திங்கள், 30 செப்டம்பர், 2013

சுப்ரபாததரிசனம் திருப்பதி ஏழுமலையான் கோவில்

Radhe Krishna 01-10-2013


சுப்ரபாததரிசனம் திருப்பதி ஏழுமலையான் கோவில்


Karthik Rajendran likes a link.

  • Uppili Amudhan shared Vishnupriya Textiles's photo.
    சுப்ரபாததரிசனம் திருப்பதி ஏழுமலையான் கோவில் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 மணி வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும். காலையில் சுவாமியை எழுப்புவதற்கு 2 அர்ச்சகர்கள், 2 ஊழியர்கள், தீப்பந்தம் பிடிக்கும் ஒருவர், வீணை வாசிக்கும் ஒருவர் என 6 பேர் சன்னதி முன்னால் உள்ள தங்க வாசலுக்கு வந்து சேருவார்கள்.

    முதலில் துவார பாலகர்களுக்கு நமஸ்காரம் செய்வார்கள். பின்னர் அர்ச்சகர் ஒரு ஊழியரிடம் சாவியை வாங்கி சன்னதியை திறப்பார். பின்னர் சுவாமியை வணங்கி விட்டு சன்னதி கதவை சாத்திவிட்டு உள்ளே செல்வார்கள். அந்த நேரத்தில் ``கவுசல்யா சுப்ரஜா ராம...'' என்ற சுப்ரபாதம் வெளியே நிற்கும் ஒரு குழுவினரால் பாடப்படும்.

    சன்னதிக்குள் தீப்பந்தம் கொண்டு செல்பவர் அங்குள்ள விளக்குகளை எல்லாம் ஏற்றுவார். பின்னர் வீணையை இசைக்க வெங்கடாசலபதி அருகில் போக சீனிவாச மூர்த்தி என்பவரை கொண்டு வந்து அமர்த்துவார்கள். அவரை முதல்நாள் இரவில் ஒரு தொட்டிலில் படுக்க வைத்திருப்பார்கள். அந்த தொட்டிலில் இருந்து சுவாமியை எடுத்து மூலவர் அருகில் அமர வைப்பர்.

    சுப்ரபாதம் பாடி முடித்ததும் சன்னதி திறக்கப்படும். சுவாமிக்கு பாலும் வெண்ணையும் படைத்து ``நவநீத ஹாரத்தி'' எனப்படும் தீபாராதனை செய்யப்படும். ``விஸ்வரூப தரிசனம்'' என்றும் இதை சொல்வதுண்டு. இந்த சேவையைக் காண ஒரு நபருக்கு கட்டணம் ரூ. 120. மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    திருப்பதி மலையில் உள்ள ஆகாயகங்கை தீர்த்தத்திலிருந்து மூன்று குடங்களில் புனிதநீர் வந்து சேரும். ஒரு குடம் நீரை காலை பூஜைக்கும், மற்றொன்றை மாலை பூஜைக்கும், இன்னொன்றை இரவு பூஜைக்கும் எடுத்து வைப்பார்கள். (பிரம்மோற்சவ காலத்தில் மட்டும் யானை மீது தீர்த்தம் எடுத்து வரப்படும்).

    ஒரு குடம் தண்ணீரை ஐந்து வெள்ளி பாத்திரங்களில் நிரப்புவார்கள். பின்னர் உத்தரணி (ஸ்பூன் போனறது)யில் தண்ணீர் எடுத்து சுவாமி முன்பு அர்ச்சகர் நீட்டுவார். சுவாமி அதில் முகத்தை அலம்பிக் கொள்வார் என்பது ஐதீகம். பின்னர் மீதி உள்ள மூலவருக்கு பதிலாக அருகில் உள்ள போகசீனிவாத மூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்படும்.

    அப்போது சுவாமியின் இடுப்பில் ஒரு துண்டை கட்டி வாசனை தைலம் தேய்த்து, மஞ்சள் கலந்து நீரால் அபிஷேகம் நடத்துவார்கள். பிறகு பசும்பால், சந்தனம், தேன், மீண்டும் அபிஷகத்திற்கு பிறகு வஸ்திரம் சாத்தப்படும்.சுவாமிக்குசுவாமிக்கு நெற்றியில் நாமம் இடுவார்கள். பிறகு அவர் முன்னால் கண்ணாடியை காட்டுவார்கள். குடை பிடித்து, சாமரத்தால் விசிறுவார்கள். இதன்பிறகு தீபாராதனை நடக்கும்.

    இத்துடன் காலை சுப்ரபாத பூஜை நிறைவடையும். அற்புதம் தொடரும்….இத்துடன் காலை சுப்ரபாத பூஜை நிறைவடையும். அற்புதம் தொடரும்…- ஆன்மீகப் பணியில்- S.தன சேகர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக