வெள்ளி, 25 மே, 2012

மாபெரும் இதிகாசமான ராமாயணம் 285 வார்த்தையில்..!

ராதே கிருஷ்ணா 26-05-2012

மாபெரும் இதிகாசமான ராமாயணம் 285 வார்த்தையில்..!
மே 25,2012



























































































































































































ராமாயணம் என்பது மாபெரும் இதிகாசமாகும். இந்த இதிகாசத்தை 285 வார்த்தையில் சுருக்கி கொடுக்கப்பட்டுள்ளது. அதை தெரிந்து கொள்வோமா. தனியறத்தின் தாயான தசரத மாமன்னன், கொள்வாரும் கொடுப்பாரும் கள்வரும் காவலரும் அற்ற சமுதாய சமத்துவம் மிகுந்த அயோத்தி நாட்டை ஆண்டு வந்தான். மன்னனது புத்திர சோகத்தைத் தீர்க்க ராம, இலக்குமண, பரத, சத்ருகனன் என்னும் அருந்தவப் புதல்வர்கள் அவதரித்தனர். நால்வரில் கரிய செம்மலான சுந்தரராமன் க்ஷத்திரிய கலைகளை நன்கு கற்ற, அரசனுக்குப் பிரியமான தசரத ராமனாகத் திகழ்ந்தான். விசுவாமித்ரருடன் கானகம் சென்று, தாடகை, சுபாகு ஆகிய அரக்கர்களைக் கொன்று மாரீசனைக் கடலில் தள்ளி யாகத்தைக் காத்து, கோதண்ட ராமனாகக் காட்சி அளித்தான். மிதிலை செல்லும் வழியில் அகலிகையைத் தன் கால் வண்ணத்தால் பெண்ணாக்கி, பாபவிமோசன ராமனாக விளங்கினான். ஜனகனின் ராஜ மண்டபத்தில் சிவதனுசை ஒடித்து சீதையைக் கைப்பிடித்து ஜானகி ராமனாகத் தோன்றினான். அயோத்தி வரும் வழியில் பரசுராமனின் விஷ்ணு தனுசையும், அவன் கர்வத்தையும் ஒருங்கே வளைத்த ராஜா ராமனாக நின்றான்.  உள்ள நிறைவில் கள்ளம் புகுந்த கைகேயியின் விருப்பப்படி, ஓட்டையும் பொன்னையும் ஒக்கநோக்கும் அன்றலர்ந்த தாமரை மலர் போன்ற முகத்தை உடைய பரந்தாமன், தந்தை சொல் காக்கக் கானகம் ஏகி, குகனின் உதவியால் கங்கை இரு கரைகளை அவனது அன்பெனும் நாவாயால் கடந்து, சித்ரகூடத்தில் முனிவர்களுக்கு அபயம் அளித்து சபரியின் கனி உண்டு அவளுக்கு முக்திக்கனி அளித்து ஆனந்த ராமனாகக் காட்சி அளித்தான்.
பஞ்சவடியில் ராமபிரான் மீது மையல் கொண்ட சூர்ப்பணகையை இளவல் மூக்கறுத்து அவமதித்த பிறகு, ராமன் கரனின் சிரம் சாய்த்த அற்புத ராமனாகக் கோலம் பூண்டான். அண்ணல் பொன்மான் பின் சென்ற சமயம் ராவணன் சீதையைத் தூக்கிச் சென்ற பிறகு, ஜடாயுவிற்கு வீடுபேற்றைத் தந்து, சுக்ரீவனின் நட்பைப் பூண்டு, வாலியை வதம் செய்து சுக்ரீவனுக்குப் பட்டம் கட்டிய தூய நேய ராமனாகத் திகழ்ந்தான். ஐயனின் தூதனாக அனுமான் கடலைத் தாண்டி அன்னையைக் கண்டு, அண்ணலின் கணையாழியைக் கொடுத்து, அவளது சூடாமணியைப் பெற்று வந்ததும் ராமன் மன்மதரூபனாகக் காட்சி அளித்தான். கடலைத் தாண்ட முயற்சிக்கையில் கடல் அரசன் உதவ மறுக்க, ஐயன் வெகுண்டு பாணம் எடுத்து ஊழிக்கால உருத்திர சிவராமனாகத் தோன்றினான். இலங்காபுரியை அடைந்து விபீடணின் சரணாகதியை ஏற்றுக்கொண்டு, ராவணனுடன் போர் செய்து, அவனது கை சளைக்கையில் இன்று போய் நாளைவா என்று மொழிந்த பகைவனுக்கருளும் உத்தம ராமனாக நின்றான். ராவணனைக் கொன்று மீட்ட சீதையின் கற்பைக் கனலில் புடம் போட்டுப் பார்த்த சீதா ராமனாக, மனித ராமனாகத் தோன்றினான். நந்திக் கிராமம் வந்து, பரம பக்தனாக பரதனைக் காத்த பக்தி நேயனாகக் காட்சி அளித்தான். அயோத்தி மாநகரை அடைந்து, அன்னைமார் புடைசூழ, தேவி அருகிருக்க, ராஜ்ய பட்டாபிஷேகம் செய்து கொண்ட பட்டாபிராமனாக விளங்கிய ஐயன் பல தத்துவங்களைத் தன் வாழ்க்கையின் மூலம் விளக்கி நம் அனைவரது உள்ளங்களிலும் என்றும் முடிவில்லாத நிலைபெற்ற அனந்த ராமன் ஆவான்.
Share  
Bookmark and Share


 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்




















































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக