ராதே கிருஷ்ணா 10-05-2014
மகா பெரியவா Part - II
மகா பெரியவா Part - II
Narasimman Nagarajan | 11:20am May 10 |
தஹனம் என்று எப்போது ஒரு கிரியை சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறதோ, அப்போது நம் மதப்படி எல்லோரும் கடைசியில், நல்ல விருத்தாப்பியத்தில் கூட , ஸந்நியாஸம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று விதிக்கவில்லை என்றே அர்த்தம்.
பிரம்மச்சர்யம், கிருஹஸ்தாச்ரமம், வானப்ரஸ்தம், ஸந்நியாஸம் என்ற நாலு ஆசிரமங்களை ஒவ்வொருவரும் வரிசையாக அநுஷ்டித்தேயாக வேண்டும் என்றால் வாஸ்தவமாகவே தகனக்ரியை இருக்கமுடியாதுதான். ஸந்நியாஸியை தகனம் செய்யாமல் புதைக்கத்தானே சொல்லியிருக்கிறது?அதனால் பக்குவிகளுக்கே ஸந்நியாஸம்;மற்றவர்களுக்கு இல்லை - கிழ வயஸில் கூட இல்லை - என்று சொன்னால் இந்த வாதத்தைத் தப்பு என்று சொல்ல முடியவில்லை.
ஸந்நியாஸம் வாங்கிக் கொள்கிற அளவுக்கு வயசு ஆகாமல், சின்ன வயசிலேயே செத்துப் போனவர்களை உத்தேசித்துத்தான் தஹனக் கிரியையைச் சொல்லியிருக்கிறது என்று நினைப்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. அகால மரணமாகவோ அல்பாயுஸாகவோ இல்லாமல் கால ம்ருத்யுவாக, நன்றாக வயஸாகிச் செத்துப் போகிறவர்களையும் உத்தேசித்ததாகத்தான் தகனக்கிரியை, அப்புறம் செய்யும் பித்ரு காரியங்கள் ஆகியன இருக்கிறது. ஆகையால், அத்தனை வயசிலும் அவர்கள் ஸந்நியாஸம் வாங்கிக் கொள்ளாமலிருப்பதை சாஸ்திரம் அங்கீகரிப்பதாகத்தானே ஏற்படுகிறது?
நல்ல ஞான வைராக்கியத்தில் பிடிப்பு ஏற்பட்டவர்கள் கிருஹஸ்தாச்ரமம் ஆனபின் குடும்பப் பொறுப்புகளை விட்டுக் காட்டிலே போய் வைதிக காரியங்களை மட்டும் பண்ணிக் கொண்டிருக்க வேண்டும். பிள்ளைகுட்டிகளையும் சொத்து சுதந்திரங்களைவிட்டுவிட்டுப் பத்தினியை மட்டும் அழைத்துக் கொண்டு காட்டுக்கு போய்விடவேண்டும். பத்தினி எதற்கு என்றால் இந்திரிய ஸுகத்துக்காக அல்ல. பின்னே எதற்கு என்றால், அக்னி காரியங்களைப் பத்தினி கூட இருந்தால்தான் பண்ண முடியும் என்பதற்காகவே. யாகாதிகளையும் ஒளபாஸனையையும் பண்ணும் பொருட்டே அவளை அழைத்துக் கொண்டு போக வேண்டும். இதுதான் வானப்ரஸ்தம் - வனத்தில் போயிருப்பது என்று அர்த்தம்.
வீடு வாசலையும், உறவுக்காரர்கள், அவர்களுடைய காரியங்கள் ஆகியவற்றையும் விடுகிற பக்குவம் முதலில் வரவேண்டுமாதலால் வானப்ரஸ்தம் ஏற்படுகிறது. அப்புறம் வைதிக காரியத்தையும் விட்டுவிட்டு ஆத்மா என்ன, பரமாத்ம ஸத்யம் என்ன என்று தெரிந்து கொள்வது ஒன்றிலேயே நாட்டம் வலுத்த பின் குருமுகமாக ஸந்நியாஸம் வாங்கிக் கொள்ள வேண்டும். பத்தினியையும் வேதகர்மாக்களையும் விட்டுவிட்டு குருமுகமாக ஸந்நியாஸ ஆச்ரமம் பெற்று பரமாத்ம ஸத்யத்தையே ஸதாவும் சிந்தித்து
தியானித்து, அதை அநுபவத்தில் தெரிந்துகொண்டுவிட வேண்டும். "அந்த ஸத்யம்தான் தானும்; லோகமெல்லாம் அதன் பொய் விளையாட்டு தான்" என்ற அநுபவம் ஏற்பட்டு, சரீரத்துக்கும் மனஸுக்கும் அதீதமான பரம ஸத்யமாக இருந்து கொண்டிருப்பதுதான் மோக்ஷம். பிராரப்தப்படி (முன்வினைப் பயன்படி) சரீரம் இருக்கிற மட்டும் இருந்து விட்டு அப்புறம் மரணம் அடைந்துவிடும். ஆனால் அதைப் பற்றி அநுபவ ஞானியான ஸந்நியாஸிக்கு ஒரு பொருட்டும் இல்லை. வெளி உலகத்தின் பார்வையில், இது வரைக்கும் தேகத்தில் வாழ்ந்த போதே முக்தி நிலையில் இருந்த ஜீவன் முக்தன், தேகம் போய் விதேஹ முக்தனாகிறான் என்று சொல்வது வழக்கம். அவன் நேரே குணம் குறியற்ற பரமாத்ம தத்வமாகி விடுகிறான்.
கல்யாணம் பண்ணிக் கொள்ளாமலே ஸந்நியாஸி ஆகிறவன்; கல்யாணம் பண்ணிக் கொண்டு நாற்பது ஸம்ஸ்காரங்களையும் முறைப்படி ஒன்றும் விட்டுப்போகாமல் பண்ணி, அதோடு அஷ்ட குணங்களையும் கைக் கொண்டு கடைசியில் ஸந்நியாஸம் வாங்கிக் கொள்கிறவன் - ஆகிய இருவரும் இப்படித் தானே பரமாத்ம தத்வமாக ஆகிவிடுகிறார்கள்.
ஸந்நியாஸம் வாங்கிக் கொள்ளாமலே கடைசி வரை எல்லா ஸம்ஸ்காரங்களையும் அஷ்ட குணங்களையும் அநுஷ்டித்தவனின் கதை என்ன? செத்துப் போன பின் அவன் கதி என்ன? இவனுக்குத்தானே தஹனம் சொல்லியிருக்கிறது? லோகத்தில் பொதுவாக ரொம்ப ஜாஸ்தி இருக்கிறவனும் இவன்தானே? இவன் செத்தபின் என்ன ஆகிறான்?
ஸ்ரீ சங்கர பகவத்பாதாள் இவன் பரமாத்ம தத்வத்தோடு அத்வைதமாகக் கரைந்து விடுகிறான் என்று சொல்ல வில்லை. கடைசி வரையில் எல்லாவற்றையும் விட்டு, பரமாத்மா ஒன்றையே பிடித்துக் கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் பெரிய தாபமாக இவனுக்கு வரத்தானே இல்லை? அது வந்துவிட்டால் யாரும் பிடித்து வைக்க முடியாது. அது வராததால் தான் இவன் ஸந்நியாஸியாக ஒடவில்லை. ஆகையால் இவன் அத்வைத முக்தி அடைவதில்லை. ஆனாலும் சாஸ்திரத்தை நம்பி அதன்படியே கர்மாக்களைப் பண்ணி சித்தத்தை நன்றாக சுத்தம் பண்ணி, லோக க்ஷேமத்தையும் உண்டாக்கியிருக்கிறானல்லவா?
அதனால் இவன் குணமும் குறியுமில்லாத பரமாத்மாவுடன் ஒன்றாகாவிட்டாலும், அதே பரமாத்மா குணம் குறிகளோடுகூட லோகங்களை நிர்வகிக்கிற ஈச்வரனாக இருக்கிற குணம் குறிகளோடுகூட லோகங்களை நிர்வகிக்கிற ஈச்வரனாக இருக்கிற பரம உத்தமமான ஸந்நிதானத்தை அடைகிறான். ஹிரண்யகர்ப்ப ஸ்தானம் என்று அது சொல்லப்படுகிறது. பிரம்ம லோகம் என்பது அதுதான். பரமாத்மாவிலேயே கரைந்து ஒந்றாகிவிடாமல், வெளியே இருந்து கொண்டிருந்தாலும்கூட, அவரை ஸதாவும் அநுபவித்துக் கொண்டிருப்பதால் அந்த ஸ்தானத்தில்கூட எப்போதும் ஆனந்தமாகவே இருக்கும். ஒரு குறையும் இருக்காது. அப்படியானால் இதையும் மோட்சம் என்று சொல்ல வேண்டியதுதான்.
ஒரு குறையில்லை, ஒரு துக்கம் இல்லை, எப்போதும் ஈச்வர ஸாந்நித்யம். இதற்கு மேல் என்ன வேண்டும்? இப்படிப்பட்ட நிலையைத்தான் எல்லா ஸம்ஸ்காரங்களையும் செய்துவிட்டு ஸந்நியாஸியாகாமலே இறந்தவன் அடைகிறான்.
அவன் இதற்கு மேல் ஒன்றும் கேட்க மாட்டான். ஆனாலும் அந்த ஈச்வரன் தானும் ஒரு காலத்தில் இந்த லோக வியாபாரங்களையெல்லாம் நிறுத்திவிட்டு, லோகங்களையெல்லாம் மஹாப் பிரளயத்தில் கரைத்துவிட்டு, குணம் குறியில்லாத பரமாத்ம ஸத்யமாக மட்டுமே ஆகிவிடுவான். அப்போது அதுவரை அவனுடைய ஸந்நிதானத்திலிருந்த ஜீவர்களும் அவனோடுகூடப் பரமாத்மாவோடு பரமாத்மாவாக அத்வைத முக்தி அடைந்து விடுவார்கள்.
மஹாப் பிரளயத்தில் ஸகல ஜீவராசிகளும்தான் - அநுஷ்டானமே செய்யாதவர்களும், புழு பூச்சியும் கூடத்தான் - பரமாத்மாவோடு சேர்ந்து விடுவார்கள். அப்படியிருக்க இத்தனை அநுஷ்டானங்களைச் செய்த இவனுக்கும் அந்த நிலை கிடைத்ததில் விசேஷம் என்னவென்றால், ஒரு விசேஷம் இருக்கிறது. மறுபடியும் அகண்ட வெளியிலிருந்து பரமாத்ம ஸகுண ஆச்வரனாகி லோகங்களை ஸ்ருஷ்டித்து, ஜகத் வியாபாரங்களை ஆரம்பித்து விடுவார்.
அப்போது அநுஷ்டானம் பண்ணாத மற்ற ஜீவர்களும், இதர உயிரினங்களும் பூர்வ கர்மாப்படி மறுபடி பிறந்துதான் ஆகவேண்டும். அதுவரை பரமாத்மாவில் அவை இரண்டற கரையாமல் லயித்துத்தான் இருந்திருக்கும். இப்போது லயம் விலகி மறுபடி ஜன்மா உண்டாகிவிடும். ஸம்ஸ்காரங்களைச் செவ்வேனே செய்து சுத்தியானவனோ இப்படி புனரபி ஜனனம் என்று மறு ஸ்ருஷ்டியின்போது பூமியில் வந்து விழாமல், பரமாத்மாவோடு பரமாத்மாவாக இரண்டறக் கரைந்தது கரைந்தபடியே இருப்பான்.
பிரம்மசரியம் என்பதிலிருந்து ரொம்பவும் தாண்டி முடிவான நிலைக்கு வந்துவிட்டேன். ஒருத்தன் பிரம்மசாரியாக வாழ்நாள் பூரா இருக்கலாமா? கிருஹஸ்தாச்ரமம் வகிக்காமலே ஒரு பிரம்மச்சாரி ஸந்நியாஸம் வாங்கிக் கொள்ளலாமா? என்ற கேள்விகள் எழுந்ததால் அதற்குப் பதில் சொல்ல ஆரம்பித்தேன்.
ஸமாவர்த்தனம் பண்ணிக் கொள்ளாமல் குருவிடத்திலேயே இருந்து வாழ்க்கை முழுதையும் அவருக்கே அர்ப்பணம் பண்ணி அவர் போன பிறகும் பிரம்மச்சாரியாகவே வாழ்நாள் முழுதும் இருப்பதும் உண்டு. இதற்கு நைஷ்டிக
பிரம்மச்சரியம் என்று பெயர். பீஷ்மர், ஆஞ்ஜநேயர் முதலியவர்களை நைஷ்டிக பிரம்மச்சாரிகள் என்று சொல்லியிருக்கிறது. ஆனால் இது கலியில் விசேஷமாக சொல்லப்படவில்லை.
இயற்கை தருமத்தை அநுஸரித்து பிரம்மச்சாரியானவன் ஸமாவர்த்தனம் பண்ணிக்கொண்டு அப்புறம் விவாஹம் செய்துகொண்டு இல்லறம் நடத்த வேண்டும் என்பதுதான் பொதுதர்மம். பிரகருதிக்கு எதிர் நீச்சல் போடுவது கஷ்டம். அதன் போக்கிலேயே போய், ஆனாலும் அதிலேயே முழுகிப்போய்விடாமல் கரையைப்பிடிக்க வேண்டும். அதனால்தான் தர்மமாக கார்ஹஸ்தியம் (இல்லறம்) வகித்து அப்புறமே கொஞ்சம் விடுபட்டு வானப்ரஸ்தம், அதற்கும் அப்புறம் பூர்ண சந்நியாஸம் என்று விதித்திருக்கிறது. Nature -ஐ Violent -ஆக எதிர்த்துப் போனால் ஹானிதான் உண்டாகும் என்பதால் இப்படி வைத்திருக்கிறது. நைஷ்டிக பிரம்ம்ச்சாரியாக இருப்பேன், ஸந்நியாஸியாக இருப்பேன் என்று நல்ல வாலிபத்திலேயே நினைத்துக் கொண்டிருந்துவிட்டு அப்புறம் பிரகிருதி வேகத்திலே இழுக்கப்பட்டு அந்த ஆசிரமத்துக்கு விரோதமாக நடந்து கொண்டுவிட்டால் மஹத்தான பாபமாகிறது. இதுவே கிருஹஸ்தனுக்குப் பாபமாக இல்லாமல் பிரகிருதி தர்மமாக அநுமதிக்கப்பட்டிருக்கிறது.
எந்த ரூல் இருந்தாலும் எக்ஸெப்ஷன் (விலக்கு) உண்டு. நல்ல திட சித்தமும் பக்குவமும் பூர்வ ஜன்ம ஸம்ஸ்கார பலமும் இருப்பவர்கள் நைஷ்டிக பிரம்மச்சாரிகளாக இருக்கலாம். ஒரு முந்நூறு வருஷத்துக்குள் ஸமர்த்த ராமதாஸ் ஸ்வாமிகள் அப்படித்தான் இருந்துகொண்டு முகம்மதிய பிரவாகத்தையே சிவாஜி மூலம் முறியடித்து, நம் தர்மத்தை ஆழமாக நிலைநாட்டினார். நைஷ்டிக பிரம்மச்சாரியான ஆஞ்சநேயரின் அம்சம் அவர்.
வேத தர்மத்தை மறுபடி ஸ்தாபிப்பதற்காகப் பரமேச்வர அவதாரமாக வந்த ஸ்ரீ சங்கர பகவத் பாதர்கள் தம் சொந்த வாழ்க்கையிலே பிரம்மச்சரியத்திலிருந்து நேரே ஸந்நியாஸத்துக்குப் போனது மட்டுமின்றி ஸுரேச்வரர் தவிர அவரது மற்ற மூன்று பிரதான சிஷ்யர்களான பத்மபாதர், ஹஸ்தாமலகர், தோடகர் என்ற மூன்று பேருக்கும் பிரம்மச்சரியத்திலிருந்தே நேராக ஸந்நியாஸ ஆச்ரமம் கொடுத்திருக்கிறார்.
சங்கர மடத்திலும் பிரம்மச்சாரிகளே நேரே ஸந்நியாஸம் வாங்கிக்கொண்டு பீடாதிபதிகளாக இருக்க வேண்டும் என்ற விதி அநுஸரிக்கப்படுகிறது. அதனால் எல்லாரும் கிருஹஸ்தாச்ரமம் வகித்துத்தான் ஆகவேண்டும் என்றில்லை என்று தெரிகிறது. ஆனால் இப்படிப்பட்ட பக்குவம் ரொம்ப அபூர்வமானவர்களுக்கே இருக்கும்.
விவாஹமும், பஞ்ச மஹா யக்ஞங்களும், தலைக்கு ஏழேழாக உள்ள பாக-ஹவிர்-ஸோம யக்ஞங்கள் இருபத்தியன்றும் நைஷ்டிக பிரம்மசாரிகளுக்கும் நேரே பிரம்மச்சரியத்திலிருந்து துரீயாச்ரமத்துக்கு (நாலாவது ஆசிரமமான துறவறத்துக்கு) ப் போனவர்களுக்கும் இல்லாமல் போகிறது. அதாவது நாற்பது ஸம்ஸ்காரத்தில், பாதிக்கு மேல் அவர்களுக்கு இல்லாமல் போகிறது. இவை இல்லாமலே அந்தஃகரணம் சுத்தியடைகிற அளவுக்கு அவர்கள் பக்குவமாகியிருக்கவேண்டும். அதனால் இதை 'எக்ஸெப்ஷனல் கேஸ்'கள் (விதிவிலக்கானவை, அசாதாரணமானவை) என்றே சொல்லவேண்டும்.

|
|
Narasimman Nagarajan | 11:15am May 10 |
அரசியல் வேண்டவே வேண்டாம்! "-
(ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்)
(இரண்டு நாள் முன்பு வந்தது கல்கியில்-26 ஜனவரி தேதியிட்டது)
பாலிடிக்ஸ், ஸினிமா, பத்திரிகை, ஸ்போர்ட்ஸ் என்று நான் சொன்னதில் பாலிடிக்ஸ் என்பது மாணவர்களுக்கு வேண்டவே வேண்டாம்.
தேச நடப்பு அதில்தானே இருக்கிறது என்று கேட்கலாம்.
தேச நடப்பு அதில்தான் இருந்தாலும் அந்த நடப்பை நல்ல கூர்மையான அறிவுடன் நடத்தித் தரவும் கல்வியில் தேர்ச்சிப் பெறுவதுதானே உதவும்? இப்போது கல்விக்கு இடையூறு செய்துகொண்டு பொலிடிகல் பிரச்னைகளில் இறங்குவது அதை மேலும் உணர்ச்சி வேகத்தால் கெடுத்து, தங்களையும் கெடுத்துக் கொள்வதில்தான் முடியும். ‘மேலும்’ கெடுத்து என்று சொன்னேன்.
ஏனென்றால் தற்போது அரசியலில் யோக்யர்களும், யோக்யமான கொள்கைகளும் அபூர்வமாகிக் கொண்டே வந்து அது ஸ்வய நலத்துக்கும், ஆத்திர-க்ஷாத்திரங் களுக்குமே வளப்பமான விளைநிலமாகியிருக்கிறது. இந்த நிலையில் பக்குவ தசைக்கு வராத இளவயஸு மாணவர்கள் அதில் போய் விழுந்தால்?
இப்போது போலில்லாமல் பாலிடிக்ஸ் - அரசியல் - ஒழுங்காக, தார்மிகமாக இருந்தாலும், எதற்கும் உரிய பருவம் என்று ஒன்று உண்டாகையால், படித்துத் தேர்ச்சி பெற்று உத்யோகத்துக்குப் போய் வாழ்க்கைப் பொறுப்பு எடுத்துக் கொள்ளவே கடமைப்பட்டுள்ள மாணவ ஸமூஹம் அரசியலில் இறங்கவே கூடாது.
‘நாம் தேசத்தை நல்ல வழியில் நடத்துவதற்கு நல்ல புத்தி பலமும், தர்ம பலமும், தெய்வ பலமும் பெற வேண்டும். முதலில் இவற்றை நாம் பெற்று, நிலைப்படுத்திக் கொண்டால்தான் பிற்பாடு தேச ப்ரச்னைகளின் பளுவைக் கஷ்டப்படாமல், தாங்கி அதை அபிவிருத்தி செய்ய முடியும்.
ஆகவே பலம் பெறாத தற்போதைய ஸ்திதியில் நாம் ராஜீய வியவஹாரங்களில் இறங்குவது நமக்கும் நல்லதில்லை, ராஜ்யத்துக்கும் நல்லதில்லை’ என்று யௌவனப் பிராயத்தினர் உணர வேண்டும்.
இவற்றில் புத்திபலத்தை முக்யமாகக் காலேஜில் பெறுகிற படிப்பாகவே பெற வேண்டும்; அதோடு அதைக் கொண்டுதான் நாளைக்கு இவன் ஒரு உத்தியோகத்திலே அமர்ந்து வீட்டை நடத்த முடியும் என்றும் ஏற்பட்டிருக்கிறது. படிப்புக்குக் குந்தகம் பண்ணிக் கொண்டால் வீட்டை நடத்த முடியாமல் போகும். தன் வீட்டையே நடத்தாதவன் நாட்டை எப்படி நடத்த முடியும்?
ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

ஜகத்குரு ஆதிசங்கரரின் அவர் ஸ்தாபித்த காஞ்சி மடத்தின் ஆசாரியார்களைப் பற்றி [1-70]: PartI
1. ஜகத்குரு ஆதிசங்கரர் (அருளாட்சி : கி.மு.509-477) கேரளாவில் உள்ள காலடியில் அவதரித்து, பாரதமெங்கும் தெய்வீக திக்விஜயத்தை நடத்தி முடித்த சங்கரர், இறுதியாக காஞ்சிபுரத்தில் தங்கி, சர்வக்ஞபீடத்தையும், சங்கர மடத்தையும் நிறுவினார். தாமிரபரணிப் படுகையைச் சேர்ந்த, ஞானவானான ஒரு பாலகனுக்கு சன்னியாச தீட்சை அளித்து, சர்வஞாத்மன் என்று பெயரும் சூட்டினார். தனக்குப் பிறகு, காஞ்சி மடத்தின் பீடாதிபதியாகும் பொறுப்பை அவருக்குத் தந்து அதுவரை ஸ்ரீ சுரேச்வராசாரியரின் பராமரிப்பில் இருக்க ஆணையிட்டுவிட்டு அன்னை காமாட்சியுடன் இரண்டறக் கலந்தார். அவர் அருளிய நூல்களுக்கும், செய்த நெறிமுறைகளுக்கும், பெற்ற வெற்றிகளுக்கும், நடத்திய அற்புதங்களுக்கும் அளவேயில்லை. திருச்சூர் வடக்கு நாதனே, சங்கரராக அவதரித்தார் என்றால், இதைச் சொல்ல வார்த்தைகள் ஏது? பிரம்மச்சர்யத்திலிருந்து நேரடியாக சன்னியாசம் பெற்றவர் ஆதிசங்கரர். அதே முறைதான் காஞ்சி மடத்தில் இன்றுவரை பின்பற்றப்படுகிறது. காமகோடி பீடத்தின் ஆசார்ய பரம்பரை, ஒரு சங்கிலித்தொடர் போன்றது. இடையே எந்தத் தொய்வும் இல்லாதது பெருமிதத்திற்குரியது. ஆதிசங்கரர், இந்திரனையும் சரஸ்வதியையும், வெற்றி கொண்டதால் அவரைப் பின் தொடர்ந்து வந்த ஆசார்யர்களின் பெயருடன் `இந்திர சரஸ்வதி’ என்ற பெயரும் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. ஸ்ரீ சந்திரமௌளீஸ்வரருக்கு தினமும் 3 கால பூஜைகளை இந்த ஆசார்யர்களே நிறைவேற்றுகிறார்கள். 2. ஸ்ரீ சுரேச்வராசாரியார் (கி.மு.477-407) ஜகத்குரு ஆதிசங்கரரின் சீடர்களுள் வயது முதிர்ந்த, அதிகம் கற்றறிந்த சீடர் இவர். மாகிஷ்மதி என்ற ஊரைச் சேர்ந்த இவர், பூர்வமீமாம்ச கொள்கையுடன், மண்டன மிஸ்ரர் என்ற பெயரில் இருந்தவர். ஆதிசங்கரர், இவருடன் வாதிட்டு வென்ற கதையும், சுரேச்வரர் என்று பெயரிட்டு, சன்னியாசம் வழங்கி, தன்னுடனேயே அழைத்துச் சென்ற கதையும் நமக்குத் தெரிந்ததுதான். பிருகதாரண்ய உபநிஷத்துக்கு உரை மற்றும் நைஷ்காம்ய சித்திக்கு தத்துவார்த்தமான உரை ஆகியவற்றை இவர் எழுதினார். கி.மு.407-ல் சுக்ல ஏகாதசி அன்று கேட்டை நட்சத்திரத்தில் பவ வருடத்தில் காஞ்சிபுரத்திலேயே இவர் முக்தியடைந்தார். இன்றும்கூட அவரது பழைய பெயரில், மண்டனமிஸ்ரர் அக்ரஹாரம் என்று ஒரு தெரு காஞ்சியில் உள்ளது. இது மட்டுமன்றி காஞ்சி மடத்தில், ஒரு கற்சிலை வடிவில் ஸ்ரீ சுரேச்வராசாரியார் அருள்பாலிக்கிறார். தினசரி வழிபாடும் இவருக்கு உண்டு. 3. ஸ்ரீ சர்வஞாத்மன் (கி.மு.407-364) காஞ்சியில் ஆதிசங்கரர், பீடத்தை அலங்கரித்தபோது, பாரதத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பண்டிதர்களும், அறிஞர்களும் காஞ்சிபுரத்தில் குழுமினார்கள். அவர்களுள் தாமிரபரணிப் பகுதியைச் சேர்ந்த பிரம்ம தேசம் மற்றும் அதன் அண்டைப் பகுதியிலிருந்து வந்திருந்த கல்விப் பெருந்தகையாளர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். அவர்கள் தேவ பேதம், மூர்த்தி பேதம் போன்ற பல தலைப்புகளில் ஆசாரியாருடன் விவாதித்தார்கள். தன்னுடைய அத்வைத சித்தாந்தத்தை முன்னிறுத்தி, அந்த வாதங்களில் அவர்களைப் பேச்சிழக்கச் செய்தார் ஆதிசங்கரர். பிறகு சர்வஞான பீடத்தை ஆரோகணித்த ஆசார்யார் பார்வையை ஏழு வயது நிரம்பிய சிறுவன் ஒருவன் ஈர்த்தான். அச்சிறுவனுடைய பெற்றோருக்குச் சொல்லியனுப்பினார் ஆதிசங்கரர். அவர்களும் தம் மகனுடன் வந்து ஆசார்யாரை நமஸ்கரித்தார்கள். அவர்களிடம், அவர்களுடைய மகனை அந்தக் காஞ்சிமடத்தின் பீடத்துக்கு வாரிசாக நியமிக்க, தான் விரும்புவதாகச் சொன்னார். பெற்றோர் அதைக் கேட்டுப் பெருமிதம் அடைந்தார்கள். மகிழ்ச்சியால் பூத்த அவர்கள், ஆசார்யாரின் யோசனைக்குத் தம்முடைய பூரண சம்மதத்தைத் தெரிவித்தார்கள். அதன்பிறகு, அந்தச் சிறுவனை சந்நியாச தர்மத்திற்கு உட்படுத்தி, தீட்சையும் அளித்தார். அவனுக்கு சர்வஞாத்மன் என்று நாமம் சூட்டினார். இந்த பால சந்நியாசி, சுரேச்வராசாரியாரின் பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் ஒப்படைக்கப்பட்டார். சர்வஞாத்மன், ஆதிசங்கரரின் ருத்ர பாஷ்யத்தைத் தொகுத்து, உரையெழுதி மெருகூட்டினார். இவருடைய இந்த விளக்க விமரிசனமானது, `சம்ஸ்கேஷப சரீரிகா’ என்று அழைக்கப்பட்டது. அதேபோல சர்வஞான விலாசா என்ற கவிதை வழி ஆராய்ச்சித் தொகுப்பையும் இவர் இயற்றினார். சம்ஸ்கேஷப சரீரிகா, மொத்தம் 1267 பாடல்களைக் கொண்டது. மிகவும் எளிமையானதாகவும், கம்பீரமானதாகவும் விளங்குகின்றன அப்பாடல்கள். சிறப்புமிக்க பல வருடங்களை ஆசார்ய பொறுப்பில், திறம்பட செலவிட்ட சர்வஞாத்மர் (கி.மு.365ஆம் ஆண்டு) நள வருஷம் வைசாக கிருஷ்ண சதுர்தசி முன்னிரவில் விதேஹர் முக்தியடைந்தார். 4. ஸ்ரீ சத்யபோதேந்திர சரஸ்வதி (கி.மு. 364 – 268) கேரள நாட்டைச் சேர்ந்த அமராவதி தீரம் என்ற இடத்தைச் சேர்ந்தவர். பூர்வாஸ்ரமத்தில் பாலினீகர் என்று அழைக்கப்பட்டார். தலினேச சர்மா என்பவரின் மகன். இவர் சாக்கியர், புத்தர், சமணர் ஆகியோரை வாதிட்டு வென்றார். ஆதிசங்கரரின் பாஷ்யத்திற்கு `பாதகாசதா’ என்ற உரையை எழுதிய இவர், நந்தன வருடம் (கி.மு. 268) வைசாக மாதம் கிருஷ்ண அஷ்டமியில் காஞ்சியில் முக்தி அடைந்தார். 5. ஸ்ரீ ஞானாந்தேந்திர சரஸ்வதி (கி.மு. 268-205) சந்நியாசத்திற்கு முன் ஞானோத்தமர் என்றுஅழைக்கப்பட்டார். தமிழக பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். தந்தையின் பெயர் நாகேசா. ஞானாந்தேந்திரா, தர்க்க சாஸ்திரத்தில் வல்லவர். சுரேச்வராசாரியாரின் நைஷ்காம்ய சித்தி என்ற நூலுக்கு `சந்திரிகா’ என்ற உரை எழுதியுள்ளார். இந்நூலில் தன் குருவான ஸ்ரீ சத்யபோதர் மற்றும் ஸ்ரீசர்வஞாத்மன் ஆகியோரைப் பற்றி மிகச் சிறப்பாகக் குறிப்பிடுகிறார். காஞ்சி பீடத்தின் ஞான ஒளியாக தன்னைப் பற்றியும் இதில் கூறியிருக்கிறார். இவர் சுக்ல சப்தமி அன்று மன்மத மாதம் (கி.மு.205) மிருக சீருஷத்தில் காஞ்சியில் முக்தி அடைந்தார். 6. ஸ்ரீ சுத்தானந்தேந்திர சரஸ்வதி (கி.மு.205-124) வேதாரண்யத்தைச் சேர்ந்த இவர், பார்வு என்ற பண்டிதரின் மகன். பூர்வாஸ்ரமப் பெயர், விஸ்வநாதன். நள வருடம் ஜ்யேஷ்ட மாதம் சுக்ல சஷ்டி அன்று (கி.மு.124) காஞ்சியில் முக்தி அடைந்தார். 7. ஸ்ரீ ஆனந்த ஞானேந்திர சரஸ்வதி (கி.மு.124-55) கேரளத்தைச் சேர்ந்த இவரது பூர்வாசிரமப் பெயர் சின்னைய்யா. தகப்பனார் பெயர் சூர்ய நாராயண மஹி. இவர் ஒரு சக்தி உபாசகர். கடவுள் கிருபையால் இலக்கிய ஞானம் கைவரப் பெற்றவர். ஆதிசங்கரரின் பாஷ்யத்திற்கும் சுரேச்வராசாரியாரின் நூலுக்கும் உரை எழுதியுள்ளார். ஸ்ரீசைலத்தில் கிருஷ்ண நவமி அன்று வைசாக மாதம் க்ரோதான வருடம் (கி.மு. 55) முக்தி அடைந்தார். 8. ஸ்ரீ கைவல்யானந்த யோகேந்திர சரஸ்வதி (கி.மு.55-கி.பி.28) இயற்பெயர், மங்கண்ணா. சொந்த ஊர், திருப்பதி. தகப்பனார் பெயர், திரைலிங்க சிவய்யா. சர்வதாரி வருடம், (கி.பி.28) மகர மாதம் முதல் நாள் காஞ்சியில் முக்தியடைந்தார். 9. ஸ்ரீ கிருபாசங்க ரேந்திர சரஸ்வதி (கி.பி.28-69) ஆந்திராவைச் சேர்ந்த பிராமணர் வகுப்பைச் சேர்ந்த இவரது இயற் பெயர், கங்கேஷா பாத்யாயர். சீரழிந்து கொண்டிருந்த இந்து மதத்தின் பிற்போக்கு மற்றும் காலத்திற்கு ஒவ்வாத பழக்க வழக்கங்களை முழு மூச்சுடன் கண்டித்து அவற்றை அறவே ஒழித்தவர் இவர். ஆதிசங்கரருக்குப் பிறகு அவர் ஏற்படுத்திய மார்க்கத்தை அவர் வழியிலேயே செம்மைப்படுத்தி உயர்த்தியதில் பெரும் பங்கு கிருபா சங்கரருக்கு உண்டு. குருவின் ஷண்மத மார்க்கத்தை வழிபாட்டு முறையாக்கி சிவன், விஷ்ணு, அம்பிகை, சூரியன், கணபதி, ஸ்கந்தன் என்று பிரித்து வழிபட வகை செய்தார். இவற்றை சங்கரரும் அவர் வழியில் கிருபாசங்கரரும் முறைப்படுத்தியதால் பின்னர் வந்த சைவ- வைணவ மதத் தலைவர்களுக்கு தங்கள் பணியை எளிதாய்ச் செய்ய முடிந்தது. விந்திய மலை அருகே கிருஷ்ண திருதியை அன்று கிருத்திகை மாதம் விபவ வருடம் (கி.பி.69) இவர் முக்தி அடைந்தார். 10. ஸ்ரீ சுரேஷ்வர் (கி.பி.69-127) மஹாராஷ்டிராவைச் சேர்ந்த இவரது பூர்வாஸ்ரமப் பெயர் : மஹேஷ்வரர். தகப்பனார் பெயர்: ஈஸ்வர பண்டிதர். காஞ்சியில் ஆஷாட மாதம் அட்சய வருடம் (கி.பி.127) பௌர்ணமி அன்று முக்தியடைந்தார். 11. ஸ்ரீ சிவானந்த சித்கனேந்திர சரஸ்வதி (கி.பி.127-172) இவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர். பூர்வாஸ்ரமப் பெயர் ஈஸ்வரவது. தந்தை, உஜ்வலபட்டர். சிவானந்தர், தன் பெயருக்கேற்ப சிவா அத்வைதத்தில் ஈடுபாடுடையவர். சுக்லதசமி, ஜேஷ்டமாதம் விரோதி கிருதி அன்று (கி.பி.172) விருத்தாசலத்தில் முக்தியடைந்தார். 12. ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ! (கி.பி. 172-235) பாலாறு அருகிலுள்ள சிறு கிராமத்தைச் சேர்ந்த வத்ஸ பட்டர் என்பவருடைய மகன். இவரது பூர்வாஸ்ரமப் பெயர் ஹரி. மடத்தின் பணிகளை ஒரு சீடரிடம் ஒப்படைத்துவிட்டு, எப்போதும் யோக மார்க்கத்திலேயே ஈடுபட்ட இவர், 63 ஆண்டுகள் காஞ்சி மடத்தின் தலைவராக இருந்தார். ஆனந்த வருடம் (கி.பி.235) ஆஷாட மாதம், சுக்ல நவமியன்று சேஷாசலம் சென்ற இவர், அங்கேயுள்ள ஒரு குகையில் நுழைந்தவர், திரும்பி வரவில்லை. அங்கேயே மறைந்துவிட்டார். காஞ்சி காமகோடி பீடாதிபதிகளாக அருளாட்சி புரிந்த ஆசார்யார்களைப் பற்றி சென்ற இதழில் பார்த்தோம். அந்த அருள் நிறைந்த அணிவகுப்பு தொடர்கிறது. 13. ஸ்ரீசட்சித்கனேந்திர சரஸ்வதி (கி.பி.235-273) கெடில நதிக்கரையோர கிராமத்தைச் சேர்ந்தவர். பூர்வாஸ்ரமப் பெயர் சேஷையா. தகப்பனார் ஸ்ரீகர பண்டிதர். இவரும் தன் குருவைப் போலவே, மடத்தின் பணிகளை ஒரு சீடரிடம் ஒப்படைத்துவிட்டு, காஞ்சியின் சுற்றுப்புறங்களில் அவதூதராகச் சுற்றித் திரிந்தார். 32 ஆண்டுகள் இப்படிச் சுற்றித் திரிந்த இவர், மீண்டும் குருவைப் போலவே, காஞ்சி கோயிலுக்குள் நுழைந்தவர், அப்படியே ஒரு சிவலிங்கமாக மாறி விட்டார். இன்று காயாரோகணேஸ்வரர் கோயில் என்று அது அழைக்கப்படுகிறது. லிங்கத்தை இப்போதும் தரிசனம் செய்யலாம். கர வருடம் (கி.பி.272) மார்கசிரீஷ மாதம், சுக்ல பிரதிமையில் இது நடந்தது. 14. வித்யாகனர் I (கி.பி.272-317) ஆந்திராவைச் சேர்ந்த அந்தணர். தந்தை, பாபண்ண சோமயாஜி. இயற்பெயர் நாயனா. மந்திரசாஸ்திரத்தில் கைதேர்ந்தவர் இவர். மலையமலையில் உக்கிரத்-துடன் காணப்பட்ட பைரவமூர்த்தியை, சாந்தப்படுத்தியவர் இவர். கி.பி.317 தாது வருஷம், மார்கசீரிஷ மாதம் அமாவாசையன்று மலையமலைத் தொடரில் உள்ள அகத்திய மலையில் சித்தியடைந்தார். 15.கீஷ்பதி கங்காதரர் (கி.பி.317-329) ஆந்திராவைச் சேர்ந்த அந்தணர். தந்தை, காஞ்சி பத்ரகிரி. இயற்பெயர், சுபத்ரர். அகத்திய மலைப்பகுதியில் இவர் சஞ்சரித்த போது அகத்திய முனிவரை தரிசித்து, அவரிடம் பஞ்ச தசாக்ஷரி மந்திர உபதேசம் பெற்றார். தன் பன்னிரண்டாவது வயதிலேயே பீடாதிபதியாகிவிட்ட இவர், பெரும் புலமையும் ஞானமும் மிக்கவர். கி.பி.329 சர்வதாரி வருஷம், சைத்ர மாதம் சுக்லப்பிரதமை நாளன்று அகஸ்திய மலைப் பகுதியில் சித்தியுற்றார். 16. உஜ்வல சங்கரேந்திர சரஸ்வதி (கி.பி.329-367) இவர் மகாராஷ்டிர அந்தணர். இயற்பெயர் அச்சுத கேசவர். தந்தையார் கேசவ சங்கரர். இவர் சிறந்த அருளாளர். சீயாநந்தூர நாட்டு அரசனான குலசேகரனை தன் அருளால் பெரும் கவிஞனாக ஆக்கியவர். இமயம் முதல் குமரி வரை தல யாத்திரை செய்தவர். கி.பி.367-ல் அட்சய வருடம், சுக்லபட்சம், அஷ்டமி நாளில் காஷ்மீரில் உள்ள கலாபூரி என்ற ஊரில் சித்தியடைந்தார். 17. பால குரு சதாசிவர் (கி.பி.367-375) காஷ்மீரில் அரசனாக இருந்த தேவமிச்ரன் என்பவரின் திருமகன் இவர். இவர் அவதரித்த சில வருடங்களில் இவரது தந்தை ஜைனமதத்தைத் தழுவி விட்டார். ஆனால் சதாசிவரோ சிறுவயதிலேயே வேதாந்தத்தில் பற்றுள்ளவராக இருந்தார். தந்தை, தன் மகனை மாற்ற எவ்வளவோ முயற்சித்தும் பலன் இல்லை. இரண்யனின் முயற்சிகள், பிரகலாதனிடம் பலிக்காதது போல தோல்வியடையவே, வெகுண்ட மன்னன், தன் மகன் என்றும் பாராது, சதாசிவரை சிந்து நதியில் வீசியெறிந்தான். நீரில் தத்தளித்த சிறுவனை பாடலிபுத்திரத்தைச் சேர்ந்த பூரிவசு என்பவன் மீட்டு, சிந்து நதியில் கிடைத்ததால் சிந்து தத்தன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். பின்னர், யாத்திரை வந்த உஜ்வலரிடம் ஒப்படைத்தான். அவர் அருளால் சிறுவன், ஸ்ரீபாலகுரு சதாசிவேந்திரர் ஆனார். தன் 17-ம் வயதில் காஞ்சி பீடாதிபதியான இவர், பாலிக, பௌத்த சமயத்தவரை, நம் நாட்டை விட்டு, புறத்தே செல்லுமாறு செய்தார். தன் 25-ம் வயதில் கி.பி.375 பவ ஆண்டு, ஜேஷ்ட மாதம் கிருஷ்ண பட்ச தசமியில் நாசிக் அருகில் உள்ள த்ரயம்பகத்தில் சித்தியடைந்தார். 18.சுரேந்திரேந்திர சரஸ்வதி (கி.பி.375-385) மகாராஷ்டிராவைச் சேர்ந்த மதுராநாதர் என்பவரின் மகன் இவர். தன் யோகத் திறமையால் யோகி திலகர் என்று கூறப்பட்டவர். இயற்பெயர் மாதவர். துர்த்தீவி என்ற பிரபலமான நாத்திகனை தன் வாதத்தால் தோற்கடித்தவர் இவர். இதனைக் கேள்விப்பட்ட காஷ்மீர மன்னன் நரேந்திராதித்யன், தன் அரியணையையும் அரசுரிமையையும் சுரேந்திரரின் பாதங்களில் சமர்ப்பித்து வணங்கினான். கி.பி.385 தாரண ஆண்டு மார்கசீரிஷ மாதம் சுக்ல பிரதமையில் உஜ்ஜயினியில் சித்தியடைந்தார். 19.வித்யாகனேந்திரர் II (கி.பி.386-398) ஸ்ரீகண்டர் என்ற இயற்பெயருடைய இவர், மகாராஷ்டிராவைச் சேர்ந்த உமேச சங்கரர் என்ற அந்தணரின் மகன். குழந்தைப் பருவத்திலிருந்தே இவருக்கு வெண்மேக நோய் இருந்தது. அதனால் தினமும் 1008 தடவை சூரிய நமஸ்காரம் செய்து, நோயிலிருந்து விடுதலை பெற்றார். எனவே சூரிய தாசர் என்று அனைவராலும் புகழப்பட்டார். மார்த்தாண்டவித்யாகனர் என்ற பெயரும் இவருக்குண்டு. தன் 18-ம் வயதில் காஞ்சி பீடாதிபதியான இவர், கி.பி. 398 ஹேவிளம்பி வருடம், பாத்ர பத மாதம், கிருஷ்ணபட்ச நவமியில் கோதாவரி நதி தீரத்தில் சித்தியடைந்தார். 20. மூகசங்கரேந்திர சரஸ்வதி (கி.பி.398-437) இவர், வித்யாவதி என்னும் வானவியல் வல்லுநரின் மகன். பிறந்ததி-லிருந்தே பேசும் திறனற்று இருந்த இவர், காஞ்சி காமகோடி பீடாதிபதி திருவருளால் பேசும் திறன் பெற்று மூக பஞ்ச சதி என்ற 500 பாடல்களைப் பொழிந்தார். இவர் காலத்தில் காஷ்மீரின் மன்னனாக இருந்தவன் மாத்ருகுப்தன். பேரரசன் சகாரி விக்கிரமாதித்தன் சபையில் சந்தனம் அரைப்பவனாக இருந்து, சகாரியின் கருணையால் காஷ்மீர் மன்னனானவன். கவித்திறமையும் உடைய மாத்ருகுப்தன், மிகுந்த ஆணவத்துடன் யாரையும் மதிக்காமல் செயல்பட்டான். அவனை ஆட்கொள்ள விரும்பினார் மூகசங்கரர். மாத்ருகுப்தன் அரண்மனையில் ராமிலன் என்ற குதிரை ராவுத்தனும், மேது என்னும் யானைப் பாகனும் இருந்தார்கள். அரசனின் ஆணவம் அடங்க, அந்த இருவரும் பெரும் கவிஞர்களாக மாறுமாறு மூகசங்கரர் அனுக்ரஹம் செய்தார். அதன்படியே அவர்களும் ஆனார்கள். குதிரைக்காரனான ராமிலன், `மணிப்ரபா’ என்ற கவிதை நாடக நூலை எழுதினான். யானைப் பாகனான மேது, `ஹயக்ரீவ வதம்’ என்னும் நாடக நூலை இயற்றினான். அவர்கள் இருவரையும் பெரும் புலவர்களாக்கியது மூகசங்கரர்தான் என்பதை உணர்ந்த மன்னன் மாத்ருகுப்தன், மனம் மாறினான். ஆணவம் அழிந்து ஆசார்யாளின் திருவடியைப் பணிந்தான். `ப்ரவரசேனன்’ என்பவனை காஷ்மீர் மன்னனாக ஆக்கிவிட்டு, ஞானம் பெற்று, மூகசங்கரருடன் காசியாத்திரை மேற்கொண்டான். அதுமட்டுமல்ல, மூகசங்கரர், மாபெரும் சமுதாயப் பணியையும் புரிந்தார். காஷ்மீரில் ஜீலம் நதி முதல் சிந்து நதிக்கரை வரை பரவியிருந்த அடர்ந்த காட்டுப் பகுதியில் பொதுமக்கள் நலனுக்காக நெடுஞ்சாலை ஒன்றை மன்னனின் உதவியுடன் ஏற்படுத்தினார். நமது துரதிருஷ்டம், இன்று அது கிடைக்கவில்லை. அற்புதங்கள் பலபுரிந்த மூகசங்கரர், கி.பி.437ல் தாது வருடம், ச்ரவண மாதம், பௌர்ணமி நாளில் கோதாவரி நதி தீரத்தில் சித்தியுற்றார். |
Narasimman Nagarajan | 10:59am May 10 |
ஸ்ரீ ஜெயேந்திர சுவாமி.
முதல் தரிசனம் (Jaya varusha importance)
நான் விழுப்புரத்தில் படித்தூக கொண்டிருக்கும் போது ஆசார்ய ஸ்வாமிகள் (மகா ஸ்வாமிகள்) ஸ்ரீ காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்ததுக்காக வந்து கொண்டிருந்தார்கள். அப்போதுதான் நான் அவர்களை முதன் முறையாகத் தரிசித்தேன். 'ஒவ்வொரு குடும்பதிலிருந்தும் ஒரு மாணவன் வேதம் படிப்பதற்கு வரவேண்டும்', என்று சொன்னார்கள். அதன்படி என்னுடைய பெற்றோர் ஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளை வணங்கி, "என் பையனுக்குப் பூணூல் போட்டு வைக்க வேணும். இவனையும் வேதம் படிப்பதற்குத் தயார் செய்ய வேண்டும்," என்று தெரிவித்துக் கொண்டார்கள்.
ஆசார்ய ஸ்வாமிகள்,, "காஞ்சிபுரத்தில் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில்
கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. அங்கே அழைத்து வந்து விடு.
அங்கேயே இந்த மாணவனுக்கு வேத பாடத்தை ஆரம்பித்து வைக்கலாம்," என்று ஆருளாசி வழங்கினார்கள்.
இதுதான் முதல் சந்திப்பு.
ஸ்ரீ காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகம் நடைபெற்ற பிறகு அடுத்த முகூர்த்த வேளையில் ஸ்ரீ
ஸ்வாமிகளுடைய பூர்வாசிரம கடைசி சகோதரர் ஸ்ரீகிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் அவரை வைத்து அந்த அம்மன் சன்னதியிலேயே ஸ்வாமிகள் பூஜை செய்யும் சன்னதியிலேயே - வேத பாட சிட்ஷையை ஆரம்பித்து வைத்தார்கள்.
திருவிடை மருதூர்
பிறகு திருவிடை மருதூருக்கு என்னை அனுப்பி வைத்தார்கள், என்னுடைய ஆசிரியர் ஸ்ரீ கிருஷ்ண மூர்த்தி சாஸ்திரிகளுடன் சிதம்பரத்துக்கு சென்று ஸ்ரீ நடராஜப் பெருமானைத் தரிசித்துவிட்டு- திருவிடைமருதூர் போய்ச் சேர்ந்தேன்,
என் பெற்றோர் விழுப்புரத்திலேயே தங்கிவிட்டார்கள் பதின்மூன்றாம் வயதில் என்னுடைய 13வது வயது வரை திருவிடைமருதூரில் வேதம் படித்து வந்தேன். ஆசார்ய சுவாமிகள் காஞ்சிபுரம் யாத்திரையை எல்லாம் முடித்துக் கொண்டு திரும்பவும் திருவிடைமருதூர் வந்து சேர்ந்தார்கள்.சுமார் ஒரு வருடகாலம் ஆசார்ய சுவாமிகள் அங்கே தங்கயிருந்தார்கள்.
நான் வேதம் படிப்பதைப் பூர்த்தி செய்கிற நேரம். அப்படிப்பட்ட வேளைகளில்என் பெயர், மற்றும் ஊர், படித்த படிப்பு பற்றி எல்லாம் அடிக்கடி விசாரிப்பார்கள்.
ஒருநாள் சுவாமிகள் திருவிடைமருதூருக்கு அருகில் உள்ள வேதாந்தபுரம்என்ற ஊருக்குச் சென்றிருந்தார்கள். அங்கே ஸ்ரீ போதேந்திர சுவாமிகள் என்ற பெயர் கொண்ட பெரிய மகானின் சமாதி உள்ளது. காஞ்சி காமகோடி பீடத்தை அலங்கரித்த பெரியவரின் சமாதி அது. ஆசார்ய சுவாமிகள் அங்கு அடிக்கடிசென்று விடுவார்கள். நானும் சுவாமிகளுடன் சென்றேன்.
சுவாமிகளின் எண்ணம்
அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் ஆச்சார்ய சுவாமிகள், திடீரென்று ஒரு
நாள், 'ஸ்ரீ மடத்துக்கு வருகிறாயா?' என்று என்னிடம் கேட்டார். 'நான்தான் உங்களுடன் வந்து கொண்டிருக்கிறேனே,' என்ற சொன்னேன்.
'அப்படி அல்ல, என்னைப்போல நீயும் வருகிறாயா?' என்று கேட்டார்.
அப்போதுதான் சுவாமிகளின் மனத்தில் என்ன இருந்தது என்று புரிந்து
கொண்டேன். 'என் பெற்றோர்களைக் கேட்க வேண்டும்,' என்று சொன்னேன்.
உடனே என் பெற்றோர்களையும் ஊரிலிருந்து வரவழைத்தார்கள்.
அவர்களையும் கேட்டார்கள்.
பாக்கியம்
'சுவாமிகள் வேதம் படிப்பதற்கு பையனை விட வேண்டும் என்று
சொன்னீர்கள். அப்படியே செய்தோம். இப்போது ஸ்ரீ மடத்திலேயே
சுவாமிகளாகச் சேர்க்க விருப்பம் கொண்டிருக்கிறீர்கள். தங்கள் சித்தம், எங்கள் பாக்கியம்," என்று என் பெற்றோர் தெரிவித்தனர்.
ஆகவே, ஆசார்ய சுவாமிகள் எப்போது என்னை விழுப்புரத்திலே
கண்டார்களோ, அப்போது என்னை இந்தப் பீடத்திற்கு வாரிசாக
வைக்கவேண்டும் என்ற எண்ணம் உதித்து விட்டது என்பது புரிந்தது.
பதினான்காம் வயதில் என்னுடைய பதினான்காம் வயதில் ஸ்ரீ மடத்துக்கு நான் வர வேண்டும் என்று சுவாமிகள் தீர்மானித்தார்கள். அப்போதிலிருந்தே ஸ்ரீ மடத்தில் கற்க வேண்டிய பாடங்களை யெல்லாம் கற்கும்படி ஏற்பாடு செய்து விட்டார்கள்.
பின்னர் திருச்சிக்குச் சென்று அங்கு அருகில் உள்ள திருவானைக்கோவிலில் படித்தேன். அங்கேயும் ஸ்ரீ மடத்துக்கு வேண்டிய பாடங்களையே கற்றேன்.
பதினேழாம் வயதில்
பதினேழு வயது வரை இம்மாதிரியான பாடங்களையே கற்று வந்தேன்.
சுவாமிகள் ஒரு நாள் என்னை அழைத்து, 'அகில இந்திய யாத்திரை சென்று வா',என்று உத்தரவிட்டார்கள். என் பெறறோருடன் ரயில் மூலமாக இந்தியாவில் எல்லா ஊர்களுக்கும் ஷேத்திரங்களுக்கும் சென்று வந்தேன்,
பதினெட்டு வயது முடிந்தவுடன் "என்னுடனேயே கொஞ்சநாள் இரு" என்று காஞ்சிபுரத்திலேயே தன்னுடன் வைத்துக் கொண்டார்கள். ஒராண்டு காலம் கழிந்தது.
பத்தொன்பதாம் வயதில்
எனக்குப் பத்தொன்பது வயது தொடங்கியதும், காஞ்சிபுரத்திலேயே
என்னைச் சுவாமிகளாகத் தயாராக்கினார்கள்.
இப்படித்தான் பெரிய ஆசார்ய சுவாமிகளுடன் எனக்கு ஏற்பட்ட தொடர்பு,
ஸ்ரீ மடம் வரைக்கும் வந்து என்னையும் சுவாமிகளாக ஆக்கிய வரை நேர்ந்த ஒரு நிலை.
பெயர் சூட்டல்
எனக்கு என்ன பெயர் சூட்டலாம் என்பதற்காக, சன்னியாச ஆசிரமம்
ஏற்றுக்கொள்வதற்கு முதல் நாள் புலவர்களையும் பண்டிதர்களையும் கூட்டி என்னையும் கூடவே வைத்துக் கொண்டு ஆசார்ய சுவாமிகள் ஆலோசனை செய்து கொண்டிருந்தார்கள்.
சந்திரசேகரன், மகாதேவன் என்கிற பெயர்கள் ஐந்தாறு தலை முறையாக இந்தப் பீடத்தில் மாற்றி மாற்றிச் சூட்டப்பட்டு வந்தன.
அதன் தொடர்பாக இருக்கலாமா, அல்லது முற்றிலும் புதிதாக வேறு பெயரா என்பது பற்றித்தான் ஆலோசனை.
நான் ஸ்ரீ மடத்துக்கு மாசி மாதத்தில் வந்து சேர்ந்தேன். அடுத்த சித்திரை,
வைகாசி மாதங்களில் பெரியவர்களுடைய பிறந்த தினம். அவர்களுடைய அறுபது ஆண்டு நிறைவு பெறுகிற ஆண்டாகவும் அமைந்தது. அந்த ஆண்டின்
பெயர் ஜெய.
சந்திரனுடைய நிலையை அனுசரித்து வரக்கூடிய சாந்திரமான முறைப்படி மாசி மாதக் கடைசியிலிருந்து ஸ்ரீ ராமநவமியைத் தொட்டு, தெலுங்கு வருஷப்
பிறப்பிலிருந்தே ஜெய வருஷம் வந்துவிடும். சூரிய சஞ்சார முறைப்படி தமிழ் வருடப் பிறப்பு, பதினைந்து நாட்கள் தள்ளி வரும்.
இந்தச் சூழலில் பெயர் சூட்டல் பற்றிய ஆலோசனையில் 'ஜெய' என்கிற
பெயர் நினைவில் நின்றது.
'ஜெய' ஆண்டுக்கு மற்றொரு சிறப்பு உண்டு. பெரியவர்கள் பிறந்த ஆண்டு அது. ஆகவே ஜெய என்கிற பெயரை முன்வைதது எனக்கு
ஜெயேந்திர சரஸ்வதி
என்ற பெயர் சூட்டினார்கள்.அந்த ஆண்டு தெலுங்கு வருஷப் பிறப்பு, ஸ்ரீ ராம நவமி விழாக்கள் எல்லாம் விமரிசையாக நடந்தன. ஸ்ரீராமநவமியை விசேஷமாகக் கொண்டாடுவார்கள். பத்து நாட்கள் வேள்விகள் நடத்திப் பூஜை செய்து ஸ்ரீராம
பட்டாபிஷேகம் கோலாகலமாக நடைபெறும். ஸ்ரீ மடத்திலும் விசேஷப் பூஜை நடைபெற்றது. தற்போதுள்ள பெரியகாஞ்சி மடத்திலேயே ஸ்ரீராம நவமி விழாவின் போது பட்டாபிஷேக தினத்தன்று, ஸ்ரீராமருக்கு அபிஷேகம் செய்கிற இடத்திலேயே என்னையும் உட்கார வைத்தார்கள். அந்த ஜலம் விழும் இடத்திலேயே நானும் உடர்கார்ந்திருந்ததேன். பெரிய சுவாமிகள் தன் கையினாலேயே ஸ்ரீ ராமருக்கு அபிஷேகம் செய்கிற போது அடியேன் அங்கே உட்கார்த்தி வைக்கப்ட்டு அந்த ஜலம் என் தலையில் விழும்படியாகச் செய்தார்கள்.
பட்டினப் பிரவேசம்
ஆசாரிய சுவாமிகள் ஸ்ரீராம பட்டாபிஷேக ஜலத்தை என்றைக்குக் தன்
கருணையால் என் தலைமீது விழச் செய்தார்களோ, அன்றைக்கே ஸ்ரீமடத்தின் பீடாதிபதியாக என்னையும் ஆக்கி விட்டார்கள். ஸ்ரீமடத்துக்கு வந்து பத்துப் பதினைந்து தினங்களுக்குள் ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் செய்த கையோடு பெரியவர்கள் தன் திருக்கரங்களால் எனக்கும் பட்டாபிஷேகம் செய்வித்து அன்று மாலையே காஞ்சயின் நான்கு ராஜ வீதிகளிலும் பட்டினப் பிரவேசம் என்று சொல்லுவார்கள் - என்னை ஊர்வலமாக வரச் செய்தார்.
அதாவது நான் வந்த பதினைந்து நாளுக்குள்ளேயே ஸ்ரீமடத்தின் முழுப்
பொறுப்பையும் எனக்குக் கொடுத்துவிட்டார்கள்.
பாக்கியம்
காஞ்சிபுரம் நகரப் பகுதியில் இருப்பதால் நிறையக் கூட்டம் சேருகிறது
என்பதால் பக்க்ததில் பாலாற்றங்கரை அருகே ஒரிக்கை என்ற கிராமத்தில் பெரிய
கொட்டகையாக நிர்மாணித்து, பிரத்யேகமாக இரண்டு வீடுகளையும் அமர்த்தி அங்கயே பூஜை செய்யவும் நான் மேற்கொண்டு படிக்க வேண்டிய பாடாந்திரங்களுக்கும் பெரிய சுவாமிகள் ஏற்பாடு செய்து விட்டார்கள்.
அந்தச் சமயத்தில்தான் பெரிய சுவாமிகளுக்கு அறுபது பிராயம்
பூர்த்தியானது. சஷ்டியப்த பூர்த்தி என்று அதைச் சொல்லுவார்கள்.
அந்தச் சஷ்டியப்தப் பூர்த்தி வைபவத்தையும் நானே பெரிய சுவாமிகளுக்குச் செய்யம் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
அவர் சன்னியாசியாக இருந்தாலும் இந்த அறுபது ஆண்டு நிறைவு
விழாவை விசேஷ முறையில் வேள்விகள் நடத்தி, வேத விற்பன்னர்கள் முன்னிலையில் ஒரு புனிதமான நிகழ்ச்சியாகக் கொண்டாடினோம். எதற்காக இதைச் சொல்லுகிறேன் என்றால் ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்தன்று என் தலையிலே அவர் ஜலம் விட்டார்கள். அவருடைய சஷ்டியப்த பூர்த்தி விழாவின்போது எலலாக் கலசங்களையும் வைத்துப் பூஜை பண்ணி ஹோமங்கள் செய்து அந்த
ஜலத்தை அவருக்கு அபிஷேகம் செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அப்படி அவருடைய அறுபதாம் ஆண்டு விழாவை ஒரு வைபவமாகக் கொண்டாடினோம். அன்று முதல் அவரோடு இணைந்து பாடம் படிப்பது- பூஜை செய்வது, மடத்தை நிர்வாகம் செய்வது போன்ற எல்லா விஷயங்களிலுமே கூடவே இருந்து, பேச்சுக் கொடுத்து 1970ம் ஆண்டு வரை அவர் கூடவே இருந்து ராத்திரி வரை எல்லாம் செய்திருக்கிறேன்.
1970ம் ஆண்டு முதல் அவர் கொஞ்சம் தனிமையாக இருக்க வேண்டும்
என்ற விரும்பி சில கோயில்களிலே அல்லது குளத்தங்கரைகளிலே ஆசிரமம் வைத்துக் கொண்டிருந்தார்கள்.
1976ம் ஆண்டுக்கும் பிறகு ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு கொஞ்சம்,
மகாராஷ்டிரம் கொஞ்சம் என்று 1980ம் ஆண்டு வரை 4 வருடங்கள் கொஞ்சம் தனியாக யாத்திரை செய்தார்கள். 1980ம் ஆண்டு சதாராவில் நான் அவர்களைப் பார்த்த பொழுது, 'தங்களுக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது. இனி யாத்திரை எல்லாம் செய்ய வேண்டாம். திரும்பி வந்து விடுங்கள்,' என்று அவரிடம் பிரார்த்தித்துக் கொண்டேன். அதன்படி அவர்களும் காஞ்சிபுரத்தை 83ம் ஆண்டு
வந்தடைந்தார்கள்.
83ம் வருடம்
அதற்குள் நான் தனியாக இருந்து மடத்தினுடைய பூஜைகள், காரியங்கள்
எல்லாவற்றையும் நிர்வகிக்க வேண்டியது சிரமமாக இருந்ததனால், பெரியவரின் அனுமதியோடு பாலபெரியவரையும் தயாராக்கி, சிஷ்யராக்கி, கூட வைத்துக்கொண்டு பெயரிவரையும் அழைத்துக் கொண்டு 83ம் ஆண்டு வந்து சேர்ந்தோம்.
அப்போது முதல் அவர் ஸ்ரீ மடத்திலேயே தங்கி, எல்லோருக்கும் அருள்
பாலித்துக் கொண்டிருந்தார்க்.ள மற்ற மடங்களுடைய பீடாதிபதிகளுக்கும் பெரியவருடைய நிலைக்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது. வெறும்பீடத்தில் உட்கார்ந்து கொண்டு பீடாதிபதியாக இருந்து ஆசீர்வாதம் செய்வது மட்டும் அல்லாமல், தனிமனிதனுடைய வாழ்க்கையிலே எத்தனை சுக துக்கங்கள்
இருந்தாலும், அவற்றிலும் பங்கு கொண்டு, அவர்களுக்கும் ஆசீர்வதித்து, அவர்களுடைய வாழ்க்கையை மேம்படுத்தும் ஒரு பெருமை பெரியவருக்கு உண்டு.
ஆகவேதான் இன்றைக்குக் கூடப் பலரும் விம்மி அழுதுகொண்டு
கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய குடும்பத்தைச் சார்ந்தஒருவரை இழந்துவிட்ட நிலையிலே அவர்களெல்லாம் வருத்தப்படுகிறார்கள்.
தனிச்சிறப்பு
பொதுவான ஒரு பீடாதிபதியாக இருந்திருந்தால், சாமான்யமாக
இருந்திருக்கும் ஆனால் தனிப்பட்ட மனிதனுடைய ஆயிரக்காணக்கானவர் வாழ்ககையிலே அவர் ஊன்றிப் போயிருருந்த காரணத்தால், அத்தனை பேருக்கும் மனத்தில் பாதிப்பு ஏற்பட்டதனால், இது ஒரு நாடு தழுவிய துக்கமாக இருக்கிறது. இது எந்த ஒரு பீடாதிபதிக்கும் இல்லாத தனிச் சிறப்பாக இருக்கிறது.
வழிகூட்டிஅந்தப் பழக்கங்களெல்லாம் அவரிடம் இருந்து வந்ததால், என்னுடைய வாழ்க்கையிலே நானும் பொதுமக்களோடு இணைந்து, பழகி, கஷ்டப்படுகிறவர்கள், துன்பப்படுகிறவர்கள், பின்தங்கியவர்கள் எல்லோரும் வருத்தப்படும் நிலையை உணர்ந்து, அவர்களுக்கு வேண்டிய நன்மையைச் செய்ய ஆர்வமும் ஊக்கமும் ஏற்பட்டது. அதற்கு வழிகாட்டி பெரியவர்.
அந்த வழியிலே நின்றுஅதை வளர்ந்தவன் என்ற முறையிலே நான் இருந்த பணிகளைச் செய்தேன்,அவர் எது செய்தாலும் சங்கல்பம் செய்வார். சங்கல்பம் 'இச்சா' சக்தி என்பார்கள். அதுபோல் இச்சா சக்தியாக, சங்கல்ப மூர்த்தியாக விளங்கினார். நான் கிரியா சக்தியாகச் செய்து காட்டினேன். இதுதான் எங்கள் இரண்டு பேருக்கள் இருந்த ஒரு நிலை.அப்படி, இந்தப் பீடத்திலே வெறும் பீடாதிபதியாக இல்லாமல், பொது
மக்களுக்காகவே, ஜனங்களுக்ககாகவே, தர்மத்திற்காகவே, ஆஸ்திகத்திற்காகவே, ஆன்மிகத்திற்காகவே அதை வளர்ப்பதற்காக ஏற்பட்டது இந்தப் பீடம். அந்த வகையில் அவர்கள் போட்ட விதை, அவர்கள் வளர்த்த செடி இன்று மரமாக வளர்வதற்கு நான் உறுதுணையாக இருந்து இந்தப் பணிகளைச் செய்து வருகிறேன்.
பணிகள்
இந்த மரமானது காயாகக் காய்த்துப் பழமாகக் கனிவதற்கு, வந்து
கொண்டிருக்கும் வேளையிலே திடீரென்று அவர் உடல் மறைந்து,
லட்சக்கணக்கானவர்கள் பாதிப்படைந்தது ஒரு புறம் இருக்க, சொந்த முறையில்,அவர் இருக்கிறார்கள் என்ற பலத்திலே நான் பல பணிகைளச் செய்தேன். அவர் நினைத்ததை என்னால் செய்ய முடிந்தது.
ஆகவே, ஒரு தனிமனிதனுடைய வாழ்க்கையிலே எவ்வளவு சுக துக்கங்கள் வந்தாலும், அவற்றையும் போக்க முயற்சி செய்வது என்பதுதான் இந்தப் பாரம்பரியத்தில் வந்த ஒரு விசேஷம். எத்தனையோ மகான்கள் பிறந்திருக்கிறார்கள். அவர்களெல்லாம்
பிடாதிபதியாக இல்லை. பல பீடாதிபகள் இருந்திருக்கிறார்கள். அவர்களெல்லாம் மகான்களாகவும் இல்லை. பலர் மகான்களாகவும் இருந்திருக்கிறார்கள்
பீடாதிபதிகளாகவும் இருந்திருக்கிறார்கள். ஆனால், துயரங்களைத் துடைத்தெறிந்து மக்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலே மேம்படுத்திக் கொடுத்து குறைவு. நம்முடைய பெரியரவர்கள் தான், மடாதிபதியாகவும் இருந்து, மகாத்மாகவும் இருந்து, தனிமனிதர்கள் வாழ்ககையிலும் ஓர் உயர்ந்த நிலையை உண்டாக்கியர், அந்தப் பாரம்பரியத்தைக் காத்து வர நாங்களும் முயற்சி எடுத்ததனால், அதே முறையிலே வளர்த்துக் கொண்டுவருகிறோம்.
குரு அனுக்கிரகம்
, நம்முடைய பாரம்பரியத்தையும், நம்முடைய சம்பிரதாயத்தையும், நம்முடைய நிலையையும் மறவாமல் எப்படி அநாதியாக ஒரு கடவுள் இருக்கிறாரோ, பாரம்பரியமாக ஒர் கடவுள் இருக்கிறாரோ, அதுபோல் பாரம்பரியமாக ஒரு பீடம் உண்டு. பாரம்பரியமாகப் பீடாதிபதிகள் வருகிறார்கள் என்ற உணர்வோடு நாமெல்லாம் குரு பக்தி செய்து,குரு அனுக்ரகத்தின் மூலமாக நம் வாழ்க்கையை நல்வழிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
நடுநிலை
ஓரளவு உயர்ந்த நிலை அடைந்தவர்களைப் பற்றிச் சிலருக்குப் பலவிதமான கருத்துக்கள் எல்லாம் தோன்றி, பலவிதமான சர்ச்சைகளெல்லாம் வருவது இயற்கை. எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் சரி, சமயத் துறையாகட்டும், வேறு துறையாகட்டும் எந்தத் துறையானாலும், ஒரளவு வளர்ந்த மனிதன் பற்றிச் சர்ச்சை செயவது, பேசுவது என்பது பழக்கமாகிவிட்ட உலகம். அதனால் இன்றைக்கும் ஒரு சிலருக்கு அப்படி எழுத வேண்டும். இப்படி எழுதவேண்டும். பேச
வேண்டும் என்று இருக்கலாம். ஆனால் அதைப்படிப்பவரோ, கேட்பவரோ அதற்கு இடம் கொடுக்காமல், நம்முடைய பாரம்பரியம், நம்முடைய தெய்வீகம்,
நம்முடைய ஆன்மீகம், நம்முடைய குரு என்ற அந்த ஒரு உணர்வோடு
இருந்துகொண்டு, நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு தீயவை எல்லாம் விட்டுவிட்டு, நடுநிலைப் பாதையில் நிற்க வேண்டுமாய் அனைவரையும் ஆசீர்வதிக்கிறோம்.

Narasimman Nagarajan shared Hinduism's status update.
9 hrs ·
காமாட்சியும் நானே !- ஸ்ரீ மகா பெரியவா
Status Update
By Hinduism
காமாட்சியும் நானே !- ஸ்ரீ மகா பெரியவா
அனுஷ நக்ஷத்ரமும் ..வெள்ளிக்கிழமையும் ..கலந்த நன்னாள் அன்று….அதற்கேற்ப ….பெரியவா முகாம் இட்டிருந்த அந்த ஊரில் ஒரு பெண்மணிக்கு பெரியவா மேல் அபார பக்தி. ஆனால், அடிக்கடி வீட்டிலிருந்து கிளம்பிப் போய் தரிசனம் செய்ய அவளால் முடியவில்லை. குடும்பச் சூழ்நிலை அப்படி.
***
ஒரு நாள் எப்படியோ வீட்டிலிருந்து கிளம்பி ஸ்ரீமடம் முகாமுக்கு வந்துவிட்டாள். பிற்பகல் நேரம். ஸ்ரீபெரியவா பூஜை மேடையிலேயே ஒரு பக்கம் அமர்ந்து பலருடன் பேசிக்கொண்டு இருந்தார்கள். இந்தப் பெண்மணி, கையில் சூடம் வைத்த தட்டுடன் ஹாரத்தி எடுக்க வேண்டும் என்று மேடை அருகில் சென்று பெரியவா முகத்தைப் பார்த்தாள். ஆனால் சடக்கென்று முகத்தைத் திருப்பிக்கொண்டு விட்டார். பெரியவா, இதேபோல் இரண்டு, மூன்று முறை முயன்றும் பெரியவா முகம் திரும்பிப் பார்க்கவில்லை.
***
இந்தப் பெண்மணிக்கு ரொம்ப துக்கம். பெரியவா கொஞ்சம் திரும்பியது போல் இருந்த ஒரு சந்தர்ப்பத்தில் கற்பூரத்தை ஏற்றி விட்டாள். அருகில் போய் ஹாரத்தி சுற்றுவதற்குள் பெரியவா எழுந்து உள்ளே போய் விட்டார்கள். திகைத்துப் போனவள் “அம்பிகே! ஏன் இப்படி சோதிக்கிறாய் ? நான் என்ன பாவம் செய்தேன் ?” – என்று புலம்பிவிட்டு ‘ சரி உனக்கே ஹாரத்தி எடுக்கிறேன்‘ என்று பூஜையில் உள்ள அம்பாள் திரிபுரசுந்தரிக்கே எடுத்துவிட்டு, மிகுந்த ஏமாற்றத்துடனும் கண்ணீருடனும் திரும்பி விட்டாள்.
***
அவள் பந்தலின் வெளியே வரும்போது ஒருவர் ஓடி வந்து ” அம்மா ! பெரியவா உத்தரவாகிறது” – என்று சொன்னார். ” என்னையா ? – இருக்காது ” – என்று தயங்கினாள், அவள். ” உங்களைத்தான் அம்மா, வாருங்கள்” – என்று சொல்ல, தயங்கியபடி உள்ளே சென்றாள், அப்பெண்மணி. அங்கு அமர்ந்திருந்த பெரியவா ” எனக்கு ஏற்றிய சூடத்தை அம்பாளிடம் எடுத்துவிட்டோம் என்று குறைப்படாதே. இப்போ ஹாரத்தி காட்டு.” – என்று சொன்னதும் அவள் தட்டுத்தடுமாறி மறுபடி சூடத்தை எடுத்து தட்டில் வைத்து, கை நடுங்கப் பற்ற வைத்து பெரியவா அருகில் சென்று சுற்ற அந்த தீப ஒளியில் பெரியவாளைப் பார்த்தாள். கரும்பு வில்லும், பாசாங்குசமும், மந்த ஹாஸ முகமாக அப்படியே அம்பாளாகவே பெரியவா காட்சி கொடுக்க, அந்த அம்மாள் மயங்கி விழாத குறையாய் ‘ அம்மா ! அம்மா ! ‘ என்று பக்திப் பரவசத்துடன் கன்னத்தில் போட்டுக் கொண்டாராம்.
***
‘மேடையில் இருந்த அம்பாளும் நானும் ஒன்றுதான் !‘ என்று புரிய வைத்த நிகழ்ச்சி இது. அந்தப் பெண்மணி திருச்சியை சேர்ந்த நாகலக்ஷ்மி. பலமுறை பலபேருக்கு மகாப்பெரியவாள் அம்பாளாகக் காட்சியளித்ததை அவரவர்களே சொல்ல கேட்டிருக்கிறோம்.

Ravi Natarajan shared Raman Iyengar's photo.
5 hrs ·
From the album: Timeline Photos
By Raman Iyengar
மதமாற்றம் பற்றி மகாபெரியவா சொன்னது.
ஒரு ஆசாரசீலர் பெரியவா கிட்ட போய் மிக வினயத்துடன், "பெரியவா இப்போஎல்லாம் conversion அதிகமா ஆயிண்டே இருக்கு, போற போக்க பாத்தா நம்ம தேசத்துல ஹிந்துக்கள் கொறஞ்சி மற்ற மதத்தவர் அதிகமா ஆயிடுவா போல இருக்கே.பெரியவா தான் இந்த இக்கட்டான சூழலுக்கு முடிவு காணனும்" என்று தன் வருத்தத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.
உடனே பெரியவா "இப்போ மாட்டும் இல்ல எப்பவுமே இந்த பிரச்சனை நம் பாரத தேசத்துல உண்டு.பகவத் பாதாள் காலத்துல பௌத்த ஜைன உள்பட 72 மதங்கள் இருந்தது.ஆனா பகவத்பாதாள் அனைத்தையும் கண்டனம் செய்து நம் சனாதன தர்மத்தை நிலைக்கச்செய்தார்.நமது சனாதன தர்மமானது யுகங்களை கடந்தது.அதற்க்கு எப்பவுமே அழிவில்லை.க்ஷீணம் ஆவதுபோல தெரியும் ஆனா எப்பவுமே நமத தர்மம் க்ஷீநிப்பது இல்லை.
மழைக்காலத்துல பனைமரத்த சுத்தி பல கொடிகள் வளரும்.அந்த கொடிகள் பனைமரத்தயே மறைக்குறா போல மரத்துமேல படர்ந்து வளரும்.ஆனா அந்த கொடிகளுக்கு ஆயிசு அதிகம் இல்ல.பலமா ஒரு காத்து அடிச்சாளோ, மழைமுடிஞ்சு வேனல்காலம் வந்தானோ மரத்த மறைத்திருக்குற அந்த கொடிகள் எல்லாம் காஞ்சி கீழே விழுந்துடும்.ஆனா பனைமரம் எந்த பாதிப்பும் இல்லாம அப்படியே இருக்கும்.அது போலத்தான் நம் சனாதன தர்ம மதமும் பனைமரம் போல ஸ்திரமா இருக்கும்.அதற்கு என்னைக்குமே அழிவோ க்ஷீனமோ இல்லை.வீணா கவலைப்படாம உன் ஸ்வதர்மத்துள இருந்து வழுவாம உனக்கு விதிக்கப்பட் நித்ய கர்மாக்களை ஒழுங்காசெய்து வா.அதுவே நீ நம் மதத்துக்கு செய்யுற மிகப்பெரிய உபகாரம்.அனைத்தையும் காமாக்ஷி பாத்துண்டே இருக்க.எப்போ எத செய்யனும்னு அவளுக்குத்தான் தெரியும்."
என்று அருளாசி வழங்கினார்!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக