புதன், 23 மார்ச், 2016

பாசுரங்கள்

ராதே கிருஷ்ணா 23-03-2016



திவ்யப்ரபந்த தனியன்கள்

கேசவார்ய க்ருபா பாத்ரம் தீசமாதி குணார்ணவம்
ஸ்ரீ ஷடாரி யதீசாநம் தேசிகேந்திர மஹம் பஜே

ராமானுஜ தயா பாத்ரம் ஜ்ஞான வைராக்ய பூஷணம்
ஸ்ரீ மத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேஸிகம்


லக்ஷ்மீ நாத ஸமாரம்பாம் நாத யாமுன மத்யமாம்
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்

யோ நித்யம் அச்யுத பதாம் புஜ யுக்ம ருக்ம
வ்யோமோஹதஸ் ததிதராணி தருணாய மேநே
அஸ்மத் குரோர் பகவதோஸ்ய தயைக ஸிந்தோ
ராமானுஜஸ்ய சரணௌ சரணம் ப்ரபத்யே

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியமேன மதந்வ்யாநாம்
ஆத்யஸ்ய ன: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீ மத பராங்குச முநிம் ப்ரணதோஸ்மி நித்யம்



பாசுரங்கள்

முதல் ஆயிரம்

பெரியாழ்வார் திருமொழி

    முதல் பத்து
   பல்லாண்டு
   வண்ண மாடங்கள்
   சீதக் கட ளுள்
   மாணிக்கம் கட்டி
   தன் முகத்துச் சுட்டி
   உய்ய உலகு
  மாணிக்கக் கிண்கிணி
  வட்டு நடுவே

இரண்டாம் பத்து

   மெச்சுது
   அரவணையாய்
   போய்ப்பாடு
   வெண்ணையளந்து
   பின்னை மணவாளனை
   வேலிக்கோல்வெட்டி
   ஆனிரை
   இந்திரனோடு
   வெண்ணெய் விழுங்கி
   ஆற்றிலிருந்து

மூன்றாம் பத்து
 
    தன்னேராயிரம்
   அஞ்சன வண்ணனை
    சீலைக் குதம்பை
    தழைகளும்
    அட்டுக்குருவி
    நாவலம்
    ஐயபுழுதி
    நல்லதோர் தாமரை
    என்னாதன்
    நெறிந்த கருங்குழல்

நாலாம் பத்து

      கதிராயிரம்
      அலம்பா வெருட்டா
      உருப்பிணி நங்கை
      நாவ காரியம்
      ஆசை வாய்
      காகங்கறையுடை
      தங்கையைமூக்கும்
      மாதவத்தோன்
      மரவடியை
      துப்புடையாரை

ஐந்தாம் பத்து

       வாக்குத் தூய்மை
       நெய்க்குடைத்தை
        துககச்சுழலையை
        சென்னியோங்கு

திருப்பாவை

நாச்சியார் திருமொழி
          தையொரு திங்கள்
          நாமமாயிரம்
          கோழியழைப்பதன்
           தெள்ளியார் பலர்
           மண்னுபெரும்புகழ்
           வாரணமாயிரம்
           கண்ணன் என்னும்
            கற்பூரம் நாறுமோ
            விண்ணீல மேலாப்பு
             சிந்தூரச் செம்பொடி
             கார்க்கோடல் பூக்காள்
             தாமுகக்கும்
             மற்றிருந்தீர்
             பட்டி மேய்ந்து

பெருமாள் திருமொழி

             இருளிரிய
             தேட்டரும் திறல்
             மெய்யில் வாழ்க்கையை
             ஊனேறு செல்வத்து

             தரு துயரம் தடையேல்
            எர்மலர்ப்பூங்குழல்
            ஆலை நீள்கரும்பன்னவன்
            மண்ணு புகழ் கௌசலை தன்
           வந்தாளினினை
           அங்கணொடு மதிள்புடை

திருச்சந்த விருத்தம்
திருமாலை
திருப்பள்ளியெழுச்சி
அமலனாதிபிரான்
கண்ணி நுண் சிறுத்தாம்பு        




         


திருவாய்மொழி

3827     (10.5.1)
கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்
எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே






  567

   கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ

  திருப்பவளச்செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ

மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமும்

விருப்புற்று கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே


791

  ஆனைகாத்து ஓர் ஆனைகொன்று  அதன்றி ஆயர் பிள்ளையாய்

  ஆனைமேய்த்தி ஆனை உண்டி அன்று குன்றம் ஒன்றினால்

  மாய மாய மாயை கொல்  அதன்றி நீ வகுத்தலும்

 மாய மாயம் ஆக்கினாய் உன் மாயமுற்றும் மாயமே


874

   வேத நூல் பிராயம் நூறு மனிசர் தாம் புகுவரேலும்

   பாதியும் உறங்கிப்போகும் நின்றதில் பதினையாண்டு

  பேதை பாலகனதாகும் பிணி பசி மூப்புத் துன்பம்

  ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகர் உளானே



890

   குட திசை முடியை வைத்து குண திசை பாதம் நீட்டி

  வட திசை பின்பு காட்டி தென் திசை இலங்கை நோக்கி

  கடல் நிறக் கடவுள் எந்தை அரவணை துயிலுமாக் கண்டு

  உடலெனக்கு உருகுமாலோ என் செய்கேன் உலகத்தீரே


900

  ஊரிலேன் காணி இல்லை உறவு மற்றொருவர் இல்லை

 பாரில் நின் பாதமூலம் பற்றிலேன் பரம மூர்த்தி

 காரொளி வண்ணனே (என்) கண்ணனே  கதறுகின்றேன்

 ஆருளர் கனை கண் அம்மா அரங்கமா நகருளானே


909

 மேம்பொருள் போகவிட்டு மெய்ம்மையை மிக உணர்ந்து

  ஆம்பரி சறிந்துகொண்டு ஐம்புலன் அகத்தடக்கி

  காம்பற தலை சிரைத்து  உன் கடைத்தலை இருந்து வாழும்

 சோம்பரை உகத்தி போலும் சூழ்புனல் அரங்கத்தானே


956

  குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படு துயராயினவேல்லாம்

 நிலந்தரஞ்செய்யும் நீள்விகம்பருளும் அருளோடு பெருநிலமளிக்கும்

 வலந்தரும் மற்றுந்தந்திடும் பெற்ற தாயினுமாயின செய்யும்

நலந்தரும் சொல்லை நான் அறிந்துகொண்டேன் நாராயணா எனும் நாமம்


எட்டாம் பத்து எட்டாம் திருமொழி
1727

மீனோடு ஆமைகேழல் அரிகுறலாய் முன்னும் ராமனாய்த் தானாய்
பின்னும் இராமனாய்த் தாமோதரனாய்க் கற்கின் ஆனான் தன்னை
கண்ணபுரத்து அடியன் கலியன் ஒழி செய்த
தேனார் இன்சொல் தமிழ்மாலை செப்பப் பாவம் நில்லாவே


திருவாய்மொழி முதற்பத்து

2791

உயர்வற உயர்நலம் உடையவன் யவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்'
துயரறு சுடரடி தொழுதெழு என் மனமே


இரண்டாம் பத்து ஐந்தாம் திருமொழி
2954

ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்
காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன்
பேணுங்கால் பேணும் உருவாகும் அல்லனுமாம்
கோணை பெரிதுடைத்து அம்பெம்மானைக் கூறுதலே


ஐந்தாம் பத்து ஆறாம் திருவாய்மொழி
3288

கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்
கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்
கடல் ஞாலத்தீசன் வந்தேறக் கொலோ
கடல் ஞாலத்தீர்க்கு இவைஎன் சொல்லுகேன்
கடல் ஞாலத்து என் மகள் கற்கின்றவே         5.6.1

ஐந்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி
3337

நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன
ஒன்றலா உருவாய் அருவாய நின் மாயங்கள்
நின்று நின்று நினைகின்றேன் உன்னை எஞ்ஞனம் நினைக்கிற்பன் பாவியேற்கு
 நன்குரையாய் உலகமுண்ட ஒண்சுடரே      5.10.6


ஆறாம் பத்து பத்தாம் திருவாய்மொழி பத்தாம்
3451

அகல கில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா
நிகரில் புகழாய் உலகமூன்று உடையாய் என்னை ஆள்வானே
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே
புகல் ஒன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே   6.10.10
















































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக