செவ்வாய், 20 ஜனவரி, 2015

தியாகராஜ கிருதி - ஸீதா கல்யாண - ராகம் ஸ1ங்கராப4ரணம் - Sita Kalyana - Raga Sankarabharanam

ராதே கிருஷ்ணா 20-01-2015


தியாகராஜ கிருதி - ஸீதா கல்யாண - ராகம் ஸ1ங்கராப4ரணம் - Sita Kalyana - Raga Sankarabharanam
பல்லவி
ஸீதா கல்யாண வைபோ4க3மே
ராம கல்யாண வைபோ4க3மே
சரணம்
சரணம் 1
பவனஜ ஸ்துதி பாத்ர பாவன சரித்ர
ரவி ஸோம வர நேத்ர ரமணீய கா3த்ர (ஸீதா)
சரணம் 2
ப4க்த ஜன பரிபால ப4ரித ஸ1ர ஜால
பு4க்தி முக்தித3 லீல பூ4-தே3வ பால (ஸீதா)
சரணம் 3
பாமராஸுர பீ4ம 1பரிபூர்ண காம
ஸ்1யாம ஜக3த3பி4ராம ஸாகேத தா4ம (ஸீதா)
சரணம் 4
ஸர்வ லோகாதா4ர 2ஸமரைக வீர
3க3ர்வ மானவ தூ3ர கனகாக3 தீ4ர (ஸீதா)
சரணம் 5
நிக3மாக3ம விஹார நிருபம ஸ1ரீர
நக3 த4ராக4 விதா3ர நத லோகாதா4ர (ஸீதா)
சரணம் 6
பரமேஸ1 நுத கீ3த ப4வ ஜலதி4 போத
தரணி குல ஸஞ்ஜாத த்யாக3ராஜ நுத (ஸீதா)
பொருள் - சுருக்கம்
சீதையின் திருமண வைபோகமே!
இராமனின் திருமண வைபோகமே!
வாயு மைந்தன் துதிக்கும்,
புனித சரிதமுடைய,
பரிதி, மதிகளை உயர் கண்களாயுடைய,
இனிய உருவமுடைய,
தொண்டர்களைப் பேணும்,
நிறைந்த அம்புகளுடைய,
இம்மை, மறுமை திருவிளையாடலாக அருளும்,
அந்தணரைக் காக்கும்,
தீயோர், அரக்கருக்கு அச்சமூட்டும்,
இச்சித்தவை அடையப்பெறும்,
கரு நீல வண்ண,
உலகிற்கு மகிழ்வூட்டும்,
சாகேத நகருறை,
பல்லுலக ஆதாரமான,
களத்தினில் தனியொரு வீரனாகிய,
செருக்குடை மனிதரினின்று விலகிய,
பொன் மலை நிகர் தீரனாகிய,
மறைகள், ஆகமங்களில் உறையும்,
ஒப்பற்ற உடலுடை,
(மந்தர) மலை சுமந்த,
பாவங்களைக் களையும்,
பணிந்தோருக்கு ஆதாரமான,
பரமேசன் போற்றிப் பாடும்,
பிறவிக் கடலின் கலமாகிய,
பரிதி குலத்தில் சிறக்கத் தோன்றிய,
தியாகராசன் போற்றும்
இராமனின் திருமண வைபோகமே!













































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக