வியாழன், 29 நவம்பர், 2018

ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம்

ராதே கிருஷ்ணா 30-11-2018



ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம்

ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம்

என்றும் எப்போதும் சொல்லுவோம்

நேற்று என்பது புண்ணியம்

இன்று என்பது விதி

நாளை என்பது வரம்


துணிவு இருக்கவேண்டும் அதில்

கனிவு இருக்கவேண்டும் அதில்

பணிவு இருக்கவேண்டும்


வற்றாத ஒன்று உனது அன்பு

வற்றக்கூடியது உனது ஆசை


உன் உள் இருப்பதை அறிந்து கொள்

                      உண்மை

உன் அருகே இருப்பதை உணர்ந்து கொள்

                    சத்தியம்


உள்ளத்தில் ராம உன் திருவடி

எண்ணத்தில் ராம உன் திருமொழி


மனுஷனாக வாழ முயற்சி செய்

மனிதனாக இருக்கும்போது பயிற்சி செய்


கர்மா பிணி விலக பிழைத்திரு

பசி விலக உழைத்திடு


நாம் யாரையும் குறை சொல்லக்கூடாது

நம்மை யாரும் புகழக்கூடாது



எதிர்த்து நிற்காதே எதிர்பார்த்து இருக்காதே


முன்னே செல்லுபவரை குறை சொல்லாதே

பின்னே செல்லுபவரை குறைத்துப் பேசாதே


தேடுவதை நிறுத்து உன்னைத் தேடி வந்ததை

நினைத்து நன்றி சொல்லத் தொடங்கு




யாரையும் தடுக்காதே யாருக்கும் தடையாக இருக்காதே


தூங்கும் முன் ராம ராம என்று நினைத்திரு

தூங்கிய பின் ராமனுடன் இணைத்திரு



கொடுத்தவனை மறவாதே கொடுப்பவனைத் தடுக்காதே


புண்ணியத்தை உணராமல் புன்னகைத்து என்ன பயன்

புண்ணியம் நமது ஆயுள் புன்னகை நமது ஆரோக்கியம்

இவ்விரண்டும் ராம உனக்கு பணி செய்யவே



ஆசை குறைக்க தவம் தவறை குறைக்க ஜபம்


வாழ்க்கையின் ஆயுதம் வார்த்தைகள்


கர்மாவைக் குறைக்க தவம் பாவத்தைக் குறைக்க ஜபம்


என்னில் ராம உன்னைக் காண அமைதி முக்கியம்               
     
                               பக்தி நிலை

ராம உன்னில் என்னைக் காண பொறுமை முக்கியம்

                               முக்தி நிலை


அவசரத்தில் இருப்பவன் முயற்சி மறப்பான்

நிதானத்தில் இருப்பவன் வெற்றி மறப்பான்



எதற்கும் தலையிடாதே

ராமனது திருவடியில் தலை இருக்கும்போது



பக்தியி இருக்கும்போது தூக்கத்தை மறக்கவேண்டும்

நம்பிக்கையில் இருக்கும்போது துக்கத்தை மறக்கவேண்டும்



சுவை அனுபவிக்கும் முன் சுமை அனுபவித்துக்கொள்


வாழ்க்கைத் தத்துவத்தைப் புரிந்துகொள்

பிறவி நோக்கத்தை தெரிந்துகொள்ளவும்

சுவை உனக்கு கடைசியில் சுமையாகும்



இருப்பதை வைத்து வாழ்வது அறுசுவை

இருக்கும் இடத்தில் வாழ்வது தனி சுவை



இறைவனை நினைப்பவன் அனைத்தையும் மறந்தவன் 


புரியாதவரிடம் பேச வேண்டாம்  புரிந்தவரிடம் எதையும் சொல்லவேண்டாம் 


1. கரைகளை வைத்து  மறையாதே -  கர்மா

2. கலைகளை வைத்து அலையாதே - ஞானம் 

3. குறைகளை வைத்து முடியாதே - வேண்டும் வேண்டும் 


பயத்தால் அனைத்தையும் இழப்பாய் 

மாயத்தால் அனைத்தையும் மறப்பாய் 


பொறுத்து இரு  உன் உள்  அவனை பொருத்திரு 

பெருத்துப் போகாதே பொறுத்துப் போ 


1. உடல் இருக்கு என எதையும் அனுபவிக்காதே   

                        மோகத்தை உண்டாக்கும்.

2. அறிவு உள்ளதுனென எதையும் செய்யாதே 

                         கர்வம் உண்டாகும்.

3. புத்தி உள்ளது என எதையும் பேசாதே 

                          கோபம் உண்டாகும் 


கவலை என்றும் கலவையாகக் கூடாது. 


உன்னைப் புரிந்துகொள்ள யாரும் இல்லை என்று நினைக்க வேண்டாம் 

அமைதியாக இரு உன் அருகே இறைவன் இருக்கிறார் 

அவர் உன்னைப் புரிந்துகொள்ளுவார் அனைவருக்கும் உணர்த்துவார் 


பக்தி விளம்பரமாகக் கூடாது  நம்பிக்கை வ்யாபாரமாகக் கூடாது 


பொறுமையாக இருக்க முயற்சி செய்  பொறாமை இல்லாமல் பயிற்சி செய் 

பாதை அறிந்து செல் பயம் இன்றி செல் 

ராம நாமத்தைச் சொல்லுவோம் 

ராம உனது கருணையுடன் பயணிப்போம் 


நன்றி இன்றி வாழாதே 


பற்றுவோம்  போற்றுவோம்  அவன் திருவடியில் இருந்து 

நித்தியம் தியானம்  நிரந்தரம் தியாகம் 

என்றும் ராம உனது சரணம் 

எப்போதும் ராம உன்னிடம் சரணாகதி 


உனது திறமை அனைத்தும் உன் உள் அவனது வலிமை 


துக்கம் உனக்கு நீ செயதுகொண்டது  துக்கம் நான் உனக்கு தருவது 

                        நன்றி ராம 


என்  தூக்கம் அனைவருக்கும்  துக்கம் ஆகும் வரை 

ராம உன்னை நினைத்துக்கொண்டு இருப்பேன் 

பக்குவமாக இருந்தால் மகத்துவம் ஆகும் 

                             உனது பகுத்தறிவு 


           தொண்டன் L.V ரவிகாந்த் 














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக