ராதே கிருஷ்ணா 12-12-2015
சென்னை வெள்ளம் டிசம்பர் 2015
கவிஞர் மகுடேசுவரன்Follow
சென்னை வெள்ளம் டிசம்பர் 2015
கவிஞர் மகுடேசுவரன்Follow
அடையாறு ஆற்றின் படுகை, கடலை நோக்கி எவ்வாறு சரிந்து இறங்குகிறது என்பதை ஆராய்ந்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. கடல்மட்டத்தை நோக்கிய ஆற்றின் பயணம் எவ்வாறு அடி அடியாகஇறங்கி வருகிறது என்பதை கூகுள் எர்த் கூறுகின்ற கடல்மட்ட உயரத்தளவின்படி கணக்கிட்டுப் பார்க்கலாம். எவ்வளவோ வெள்ளம் சென்றாலும் காவிரி பள்ளிபாளையத்திற்குள் புகுந்ததில்லை, பவானியை மேவியதில்லை. இந்த ஆறு மட்டும் ஏன் இவ்வாறு நடந்துகொண்டது ?
ஆற்றின் தோற்றுவாயான செம்பரம்பாக்கம் ஏரி, கடல்மட்டத்திலிருந்து 62 அடி உயரத்தில் இருக்கிறது. சென்னையின் பெருவாரியான பகுதிகள் கடல்மட்டத்திலிருந்து சுமார் 25 முதல் 35 அடி வரையிலான உயரத்தில் இருக்கின்றன.
திருவல்லிக்கேணி 30 அடி உயரத்திலும் சென்ட்ரல் இருப்பூர்தி நிலையம் 18 அடி உயரத்திலும் புரசைவாக்கம் 23 அடி உயரத்திலும் இருக்கின்றன. இதில் வேளச்சேரியிலுள்ள ஏரிக்குத் தெற்குப் பகுதி கடல்மட்டத்திலிருந்து வெறும் 14 அடி உயரமே இருக்கிறது. கொட்டிவாக்கத்திலுள்ள கண்ணகி நகர் என்னும் பகுதி கடல்மட்டத்திலேயே ( 0 அடி) இருக்கிறது. ஒவ்வொரு பகுதியின் தாழ்வான நிலமட்டத்தைப் பற்றிய எளிய கணக்கீடு இருந்தாலே எங்கெங்கு வெள்ளம் தேங்கி நிற்கும் என்பதை யாரும் உணரலாம்.
62 அடி உயரமுள்ள செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 0 அடி உயரமுள்ள கடல்மட்டத்திற்கு அடையாற்றில் திறந்துவிடப்படுகின்ற தண்ணீர் ஆற்றுப் படுகையின் வழியே வடிந்து செல்லவேண்டும். அவ்வாறு செல்வதற்கு ஆற்றின் வழி சிறிதளவே ஆனாலும் தொடர்ச்சியாக, சரிவாக இருக்கவேண்டும் என்பதை நாம் அறிவோம். கடல்மட்டத்திலிருந்து ஆற்றுப் படுகையின் உயரத்தைக் காண்பதன்மூலம் அந்தச் சரிவைப் புரிந்துகொள்ள முடியும்.
செம்பரம்பாக்கத்திலிருந்து இறங்கி வரும் அடையாற்றுத் தண்ணீர் குரோம்பேட்டைக்கு மேற்கே சென்னை வெளிவட்டச் சாலையை (பைபாஸ்) ஒட்டிப் பாய்கையில் கடல் மட்டத்திலிருந்து 35 அடி என்னும் அளவுக்குத் தாழ்ந்து வந்துவிடுகிறது. அடுத்து மீனம்பாக்கம் விமான நிலைய ஓடுபாதையை ஒட்டிய அடையாற்றுப் படுகை கடல்மட்டத்திலிருந்து வெறும் 12 அடி என்ற தாழ்நிலையை அடைந்துவிடுகிறது.
அங்கிருந்து கடலைச் சேரும்வரை அடையாறு தொடர்ச்சியாகச் சரிந்து இறங்குவதில்லை. அடுத்தடுத்து வரும் அடையாற்றின் படுகைகள் 10 முதல் 20 அடிவரை உயர்வதும் பின்பு சரிவதுமாகவே இருக்கிறது. இதை கூகுள் எர்த் செயலியில் ஒவ்வொரு இடத்தையும் சுட்டி வைத்து அளந்து உணரலாம். திறந்துவிடப்படும் வெள்ளம் ஆற்றின் தங்குதடையின்றிப் பாயாமல் தேங்கி நிரம்பிய பின் வழிவது என்னும் முறைப்படிதான் நகர்கிறது.
விமான நிலையத்திலேயே 12 அடிக்குத் தாழ்ந்த அடையாற்றுப் படுகை, அங்கிருந்து வடக்கு நோக்கித் திரும்புகையில் 35 அடி உயரம் வரை தேங்கிய பின்பே வழிய நேர்கிறது. 35 அடிவரை முன்னுள்ள வழி உயரமாய் இருக்கப்போய் பக்கவாட்டில் வெள்ளம் கரையுடைத்து விமான நிலையத்தில் தேங்கியிருக்க வேண்டும்.
விமான நிலையத்தைவிட்டு வெளியேறிய் அடையாறு நந்தம்பாக்கத்தையொட்டிய இடத்தில் மீண்டும் 15 அடி அளவுக்குத் தாழ்கிறது. அதற்கடுத்து ஈக்காட்டுத்தாங்கலுக்கு வடக்கேயுள்ள அடையாற்றுப் படுகை 30 அடி என்னும் அளவுக்கு உயரமாக இருக்கிறது. நந்தம்பாக்கம் பகுதியிலிருந்து ஈக்காட்டுத் தாங்கலில் உள்ள பாலத்திற்கு வரும்வரை (NH 45) இந்தப் பத்தடிக்கு நீர் நின்று படுகை முழுக்கத் தேங்கவேண்டும்.
பாலம் தாண்டியவுடன் திருவிக இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டை ஒட்டி 12 அடி அளவுக்கு மீண்டும் தாழ்கிறது. அன்னை வேளாங்கண்ணி பள்ளி மற்றும் கல்லூரியை ஒட்டிய அடையாற்றுப்படுகை மீண்டும் 28 அடிக்கு உயர்ந்திருக்கிறது. 28அடி வரை தேங்கும்போது தண்ணீர் பக்கவாட்டில் உடைத்துவிட்டிருக்க வேண்டும்.
அங்கிருந்து அண்ணாசாலைப் பாலத்தை நெருங்கும் முன் படுகை மீண்டும் 12 அடிக்குத் தாழ்கிறது. சைதைப் பாலத்தைத் தாண்டியபின் ’டர்ன்பல்ஸ் சாலை’ என்ற பாலத்தை அடுத்து மீண்டும் 28 அடி உயரம். அதைத் தாண்டி திடீர்நகர் என்ற பகுதியை வந்தடையும் அடையாறு கடல்மட்டத்திலிருந்து 0 அடி என்ற நிறைவை அடைந்துவிடுகிறது. அங்கிருந்து கடல்வரை சென்று கலப்பது ‘முழுக்க முழுக்கத் தேங்கி அதன்பின் வழியும்’ வகையால்தான்.
அடையாற்றுவழி முழுக்கவே ‘தேங்கி தேங்கி பத்திருபது அடியுயர வெள்ளத்தேக்கமாகி பிறகு வழிந்து, மீண்டும் தேங்கி மீண்டும் சரிந்து’ என்பதாகவே இருக்கிறது. இத்தகைய ஆற்றுப் படுகையால் திடீரென்று ஏற்பட்ட மிகுவெள்ளம் வலுவில்லாத கரைப்பகுதியை மீறிப்பாய்ந்து ஊருக்குள் புகுந்துவிட்டது. ஆற்றுப்படுகையே ஏற்றத் தாழ்வாக இருக்கும்போது அதன் வழிநெடுக ஆக்கிரமிப்புகளும் அடைப்புகளுமாக இருந்தால் என்னாவது ? அதுதான் நடந்தது.
சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவுக்குச் சொந்தமான டி.எல்.எஃப். ஐ.டி. வளாகத்தில் என்ன நடக்கிறது???????.
46 அடி பேஸ்மென்ட்டு,2 வது மாடி தண்ணீர் புகுந்த இதில் மறைக்கப்படும் படு பயங்கர மர்மம் என்ன?!.
46 அடி பேஸ்மென்ட்டு,2 வது மாடி தண்ணீர் புகுந்த இதில் மறைக்கப்படும் படு பயங்கர மர்மம் என்ன?!.
சென்னையை புரட்டிப் போட்டிருக்கும் பெருவெள்ளம் கண்ணாடி மாளிகைகளாக காட்சியளித்துக் கொண்டிருந்த ஐ.டி. கம்பெனிகளையும் விட்டு வைக்கவில்லை. சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டருக்கும் போரூர் சிக்னலுக்கும் நடுவே அமைந்திருக்கிறது டி.எல்.எஃப். ஐ.டி. பார்க். புறநகரில் பெய்து முடித்த மழையின் பெரும்பகுதி, டி.எல்.எஃப்.பின் சரிபாதியை மூழ்கடித்துள்ளது. புஃட் கோர்ட், கேன்டீன், இணைய வழி நிறுவனங்கள்... குறிப்பாக நூற்றுக்கணக்கான கால் சென்டர்கள் என்று தரை தளத்தில் இயங்குகின்றன.
ஐநூறை தாண்டிய ஐ.டி.நிறுவனங்கள் மிச்சமிருக்கும் 7 மாடியிலும் கடந்த 25 நாட்களுக்கு முன்பு வரையில் பாதுகாப்பாகத்தான் இயங்கிக் கொண்டிருந்தன. மூன்று தரைத் தளங்களில் (பேஸ் மெண்ட்) சில துணை நிறுவனங்கள் இயங்கி வந்தன. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கில் கார்கள் வந்தும் போகும் ஆயில் வாசம் சூழ, அந்த இடமே பரபரவென இருந்த இடங்கள்.
இந்நிலையில் வெள்ள நீர் சூழ்ந்திருக்கும் இந்த வளாகத்துக்குள் என்ன சேதம் ஏற்பட்டிருக்கிறது என்று இதுவரை தெரியவில்லை. ஒரு நாளின் எந்த நேரமும் ஆயிரக்கணக்கானோர் பணிபுரியும் இந்த வளாகத்துக்குள் இப்போது எத்தனை பேர் இருக்கிறார்கள்... இருக்கிறார்களா என்றெல்லாம் பீதி கிளம்பி இருக்கிறது!.
பிரமாண்டத்தின் அடையாளமாக இருக்கும் இந்த ஐ.டி. மாளிகையின் கதவு, கடந்த திங்கட்கிழமை மாலை முதல் இழுத்துச் சாத்தப்பட்டிருக்கிறது. இன்றோடு (புதன் 9.12.2015) அந்த வளாகம் பூட்டப்பட்டு 10-வது நாள். டி.எல்.எஃப். ஐ.டி மாளிகை அமைந்திருக்கும் இடத்துக்கும் மெயின் ரோட்டுக்கும் இடையில் 500 மீட்டர் இடைவெளி. மெயின் ரோடுவரை வெள்ள நீர் ஓடியதாலும் தொடர்ந்து மழை பெய்ததாலும் அந்த ஐ.டி. மாளிகை பக்கம் யாரும் போகவில்லை. அந்த 500 மீட்டருக்கு அப்பால் செல்ல விரும்புவர்களை இருபதுக்கும் மேற்பட்ட செக்யூரிட்டிகள் முரட்டுத்தனமாக வெளியேற்றிக் கொண்டிருந்தார்கள். இது ஒரு இனம்புரியாத பீதியை அப்பகுதி மக்களிடம் உண்டாக்கியிருந்தது.
டிசம்பர் 8 மற்றும் 9 தேதிகளில் சென்னையில் மழை லேசாகத் தூறிக் கொண்டிருந்தபோது, வளாகத்திலிருந்து தண்ணீரை வெளியேற்றும் வேலையில் நூற்றுக்கணக்கில் லாரிகளும், நீரை உறிஞ்சித் தள்ளும் மோட்டார் வாகனங்களும் ஈடுபட்டிருக்கின்றன. இரண்டு நாட்களாக நீரை வெளியேற்றும் பணியில் இத்தனை கருவிகள், லாரிகள், மனிதர்கள் ஈடுபட்டிருந்தும் அங்குள்ள மூன்று பேஸ் மெண்ட்டுகளின் தலைப் பகுதி இன்னும் வெளியே தெரியவில்லை.
வட இந்திய இளைஞர்களை மெயினில் செக்யூரிட்டிக்குப் போட்டு விட்டு, தமிழும் இந்தியும் தெரிந்த ஆட்களை சூபர்வைசர்களாக போட்டு வைத்துள்ளனர். அவர்கள் டைரக்ஷனுக்கு ஏற்ப, வட இந்திய இளைஞர்கள் 'வேலை'பார்க்கிறார்கள்.
"உள்ளே போகணும்... யாரைப் பார்க்கணும் ?." என்று கேட் வாசலில் நாம் கேட்டதுமே, அந்த செக்யூரிட்டி இளைஞர்கள், "சுரேஷ்பாபு சார் மேலேதான் நீங்கோள் பேஸ்ணும்.. அது ஸார் போன் நெம்பேரெல்லாம் யார் மேலேயும் இல்லே. போ.. போ..." என்றபடி கேள்வி - பதில் அனைத்தையும் அவர்களே சொல்லி முடித்துக் கொண்டனர்.
கேட் வாசலில் நின்று படமெடுத்தபடி இருந்த நம்மை நோக்கி உள்ளே இருந்தபடியே அடிக்கடி எச்சரித்தனர். வெளியே வந்தும் மிரட்டினர். ஏன் இத்தனை கெடுபிடி..? மீடியாவை மிரட்டும் போக்கு ஏன்? உள்ளே இயங்கிக் கொண்டிருந்த ஒரு நபரிடம் மெதுவாகப் பேச்சு கொடுத்தேன்...
’பேஸ்மென்ட்டே 46 அடிக்கு மேலே இருக்கும் சார். அது முழுகிப்போயி அதுக்கு மேலே இருக்கிற முதலாவது மாடியும் மூழ்கிடுச்சி. இரண்டாவது மாடிக்கும் தண்ணீர் ஏறிடுச்சு... இனி நனைய இடமே இல்லை என்கிற அளவிற்கு மொத்தமாக மூழ்கிடுச்சுங்க. அதான் யாரையும் உள்ளே விட மாட்டேங்கறாங்க. ஒவ்வொரு ஃபேஸ்மென்ட்லயும் ஐநூறு கார்களுக்கு மேலே கெடக்கு. மூணு பேஸ் மெண்ட்டு... ஆயிரத்து ஐநூறு காரு... இதுக்கு மேலே நான் என்னத்தை சொல்றது ? இதுக்கு மேல என்கிட்ட எதுவும் கேட்காதீங்க!’’ என்று நழுவிக் கொண்டார்.
அந்த வளாக வாசலில் தவிப்போடு காத்திருந்த ஒருவர், ’’நம்ம வீட்டுக்குப் பக்கத்துல இருந்து வந்து இங்கே வேலை பார்த்த பசங்களைப் பத்தி ஒரு விபரமும் தெரியலைங்க. மூணு பேரும் தூத்துக்குடி பசங்க. அதான் நேர்லயே வந்தோம். இங்கே எந்த விபரமும் சொல்ல மாட்டேங்குறாங்க. அடிச்சு துரத்துறதுலயே குறியா இருக்காங்க. உள்ளே இந்த மாதிரி எத்தனை பேர் சிக்கியிருக்காங்கனு இதுவரை யாருக்கும் தெரியவில்லை.. சிக்கிக்கிட்டாங்களா, இல்லே... பாதுகாப்பா வெளியேறிட்டாங்களானு கூட சொல்ல மாட்டேங்கறாங்க..!’’ என்றார் வேதனையோடு.
உறுதியான எந்த தகவலையும் சொல்ல ஆளில்லை. வெள்ள சேதங்கள் நிகழ்ந்த பின் தேவையற்ற பல அடுக்கு பாதுகாப்பு, ஏகப்பட்ட தடுப்பு வேலிகள். டி.எல்.எஃப். ஐடி வளாகத்தில் என்னதான் நடக்கிறது? வெள்ளச் சேதங்கள் உயிர் சேதங்களையும் உள்ளடக்கியிருக்கிறதா? பிரமாண்ட கண்ணாடி மாளிகையின் கதவுகள் உண்மையை வெளிப்படுத்த எப்போது திறக்கும்? அல்லது வழக்கம்போல அரசாங்கமே உண்மையை மூடி மறைக்க துணை நிற்கிறதா?
டெயில் பீஸ்:
போரூரையும் கிண்டி பட் ரோடையும் இணைக்கும் நந்தம்பாக்கம் டிரேட் சென்டர் பின்புறம்தான் அடையாற்றின் வேகம் அதிகமாகி வெள்ளமாக கரையோரங்களில் மோதியிருக்கிறது. அந்தக் கரையோரத்தையே வீடாக்கி வசித்த குடிமக்களில் பலர் பற்றிய விபரமே இதுவரை தெரியவில்லை என்கிற தகவலும் கிலியடிக்கிறது!.
போரூரையும் கிண்டி பட் ரோடையும் இணைக்கும் நந்தம்பாக்கம் டிரேட் சென்டர் பின்புறம்தான் அடையாற்றின் வேகம் அதிகமாகி வெள்ளமாக கரையோரங்களில் மோதியிருக்கிறது. அந்தக் கரையோரத்தையே வீடாக்கி வசித்த குடிமக்களில் பலர் பற்றிய விபரமே இதுவரை தெரியவில்லை என்கிற தகவலும் கிலியடிக்கிறது!.
மியாட் மருத்துவ மனையில் 227 மர்ம உடல்கள் பற்றிய பேச்சுகளுக்கும் இதற்கும் என்ன தொடர்பு என கேள்வி பல எழுகிறது.
மத்திய அரசு விசாரணை அவசர தேவை...தேவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக