திங்கள், 25 நவம்பர், 2013

இறைவனை காண என்ன செய்ய வேண்டும்

ராதே கிருஷ்ணா 26-11-2013


இறைவனை காண என்ன செய்ய வேண்டும்


இறைவனை காண என்ன செய்ய வேண்டும் என்பதை மிக எளிமையாக கிருஷ்ணர் விளக்குகிறார் வெளி உலகியல் விஷயங்களை வெளியே வை, அவைகளை மனதிற்குள் போக அனுமதிக்காதே. கண்களை புருவமத்தியில் நிறுத்த வேண்டும்.புருவ மத்தியில் தியானம் செய்ய வேண்டும். நாசி வழியாக வெளியே விடும் வாயுவுக்கு பிராணன் என்று பெயர்.நாசி வழியாக உள்ளே இழுக்கும் வாயுக்கு அபானன் என்று பெயர்.ஆக்சிஜனை உள்ளிழுக்கிறோம் கார்பன்டை ஆக்சைடை வெளி விடுகிறோம் இந்த இரண்டு வாயுக்களையும் முறையாக சமநிலைப்படுத்த வேண்டும்.தியானத்தின் உச்சநிலையில் பிராணனையும் அபானனையும் முற்றிலும் நிறுத்த வேண்டும்.(முக்தர்களால் மட்டுமே இது முடியும்) முக்தியில் நாட்டம் இருக்க வேண்டும்.முக்தி என்பது ஆன்மாவாக மாறுதல். இந்திரியம்,மனம்,புத்தி இவைகளை அடக்கவேண்டும்.ஆசை சினம் அச்சம் இவைகளை விட்டு மைனமாக இருக்க வேண்டும். ஆன்மீகத்தில் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு இவைகள் கைகூடுவதில்லை.இந்த நிலை வாக்கப்பெற்றவன் முக்தன்.இவனே இறைவனைக்காண்கிறான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக