வெள்ளி, 2 மே, 2014

அர்ச்சனை என்ற சொல்லின் பொருள்

ராதே கிருஷ்ணா 02-05-2014

அர்ச்சனை என்ற சொல்லின் பொருள்

அர்ச்சனை என்ற சொல்லின் பொருள்

Status Update
By Ananthanarayanan Ramaswamy
அர்ச்சனை என்ற சொல்லின் பொருள்

அர்ச்சனை என்ற சொல் அர்ச்சா என்ற சொல்லில்
இருந்து வந்ததாகும்.

அர்ச்சா என்றால் சிலை என பொருள்.

இந்த சொல்லில் இருந்தே அர்ச்சனை, அர்ச்சித்தல், அர்ச்சித்தர் என்ற சொற்கள் வந்தன.

அர்ச்சித்தர் என்றாலும் சிலை என்றே பொருள்படும்.

ஆண்டவனுக்கு செய்யப்படும் ஆறுவகை உபசாரங்களுள் அர்ச்சனையே முக்கியத்துவம் பெறுகிறது.

ஆறுவகை உபசாரங்கள்

இறைவனுக்கு ஆறுவகையான உபசாரங்கள் செய்யப்படுகின்றன.

1. அபிஷேகம்:
தண்ணீர், பால், தேன், தயிர், பன்னீர், இளநீர் மற்றும் பல பொருட்களால் செய்யப்படுவது.

2. அலங்காரம்:
பட்டு பீதாம்பரத்தாலும், பொன்னாலும், மலர் மாலைகளாலும், தங்க நகைகளாலும், வைர வைடூரியங்களாலும் அழகுபடுத்துவதாகும்.

3. அர்ச்சனை:
பூக்களாலும், பாக்களாலும் செய்யப்படுவது.

4. நைவேத்தியம்:
பல்வேறு உணவு வகைகள், பால், பழம் முதலியவற்றை படைப்பது.

5. ஆராதனை:
தூபம் காட்டுதல், தீபம் காட்டுதல்.

6. உற்சவம்:
பெரு விழா நடத்தி மூர்த்தியை வலமாக வீதிகளில் கொண்டு செல்லுதல்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக