புதன், 30 டிசம்பர், 2015

சில தகவல்கள்

ராதே கிருஷ்ணா 31-12-2015


சில தகவல்கள்








1) உலகில் மிகப்பெரிய விலங்கு எது? திமிங்கிலம்
2) உலகில் உயரமான விலங்கு எது? ஒட்டகச்சிவிங்கி
3) உலகில் மிக உயரமான மலை எது? இமயமலை
4) உலகிலேயே மிக நீளமான நதி எது? அமேசன்(6.750 கிலோமீற்றர்)
5) உலகிலேயே மிக நீளமான நதியாகக் கருதப்பட்ட நதி யாது? நைல் நதி(6.690 கிலோ மீட்டர்)
6) உலகியே மிக ஆழமான ஆழி எது? மரியானாஆழி(11.522மீற்றர்)
7) உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது? லண்டன்
உலகிலேயே பெரிய பாலைவனம் யாது? சஹாராப்பாலைவனம்
9) உலகிலேயே மிகச் சிறிய அரசு எது? வத்திக்கான்
10) உலகிலேயே பெரிய சமுத்திரம் எது? பசுபிக் சமுத்திரம்
11) உலகிலேயே பெரிய தீவு எது? கிறீன்லாந்து
12) உலகிலேயே பெரிய கண்டம் எது? ஆசியாக்கண்டம்
13) உலகிலேயே சிறிய கண்டம் எது? அவுஸ்ரேலியா
14) உலகிலேயே பெரிய நாடு எது? கனடா(ரஷ்யா சிதறிய பிறகு)
15) உலகிலேயே அதிகளவில் எரிமலைகள் உள்ள நாடு எது? இந்தோனேஷியா
16) உலகிலேயே அதிக மழை பெறும் இடம் யாது? சீராப்புஞ்சி
17) உலகிலேயே பெரிய நன்னீர் ஏரி யாது? சுப்பீரியர் ஏரி
18) சூரியனை புமி ஒருமுறை சுற்றிவர எடுக்கும் காலம் யாது? 365 நாடகள்.6 மணி 9நிமிடம். 9.54 செக்கன்
19) உலகிலேயே மிகவுயர்ந்த சிகரம் யாது? எவரெஸ்ட்
20) உலகிலேயே பெரிய எரிமலை யாது? லஸ்கார்(சிலி) 5.990 மீற்றர்
21) உலகிலேயே மிக நீளமான மலை எது? அந்தீஸ்மலை
22) உலகிலேயே மிகவும் பரந்த கடல் எது? தென்சீனக்கடல்
23) உலகிலேயே பெரிய ஏரி எது? கஸ்பியன் (ரஷ்யா-ஈரான்)
24) உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது? ஏஞ்சல்ஸ்(வெனிசுவெலா) 979மீற்றர்
25) உலகிலேயே அதிக மக்கள் தொகையுள்ள நாடு எது? சீனா
26) உலகிலேயே குறைந்த மக்கள் தொகையுள்ள நாடு எது? வத்திக்கான்
27) உலகிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் எங்குள்ளது? காரக்புர்
28) உலகிலேயே மிக ஆழமான ஏரி எது? பைக்கால் ஏரி
29) உலகிலேயே மிக நீளமான குகை எது? மாமத் குகை
30) உலகில் உள்ள ஒரே ஒரு இந்து மத நாடு எது? நேபாளம்
31) உலகிலேயே மிகப்பெரிய பு எது? ரவல்சியாஆர்ணல்டி
32) உலகிலேயே மிக நீளமான வீதி அமைந்துள்ள இடம் எது? அலாஸ்கா
33) உலகிலேயே மிகப் பழைமையான தேசப்படத்தை வரைந்தவர் யார்? தொலமி
34) உலகிலேயே மிகப் பிரபலமான விஞ்ஞான சஞ்சிகை எது? நேச்சர் 35) ஆசியாவில் உள்ள கிறிஸ்தவ நாடு எது? பிலிப்பைன்ஸ்
36) உலகில் எரிமலை இல்லாத கண்டம் எது? அவுஸ்ரேலியா
37) உலகில் மிக உயரத்திலுள்ள ஏரி எது? டிடிக்காகா
38) உலகில் மிக உயரமான அணை எது? போல்டர் அணை
39) உலகிலேயே மிகப் பழைமையான கம்யுனிஸ நாடு எது? சீனா
40) உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடு எது? இந்தியா
41) உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழி எது? மாண்டரின்(சீனா)
42) உலகில் அதிகளவில் அச்சிடப்படும் நூல் எது? பைபிள்
43) கடல்மட்டத்திற்கு கீழே உள்ள நாடு எது? நெதர்லாந்து
44) உலகில் ஆறுகளே இல்லாத நாடு எது? சவுதி அரேபியா
45) உலகில் மிகப் பெரிய இஸ்லாமிய நாடு எது? இந்தோனோசியா
46)உலகில் மிக உயரமான அணை யாது? போல்டர் அணை ( manas hussain )











நீண்ட நாட்களாக இணையத்தில் நான் தேடிக்கொண்டிருந்த கோவில் இது!

கடலுக்கடியில் பாண்டவர்களின் சிவனாலயம்; வழிபாட்டுக்கு நீர் விலகி வழிவிடும் அதிசய நிகழ்வு பூஜை செய்து கரை திரும்பும் பக்தர்கள் குஜராத்தின் பாவ் நகரின் அருகில் உள்ள கடற்கரை கோலியாக். இங்கு கடலுக்குள் உள்ளது உலகச் சிறப்பு மிக்க நிஷ்களங்கேஷ்வர் சிவன் ஆலயம். இந்த ஆலயம் கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

தினந்தோறும் பகல் ஒரு மணிமுதல் இரவு பத்து மணி வரை கடல் உள்வாங்கி கடலினுள் உள்ள சிவனை வழிபட வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. பாண்டவர்கள் வழிபட்டதன் நினைவாக... இந்த ஆலயத்தில் ஐந்து சிவலிங்கங்கள் அமைந்துள்ளன.

இந்த ஆலயத்தின் கல் கொடிமர் (சுமார் இருபது முதல் முப்பதடி உயரம் உடையது) இதுவரை வீசிய புயல்களினால் சேதமடை யாமல் உள்ளது. தினமும் பகல் ஒரு மணிவரை கடல் நீர் மட்டம் இந்த கொடி மரத்தின் உச்சியைத் தொடும்.

பின் மெல்ல மெல்ல கடலின் நீர் மட்டம் குறைய ஆரம்பித்து இருபுறமும் கடல் விலகி சிவனை வணங்க வழி ஏற்படுத்தி கொடுக்கிறது. நீர் மட்டம் குறைய குறைய மக்கள் மெதுவாக கடலினுள் சென்று சிவனை வணங்கி விட்டு மீண்டும் கரைநோக்கித் திரும்புகின்றனர்.


குஜராத் மாநிலம் பாவ் நகரத்தின் அருகே உள்ளது








#கும்பகோணம் #டிகிரி #காபி:


எங்கோ கண்டுபிடிக்கப்பட்ட பானம் காபி;அது கும்பகோணத்துக்கு எப்படி வந்தது? எப்படி அதன் பெயரில் ஒட்டிக்கொண்டது டிகிரி? சுவையான காபியின் வரலாறைப் பார்த்து விட்டு டிகிரிக்கு
அமெரிக்கானோ, கப்பச்சினோ, எஸ்பிரஸோ, லட்டெச் வருவோம்...காபியின் பூர்வீகம் எது என்பதில் முரண்பாடான கருத்துக்கள் உண்டு. கிறிஸ்து பிறப்பதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பு, எத்தியோப்பியா நாட்டில் ஃகாப்பா என்ற பகுதியில் கல்பா என்பவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தாராம்.
அப்போது வழக்கத்துக்கு மாறாக சில ஆடுகள் உற்சாகமாக ஆடியோடி திரிந்ததைப் பார்த்து அதிசயித்த கல்பா, அவை ஒரு செடியில் உள்ள சிவப்பு பழங்களை உண்டதாலேயே உற்சா கமடைந்ததைக் கண்டறிந்தார். அவரும் அப்பழங்களை ருசிக்க, அளவில்லாத உற்சாகத்தை உணர்ந்தார்.
இப்படித்தான் காபிச்செடி இனம் காணப்பட்டதென ஒரு செவிவழிக் கதையுண்டு. 17ம் நூற்றாண்டில் மெக்கா, ஏமன் நாடுகளுக்கு யாத்திரை சென்ற பாபாபூடன் என்பவர் காபி விதைகளை இந்தியா கொண்டு வந்தார்.அவர் முதலில் காபியை பயிரிட்ட இடம் கர்நாடகாவின் சந்திரகிரி மலை.
பிறகு பிரிட்டிஷ்காரர்களால் காபி இந்திய மக்களின் வாழ்க்கையில் மட்டுமின்றி மண்ணிலும் கலந்து விட்டது. அமெரிக்கானோ, கப்பச்சினோ, எஸ்பிரஸோ, லட்டெச் ,சினோ, மோக்கா, லங்கோ என காபியில் உலகப் புகழ்பெற்ற ரகங்கள் இருந்தாலும், அதை உன்னதத் தன்மையோடு அருந்த கும்பகோணம்தான் வரவேண்டும்.
பொதுவாக குடந்தைக்காரர்கள் உணவு விஷயத்தில் ரசனைவாதிகள். பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, கிணற்று நீரில் குளிர்குளியலிட்டு, இறைவனைத் தொழுதபின் அவர்களுக்குச் சுடச்சுட
டிகிரி காபி வேண்டும். அதைக் குடித்தால்தான் உடல் இயந்திரம்அடுத்தவேலைக்குத் தயாராகும். அதென்ன டிகிரி காபி?டிகிரி என்பது பாலின் தரத்தைக் குறிக்கும் அளவீடு. கறந்த சூடு ஆறாத, தண்ணீர் கலக்காத பசும் பால். இதை லேக்டோ மீட்டர் போட்டு டிகிரி உறுதிப்படுத்தியே வாங்குவார்கள்.
அதில் போட்டால் தான், அது டிகிரி காபி. கும்பகோணத்துக்கே உரிய பித்தளை காபி பில்டரை நன்கு சூடேற்றி, அதில் சிக்கரி கலக்காத காபித்தூளையும் சர்க்கரையையும் போட்டு, கொதிக்கும் வெந்நீரை ஊற்றி மூடிவிட வேண்டும். ஆடை சூழாத பால் பாதி, பில்டரில் ஊறிய காபி டிகாஷன் பாதி. ஓங்கி ஒரு ஆற்று... பொங்கிய நுரையும், பறக்கும் ஆவியும் நாவில் படுகிற நொடியில் உடம்பு நரம்புகள் கிளர்ந்து எழும்.
குடந்தையில் வீதிக்கு வீதி டிகிரி காபி கடைகள் இருந்தாலும், மடத்துத்தெருவில் உள்ள இன்பம் காபிக்கடை, முருகன் கபே, காந்தி பூங்கா அருகேயுள்ள வெங்கட் ரமணா ஹோட்டல், கும்பேஸ்வரன் சந்நதி தெருவில் மங்களாம்பிகா ஆகிய இடங்களில் ரியலான டிகிரி காபியை ருசிக்கலாம்.


தெரிந்து கொள்ளுங்கள் .....!!!
01) சாப்பாட்டு பொட்டலம் கட்டப் போகிறீர்களா? சாப்பாட்டைப் பொட்டலமாக கட்டும்போது வாழை இலையை பின்புறமாகத் திருப்பி தணலில் லேசாகக் காட்டியபின்னர் கட்டினால் இலை கிழியாமல் இருக்கும்.
02)முருங் கைக் கீரை சுண்டல் செய்வதற்கு முதல் நாளே முருங்கைக் கீரை இலைகளை ஆய்ந்து வைக்கவேண்டாம், கீரையை ஒரு துணியில் சுற்றிவைத்தால் மறுநாள் இலைகள் தனியாக உதிர்ந்துவிடும். காம்புகளை மட்டும் எடுத்துவிட்டு சுண்டல் செய்து விடலாம்.
03.)வெங்காயத் தின் மீது லேசாக எண்ணெய் தடவி சற்று நேரம் வெயிலில் காயவைத்துப் பின் முறத்தில் போட்டுப் புடைத்தால் எளிதாக மேல் தோல் அகன்றுவிடும்.
04.) பீன்ஸ், பட்டாணி, முட்டை கோஸ் போன்ற காய்கறிகள் நன்றாக குழைய வேகவைக்க வேண்டுமா? முதலில் உப்புப் போடாமல் வேகவைத்து, வெந்தபிறகு உப்பு சேர்க்கவேண்டும்.
05) பன்னீர் மசாலா செய்யும்போது பன்னீரை வறுத்த உடன் உப்புத் தண்ணீரில் சிறிது நேரம் போட வேண்டும். பன்னீர் பஞ்சு போல மிருதுவாக இருக்கும்.
06)சப்பாத்திக்காக கோதுமை பிசையும்போது வெண்ணெய் சேர்த்துப் பிசைந்து கொஞ்ச நேரம் ஊறவைத்து பிறகு சப்பாத்தி செய்தால் மென்மையாக பூப்போல இருக்கும்.
07)சுவர்களில் ஆணி அடித்திருப்போம். அது தேவையில்லை எனில் அதை எடுத்து விட்டு சுவரின் வண்ணத்திற்கு ஏற்ப, வண்ணக் கலவையை பற்பசையில் கலந்து ஓட்டை போட்ட இடத்தில் அடைத்துவிட்டால் ஓட்டை தெரியாமல் மறைந்துவிடும்.
08)துணியில் உள்ள வெற்றிலைக் கறையை போக்க எலுமிச்சம் பழத்தின் தோல் அல்லது புளித்த மோரை வெற்றிலைக் கறையின் மீது தடவினால் கறை மாயமாகி விடும்.
09)தோசைக் கல்லில் எண்ணெய் பிசுபிசுப்பு போக்க தோசைக்கல் அல்லது வாணலி மிதமான சூட்டில் இருக்கும் போது, அவற்றின் மேற்பரப்பில் சிறிது மோர் விட்டு தேங்காய் நாரினால் அழுத்தித் தேய்த்துக் கழுவினால் எண்ணெய் பிசுபிசுப்பு சட்டெனப் போய்விடும்.
10)கறை இருந்த இடத்தில் ஒரு ஸ்பூன் யூகலிப்டஸ் எண்ணெய் விட்டு அரை மணி நேரம் கழித்து சோப்பு நீரில் துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.
11)சமைக்கும் போது ஒரு ஸ்பூன் சிட்ரிக் அமிலத்தை விட்டு, தண்ணீர் ஊற்றி குக்கரை உபயோகித்தால் கறுப்புக்கறை நீங்கி குக்கர் புதிது போல் ஆகி விடும்.
12)உரல், அம்மி, கிரைண்டர் போன்றவற்றை புதிதாக வாங்கியவுடன் தவிடு போட்டு அரைத்தால் அதில் உள்ள துளைகள் அடைபட்டு விடும். எனவே, தவிடுக்கு பதிலாக வெங்காயத்தைப் போட்டு அரைத்தால், சிறு சிறு மணல், கல் துகள் ஆகியவை வெங்காயத்துடன் ஒட்டிக் கொண்டு வந்துவிடும்.
13)போரிங் பவுடரையும், கோதுமை மாவையும் சம அளவு எடுத்து நீரில் கரைத்து கொதிக்க விடுங்கள். அந்தக் கலவை பசை போல் மாறியதும் இறக்கி, ஆறிய பின்னர் அந்தப் பசையை சிறு சிறு உருண்டைகளாக்கி வெளியிலும் காய விடுங்கள். பின்னர் அந்த உருண்டைகளை சமையலறை அலமாரி மற்றும் கரப்பான் தொல்லை உள்ள இடங்களில் போட்டு வைத்தால் கரப்பான் பூச்சிகள் ஓடிவிடும்.
14) 2 தே‌க்கர‌ண்டி த‌ண்‌ணீ‌ர், 1 தே‌க்கர‌ண்டி ‌வி‌னிக‌ர், 2 தே‌க்கர‌ண்டி சோ‌ப்பு‌க் கரைச‌ல் இதனை‌க் கல‌ந்து எறு‌ம்பு வர‌ககூடாத இட‌ங்க‌ளி‌ல் தெ‌ளி‌த்து ‌விடு‌ங்க‌ள்.
15) மூ‌ன்று நா‌ட்க‌ள் தொட‌ர்‌ந்து அ‌ந்த எலு‌மி‌ச்ச‌ம் தோ‌ல் கு‌க்க‌ரி‌ல் அடி‌யி‌ல் ஊ‌றிய ‌பிறகு அதனை எடு‌த்து தே‌ய்‌த்தா‌ல்கு‌க்கரை‌ப் ‌பிடி‌த்‌திரு‌ந்த கரை த‌னியாக வ‌ந்து ‌விடு‌ம்

























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக