சனி, 9 மார்ச், 2013

மகா சிவராத்திரியின் மகிமை!

ராதே கிருஷ்ணா 08-03-2013


 மகா சிவராத்திரியின் மகிமை!
 
temple
சிவராத்திரி விரதத்தை முதல் நாளே தொடங்கிவிட வேண்டும். விரதமிருப்போர் முதல் நாள் ஒருவேளை மட்டுமே உணவு உண்ணவேண்டும். சிவராத்திரி நாளில் முழுநேரம் உணவேதும் உண்ணாமல் சிவ ... மேலும்
 
temple
சிவராத்திரி என்றதும் நம் நினைவுக்கு வருவது இரவு கண் விழித்தலும், லிங்கங்களுக்கு செய்யப்படும் பலவகையான அபிஷேகங்களும், நான்கு கால பூஜையும்தான். யுகம் யுகமாக நடந்து வரும் ... மேலும்
 
temple
ஒரு முறை, பார்வதிதேவி விளையாட்டாக சிவபெருமானின் இரண்டு கண்களையும் பொத்தினாள். உலகுக்கு ஒளி வழங்கும் சூரிய - சந்திரர்களான அவருடைய கண்கள் மூடப்பட்டு, எங்கும் காரிருள் ...மேலும்
 
temple
சிவராத்திரியன்று புராணத்தோடு தொடர்புடைய தலங்களில் இறைவனை தரிசிப்பதால் கோடான கோடி புண்ணியம் கிடைக்கும். திருவண்ணாமலை : ஒரு மகா சிவராத்திரி நாளில் லிங்கோற்பவ காலத்தில் இறைவன் ... மேலும்
 
temple
தினத்தில் லிங்க தரிசனம் செய்வதுடன், சிவலிங்கத் திருமேனியைப் போற்றும் லிங்கப் புராண குறுந்தொகை முதலான தெய்வப் பாடல்களைப் பாடி வழிபடுவது சிறப்பு. அந்த வகையில் சிவனாரைத் ...மேலும்
 

1

 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்


மகா சிவராத்திரி விரதமுறையும் பலனும்!
மார்ச் 04,2013
அ-
அ+
Temple images
சிவராத்திரி விரதத்தை முதல் நாளே தொடங்கிவிட வேண்டும். விரதமிருப்போர் முதல் நாள் ஒருவேளை மட்டுமே உணவு உண்ணவேண்டும். சிவராத்திரி நாளில் முழுநேரம் உணவேதும் உண்ணாமல் சிவ சிந்தைனையுடன் இருக்கவேண்டும். இயலாதவர்கள் இருவேளை பால்,பழம் சாப்பிட்டு ஒருவேளை உணவு உண்ணலாம். ஓம் நமசிவாய ஓம் சிவாயநம மந்திரங்களை 108 அல்லது 1008 முறை ஜெபிக்க வேண்டும். இரவில் கோயிலில் நடைபெறும் நான்குகால அபிஷேகத்தை தரிசிக்கவேண்டும். இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும். உணவு உண்ணாமல் பசியை அடக்குவதன் மூலம் காமம், கோபம், பொறாமை ஆகியவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும். விழித்திருந்து சிவபூஜை செய்வதால் சுறுசுறுப்பு உண்டாகும். சிவனுக்கு அபிஷேகம் செய்வது புறவழிபாடு. அகவழிபாடாக, சிவ பெருமானே! தண்ணீர், பாலால் உமக்கு அபிஷேகம் நடக்கிறது. அதனை ஞானப்பாலாக்கி எமக்கு அருள வேண்டும். அறியாமல் செய்த பாவங் களைப் போக்கி வாழ்வில் மகிழ்ச்சியைத் தர வேண்டும், என்று பிரார்த்திக்க வேண்டும்.
சிவராத்திரி விரத மகிமை: விரதங்கள் பலவும் அதனைக் கடைப்பிடிப்போர்க்கு மட்டுமே பலன் தரும்.  மகா சிவராத்திரியன்று விரதம் இருப்பவர்களுக்கு நற்கதி கிடைப்பதுதான் சொர்க்கலோக பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்துவந்தால் அவர் சிவகதியை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் நற்கதி அடைந்து முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம். அசுவமேத யாகம் செய்த பலனும் கிடைக்கும்.
செல்வம் தரும் சிவராத்திரி: மகாபாரதம் சாந்தி பர்வத்தில் சிவராத்திரியின் மகத்துவம் கூறப்பட்டுள்ளது. அம்பு படுக்கையில் கிடந்த பீஷ்மர், சிவராத்திரி விரத மகிமையை பாண்டவர்களுக்கு சொன்னார். இக்ஷவாகு குலத்தில் பிறந்த மன்னர் சித்திரபானு. அஷ்டவக்கிர முனிவர் ஒரு சிவராத்திரி நாளில் மன்னனைச் சந்திக்க வந்தார். விரதமிருந்த மன்னன் முனிவரிடம், ஐயனே! நான்  சுஸ்வரன் என்னும் வேடனாக முற்பிறவியில் வாழ்ந்தேன். வேட்டையாடி மாமிசத்தை விற்பது என் தொழில். ஒருநாள், பகலில் மிருகம் ஏதும் சிக்கவில்லை. இரவான பிறகு மான் ஒன்றைக் கொன்றேன். காட்டிலேயே தங்கிவிட்டேன். மிருகங்களிடமிருந்து தப்ப ஒரு மரத்தில் ஏறிக் கொண்டேன். பசிமயக்கத்தால் தூக்கம் வரவில்லை. இலைகளைப் பறித்து கீழே போட்டபடி இருந்தேன். பொழுது புலர்ந்து விட்டது. அந்த நாள் சிவராத்திரி என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. மரணம் ஏற்பட்டு என் உயிர் நீங்கிய பின், இரு சிவதூதர்கள் என்னை அழைத்துச் செல்ல வந்தனர். நீ வேட்டையாடச் சென்ற நாள் சிவராத்திரி. அன்று நீ ஏறியது வில்வமரம். மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. நீ வில்வ இலைகளைப் பறித்துப் போட்டபடி இருந்தாய். உறங்கவும் இல்லை. அறியாமல் செய்தாலும், சிவராத்திரியன்று லிங்கத்துக்கு வில்வார்ச்சனையால் உனக்கு நற்கதி கிடைத்தது என்றனர். அதனால், நாடாளும் மன்னனாக சித்திரபானு என்ற பெயரில் இப்பிறவியில் பிறக்கும் பேறு பெற்றேன், என்றார். பக்தியுடன் சிவராத்திரி விரதம் இருப்பவர்கள், எத்தனை பிறவி எடுத்தாலும் பணக்காரர்களாக இருப்பர். அவர்களது சந்ததியும் செல்வவளத்துடன் திகழும்.
சிவராத்திரி விரதமிருந்து அர்ஜுனன் தவம் செய்து பாசுபதம் (பசுபதி+சிவன்) என்ற அஸ்திரத்தைப் பெற்றான். கண்ணப்ப நாயனார் குருதி வடியும் லிங்க வடிவிலிருந்த ஈசனின் கண்மீது தன் கண்களைப் பெயர்த்தெடுத்து பொருத்தி முக்தி அடைந்தான். பகீரதன் கடுந்தவம் இயற்றிக் கங்கையை பூமிக்குக் கொணர்ந்தான். மார்க்கண்டேயனுக்காக யமனையே சிவபெருமான் சம்ஹாரம் செய்தார். பார்வதிதேவி அருந்தவம் இயற்றி சிவபெருமானின் இடப்பாகத்தில் இடம்பெற்றுச் சிவனையே உமையொரு பாகனாகச் செய்தார். சிவபெருமான் காலனை உதைத்தார். லிங்ககோற்பவராக ஈசனை தோன்றினார்.  உமயவள், மகேசனிடம் ஆகம உபதேசம் பெற்றாள். சிவபெருமான், நஞ்சு உண்டார்.
சிவபூஜை செய்த வேடன்: ஒரு காட்டில் சண்டன் என்ற ஒரு வேடன் வாழ்ந்து வந்தான்; அவன் காட்டில் வேட்டையாடுவதையே தொழிலாகக் கொண்டிருந்தான். காட்டில் அலையும் விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடிப் பிடித்து, அவற்றை விற்று ஜீவனம் செய்து வந்தான். அவனுக்கு சண்டிகா என்ற மனைவி இருந்தாள். ஒருநாள் அடர்ந்த காட்டிற்குள் விலங்குகளைத்தேடி அலைந்து கொண்டிருந்தபோது, வானுயர்ந்த ஒரு பெரிய வில்வ மரத்தினடியில், அழகிய சிவலிங்கம் ஒன்று புதியதாய்த் தோன்றி இருப்பதைக் கண்டான். அது ஒரு சுயம்பு லிங்கம். சிவலிங்கத்தைக் கண்டதும் அவனுக்கு மெய்சிலிர்த்தது. அவனுள் அன்பும் பக்தியும் பெருகி அவனையுமறியாமல் கண்களில் ஆனந்தக்கண்ணீர் பெருகிவழிந்தது. அவன் உள்ளம் பெறற்கரிய பெருஞ்செல்வத்தைப் பெற்றதுபோல் குதூகலத்தால் குதித்துக் கூத்தாடியது. தானே தோன்றிய சிவலிங்கத்திற்கு பூஜை எப்படிச் செய்ய வேண்டும்? இறைவனை எப்படி வணங்க வேண்டும்? என்ற விவரமெல்லாம் அவனுக்குத் தெரியாது. எதுவுமே தெரியாத ஒரு அப்பாவி வேடன் அவன். அப்போது அங்கே சிங்க கேது என்ற மன்னன் வந்தான். வேட்டையாட கானகம் வந்தவன், தன் பரிவாரங்களைப் பிரிந்து, வழிதெரியாமல் அலைந்து கொண்டிருந்தவன், வேடன் சண்டன் இருக்குமிடம் வர நேர்ந்தது. வேடனைக் கொண்டு கானக வழியைக் கண்டுபிடித்து வெளியேறி விடலாம் என நம்பினான். மன்னன் சிங்ககேது வந்ததைக்கூட அறியாமல் சிவ லிங்கத்தையே பார்த்துக் கொண்டிருந்த சண்டனைப் பார்த்து, வேடா, இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்? வழி தவறி வந்து விட்டேன். காட்டைவிட்டு வெளியேற வேண்டும். வழிகாட்டு! என்று கேட்க, மன்னன் குரல் கேட்டு சண்டன் உணர்வு வரப்பெற்றான்.
அரசே, என்னை மன்னியுங்கள். பாராமுகமாய் இருந்து விட்டேன். என்னுடன் வாருங்கள் வழிகாட்டுகிறேன்! என்றான். தொடர்ந்து, மகாராஜா, இங்கே இருக்கும் சிவலிங்கத்தை எப்படி பூஜிக்க வேண்டும் என்பதை எனக்கு விளக்கமாய் கூறுங்கள்! என்று மிகுந்த பணிவுடன் மன்னனிடம் கேட்டான் சண்டன். உடனே மன்னன் பரிகாசமாய், வேடனே, உன் தோல் பையில் தண்ணீர் கொண்டு வந்து சிவலிங்கத்தின்மீது ஊற்று. சுடலையில் வெந்த சாம்பலைக் கொண்டு வந்து சிவலிங்கத்துக்குப் பூசு. கைக்குக் கிடைக்கிற பூக்களையெல்லாம் கொண்டு வந்து சிவலிங்கத்தின் மேல் வை. நீ உண்ணும் உணவைக் கொண்டு வந்து நிவேதனமாக வை. விளக்கேற்றிவை. இரு கை கூப்பிக் கும்பிடு போடு! என்று அலட்சியத்தோடு கூறினான். மன்னன் சொன்ன விவரங்களையெல்லாம் சண்டன் கவனமாகக் கேட்டுக் கொண்டான். மன்னன் சிங்ககேது கூறியதையெல்லாம் அப்படியே மனதில் பதித்துக் கொண்டான் சண்டன். தோற்பையில் தண்ணீர் கொண்டுவந்து சிவலிங்கத்தின்மீது ஊற்றினான். சுடலையைத் தேடிச் சென்று, கை நிறைய வெந்த சாம்பலை அள்ளிக்கொண்டு வந்து சிவ லிங்கத்தின்மீது பூசினான். கைக்குக் கிடைத்த காட்டுப் பூக்களையெல்லாம் கொண்டுவந்து சிவலிங்கத்தின்மீது வைத்தான். தான் உண்ணும் உணவையே நிவேதனமாகப் படைத்தான். விளக்கேற்றி வழிபட்டான். இதனையே உறுதியாகக் கொண்டு தினமும் பூஜை செய்து வந்தான். இரவும் பகலும் அவன் நினைவில் சிவலிங்கமே நிறைந்திருந்தது. ஒரு நாள் சுடலையின் வெந்த சாம்பல் அகப்படாமல் போயிற்று. சிவபூஜை தடைப்பட்டது. இதனால் சண்டன் மிகுந்த கவலையுடன் இருந்தான்.
உண்ணாமல் உறங்காமல் உற்சாகமின்றிக் காணப்பட்டான். அவனுக்கு எதுவுமே சொல்லத் தோன்றவில்லை. இதனை அவனது கற்புடைய மனைவி சண்டிகா அறிந்து மனம் மிக நொந்தாள். கணவனை நோக்கி, அன்பரே, நீங்கள் சிவபூஜையைத் தொடர்ந்து செய்ய ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. நாம் குடியிருக்கும் இந்தக் குடிசையைக் கொளுத்தினால், நான் அதில் விழுந்து வெந்து சாம்பலாவேன். அந்த சாம்பலை எடுத்துக்கொண்டு போய் சிவலிங்கத்திற்குப் பூசுங்கள். உங்கள் விருப்பப்படியே பூஜையும் இனிதே நடக்கும் என்றாள் சண்டிகா. கள்ளங்கபடமில்லாத சண்டனும் அப்படியே செய்து முடித்தான். பூஜை முடிவில் வழக்கப்படி நிர்மால்யம் கொண்டு போனான். அன்று சிவராத்திரி என்று அவனுக்குத் தெரியாது. மெய் மறந்து வழிபட்ட நிலையில், அவன் செய்த புண்ணியத்தால், இறைவன் அவன் முன் தோன்றி அருள்பாலித்தார். அவன் மனைவி சண்டிகாவை உயிர்ப்பித்தார். குடிசையும் முன்பு இருந்தது போலாயிற்று. வேடன் சண்டன் ஞானம் வரப்பெற்றவனாய் இறைவனைப் போற்றினான். சிவகணங்கள் எதிர்கொள்ள கயிலையை அடைந்தான் என்று, சிவராத்திரியின் பெருமை பற்றிக் கூறும் பிரம்மோத்திர காண்டமும் வரதபண்டிதம் என்ற நூலும் விவரிக்கின்றன. எதுவும் தெரியாமலும் தன்னை அறியாமலும் செய்யும் சிவராத்திரி வழிபாடு கூட பலன்தரும். இப்படி அறியாமல் செய்த பூஜைக்கே பலனுண்டு என்றால் சிவராத்திரியை அறிந்தே பூஜை செய்பவர்களுக்கும், ஆலயம் சென்று முறையே வழிபாடு செய்பவர்களுக்கும் புண்ணியம் வந்துசேரும்.
Share  
Bookmark and Share


 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்



மனை சிறக்கும் மகா சிவராத்திரியின் மகிமை தெரியுமா?
மார்ச் 04,2013
அ-
அ+
Temple images
சிவராத்திரி என்றதும் நம் நினைவுக்கு வருவது இரவு கண் விழித்தலும், லிங்கங்களுக்கு செய்யப்படும் பலவகையான அபிஷேகங்களும், நான்கு கால பூஜையும்தான். யுகம் யுகமாக நடந்து வரும் சிவராத்திரி வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதிலும் வருடத்திற்கு ஒரு முறை வரும் மஹா சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவனை ஆராதித்தால் மங்களங்கள் சேரும், மனை சிறக்கும், அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் நீங்கி மோட்சம் சித்திக்கும் என்கிறது சிவ புராணம். சிவராத்திரி பலவகைகளாகப் பிரிக்கப்படுகிறது. மாத சிவராத்திரி அல்லது நித்திய சிவ ராத்திரி, பட்சராத்திரி, யோக சிவராத்திரி மற்றும் மஹா சிவ ராத்திரி.
மாத சிவராத்திரி: ஒவ்வொரு மாதமும் வரும் வளர்பிறை சதுர்த்தசி, மற்றும் தேய்பிறை சதுர்த்தசி தினங்கள் மாத சிவராத்திரிகளாகும், அப்படிப் பார்க்கும்போது ஒரு வருடத்திற்கு இருபத்து நான்கு மாத சிவ ராத்திரிகள் உள்ளன.
பட்ச சிவராத்திரி: தை மாதம் தேய்பிறை பிரதமையில் ஆரம்பித்து பதின்மூன்று நாட்கள், மிகுந்த கட்டுப்பாட்டுடன் ஒரு பொழுது மட்டுமே உணவு உண்டு, சிவனை பூஜித்து, வில்வத்தால் அர்ச்சனை செய்து, பதினான்காவது நாளான சதுர்த்தசி அன்று முறைப்படி விரதம் இருந்து மறுநாள் விரதத்தை முடிப்பது பட்ச நாளான சிவராத்திரி ஆகும்.
யோக சிவராத்திரி: 24 மணி நேரமாகப் பகுக்கப்பட்டிருக்கும் ஒரு நாளை நம் முன்னோர்கள் 60 நாழிகை யாகப் பிரித்தார்கள். சூரிய உதயம் முதல், இரவு வரை அமாவாசைத் திதி இருந்தால் அன்று யோக சிவராத்திரி. மேலும் திங்கட்கிழமை இரவு முழுவதும் தேய்பிறை சதுர்த்தசி திதி இருந்தால் அதுவும் யோக சிவராத்திரி என்று சொல்லப்படும். அதே போல திங்கட்கிழமை இரவு நான்காம் ஜாமத்தில் அமாவாசைத் திதி அரை நாழிகைப் பொழுதேனும் இருந்தால் அதுவும் யோக சிவராத்திரியாகக் கொள்ளப்படுகிறது. சிவனுக்கு உகந்தது திங்கட்கிழமை (சோமவாரம்) என்பதால் இவ்வாறு கூறப்படுகிறது. யோக சிவராத்திரியின் போது விரதம் இருந்து பூஜை செய்தால் அது மூன்று கோடி மற்ற சிவராத்திரி விரதம் இருந்த பலனுக்கு சமம் என்பது ஐதிகம்.
மஹா சிவ ராத்திரி : மாசிமாத கிருஷ்ணபட்ச சதுர்த்தசி தினமே மகா சிவராத்திரி எனப்படுகிறது. யுகம் யுகமாக கண் துஞ்சாமல் நம்மைக் காத்து ரட்சிக்கும் கயிலைக் கடவுளுக்காக, ஒரே ஒரு நாள் இரவு விழித்திருந்து, அவரை நாம் பூஜிக்கும் புண்ணிய ராத்திரி அது!
ராத்ர என்ற சொல்லுக்கு, யாவும் செயலற்று ஒடுங்கி நிற்றல் என்று பொருள். எனவேதான் உயிர்கள் செயலற்று உறங்கும் இரவுப்பொழுது, ராத்திரி எனும் பெயர் ஏற்றது. ஒருமுறை உலகமே இருண்டு கிடந்த மகா சங்கார (சம்ஹார) காலமாகிய ஊழிக் காலத்தில், பஞ்சபூதங்களும் செயலற்று மாயையில் ஒடுங்கும், எங்கும் இருள் சூழ, உலகம் செயலற்று எங்கும் அமைதி நிலவும். இந்த நிலையில், சிவபெருமான் ஒருவரே செயலாற்றுவார். அவரை அடுத்திருக்கும் சக்தியான தேவி, உலக உயிர்களை மீண்டெழச் செய்திட  இரவு முழுதும் விழித்திருந்து மறுநாள் பொழுது விடிந்து  சிவபூஜை செய்து உலகம் மீண்டும் தழைக்கும் என்ற வரத்தைப் பெற்றாள்.  அதோடு, தான் சிவ வழிபாடு செய்ததை நினைவு கூரும் விதமாக அந்த இரவை சிவராத்திரியாக அழைத்து முறைப்படி விரதமிருந்து இரவில் நான்கு கால சிவபூஜை செய்வோர்க்கு மங்களங்கள் யாவும் தந்து நிறைவில் மேலான பதமும் தரவேண்டும் எனவும் வேண்டினாள். ஈசன் அவ்வாறே  வரம் அளித்தார். ராத்திரி என்ற சொல்லுக்கு அளித்தல் என்ற பொருளும் உண்டு. உலக உயிர்களும் மோட்சத்தை அளிப்பவர் சிவபெருமான். எனவே, சிவராத்திரி என அழைப்பதாகவும் கூறப்படுகிறது. ராத்ர என்பதற்குப் பூஜித்தல் என்பதும் ஒரு பொருள். ஆக, சிவனாரை பூஜிக்கத் தகுந்த இரவே சிவராத்திரி என்றும் கூறுவர். உணவும், உறக்கமும் உயிர்க்குப் பகை. இந்த இடத்தில் உணவு என்பது வினைகள். அதனைச் செய்யச் செய்ய வினைகள் மூண்டு திரும்பத் திரும்ப பிறக்க நேரும். உறக்கம் என்பது மாயைக்குட்பட்டு மயங்குதலாகும். ஆக... உணவு நீக்கம் என்பது வினைகளை அகற்றுதலும், விழித்திருத்தல் என்பது ஆன்மா தன்னை உணர்ந்து கொள்வதும் ஆகும். இந்த தாத்பரியத்தின்படி, மகா சிவராத்திரி தினத்தில் ஊண், உறக்கம் ஒழிப்பது என்பது உண்மையில் வினைகளை வென்று ஆன்மாவானது தன்னை உணர்ந்து கொள்வதற்காகவே என சிவராத்திரி விரதம் குறித்து அற்புதமாக விளக்கம் தருவார்கள் ஆன்றோர்கள்.
ஆதியும் அந்தமும் இல்லா பராபரவஸ்து ஜோதி ரூபத்திலிருந்து லிங்கமாக வெளிவந்து பின்னர் லாவண்ய ரூபத்தை அடைந்த புண்ணிய தினம்தான் சிவராத்திரி.சிந்தை மகிழும் சிவராத்திரியில் லிங்க தரிசனம் செய்வதும், வழிபடுவதும் விசேஷம். லிங்கத்தில் இருந்தே அனைத்தும் உருவாயின. அதேபோன்று இறுதியில் லிங்கத்தில் எல்லாம் அடங்குகின்றன. படைப்பு, காப்பு, அழிப்பு ஆகியன அதிலேயே அடங்கியுள்ளன என்கின்றன புராணங்கள். சிவாலயங்களில் விளங்கும் பிரதிஷ்டா லிங்கங்கள் பிரம்மன், சிவா மற்றும் விஷ்ணுவைக் குறிக்கும் வகையிலேயே அமைகின்றன என ஆன்றோர் விளக்குவர். திருக்கோயில்களில் அருளும் சுயம்பு லிங்கங்களுக்கு அமையும் பீடம் பிரம்ம பாகமாகவும், நீர் விழும் கோமுகப் பகுதி மகாவிஷ்ணுவாகவும் போற்றப்படுகின்றன என்பர். ஆக, சிவலிங்க தரிசனத்தால் மும்மூர்த்தியரின் அருளையும் பெறலாம்.
சிவராத்திரியின் மிக முக்கியமான அம்சம் இரவில் நடக்கும் நான்கு கால பூஜைகள்தான். சிவன் அபிஷேகப் பிரியன் என்பதால் விதவிதமான பொருட்களைக் கொண்டு ஒவ்வொரு காலத்திலும் அபிஷேகம் செய்வார்கள். அதே போல நிவேதனமும் வேறுபடும்.
முதல் காலம்: இந்தக் காலத்தில் சிவன் சோமஸ்கந்த ரூபத்தில் வணங்கப்படுகிறார் அப்போது அவருக்கு பஞ்சகவ்ய அபிஷேகம் நடக்கும். அது முடிந்ததும் களபம் சாத்தி (சந்தனப் பூச்சு) செய்து சிவப்புப் பட்டு வஸ்திரம் சார்த்துவார்கள், பச்சைப்பருப்பு கலந்த வெண் பொங்கல் நிவேதனம் செய்வார்கள். பழங்களில் வில்வம் பழம் முதல் காலத்தில் நிவேதனம் செய்யப்படுகிறது. ரிக் வேத பாராயணம் நடைபெறும் விளக்கெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றுவர். அதோடு மாணிக்க வாசகரின் சிவபுராணமும் ஓதப்படும். ஸ்வாமிக்கு திருநீற்றுப் பச்சிலை, தாமரை, அரளி போன்ற மலர்களை சமர்ப்பிப்பர்.
இரண்டாம் காலம்: இரண்டாம் காலம் மவுன குருவான தட்சிணா மூர்த்தி ரூபம். பல பழங்களைப் பாலோடு சேர்த்து பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வர். அப்போது பச்சைக் கற்பூரக் காப்பு, மஞ்சள் பருத்தி ஆடை சாற்றப்படும். பாயசமும், லட்டும் நிவேதனமாகப் படைக்கப்படும். பலாப்பழம் இந்தக் காலத்துக்கு உரியது. யஜுர் வேத பாராயணம் நடைபெறும். அதோடு தாமரையும் வில்வமும் சமர்ப்பிக்கப்படும். இலுப்ப எண்ணெய் தீபம் ஏற்றப்படும். ருத்ர தாண்டகம் என்ற திருத்தாண்டகம் ஓதப்படும்.
மூன்றாம் காலம்: இந்தக் காலத்தில் சிவன் லிங்கோத்வ ரூபியாக ஆராதிக்கப்படுகிறார். இறைவனுக்குத் தேனால் அபிஷேகம் செய்து, அதில் காப்பு சாத்துவார்கள். வெள்ளைக் கம்பளி ஆடையாக சாத்தப்படும். நிவேதனமாக சத்து மாவும், பாயசமும் படைக்கப்படும், மாதுளம் பழமும் இந்த பூஜைக்கு உரியது. சாம வேதப் பிரியனான சிவனுக்கு சாம வேதத்தைப் பாராயணம் செய்வது இந்தக் காலத்தில்தான். நெய்விட்டு கும்ப தீபம் ஏற்றப்படும். அறுகம் புல்லும் தாழம் பூவும் சமர்ப்பிக்கப்படும். தாழம்பூ இந்த நாளில் மூன்றாம் காலத்தில் மட்டுமே இறைவனுக்கு சாத்தப்படும். வேறு எந்த சமயத்திலும் எந்த நாளிலும் அந்தப்பூ சிவ பூஜையில் பயன் படுத்தப்படுவதே இல்லை. லிங்க புராண திருக்குறுந்தொகை ஓதப்படும்.
மூன்றாம் காலத்தில் லிங்கோத்பவ ரூபியாக சிவன் வணங்கப்படுவதால், லிங்கத்துக்கு அபிஷேக ஆராதனைகள் நடக்கும். அதே நேரம் கருவறைக்குப் பின்னால் உள்ள லிங்கோத்பவ மூர்த்திக்கும் அபிஷேக ஆராதனைகள் நடக்கும். அவருக்கு நெய் பூசி வெந்நீரால் அபிஷேகம் செய்து கம்பளி ஆடை அணிவிப்பர். ஸ்ரீ ருத்ரம், சமகம் போன்ற துதிளை பாராயணம் செய்வர், சிவ சஹஸ்ரநாம அர்ச்சனை செய்து பொரி உருண்டை, எள் சாதம் முதலியன நிவேதனம் செய்யப்படும்.
நான்காம் காலம்: நான்காம் காலம் சிவஸ்வரூப மாகவே லிங்கம் வழிபடப்படுகிறது. அப்போது கரும்புச்சாறு அபிஷேகம் செய்து கஸ்தூரிக் காப்பு சாத்தப் படுகிறது. பச்சைவண்ண மலர்களே ஆடையாக அணிவிக்கப்படும். கோதுமை, நெய், சர்க்கரை சேர்த்த உணவினை நிவேதனம் செய்வர். அதர்வண வேத பாராயணம் நடைபெறும். நல்லெண்ணெய் விட்டு மகா மேரு தீபம் ஏற்றப்படும், எல்லா விதமான மலர்களும் கலந்து சமர்ப்பக்கப்படுகின்றன. அப்பர் அருளிய திருத்தாண்டகம் ஓதுவர். விரதம் இருப்பவர்கள் இந்த நான்கு கால பூஜையிலும் கலந்து கொண்டு பூஜைகளை கண்ணாரக் கண்டு உமாமகேசனை உளமார நினைத்து வழிபட வேண்டும். இந்த நான்கு கால பூஜை முடிந்தவுடன் சற்று நேரத்தில் உஷத் காலம் (அதிகாலை நேரம்) வந்துவிடும். அப்போது மறு நாளைக்குரிய உஷத் கால பூஜைகள் நியமப்படி நடக்கும். அதோடு உச்சிக்கால பூஜையையும் சேர்த்து முடித்து விடுவார்கள். பக்தர்கள் வீடு வந்து சிறிதுநேரம் அமர்ந்த பின்னர் நீராடி பஞ்சாட்சரத்தை ஜபித்து திருநீறு அணிந்து யாராவது ஒருவறியவருக்கு உணவிட்டு தானும் உண்ண வேண்டும். அதுவே விரதத்தை முடிக்கும் முறை, அவ்வாறு செய்தால் எல்லா ஞானமும் சித்தியும் கை வரப்பெறுவதோடு அவர்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். பெண்கள் சிவராத்திரி விரதமிருந்து பூஜை செய்தால் மிகச் சிறந்த கணவன் வாய்க்கப் பெறுவார்கள். மணமான பெண்கள் விரதமிருந்தால் கணவனுக்கு நீண்ட நோய் நொடியற்ற வாழ்நாளும் புத்திரர்களுக்கு நல்ல படிப்பும் சேர்க்கையும் கிடைக்கும். மனை சிறக்கும் மங்களங்கள் பெருகும்.
Share  
Bookmark and Share


 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்




சிவராத்திரி தோன்றியது எப்படி?
மார்ச் 04,2013
அ-
அ+
Temple images
ஒரு முறை, பார்வதிதேவி விளையாட்டாக சிவபெருமானின் இரண்டு கண்களையும் பொத்தினாள். உலகுக்கு ஒளி வழங்கும் சூரிய - சந்திரர்களான அவருடைய கண்கள் மூடப்பட்டு, எங்கும் காரிருள் சூழ்ந்தது. உலகம் கலங்கி நிழையிழந்தது. உடனே பெருமான் நெற்றியில் உள்ள அக்னிமயமான மூன்றாவது கண்ணைத் திறந்தார். இந்த நெருப்புச் சுவாலைகள் தெரிக்கும் கண்ணொளி கண்டு அனைவரும் மேலும் பயந்தனர். அப்போது உமையவள். பரமேஸ்வரனைத் தொழுது பணிந்தாள். இப்படி சக்திதேவி வழிபட்டதன் நினைவாகத் தொடர்ந்து சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. சிவனாரை வழிபட்ட பார்வதியாள், இந்த நாளில் நான் எவ்வாறு தங்களை வழிபட்டேனோ... அந்த முறைப்படி தங்களை வழிபடுபவர்களுக்கு இம்மையில் செல்வமும் மறுமையில் சொர்க்கமும், இறுதியில் மோட்சமும் தரவேண்டும் என்று பரமனிடம் வேண்டிக் கொண்டாள். அப்படியே ஆகுக எனச் சிவபெருமானும் அருள்பாலித்தார். அதன்படியே சிறப்புற அனுஷ்டிக்கப்படுகிறது மகா சிவராத்திரி.
பாற்கடலில் தோன்றிய விஷத்தை அருந்திய பின்னர், மயங்கியது போலக் கிடந்து திருவிளையாடல் புரிந்த சிவனார், திரயோதசி நாளில் மாலை வேளையில் சந்தியா நடனம் நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்த சதுர்த்தசி இரவின் நான்கு யாமங்களிலும், தேவர்கள் அவரை அர்ச்சித்துப் போற்றினர். அதுவே சிவராத்திரி என்றும் கூறப்படுகிறது. இப்படி புராணங்கள் போற்றும் மகா சிவராத்திரி தினத்தில் உடலையும் உள்ளத்தையும் பரிசுத்தமாக்கி, விரதம் இருந்து முழுக்க முழுக்க சிவனாரிடம் மனம் லயித்திருந்து, இரவு கண் விழித்து நான்கு காலமும் சிவவழிபாடு செய்யவேண்டும். இதனால், துன்ப இருள் அகன்று, சிவஜோதியின் அனுக்கிரஹத்தால் நம் வாழ்வு செழிக்கும். மகா சிவராத்திரிக்கு முந்திய மாலை காலத்தில் நடராஜ மூர்த்தியையும், பிரதோஷ நாயகரையும் வழிபடவேண்டும். தொடர்ந்து, இரவின் முதல் காலத்தில் சோமாஸ்கந்தரையும், இரண்டாம் காலத்தில் தென்முகக் கடவுளையும், மூன்றாம் காலத்தில் லிங்கோத்பவரையும், நான்காம் காலத்தில் ரிஷபாரூட (சந்திரசேகரர்) மூர்த்தியையும் வழிபட வேண்டும். இந்தத் திருநாளில் கண் விழித்திருக்கும் பக்தர்கள் சிவபுராணம், திருவிளையாடல் கதைகள், அறுபத்து மூவர் வரலாறு முதலான சிவ மகத்துவங்களை விவரிக்கும் ஞானநூல்களைப் படிப்பது, மிகுந்த புண்ணியத்தைத் தரும்.
பூலோகத்தில் உயிர்களைப் படைத்து முடித்ததும், சிவனும் பார்வதியும் கயிலாயமலை திரும்பினர். அப்போது தேவி சிவனிடம்,  உங்களை வழிபடுவதற்கு மிக உகந்த நாள் எது? என்று கேட்டாள். மாசி மாத தேய்பிறை 14ம்நாளான சதுர்த்தசியே (அமாவாசைக்கு முந்திய நாள்) எனக்கு மிகவும் பிரியமானது. அந்நாளே மகாசிவராத்திரி. அன்று உபவாசம் (பட்டினி) இருப்பது சிறப்பு. அன்றிரவு ஜாமங்களில் நான்குகால பூஜை நடத்த வேண்டும். வாசனைமலர், அலங்காரம் இவற்றை விட வில்வார்ச்சனையே பூஜைக்கு ஏற்றது. நான்கு காலங்களில் முறையே பால், தயிர், வெண்ணெய், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும். இந்த விரதத்தின் பெருமையை வேறு எந்த விரதத்தோடும் ஒப்பிட முடியாது, என்றார். சிவபெருமானின் விருப்பமறிந்த தேவி, தன் தோழியரிடம் இதை தெரிவித்தாள். அவர்கள் பூலோகவாசிகளிடம் எடுத்துக்கூற, எல்லா கோயில்களிலும் மகாசிவராத்திரி பூஜை நடத்தத் தொடங்கினர். விரதங்களில் முக்கியமானதாகக் கருதப்படுவது சிவராத்திரி விரதம். இவ்விரதத்தின் பெருமையைக் கேட்டு யமனும் நடுங்குவதாகவும், எல்லா யாகங்களையும் எல்லா தருமங்களையும்விட மிக உயர்ந்த விரதம் எனவும் கருதப்படுகிறது.
அடி - முடி தேடிய கதை!
ஒருமுறை பிரம்மனுக்கும் திருமாலுக்கும் இடையே, தங்களில் பெரியவர் யார் எனும் சர்ச்சை எழுந்தது. அவர்கள் இருவருக்குமான மோதலால் உலகமும் உயிர்களும் பாதிப்படையுமே என அச்சம் கொண்ட தேவர்கள், பரமேஸ்வரரைச் சரணடைந்தனர். அவர்களை ஆறுதல்படுத்தினார் ஈஸ்வரன். திருமாலுக்கும் பிரம்மனுக்கும் நடுவில் பெரும் நெருப்பு தூணாய் தோன்றினார். அதன் பிரமாண்டம் அவர்களை அயரவைத்தது. அந்தப் பிரமாண்டத்தின் (நெருப்புத் தூணின்) திருவடியையோ அல்லது திருமுடியையோ முதலில் கண்டு வருபவரே பெரியவர் என்று முடிவானது. உடனே பெருமாள், வராக உருவெடுத்து பூமியை அகழ்ந்து, திருவடியைக் காணச்சென்றார். பிரம்மன், அன்னப் பறவையாக மாறி திருமுடி காண உயரப் பறந்தார். ஆனால் இருவராலும் அந்த நெருப்புத் தூணின் அடி-முடியைக் காண இயலாமல் போனது. செய்வதறியாமல் இருவரும் துதித்து நிற்க, தேவர்கள் யாவரும் போற்றி வழிபட, அந்த நெருப்புத் தூணின் மையத்தில்... மான், மழு, அபய, வரத முத்திரை தாங்கியவராக திருக்காட்சி தந்தார் சிவபெருமான். அங்கிருந்த அனைவருக்கும் அனுக்கிரஹம் தந்தவர், இவ்வாறு நான் காட்சியளித்த தினம் சிவராத்திரி ஆகும். இதுபோல், முன்னம் ஒரு சிவராத்திரி நாளில் தேவியும் என்னை பூஜித்து பேறு பெற்றாள். ஆகம முறைப்படி இந்த தினத்தில் எம்மை பூஜிக்க.. நல்லது யாவும் நடந்தேறும். பாவங்களைப் பொசுக்கி, சிவகதி காட்டும் அற்புதமான இந்த பூஜை, அஸ்வமேதம் முதலான யாகங்கள் செய்வதைக் காட்டிலும் நூறு மடங்கு பலன் தருவது என்று அருள்பாலித்த பின் திருக்கயிலைக்கு எழுந்தருளினார். இப்படி, திருமால் மற்றும் பிரம்மாதி தேவர்கள் சிவனருள் பெற்ற தினம் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி நாள். இதையே உலகத்தார் மகா சிவராத்திரியாகக் கொண்டாடுகின்றனர்.
Share  
Bookmark and Share


 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்



சிவராத்திரியன்று தரிசிக்க வேண்டிய சிறப்பான தலங்கள்!
மார்ச் 04,2013
அ-
அ+
Temple images
சிவராத்திரியன்று புராணத்தோடு தொடர்புடைய தலங்களில் இறைவனை தரிசிப்பதால் கோடான கோடி புண்ணியம் கிடைக்கும். திருவண்ணாமலை : ஒரு மகா சிவராத்திரி நாளில் லிங்கோற்பவ காலத்தில் இறைவன் இத்தலத்தில் ஜோதி உருவாகக் காட்சி கொடுத்தார் என்கிறது சிவபுராணம். திருவண்ணாமலை தலத்தில் சிவராத்திரி தரிசனம் செய்வது வாழ்வில் தடைகளைப் போக்கி வெளிச்சமாக்கும்.
திருக்கழுக்குன்றம் : செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள திருத்தலம். கோடி ருத்திரர்கள் சிவராத்திரி காலத்தில் பூஜை செய்த இடம் இது. எனவே இத்தலத்தை உருத்திரகோடி என்பார்கள். சிவராத்திரியன்று இத்தலத்தில் வழிபடுவது செழிப்பான வாழ்வளிக்கும்.
காஞ்சிபுரம் : தன் பதியான பசுபதியின் கண்களை பார்வதி விளையாட்டாகப் பொத்த உலகங்களும் இருண்டன. அதனால் சிவன் தன் மூன்றாவது கண்ணைத் திறந்தார். அதன் வெப்பம் தாளாமல் உலக உயிர்கள் வருந்தின. அந்த சங்கடம் நீங்கிட ருத்திரர்கள் இங்கு பூஜை செய்தனர். காஞ்சியில் உள்ள கோயில்களான ஆனந்தருத்ரேசம், மகாருத்ரேசம், ருத்திரகோடீசம் ஆகியவை ருத்திரர்கள் பூஜித்த தலங்கள். காஞ்சியில் ஒருபகுதி உருத்திர சோலை எனப்பட்டது. உலகத்தாருக்குத் துன்பம் ஏற்பட்ட பாவத்திலிருந்து விடுபட பார்வதி, காமாட்சியாக இருந்து சிவனை பூஜை செய்த இடமும் காஞ்சிபுரமே. எனவே காஞ்சியில் சிவராத்திரி தரிசனம் செய்வது, அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களைப் போக்கும்.
திருவைகாவூர் : தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் உள்ள தலம். இத்தல இறைவன் வில்வவனேஸ்வரரையும் அம்பிகை சர்வஜனரட்சகியையும் ஒரு சிவராத்திரி நாளில் தவநிதி என்ற முனிவர் கோயிலில் வழிபட்டுக் கொண்டிருந்தார். அப்போது வேடனால் துரத்தப்பட்ட ஒரு மான் கோயிலுக்குள் நுழைய, முனிவர் அபயமளித்தார். வேடன் முனிவரை தாக்க முற்பட, சிவபெருமான் புலி வடிவமெடுத்து வேடனைத் துரத்தவே வேடன் பயந்து அருகில் இருந்த வில்வ மரத்தில் ஏறிக் கொண்டான். புலியும் மரத்தடியிலேயே நிற்க வேடன் தூங்கி விடுவோமோ என்ற பயத்தில் வில்வ இலையை பறித்துக் கீழே போட்டான். அவை கீழே புலியாக நின்ற சிவபெருமான் மேல் விழ, அதனையே பூசனையாக ஏற்று வேடனுக்குக் காட்சியளித்து மோட்சம் அளித்தார் இறைவன். இத்தல வழிபாடு மோட்ச சித்தியளிக்கும். பிறவிப்பிணி தீர்க்கும்.
திருக்கடவூர் : தன் பக்தன் மார்க்கண்டேயனை பிடிக்க வந்த காலனை சிவன் காலால் உதைத்த சம்பவம் நடந்தது சிவராத்திரி நாள் ஒன்றில் என்பர். காலசம்ஹாரரை சிவராத்திரி நாளில் வணங்குவது, அகால மரணபயம் போக்கும்.
ஓமாம்புலியூர் : சிவராத்திரி நாள் ஒன்றில் சிவபெருமான் பார்வதி தேவிக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருளைச் சொன்ன இடம் ஓமாம்புலியூர் இந்த ஊரை பிரணவ வியாக்ரபுரம் என்கிறார்கள். சிதம்பரத்திலிருந்து 24 கி.மீ. தொலைவில் உள்ள ஊர் இது. இங்கே சிவராத்திரி வழிபாடு செய்வது மனநிம்மதிக்கு வழிவகுக்கும் என்பது ஐதிகம்.
தேவிகாபுரம் : ஒரு காலத்தில் இப்பகுதி பெரிய காடாக இருந்தது. ஒரு சமயம் சிவராத்திரி நாளில், வேடன் ஒருவன் இப்பகுதியில் நிலத்தைத் தோண்டியபோது, ஒரு லிங்கம் வெளிப்பட்டது. கடப்பாரை பட்டதால் லிங்கத்திலிருந்து ரத்தம் வழிந்தது. அதிர்ச்சியடைந்த வேடன், காயம்பட்ட இடத்தில் மூலிகை வைத்துக் கட்டினான். பிறகு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்தால் காய்ச்சல் வந்து விடுமோ என்று வெந்நீரால் அபிஷேகம் செய்தான். அதை தொடர்ந்து இன்றும் இத்தலத்தில் இவருக்கு வெந்நீர் அபிஷேகமே செய்யப்படுகிறது. இந்த வழியே போருக்குச் சென்ற மன்னன் போரில் வெற்றி அடைந்தால் அந்த லிங்கத்திற்கு மலையின் மீது கோயில் கட்டுவதாக வேண்டிக் கொண்டான். போரில் வெற்றி பெற்றதும் ஆலயம் அமைத்தான். பிரதிஷ்டை செய்ய வேண்டிய நேரத்தில் சுயம்பு லிங்கம் காணாமல் போனதால், காசியிலிருந்து லிங்கம் கொண்டு வரச் செய்தான். அப்போது, காணாமல் போன லிங்கம் கிடைத்துவிடவே, அதற்குக் கனககிரீஸ்வரர் என்று பெயர் சூட்டி, ஒரே கருவறையில் இரண்டு லிங்கங்களையும் பிரதிஷ்டை செய்தான். இக்கோயில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, போளூர், வந்தவாசி சாலையில் மலைக்குன்றின் மேல் உள்ளது. இங்கே சிவராத்திரி பூஜை செய்வது வாழ்வில் வெற்றிக்கு வழிசெய்யும்.
கோகர்ணம் : ராவணனுக்கு ஈசனாலேயே வழங்கப்பட்ட பிராணலிங்கம் உள்ள தலம். பிள்ளையார், ராவணனுடன் நடத்திய திருவிளையாடலால் இறைவன் இங்கேயே அமைந்தார். சுவாமி மகாபலேஸ்வரர். அம்பிகை தாம்ரகவுரி. மாசி மாத சிவராத்திரி நாள் ஒன்றில் பிரம்மா இத்தல இறைவனை வழிபட்டதையொட்டி இங்கு பிரம்மோத்சவமும் சிவராத்திரி அன்று இரவு தேரோட்டமும் நடக்கும். கர்நாடக மாநிலம் ஹுப்ளிக்கு அருகில் உள்ள இங்கு சிவராத்திரி வழிபாடு செய்வது முன்வினை போக்கும்.
ஸ்ரீசைலம் : சிலாதமுனிவரின் மகனான நந்தி சிவவழிபாடு செய்து சிவனைத் தாங்கும் வரம் பெற்ற தலம். நந்தி தேவரே இங்கு மலை உருவில் இருக்கிறார். இத்தலத்தை திருப்பருப்பதம் என்றும் மல்லிகார்ஜுனம் என்றும் அழைப்பர். ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றான இங்குதான் ஆதிசங்கரமகான் சிவானந்தலஹரி ஸ்லோகத்தினை இயற்றினார். அச்சம்பவம் சிவராத்திரி நாள் ஒன்றில் நிகழ்ந்ததாகக் கூறுகின்றனர். இத்தலத்தில் சிவராத்திரியன்று சிவனை வழிபடுவது ஏராளமான புண்ணியப் பலன்களை தரக்கூடியது.
காளஹஸ்தி : இக்கோயிலில் ஒவ்வொரு பட்சத்தில் வரும் சதுர்த்தசி நாளும் நித்திய சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. கண்ணப்ப நாயனார் சிவராத்திரி நாள் ஒன்றில்தான் தன் கண்களை சிவபெருமானுக்குக் கொடுத்தார். சிவராத்திரி நாட்களில் இங்கு தேரோட்டம், ரிஷப வாகன சேவை நடக்கிறது. சிவராத்திரி தரிசனத்தை இத்தலத்தில் மேற்கொள்வது இறையருளால் வாழ்வில் இன்றியமையாத யாவும் கிடைக்கச் செய்யும்.
நாகராஜனான வாசுகியும் மற்ற நாகங்களும் சிவராத்திரி இரவில் நான்கு சிவாலயங்களை வழிபட்டு பேறு பெற்றதாகக் கூறப்படுகிறது. முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலிலும், இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரத்திலும், மூன்றாம் காலத்தில் திரும்பாம்புரத்திலும், நான்காம் காலத்தில் நாகூரிலும் நாகராஜன் வழிபாடு செய்தான் என்பது தொன்மையான தகவல்.
Share  
Bookmark and Share


 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்




மகா சிவராத்திரி பாடல்கள்!
மார்ச் 04,2013
அ-
அ+
Temple images
தினத்தில் லிங்க தரிசனம் செய்வதுடன், சிவலிங்கத் திருமேனியைப் போற்றும் லிங்கப் புராண குறுந்தொகை முதலான தெய்வப் பாடல்களைப் பாடி வழிபடுவது சிறப்பு. அந்த வகையில் சிவனாரைத் துதிக்கும் லிங்காஷ்டகம் பெரிதும் மகிமை வாய்ந்தது. ஆதிசங்கரர் அருளிய லிங்காஷ்டகத்தைப் படிப்பதால், ஜாதகத்தில் சூரியன் மற்றும் குருவால் ஏற்படும் குறைகள் நீங்கும்; பிணிகளும் அகன்று நலம் பெறலாம். சகல மங்கலங்களும் உண்டாகும். இதில் பிரம்மன், மகாவிஷ்ணு மற்றும் தேவர்களால் அர்ச்சிக்கப்படும் லிங்க மூர்த்தியை... நிர்மலமாகவும் பிரகாசத்துடன் கூடியதாகவும், சோபையுடன் கூடியதாகவும் உள்ள லிங்க மூர்த்தியை.. பிறப்பினால் ஏற்படும் துக்கதைப் போக்குகின்ற லிங்க மூர்த்தியை.. எப்போதும் மங்கலத்தை அருளும் மகாலிங்கத்தைப் போற்றுகிறேன்... எனத் துவங்கி எட்டு ஸ்லோகங்களால் பரமனைப் போற்றும் ஆதிசங்கரர், இந்த ஸ்லோகங்களைச் சொல்லி பரமேஸ்வரனை வழிபட சிவலோகத்தில் வசிக்கும் பேரானந்த பெருநிலையை அடைவான் என்றும் அறிவுறுத்துகிறார். இதோ... மகாலிங்கத்தைப் போற்றும் லிங்காஷ்டகம் எட்டு ஸ்லோகங்களில் ஒன்று தரப்பட்டுள்ளது.
கனகமஹாமணிபூஷித லிங்கம்
பணிபதிவேஷ்டிதஸோபித லிங்கம்
தக்ஷஸுயக்ஞவினாஸன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்
பொருள் : தங்கத்தாலும், சிறந்த மணிகளாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, நாகராஜனால் சுற்றப்பட்டு விளங்குகின்ற லிங்க மூர்த்தியை, தக்ஷ யாகத்தை நாசம் செய்த லிங்க மூர்த்தியை, மங்கலத்தைச் செய்யும் மகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன். இவ்வாறு விரதம் இருந்து வழிபட இயலாதவர்கள் சிவபெருமானின் எட்டு நாமங்களையாவது ஓயாமல் ஜபிக்க வேண்டும் அவை:
ஓம் ஸ்ரீபவாய நம
ஓம் ஸ்ரீசர்வாய நம
ஓம் ஸ்ரீருத்ராய நம
ஓம் ஸ்ரீபசுபதயே நம
ஓம் ஸ்ரீஉக்ரயே நம
ஓம் ஸ்ரீமகா தேவாய நம
ஓம் ஸ்ரீபீமாய நம
ஓம் ஸ்ரீஈசாநாய நம
சிவராத்திரியன்று இரவில் விழித்திருக்கும் போது, பாட வேண்டிய எளிய பாடல்கள்
சிவசிவ என்கிலர் தீவினையாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவசிவ என்றிடச் சிவகதி தானே.
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தன் இணையடி நீழலே!
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால்
வெண்ணெய் நல்லூர் அருள்துறையுள்
அத்தா! உனக்காளாய் இனி அல்லேன் எனல் ஆமே!
உலககெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.
கல்லாப் பிழையும் கருதாப்பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும் நினையாப்பிழையும் ஐந்தெழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாய்ப்பிழையும்
எல்லாப் பிழையும் பொருத்தருள் கச்சிஏகம்பனே!
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கிசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்க்கொன்றை அணிந்தவனே!
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே!
சிவராத்திரி பிரார்த்தனை
உலகாளும் இறைவனே! காதுகளுக்கு அமிர்தமான நமசிவாய என்னும் திருநாமம் கொண்டவனே! சந்திர பிம்பத்தை முடியில் தரித்தவனே! கற்பூரம் போல் பிரகாசிப்பவனே! ஜடை தரித்தவனே! பிறவிக்கடலைத் தாண்டச் செய்பவனே! எங்களுக்கு செல்வவளம் தருவாயாக.
பார்வதி பிரியனே! பாம்பைக் கழுத்தில் சூடியவனே! கங்கையைத் தலைமேல் கொண்டவனே! பக்தர் மேல் பாசம் கொண்டவனே! பயத்தைப் போக்குகிறவனே! அன்பு மயமானவனே! எங்கள் இல்லங்களை மங்களகரமாக்குவாயாக.
ஜோதியாய் ஒளிர்பவனே! சிவனே என்ற திருநாமம் சொல்வோரைக் காப்பவனே! எதிரிகளின் எதிரியே! நெற்றிக்கண் கொண்டவனே! காதுகளில் ரத்ன குண்டலம் அணிந்தவனே! எங்கள் நெஞ்சத்தில் மஞ்சம் கொள்ள வருவாயாக.
ஐந்து முகம் கொண்டவனே! தங்கமயமான புலித்தோல் உடுத்தியவனே! மூவுலகுக்கும் அதிபதியே! சம்சார சாகரத்தில் தவிக்கும் பக்தர்களை கரை சேர்ப்பவனே! பிறவிக்கடலில் இருந்து மீட்பவனே! பிரம்மனால் பூஜிக்கப்பட்டவனே! உன்னை என்றும் மறவாத மனதைத் தருவாயாக.
மங்கள லட்சணம் உடையவனே! பயத்தைப் போக்குகின்றவனே! பூதகணங்களின் தலைவனே! சங்கீதத்தில் விருப்பம் கொண்டவனே! சிறந்த காளையை வாகனமாகக் கொண்டவனே! யானைத்தோல் போர்த்தியவனே! மகேஸ்வரனே! எங்கள் நாடும், வீடும் நலமுடன் திகழ அருள்புரிவாயாக.
புண்ணியம் செய்தவர்களுக்கு முகத்தைக் காட்டுபவனே! சூலாயுதம் கொண்டவனே! மானும், மழு என்னும் கோடரியும் ஏந்தியவனே! சிவந்த நிறம் கொண்டவனே! சூரியனுக்குப் பிரியமானவனே! எங்களுக்கு தீர்க்காயுளையும், நல்ல குழந்தைகளையும் தந்தருள்வாயாக.
தேவர்களின் தெய்வமே! மகாதேவனே! விரும்பிய பொருட்களைத் தருபவனே! கவுரியுடனும், மகாகணபதியுடனும் காட்சி  அளிப்பவனே! வேல் முருகனின் தந்தையே! மகனிடம் உபதேசம் பெற்ற மாணவனே! எங்களுக்கு கல்வியறிவு, சிறந்த பணி, நற்புகழைத் தந்தருள்வாயாக.
திரிபுர சம்ஹாரம் செய்தவனே! அகத்தியரை பொதிகைக்கு அனுப்பி யவனே! வாக்குக்கு எட்டாத பெருமை உடையவனே! நாட்டிய நாயகனே! எங்கள் மனதிலுள்ள தற்பெருமை, ஆணவம், அகம்பாவம் ஆகிய குணங்களை நீக்குவாயாக.
கிரகங்களால் ஏற்படும் சிரமத்தைப் போக்குபவனே! சிவசிவ என்பவரின் தீவினையை மாய்ப்பவனே! சிந்தனைக்கு எட்டாதவனே! பாரெலாம் ஆளும் பரம்பொருளே! சங்கரனே! நாங்கள் எங்கு வசித்தாலும், அங்கெல்லாம் வந்து எங்களோடு இருந்து பாதுகாப்பாயாக.
இன்பத்தின் எல்லையே! இகபர சுகமே! உலக பாரத்தை தாங்குபவனே! பாவங்களைத் தீர்ப்பவனே! பூலோகத்துக்கும் வானுலகத்துக்கும் நெருப்பாய் உயர்ந்து நின்றவனே! அண்ணாமலையாய் உயர்ந்தவனே! கைலாய நாதனே! நிறைவான மனதைத் தந்தருள்வாய்.
ஐந்தெழுத்து நாயகனின் ஐந்து அடையாளம்: சிவபெருமானுக்குரிய அடையாளங்கள் ஐந்து. அவை ருத்ராட்சம், விபூதி, வில்வம், சிவலிங்கம், ஐந்தெழுந்து மந்திரம். சிவராத்திரியன்று நெற்றியில் திருநீறிட்டு, கழுத்தில் ருத்ராட்சமாலை அணிந்து, நமசிவாய மந்திரம் ஜெபித்தபடி, சிவலிங்கத்தை வில்வத்தால் அர்ச்சித்து வழிபடவேண்டும் என்று வேதங்கள் கூறுகின்றன.
Share  
Bookmark and Share


 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்























































































































































































































புதன், 6 மார்ச், 2013

ஹோலிப் பண்டிகை

ராதே கிருஷ்ணா 06-03-2013


ஹோலிப் பண்டிகை
ஹோலிப் பண்டிகை
மலைவாழ் மக்களிடையே நிலவளப் பண்டிகையாக கொண்டாடப்பட்டு வந்த திருவிழாவே இன்று ஹோலியாக உருப்பெற்றிருக்கிறது என்பர். ஹோலி என்னும் வார்த்தை, ஹோலகா என்ற சொல்லின் திரிபே என்று கூறுவர். ஹோலகா என்பது முற்றிய நிலையில் உள்ள மொச்சைக் கதிர்களைக் குறிக்குமாம். முன் காலத்தில் இந்நாளில் கோதுமை, பார்லி முதலியவற்றால் வேள்வி செய்வர். வேள்வியின் நிறைவில் யாகத்தின் சாம்பலை நெற்றியில் பூசிக்கொள்வதோடு அனைத்து திசைகளிலும் தூவுவர். இதுவே வண்ணங்களைத் தூவும் வழக்கத்தின் காரணமாக இருக்கலாம். ஹோலியை ஹுதாஷிணி என்றும் கூறுவர். ஹுதாஷிணி இருளையும் தீமையையும் எதிர்த்துப் போராடுபவள் என்று பொருள்.வேடிக்கை விநோதங்கள் நிறைந்த வடநாட்டுப்பண்டிகை ஹோலி. கிருஷ்ணனைக் கொல்ல வந்த பூதனை என்னும் அரக்கியைக் கொன்ற நாளாக இந்நாளை மக்கள் கொண்டாடுகின்றனர். கேலியும் கூத்தும் மட்டுமே பிரதிபலிக்கும் விதத்தில் ஹோலி என்றாலே ஜாலி என்று மாறிவிட்டது. ஆனால், ஆன்மிக அடிப்படையிலேயே விழாக்கள் ஏற்படுத்தப்பட்டன. சாயத்தண்ணீரைப் பீய்ச்சி அடிப்பது, கலர்ப்பொடி தூவுவது ஆகியவை, உறவுகள் பலப்படவேண்டும், பகையை மறந்து ஒன்றுசேரவேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட விஷயங்களாகும். சிவபெருமான் மன்மதனை எரித்த காமதகனவிழாவாக தென்னிந்தியாவிலும், பூதனை என்னும் அரக்கியை பாலகிருஷ்ணர் கொன்ற நாளாக வடநாட்டிலும் இந்நாள் கொண்டாடப்படுகிறது. நம் மனதில் இருக்கும் வேண்டாத தீய எண்ணங்களை அழிப்பதற்காக மன்மதன், பூதனை போன்ற உருவபொம்மைகளை தீயிலிடுவர்.
தாயின் வயிற்றில் இருக்கும்போதே நாராயண நாமத்தைக் கேட்டு பக்தியில் திளைத்தவன் பிரகலாதன். உண்ணும்போதும் உறங்கும்போதும் ஓம் நமோ நாராயணாய என்னும் எட்டெழுத்து மந்திரத்தை அவன் மறந்ததில்லை. பிள்ளையின் விஷ்ணு பக்தி தந்தை இரண்யனுக்கு பிடிக்கவில்லை. அவனை அடித்துப் பார்த்தான். அடங்கவில்லை. மலையில் உருட்டி விட்டான். உயிர் போகவில்லை. நஞ்சைக் கொடுத்துப் பார்த்தான். அஞ்சவில்லை. அசுரகுரு சுக்ராச்சாரியாரிடம் படிக்க அனுப்பினான். மனதில் பக்தி வளர்ந்ததே ஒழிய பாடத்தில் ஈடுபாடில்லை. இறுதியில், தன் தங்கை ஹோலிகாவை அழைத்தான். அவளுக்கு விசேஷ சக்தியுண்டு. நெருப்பு அவளைத் தீண்டாது. பிரகலாதனை மடியில் வைத்துக் கொண்டு தீக்குள் புகுமாறு தங்கையிடம் கட்டளையிட்டான். ஆனால், வழக்கத்துக்கு மாறாக ஹோலிகாவின் உடலில் தீ பற்றிக் கொண்டது. பிரகலாதனோ, சிரித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். இறைசக்தியின் முன் தீயசக்திகள் அழிந்து போகும் என்ற உண்மையை இறைவன் உணர்த்தினார். இந்நாளே ஹோலிபண்டிகையாகக் கொண்டாடப்படுவதாக ஒரு கதை உண்டு. இந்நாளில் ஒம் நமோநாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரத்தை ஜெபித்தும், பிரகலாதனைப் போற்றியும் வழிபடுவது சிறப்பாகும். வடமாநிலங்களில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. அநியாயம் அழிந்தநாள் என்பதால், மக்கள் வண்ண  பொடிகளை தூவி மகிழ்கின்றனர்.
 
  தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்

மகா சிவராத்திரி

ராதே கிருஷ்ணா 06-03-2013



மகா சிவராத்திரி
மகா சிவராத்திரி
அமாவாசைக்கு முதல் நாள் மாதசிவராத்திரி ஆகும். மாசி மாதத்தில் அமாவாசைக்கு முன் வரும் சிவராத்திரி நாள், மகாசிவராத்திரி ஆகும். ஒருசமயம் பார்வதிதேவி சிவபெருமானிடம், நாதா உங்களை வழிபாடு செய்வதற்கு மிகவும் உகந்த நாள் எது? என்று கேட்டாள். சிவன் அவளிடம், மாசி மாத தேய்பிறை 14ம் நாளான அமாவாசை நாளே எனக்கு மிகவும் உகந்த நாளாகும். அன்று விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் என் அருளைப் பூரணமாகப் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள் என்றார். இவ்வாறு, சிவபெருமானே சொல்லிய விசேஷ விரதம் இது.
சிவராத்திரியன்று இரவு முழுதும் சிவன் கோயில்கள் திறந்திருக்கும். விடிய, விடிய நான்கு கால அபிஷேக, ஆராதனைகள் நடக்கும். முதல்காலத்தில் பால், இரண்டாம் காலத்தில் தயிர், மூன்றாம் காலத்தில் நெய், நான்காம் காலத்தில் தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
சிவராத்திரியின் சிறப்புகள்: மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியை மகா சிவராத்திரி என்பார்கள். ஒவ்வொரு தமிழ் மாதத்திலுமே வெவ்வேறு திதியை ஒட்டி மாத சிவராத்திரி வரும். மாத சிவராத்திரியின் மகிமையை சிவபெருமான் நந்திக்குச் சொன்னார். நந்தி மற்றவர்களுக்குச் சொன்னதாக புராணங்கள் சொல்கின்றன. சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியன்று வரும் சிவராத்திரியில் உமாதேவி சிவனை வழிபட்டாள். வைகாசி மாதம் வளர்பிறை அஷ்டமியில் வரும் சிவராத்திரியில் சூரியன் ஈசனை வழிபட்டார். ஆனி மாதம் வளர்பிறை சதுர்த்தசி சிவராத்திரியில் தன்னைத் தானே வழிபட்டார். ஆடி மாதம் தேய்பிறை பஞ்சமி சிவராத்திரி முருகன் வழிபட்ட நாள். ஆவணி மாத வளர்பிறை அஷ்டமி சிவராத்திரி சந்திரன் வழிபட்ட தினம். புரட்டாசி மாத வளர்பிறை திரயோதசி சிவராத்திரியில் ஆதிசேஷன் சிவனை வழிபட்டார். ஐப்பசி மாத வளர்பிறை துவாதசி சிவராத்திரி இந்திரன் வழிபட்ட தினம். கார்த்திகை மாதத்தில் வளர்பிறை சப்தமி, தேய்பிறை அஷ்டமி  என இரண்டு சிவராத்திரிகள். இவை இரண்டிலும் சரஸ்வதி வழிபட்டாள். மார்கழி மாதமும் இரண்டு சிவராத்திரிகள். வளர்பிறை மற்றும் தேய்பிறை சதுர்த்தசிகள். இது லட்சுமி வழிபட்ட நாள். தை மாதம் வளர்பிறை த்ரிதியை சிவராத்திரியில் நந்திதேவர் வழிபட்டார். மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி சிவராத்திரியில் தேவர்கள் வழிபட்டனர். பங்குனி வளர்பிறை த்ரிதியை சிவராத்திரியன்று குபேரன் வழிபட்டார். இவ்வளவு பெருமைக்கு உரிய சிவராத்திரி விரதத்தினை நாம் கடைப்பிடித்தால், சிவன் அருளோடு அத்தனை தெய்வங்களின் அருளும் கிட்டும்.
ஓராண்டில் கடைப்பிடிக்க வேண்டிய சில சிவராத்திரிகள்:
நித்ய சிவராத்திரி: பன்னிரண்டு மாதங்களில் வரும் தேய்பிறை, வளர்பிறை சதுர்த்தசி நாட்கள் அனைத்தும் நித்ய சிவராத்திரி.
மாத சிவராத்திரி: ஒவ்வொரு மாதமும் வரும் தேய்பிறை சதுர்த்தசி மாத சிவராத்திரி.
பட்ச சிவராத்திரி: தை மாதத்தில் தேய்பிறை பிரதமை முதல் 13 நாட்கள் தொடர்ந்து விரதம் இருந்து பூஜை செய்வது பட்ச சிவராத்திரி.
யோக சிவராத்திரி: சோம வாரம் (திங்கட்கிழமை) அமாவாசை அறுபது நாழிகை இருக்கும் தினம் யோக சிவராத்திரி.
சிவராத்திரி காலத்தில் ஜபிக்க வேண்டிய சிவபிரானின் எட்டு திருநாமங்கள்.
1. ஸ்ரீ பவாய நம
2. ஸ்ரீ சர்வாய நமக்ஷ
3. ஸ்ரீ பசுபதயே நம
4. ஸ்ரீ ருத்ராய நம
5. ஸ்ரீ உக்ராய நம
6. ஸ்ரீ மகாதேவாய நம
7. ஸ்ரீ பீமாய நம
8. ஸ்ரீ ஈசாநாய நம
சிவராத்திரியின் நான்கு காலங்களில் பஞ்ச வில்வங்களைக் கொண்டு சிவலிங்கத்துக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். அப்படி இல்லாதபோது மூன்றாவது காலமான லிங்கோற்பவ காலத்திலேனும் பஞ்ச வில்வங்களைக் கொண்டு பஞ்சமுகார்ச்சனை செய்யலாம். லிங்கோற்பவ காலத்தில் தான் சிவபெருமான் சிவலிங்கத்தினின்று வெளிப்பட்டு அருவமாக நின்று அன்பர்களுக்கு அருள்பாலித்தார்.  மூன்றாம் காலத்தில் லிங்கோற்பவ மூர்த்திக்கு நெய் பூசி, வெந்நீரால் அபிஷேகம் செய்து, எள்ளன்னம் நிவேதிக்க வேண்டும். ஊழிக்காலத்தில் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக பார்வதிதேவி ஓர் இரவின் நான்கு ஜாமத்திலும் சிவபூஜை செய்து மீண்டும் உலகைப் படைக்க வரம் பெற்ற திருநாளே மகாசிவராத்திரி.சூரியன், மன்மதன், யமன், சந்திரன், அக்னி முதலானோர் இவ்விரதத்தை அனுஷ்டித்து பேறு பெற்றுள்ளனர். விஷ்ணு இவ்விரதத்தை அனுஷ்டித்து சக்ராயுதத்துடன் லட்சுமியையும், பிரம்மா சரஸ்வதியையும் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. சிவராத்திரி அன்று இரவு முழுதும் கண் விழித்து வழிபாடு செய்ய இயலாவிட்டாலும் லிங்கோற்பவ காலமான இரவு 11.30 மணி முதல் 1 மணி வரை உள்ள காலத்தில் மட்டுமாவது சிவதரிசனம் செய்து வழிபடுவது சிறந்த பலன் தரும்.
சிவராத்திரி தரிசன பலனை விளக்கும் கதை: மதுரை மாநகரில் சம்பகன் என்றொரு திருடன் தன் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு ஒரு கோயிலில் புகுந்து கொள்ளையடித்தான். கோயில் காவலர்களால் மற்றவர்கள் பிடிபட, சம்பகன் மட்டும் விலையுயர்ந்த சில ஆபரணங்களோடு தப்பியோடி விட்டான். பின்னர், மாறுவேடம் பூண்டு சப்தஸ்தான தலங்களுள் ஒன்றான திருச்சோற்றுத்துறையில் இருந்த சிவத்தலத்தை அடைந்து, பதுங்கிக் கொண்டான். அன்று மாசி மகா சிவராத்திரி. ஆலயத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடந்து கொண்டிருந்தன. கோயிலுக்குள் பதுங்கியிருந்த சம்பகன் அங்கே திருடவும் முடியாமல், உணவு உறக்கம் எதுவுமில்லாமல் அன்றிரவு முழுவதும் கண் விழித்திருந்தான். மக்கள் அனைவரும் இறைவனைத் துதித்து மகிழ்ந்தனர். விடியற்காலையில் கோயிலை விட்டு வெளியேறி காவிரி நதியில் நீராடினான். அன்று மதியம் பிச்சையேற்று உண்டான். அன்று முழுவதும் திருட்டு எதுவும் செய்யாமல் இருந்தான். காலப்போக்கில் உயிர் துறந்தான். அவ்வாறு இறந்த அவன் உயிரை எமதூதர்கள் எமதர்மராஜனின் அவைக்கு இழுத்துச் சென்றனர். எமதர்மன் தன் அமைச்சரான சித்ரகுப்தரை நோக்கி, சம்பகனின் வரலாறுப் பற்றிகேட்க அவரும் அவன் செய்த பாவங்கள் அனைத்தையும் கூறி விட்டுக் கடைசியில், பிரபு இவன் கடைசிக்காலத்தில் மகாசிவராத்திரியன்று சிவாலயத்தில் உணவும் உறக்கமும் இன்றி உபவாசம் இருந்து சிவபெருமானை தரிசித்தான்.  மறுநாள் காவிரியில் நீராடினான். பின்னர் பிச்சை எடுத்து உண்டான். இவ்வகையில் மகாசிவராத்திரி விரதம் அனுஷ்டித்திருக்கிறான் என்று சித்ரகுப்தன் சொல்லி முடிக்கும் முன்னரே சிவகணங்கள் விரைந்து வந்து சம்பகனை சிவலோகத்திற்கு அழைத்துச் சென்றனர். சம்பகன், அவனையுமறியாமல் சிவராத்திரி விரதம் மேற்கொண்டதால் செய்த பாவங்கள் நீங்கி முக்தி பெற்றான்.
விரதமுறை: சிவராத்திரி அன்று பகலில் சாப்பிடாமல் இருந்து, முழுமுழுக்க சிவனைக் குறித்து நினைக்க வேண்டும். அவர் நிகழ்த்திய திருவிளையாடல்களை கேட்பது கூடுதல் புண்ணியம் தரும். அன்று இரவில் கண் விழித்திருந்து சிவதரிசனம் செய்வோருக்கு, வாழ்வில் எல்லா நலன்களும் கிடைக்கப்பெறும். இவ்வேளையில் சிவனுக்கு வில்வ இலை அர்ச்சனை செய்து, ஐந்தெழுந்து மந்திரமான ஓம்நமசிவாய என்னும் மந்திரத்தைச் சொல்ல வேண்டும்.
பலன்: மனிதனைப் பாதிக்கும் குணங்களான ஆசை, சோம்பல் ஆகிய குணங்களை வென்று, நன்மைகளைத் தரும் மேலான குணத்தை தரும் விரதம் இது. இவ்விரதத்தை அனுஷ்டிப்போருக்கு பிறப்பற்ற நிலை கிடைக்கும்.
 
  தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்
 

செவ்வாய், 5 மார்ச், 2013

மணல் கயிறு 2 சாஃப்ட்வேர் பெண்கள் எதிர்பார்க்கும் மாப்பிள்ளைக்கான தகுதிகள்:

ராதே கிருஷ்ணா 05-03-2013

Parthu Rowvey Vmp shared SVe Shekher's photo.
From: Sgm Mahadevan  
 
   மணல் கயிறு 2

சாஃப்ட்வேர் பெண்கள் எதிர்பார்க்கும் மாப்பிள்ளைக்கான தகுதிகள்:

    சாப்ட்வேர்ல வேலை பார்க்கற பொண் போட்ட கண்டிஷன்ல அவுங்க அப்பாகிட்டுமணி  , அம்மா உமா கதி கலங்கி நம்ம நாரதர் நாயுடு கிட்ட கூப்பிட்டு வராங்க. அந்த பொண்ணுக்கு ஏதாவது பேரு வைக்கணுமே. வித்யான்னு வெச்சிடுவோம்.
    நாரதர் நாயுடு: வாம்மா வித்யா. நீ போட்ட கண்டிஷன்ல உங்க அப்பா, அம்மாக்கு ஒரு
    மாசமா சாப்பாடே இறங்கலயாமே. எங்க அந்த கண்டிஷனெல்லாம் எங்கிட்ட சொல்லும்மா. நான் நல்ல பையனா பாக்கறேன்.

    வித்யா: நான் MCA படிச்சிருக்கேன்.

    நா.நா: அதுக்கென்னம்மா. ஒரு நல்ல இஞ்சினியர் படிச்ச பையனா பார்த்துடலாம்.
    வித்யா: BE படிச்ச பையனா? அது UG தானே. நான் PG
    படிச்சிருக்கேனே.

    நா.நா: சரிம்மா. ME படிச்ச மாப்பிள்ளையா பார்த்துடுவோம்.

    வித்யா: ME MCAவைவிட பெரிய படிப்புனு என்னை மட்டம் தட்டுவாரே.

    நா.நா: சரிம்மா. அப்ப MCA படிச்சவரே பார்த்துடலாம்.

    வித்யா: எனக்கு சமமா மாப்பிள்ளை பார்த்தா, என் மதிப்பு குறைஞ்சிடுமே.

    நா.நா: என்னம்மா, BE படிச்ச மாப்பிள்ளைனா வேண்டாங்கற, ME, MCAவும் வேண்டாங்கிற.
    அப்ப என்ன தான் படிச்சிருக்கனும்.

    வித்யா: PG பண்ணிருக்கனும். ஆனா அது 6 வருஷ கோர்ஸா இருக்க கூடாது. MSc Software
    Engineering இந்த மாதிரி ஏதாவது 5 வருஷம் படிச்சிருக்கனும்.

    நா.நா: முதல் கண்டிஷனே சூப்பரா இருக்குமா. அடுத்து

    வித்யா: எனக்கு என் கேரியர் தான் முக்கியம்?

    நா.நா: டிபன் கேரியரா?   நல்லதா பார்த்து வாங்கி தர சொல்றேன்.

    வித்யா: அங்கிள். நான் சொல்றது என்னோட ப்ரஃபஷன். எந்த காரணத்துக்காகவும் என்னை வேலையை விட சொல்லக்கூடாது.

    நா.நா: சரிம்மா. அதுக்கென்ன, வேலைக்கு போற பொண்ணு வேண்டும்னு சொல்ற மாப்பிள்ளையை பார்த்துட்டா போகுது.

    வித்யா: அப்படி கண்டிஷன் போடற மாப்பிள்ளை எல்லாம் வேண்டாம். இப்படி சொல்ற மாப்பிள்ளை நாளைக்கே மாற வாய்ப்பிருக்கு. அவர் இஷ்டப்படறார்னு எல்லாம் நான்
    வேலைக்கு போக முடியாது. என் இஷ்டப்படி தான் நான் வேலைக்கு போவேன்.

    நா.நா: சரிம்மா. உன் இஷ்டப்படி விடற மாப்பிள்ளையே பார்த்துட்டா போச்சு.

    வித்யா: கண்டிஷன் நம்பர் 3.
    பையன் என் கண்ணுக்கு பாக்கறதுக்கு சல்மான் கான் மாதிரி தெரியனும், பேசறதுல ஷாருக்கான் மாதிரி இருக்கனும், டேலண்ட்ல அமிர்கான்
    மாதிரி இருக்கனும். ஆனா மத்தவங்க கண்ணுக்கு பார்க்கறதுக்கு விஜய் மாதிரி தெரியனும், பேசறதுல அஜித் மாதிரி தெரியனும், டேலண்ட்ல ரவி கிருஷ்ணா  மாதிரி இருக்கனும்.

    நா.நா : மொத்ததுல உன் கண்ணுக்கு ரெமோவா தெரியனும். மத்தவங்க கண்ணுக்கு மண்ணு லாரில ஆக்ஸிடெண்ட் ஆன சுமோவா தெரியனும். அப்படித்தானே?
    வித்யா : ஆமாம். மாப்பிள்ளைக்கு குறைஞ்சது ஒரு 7-8 பேருக்காவது Non-Veg சமைக்க தெரியனும். ஏன்னா என் ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் வீக் எண்ட் வீட்டுக்கு வருவாங்க. அவுங்களுக்கு எல்லாம் டேஸ்டா சமைக்க
    தெரியனும். நானும் பக்கத்துல நின்னுட்டு
    ரெசிப்பி எல்லாம் படிச்சி கைடன்ஸ் பண்ணுவேன். அதனால பயப்பட வேண்டாம்.

    நா.நா: ஹிம்ம்ம்... கேஷ்மீரீ பிரியாணில இருந்து செட்டிநாடு சிக்கன் வரைக்கும் செய்ய தெரிஞ்ச பையனா பிடிச்சிடுவோம்.

    வித்யா: கண்டிஷன் நம்பர் 5. பையனுக்கு அமெரிக்கன் அக்செண்ட்ல பேச தெரிஞ்சிருக்கனும்.

    நா.நா: ஏம்மா. நீ என்ன கால் சென்டருக்கா ஆள் எடுக்கற? விட்டா மதர் டங் இண்ஃப்ளூவன்ஸ் எல்லாம் இருக்க கூடாதுனு சொல்லுவ போல.

    வித்யா: அதெல்லாம் இல்லை அங்கிள். இந்த தடவை எப்படியும் எனக்கு விசா கிடைச்சிடும். அங்க போனா கம்பெனில நான் எப்படியும் சமாளிச்சிக்குவேன். ஆனா
    பார்ட்டிக்கெல்லாம் கூப்பிட்டு போனா அக்சண்ட்ல பேசனா தான் பெருமையா இருக்கும்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்.

    நா.நா: சரிம்மா. நம்ம சப்போர்ட்ல
    இருக்கற பையனா பார்த்து பிடிச்சிடுவோம். அடுத்த கண்டிஷன சொல்லு.

    வித்யா: கண்டிஷன் நம்பர் 6. எந்த காரணத்தை கொண்டும் என்னை டிபண்டண்ட் வீசால
    கூப்பிட்டு போக முயற்சி பண்ணக்கூடாது. எனக்கு வீசா கிடைச்சா அவர் விருப்பப்பட்டா என் கூட டிபண்டண்ட் வீசால வரலாம். அதுல எனக்கு எதுவும் பிரச்சனையில்லை.

    நா.நா: சரிம்மா. உனக்கு தான் விசா கிடைச்சிடுமே. அப்பறம் என்ன?

    வித்யா: இப்பவெல்லாம் விசா, லாட்ல பிக் அப் பண்றாங்க. எனக்கு கிடைக்காம போகவும்
    வாய்ப்பிருக்கு. அதான்.
    நா.நா: சரிம்மா. உன் கூடவே வர மாப்பிள்ளையையா பார்த்துடுவோம்.
    வித்யா: இது தான் ரொம்ப முக்கியமான கண்டிஷன். நான் கொஞ்ச ஜாலி டைப். அதனால என் டீம்ல இருக்கற ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எனக்கு அடிக்கடி கால் பண்ணுவாங்க. அதை தப்பா நினைக்கக்கூடாது.

    நா.நா: உன் பிரெண்ட்ஸ் கூட நீ பேசறதால என்னமா பிரச்சனை. உன் பிரெண்ட்ஸ் கூட அவர் அதிகமா பேசினா தானே பிரச்சனை.

    வித்யா: அங்கிள். நான் சொல்ற பிரெண்ட்ஸ் எல்லாம் பசங்க. என்னைக்கு பொண்ணுங்க, மத்த பொண்ணுங்களுக்கு செலவு பண்ணி ஃபோன்ல பேசுவாங்க. எப்பவும் பசங்க தான் செலவு பண்ணி ஃபோன் பேசி, ஜாலியா மொக்கை போடுவாங்க.

    நா.நா: சரிம்மா. நீ உன் பசங்க பிரெண்ட்ஸ் கிட்ட பேசும் போது பிரச்சனை பண்ணாம, அந்த பையனை அவனோட பிரெண்ட்ஸ் கிட்ட பேச சொல்லிடுவோம்.

    வித்யா : நாங்க இந்தியால இருக்கற வரைக்கும் அவுங்க அப்பா, அம்மா எங்க வீட்டுக்கு சனிக்கிழமை ஃபுல் டே வந்து தங்கிட்டு போகலாம். ஆனா என்னை சமைக்க சொல்லக்கூடாது.

    நா.நா : இது ஒரு கண்டிஷனாம்மா. முதல் வாரம் நீ சமைச்சு போட்டா அவுங்க உன் வீட்டு பக்கமே தலை வைக்க மாட்டாங்க. இன்னும் ஏதாவது இருக்கா?

    வித்யா: இது தான் கடைசி கண்டிஷன். எங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ் ஆகிடுச்சினா

    நா.நா: ஏம்மா இப்படி அபசகுனமா பேசற. வாய கழுவும்மா.

    வித்யா: இருங்க அங்கிள் சொல்லி முடிச்சிடறேன். ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ்
    ஆகிடுச்சுனா அவர் கண்டிப்பா வேற கல்யாணம் பண்ணிக்கனும்.

    நா.நா: இங்க தாம்மா. இங்க தாம்மா. நீ தமிழ் பொண்ணுனு நிருபிக்கற.

    வித்யா: அதெல்லாம் இல்லை அங்கிள். அதுக்கப்பறம் அந்த பையன் எப்படி சந்தோஷமா இருக்கலாம். அதான்

    நா.நா மயக்கம் போட்டு விழுகிறார்..
























From: Sgm Mahadevan

மணல் கயிறு 2

சாஃப்ட்வேர் பெண்கள் எதிர்பார்க்கும் மாப்பிள்ளைக்கான தகுதிகள்:

சாப்ட்வேர்ல வேலை பார்க்கற பொண் போட்ட கண்டிஷன்ல அவுங்க அப்பாகிட்டுமணி , அம்மா உமா கதி கலங்கி நம்ம நாரதர் நாயுடு கிட்ட கூப்பிட்டு வராங்க. அந்த பொண்ணுக்கு ஏதாவது பேரு வைக்கணுமே. வித்யான்னு வெச்சிடுவோம்.
நாரதர் நாயுடு: வாம்மா வித்யா. நீ போட்ட கண்டிஷன்ல உங்க அப்பா, அம்மாக்கு ஒரு
மாசமா சாப்பாடே இறங்கலயாமே. எங்க அந்த கண்டிஷனெல்லாம் எங்கிட்ட சொல்லும்மா. நான் நல்ல பையனா பாக்கறேன்.

வித்யா: நான் MCA படிச்சிருக்கேன்.

நா.நா: அதுக்கென்னம்மா. ஒரு நல்ல இஞ்சினியர் படிச்ச பையனா பார்த்துடலாம்.
வித்யா: BE படிச்ச பையனா? அது UG தானே. நான் PG
படிச்சிருக்கேனே.

நா.நா: சரிம்மா. ME படிச்ச மாப்பிள்ளையா பார்த்துடுவோம்.

வித்யா: ME MCAவைவிட பெரிய படிப்புனு என்னை மட்டம் தட்டுவாரே.

நா.நா: சரிம்மா. அப்ப MCA படிச்சவரே பார்த்துடலாம்.

வித்யா: எனக்கு சமமா மாப்பிள்ளை பார்த்தா, என் மதிப்பு குறைஞ்சிடுமே.

நா.நா: என்னம்மா, BE படிச்ச மாப்பிள்ளைனா வேண்டாங்கற, ME, MCAவும் வேண்டாங்கிற.
அப்ப என்ன தான் படிச்சிருக்கனும்.

வித்யா: PG பண்ணிருக்கனும். ஆனா அது 6 வருஷ கோர்ஸா இருக்க கூடாது. MSc Software
Engineering இந்த மாதிரி ஏதாவது 5 வருஷம் படிச்சிருக்கனும்.

நா.நா: முதல் கண்டிஷனே சூப்பரா இருக்குமா. அடுத்து

வித்யா: எனக்கு என் கேரியர் தான் முக்கியம்?

நா.நா: டிபன் கேரியரா? நல்லதா பார்த்து வாங்கி தர சொல்றேன்.

வித்யா: அங்கிள். நான் சொல்றது என்னோட ப்ரஃபஷன். எந்த காரணத்துக்காகவும் என்னை வேலையை விட சொல்லக்கூடாது.

நா.நா: சரிம்மா. அதுக்கென்ன, வேலைக்கு போற பொண்ணு வேண்டும்னு சொல்ற மாப்பிள்ளையை பார்த்துட்டா போகுது.

வித்யா: அப்படி கண்டிஷன் போடற மாப்பிள்ளை எல்லாம் வேண்டாம். இப்படி சொல்ற மாப்பிள்ளை நாளைக்கே மாற வாய்ப்பிருக்கு. அவர் இஷ்டப்படறார்னு எல்லாம் நான்
வேலைக்கு போக முடியாது. என் இஷ்டப்படி தான் நான் வேலைக்கு போவேன்.

நா.நா: சரிம்மா. உன் இஷ்டப்படி விடற மாப்பிள்ளையே பார்த்துட்டா போச்சு.

வித்யா: கண்டிஷன் நம்பர் 3.
பையன் என் கண்ணுக்கு பாக்கறதுக்கு சல்மான் கான் மாதிரி தெரியனும், பேசறதுல ஷாருக்கான் மாதிரி இருக்கனும், டேலண்ட்ல அமிர்கான்
மாதிரி இருக்கனும். ஆனா மத்தவங்க கண்ணுக்கு பார்க்கறதுக்கு விஜய் மாதிரி தெரியனும், பேசறதுல அஜித் மாதிரி தெரியனும், டேலண்ட்ல ரவி கிருஷ்ணா மாதிரி இருக்கனும்.

நா.நா : மொத்ததுல உன் கண்ணுக்கு ரெமோவா தெரியனும். மத்தவங்க கண்ணுக்கு மண்ணு லாரில ஆக்ஸிடெண்ட் ஆன சுமோவா தெரியனும். அப்படித்தானே?
வித்யா : ஆமாம். மாப்பிள்ளைக்கு குறைஞ்சது ஒரு 7-8 பேருக்காவது Non-Veg சமைக்க தெரியனும். ஏன்னா என் ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் வீக் எண்ட் வீட்டுக்கு வருவாங்க. அவுங்களுக்கு எல்லாம் டேஸ்டா சமைக்க
தெரியனும். நானும் பக்கத்துல நின்னுட்டு
ரெசிப்பி எல்லாம் படிச்சி கைடன்ஸ் பண்ணுவேன். அதனால பயப்பட வேண்டாம்.

நா.நா: ஹிம்ம்ம்... கேஷ்மீரீ பிரியாணில இருந்து செட்டிநாடு சிக்கன் வரைக்கும் செய்ய தெரிஞ்ச பையனா பிடிச்சிடுவோம்.

வித்யா: கண்டிஷன் நம்பர் 5. பையனுக்கு அமெரிக்கன் அக்செண்ட்ல பேச தெரிஞ்சிருக்கனும்.

நா.நா: ஏம்மா. நீ என்ன கால் சென்டருக்கா ஆள் எடுக்கற? விட்டா மதர் டங் இண்ஃப்ளூவன்ஸ் எல்லாம் இருக்க கூடாதுனு சொல்லுவ போல.

வித்யா: அதெல்லாம் இல்லை அங்கிள். இந்த தடவை எப்படியும் எனக்கு விசா கிடைச்சிடும். அங்க போனா கம்பெனில நான் எப்படியும் சமாளிச்சிக்குவேன். ஆனா
பார்ட்டிக்கெல்லாம் கூப்பிட்டு போனா அக்சண்ட்ல பேசனா தான் பெருமையா இருக்கும்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்.

நா.நா: சரிம்மா. நம்ம சப்போர்ட்ல
இருக்கற பையனா பார்த்து பிடிச்சிடுவோம். அடுத்த கண்டிஷன சொல்லு.

வித்யா: கண்டிஷன் நம்பர் 6. எந்த காரணத்தை கொண்டும் என்னை டிபண்டண்ட் வீசால
கூப்பிட்டு போக முயற்சி பண்ணக்கூடாது. எனக்கு வீசா கிடைச்சா அவர் விருப்பப்பட்டா என் கூட டிபண்டண்ட் வீசால வரலாம். அதுல எனக்கு எதுவும் பிரச்சனையில்லை.

நா.நா: சரிம்மா. உனக்கு தான் விசா கிடைச்சிடுமே. அப்பறம் என்ன?

வித்யா: இப்பவெல்லாம் விசா, லாட்ல பிக் அப் பண்றாங்க. எனக்கு கிடைக்காம போகவும்
வாய்ப்பிருக்கு. அதான்.
நா.நா: சரிம்மா. உன் கூடவே வர மாப்பிள்ளையையா பார்த்துடுவோம்.
வித்யா: இது தான் ரொம்ப முக்கியமான கண்டிஷன். நான் கொஞ்ச ஜாலி டைப். அதனால என் டீம்ல இருக்கற ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எனக்கு அடிக்கடி கால் பண்ணுவாங்க. அதை தப்பா நினைக்கக்கூடாது.

நா.நா: உன் பிரெண்ட்ஸ் கூட நீ பேசறதால என்னமா பிரச்சனை. உன் பிரெண்ட்ஸ் கூட அவர் அதிகமா பேசினா தானே பிரச்சனை.

வித்யா: அங்கிள். நான் சொல்ற பிரெண்ட்ஸ் எல்லாம் பசங்க. என்னைக்கு பொண்ணுங்க, மத்த பொண்ணுங்களுக்கு செலவு பண்ணி ஃபோன்ல பேசுவாங்க. எப்பவும் பசங்க தான் செலவு பண்ணி ஃபோன் பேசி, ஜாலியா மொக்கை போடுவாங்க.

நா.நா: சரிம்மா. நீ உன் பசங்க பிரெண்ட்ஸ் கிட்ட பேசும் போது பிரச்சனை பண்ணாம, அந்த பையனை அவனோட பிரெண்ட்ஸ் கிட்ட பேச சொல்லிடுவோம்.

வித்யா : நாங்க இந்தியால இருக்கற வரைக்கும் அவுங்க அப்பா, அம்மா எங்க வீட்டுக்கு சனிக்கிழமை ஃபுல் டே வந்து தங்கிட்டு போகலாம். ஆனா என்னை சமைக்க சொல்லக்கூடாது.

நா.நா : இது ஒரு கண்டிஷனாம்மா. முதல் வாரம் நீ சமைச்சு போட்டா அவுங்க உன் வீட்டு பக்கமே தலை வைக்க மாட்டாங்க. இன்னும் ஏதாவது இருக்கா?

வித்யா: இது தான் கடைசி கண்டிஷன். எங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ் ஆகிடுச்சினா

நா.நா: ஏம்மா இப்படி அபசகுனமா பேசற. வாய கழுவும்மா.

வித்யா: இருங்க அங்கிள் சொல்லி முடிச்சிடறேன். ஏதாவது பிரச்சனை வந்து டைவர்ஸ்
ஆகிடுச்சுனா அவர் கண்டிப்பா வேற கல்யாணம் பண்ணிக்கனும்.

நா.நா: இங்க தாம்மா. இங்க தாம்மா. நீ தமிழ் பொண்ணுனு நிருபிக்கற.

வித்யா: அதெல்லாம் இல்லை அங்கிள். அதுக்கப்பறம் அந்த பையன் எப்படி சந்தோஷமா இருக்கலாம். அதான்

நா.நா மயக்கம் போட்டு விழுகிறார்..





திங்கள், 4 மார்ச், 2013

கைலாஷ் யாத்ரா பாவப்பட்ட பாண்டவர்கள்…!

ராதே கிருஷ்ணா 04-03-2013



கைலாஷ் யாத்ரா
பாவப்பட்ட பாண்டவர்கள்…!

 
 
பரவசமான நாள் அது!
மண்ணை மீட்டும் மழை போல, மனதை மீட்டும் இசைபோல, இயற்கை விரிந்து கிடக்கிறது இமயமலையாக!
சூரியச் சுடரொளியில் பனிப் பிரதேசமே பளபளக்க, பிரணவ மந்திரப் பேரொலி நிறைந்திருக்கிற வெளி. பிறப்பின் சூட்சுமமும் பிரபஞ்சத்தின் ரகசியமும் அறிய விரும்புகிற, உணர விழைகிற சாதுக்களும் சந்நியாசிகளும் உலவுகிற பூமிக்குள் நுழையப் போகிறோம்.
kailash, yatra, sacred walks, sadhguru, isha, yoga meditation
எங்கெங்கிருந்தோ வந்து குவிந்த வெவ்வேறான மனிதர்கள் ஒரு குழுவாக, குடும்பமாக உணர்ந்த நிலையில் தொடங்குகிறது பயணம்.
மனித உடலியக்கத்துக்குக் காரணமான ஏழு சக்கரங்களுக்கும் இந்தத் திருத்தலங்களுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு.

ஆன்மிக தாகத்தில் இரண்டு மிடறு தண்ணீர் கிடைக்குமா என்று ஏங்கிக்கொண்டு இருந்தவர்களுக்கு நடுவில் இயற்கையைப் பற்றியும் இறைவனைப் பற்றியும் அருவி மாதிரி கொட்டிக்கொண்டு இருந்தார் சத்குரு.
பசுபதிநாத் திருத்தலத்தைப் பற்றி கருத்து விருந்து வைத்தார் அவர். ‘‘நம்ப முடியாத அற்புதங்கள் நிகழ்ந்த திருத்தலம், பசுபதிநாத். கோடானுகோடி சிவத்தலங்களில் தலைசிறந்தது இது. ‘பசு’ என்றால் உயிர். ‘பதி’ என்றால் கடவுள்.
நான்கு திசைகளிலும் நான்கு திருமுகங்களை உடைய இந்தத் திருத்தலத்தின் லிங்கம் மிகச் சிறப்புடையதாகும். கிழக்குத் திசை நோக்கிய முகத்துக்கு ‘தத்புருஷா’ என்று பெயர். மேற்கு நோக்கிய திருமுகம் ‘சத்யோஜதா’, தெற்கு நோக்கிய முகம் ‘அகோரா’, வடக்கு நோக்கிய முகம் ‘வாமதேவா’. இந்த நான்கு திசைத் திருமுகங்களும் நான்குவிதமான பரிமாணங்களுடையது. நான்கு வேதங்களின் அடிப்படையே, பசுபதிநாத் லிங்கத்தின் நான்கு முகங்களும்.
இந்தத் திருத்தலத்தின் வரலாறு சொல்லும் புராணங்களில் முக்கியமானது, பாண்டவர்கள் தங்கள் பாவங்களைப் போக்க சிவனைத் தேடிய புராணம். சொந்தச் சகோதரர்களின் ரத்த வெள்ளத்தில்தான் பாண்டவர்களின் வெற்றி மிதந்து வந்தது. ஊரை, உறவை, மக்களை, பெரியோர்களை, நல்லோர்களைக் கொன்று குவித்த பாவக் கறையை உண்டாக்கிக் கொண்டனர் பாண்டவர்கள். சொந்தச் சகோதரர்களுக்குள் நிகழும் இத்தகைய போரை ‘கோத்ராவதா’ என்று குறிப்பிடுவர். அந்தப் பாவக் கறையைக் கழுவ, தங்கள் குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட விரும்பிய பாண்டவர்கள், சிவனருளை வேண்டி நின்றனர். சொந்த சகோதரர்களைக் கொன்று குவித்தவர்களுக்கு அவ்வளவு எளிதில் பரிகாரம் தர விரும்பாத சிவன் தன்னை ஒரு காளையாக உருமாற்றிக்கொண்டு அவர்களுக்குத் தரிசனம் தராமல் மறைந்தார். காளையுருவேற்ற சிவன் தன்னைப் பூமியின் அடியில் புதைத்துக்கொண்டதோடு, பூமியின் பல்வேறு இடங்களில் தன்னை தனித்தனி உறுப்புகளாக வெளிப்படுத்தினார். காளை உருவமேற்ற சிவனின் முதுகுப்பகுதி வெளிப்பட்ட இடம்தான் புகழ்பெற்ற ‘கேதார்நாத்’ திருத்தலம்.
கேதார் போகிற வழியில் உள்ள மற்றொரு புகழ்பெற்ற ‘துங்கநாத்’ திருத்தலத்தில் முன்னங்கால்கள் வெளிப்பட்டன. இமாலயத்தில் மிக சக்தி வாய்ந்த மணிப்பூர்க லிங்கம் இருக்கிற ‘மத்திய மஹேஷ்வர்’ திருத்தலத்தில் கொப்பூழ் பகுதி வெளிப்பட்டது. உடலின் பல்வேறு பாகங்களின் கலவையாக சிவன் வெளிப்பட்ட இடம் ‘கல்பநாத்’. இதுபோன்று சிவனின் நெற்றி வெளிப்பட்ட இடமே ‘பசுபதிநாத்’ திருத்தலம்.
மனித உடலியக்கத்துக்குக் காரணமான ஏழு சக்கரங்களுக்கும் இந்தத் திருத்தலங்களுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. இத்திருத்தலங்கள் உயிரோட்டமுள்ள உடலாகவே அமைக்கப்பட்டுள்ளன. அந்த உயிரோட்டத்தை உணர்வதே அற்புதமான அனுபவம்.
ஏழு சக்கரங்களுடன் ஒரு முழு உயிராய் உள்ள தியானலிங்கத்தைப் போன்றே இத்திருத்தலங்களின் மையங்களும் அமைந்துள்ளன. உயிரோட்டத்துக்குக் காரணமான ஏழு சக்கரங்களையும் முறையான வரிசைப்படி, ஒரு மையத்திலிருந்து இன்னொரு மையத்துக்கு மாற்றிப் பயணிப்பது மகா அற்புதமான வாழ்வியல் அனுபவம்.

kailash, yatra, sacred walks, sadhguru, isha, yoga meditation
பசுபதிநாத், துங்கநாத், கேதார்நாத் ஆகிய மையங்கள் இன்றும் உயிரோட்டமுடன் உள்ளன. இந்த மையங்களை உயிரோட்டத்துடன் தக்கவைத்துக்கொள்ளவும் பாதுகாக்கவும் மிகவும் பிரயத்தனம் தேவை.
இந்தப் புராணங்களின் மீது நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை. திறந்த மனதுடன் இந்தத் திருத்தலத்தில் இருந்தாலே போதுமானது. இங்கே எப்படி அமர வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி உங்களுக்கு வழிகாட்டப்படும். பரவசமான அனுபவத்தைப் பெறுவதற்கு மட்டும்தான் நீங்கள் தயாராக வேண்டும்.’’
வழிகாட்ட சத்குரு எழுந்து நின்ற அந்த வினாடிகளில், வீணையை மீட்டியது போல எங்கும் வழிந்தது பரவசம்!
காளை உருவமேற்ற சிவனின் முதுகுப் பகுதி வெளிப்பட்ட
இடம்தான் புகழ்பெற்ற ‘கேதார்நாத்’ திருத்தலம்!
திபெத்
புல்லாங்குழலில் புறப்படும் சோக ஸ்வரங்கள்
மலை முகடுகளில் எதிரொலிக்கின்றன.
மனிதன், விலங்கு போல் உயிர்ப்புள்ளவை எனினும்
இதயங்களின் அழுகுரலுக்கு அசையாதிருக்கின்றன.
அதிர்வுகளின் உச்சாடனங்கள், அபஸ்வரங்களை
அசையாப் பாறைகள் எதிரொலிப்பதில்லை.
இரக்கமில்லாத இச்சைகளின் இரைச்சலில் ஒலிப்பதோ
என்ஜின்களின் பேரோசையும் எந்திரங்களின் சப்தமும்
விறைத்த சீருடைகள் முறைத்த விழிகள்
பேசத் தயாராய் பீரங்கிகள் துப்பாக்கிகள்
மென்மை நிரம்பிய மனிதர்கள்
உலுக்கப்படுவது இங்கேதான்!