ஞாயிறு, 25 மே, 2014

''வாசிஸ்த் நாராயன் சிங்'' இவர் உயிரோட வாழ்ந்துவரும் மிக பெரிய கணித மேதை.

ராதே கிருஷ்ணா 25-05-2014



இந்த படத்தில் இருப்பவர் ''வாசிஸ்த் நாராயன் சிங்'' இவர் உயிரோட வாழ்ந்துவரும் மிக பெரிய கணித மேதை.
நாமெல்லாம் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்ல விசா கிடைக்குமா என்று ஏங்குகிறோம். ஆனால் இம்மனிதர் அமெரிக்காவிலிருந்து இந்தியாவில் கல்வியாளராக சேவை செய்யவேண்டுமென்று 1972ஆம் ஆண்டு திரும்பியவர்.
ஐன்ஸ்டீனுக்கே சவால் விடும் அளவிற்கு திறமை பெற்ற இம்மனிதருக்கு நம் கவனம் தேவைபடுகிறது.
1961: பீகாரில் மெட்ரிகுலேசன் பள்ளியில் மேல்நிலை கல்வியை முடித்தார்.
1961: பாட்னாவில் உள்ள மதிப்புமிக்க அறிவியல் கல்லூரியில் சேர்ந்தார்.
1963: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பல்கலை கழகத்தில் prof. John L. kelley என்ற கணித மேதையிடம் கல்வி கற்றுகொண்டார்.
1963-1969: M.SC கணிதவியலை தொடர்ந்தார். அதில் டாக்டர் பட்டமும் பெற்றார்.
1969: வாசிங்டனில் அமைந்துள்ள நாசாவில் இணை விஞ்ஞானி பேராசிரியராக இணைந்தார்.
1969-1972: நாசாவில் பணியாற்றினார்.
1972: இந்தியா திரும்பினார்.
1972: இந்திய தொழில்நுட்ப கழகத்தில் ஆசிரியராக இணைந்தார்.
1972-77: கான்பூர் IIT, Tata Institute of Fundamental Research (TIFR), Bombay and Indian Statistical Institute (ISI), Kolkata இங்கெல்லாம் ஆசியராக பணியாற்றினார்.
1977: மனநிலை கோளாறுகளால் பாதிக்கப்பட்டார். ராஞ்சி மனநிலை மருத்துவமனையில் இருந்தார், பிறகு ஜார்கண்டில் இருந்தார்..
1977-88: சிகிச்சை தொடர்ந்தது.
1988: யாரிடமும் தகவல் தராமல் வீடு திரும்பினார்.
1988-92: அவரை பற்றிய தகவல்களே இல்லை.
1992 (பிப். மாதம்): பீகாரில் வறுமை நிலையில் இருக்கிறார் என்று தெரியவந்தது.
தற்போது: அவருடைய வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.
2014: அவரை பார்க்க ஆளில்லாமல் அவர் யார் என்று கூட உலகிற்கு தெரியாமல் வாழ்ந்துவருகிறார்.
இச்செய்தியை பகிர்ந்துகொண்டு இவரை உலகிற்கு தெரியபடுத்துங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக