீர்த்தம் தங்களுக்கே வழங்கப்படும் என ஆசி வழங்கினார்அன்று முதல் இன்று வரைஉத்திராதிமடத்தில் அடைய வம்சத்தோர்க்கே முதல் தீர்த்தம் வழங்கப்படுகிறது. 
ஃபாகவ போத கிரந்தங்கள்: 
ஸ்ரீ ரகோத்தமதீர்த்தர்,ஃபாகவபோதங்களை 
எழுதுவதற்காக ஸ்ரீரங்கத்தில் உள்ள 
கிழக்கு உத்திர வீதியில் தங்கினார்.  அருமையான "ரங்க விமானம்தரிசனம் கிட்டியதுஅதைத் தரிசனம் செய்தவாறு ஃபாகவ போதங்களை எழுதினார்அவ்வாறு எழுதுகையில்அவர் அருகில் ஆஞ்சநேயர் நின்று அருள் புரிந்தார் 
கிரந்தம் எழுதுகையில்ஸ்ரீ ரகோத்தம தீர்த்தர் ஆஞ்சநேயரைப் பார்க்க,அனுமனும்அதை அங்கீகரிக்கும் விதத்தில் தலை அசைப்பார். 
பின் ஸ்ரீ ரகோத்தம தீர்த்தர்கிரந்தத்தை மீண்டும் எழுதுவார்இவ்வாறாக ஐந்து ஃபாகவ போத கிரந்தங்களை இயற்றினார். 
1. தத்வபிராகாஷிக  ஃபாவபோத. 
2. பிருகதரநியாகோபநிசத்  ஃபாவபோத. 
3. விஷ்ணு தத்வநிர்ணய டீகா ஃபாவபோத 
4. கீதாபாஷ்ய ப்ரமேய தீபிகா ஃபாவபோத. 
 5. சன்யாயவிவிருதி ஃபாவபோதா. 
கிரந்தங்கள் இயற்றிய இடத்தில் சுமார் 8 அடி உயரமுள்ள " கிரந்த சாட்சி ஆஞ்சநேயரை"ப் ப்ரதிஷ்டை செய்தார்இன்றும் நாம் அவரை தரிசித்து அருள்பெறலாம் 
ப்ருந்தாவனப் பிரவேசம்: 
தனது 39வது வயதில்ப்ருந்தாவனப் பிரவேசம்செய்வதென முடிவெடுக்கிறார்அதற்காக,வாமன ஷேத்திரமான திருக்கோவிலூருக்கு அருகேபினாகினி ஆற்றின்கரையில்மணம்பூண்டிகிராமத்தில் ஓர் இடத்தை தேர்வு செய்கிறார்அந்த இடமானதுஸ்ரீ கால்வ ரிஷி முன்னொரு காலத்தில் வசித்த இடம் ஆகும்அதைபஞ்ச கிருஷ்ணாரன்ய ஷேத்திரம்"எனக் கூறுவர்.  அங்கு ஓர் ஆஞ்சநேயர் கோவில் மற்றும் புளிய மரத்திற்கு அருகே இடத்தை தீர்மாணித்தார்ஓர் ஜமீன்தாரின் கனவில் தோன்றிப்ருந்தாவனம் அமைக்க கூறினார்எவ்விதத்திலும் ப்ருந்தாவனம் மூடப்படாமலும்மேற்கூரை கட்டப்படாமல் இருக்கவேண்டும் எனவும்,சூரிய ஒளியானது ப்ருந்தாவனத்தின் மீது பட வேண்டும் எனக்கூறினார்ப்ருந்தாவனமும்அவர் கூற்றுப்படிஅவர் பத்மாசனத்தில் அமர்வதற்கு தகுந்தபடி கட்டப்பட்டதுதான் ப்ருந்தாவனத்தில் 1000ம் ஆண்டு இருந்து ஆசிபுரிவதாகவும்ப்ருந்தாவனத்தில்அமர்ந்து தியானம் செய்கையில்,எப்போது தன் காவி வஸ்திரம் ஆகாயம் பறக்கிறதோ அப்போது ப்ருந்தாவனத்தை பந்தனம் செய்ய வேண்டிணார்குறிப்பிட்ட நாளான 1595ம் ஆண்டு வைகுண்ட ஏகாதசி நன்னாளில்பக்தர்கள் கண் கலங்கவேத கோஷங்கள் முழங்கப்ருத்தாவன ப்ரவேசம் செய்தார்சற்று நேரத்தில்அவரது காவி வஸ்திரம் விண்ணை நோக்கி சென்றது. 7000 சாளக்கிராமங்களை வைத்து அவரது ப்ருந்தாவனம் பந்தனம் செய்யப்பட்டதுஇன்று வரைஅவரது ப்ருந்தாவனத்திற்கு கூரை கட்டப்படவில்லை 
அருகிலுள்ள புளிய மரத்திலிருந்து வரும் கிளைகள்ப்ருந்தாவன எல்லையைத் தொட்டவுடன்கருகியோ அல்லது காய்ந்தோ போகிறது.ஆராதணை நாட்களில் மட்டுமே ப்ருந்தாவனம்வஸ்திரம் மற்றும் மலர்களால் அலங்காரம்செய்யப் படுகிறது 
மற்ற நாட்களில்ஈரம்செய்த வஸ்திரம் சாற்றப் படுகிறதுஈர வஸ்திரம் காயும் முன்பேஅனைத்து பூஜைகள்முடிக்கப்படும்பின்னர் அன்றைய அலங்காரம் களையப்படும்மேலும் இவர்தனது ப்ருந்தாவனத்தில்தன் அருகே ஸ்ரீ.சத்ய ப்ரமோத தீர்த்தரின் மூல 
ப்ருந்தாவனத்திற்கு இடமளித்துள்ளார்யாவரும் இவருக்கு சேவை செய்யலாம்ஆத்மார்த்த பக்தியுடன் இவரை சேவிப்பவர்களுக்கு அவர் ஆசி நிச்சயம். 
ஸ்ரீ ராகவேந்திரர் ப்ருந்தாவனம்திருக்கோவிலூர்.         
இவ்வூரில் உள்ள  ஸ்ரீ.ராகவேந்திரர் ப்ருoந்தாவனம்,தனிச் சிறப்பு  வாய்ந்தது. 
ஸ்ரீ.ராகவேந்திரர் ம்ருத்திகா ப்ருந்தாவனம் நடுநாயகமாய் வீற்றிருக்க,அதற்கு மேலே 
ஸ்ரீ.ஆஞ்சநேயர்,ஸ்ரீ.வேத வியாச பகவான் இருவரும் சிலா ரூபத்தில் உள்ளனர் 
ஸ்ரீ.ராகவேந்திரருக்கு இடப்புறம் மேலே ஸ்ரீ.மத்வாச்சாரியர் சிலா ரூபத்திலும், 
அவருக்குகீழே,   ஸ்ரீ.டீக்காச்சாரியரும்அவருக்கு கீழேஸ்ரீசத்யதான்யரு ஆகிய 
இருவர் ம்ருத்திகா ப்ருந்தாவனத்திலும் உள்ளனர்ஸ்ரீ.ராகவேந்திரருக்கு,வலப்புறம், 
மேலே,ஸ்ரீ.வியாசராஜர்அவருக்கு கீழேஸ்ரீவிஜயேந்திரர்அவருக்கு கீழ் புறம்,ஸ்ரீசுவதீந்தரர்ஆகிய மூவர்ம்ருத்திகா ப்ருந்தாவனத்திலும்மொத்தம் 9 மாத்வ ஷ்ரேஷ்ட யதிகள் ஒன்று சேர்ந்து அருள் பாலிப்பது காணக் கிடைக்காத காட்சிஸ்ரீ.ராகவேந்திரர் ப்ருந்தாவனம்தெப்பக்குளத் தெருவில் அமைந்துள்ளது. 

24,25 and 26 is Aradhana of Sri Padmanabha Tirtha.
Please listen to SriSri Padmanabha teertara Charitre by parama poojya Swamigalu.

Sri Padmanabha Teertha is the 1st commentator of Acharya Madhva's writings. Hence revered as ಆದಿಟೀಕಾಕಾರ (Adi TIkAkAra).

His works included commentary on
Brahma-Suutra Bhaashya
Anyuvyakyana
He wrote commentaries on Sri Madhva's  dasha-prakaraNA-s.
etc...
Shobana Bhatta was the poorvashrama name of PADMANABHATHEERTHARU
He was an authority in all Vedas - shaka, upashaka, samhithe, upanishad.

His erudition and many works was lost during Aurangzeb attacks!
To know more about PADMANABHATHEERTHARU..
It's mentioned in none other than SUMADHWA VIJAYA by NaryanaPanditacharyaru in 10 to 20 shlokas!!!
the significance of PADMANABHATHEERTHARU for current generation is this..

Shrimad Acharyaru gave PADMANABHATHEERTHARU "Shri Rama" and called it "DIGVIJAYA RAMA"!!!!!
The responsibility PADMANABHATHEERTHARU got was
Spread THATWAGNANA not just in KARNATAKA but in AKANDA BHARATHA!!!!
HAMPI University has records printed on PADMANABHATHEERTHARA MAHIME

Purandaradasaru has sung a song..
"desha deshava sancharisu hanava nee tharithu"
PADMANABHATHEERTHARA contribution towards Vijayanagara empire is often not quoted
VRINDAVANA paddathi started from PADMANABHATHEERTARU..
Previously, it used to be Ganga.. !
Before that.. ANANDATHEERTHARU went to dodda bhadari
"YaKarnataka Poorva Sajjana Guruhu" - NarayanaPanditha charyaru on PADMANABHATHEERTHARU .. !!

II पूर्णप्रज्ञकृतं भाष्यमादौ तद्भावपूर्वकम्।
यो व्याकरोन्नमस्तस्मै पद्मनाभाख्ययोगिने II











































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக