வியாழன், 17 டிசம்பர், 2015

திருப்பாவை / திருவெம்பாவை

ராதே கிருஷ்ணா 17-12-2015


திருப்பாவை / திருவெம்பாவை






திருப்பாவை

மார்கழி மாதம் என்றாலே, இந்துக்களுக்கு உடனே நினைவில் வருவது திருப்பாவைதான். ஆண்டாள் அருளியுள்ள முப்பது பாடல்கள் கொண்ட இந்த தொகுப்பினை பாடுவதும், ஒவ்வொரு பாடலுக்கு ஒவ்வொரு நாள் என்று பாடலின் விரிவான விளக்கங்களை சிந்தித்து மார்கழி மாதத்தில் களிப்பதும், பெருமாள் கோயிலில் தவறாமல் நடைபெறும் நிகழ்சிகள். மேலும் இந்த முப்பது பாடல்களையும் படிக்கும் கன்னிப் பெண்களுக்கு திருமணம் விரைவில் நடைபெறும் என்ற நம்பிக்கையும் நிலவுகின்றது.

கண்ணபிரானையே தனது கணவனாக வரித்து அவனுடன் சேரும் நாள் எப்போதோ என்ற ஏக்கத்தில் திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி பாடல்களை பாடிய ஆண்டாள், ஒருநாள் திருவரங்கம் கோயிலில் பெருமாளுடன் கலந்துவிடுகின்றார். தன்னை ஆய்ப்பாடி பெண்களில் ஒருத்தியாக நினைத்துக்கொண்டு, மற்ற ஆயர்பாடி பெண்களுடன் சேர்ந்து பாவை நோன்பு நோற்பதாக கற்பனை செய்யும் பாடல்கள் கொண்ட இனிய பாசுரம்.

இப்பகுதியில் வெளியாகும் பாடல்களை ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கியவர்கள் - மயிலாடுதுறை சொ. சிவக்குமார், என். வெங்கடேஸ்வரன், எஸ். வெங்கட்ராமன்.






Story List





திருப்பாவை - பாடல் 30 
இந்த பாடலில் திருப்பாவை பாசுரத்தை படிப்பதால் விளையும் பலன் கூறப்பட்டுள்ளது.

திருப்பாவை - பாடல் 29 
முந்தைய பல பாடல்களில் பறை வேண்டும் என்று கேட்ட ஆயர் குலத்துச் சிறுமிகள் இந்த பாடலில் தங்களது


திருப்பாவை - பாடல் 28 
முந்தைய இரண்டு பாடல்கள் மூலம் தாங்கள் வேண்டுவது என்னென்ன என்று பெரிய பட்டியல் இட்ட, ஆயர் சிறுமிகளை நோக்கி கண்ணபிரான் கீழ்க்கண்டவாறு


திருப்பாவை - பாடல் 27 
நோன்பு நோற்பதற்கு தேவையான பொருட்களை பட்டியலிட்ட சிறுமிகளிடம் கண்ணபிரான், இவை போதுமா இன்னும் வேண்டுமா என்று கேட்டான் போலும்.

திருப்பாவை - பாடல் 26 

பறை தந்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் செல்வோம் என்று கூறிய ஆயர் குலத்துச் சிறுமிகளை நோக்கி,

திருப்பாவை - பாடல் 25 
கண்ணபிரானின் திருவடிகளின் சிறப்பினை மேற்கண்ட பாடல் மூலம் உணர்த்திய ஆயர் சிறுமிகளை நோக்கி கண்ணபிரான், மார்கழி மாத விடியற்காலை குளிரினில்

திருப்பாவை - பாடல் 24 
நாராயணனே கண்ணபிரானாக அவதரித்தான் என்பதை உணர்ந்த ஆயர் சிறுமிகள், நாராயணனின் திருவடிகளையும் அவனது குணங்களையும் போற்றிப் பாடுகின்றனர்.

திருப்பாவை - பாடல் 23 
கண்ணபிரான் துயிலெழுந்து வெளியே வருவதை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கும்

திருப்பாவை - பாடல் 22 
மாளிகையின் உள்ளே புகுந்த ஆயர் சிறுமிகள், துயிலெழுந்த கண்ணபிரானின் திருப்பார்வை

திருப்பாவை - பாடல் 21 
சென்ற இரண்டு பாடல்களில் துயில் எழுப்பப்பட்ட நப்பின்னை பிராட்டி துயில் கலைந்து எழுந்து,

திருப்பாவை - பாடல் 20 
துயில் கலைந்து எழுந்திராத நப்பின்னை பிராட்டி மற்றும் கண்ணன் இருவரும் உடனே எழுந்திருக்க வேண்டும்

திருப்பாவை - பாடல் 19 

நப்பின்னை பிராட்டியுடன் கண்ணன் இருப்பதை அறிந்துகொண்ட ஆயர் சிறுமிகள், அவர்கள் இருவரும் உறங்கிக்கொண்டி.....

திருப்பாவை - பாடல் 18 

கண்ணபிரானை, பலதேவர் முன்னிட்டு எழுப்பலாம் என்று முந்தைய பாடலில் தீர்மானித்த ஆயர் குலத்து சிறுமிகள்,

திருப்பாவை - பாடல் 17 

வாயில் காப்பானது அனுமதி பெற்று உள்ளே நுழைந்த சிறுமிகள், உறங்கிக்கொண்டு இருக்கும், கண்ணனின் பெற்றோர்க.....

திருப்பாவை - பாடல் 16 

நோன்பு நோற்பதில் விருப்பமுள்ள சிறுமிகள் அனைவரும் ஒன்று கூடி, மற்றவர்களையும் அழைத்துக்கொண்டு,

திருப்பாவை - பாடல் 15 

உள்ளே படுக்கையில் படுத்துப் புரளும் பெண்ணுக்கும், வெளியே இருக்கும் பெண்களுக்கும் இடையே நடக்கும் உரைய.....



Story List

திருப்பாவை - பாடல் 14 

வரும் நாட்களில் பாவை நோன்பு அனுசரிப்பது பற்றி சிறுமிகள் ஒன்று கூடி, முந்தைய நாளில் பேசியபோது அனைவர்க.....

திருப்பாவை - பாடல் 13 

இந்த பாடலில் குறிப்பிடப்படும் சிறுமி அழகான கண்களை உடையவள் போலும். தனது கண்களின் அழகில் மயங்கி கண்ணன்.....

திருப்பாவை - பாடல் 12 

கண்ணனின் காலத்தில் ஆய்ப்பாடியில் வாழ்ந்த அனைவரும் இடையர் குலத்தைச் சார்ந்தவரே.

திருப்பாவை - பாடல் 11 

நந்தகோபரைப் போன்று செல்வச் செழிப்பு உடைய குடும்பத்தில் பிறந்த சிறுமியை எழுப்ப முயற்சி செய்தபோது பாடி.....

திருப்பாவை - பாடல் 10 

இந்த பாடல் கண்ணன் வசித்து வந்த திருமாளிகைக்கு அடுத்த மாளிகையில் வாழும் சிறுமியை,




திருப்பாவை - பாடல் 10 

இந்த பாடல் கண்ணன் வசித்து வந்த திருமாளிகைக்கு அடுத்த மாளிகையில் வாழும் சிறுமியை,

திருப்பாவை - பாடல் 9 

கண்ணன் வந்த பின்னர் தான் எழுந்து செல்லலாம் என்று படுக்கையில் புரளும் சிறுமியை எழுப்பச் செல்லும் சிறு.....

திருப்பாவை - பாடல் 8 

தங்களது தலைவியை எழுப்பிய ஆய்ப்பாடி பெண்கள், அடுத்து கண்ணனால் மிகவும் கொண்டாடப்படும் சிறுமியின் இல்லத.....

திருப்பாவை - பாடல் 7 

பகவானுடன் இணைந்து இருப்பதைவிடவும் பாகவதர்களுடன் இணைந்து இருந்து ஒருவருக்கு ஒருவர், பகவானைப் பற்றிய ச.....

திருப்பாவை - பாடல் 6 

நாம் எதற்காக நோன்பு நோற்க வேண்டும், எவ்வாறு நோன்பு நோற்க வேண்டும் என்றும் முதல் இரண்டு பாடல்களில் வி.....








திருப்பாவை - பாடல் 5 

ஆய்ப்பாடியில் வாழும் சிறுமிகள் தங்களுடன் விளையாடும் கண்ணனை, மாய விளையாட்டுகள் விளையாடும் சிறுவன் என்.....

திருப்பாவை - பாடல் 4 

பரந்த கடல் போன்று பெருமையினை உடைய மழைக்கு நாயகனாக விளங்குபவனே, நீ ஒன்றினையும் ஒளிக்காமல் மழை பொழிய வ.....

திருப்பாவை - பாடல் 3 

நாராயணனே பரம்பொருள் என்றும் அவனால் தான் நாம் வேண்டுவன அனைத்தையும் அளிக்க முடியும் என்று முதல் பாடலில.....

திருப்பாவை - பாடல் 2 

பாவை நோன்பு இருக்கவிருக்கும் சிறுமியர்களை வரவேற்ற பின்னர், நோன்பு நோற்கும் சமயத்தில் எவை எவை கடைப்பி.....

திருப்பாவை - பாடல் 1 

மார்கழி மாதம் என்றாலே, இந்துக்களுக்கு உடனே நினைவில் வருவது திருப்பாவைதான். ஆண்டாள் அருளியுள்ள முப்பத.....







திருப்பாவை



மார்கழி மாதம் என்றாலே, இந்துக்களுக்கு உடனே நினைவில் வருவது திருப்பாவைதான். ஆண்டாள் அருளியுள்ள முப்பது பாடல்கள் கொண்ட இந்த தொகுப்பினை பாடுவதும், ஒவ்வொரு பாடலுக்கு ஒவ்வொரு நாள் என்று பாடலின் விரிவான விளக்கங்களை சிந்தித்து மார்கழி மாதத்தில் களிப்பதும், பெருமாள் கோயிலில் தவறாமல் நடைபெறும் நிகழ்சிகள். மேலும் இந்த முப்பது பாடல்களையும் படிக்கும் கன்னிப் பெண்களுக்கு திருமணம் விரைவில் நடைபெறும் என்ற நம்பிக்கையும் நிலவுகின்றது.

கண்ணபிரானையே தனது கணவனாக வரித்து அவனுடன் சேரும் நாள் எப்போதோ என்ற ஏக்கத்தில் திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி பாடல்களை பாடிய ஆண்டாள், ஒருநாள் திருவரங்கம் கோயிலில் பெருமாளுடன் கலந்துவிடுகின்றார். தன்னை ஆய்ப்பாடி பெண்களில் ஒருத்தியாக நினைத்துக்கொண்டு, மற்ற ஆயர்பாடி பெண்களுடன் சேர்ந்து பாவை நோன்பு நோற்பதாக கற்பனை செய்யும் பாடல்கள் கொண்ட இனிய பாசுரம்.

இப்பகுதியில் வெளியாகும் பாடல்களை ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கியவர்கள் - மயிலாடுதுறை சொ. சிவக்குமார், என். வெங்கடேஸ்வரன், எஸ். வெங்கட்ராமன்.



திருப்பாவை - பாடல் 1

First Published : 17 December 2015 12:00 AM IST









































ஸ்ரீ மணியப்பன் பப்ளிஷர்ஸ், சென்னை.

   மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
   நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
   சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
   கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
   ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
   கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
   நாராயணனே நமக்கே பறை தருவான்
   பாரோர் புகழ்ப் படிந்தேல் ஓர் எம்பாவாய்
விளக்கம்
கன்னிப் பெண்கள் தங்களுக்கு கண் நிறைந்த கணவன் வாய்க்க வேண்டும் என்று பாவை நோன்பு இருக்கும் பழக்கம் சங்க காலத்திலும் இருந்ததாக பல சங்கப் பாடல்கள் உணர்த்துகின்றன. அவ்வாறான பாவை நோன்பு இருப்பதற்கான காலம் (மார்கழி மாதம்), நோன்பு நோற்கும் தகுதி படைத்தவர்கள் (திருமணம் ஆகாத சிறுமியர்கள்), நோன்பினால் கிடைக்கும் பலன் (வேண்டுவன அனைத்தும் கிட்டுதல்) ஆகியவை இந்த பாசுரத்தின் முதல் பாடலில் உணர்த்தப் படுகின்றன.
பொழிப்புரை
மார்கழி மாதத்தில், சந்திரன் நிறைந்து காணப்படும் பௌர்ணமி நாளில் நீராட வந்திருக்கும், அழகிய ஆபரணங்களை அணிந்திருக்கும் சிறுமிகளே, சிறப்பு மிகுந்த ஆய்ப்பாடியில் வசிக்கும் செல்வச் சிறுமிகளே, கையினில் கொண்டுள்ள கூரான வேல் கொண்டு பகைவர்களைத் தாக்கி வெற்றி கொள்ளும் நந்தகோபனின் குமாரனும், அழகானை கண்களை உடைய யசோதையின் மகனும், இளம் சிங்கம் போன்று காணப்படுபவனும், கரிய நிறம் படைத்த மேனியை உடையவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியன் மற்றும் சந்திரன் போன்று ஒளிவீசம் முகத்தினை உடையவனும் ஆகிய, நாராயணின் அம்சமாகிய கண்ணன், நாம் வேண்டுவது அனைத்தும் அளிக்க வல்லவன். உலகத்தார் புகழும் வண்ணம், நீராடிய பின்னர் பாவை நோன்பு நோற்க இருப்பவர்களே வாருங்கள், வாருங்கள்.









































பாடியவர் : பவ்யா ஹரி (9543370047)



திருப்பாவை - பாடல் 2

First Published : 18 December 2015 12:00 AM IST
  
   வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்
   செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
   பையத் துயின்ற பரமன் அடி பாடி
   நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலை நீராடி
   மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
   செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
   ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
   உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்
பாடியவர் : பவ்யா ஹரி


விளக்கம்
பாவை நோன்பு இருக்கவிருக்கும் சிறுமியர்களை வரவேற்ற பின்னர், நோன்பு நோற்கும் சமயத்தில் எவை எவை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பன விவரித்து சொல்லப்படும் பாடல். பையத் துயின்ற=மெதுவாக உறங்குகின்ற: பாற்கடலில் உறங்குவது போல் தோன்றினாலும், உலகில் நடப்பவை அனைத்தும் அறிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவன் திருமால் என்பதை உணர்த்தும் பொருட்டு அறிதுயில் என்று கூறுவது வழக்கம். இங்கே அதனை சற்றே மாற்றி, பையத் துயின்ற பரமன் என்று குறிப்பிட்டு, பெருமாள் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழவில்லை என்று இங்கே ஆண்டாள் உணர்த்துகின்றார்.
பொழிப்புரை
இந்த உலகத்தில் வாழ்வதால் பாவை நோன்பு நோற்கப்பெரும் வாய்ப்பினை உடைய நாம் அனைவரும், பாவை நோன்பிற்காக செய்ய வேண்டிய செயல்களை கூறுகின்றேன், நீங்கள் அனைவரும் கேட்பீர்களாக; பாற்கடலில் யோக நித்திரையில் ஆழ்ந்துள்ள பரமனின் திருநாமத்தை எப்போதும் பாட வேண்டும், நெய் பால் போன்றவற்றை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். தினமும் விடியலில் நீராடவேண்டும்; கண்ணுக்கு மை இட்டுக் கொள்வது, கூந்தலுக்கு மலர் சூடிக்கொள்வது போன்று நம்மை அழகு படுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது; நமது முன்னோர்கள் தவிர்த்த தீய காரியங்களை நாமும் தவிர்க்க வேண்டும்; பிறர்க்கு தீங்கு விளைவிக்கும் வகையில் வீணாக அடுத்தவர் மீது கோள் சொல்லக் கூடாது; குருகுலத்தில் பயிலும் மாணவர்களுக்கு தானமும், துறவிகளுக்கு பிச்சையும், அவர்கள் போதும் என்று சொல்லும் அளவுக்கு இட வேண்டும்; அவ்வாறு செய்த பின்னரும், நாம் புகழத்தக்க செயல்கள் ஏதும் செய்யவில்லை என்றும், இன்னும் செய்ய வேண்டிய நற்செயல்கள் உள்ளன என்ற எண்ணத்துடன் இருக்க வேண்டும்; மேலே குறிப்பிட்டவாறு செய்ய வேண்டிய செயல்களைச் செய்தும், தவிர்க்க வேண்டிய செயல்களைத் தவிர்த்தும், நாம் உய்யும் வழியினை நினைத்தவாறே, பாவை நோன்பில் நாம் அனைவரும் ஈடுபடுவோமாக.


திருப்பாவை - பாடல் 3

First Published : 19 December 2015 12:00 AM IST
  
   ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
   நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
   தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
   ஓங்கு பெரும் செந்நெல் ஊடு கயல் உகளப்

   பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
   தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
   வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
   நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்

பாடியவர் : பவ்யா ஹரி

விளக்கம்
நாராயணனே பரம்பொருள் என்றும் அவனால் தான் நாம் வேண்டுவன அனைத்தையும் அளிக்க முடியும் என்று முதல் பாடலில் குறிப்பிட்ட ஆண்டாள், அவன் பாற்கடலில் உறைகின்றான் என்று நமக்கு அந்த பரம்பொருளை இரண்டாவது பாடலில் அடையாளம் காட்டுகின்றார். அவன் தனது யோக நித்திரையிலிருந்து எழுந்து, எவ்வாறு உயிர்களுக்கு உதவி செய்கின்றான் என்பதை, இந்த பாடலில், மூன்றாவது பாடலில் குறிப்பிடுகின்றார். அவன் திரிவிக்ரமனாக உருவெடுத்து, மூன்று உலகங்களையும் மகாபலியின் பிடியிலிருந்து விடுவித்தான் என்ற செய்தி இந்த பாடலில் கூறப்படுகின்றது. வாமனனாக வந்து மூன்றடி மண் கேட்ட, திருமால் நெடியவனாக வளர்ந்து உலகினை அளந்தது, தேவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தினால் தானே தவிர, தனது நலத்திற்காக எதுவும் செய்ய வில்லை என்பதால், உத்தமன் என்று இங்கே ஆண்டாள் கூறுவது உணரத் தக்கது.

பொழிப்புரை
மகாபலியிடம் மூன்றடி மண்ணினை தானமாகப் பெற்ற பின்னர், நெடிய உருவம் எடுத்துத் தனது ஈரடியால் மூன்று உலகங்களையும் அளந்த உத்தமனாகிய திருமாலின் பெயர்களைப் பாடியவாறு நாங்கள், பாவை நோன்பினைத் தொடங்குகின்றோம் என்று பாவைத் தெய்வத்திற்கு உணர்த்தி நீராடுகின்றோம். இவ்வாறு நாங்கள் பரமனின் திருநாமங்களைச் சொல்வதால், நாட்டில் அதிகமான மழையால் தீங்கு ஏதும் விளையாதவாறு, மாதம் மூன்று முறை, தேவையான அளவுக்கு மழை பொழிகின்றது. இவ்வாறு பெய்யும் மழையினால், உயர்ந்து வளரும் செந்நெல் பயிர்களின் நடுவில் கயல் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. மேலும் தேன் நிறைந்து காணப்படும் குவளை மலர்களில் தேனை உண்ட மயக்கத்தில் வண்டுகள் களிப்புடன் தூங்குகின்றன. இந்த சூழ்நிலையில் வளர்ந்த வளமான பசுக்கள், தங்கள் உடலினில் பாலினைத் தேக்கிக் கொள்ளாமல், பசுக்களின் பால் காம்புகளைப் பற்றி இழுக்கும் மாந்தர்கள் வைத்துள்ள குடங்கள் நிறையும் அளவுக்கு, வள்ளல் தன்மையுடன் பாலைப் பொழிகின்றன. இவ்வாறு எங்களை விட்டு செல்வம் என்றும் நீங்காத அளவு உள்ள நிலை, நாங்கள் பரமனின் திருநாமங்களைச் சொல்வதால் ஏற்படுகின்றது.










திருப்பாவை - பாடல் 4

First Published : 20 December 2015 12:00 AM IST
  































ஸ்ரீ மணியப்பன் பப்ளிஷர்ஸ், சென்னை.

   ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்
   ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி
   ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து
   பாழியம் தோளுடை பற்பநாபன் கையில்
   ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
   தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்
   வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
   மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
பாடியவர் : பவ்யா ஹரி
விளக்கம்
திருமாலின் அடியார்களாக விளங்குவோர்க்கு, திருமாலின் கட்டளைப்படி நடக்கும் அனைத்து தெய்வங்களும் ஏவல் செய்யும் என்று உணர்த்துவதாக இந்த பாடல் அமைந்து உள்ளது. தாங்கள் மார்கழி நீராட ஏதுவாக, மழை பொழிந்து நீர்நிலைகள் நிரம்பி இருக்க வேண்டும் என்று விரும்பும் இந்த சிறுமிகள், மழை பொழியும் தன்மையில் திருமாலையும் அவனுடன் தொடர்பு கொண்ட பொருட்களையும் காண்கின்றனர். அவர்கள் நோக்கும் இடமெல்லாம் நீக்கமற நந்தலாலன் நிறைந்து இருப்பதையும் நாம் இந்த பாடல் மூலம் புரிந்து கொள்ளலாம்.

பொழிப்புரை
பரந்த கடல் போன்று பெருமையினை உடைய மழைக்கு நாயகனாக விளங்குபவனே, நீ ஒன்றினையும் ஒளிக்காமல் மழை பொழிய வேண்டும்; நீ கடலினில் புகுந்து அங்குள்ள நீரினை முகந்து கொண்டு, மிகுந்த ஆரவாரத்துடன் ஆகாயத்தில், ஊழி முதல்வனாக விளங்கும் பரமனின் திருமேனியின் நிறம் போன்று கறுத்து மேலே எழ வேண்டும்; அவ்வாறு எழுந்த பின்னர், வலிமையான தோள்களை உடையவனும், தனது நாபியில் கமலத்தினை வைத்துள்ளவனும் ஆகிய திருமாலின் கையில் காணப்படும் சக்கரம் போன்று மின்னியும், அவன் பயன்படுத்தும் சங்கம் போன்று முழங்கியும், அவனது வில்லாகிய சாரங்கத்திலிருந்து வெளிவரும் அம்புக் கூட்டங்கள் போன்று இடைவிடாமலும், நீ பொழிய வேண்டும். இந்த உலகத்தில் உள்ளவர்கள், தங்களது நிலையிலிருந்து என்றும் தாழாமல் மேன்மேலும் ஓங்கி வளமுடன் வாழும் வகையில் நீ மழை பொழிய வேண்டும். இவ்வாறு நீ செயல்பட்டால், நாங்களும் மிகவும் மகிழ்ச்சியுடன் மார்கழி நீராட்டத்தினை மேற்கொள்வோம்.












திருப்பாவை - பாடல் 5

First Published : 21 December 2015 12:00 AM IST
  






























ஸ்ரீ மணியப்பன் பப்ளிஷர்ஸ், சென்னை.

   மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
   தூய பெருநீர் யமுனைத் துறைவனை
   ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
   தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
   தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
   வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து
   போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
   தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்
பாடியவர் பவ்யா ஹரி
விளக்கம்
ஆய்ப்பாடியில் வாழும் சிறுமிகள் தங்களுடன் விளையாடும் கண்ணனை, மாய விளையாட்டுகள் விளையாடும் சிறுவன் என்று எண்ணி விடாமல், அவன் திருமாலின் அவதாரம் என்பதை புரிந்து கொண்டு, மனம் மெய் மொழிகளால் அவனை வணங்கி துதிக்க வேண்டும் என்பது இந்த பாடலில் உணர்த்தப்படுகின்றது. அவ்வாறு வழிபட்டால், நம்மைப் பற்றியுள்ள தீவினைகளும், பற்றவிருக்கும் தீவினைகளும், தீயினில் இடப்பட்ட தூசுகள் போன்று அழிந்துவிடும் என்பதும் உணர்த்தப்படுகின்றது. நம்மிடையே வளர்ந்தாலும், அவன் மதுரையில் பிறந்து மாயமாக நம்மிடையே வந்து கலந்தவன் என்பதை உணர்த்தும் வண்ணம், வடமதுரை மைந்தன் என்று கண்ணனை ஆண்டாள் இங்கே குறிப்பிடுகின்றார்.
பொழிப்புரை
பலவிதமான மாயங்கள் செய்து நம்முடன் விளையாடும் கண்ணன், நம்மில் ஒருவன் அல்லன்; அவன் வடமதுரையில் பிறந்து, எவரும் அறியாத வண்ணம் மாயமாக ஆய்ப்பாடி வந்து தங்கியவன்; தூய்மையான, வளமையான யமுனை நதியின் கரையில் வளர்பவன்; அவன் ஆயர் குலத்தில் தோன்றிய அழகிய விளக்காவான்; அவன் பெற்ற தாயின் புகழ் உலகெங்கும் ஓங்கி விளங்கச் செய்தவன்; வல்லமை படைத்தவனாக விளங்கியபோதும், யசோதைத் தாய் அவனை தாம்புக் கயிற்றினால் கட்டியபோது, மிகவும் எளியவனாக கட்டுண்டவன்; இத்தகைய சிறப்புகள் பெற்ற கண்ணனை, நாம் அனைவரும் அகத் தூய்மையும் புறத் தூய்மையும் கொண்டவர்களாய், மலர்களை அவன் மீது தூவியும், அவனது புகழினை நமது வாயினால் பாடியும், அவனது பெருமை மிகுந்த குணங்களை நமது மனதினில் சிந்தித்தும் அவனை வழிபடுவோம். அவ்வாறு அவனை வழிபட்டால், நாம் இந்நாள் வரை சேமித்து வைத்துள்ள பாவங்களும், இனி வரப்போகும் நாட்களில் அறியாமையால் நாம் செய்யவிருக்கும் பாவங்களும், நெருப்பினில் இடப்பட்ட தூசு போன்று காணாமல் போய்விடும். இந்த செய்தியை நாம் ஒருவருக்கு ஒருவர் சொல்லியவாறு நீராடுவோம்.










திருப்பாவை - பாடல் 6

First Published : 22 December 2015 12:00 AM IST
  






























   புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
   வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
   பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
   கள்ளச் சகடம் கலக்கழிய கால் ஓச்சி
   வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை
   உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
   மெள்ள எழுந்து அரி என்று பேரரவம்
   உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்
பாடியவர் பவ்யா ஹரி

விளக்கம்
நாம் எதற்காக நோன்பு நோற்க வேண்டும், எவ்வாறு நோன்பு நோற்க வேண்டும் என்றும் முதல் இரண்டு பாடல்களில் விளக்கிய ஆண்டாள், அடுத்த இரண்டு பாடல்களில் நீர்வளம் மிகுந்து விளங்கவேண்டும் என்று வேண்டிய பின்னர், கண்ணனைப் போற்றி வழிபட்டால் நாம் அடையும் பயன்களை குறிப்பிட்டார், இந்த பாடல் தொடங்கி அடுத்த பத்து பாடல்களில், தோழியர்களை திரட்டிக் கொண்டு, ஆயர்பாடி சிறுமியர்கள் நீராடச் செல்லும் காட்சிகளை சித்தரிக்கின்றார். பொழுது விடிந்ததை உணராமல் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் தோழியை எழுப்பும் முயற்சி இங்கே உணர்த்தப்படுகின்றது.

பொழிப்புரை
பொழுது விடிந்ததால், பறவைகள் தங்களது கூட்டினை விட்டு, உணவினைத் தேடி வெளியே ஆரவாரத்துடன் புறப்பட்டுச் செல்கின்றன. பறவைகளின் அரசனான கருடனின் தலைவனின் திருக்கோயிலில், சங்குகள் ஒலிக்கும் ஒலி உனது காதினை எட்டவில்லையா, பெண்ணே நீ எழுந்திருப்பாயாக: தாயாக நடித்து நஞ்சு கலந்த பாலினைக் கொடுத்து கொல்ல முயற்சி செய்த பேயான பூதனையின் உயிரினை, பால் உறிஞ்சி குடிப்பது போன்று உறிஞ்சி முடித்தவன் கண்ணன்; யசோதைத் தாய் பாதுகாப்பாக ஒரு வண்டியின் கீழே வைத்தபோது அந்த வண்டியினில் புகுந்து தன்னைக் கொல்ல முயன்ற சகடாசுரனின், உடல் நொறுங்குமாறு அந்த வண்டியினைத் தனது கால்களால் உதைத்தவன் கண்ணன்; இத்தகைய செயல்களைச் செய்த கண்ணன், பாற்கடலில் பாம்பணையில் துயில் கொள்ளும் திருமால் என்பதை உணர்ந்த முனிவர்களும் யோகிகளும் அரி, அரி என்று அவனைத் துதிக்கும் குரல்களைக் கேட்கும் எங்களது மனம் மிகவும் குளிர்ந்து காணப்படுகின்றது. நீயும் உனது துயில் கலைந்து, எழுந்து அந்த துதிகளைக் கேட்டு உள்ளம் குளிர்வாயாக.






திருப்பாவை - பாடல் 7

First Published : 23 December 2015 12:00 AM IST
  





























ஸ்ரீ மணியப்பன் பப்ளிஷர்ஸ், சென்னை.


   கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
   பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
   காசும் பிறப்பும் கலகலப்ப கை பேர்ந்து
   வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
   ஓசைப் படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ
   நாயகப் பெண் பிள்ளாய் நாராயண மூர்த்தி
   கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
   தேசம் உடையாய் திறவேலோர் எம்பாவாய்

பாடியவர் பவ்யா ஹரி

விளக்கம்
பகவானுடன் இணைந்து இருப்பதைவிடவும் பாகவதர்களுடன் இணைந்து இருந்து ஒருவருக்கு ஒருவர், பகவானைப் பற்றிய செய்திகளை பரிமாறிக்கொள்வது, சிறந்த வைணவர்களுக்கு மிகவும் பிடித்த செயலாக கருதப்படுகின்றது. அந்த செய்தியினை உணர்த்தும் பாடலாக இந்த பாடல் கருதப் படுகின்றது. கேசவனின் புகழினை நாங்கள் பாடுவதை கேட்ட பின்னரும், எங்களுடன் வந்து சேர்ந்து, அதை அனுபவிக்காமல் படுக்கையில் கிடத்தல், தலைவிக்கு புகழ் சேர்க்கும் செய்கையா என்ற கேள்வி இங்கே எழுப்பப்படுகின்றது. இரவில் விழித்திருந்து பகலில் தூங்கும் பழக்கம் கொண்டவை பேய்கள் என்பதால். பொழுது விடிந்த பின்னரும் உறங்கும் பெண்ணினை, நீ என்ன பேய்ப் பெண்ணா, இன்னும் உறங்குகின்றாயே என்று பரிகாசம் செய்வது போன்று பேய்ப்பெண்ணே என்று நயமாக அழைப்பதை நாம் உணரலாம்.
பொழிப்புரை
மதி கெட்டு, பேய் போன்று பொழுது விடிந்த பின்னரும் தூங்கும் பெண்ணே, காலைப் பொழுதில் இரை தேடுவதற்காக வெளியே புறப்பட்டு செல்லவிருக்கும் வலியன் குருவிகள், தாங்கள் பிரிய வேண்டிய நிர்பந்தத்தை வெளிப்படுத்தி ஒன்றுக்கொன்று கீசுகீசு என்று தங்களுக்குள்ளே பேசுவது உனது காதுகளுக்கு எட்டவில்லையா, நறுமணம் வீசும் கூந்தலை உடைய ஆயர் குலத்துப் பெண்மணிகள், தாங்கள் கழுத்தினில் அணிந்துள்ள அச்சுத் தாலியும் ஆமைமருப்புத் தாலியும் ஒன்றுக்கொன்று மோதி கலகல என்ற சத்தத்தை எழுப்பும் வகையில் தங்களது கைகளை அசைத்து, மத்தினைக் கொண்டு தயிர் கடையும் பேரொலியும் உனது காதுகளுக்கு எட்டவில்லை போலும். தலைவியாக இருந்து எங்களுக்கு வழிகாட்ட வேண்டிய பெண்ணே, நாராயணனாகிய கண்ணன், குதிரை வடிவில் வந்த கேசி என்ற அசுரைனைக் கொன்ற வெற்றியை புகழ்ந்து நாங்கள் பாடுவதைக் கேட்ட பின்னரும் நீ படுக்கையில் படுத்தவாறே இருக்கின்றாயே, கண்ணனின் மீது மிகுந்த அன்பு கொண்டவளாக இருக்கும் நீ, வெளியே வந்து கண்ணனின் வெற்றியைக் கொண்டாடாமல் படுக்கையில் கிடக்கலாமா, நமது விரோதி கேசி ஒழிந்துவிட்டான் என்ற நிம்மதியில் பயம் ஏதுமின்றி உறங்குகின்றாயா, ஒளி மிகுந்த முகத்தினை உடையவளே வந்து வாயில் கதவினை திறப்பாயாக.










திருப்பாவை - பாடல் 8

First Published : 24 December 2015 12:00 AM IST
  




























ஸ்ரீ மணியப்பன் பப்ளிஷர்ஸ், சென்னை.


   கீழ்வானம் வெள்ளென்று எருமைச் சிறுவீடு

   மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
   போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
   கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய
   பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
   மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
   தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
   ஆவா என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்

பாடியவர் பவ்யா ஹரி

விளக்கம்
தங்களது தலைவியை எழுப்பிய ஆய்ப்பாடி பெண்கள், அடுத்து கண்ணனால் மிகவும் கொண்டாடப்படும் சிறுமியின் இல்லத்திற்கு செல்கின்றார்கள். நோன்பு நோற்கவிருக்கும் இடத்தில் பல சிறுமிகள் ஏற்கனவே கூடியிருக்கும் செய்தியை உணர்த்தி, நாம் அனைவரும் விரைந்து செல்லாம் என்று, அந்த சிறுமிக்கு உணர்த்தும் பாடல்.
பொழிப்புரை
கண்ணனுக்கு மிகவும் பிரியமானவளாக இருப்பதால் மிகுந்த மன மகிழ்ச்சியுடன் இருக்கும் பெண்ணே. கிழக்கே வானம் வெளுத்து விட்டது, ஆய்ப்பாடியில் உள்ள எருமைகள் சிறிது நேரம் மேய்ந்துவிட்டு வரலாம் என்று புல்வெளியில் பரந்துள்ளன. நோன்பு செய்யும் இடத்தில் பல சிறுமியர்கள் கூடியுள்ளார்கள்; மற்ற பெண்களும் அங்கே சென்று அங்குள்ள சிறுமிகளுடன் சேர்வதற்கு மிகவும் ஆவலாக உள்ளார்கள்; ஆனால் நாங்கள் தான் அவர்களை அங்கே செல்லவிடாமல் தடுத்து, உன்னையும் அவர்களுடன் கூட்டிச் செல்லலாம் என்று உனது வீட்டு வாசலில் வந்து நிற்கின்றோம். எனவே பெண்ணே, நீ உறக்கத்திலிருந்து எழுவாயாக, குதிரை முகம் கொண்ட அசுரனின் வாயினைப் பிளந்தவனும், கம்சனின் அரசவை மல்லர்களான சாணூரன் மற்றும் முஷ்டிகன் ஆகியோரை அழித்து வெற்றி கொண்டவனும், தேவர்களுக்குத் தலைவனாக விளங்குபவனும் ஆகிய கண்ணபிரானை நாம் அனைவரும் சென்று சேவித்தால், கண்ணபிரான் தனது வாயினைத் திறந்து வாருங்கள் என்று நம் அனைவரையும் அழைத்து, நமது தகுதிகளை ஆராய்ந்து, நாம் வேண்டுவன எல்லாம் கொடுத்து அருள்புரிவான். எனவே நீ விரைந்து எழுந்து வந்து எங்கள் குழாத்துடன் இணைந்து கொள்வாயாக..





திருப்பாவை - பாடல் 8

First Published : 24 December 2015 12:00 AM IST
  




























ஸ்ரீ மணியப்பன் பப்ளிஷர்ஸ், சென்னை.


   கீழ்வானம் வெள்ளென்று எருமைச் சிறுவீடு

   மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
   போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
   கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய
   பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
   மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
   தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
   ஆவா என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்

பாடியவர் பவ்யா ஹரி

விளக்கம்
தங்களது தலைவியை எழுப்பிய ஆய்ப்பாடி பெண்கள், அடுத்து கண்ணனால் மிகவும் கொண்டாடப்படும் சிறுமியின் இல்லத்திற்கு செல்கின்றார்கள். நோன்பு நோற்கவிருக்கும் இடத்தில் பல சிறுமிகள் ஏற்கனவே கூடியிருக்கும் செய்தியை உணர்த்தி, நாம் அனைவரும் விரைந்து செல்லாம் என்று, அந்த சிறுமிக்கு உணர்த்தும் பாடல்.
பொழிப்புரை
கண்ணனுக்கு மிகவும் பிரியமானவளாக இருப்பதால் மிகுந்த மன மகிழ்ச்சியுடன் இருக்கும் பெண்ணே. கிழக்கே வானம் வெளுத்து விட்டது, ஆய்ப்பாடியில் உள்ள எருமைகள் சிறிது நேரம் மேய்ந்துவிட்டு வரலாம் என்று புல்வெளியில் பரந்துள்ளன. நோன்பு செய்யும் இடத்தில் பல சிறுமியர்கள் கூடியுள்ளார்கள்; மற்ற பெண்களும் அங்கே சென்று அங்குள்ள சிறுமிகளுடன் சேர்வதற்கு மிகவும் ஆவலாக உள்ளார்கள்; ஆனால் நாங்கள் தான் அவர்களை அங்கே செல்லவிடாமல் தடுத்து, உன்னையும் அவர்களுடன் கூட்டிச் செல்லலாம் என்று உனது வீட்டு வாசலில் வந்து நிற்கின்றோம். எனவே பெண்ணே, நீ உறக்கத்திலிருந்து எழுவாயாக, குதிரை முகம் கொண்ட அசுரனின் வாயினைப் பிளந்தவனும், கம்சனின் அரசவை மல்லர்களான சாணூரன் மற்றும் முஷ்டிகன் ஆகியோரை அழித்து வெற்றி கொண்டவனும், தேவர்களுக்குத் தலைவனாக விளங்குபவனும் ஆகிய கண்ணபிரானை நாம் அனைவரும் சென்று சேவித்தால், கண்ணபிரான் தனது வாயினைத் திறந்து வாருங்கள் என்று நம் அனைவரையும் அழைத்து, நமது தகுதிகளை ஆராய்ந்து, நாம் வேண்டுவன எல்லாம் கொடுத்து அருள்புரிவான். எனவே நீ விரைந்து எழுந்து வந்து எங்கள் குழாத்துடன் இணைந்து கொள்வாயாக..





திருப்பாவை - பாடல் 10

First Published : 26 December 2015 12:00 AM IST
  




























ஸ்ரீ மணியப்பன் பப்ளிஷர்ஸ், சென்னை.


   நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
   மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
   நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்
   போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டொரு நாள்
   கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணனும்
   தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ
   ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே
   தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்


பாடியவர் பவ்யா ஹரி

விளக்கம்
இந்த பாடல் கண்ணன் வசித்து வந்த திருமாளிகைக்கு அடுத்த மாளிகையில் வாழும் சிறுமியை, நீராடலுக்கு அழைத்துச் செல்ல வந்த சிறுமியர்கள் பாடும் பாட்டாக கருதப்படுகின்றது. சென்ற பிறவியில் செய்த நல்வினைகளின் பயனாக, கண்ணனுக்கு அடுத்த வீட்டில் இருக்கும் பாக்கியத்தை பெற்றவளாக கருதப்படும் சிறுமியை அழைத்துச் செல்ல முனையும் பாடல்.
பொழிப்புரை
சென்ற பிறவியில் செய்த நல்வினைகளின் பயனாக இப்போது கண்ணனுக்கு மிகவும் அருகிலிருக்கும் பாக்கியத்தைப் பெற்ற பெண்ணே, நாங்கள் உனது இல்லத்து வாசலில் வந்து காத்திருக்கையில், வீட்டுக் கதவினைத் திறந்து எங்களை வரவேற்காமல் இருப்பதை நாங்கள் பொருட்படுத்தவில்லை; ஆனால் மறுமொழிகூட சொல்லாமல் இருக்கின்றாயே, ஏன் இந்த நிலை; நறுமணம் வீசும் துளசி மாலையை அணிந்துள்ள திருமுடியை உடைய நாராயணன், நாம் அவனைப் போற்றிப் பாடும் பாடல்களை கருத்தில் கொண்டு, நமக்கு அனைத்து விதமான செல்வங்களையும் அளிக்கின்றான். அந்த நாராயணன், இராமபிரானாக திருவவதாரம் எடுத்த போது, அவனிடம் தோற்று, கூற்றுவனின் வாயில் விழுந்த கும்பகர்ணன், உறக்கப் போட்டியில் உன்னிடம் தோற்று, தான் வரமாகப் பெற்ற தூக்கத்தினை உனக்கு தந்துவிட்டான் போலும்; உறக்கத்தில் ஆழ்ந்து இருக்கும் பெண்ணே, எங்களுக்கு கிடைத்த கரிய மாணிக்கமே, நீ தூக்கத்திலிருந்து விடுபட்டு, படுக்கையில் புரண்டு படுத்ததால் கலைந்துபோன ஆடைகளை சரிசெய்து கொண்டு எங்களுடன் வந்து இணைவாயாக.





திருப்பாவை - பாடல் 11

First Published : 27 December 2015 12:00 AM IST




























ஸ்ரீ மணியப்பன் பப்ளிஷர்ஸ், சென்னை.



    கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
   செற்றார் திறல் அழிய சென்றுச் செருச் செய்யும்
   குற்றம் ஒன்று இல்லாத கோவலர் தம் பொற்கொடியே
   புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்
   சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து நின்
   முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாட
   சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
   எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்

பாடியவர் பவ்யா ஹரி

விளக்கம்
நந்தகோபரைப் போன்று செல்வச் செழிப்பு உடைய குடும்பத்தில் பிறந்த சிறுமியை எழுப்ப முயற்சி செய்தபோது பாடிய பாடலாக கருதப் படுகின்றது. அதனால்தான் மற்ற சிறுமியர்கள் கண்ணனைச் சென்று காண்பதற்கு மிகவும் ஆவலாக இருக்கையில், இவள் மட்டும் தான் ஏன் கண்ணனைக் காணச் செல்ல வேண்டும். வேண்டுமானால் கண்ணன் தான் இருக்கும் இடத்திற்கு வரட்டுமே என்ற எண்ணத்தில் மூழ்கி இருப்பவள் போலும்.
பொழிப்புரை
கன்றுகளை உடைய பசுக் கூட்டங்களை உடைய இடையர் குலத்தில் வந்தவரும், பகைவர்களின் வலிமை அழியும்படி அவர்களை போரில் வெல்லும் திறமை கொண்டவரும், குற்றங்கள் ஏதும் இல்லாதவரும் ஆகிய தலைவனின் மகளே, பொற்கொடி போன்று அழகிய தோற்றம் உடையவளே. புற்றில் வாழும் பாம்பின் புடைத்து நிற்கும் படத்தினைப் போன்று அழகான மார்பகத்தை உடையவளே, காட்டில் திரியும் அழகிய மயிலின் சாயலை உடையவளே, செல்வம் மிகுந்த குடியில் பிறந்த பெண்ணே உனது உறவினராகிய தோழிகள் அனைவரும் வந்து உந்தன் வீட்டு முற்றத்தினில் நின்றவாறு கருமேகம் போன்ற நிறத்தினை உடைய கண்ணனின் திருநாமங்களைச் சொல்லியவாறு பாடல்கள் பாடுகின்றனர். ஆனால் நீயோ சிறிதும் அசையாமலும் பேசாமலும் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்து கிடக்கின்றாய். இவ்வாறு உறக்கத்தில் இருப்பதன் மூலம் நீ எங்களுக்கு என்ன உணர்த்துகின்றாய், எங்களுக்கு ஏதும் புரியவில்லை.





திருப்பாவை - பாடல் 12

First Published : 28 December 2015 12:00 AM IST


























ஸ்ரீ மணியப்பன் பப்ளிஷர்ஸ், சென்னை.
 


   கனைத்து இளங்கற்று எருமை கன்றுக்கு இரங்கி
   நினைத்து முலை வழியே நின்று பால் சோர
   நினைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
   பனித் தலை வீழ நின் வாசற்கடை பற்றி
   சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
   மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
   இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
   அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்


பாடியவர் பவ்யா ஹரி

விளக்கம்
கண்ணனின் காலத்தில் ஆய்ப்பாடியில் வாழ்ந்த அனைவரும் இடையர் குலத்தைச் சார்ந்தவரே. எனவே அவர்களின் தொழில் மாடு மேய்ப்பதும், பால் கறப்பதுமாக இருந்து வந்தது. ஆனால் அந்த ஆய்ப்பாடியில் வாழ்ந்து வந்த ஒருவன் மட்டும், தனது குலத் தொழிலை அனுசரிக்காமல், முழு நேரமும் கண்ணனுக்கு சேவைகள் செய்வதில் ஈடுபட்டு இருந்தான் போலும். அவனது வீட்டில் இருந்த எருமை மாடுகளின் தன்மை குறிப்பிடப்பட்டு, அவனது தங்கையை நோக்கி பாடும் பாடலாக அமைந்துள்ளது.
பொழிப்புரை
இளங்கன்றுகளை உடைய எருமை மாடுகள், கனைத்தவாறு தங்களது கன்றுகளுக்கு பால் ஊட்டும் நினைப்பினில், எவரும் கறக்காமலே, தாமே பால் காம்பின் மூலம் பால் சொரிகின்றன. அவ்வாறு இடைவிடாது சொரியப்படும் பால் வீட்டினை நனைத்து வீடு முழுவதும் சேறாக மாற்றுகின்றது. அத்தகைய வளமான செல்வமாகிய எருமை மாடுகளை உடைய செல்வனது தங்கையே, உனது வீட்டு வாசலில் உனக்காக காத்திருக்கும் எங்களது தலையில் பனி விழுந்து எங்களை நனைக்கின்றது. நாங்கள் அனைவரும் சேர்ந்து, தென் இலங்கைக்கு அரசனாக விளங்கிய இராவணன் மீது கோபம் கொண்டு அவனை வென்றவனும், நமது மனங்களுக்கு இனியனவாகவும் திகழும் இராமபிரானின் புகழினைப் பாடுகின்றோம். ஆனால் நீயோ வாய் திறவாமல் இருக்கின்றாய், இந்த ஊரினில் உள்ள அனைவரும் எழுந்து விட்டார்கள். நாங்கள் உனது வீட்டின் வாசலில் திரண்டு நிற்பதை இந்த சேரியில் உள்ள அனைவரும் அறிந்து கொண்டார்கள். ஆனால் நீயோ இன்னும் உறக்கம் கலையாமல் இருகின்றாய். இப்போதாவது உறக்கம் கலைந்து எழுந்து எங்களுடன் இணைந்து கொள்வாயாக.





திருப்பாவை - பாடல் 13

First Published : 29 December 2015 12:00 AM IST
  
























ஸ்ரீ மணியப்பன் பப்ளிஷர்ஸ், சென்னை.


   புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்

   கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்ப்
   பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்
   வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
   புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
   குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
   பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
   கள்ளம் தவிர்த்து கலந்தேலோர் எம்பாவாய்

பாடியவர் பவ்யா ஹரி

விளக்கம்
இந்த பாடலில் குறிப்பிடப்படும் சிறுமி அழகான கண்களை உடையவள் போலும். தனது கண்களின் அழகில் மயங்கி கண்ணன் தன்னைத் தேடி வருவான் என்ற நம்பிக்கையில் திளைக்கும் இந்தச் சிறுமி, படுக்கையில் கிடந்தவாறே, வெளியில் இருந்த சிறுமிகளை நோக்கி, நீங்கள் அனைவரும் கண்ணனைப் புகழ்ந்து பாடுகின்றீர்கள், இராமபிரானைப் புகழ்ந்து பாடவில்லையா என்று வினவினாள் போலும். அதற்கு விடை கூறும் முகமாக, வெளியே இருந்தவர்கள் நாங்கள் கண்ணனைப் புகழ்ந்தும் பாடினோம். இராம பிரானைப் புகழ்ந்தும் பாடினோம் என்று அளித்த பதிலுடன் இந்த பாடல் தொடங்குகின்றது.

பொழிப்புரை
பறவையின் உருவம் எடுத்து வந்த பகாசுரனின் வாயினைக் கிழித்து அவனை அழித்தவனும், பொல்லாத அரக்கனாகிய இராவணனின் பத்து தலைகளையும் தனது அம்பினால் அறுத்து எறிந்தவனும் ஆகிய நாராயணனின் கீர்த்திகளை பாடியவாறு, சிறுமிகள் பலரும் பாவை நோன்பு நோற்கப்படும் இடத்தில் குழுமி உள்ளார்கள். வானில் விடியலில் தோன்றும் சுக்கிரன் தோன்றி உச்சிக்கு வந்துவிட்டது, அதன் முன்னர் இருந்த வியாழம் மறைந்துவிட்டது; பறவைகள் தாங்கள் இரை தேடிச் சென்ற இடங்களில் செய்யும் ஆரவாரங்கள் எங்களுக்கு கேட்கின்றன. குவளை மலர் போன்று அழகிய கண்களை உடைய பெண்ணே, கண்ணனோடு சேர்ந்து இருக்கும் பாக்கியத்தைப் பெறுவதற்காக நோன்பு நோற்கப்படும் இந்த நல்ல நாளில், உடலும் உள்ளமும் குளிர்ந்து சுனையில் முழுகி நீராடாமல் படுக்கையில் கிடந்தது புரளுதல் தகுமா. படுக்கையில் படுத்துக்கொண்டு, தனியாக கண்ணனைப் பற்றிய சிந்தனைகளில் ஆழ்ந்து கிடக்கும் உனது கள்ளத் தனத்தை விட்டொழித்து, எங்களுடன் வந்து கலந்து, பாவை நோன்பு நோற்பதற்கு வருவாயாக. நாம் அனைவரும் சேர்ந்து கண்ணனின் புகழினைப் பாடலாம்.




திருப்பாவை - பாடல் 14

First Published : 30 December 2015 12:00 AM IST
  























ஸ்ரீ மணியப்பன் பப்ளிஷர்ஸ், சென்னை.



   உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்

   செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
   செங்கல் பொடிக் கூறை வெண்பல் தவத்தவர்
   தங்கள் திருக்கோயில் சங்கு இடுவான் போதந்தார்
   எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
   நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
   சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
   பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்

பாடியவர் பவ்யா ஹரி

விளக்கம்
வரும் நாட்களில் பாவை நோன்பு அனுசரிப்பது பற்றி சிறுமிகள் ஒன்று கூடி, முந்தைய நாளில் பேசியபோது அனைவர்க்கும் முன்னமே எழுந்து, தானே ஒவ்வொருவரையும் எழுப்புவேன் என்று கூறிய சிறுமி அவ்வாறு, செய்யாததால், அவளைத் தேடிக்கொண்டு அவளது வீட்டிற்கு சென்ற மற்ற சிறுமிகள் பாடும் பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது. முந்தைய நாட்களில் வாய் கிழிய பேசிய சிறுமி, தான் சொல்லியவாறு முன்னம் எழுந்திருந்து அடுத்தவரை எழுப்பாத நிலை சுட்டிக் காட்டப்பட்டு பரிகாசம் செய்வதை நாம் உணரலாம்.

பொழிப்புரை
உங்களது வீட்டின் புழக்கடை தோட்டத்து குளத்தில், செங்கழுநீர் மலர்கள் பூத்துவிட்டன, அதில் இருந்த அல்லி மலர்கள் கூம்பியாறு காணப்படுகின்றன. இந்த காட்சியை நீ இன்னும் காணவில்லை போலும்; இந்த காட்சியைக் கண்டு பொழுது புலர்ந்ததை நீ அறிந்து கொள்வாயாக. சுட்ட செங்கற்களின் பொடியின் நிறத்தில் உள்ள காவி உடையினையும் வெண்மை நிறைந்த பற்களையும் கொண்டுள்ள தவசிகள், தங்களது பொறுப்பில் உள்ள திருக்கோயில்களில் சங்குகள் முழங்க வேண்டும் என்ற கருத்துடன், திருக்கோயில்களைத் திறப்பதற்காக சென்றுள்ளார்கள். ஆனால், எங்களை முன்னம் வந்து எழுப்புவேன் என்று நேற்று பேசிய நீ, வெறும் வாய்ச் சொல் வீரர் போன்று, இன்னும் வெட்கமில்லாமல் உறங்குகின்றாயே, நீண்ட நாவினை உடைய பெண்ணே, உடனே எழுவாயாக, எங்களுடன் சேர்ந்து, சங்கினையும் சக்கரத்தினையும் ஏந்தும் நீண்ட கைகளை உடையவனும், தாமரை மலர்கள் போன்ற கண்களை உடையவனும் ஆகிய கண்ணனைப் பாடுவாயாக.





திருப்பாவை - பாடல் 15

First Published : 31 December 2015 12:00 AM IST
  






















ஸ்ரீ மணியப்பன் பப்ளிஷர்ஸ், சென்னை.


  எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ

   சில்லென்று அழையேன்மின் நங்கைமீர் போதர்கின்றேன்
   வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
   வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக
   ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
   எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்
   வல்லானைக் கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
   வல்லானை மாயனைப் பாடலேர் எம்பாவாய் 
பாடியவர் பவ்யா ஹரி
விளக்கம்
உள்ளே படுக்கையில் படுத்துப் புரளும் பெண்ணுக்கும், வெளியே இருக்கும் பெண்களுக்கும் இடையே நடக்கும் உரையாடல் போன்று இந்த பாடல் அமைந்துள்ளது. தன்னிடம் இல்லாத குற்றத்தை, தான் கொண்டுள்ள குற்றமாக வைணவ அடியார்கள் கூறினால், அதனை மறுக்காமல் ஏற்றுக்கொள்வது, சிறந்த வைணவனின் இலக்கணம் என்று கருதப்படுகின்றது. அந்த தன்மையை உணர்த்தும் பாடலாக இந்த பாடல் கருதப்படுகின்றது. வெளியே உள்ளவர்கள், உள்ளே இருக்கும் சிறுமியை நோக்கி, நீ பேச்சில் வல்லமை உடையவள் என்று நாங்கள் அறிவோம் என்று கூற, அதற்கு உள்ளே இருக்கும் சிறுமி, நீங்கள்தான் பேச்சில் என்னை விடவும் வல்லவர்கள், இருந்தாலும் நீங்கள் சொல்கின்றபடி நானே பேச்சில் வல்லவளாக இருந்து விடுகின்றேன் என்று பதில் கூறி, அடக்கமாக தன்னிடம் இல்லாத குற்றத்தையும் தனது குற்றமாக ஏற்றுக்கொள்ளுதல் இங்கே விளக்கப்படுகின்றது. இந்த பாடலுடன் சிறுமிகள் எழுப்பும் வகையில் அமைந்த பாடல்கள் முடிவடைகின்றன.

பொழிப்புரை
வெளியே இருக்கும் பெண்கள்: இளமைத் தோற்றத்திலும், இனிமையான பேச்சிலும் கிளி போன்றவளே, நாங்கள் அனைவரும் உனது வீட்டின் வாசலில் நிற்கின்றோம், நீ இன்னும் உறங்குகின்றாய் போலும்.
உள்ளே இருப்பவள்: கிளி என்று கிண்டலாக கூப்பாடிட்டு என்னை அழைக்காதீர்கள், நான் முன்னமே எழுந்துவிட்டேன், இப்போது வெளியே வந்துகொண்டிருகின்றேன்.
வெளியே இருப்பவர்கள்: பெண்ணே நீ பேசுவதில் மிகவும் வல்லமை பெற்றவள். இதனை நாங்கள் நெடுநாட்கள் முன்னரே அறிந்துகொண்டோம்.
உள்ளே இருப்பவள்: நீங்கள்தான் என்னை விடவும் பேச்சில் வல்லவர்கள். இருந்தாலும் நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். நான் இப்போது என்ன செய்யவேண்டும் நீங்கள் கூறுவீர்களாக.
வெளியே இருப்பவர்கள்: விரைந்து வந்து எங்களுடன் நீ சேர்ந்து கொள்வாயாக. சாமர்த்தியமான பேச்சுத் திறமையைத் தவிர்த்து, நீ வேறு என்னென்ன குணங்களை வைத்துள்ளாய்.
உள்ளே இருப்பவள்: நோன்பிற்கு வர வேண்டியவர்கள் அனைவரும் வந்து விட்டார்களோ.
வெளியே இருப்பவர்கள்: அனைவரும் வந்துவிட்டார்கள். வேண்டுமானால் நீ வெளியே வந்து எண்ணிக்கொள்ளலாம். .
உள்ளே இருப்பவள்; இப்போது நாம் அனைவரும் செய்யவேண்டியது என்ன.
வெளியே இருப்பவர்கள்: வலிமை மிகுந்த குவலாபீடம் என்ற யானையினைக் கொன்றவனும், பகைவர்களின் செருக்கினை அழிக்கும் திறமை படைத்தவனும், பல மாயச் செயல்கள் புரிபவனும் ஆகிய கண்ணனின் பெருமைகளை நான் அனைவரும் சேர்ந்து பாடுவோம்.




திருப்பாவை - பாடல் 16

First Published : 01 January 2016 12:00 AM IST
   





















ஸ்ரீ மணியப்பன் பப்ளிஷர்ஸ், சென்னை.



    நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய

    கோயில் காப்பானே கொடித் தோன்றும் தோரண
    வாயில் காப்பானே மணிக்கதவம் தாள் திறவாய்
    ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை
    மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
    தூயோமாய் வந்தோம் துயில் எழுப்பிப் பாடுவான்
    வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா நீ
    நேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்

பாடியவர் பவ்யா ஹரி
விளக்கம்
நோன்பு நோற்பதில் விருப்பமுள்ள சிறுமிகள் அனைவரும் ஒன்று கூடி, மற்றவர்களையும் அழைத்துக்கொண்டு, கண்ணபிரான் இருக்கும் நந்தகோபனின் திருமாளிகைக்கு வருகின்றார்கள். ஆங்குள்ள வாயில் காப்பானை நோக்கி, கதவுகளை திறக்குமாறு வேண்டும் பாடல்.

பொழிப்புரை
எங்கள் அனைவருக்கும் நாயகனாக உள்ள நந்தகோபனின் திருமாளிகை வாயில் காப்பானே, கொடிகள் கட்டப்பட்டு அழகாக விளங்கும் தோரண வாயிலை காப்பவனே, அழகிய மணிகள் கட்டப்பட்டு விளங்கும் கதவின் தாளினை நீக்கி, நாங்கள் அனைவரும் உள்ளே புகுவதற்கு வழி விடுவாயாக. அனைவரும் வியக்கத் தக்க வகையில் பல மாயச் செயல்கள் புரிபவனும், மணி போன்று ஒளிவீசும் திருமேனியை உடையவனும் ஆகிய கண்ணன், நேற்றே, ஆயர் சிறுமிகளாகிய எங்கள் அனைவருக்கும் பறைக் கருவி தருவதாக வாக்களித்தான். நாங்கள் அனைவரும் தூய்மையான உள்ளத்துடன், கண்ணனுக்கு திருப்பள்ளியெழுச்சி பாடுவதற்காக இங்கே வந்துள்ளோம். உன்னை வணங்கிக் கேட்கின்றோம், எங்களது கோரிக்கையினை மறுக்கும் வகையில் உனது வாயால் மாற்று மொழி ஏதும் பேசாமல், வாயில் கதவினை அன்புடன் பிணைத்திருக்கும் தாளினை நீக்கி, நாங்கள் உள்ளே செல்வதற்கு உதவுவாயாக.



திருப்பாவை - பாடல் 17

First Published : 02 January 2016 12:00 AM IST
   




















ஸ்ரீ மணியப்பன் பப்ளிஷர்ஸ், சென்னை.



   அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்

    எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
    கொம்பனர்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே
    எம் பெருமாட்டி யசோதா அறிவுறாய்
    அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
    உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
    செம்பொன் கழலடிச் செல்வா பலதேவா
    உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்

பாடியவர் பவ்யா ஹரி
விளக்கம்
வாயில் காப்பானது அனுமதி பெற்று உள்ளே நுழைந்த சிறுமிகள், உறங்கிக்கொண்டு இருக்கும், கண்ணனின் பெற்றோர்களாகிய நந்தகோபன் மற்றும் யசோதை ஆகிய இருவரையும் எழுப்பி அவர்களின் அனுமதியுடன் பலராமனை எழுப்பி, அவனை முன்னிட்டுக் கொண்டு கண்ணனை எழுப்பலாம் என்று தங்கள் திட்டத்தை வெளிப்படுத்தும் பாடல்.

பொழிப்புரை
எங்கள் அனைவருக்கும் ஆடை, தண்ணீர் மற்றும் சோறு முதலானவற்றை அறமாக அளித்து எங்களைக் காக்கும் எங்கள் தலைவர் நந்தகோபரே, நீர் எழுந்திருப்பீராக; வஞ்சிக் கொடி போன்ற ஆயர்குலப் பெண்களின் குலக்கொழுந்தாகவும், தான் பிறந்த ஆயர் குலத்தின் விளக்கு போன்று பிரகாசிப்பவரும், எங்களது தலைவியாகவும் விளங்கும் யசோதை அன்னையே, நீர் உமது துயில் கலைந்து, உணர்வு பெற்றவராகத் திகழ வேண்டுகின்றோம். வானினையும் ஊடறுத்து, அதனைத் தாண்டி ஓங்கி நின்றவனாய் மூன்று உலகங்களையும் தனது இரண்டு திருவடிகளால் அளந்தவனே, தேவர்களின் தலைவனே, நீர் உமது உறக்கத்திலிருந்து விழித்து எழ வேண்டும். செம்பொன்னால் செய்யப்பட்ட வீரக் கழல்களை அணிந்த செல்வன் பலதேவரே, நீரும் உமது தம்பியாகிய கண்ணபிரானும், இனியும் உறங்கலாகாது.




திருப்பாவை - பாடல் 18

First Published : 03 January 2016 12:00 AM IST
  



















ஸ்ரீ மணியப்பன் பப்ளிஷர்ஸ், சென்னை.


   உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்

   நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்
   கந்தம் கமழும் குழலீ கடை திறவாய்
   வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
   பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
   பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
   செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
   வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

பாடியவர் பவ்யா ஹரி

விளக்கம்
கண்ணபிரானை, பலதேவர் முன்னிட்டு எழுப்பலாம் என்று முந்தைய பாடலில் தீர்மானித்த ஆயர் குலத்து சிறுமிகள், பலதேவர் மூலம் கண்ணபிரான், தனது மனைவி நப்பின்னை பிராட்டியுடன் இருப்பதை அறிந்தனர் போலும். நப்பின்னை பிராட்டியின் மாளிகைக்கு சென்று நப்பின்னை பிராட்டியை எழுப்பிய பின்னர், அவள் மூலம் கண்ணபிரானை எழுப்பலாம் என்று முடிவு செய்கின்றனர். நப்பின்னை பிராட்டியை எழுப்பும் பாடல் இது.


பொழிப்புரை
மதத்தை பெருக்கும் யானையைப் போன்று வலிமை உடையவனும், போரினில் எதிரிகளுக்கு பயந்து புறமுதுகு காட்டி ஓடாமல் போர் செய்து அவர்களை வெல்லும் வல்லமை கொண்டவனும் ஆகிய நந்தகோபனின் மருமகளே, நப்பின்னை பிராட்டியே, நறுமணம் வீசும் கூந்தலை உடைய தேவியே, பொழுது விடிந்ததை உணர்த்தும் பொருட்டு கோழிகள் அனைத்து இடங்களிலும் கூவின; மாதவிக் கொடிகள் படர்ந்திருக்கும் பந்தல்கள் மீது அமர்ந்திருக்கும் பல வகையான குயில்கூட்டங்கள் கூவின. இவ்வாறு கோழிகள் கூவியதையும் குயில்கள் கூவியதையும் நீ உணரவில்லையா. பந்தாட்டத்தில் கண்ணனைத் தோற்கடித்து உனது விரல்களால் அந்த பந்தினைப் பற்றி இருப்பவளே, நீ கண்ணனை விளையாட்டாக பரிகாசம் செய்யும்போது நாங்களும் உன்னுடன் சேரவேண்டும் அல்லவா, எனவே நீ உனது செந்தாமரைக் கைகளில் அணிந்துள்ள வளையல்கள் ஒலிப்ப, அந்த கைகளை அசைத்து, உனது மாளிகைக் கதவுகளை திறப்பாயாக.




திருப்பாவை - பாடல் 19

First Published : 04 January 2016 12:00 AM IST

















ஸ்ரீ மணியப்பன் பப்ளிஷர்ஸ், சென்னை.

   குத்துவிளக்கு எரிய கோட்டுக்கால் கட்டில் மேல்
   மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
   கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்
   வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய் திறவாய்
   மைத்தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை
   எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்
   எத்தனை ஏலும் பிரிவாற்ற கில்லாயால்
   தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய் 
பாடியவர் பவ்யா ஹரி

விளக்கம்
நப்பின்னை பிராட்டியுடன் கண்ணன் இருப்பதை அறிந்துகொண்ட ஆயர் சிறுமிகள், அவர்கள் இருவரும் உறங்கிக்கொண்டிருக்கும் திருமாளிகைக்கு சென்று அவர்களை எழுப்பும் பாடல். கோட்டுக்கால் = யானைத் தந்தங்களைக் கொண்டு அழகு செய்யப்பட்ட கட்டில்.
பொழிப்புரை
குத்து விளக்கு பிரகாசத்துடன் எரிந்து ஒளி வீசும் அறையினில், யானைத் தந்தங்களால் அழகு செய்யப்பட்ட கட்டிலினில் மேல் உள்ள மெத்தென்று இருப்பதும் அழகு, குளிர்ச்சி, மென்மை, நறுமணம் மற்றும் வெண்மை குணங்களைக் கொண்டதால் பஞ்ச சயனம் என்று அழைக்கப்படும் படுக்கையின் மேல் படுத்துக்கிடக்கும் கண்ணபிரானே, கொத்து கொத்தாக பூத்துக்கிடக்கும் மலர்களை அணிந்துள்ள கூந்தலை உடைய நப்பின்னை பிராட்டியின் மார்பினைத், தனது அகன்ற மார்பினில் வைத்தவாறு உறங்கும் கண்ணபிரானே, மலர் போன்ற மார்பினை உடையவனே, நீ உனது திருவாய் மலர்ந்து அருள்வாயாக. மை தீட்டிய அகன்ற கண்களை உடைய நப்பின்னை பிராட்டியே, நீ உனது கணவன் துயிலெழுந்து படுக்கையினை விட்டு எழுந்து செல்ல எப்போதும் சம்மதிக்கமாட்டாய் போலும்; அவனது ஒரு நிமிடப் பிரிவினையும் உன்னால் தாங்க முடியாது போலும்; கண்ணன் உன்னை விட்டு பிரிந்திருப்பதை தடுக்கும் வண்ணம், எங்களது தலைவனாகிய கண்ணபிரானை நாங்கள் காண்பதற்கு கூட அனுமதிக்காமல் இருப்பது, தலைவியாகிய உனது இயல்புக்கும் உனது தன்மைக்கும் பொருத்தமன்று. எனவே நீ துயிலெழுந்து, பின்னர் கண்ணனைத் துயிலெழுப்பி, நாங்கள் அவனைக் கண்டு மகிழ வகை செய்வாயாக.



திருப்பாவை - பாடல் 20

First Published : 05 January 2016 12:00 AM IST















ஸ்ரீ மணியப்பன் பப்ளிஷர்ஸ், சென்னை.

   முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
   கப்பம் தவிர்க்கும் கலியே துயிலெழாய்
   செப்பம் உடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
   வெப்பம் கொடுக்கும் விமலா துயிலெழாய்
   செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
   நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்
   உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
   இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்

பாடியவர் பவ்யா ஹரி

விளக்கம்
துயில் கலைந்து எழுந்திராத நப்பின்னை பிராட்டி மற்றும் கண்ணன் இருவரும் உடனே எழுந்திருக்க வேண்டும் என்று அனைத்து ஆயர் சிறுமிகளும் இணைந்து பாடும் பாடல். கப்பம் = நடுக்கம்; கலி = வல்லமை உடையவன்; பாசுரத்தின் இரண்டாவது பாடலில், நோன்பு நோற்கும் சமயத்தில் தங்களது கூந்தலுக்கு மையிட்டும் மலரிட்டும் அழகு செய்துகொள்ளமாட்டோம் என்று உணர்த்திய ஆயர் குலத்துச் சிறுமிகள், நோன்பு முடிந்த பின்னர் தங்களது கூந்தலைத் திருத்திக்கொள்ளும் வகையில், கண்ணாடி கொடுத்து அருளுமாறு நப்பின்னை பிராட்டியிடம் கோருவதை நாம் இந்த பாட்டில் உணரலாம்.
பொழிப்புரை
முப்பத்து முக்கோடி தேவர்களை துன்பங்கள் ஏதேனும் அணுகும் முன்னமே, அவர்களது நடுக்கத்தைத் தவிர்த்து அவர்களது இடர்களைக் களையும் வல்லமை வாய்ந்த பெருமானே, நீ உனது உறக்கம் களைந்து எழுந்திருப்பாயாக. செம்மையான குணங்களை உடையவனே, வல்லமை வாயந்தவனே, உனது பகைவர்கள் உன்னிடம் உள்ள பயத்தினால் காய்ச்ச்சல் அடையச் செய்யும் வீரம் பொருந்தியவனே, குற்றங்கள் ஏதும் இல்லாதவனே, நீ எழுந்திராய். செப்புக் குடங்கள் போன்று அழகினை உடையதும் மென்மையும் உடையதும் ஆகிய முலைகளையும், சிவந்த உதடுகளையும், சிறிய இடையினையும் உடைய நப்பின்னை பிராட்டியே, எண்களின் செல்வமாக விளங்கும் நங்கையே, நீ துயில் எழுவாயாக: உனது மணாளனான கண்ணனையும் துயிலெழுப்பி, அவனிடம் ஆலவட்டத்தையும் கண்ணாடியையும் கொடுத்து அனுப்புவாயாக. நாங்கள் கண்ணனையும் அழைத்துக்கொண்டு நீராடச் செல்வதற்காக காத்திருக்கின்றோம். கண்ணனையும் எங்களுடன் அனுப்பி, நாங்கள் நீராடுவதற்கு வழி வகுப்பாயாக.




திருப்பாவை - பாடல் 21

First Published : 06 January 2016 12:00 AM IST













ஸ்ரீ மணியப்பன் பப்ளிஷர்ஸ், சென்னை.

   ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
   மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
   ஆற்றப் படைத்தான் மகனே அறிவறாய்
   ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
   தோற்றமாய் நின்ற சுடரே துயிலெழாய்
   மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசல் கண்
   ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
   போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய் 
பாடியவர் பவ்யா ஹரி

விளக்கம்
சென்ற இரண்டு பாடல்களில் துயில் எழுப்பப்பட்ட நப்பின்னை பிராட்டி துயில் கலைந்து எழுந்து, வந்திருந்த ஆயர் சிறுமிகளுடன் இணைந்து கண்ணபிரானை துயிலெழுப்பும் பாடல். துயில் எழுப்பும் சமயத்தில் அனைவரும் இணைந்து கண்ணபிரானின் குணங்களைப் புகழ்ந்து பாடுவதையும் நாம் உணரலாம்.
பொழிப்புரை
பால் கறப்பதற்காக வைத்துள்ள பாத்திரங்கள் நிரம்பி, அந்த பாத்திரங்களிலிருந்து பால் பொங்கி வழியுமாறு, பால் கறப்பவர்கள் சிறுவர்களாயினும் பெரியோர்களாயினும், தங்களது தன்மையில் மாற்றம் ஏதுமின்றி, வாரிக் கொடுக்கும் வள்ளல்கள் போன்று பால் சுரக்கும் பெருமை மிகுந்த பசுக்களை உடைய நந்தகோபனின் மகனே, நீ உறக்கம் தெளிந்து எழுவாயாக; வேதங்களால் புகழப்படுபவனே, வேதங்களும் அளக்க முடியாத பெருமை வாய்ந்தவனே, உலகத்தவர் கண்டு மகிழும் வண்ணம் உலகில் தோன்றியவனே, ஒளி மிகுந்து பிரகாசிப்பவனே, நீ துயிலெழுவாயாக; உனது வலிமையை உணர்ந்த உனது பகைவர்கள், தங்களது வலிமையை இழந்தவர்களாய் ஏதும் செய்யத் திறமையின்றி உனது வாசலில் வந்து நின்று உனது திருவடிகளைப் பணிவதற்காக நிற்கின்றார்கள், நாங்களும் உன்னைப் புகழ்ந்து பாடி, உனது திருவடிகளை வணங்குவதற்காக உனது வாசலில் வந்து காத்து நிற்கின்றோம். எனவே கண்ணபிரானே நீ துயிலெழுந்து, உனது வாயிலுக்கு வந்து எங்களுக்கு உனது திருமுக தரிசனம் அருளுவாயாக.



திருப்பாவை - பாடல் 22

First Published : 07 January 2016 12:00 AM IST











ஸ்ரீ மணியப்பன் பப்ளிஷர்ஸ், சென்னை.

   அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
   பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டில் கீழே
   சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பு எய்தோம்
   கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
   செங்கண் சிறுசிறிதே எம்மேல் விழியாவோ
   திங்களும் ஆதித்தியனும் எழுந்தால் போல்
   அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
   எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்
பாடியவர் பவ்யா ஹரி

விளக்கம்
மாளிகையின் உள்ளே புகுந்த ஆயர் சிறுமிகள், துயிலெழுந்த கண்ணபிரானின் திருப்பார்வை தங்கள் மீது படவேண்டி, கண்ணனை இறைஞ்சும் பாடல். கண்ணபிரானின் பார்வை, நமது பாவங்கள் அனைத்தையும் போக்க வல்லது என்பதை உணர்த்தும் பாடல்.

பொழிப்புரை
அழகியதும் அகன்றதும் ஆகிய இந்த நிலவுலகத்தில் உள்ள பல அரசர்கள், தங்களது செருக்குகள் நீங்கப்பெற்று, உனது கடைக்கண் பார்வைக்கு ஏங்கியவர்களாய், உனது படுக்கைக் கட்டிலுக்கு கீழே, கூட்டமாக குழுமி இருக்கின்றார்கள். நாங்களும், அவர்களைப் போன்று ஒரு குழுவாக, உனது கட்டிலின் தலைப் பக்கத்தில், உனது கடைக்கண் பார்வையினை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம். கிண்கிணி மணியின் வாயில் பொறிக்கப்பட்டு இருக்கும் தாமரைப் பூ போன்றதும் செம்மையான நிறத்தில் உடையதும் ஆன உனது கண்களை சிறிது சிறிதாக மலர்ந்து எங்களை நீ நோக்கமாட்டாயா, சூரியனும் சந்திரனும் போன்று ஒளி வீசும் உனது கண்கள் கொண்டு, எங்களை நீ நோக்கினால், வினைகளால் எங்கள் மீது படர்ந்துள்ள பாவங்கள் நீங்கும்.



திருப்பாவை - பாடல் 23

First Published : 08 January 2016 12:00 AM IST
   











    மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
    சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
    வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
    மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
    போதருமா போலே நீ பூவைப் பூவண்ணா உன்
    கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய
    சீரிய சிங்காதனத்திருந்து யாம் வந்த
    காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்

பாடியவர் பவ்யா ஹரி

விளக்கம்
கண்ணபிரான் துயிலெழுந்து வெளியே வருவதை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கும் ஆயர் சிறுமிகள், கண்ணன் வரும் காட்சியினை தங்களுக்குள்ளே விவரித்துக்கொள்ளும் பாடல்.

பொழிப்புரை
மழைக் காலத்தில், குகையின் உள்ளே தனது துணையான பெண் சிங்கத்துடன் சேர்ந்து உறங்கிய, வீரம் மிகுந்த ஆண் சிங்கம், உறக்கத்திலிருந்து விடுபட்டு வெளியே வரும்போது, கனல் போன்ற தனது கண்களிலிருந்து தீப்பொறி பறக்குமாறு விழித்து, பிடரி மயிர் சிலிர்க்க, நான்கு புறங்களிலும் திரும்பி திரும்பி பார்த்தவாறு சோம்பல் முறித்து, தனது உடலினை நீட்டி, கர்ஜனை செய்தவாறு புறப்படும் போது, காட்டில் உள்ள மற்ற விலங்குகள் அச்சம் கொள்ளும். அதே போன்று காயாம்பூ நிறத்தினை உடைய கண்ணபிரானே நீ, உறக்கத்திலிருந்து விழித்து, கம்பீரமாக நடந்து உனது மாளிகையிலிருந்து வெளியே வருவாயாக, பின்னர் உனக்காக அமைக்கப்பட்டுள்ள சீரிய சிங்காதனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக உன்னைக் காண வந்தோம் என்பதை கேட்டறிந்து எங்களது தகுதியினை ஆராய்ந்து எங்களுக்கு அருள் புரிவாயாக.




திருப்பாவை - பாடல் 24

First Published : 09 January 2016 12:00 AM IST









   அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி
   சென்று அங்கு தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
   போன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
   கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
   குன்று குடவரையா எடுத்தாய் குணம் போற்றி
   வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
   என்றென்றும் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
   இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய் 
பாடியவர் பவ்யா ஹரி

விளக்கம்
நாராயணனே கண்ணபிரானாக அவதரித்தான் என்பதை உணர்ந்த ஆயர் சிறுமிகள், நாராயணனின் திருவடிகளையும் அவனது குணங்களையும் போற்றிப் பாடுகின்றனர். கண்ணபிரானும் தங்களுடன் வர வேண்டும் என்ற விருப்பத்துடன் கண்ணனை துயிலெழுப்பிய ஆயர் சிறுமிகள், தங்கள் விருப்பத்திற்கு இணங்கி கண்ணன் நடந்தால் அவனது திருவடிகள் வலிக்குமே எண்ணினார்கள் போலும். அவர்களுக்கு அந்த திருவடிகள் செய்த சாகசச் செயல்கள் நினைவுக்கு வருகின்றன. மூவுலகை அளந்தது, இலங்கை சென்றது, சகடத்தை உதைத்து, குன்றினை எடுத்து நின்றது ஆகியவை நினைவுக்கு வரவே அந்த செயல்களை நினைவு கூர்ந்து போற்றும் பாடல்.
பொழிப்புரை
அன்று நெடுமாலாக நிமிர்ந்து, மாவலி அளித்த மூன்றடி மண்ணினை அளக்கும் பொருட்டு, உனது திருவடியின் இரண்டு அடிகளால் மூன்று உலகங்களையும் அளந்தவனே உன்னை நாங்கள் போற்றுகின்றோம். எவரும் நெருங்கா வண்ணம், கடலினையே அரணாகக் கொண்டு திகழ்ந்த தென்னிலங்கை சென்றடைந்து, இலங்கை நாட்டினை வென்றவனே உனது வலிமையை நாங்கள் போற்றுகின்றோம்; சகடாசுரன் வண்டியில் புகுந்ததை அறிந்து வண்டி நொறுங்குமாறு உனது காலால் உதைத்து சகடனை அழித்த உனது புகழினை நாங்கள் போற்றுகின்றோம். கன்று வடிவில் வந்த வத்சாசுரனை, அவனது காலினைப் பிடித்துச் சுழற்றி தடியினை எறிவது போன்று, விளாமரத்தில் ஒளிந்துகொண்டிருந்த கபித்சாசுரனை அந்த தடியால் அடித்துக் கொன்றவனே, உனது வீரக் கழல்களை நாங்கள் போற்றுகின்றோம். இந்திரன் பெய்வித்த மழையிலிருந்து மக்களையும் பசுக்களையும் காக்கும் பொருட்டு, கோவர்த்தன மலையை குடையாக பிடித்தவனே, உந்தன் குணத்தினை நாங்கள் போற்றுகின்றோம். பகைவர்களை வெற்றி கொள்ளும் வகையில் உனது திருக்கையில் ஏந்திய வேலினை நாங்கள் போற்றுகின்றோம். என்றென்றும் உனது குணங்களையும் செயல்களையும் போற்றிப் புகழும் நாங்கள், உன்னிடம் பறை கொள்வதற்காக இன்று வந்துள்ளோம். எங்கள் மீது இரக்கம் கொண்டு எங்களுக்கு அருள்வாயாக.




திருப்பாவை - பாடல் 25

First Published : 10 January 2016 12:00 AM IST







   ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
   ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
   தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த
   கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
   நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
   அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
   திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
   வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்


பாடியவர் பவ்யா ஹரி

விளக்கம்
கண்ணபிரானின் திருவடிகளின் சிறப்பினை மேற்கண்ட பாடல் மூலம் உணர்த்திய ஆயர் சிறுமிகளை நோக்கி கண்ணபிரான், மார்கழி மாத விடியற்காலை குளிரினில் உங்களது உடலினை வருத்திக்கொண்டு வந்துள்ள சிறுமிகளே நீங்கள் பறை ஒன்றினையே வேண்டி வந்தீர்களா, அல்லது உங்களுக்கு வேறு ஏதேனும் விருப்பமும் உள்ளதா என்று கேட்டான் போலும். தங்களுக்கு உடல் வருத்தம் ஏதும் இல்லை என்று விடையளித்த சிறுமிகளுக்கு, ஒரே இரவினில் மதுரையிலிருந்து ஆய்ப்பாடி வந்து, ஆங்கே வளர்ந்து தங்களை மகிழ்வித்த கண்ணின் கருணை நினைவுக்கு வந்தது போலும். அந்த நிகழ்ச்சியை குறிப்பிட்டு, கண்ணனைப் போற்றும் பாடல் இது.
பொழிப்புரை
தேவகி பிராட்டிக்கு மகனாகப் பிறந்த அதே இரவினில் மதுரையிலிருந்து ஆய்ப்பாடி நந்தகோபன் திருமாளிகை வந்தடைந்து, யசோதை பிராட்டியின் மகனாக நீ ஒளிந்து வளர்ந்ததை அறிந்த கம்சன், எவ்வாறேனும் உன்னைத் தொலைத்துவிட வேண்டும் என்று பல விதமான தீங்குகள் செய்தபோதும், அவனது சூழ்சிகளை முறியடித்து அவனது வயிற்றினில் நெருப்பு நின்றது போன்று அவனை வருத்திய நாராயணனே, நாங்கள் உன் மீது கொண்ட விருப்பினால் உனது அருள் வேண்டி இங்கே வந்தோம்; நீ எங்களுக்கு பறை இசைக் கருவியும் தந்து உனது அருளினையும் எங்களுக்குத் தருவாயாகில் நாங்கள் உனது செல்வத்தையும் வீரத்தையும் புகழ்ந்து பாடுவோம். உன்னைப் பிரிந்திருந்த எங்களது வருத்தமும், உன்னைக் கண்டதால் மறைந்தது; எனவே நாங்கள் வருத்தம் ஏதுமின்றி மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றோம்.



திருப்பாவை - பாடல் 26

First Published : 11 January 2016 12:00 AM IST




   மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
   மேலையார் செய்வனக வேண்டுவன கேட்டியேல்
   ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
   பாலன்ன வண்ணத்துள் பாஞ்சசன்னியமே
   போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
   சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
   கோல விளக்கே கொடியே விதானமே
   ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்
பாடியவர் பவ்யா ஹரி
விளக்கம்
பறை தந்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் செல்வோம் என்று கூறிய ஆயர் குலத்துச் சிறுமிகளை நோக்கி, கண்ணபிரான், நான் மிகவும் நிச்சயமாக பறை தருகின்றேன்; உங்களுக்கு வேறு ஏதேனும் தேவை இருந்தால் அதனையும் தெரிவிக்கலாம் என்று சொன்னான் போலும். உடனே அந்த சிறுமிகள் தங்கள் முன்னோர்கள் நோன்புகள் நோற்றபோது பயன்படுத்திய பொருட்களை பட்டியல் இடும் பாடல்.
பொழிப்புரை
அடியார்கள் உன் மீது மோகம் கொள்ளவைக்கும் பெருமானே, நீலமணி போன்ற நிறம் கொண்ட மேனியினை உடையவனே, மார்கழி மாதத்தில் நீராடி நோன்பு நோற்ற எங்களது முன்னோர்கள் செய்த செயல்களையும் நோன்பு முடிந்த பின்னர் அவர்கள் சமர்ப்பித்த வேண்டுகோளையும் உரைக்கின்றோம், கண்ணபிரானே நீ கேட்பாயாக. உலகில் உள்ளோர் அனைவரும் நடுங்கி அடங்குமாறு ஓசை எழுப்பும் வல்லமை உடையதும், பால் போன்ற நிறத்தினை உடையதும், உனது பாஞ்சசன்னியம் போன்றதும் ஆகிய பெரிய சங்கங்களை ஊதியும், மிகவும் பெரிய பறைகளைக் கொண்டும் இசைத்து, எங்களது முன்னோர்கள் பல்லாண்டு பாடினார்கள். எனவே அவ்வாறு நாங்களும் பல்லாண்டு இசைக்க, சங்குகளும், பறைகளும், மங்கல தீபங்களையும், கொடிகளையும், விதானங்களையும், ஊழிக்காலத்தில் ஆலிலையில் பள்ளிகொள்ளும் பெருமானே, நீ எங்களுக்கு தந்தருள வேண்டும்.

திருப்பாவை - பாடல் 27

First Published : 11 January 2016 12:00 AM IST






    கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன் தன்னைப்
    பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
    நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
    சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
    பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்
    ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
    மூட நெய் பெய்து முழங்கை வழிவாரக்
    கூட இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

விளக்கம்
நோன்பு நோற்பதற்கு தேவையான பொருட்களை பட்டியலிட்ட சிறுமிகளிடம் கண்ணபிரான், இவை போதுமா இன்னும் வேண்டுமா என்று கேட்டான் போலும். அதற்கு அந்த சிறுமிகள் நாங்கள் நோன்பு முடிந்ததைக் கொண்டாடும்போது தங்களுக்கு வேண்டுவது என்னென்ன என்று இந்த பாடலில் கூறுகின்றார்கள்.

பொழிப்புரை
உன்னுடன் கூடாத பகைவர்களை வெல்லும் வல்லமை படைத்த கண்ணபிரானே, நாங்கள் உனது பெருமைகளை வாயாரப்பாடி உன்னிடம் பறைக்கருவி பெற்று இந்த நோன்பினை முடித்தோம். இந்த நோன்பினை வெற்றிகரமாக முடித்தமையை கொண்டாடும் வகையில் நாங்கள் பெரும் சம்மானமாவன, வளையல்கள், தோளில் அணியப்படும் வளைகள், தோடு, செவிப்பூ, காலில் அணியும் சிலம்பு ஆகிய பலவிதமான அணிகலன்களை யாம் அணிந்து நாட்டோர் புகழும் வகையில் நாங்கள் அணிந்து கொள்வோம்; மேலும் நீ அணிந்த ஆடைகள் புனைந்து, பால் சோற்றினை முற்றிலும் மூடுமாறு நெய்யினால் அதனை மறைத்து, அந்த பால் சோற்றினில் உள்ள நெய் எங்களது முழங்கைக் வழியாக வழிந்து ஓடுமாறு சோற்றினை எங்களது கையினில் ஏந்தி, உன்னுடன் கலந்து நாங்கள் உண்போம். அவ்வாறு உண்ட பின்னர், எங்களது உள்ளம் குளிரும் வகையில் உன்னுடன் கூடி இருந்து நாங்கள் அனைவரும் மகிழ்வோம்.




திருப்பாவை - பாடல் 28

First Published : 13 January 2016 12:00 AM IST




    கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
   அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன் தன்னைப்
   பிறவி பெறுந்தனை புண்ணியம் யாம் உடையோம்
   குறைவொன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
   உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
   அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
   சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே
   இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்
பாடியவர் பவ்யா ஹரி

விளக்கம்
முந்தைய இரண்டு பாடல்கள் மூலம் தாங்கள் வேண்டுவது என்னென்ன என்று பெரிய பட்டியல் இட்ட, ஆயர் சிறுமிகளை நோக்கி கண்ணபிரான் கீழ்க்கண்டவாறு கூறினான் போலும். சிறுமிகளே நீங்கள் கோரியதை நான் தருகின்றேன். ஆனால் பெண்களே, நீங்கள் வேண்டுவனவற்றை பெறுவதற்கான தகுதி உங்களக்கு உள்ளதா என்பது எனக்குத் தெரியவில்லை. அதனைச் செவியுற்ற சிறுமியர்கள் தங்கள் தகுதியினை எடுத்துரைக்கும் பாடல் இது.
பொழிப்புரை
ஆநிரைகள் மேய்வதற்கான புல்வேளிகளைத் தேடி, பசுக்களின் பின்னே காட்டிற்கு சென்று, அங்கே கூடி கலந்து உண்ணும் வழக்கத்தினைக் கொண்ட, அறிவில்லாத ஆய்க்குலத்தில் பிறந்த நாங்கள், உன்னை எங்கள் குலத்துப் பிள்ளையாக பெறுவதற்கு உரிய புண்ணியத்தை செய்தவர்களாக உள்ளோம். குறை ஏதும் இல்லாத கோவிந்தனே, உன்னோடு நாங்கள் கொண்டுள்ள உறவினை, எவரும் அழிக்க முடியாது. நாங்கள் அறியாத பிள்ளைகளாய் இருப்பதால், உனது பெருமையினை உணராது, உன் மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக, உன்னை சிறிய பெயர்களால் பல முறை அழித்துள்ளோம். அவற்றை மனதில் வைத்துக்கொண்டு எங்கள் மீது கோபம் கொள்ளாமல், இறைவனே, நீ எங்களுக்கு பறைகள், மற்றும் நாங்க விரும்பிய பொருட்களை அருள வேண்டும்.




திருப்பாவை - பாடல் 29

First Published : 14 January 2016 12:00 AM IST



   சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன்
   பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
   பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த நீ
   குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
   இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
   எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு
   உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
   மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்
 
பாடியவர் பவ்யா ஹரி

விளக்கம்
முந்தைய பல பாடல்களில் பறை வேண்டும் என்று கேட்ட ஆயர் குலத்துச் சிறுமிகள் இந்த பாடலில் தங்களது வேண்டுகோளை மாற்றிவிட்டதை நாம் உணரலாம். உலகத்தவரின் கண்களுக்கு தாங்கள் நோன்பு நோற்பது போன்று தோற்றம் அளித்தாலும், எங்களது உண்மையான நோக்கம், நோன்பு நோற்பதோ, அல்லது அந்த நோன்பிற்காக உன்னிடமிருந்து பறை கொள்வதோ அல்ல என்பதை தெளிவுபடுத்தி, தங்களது உண்மையான வேண்டுகோளை சமர்ப்பிக்கும் பாடல் இது.
பொழிப்புரை
இந்த விடியற்காலை வேலையில், நாங்கள் அனைவரும் கூடி வந்து உன்னை தரிசனம் செய்து வணங்கி, உனது பொன்னான திருவடிகளை போற்றுவதின் நோக்கத்தினை கூறுகின்றோம் நீ கேட்பாயாக. பசுக்கள் மேய்த்து பராமரித்து பசுக்களிடமிருந்து கிடைக்கும் பொருட்களைக் கொண்டு வாழ்க்கை நடத்தும் ஆயர் குலத்தில் பிறந்த கண்ணபிரானே, நாங்கள் உனக்குச் செய்யவிருக்கும் அடிமைத் தொழிலை, நீ மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும், இன்று நீ எங்களுக்கு கொடுக்கவிருக்கும் பறையினைப் பெறுவதற்காக .நாங்கள் இங்கே வரவில்லை. கோவிந்தனே, இந்த பிறவியில் என்றென்றும், இனி நாங்கள் எடுக்கவிருக்கும் ஏழேழ் பிறவிகளிலும் நாங்கள் உன்னுடன் உறவு கொண்டவர்களாக இருக்க வேண்டும், உனக்கே நாங்கள் அடிமையாகத் தொண்டுகள் புரிவோம், இந்த இரண்டு விருப்பங்களைத் தவிர, எங்களது வாழ்க்கையில் வேறு எந்த விருப்பங்களும் இல்லாதவாறு நீ எங்களுக்கு அருள் செய்ய வேண்டும்.



திருப்பாவை - பாடல் 30

First Published : 15 January 2016 12:00 AM IST
 
   வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை
   திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி
   அங்கப் பறை கொண்டவாற்றை அணி புதுவை
   பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
   சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
   இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத்தோள்
   செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
   எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்

பாடியவர் பவ்யா ஹரி

விளக்கம்
இந்த பாடலில் திருப்பாவை பாசுரத்தை படிப்பதால் விளையும் பலன் கூறப்பட்டுள்ளது. ஆண்டாள் நாச்சியார் தன்னை ஆயர் குலச் சிறுமியாக உருவகித்துக் கொண்டு பாடிய பாடல்கள் என்ற விவரம் இந்த பாடலில் தெரிவிக்கப் படுகின்றது.
 
பொழிப்புரை
கப்பல்கள் உடைய கடலினைக் கடந்து தேவர்கள் அமுதம் பெறுவதற்கு வழி வகுத்த மாதவனை, கேசி என்ற அரக்கனை அழித்த கண்ணபிரானை, சந்திரன் போன்று அழகிய முகத்தினையும் செம்மையான ஆடைகளையும் உடைய ஆயர் குலத்துச் சிறுமிகள் சென்றடைந்து அவனை வேண்டிப் பறை கொண்ட தன்மையை, அழகிய வில்லிபுத்தூரில் பிறந்தவளும், பசுமையும் குளிர்ச்சியும் உடைய தாமரை மலர்களால் புனையப்பட்ட மாலையினை உடையவளும் பெரியாழ்வார் என்று அழைக்கப்படும் பட்டர்பிரானின் மகளுமாகிய ஆண்டாள் அருளிச் செய்த இந்த முப்பது பாடல்களைக் கொண்ட பாசுரத்தை, சங்கத் தமிழ் மாலையை, தப்பாமல் ஓதுவார்கள், பெரிய மலை போன்ற நான்கு தோள்களை உடையவனும், சிவந்த கண்களை உடையவனும், ஒப்பற்ற செல்வதை உடையவனும் ஆகிய திருமாலின் அருளினால் அனைத்து வளங்களையும் பெற்று வாழ்வினில் இன்பங்களை அடைவார்கள்.









திருவெம்பாவை

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை, பல நூற்றாண்டுகளாக, மார்கழி மாதத்தில், இந்துக்களால் பாடப்பட்டு வருகின்றன. கன்னிப் பெண்கள் ஒருவரை மற்றொருவர் துயிலெழுப்பி, அனைவரும் ஒருங்கு சேர்ந்து நீர்நிலைகளுக்குச் சென்று கூட்டமாக நீராடியவாறு தாங்கள் வழிபட்டு வந்த பாவைத் தெய்வத்திடம், தங்களது வாழ்வு வளமாக இருக்க வேண்டும் என்றும் தங்களுக்கு கண் நிறைந்த கணவன் வேண்டும் என்றும் வேண்டியபடி பாடுவதாக அமைந்த பாடல்கள் இவை. திருவெம்பாவை மொத்தம் இருபது பாடல்கள் கொண்டவை. முதல் எட்டு பாடல்கள் மகளிர்கள் ஒருவரை ஒருவர் எழுப்பிக் கொண்டு எல்லோருமாக இறைவனின் புகழினை பாடியவாறு நீராடச் செல்லுதலையும், ஒன்பதாவது பாடலில் தங்களது வேண்டுகோளை இறைவனிடம் வைப்பதையும், பத்தாவது பாடலில் இறைவனைப் புகழ்ந்து பாடும் தன்மையை கேட்டு அறிவதையும் உணர்த்துகின்றன. அடுத்த பத்து பாடல்கள் அனைவரும் சேர்ந்து நீராடுதலை உணர்த்துவதாகவும் அமைந்துள்ள பாடல்கள்.

திருவெம்பாவையின் இருபது பாடல்களுடன் திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் பத்து பாடல்களையும், மார்கழி மாதத்தில் பாடுவது மரபு. சிறு பெண்களுக்கு இடையில் நடைபெறும் உரையாடலாக பல பாடல்கள் அமைந்துள்ளதையும், ஒத்த வயதினர் பேசும்போது அவர்களுக்குள்ளே எழும் கேலியும் பரிகாசமும் ஆங்காங்கே தொனிப்பதையும் நாம் உணரலாம். ஒவ்வொரு பாடலின் இறுதியில் வரும் ஏலோர் எம்பாவாய் என்ற தொடரை, பொருள் ஏதும் இல்லாத அசைச் சொல்லாக சிலர் கருதுகின்றனர். சிலர், பாவை போன்ற பெண்ணே, நீ சிந்திப்பாயாக என்று பொருள் கொள்கின்றனர். இந்த பாடல்களில் பல தத்துவக் கருத்துகள் புதைந்து கிடைக்கின்றன. அவற்றை விரித்தால் உரையின் நீளம் பெருகும் என்பதை கருத்தில் கொண்டு, எளிமையான உரை கொடுக்கப்படுகின்றது.

திருவெம்பாவை பதிகம் திருவண்ணாமலையில் அருளியது.

இப்பகுதியில் வெளியாகும் பாடல்களை ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கியவர்கள் - மயிலாடுதுறை சொ. சிவக்குமார், என். வெங்கடேஸ்வரன், எஸ். வெங்கட்ராமன்.

Story List


திருவெம்பாவை: பாடல் 19 

எங்களை, உனது அடைக்கலப் பொருளாக ஏற்று நீ காக்க வேண்டும், என்று எங்களது தந்தைமார்கள் நாளை எங்கள் திரும.....






திருவெம்பாவை: பாடல் 5 

திருமாலும் நான்முகனும் அறிய முடியாத, மலை போன்று உயர்ந்து காணப்பட்ட சிவபெருமானை நாம் எளிதில் அறிந்துக.....






Story List



திருவெம்பாவை: பாடல் 20 
எங்கள் தலைவனே, அனைத்துப் பொருட்களுக்கும் ஆதியாகத் திகழும் உனது திருவடித் தாமரையை எங்களுக்கு அருள்வாயாக. அனைத்துப் பொருட்களுக்கும்

திருவெம்பாவை: பாடல் 19 

எங்களை, உனது அடைக்கலப் பொருளாக ஏற்று நீ காக்க வேண்டும், என்று எங்களது தந்தைமார்கள் நாளை எங்கள் திரும.....

திருவெம்பாவை: பாடல் 18 

அண்ணாமலையான் ஆகிய இறைவனின் திருப்பாதங்களில், தங்களது தலைகளைச் சாய்த்து வழிபடும் தேவர்களின் கிரீடத்தி.....

திருவெம்பாவை: பாடல் 17 

நறுமணம் வீசும் கூந்தலை உடையவளே, திருமால், நான்முகன் மற்றுள்ள தேவர்கள் ஆகியோரிடத்தில் இல்லாத அன்பும் .....

திருவெம்பாவை: பாடல் 16 

கடலில் இருக்கும் நீர் சூரியனின் வெப்பத்தால் ஆவியாக மாறி, கருநிற மேகங்களாக மாறுகின்றன,

திருவெம்பாவை: பாடல் 15 

ஒரு முறை எனது பெருமான் என்று தனது வாய் திறந்த சொன்ன எமது தோழி, அதன் பின்னர், வாய் ஒழியாமல் பெருமானின.....


திருவெம்பாவை: பாடல் 14 

காதுகளில் அணிந்துள்ள குழை ஆபரணங்கள் ஆடவும், உடலின் பல்வேறு இடங்களில் அணிந்துள்ள பசும்பொன்னால் செய்யப.....

திருவெம்பாவை: பாடல் 13 

நீராட இருக்கும் பொய்கை கருங்குவளை மலர்களையும், செந்தாமரை மலர்களையும் உடையதாய், கூட்டங் கூட்டமாக பறவை.....

திருவெம்பாவை: பாடல் 12 

பெருமானே, எங்களுடன் இறுக்கமாக பிணைந்துள்ள பிறவிப் பிணி எங்களை விட்டு நீங்க வேண்டும் என்ற எண்ணத்தில்......

திருவெம்பாவை: பாடல் 11 

வண்டுகள் மொய்க்கும் குளத்தினில் புகுந்த நாங்கள், முகேர் என்ற ஒலி ஒலிக்குமாறு எங்களது கைகளால் குடைந்த.....

திருவெம்பாவை: பாடல் 10 

ஏழு பாதாள உலகங்களையும் தாண்டி, சொற்களால் விவரிக்க முடியாத எல்லையையும் தாண்டி நிற்பன பெருமானது திருவட.....



Story List

திருவெம்பாவை: பாடல் 9 

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னம் தோன்றிய பொருட்களுக்கும் பழமையாக விளங்கும் இறைவனே, வரும் காலத்தில் பு.....

திருவெம்பாவை: பாடல் 8 

பொழுது புலரப்போவதை உணர்த்தும் வகையில் கோழி கூவியதைக் கண்டு, மற்ற பறவைகளும் கூவிவிட்டன; பல இடங்களிலும.....

திருவெம்பாவை: பாடல் 7 

உன்னுதல் = நினைத்தல். பேதை என்ற சொல் இங்கே பெண்ணின் பருவத்தை குறிப்பதல்ல, அறிவிலி என்ற பொருள்பட அமைந.....

திருவெம்பாவை: பாடல் 6 

மான் போன்று மருண்ட பார்வை உடைய பெண்மணியே, நேற்று நீ பேசும்போது, நானே வந்து உங்கள் அனைவரையும் வந்து எ.....

திருவெம்பாவை: பாடல் 5 

திருமாலும் நான்முகனும் அறிய முடியாத, மலை போன்று உயர்ந்து காணப்பட்ட சிவபெருமானை நாம் எளிதில் அறிந்துக.....



Story List

திருவெம்பாவை: பாடல் 4 

முத்து போன்று ஒளி வீசும் பற்களை உடையவளே, இன்னும் உனக்கு பொழுது புலரவில்லை போலும்.

திருவெம்பாவை: பாடல் 3 

முத்து போன்ற வெண்பற்களை உடையவளே, நேற்று நீ என்ன பேசினாய் என்பது உனக்கு நினைவில் உள்ளாதா?

திருவெம்பாவை: பாடல் 2 

விண்ணோர்கள் ஏத்துதற்கு கூசும் மலர்ப்பாதம் என்று இங்கே மணிவாசகர் கூறுகின்றார்.

திருவெம்பாவை: பாடல் 1 

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை, பல நூற்றாண்டுகளாக, மார்கழி மாதத்தில், இந்துக்களால் பாடப்பட்டு வரு.....







திருவெம்பாவை: பாடல் 1

First Published : 17 December 2015 12:00 AM IST

   ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும்
   சோதியை யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
   மாதே வளருதியோ வன்செவியோ நின் செவி தான்
   மாதேவன் வார் கழல்கள் பாடிய வாழ்த்தொலி போய்
   வீதி வாய்க் கேட்டலுமே விம்மி விம்மி மெய்ம்மறந்து
   போது ஆர் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
   ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
   ஈதே எம் தோழி பரிசு ஏல் ஓர் எம்பாவாய் 
பொன். முத்துக்குமரன் குரலில்..

சற்குருநாதன் குரலில்...
விளக்கம்
போது = மலர்கள். போதார் அமளி = பூப்படுக்கை. வளருதல் = தூங்குதல். தூக்கம் என்ற சொல் மங்கலச் சொல்லாக கருதப்படுவதில்லை. மேலும் சிறு குழந்தைகளின் தூக்கத்திற்கு ஏற்றவாறு குழதையின் வளர்ச்சியும் அதிகமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால் தான் தாலாட்டு பாடல்களில் தூக்கம் என்ற சொல் தவிர்க்கப்பட்டு கண் வளராய் என்று பாடுகின்றார்கள். வாள் தடங்கண் = அகலமாகவும், வாள் போன்று கூர்மையாகவும் காணப்படும் கண்கள். வன்செவி = வலிமையான செவி, தாங்கள் பாடுவதை கேட்டும், தூக்கம் கலைந்து எழுந்திராமல் இருப்பதால், இரும்பால் செய்யப்பட்ட வலிமையான செவியோ என்று வெளியில் இருக்கும் ஒருத்தி கூறுகின்றாள். ஏதேனும் ஆகாள் = ஒன்றுக்கும் பயன்படாமல் இருத்தல்.

பொருள்

ஆதியும் அந்தமும் இல்லாத, அரிய சோதியாகிய சிவபெருமானை நாங்கள் பாடுகின்றோம். எங்களது பாடலைக் கேட்ட பின்னரும், வாள் போன்று கூர்மையாகவும் அகலமாகவும் காணப்படும் கண்களை உடைய பெண்ணே, நீ உறங்குகின்றாயே, உனது செவிகள் என்ன வலிமையான செவிகளா, எங்களது பாடல் உனது காதில் விழவில்லையா? இவ்வாறு முதல் தோழி, வீட்டின் உள்ளே இருக்கும் தோழியைப் பற்றி குறையாக சொல்ல, அதற்கு பதில் அளிக்கும் முகமாக அடுத்த தோழி பின்வருமாறு கூறுகின்றாள். பெருமானின் நீண்ட பாதங்களை நாம் வாழ்த்தி பாடிய பாடல்களைக் கேட்ட அவள், இறைவனைப் பற்றிய சிந்தனையில் விம்மி, விம்மி தன்னையே மறந்துவிட்டாள். ஆனால், அனிச்சைச் செயலாக அவளது உடல் படுக்கையில் புரள்கின்றது. இது தான் உள்ளே இருக்கும் தோழியின் நிலை. எனவே அவளது நிலை பாராட்டுக்கு உரியது.




திருவெம்பாவை: பாடல் 2

First Published : 18 December 2015 12:00 AM IST


 

   பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்
   பேசும்போது எப்போது இப் போது ஆர் அமளிக்கே
   நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
   சீ சீ இவையும் சிலவோ விளையாடி
   ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
   கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
   தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
   ஈசனார்க்கு அன்பு ஆர் யாம் ஆர் ஏல் ஓர் எம்பாவாய்

பொன். முத்துக்குமரன் குரலில்..
சற்குருநாதன் குரலில்...

விளக்கம்
விண்ணோர்கள் ஏத்துதற்கு கூசும் மலர்ப்பாதம் என்று இங்கே மணிவாசகர் கூறுகின்றார். தங்களது சுயநலம் கருதி வானவர்கள், இறைவனை வேண்டுவதால், அவர்களின் நிலையை எண்ணி, தங்களை முழுதாக அர்ப்பணிக்காத நிலையை எண்ணி, இறைவன் நாணி கூசுவதாக இங்கே கூறுகின்றார். அதற்கு மாறாக, நாம் முழுதுமாக இறைவனுக்கு ஆட்பட்டு இருப்பதால், தனது திருவடிகளை தந்து அருளுவதற்காக, இறைவன் நமது அருகில் வருகின்றார் என்று பெண்களின் வாய்மொழியாக சொல்லி, நாம் எப்படி இறைவனிடம் அன்பு செலுத்த வேண்டும் என்பதை இங்கே உணர்த்துகின்றார்.
பொருள்
நகைகள் அணிந்த பெண்ணே, இரவிலும் பகலிலும். எப்போது நாம் பேசினாலும், எனது அன்பு பெருமானுக்கு உரியது என்று நீ கூறுவாய்; ஆனால் இப்போது நீ படுக்கையின் மீது பாசம் வைத்து இன்னும் உறங்குகின்றாய் போலும் என்று வெளியே இருக்கும் தோழி கேலியாக பேசுகின்றாள். உள்ளிருந்தவாறு அவள் அளிக்கும் பதில்: அழகிய அணிகலன்களை அணிந்தவர்களே, நமக்கு கேலிப் பேச்சுகள் பேசுவதற்கு உரிய நேரமும் இடமும் இதுவல்ல. வானவர்களின் போலியான அன்பினைக் கண்டு நாணி வெட்கம் அடையும் இறைவன், தனது மலர் போன்ற திருவடிகளை நாம் பற்றிக் கொள்வதற்காக நமக்கு தந்து அருளும் வண்ணம் நம்மை நெருங்கி வரும் தருணத்தில், நமக்குள்ளே ஒருவரை ஒருவர் ஏசும் விளையாட்டுகள் தேவையற்றவை. நாம் அனைவரும், அனைத்து தேசங்களிலும் இறைவனாக கொண்டாடப் படுபவனும், சிவலோகத்தின் தலைவனும், தில்லைச் சிற்றம்பலத்தில் நடமடுபவனும் ஆகிய ஈசனின் அன்பர்கள் என்பதை புரிந்துகொண்டு செயல்படுவோம்.



திருவெம்பாவை: பாடல் 3

First Published : 19 December 2015 12:00 AM IST


 

   முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்து எதிரெழுந்தென்
   அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்
   தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
   பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
   புத்தடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ
   எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
   சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
   இத்தனையும் வேண்டும் எமக்கு ஏல் ஓர் எம்பாவாய் 
பொன். முத்துக்குமரன் குரலில்...

சற்குருநாதன் குரலில்...

விளக்கம்
அள்ளூறி = வாயூறி, கடை = வாயிற்கதவு. பற்று என்ற சொல் எதுகை கருதி பத்து என்று திரிந்தது. பாங்கு = மேன்மை. புன்மை = கீழ்த்தன்மை, குற்றம். உள்ளே உறங்கிக்கொண்டு இருக்கும் பெண்ணை விடவும், அவளுக்கு முன்னர் எழுந்திருந்து வீதிகளில் இறைவனின் புகழினைப் பாடிக்கொண்டு வரும் தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம், வீதியில் இருப்பவர்களுக்குத் தோன்றுகின்றது. அதன் பயனாக, அவர்களது பேச்சில் ஒரு ஏளனம் தென்படுகின்றது.

பொருள்
முத்து போன்ற வெண்பற்களை உடையவளே, நேற்று நீ என்ன பேசினாய் என்பது உனக்கு நினைவில் உள்ளாதா? நாங்கள் உன்னை எழுப்ப வருவதற்கு முன்னமே, தான் எழுந்திருந்து எங்களை எதிர்கொள்வேன் என்றும், சிவபெருமான் எனது தந்தை, எனக்கு இன்பம் அளிப்பவன், எனக்கு அமுதமாக இனிப்பவன் என்றெல்லாம் உனது வாயினில் எச்சில் ஊறுமாறு பேசினாயே, ஆனால் இன்று அத்தனையும் மறந்துவிட்டு உறங்கிக்கொண்டு இருக்கின்றாயே, சீக்கிரம் எழுந்து வந்து உனது வாயிற்கதவை திறப்பாயாக. இதனைக் கேட்டு எழுந்த பெண்ணுக்கு கோபம் வர, அவள் பின்வருமாறு கூறுகின்றாள்: ஈசன் பால் மிகுந்த பற்று உடையவர்களே, பழ அடியார்களே, மேன்மை கொண்டவர்களே. என்னைப் போன்ற புது அடியார்கள், குற்றம் ஏதும் செய்தாலும், அதனை பொறுத்துக் கொண்டு என்னையும் ஏற்றுக்கொண்டால் உங்களுக்கு இழுக்கு ஏதேனும் நேர்ந்துவிடுமோ. இவ்வாறு உள்ளே இருந்த படியே தங்களது தோழி பேசியதைக் கேட்ட வெளியில் இருந்த பெண்கள், தங்களது தோழி மனம் வருந்தி பேசியதை உணருகின்றனர். அவளைத் தேற்றும் வண்ணம் பின்வருமாறு கூறுகின்றனர், தோழியே நீ புதியதாக வந்து சேர்ந்தவள் என்று எண்ணிக் கொள்ளாதே, நீ முன்னம் இறைவனைப் பற்றி பேசும்போது உனது வாயினில் எச்சில் ஊறியதைக் கண்ட நாங்கள், நீ இறைவன் பால் வைத்திருக்கும் அன்பு ஆழமானது என்பதை புரிந்து கொண்டோம். நமக்குள் பழைய அடியவர், புதிய அடியவர் என்ற பிரிவினை தேவையில்லை. நமது மனம் தூய்மையாக இருந்தால் போதும். மனம் தூய்மையாக இருக்கும் நாம் அனைவரும் செய்ய வேண்டிய செயல் ஒன்றே ஒன்றுதான், அது நமது இறைவனாகிய சிவபெருமானின் புகழினைப் பாடுவதுதான்.



திருவெம்பாவை: பாடல் 4

First Published : 20 December 2015 12:00 AM IST

 


ஒண்ணித்தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்கு ஒரு மருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள் நெக்கு நின்றுருக யாம் மாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில் துயிலேல் ஓர் எம்பாவாய் 
பொன். முத்துக்குமரன் குரலில்...
சற்குருநாதன் குரலில் கேட்க...

விளக்கம்
நித்திலம் = முத்து. ஒண்ணித்தில = ஒள்+நித்திலம். ஒள் = ஒளி பொருந்திய. அவம் = வீணான செயல். மருந்து = அமுதம். விழுப்பொருள் = மேன்மையான பொருள்.
பொருள்
முத்து போன்று ஒளி வீசும் பற்களை உடையவளே, இன்னும் உனக்கு பொழுது புலரவில்லை போலும். வீட்டினில் உள்ளே இருந்த பெண் அங்கே இருந்தவாறே, வரவேண்டிய பெண்கள், கிளியின் நிறத்தையும் மென்மையான மொழியையும் கொண்ட பெண்கள், அனைவரும், வந்துவிட்டார்களா என்று கேட்கின்றாள். அவளது கேள்விக்கு விடை அளிக்கும் முகமாக, சற்றுப் பொறுத்துக்கொள்வாய், நாங்கள் எண்ணிச் சொல்கின்றோம் என்று பதில் அளிக்கின்றார்கள். சென்ற மூன்று பாடல்களில் தாங்கள் எழுப்பித் தங்களுடன் சேர்த்துக்கொண்ட பெண்கள் எவரும், அனைவரும் வந்தனரா என்ற கேள்வியைக் கேட்கவில்லை. எனவே இந்த பெண்ணின் கேள்விக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமோ என்ற சந்தேகம், வெளியே உள்ள தோழிகளுக்கு எழுகின்றது. ஒருக்கால், வெளியில் இருப்பவர்கள் எண்ணி முடிக்கும் வரையில், தான் மறுபடியும் சிறிய தூக்கம் போடுவதற்காக இந்த கேள்வி எழுப்பட்டதோ என்ற ஐயம் எழவே, தாங்கள் எண்ணுவதை நிறுத்திவிட்டு பின்வருமாறு கூறுகின்றார்கள். தோழியே, மறுபடியும் தூங்க ஆரம்பித்து உனது காலத்தை நீ வீணாக கழிக்காதே: தேவர்கள் அமுதம் அருந்துவதற்காக தான் நஞ்சை உண்டதால் அவர்களுக்கு அமுதம் போன்றவனும், வேதங்களில் குறிப்பிடப்படும் மேம்பட்ட பொருளாகவும், எங்களது கண்ணுக்கு இனியவனாகவும் உள்ள சிவபெருமானின் புகழினைப் பாடி, உள்ளம் கசிந்து உருகும் நிலையில் உள்ள நாங்கள், எங்களுடன் இருப்பவர்களை எண்ணுவதில் நேரத்தை வீணாக்கமாட்டோம். நீயே வெளியே வந்து எங்களுடன் இருப்பவர்களை எண்ணுவாயாக. எண்ணி முடித்த பின்னர் எவரேனும் வரவில்லை என்பதை உணர்ந்தால், நீ மறுபடியும் சென்று உறங்கலாம்.






திருவெம்பாவை: பாடல் 5

First Published : 21 December 2015 12:00 AM IST

 

   மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
   போலறிவோம் என்று உள்ள பொக்கங்களே பேசும்
   பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
   ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
   கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டுஞ்
   சீலமும் பாடிச் சிவனே சிவனே என்று
   ஓலம் இடினும் உணராய் உணராய் காண்
   ஏலக் குழலி பரிசு ஏல் ஓர் எம்பாவாய்

பொன். முத்துக்குமரன் குரலில்...

சற்குருநாதன் குரலில் கேட்க...

விளக்கம்
பொக்கம் = பொய். படிறீ = வஞ்சகம் நிறைந்தவள். ஏலம் = கூந்தலில் பூசப்படும் சாந்து. கோதாட்டும் = குற்றங்களிலிருந்து நீக்கும். கோலம் = வடிவம். சீலம் = எளிமையான தன்மை. தங்களது வலிமையினால் செருக்கு கொண்டு, நீண்டு நெடியதாய் நின்ற தீப்பிழம்பின் அடியையும் முடியையும் தாங்கள் கண்டுவிடலாம் என்று திருமாலும் பிரமனும் முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்களால் காணமுடியவில்லை. அகந்தைக்கு ஆட்படாத இறைவன், அன்புக்கு கட்டுப்பட்டு தனது உருவத்தை அடியார்களுக்கு காட்டுவான் என்பது சைவ சித்தாந்தம். எனவே தனது அன்பினால், தான் இறைவனை கண்டுவிடுவேன் என்று, வீட்டினில் உள்ளே இருக்கும் பெண் பேசியதை, சுட்டிக் காட்டி அவளது தோழிகள் கூறுவதாக அமைந்த பாடல். இறையுணர்வில் ஈடுபடும் பெண்கள், தங்களை அழகுபடுத்திக் கொள்வதில் கவனம் எடுத்துக்கொள்ள மாட்டார்கள், என்பது திருப்பாவையில் வரும் மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் என்ற தொடர் மூலம் உணர்த்தப் படுகின்றது. அவ்வாறு இருக்கையில் இந்தப் பெண், தனது முடிக்கு வாசனை தரும் சாந்தினை பூசிக்கொள்வது அவளது போலியான அன்பினை வெளிப்படுத்துகின்றது என்பதை உணர்த்தும் வண்ணம், ஏலக் குழலி என்று அவளை அழைக்கின்றார்கள்.

பொருள்
திருமாலும் நான்முகனும் அறிய முடியாத, மலை போன்று உயர்ந்து காணப்பட்ட சிவபெருமானை நாம் எளிதில் அறிந்துகொள்ளலாம் என்று வீம்பாக பேசிய பெண்ணே, பால் போன்றும் தேன் போன்றும் இனிமையாக பேசும் வஞ்சகியே, நீ எழுந்து வந்து உனது வீட்டு வாயிலைத் திறப்பாயாக: உனக்கு இறைவன் பால் உண்மையில் அன்பு உள்ளதென்றால், நாங்கள் விண்ணோர்களும் மண்ணோர்களும் அறிய முடியாத அவனது உருவத்தை பாடியபோதே நீ எழுந்திருக்க வேண்டும்: அவனது உருவத்தை பாடிய நாங்கள், அவன் நம்மை ஆட்கொண்டு நமது குற்றங்களை நீக்கிய, பெருமானது எளிய தன்மையை பாடிய போதும் நீ எழவில்லை. அத்துடன் நிற்காமல் நாங்கள் சிவனே சிவனே என்று உரக்க கூவியதையும் உணராமல் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் நீ, சிவபெருமான் பால் வைத்திருக்கும் அன்பு உண்மையானது அல்ல. பாவை நோன்பு நோற்கும் நாங்கள் அனைவரும், எங்களை அழகுபடுத்திக் கொள்வதில் கவனம் செலுத்தவில்லை. அனால் நீயோ, உனது முடிக்கு நறுமணம் தரும் சாந்தினை பூசிக்கொள்கின்றாய். இதிலிருந்து உனது அன்பின் தன்மை எத்தகையது என்பதை நாங்கள் அனைவரும் கண்டு கொண்டோம்.





திருவெம்பாவை: பாடல் 6

First Published : 22 December 2015 12:00 AM IST

  மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை
  நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
  போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
  வானே நிலனே பிறவே அறிவரியான்
  தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
  வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்
  ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
  ஏனோர்க்கும் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்

கரூர் சுவாமிநாதன் குரலில்..

சற்குருநாதன் குரலில்...
விளக்கம்
நென்னல் = நேற்று. தலையளித்து = கருணை செய்து. வான் வார் கழல் = ஆகாயத்தில் விளங்கும் அழகிய திருவடி. பெண்களின் பார்வையை மானின் மருண்ட பார்வைக்கு ஒப்பிடுவது இலக்கிய மரபு. சென்ற பாடலைப் போன்று இந்த பாடலும் வெளியே நிற்பவர்களின் கூற்றாக அமைந்துள்ளது. வானும் நிலனும் அறிய முடியாதவன் என்று இங்கே, வானத்தில் உள்ள விண்ணவர்களையும், பூவுலகில் உள்ள மண்ணவர்களையும் குறிக்கின்றார்.

பொருள்
மான் போன்று மருண்ட பார்வை உடைய பெண்மணியே, நேற்று நீ பேசும்போது, நானே வந்து உங்கள் அனைவரையும் வந்து எழுப்புவேன் என்று கூறினாய். அந்த பேச்சு, காற்றில் எந்த திசையில் பறந்து சென்றது, சொன்ன சொல்லைக் காப்பாற்ற இயலாத நீ அதற்கு வெட்கம் கொள்ளாமலும் இருக்கின்றாய். நீ சொல்லிய சொல், எந்த திசையில் பறந்து சென்றது என்பதை எங்களுக்கு சொல்வாயாக. உனக்கு இன்னும் பொழுது விடியவில்லை போலும். வானுலகத்திலும், பூவுலகத்திலும் உள்ளவர்கள் அறிய முடியாத சிவபெருமான், நம் மீது கொண்ட கருணையினால், அவன் தானே இறங்கி வந்து நம்மை ஆட்கொண்டருளி ஆகாயத்தில் விளங்கும் தனது திருவடிகளை, நமக்குத் தந்துள்ளான். அவனது திருவடிகளின் சிறப்பினை நாங்கள் பாடிக்கொண்டு இருக்கின்றோம். ஆனால் நீயோ, வாயிற்கதவைத் தான் திறக்கவில்லை, உனது வாயினைத் திறந்தாவது ஏதேனும் வார்த்தை பேசலாம் அல்லவா. ஏன் அதுவும் செய்யாமல் இருக்கின்றாய்? அவனது புகழினைக் கேட்ட பின்னரும் உள்ளமும் உடலும் உருகாமல் இருக்கும் நிலை உனக்கே உரிய தனித் தன்மை. அவ்வாறு இருக்கும் உனக்கும், எங்களுக்கும், உலகில் உள்ள ஏனையோருக்கும் தலைவனாக உள்ள சிவபெருமானின் புகழினை நாங்கள் பாடிக் கொண்டு இருப்போம்.




திருவெம்பாவை: பாடல் 7

First Published : 23 December 2015 12:00 AM IST

  அன்னே இவையும் சிலவோ பல அமரர்
  உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான்
  சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்
  தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகொப்பாய்
  என்னானை என்னரையன் இன்னமுதென்று எல்லோமும்
  சொன்னோம் கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ
  வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்
  என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.

கரூர் சுவாமிநாதன் குரலில்..
சற்குருநாதன் குரலில்...

விளக்கம்
உன்னுதல் = நினைத்தல். பேதை என்ற சொல் இங்கே பெண்ணின் பருவத்தை குறிப்பதல்ல, அறிவிலி என்ற பொருள்பட அமைந்துள்ளது. இந்த பாடல் முழுவதும் எழுப்ப வந்தவர்களின் கூற்றாக அமைந்துள்ளது. சின்னம் என்பதற்கு இருவகையான பொருள்கள் கூறப்படுகின்றன. பெருமானுடன் தொடர்புகொண்ட, திருநீறு, உருத்திராக்கம், இடபம் என்பன முதல் பொருள். சங்கு, தாரை போன்று அதிகாலையில் இசைக்கப்படும் இசைக்கருவி என்பது இரண்டாவது பொருள். உள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் பெண்மணியின் செயல்பாடுகள், பெருமான் மீது அவளுக்கிருந்த ஆழ்ந்த பக்தியை குறிப்பிடுவதாக உணர்ந்த தோழிகளுக்கு, அவள் இன்னும் உறங்கிக்கொண்டிருப்பது வியப்பை அளிக்கின்றது. அதனால்தான் என்னே என்ற வியப்புக்குறியுடன் தங்களது பேச்சினைத் தொடங்குகின்றார்கள். யானை சிறுவர்களையும் பெரியவர்களையும் ஒரு சேர கவரும் தன்மை வாய்ந்த மிருகம். உருவில் பெரியதாக இருந்தாலும் பழகுவதற்கு இனிய மிருகம், அதேபோன்று, அனைவர்க்கும் பெரியவனாகிய பெருமானுடன் பழகப் பழக, நாம் அவனது எளிய தன்மையை புரிந்துகொள்ளலாம். எனவே பெருமானை யானையுடன் இங்கே மணிவாசகர் ஒப்பிடுகின்றார்.
பொருள்
தேவர்கள் பலரும் நினைப்பதற்கு அரியவனும், ஒப்பற்ற ஒருவனும், மாபெரும் சிறப்பை உடையவனும் ஆகிய சிவபெருமானை நினைத்து, அதிகாலை நேரத்தில் சின்னங்கள் ஒலிக்கும் போது, சிவ சிவ என்று சொல்பவளே, தென்னாட்டுக்கு உரிய சிவனே என்று எவரேனும் சொல்வதற்கு முன்னமே, தீயினைச் சாரும் மெழுகு போன்று உருகும் உள்ளத்தை உடையவளே, நேற்று வரை இவ்வாறு இருந்த உனக்கு இன்று என்ன நேர்ந்து விட்டது, உனது தற்போதைய நிலை எங்களுக்கு மிகவும் வியப்பாக உள்ளது. அனைவர்க்கும் பெரியவனாகிய பெருமான் யானை போன்று பழகுவதற்கும் நாம் சிந்திப்பதற்கும் நினைப்பதற்கும் மிகவும் எளியவன் என்றும், எங்களது தலைவன் என்றும், அமுதம் போன்று எங்களுக்கு இனிமையானவன் என்றும், நாங்கள் ஒன்றாக சேர்ந்தும், தனித்தனியாகவும், அவனது புகழினைப் பாடுகின்றோம். அதனைக் கேட்ட பின்னரும் உறக்கத்தில் ஆழ்ந்து இருக்கின்றாயே, வலிய நெஞ்சம் கொண்ட அறிவில்லாத பெண் போன்று, எந்த விதமான தாக்கமும் இல்லாமல் இருக்கின்றாயே, இவ்வாறு இருப்பதும் உனது பண்பு போலும்.



திருவெம்பாவை: பாடல் 8

First Published : 24 December 2015 12:00 AM IST

  கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்
  ஏழில் இயம்ப இயம்பும் வெண் சங்கெங்கும்
  கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
  கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
  வாழி ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்
  ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
  ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
  ஏழை பங்காளனையே பாடேலோர் எம்பாவாய்

கரூர் சுவாமிநாதன் குரலில்..

சற்குருநாதன் குரலில்...

விளக்கம்
குருகு = பறவை. ஏழில் = ஏழு துளைகளை உடைய இசைக் கருவி, நாகசுரம். கேழில் = ஈடு இணையற்ற. ஏழை = உமையம்மை. இந்த பாடல் முழுவதும் வெளியில் இருப்பவர்கள் கூற்றாக அமைந்துள்ளது. ஆழியான் = திருமால். பெருமான் மீது கொண்டிருந்த அன்பினால், ஓர் பூக் குறையக் கண்டு, தனது கண்ணையே தோண்டி எடுத்து இறைவனுக்கு மலராக சமர்ப்பணம் செய்த அன்பின் தன்மை. தன்னுடன் ஒத்து வாராதவர்களை, நீ வாழ்ந்து போவாயாக என்று இளக்காரமாக கூறுவது போன்று, இங்கே உறக்கம் கலையாமல் இருக்கும் பெண்ணைப் பார்த்து, நீ இன்பமாக தூங்கி வாழ்வாயாக என்று ஏளனப் பேச்சு ஒலிப்பதை நாம் உணரலாம்.
பொருள்
பொழுது புலரப்போவதை உணர்த்தும் வகையில் கோழி கூவியதைக் கண்டு, மற்ற பறவைகளும் கூவிவிட்டன; பல இடங்களிலும் ஏழு துளைக் கருவிகளைக் கொண்ட நாதசுரம் எனப்படும் இசைக் கருவி முழங்கின: வெண் சங்குகளும் ஒலித்தன: ஈடு இணையற்ற பரம்பொருளின், ஒப்பற்ற கருணையை நினைத்து சிறந்த பொருள் நயம் கொண்ட பாடல்களை நாங்கள் பாடினோம். இவை எதையும் நீ கேட்டு பொழுது புலர்ந்துவிட்டது என்பதை உணரவில்லையா? அப்படி என்ன ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்துள்ளாய்? தொடர்ந்து தூக்கத்தில் ஆழ்ந்து நீ வாழ்வாயாக. தனது கண்ணினையே பறித்து மலராக இறைவனுக்கு அர்ப்பணம் செய்த திருமாலைப் போன்று, சிவபிரானிடத்தில் அன்பு கொண்டவள் என்று தன்னைக் கூறிக் கொள்ளும் உனது அன்பு தூக்கத்தின் பால் உள்ளது என்பதை நாங்கள் புரிந்துகொண்டோம். ஊழிக்காலத்தையும் கடந்து நின்ற இறைவனை, உமையம்மையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்துள்ள பெருமானை, வாய் திறந்து நீ பாடுவாயாக.




திருவெம்பாவை: பாடல் 9

First Published : 25 December 2015 12:00 AM IST

  முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
  பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே
  உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம்
  உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
  அன்னவரே எம் கணவர் ஆவார் அவர் உகந்து
  சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
  இன்ன வகையே எமக்கு எங்கோன் நல்குதியேல்
  என்ன குறையும் இலோம் ஏல் ஓர் எம்பாவாய்
கரூர் சுவாமிநாதன் குரலில்..
சற்குருநாதன் குரலில்...
விளக்கம்
நீராடுவதற்காக சென்ற பெண்கள் அனைவரும் இணைந்து தங்கள் வேண்டுகோளை பெருமானிடம் வெளியிடுவதாக அமைந்த பாடல். நல்ல பண்புகள் கொண்ட கணவன் அமையவேண்டும் என்று வேண்டுவது தான் பாவை நோன்பின் குறிக்கோள். அந்நாள் வரை சிவபெருமானை வணங்கி போற்றி வந்த பெண்கள், இனி வரும் நாட்களிலும் அவ்வாறே தாங்கள் இருக்க வேண்டும் என்ற ஆசையில், உனது அடியார்களே எங்களுக்கு கணவராக வாய்க்க வேண்டும் என்பதை இங்கே தெரிவிக்கின்றார்கள். இதே கருத்து இந்த பதிகத்தின் பதினெட்டாவது பாடலிலும் சொல்லப்படுகின்றது. பெற்றி = தன்மை. பிரான் = தலைவன். பாங்கு = உரிமை. தொழும்பு = அடிமையாக இருத்தல்.
பொருள்
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னம் தோன்றிய பொருட்களுக்கும் பழமையாக விளங்கும் இறைவனே, வரும் காலத்தில் புதுமையாக தோன்றவிருக்கும் பொருட்களையும் கடந்து நிற்கும் தன்மை படைத்தவனே. உன்னைத் தலைவனாக ஏற்ற சிறப்பான அடியார்களாகிய நாங்கள், உனது அடியார்களின் திருப்பாதங்களைப் பணிவோம்: அத்தகைய அடியார்களையே எங்களது கணவர்களாக ஏற்று, அவர்களது உரிமைப் பொருளாக நாங்கள் திகழ்வோம். அவரது சொற்களை ஏற்று, மிகுந்த விருப்பத்துடன், அவரது கட்டளைகளை எங்களது கடமைகளாக கருதி நிறைவேற்றுவோம்; இவ்வாறான வாழ்க்கை, எங்களது இறைவனாகிய உனது கருணையால் எங்களுக்கு கிடைக்கப் பெற்றால், எந்தவிதமான குறையுமின்றி நாங்கள் வாழ்வோம்.



திருவெம்பாவை: பாடல் 10

First Published : 26 December 2015 12:00 AM IST

  பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
  போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே
  பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
  வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
  ஓத உலவா ஒரு தோழன் தொண்டருளன்
  கோதில் குலத்து அரன் தன் கோயில் பிணாப்பிள்ளைகாள்
  ஏதவன் ஊர் ஏதவன் பேர் ஆருற்றார் ஆரயலார்
  ஏதவனைப் பாடும் பரிசு ஏல் ஓர் எம்பாவாய்
கரூர் சுவாமிநாதன் குரலில்..

சற்குருநாதன் குரலில்...

விளக்கம்
சொற்கழிவு = சொல்லின் எல்லையைக் கடந்தவன். சொல்லுக்கு அப்பாற்பட்டவன். நீராட குளத்திற்குச் சென்ற பெண்கள் தங்களுக்கு முன்னே அங்கே வேறு ஒரு பெண்கள் கூட்டம் இருந்ததைக் கண்டனர். கன்னி மாடத்தில் இருந்துகொண்டு, கோயில் திருப்பணியை தங்களது முழுநேரப் பணியாக கொண்டவர்கள் இந்த பெண்கள். பிணாப் பிள்ளைகள் என்று அழைக்கப்படும் இந்த பெண்கள், தங்களது இறைத்தொண்டின் மூலமாக இறைவனைப் பற்றி அதிகமாக அறிந்திருக்க வேண்டும் என்ற நம்பிக்கையில், தங்களது ஐயங்களை அவர்களிடம் கேட்டறிந்துகொள்ள முயற்சி செய்யும் பாடல். சிவபெருமானைப் பற்றி தாங்கள் அறிந்த விவரங்களை பாடலின் முதல் ஐந்து அடிகளில் சொல்வதையும் நாம் உணரலாம்.
பொருள்
ஏழு பாதாள உலகங்களையும் தாண்டி, சொற்களால் விவரிக்க முடியாத எல்லையையும் தாண்டி நிற்பன பெருமானது திருவடிகள். நிறைந்த மலர்களால் அழகு செய்யப்பட்ட அவனது திருமுடியோ அனைத்து பொருட்களின் முடிவுகளையும் கடந்தது. உமை அம்மையைத் தனது உருவத்தின் ஒரு பகுதியில் ஏந்தியுள்ள பெருமானின் திருவுருவம் ஒன்றல்ல. உலகிலுள்ள அனைத்து உயிர்களிலும் அவன் கலந்திருப்பதால். அனைத்து உயிர்களின் வடிவங்களும் அவனது திருவுருவங்கள். வேதங்கள், தேவர்கள், மற்றும் மனிதர்கள் அனைவரும் அவனது புகழினைச் சொல்ல முயற்சி செய்தாலும், எவராலும் சொல்ல முடியாத அளவுக்கு பெருமையினை உடையவன். அவன் அடியார்களின் தோழன். எப்போதும் அடியார்களின் நடுவே உள்ளவன். குற்றமற்ற குலத்தைச் சார்ந்த பெண்களே, சிவபெருமானின் கோயிலில் திருத்தொண்டு புரியும் பிணாப்பிள்ளைகளே, சிவபெருமானது ஊர், அவனது திருநாமங்கள், அவனது உற்றார் மற்றும் அயலார்கள், அவனைப் புகழ்ந்து பாடும் தன்மை ஆகியவற்றை எங்களுக்கு எடுத்துரையுங்கள்.







திருவெம்பாவை: பாடல் 11

First Published : 27 December 2015 12:00 AM IST

  மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக்
  கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
  ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண் ஆரழல்போல்
  செய்யா வெண்ணீறாடீ செல்வா சிறு மருங்குல்
  மையார் தடங்கண் மடந்தை மணவாளா
  ஐயா நீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின்
  உய்வார்கள் உய்யும் வகை எல்லாம் உய்ந்தொழிந்தோம்
  எய்யாமல் காப்பாய் எமை ஏல் ஓர் எம்பாவாய்

பாடியவர் மயிலாடுதுறை சொ. சிவக்குமார்
பாடியவர் சற்குருநாதன்
விளக்கம்
மொய் = வண்டுகள். தடம் = அகன்ற. மொய்யார் தடம் பொய்கை = வண்டுகள் மொய்க்கும் அகன்ற குளம். மருங்குல் = இடை. எய்யாமல் = இளைத்து வருந்தாமல். இறைவன் செய்யும் ஐந்து தொழில்களும், அவன் எந்த சிரமும் மேற்கொள்ளாமல் செய்யப்படுவதால், விளையாட்டு என்று இங்கே கூறப்படுகின்றது,
பொருள்
வண்டுகள் மொய்க்கும் குளத்தினில் புகுந்த நாங்கள், முகேர் என்ற ஒலி ஒலிக்குமாறு எங்களது கைகளால் குடைந்து குடைந்து நீராடுகின்றோம். சிவபெருமானை வணங்கி வழிபட்டு வரும் பரம்பரையில் வந்த நாங்கள் எப்போதும் உனது திருவடிகளின் பெருமையை நினைத்தபடியே வாழ்ந்து வருகின்றோம். இப்போதும் நீராடும் போதும் உனது திருவடிகளின் பெருமையினை பாடுகின்றோம். அணுகுதற்கு அறிய தீப்பிழம்பு போன்று செம்மையான நிறத்தை உடையவனே, திருநீற்றினை உடலெங்கும் பூசியவனே, வீடுபேறு எனப்படும் நிலையான செல்வத்தை உடையவனே, சிறிய இடையினையும், மை பூசியதும் அகன்று காணப்படுவதும் ஆகிய கண்களை உடைய பார்வதி தேவியின் மணாளனே, உனது திருவருளின் உதவியினால், உனது திருவிளையாடல் மூலம், வாழ்வினில் உய்வினை அடையும் அடியார்கள் பல படிகளைக் கடந்து முன்னேறுவது போன்று, நாங்களும் எங்களது வாழ்வினில் உன்னை எப்போதும் புகழ்ந்து பாடும் இந்த நிலையினை அடைந்துள்ளோம். நாங்கள் இனிமேல் பிறவிப் பிணியில் அகப்பட்டு, பல பிறவிகள் எடுத்து வருந்தி இளைக்காதவாறு நீதான் எங்களை காப்பாற்ற வேண்டும்.





திருவெம்பாவை: பாடல் 12

First Published : 28 December 2015 12:00 AM IST

  ஆர்த்த பிறவித் துயர் கெட நாம் ஆர்த்தாடும்
  தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
  கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
  காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
  வார்த்தையும் பேசி வளை சிலம்ப வார் கலைகள்
  ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல் மேல் வண்டார்ப்பப்
  பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்
  ஏத்தி இருஞ்சுனை நீராடேல் ஓர் எம்பாவாய்

பாடியவர் மயிலாடுதுறை சொ. சிவக்குமார்
பாடியவர் சற்குருநாதன்

விளக்கம்
ஆர்த்த = பிணைத்துள்ள. ஆர்த்து ஆடும் = ஆரவாரம் செய்தவாறு நீராடும். புனித தீர்த்தங்கள், அவைகளில் முழுகிக் குளிக்கும் மனிதர்களின் பாவங்களைக் களைவது போன்று, நமது மாசுகளைக் களைந்து, மலங்களின் பிடியிலிருந்து நம்மை மீட்பவன் என்பதால் இறைவனை தீர்த்தன் என்று இங்கே கூறுகின்றார்.

பொருள்
பெருமானே, எங்களுடன் இறுக்கமாக பிணைந்துள்ள பிறவிப் பிணி எங்களை விட்டு நீங்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாங்கள் உன்னைக் குறித்த சிந்தைனையில் மூழ்கிக் குளிக்கின்றோம். பல நலங்கள் உடைய சிற்றம்பலத்தில், தனது கையினில் தீப்பிழம்பினை ஏந்தியவாறு நடமாடும் கூத்த பிரான், இந்த வானத்தையும் உலகத்தையும் படைத்தும், காத்தும், மறைத்தும் திருவிளையாடல்கள் புரிகின்றான். அவனது சிறப்புகளையே பேசியவாறு நாங்கள், எங்களது கைகளில் அணிந்துள்ள வளையல்கள் ஒலிக்கவும், இடையில் அணிந்துள்ள மேகலை முதலிய அணிகலன்கள் ஆரவாரம் செய்யவும், கூந்தலில் அணிந்துள்ள மலர்களைச் சூழும் வண்டுகள் ரீங்காரம் செய்யவும், பூக்கள் நிறைந்துள்ள இந்த பொய்கையில் நீராடுகின்றோம். எங்களை அடிமையாக உடைய சிவபெருமானின் பொன்னான பாதங்களை புகழ்ந்தவாறு, இங்குள்ள பெரிய சுனையில் நீராடலாம், அனைவரும் வாருங்கள்.




திருவெம்பாவை: பாடல் 13

First Published : 29 December 2015 12:00 AM IST

  பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
  அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
  தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தலினால்
  எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
  பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து நம்
  சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
  கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
  பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்

பாடியவர் மயிலாடுதுறை சொ. சிவக்குமார்

பாடியவர் சற்குருநாதன்
 

விளக்கம்
சிவபெருமானைப் பற்றி சிந்தித்த வண்ணம், பேசிய வண்ணம் நீராடச் சென்ற பெண்களுக்கு, குளத்தினைக் கண்டவுடன், பெருமானின் தோற்றமும் அம்மையின் தோற்றமும் நினைவுக்கு வருகின்றன. குளத்தில் உள்ள கருங்குவளை மலர்கள் அன்னையின் நிறத்தையும், பறவைகள் கூட்டங் கூட்டமாக இருக்கும் நிலை அன்னையின் கையில் இருக்கும் வளையல்களையும், செங்கமலப் பூக்கள் பெருமானின் நிறத்தையும் பொய்கையின் அருகில் இருக்கும் பாம்புகள் பெருமானின் உடலில் பின்னியிருக்கும் பாம்புகளையும் நினைவுபடுத்தவே, பொய்கையினை பெருமானும் பிராட்டியும் கலந்து இருக்கும் நிலையினை உணர்த்துவதாக கூறுகின்றார்கள். குருகு என்பதற்கு பறவைகள் என்றும் வளையல்கள் என்று இரண்டு விதமான பொருள்கள் கொள்ளலாம்.

பொருள்
நீராட இருக்கும் பொய்கை கருங்குவளை மலர்களையும், செந்தாமரை மலர்களையும் உடையதாய், கூட்டங் கூட்டமாக பறவைகளை உடைத்ததாக விளங்குகின்றது. மேலும் அருகில் பாம்புகள் ஒன்றுகொன்று பிணைந்தவாறு காணப்படுகின்றன. இவ்வாறு இருக்கும் நிலை குளிக்கச் சென்ற பெண்களுக்கு, குவளை மலர்கள் அம்மையின் நிறத்தையும், பறவையினங்கள் அம்மையின் கையில் அணிந்துள்ள வளையல்களையும், செங்கமல மலர்கள் பெருமானின் நிறத்தையும், அருகில் உள்ள பாம்புகள் அவனது மேனியில் தவழும் பாம்புகளையும் நினைவூட்டவே, பெருமானும் பிராட்டியும் இணைந்து நிற்கும் நிலை போன்று பொய்கையில் உள்ள பல பொருட்கள் இணைந்துள்ளன என்று அவர்கள் கூறுகின்றனர். மேலும் தங்களது அக அழுக்குகளை நீக்கிக்கொள்ள விரும்புவோர் பெருமானையும் பிராட்டியையும் நாடுவது போன்று, புற அழுக்குகளை நீக்கிக்கொள்ள விரும்பும் மனிதர்கள் குளத்தினை நாடுகின்றார்கள். இந்த தன்மையிலும் இங்குள்ள குளம், பெருமானும் பிராட்டியும் இணைந்திருக்கும் நிலையை ஒத்துள்ளது. இவ்வாறு உள்ள குளத்தில் பொங்கி வருகின்ற நீரினில் பாய்ந்து, நமது கையில் அணிந்துள்ள வெண்சங்கு வளையல்களும், காலில் அணிந்துள்ள சிலம்புகளும் ஒன்றுடன் ஒன்று கலந்து ஒலிகளை எழுப்ப, மகிழ்ச்சியால் நமது மார்பகங்கள் விம்மிப் புடைக்க, குடைந்து நீராடுவதால் குளத்தில் உள்ள நீர் மேலே பொங்கி எழும்புமாறு, தாமரைப் பூக்கள் நிறைந்த குளத்தினில் நாம் நீராடுவோமாக.




திருவெம்பாவை: பாடல் 14

First Published : 30 December 2015 12:00 AM IST

   காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
  கோதை குழலாட வண்டின் குழாமாடச்
  சீதப் புனலாடிச் சிற்றம்பலம் பாடி
  வேதப் பொருள் பாடி அப்பொருள் ஆமாபாடிச்
  சோதி திறம் பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
  ஆதி திறம் பாடி அந்தம் ஆமாபாடிப்
  பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை தன்
  பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்
பாடியவர் மயிலாடுதுறை சொ. சிவக்குமார்

பாடியவர் சற்குருநாதன்

விளக்கம்
பேதித்தல் = வேறுபாடு செய்தல். தவறு செய்யும் குழந்தையை அடித்தும் கண்டித்தும் திருத்தும் ஒரு தாய், அவ்வாறில்லாத குழந்தையை கண்டிப்பதில்லை. ஏன், முன்னம் தவறு செய்து தண்டிக்கப்பட்ட அதே குழந்தை, தவறு செய்யாத தருணங்களில், தாயின் பாராட்டுதலைப் பெறுவதையும் நாம் காண்கின்றோம். ஒவ்வொரு உயிரும், இறைவனைப் பற்றி அறிந்துள்ள நிலையில், பாசங்களை அறுத்த நிலையில் ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன. எனவே அந்தந்த உயிரின் பக்குவ நிலைகளுக்கு ஏற்ப, இறைவனின் அருளின் திறம் மாறுபட வேண்டிய அவசியம் உள்ளது. பெண்கள் அணிந்துள்ள மலர்களில் உள்ள தேனைப் பருகுவதற்காக சூழும் வண்டுகள், பெண்கள் அமிழ்ந்து குளிக்கையில் மலர்கள் நனைவதால், கூந்தலை விட்டு அகலுகின்றன. நீர்நிலைக்கு மேல் கூந்தல் எழும்போது வண்டுகள் மலர்களைச் சூழ்கின்றன. இவ்வாறு அவை மேலும் கீழும் சென்று வருவது வண்டுகள் ஆடுவது போல் தோன்றுகின்றது. ரீங்காரமிட்டு எப்போதும் பாடும் வண்டுகள் ஆடுகின்றன, காதில் அணிந்துள்ள குழைகள், உடலில் அணிந்துள்ள ஆபரணங்கள் மற்றும் கூந்தலில் சூடியுள்ள மலர்கள் ஆகியவை ஆடும் ஆட்டத்தில் கலந்துகொண்டு வண்டுகளும் ஆடுகின்றன என்று நயமாக கூறுகின்றார்.
பொருள்
காதுகளில் அணிந்துள்ள குழை ஆபரணங்கள் ஆடவும், உடலின் பல்வேறு இடங்களில் அணிந்துள்ள பசும்பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்கள் ஆடவும், கூந்தலில் சூடியுள்ள மலர்மாலைகள் ஆடவும், மாலைகளைச் சூழுந்துள்ள வண்டுகள் ஆடவும், நாம் அனைவரும் இந்த குளிர்ந்த நீர்நிலையில் நீராடுவோம். அவ்வாறு நீராடும் போது, சிற்றம்பலத்தில் நடமாடும் கூத்தனைப் பாடுவோம், வேதத்தின் பொருளையும், வேதத்தின் பொருளாக இருக்கும் சிவபெருமானையும், பரஞ்சோதியாகத் திகழும் அவனது தன்மையையும், அவனது தலையில் சூடப்பட்டுள்ள கொன்றை மாலையையும், அனைத்து உயிர்களுக்கும் ஆதியாக அவன் திகழும் தன்மையையும், அனைத்து உயிர்களுக்கும் அந்தமாக அவன் திகழும் தன்மையையும், உயிர்களின் தன்மைக்கு ஏற்றவாறு வேறு வேறு விதங்களில் நமக்கு கருணை காட்டி நமது ஞானத்தினை வளர்க்கும் அம்மையின் திருவடிகளின் தன்மையையும் பாடி நாம் நீராடுவோமாக.




திருவெம்பாவை: பாடல் 15

First Published : 31 December 2015 12:00 AM IST

  ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம் பெருமான்
  சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர
  நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண் பனிப்பப்
  பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள்
  பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
  ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
  வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
  ஏருருவப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்.

பாடியவர் மயிலாடுதுறை சொ. சிவக்குமார்

பாடியவர் சற்குருநாதன்

விளக்கம்
வாய் ஓவாள் = வாய் ஒழியாமல் பேசுவாள். ஓவா = இடைவிடாத. தாரை = தீர்த்துளி. வார் = கச்சு. ஏர் = எழுச்சி. தங்களின் தோழி ஒருத்திக்கு நடந்த அனுபவங்களை விவரித்துக் கூறும் ஒரு பெண்மணி, அவ்வாறான மாற்றம் ஏற்படக் காரணமாக இருந்த இறைவனை பாடியவாறு நீராடலாம் என்று கூறுகின்றாள். வித்தகர் = சாமர்த்தியம் உடையவர். அரையன் = அரசன்.

பொருள்
ஒரு முறை எனது பெருமான் என்று தனது வாய் திறந்த சொன்ன எமது தோழி, அதன் பின்னர், வாய் ஒழியாமல் பெருமானின் சிறப்புகளைப் பேசுகின்றாள். பெருமானைப் பற்றிப் பேசுவதால், அவளின் சிந்தை களிப்புற்று, கண்களிலிருந்து தாரை தாரையாக, இடைவிடாது கண்ணீர் வழிகின்றது. மற்ற தேவர்களைப் பணியாத அவள், நிலத்தினில் விழுந்து சிவபெருமானைப் பணிந்த பின்னர், நிலத்திலிருந்து எழாமல் வெகுநேரம் கிடக்கின்றாள். இவ்வாறு, இந்த பெண்ணைத் தன் மீது பித்துக்கொள்ளச் செய்த சிவபெருமானை, சாமர்த்தியம் உடையவனை, மார்பினில் நகைகளையும் கச்சினையும் அணிந்த பெண்களாகிய நாம் அனைவரும், நமது வாயார பாடி, பொய்கையில் உள்ள நீரின் திவலைகள் மேலே எழுமாறு, பாய்ந்து நீராடுவோம்.





திருவெம்பாவை: பாடல் 16

First Published : 01 January 2016 12:00 AM IST

  முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்து உடையாள்
  என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
  மின்னிப் பொலிந்து எம் பிராட்டி திருவடி மேல்
  பொன்னம் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்
  என்னச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
  தன்னில் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
  முன்னி அவள் நமக்கு முன் சுரக்கும் இன்னருளே
  என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்

பாடியவர் கரிவலம்வந்தநல்லூர் சுந்தர்
பாடியவர் சற்குருநாதன்

விளக்கம்
மகளிர் அனைவரும் ஒன்று கூடி மழை பொழிய வேண்டி பாடும் பாடல் இது. இட்டிடை = மிகவும் சிறிய இடை. சுருக்கி = வற்றச் செய்து. சிலம்பி = ஒலித்து. சிலை குலவி = வில்லினை வளைத்து. முன்னி = முதலில். பொய்கையில் பெருமானும் பிராட்டியும் இணைந்து இருப்பதுபோல் கண்டு மகிழ்ந்த பெண்கள், மழையுடன் தொடர்புகொண்டுள்ள, மேகம், இடி, மின்னல், மழை அனைத்தும் எவ்வாறு இறைவியின் தோற்றத்தை நினைவுபடுத்துகின்றன என்று உருவகிக்கும் பாடல்.
பொருள்
கடலில் இருக்கும் நீர் சூரியனின் வெப்பத்தால் ஆவியாக மாறி, கருநிற மேகங்களாக மாறுகின்றன, அவ்வாறு மாறிய மேகங்கள், எம்மை உடையவளாகிய தேவியின் நிறத்தை ஒத்து விளங்குகின்றன. அத்தகைய மேகங்கள் ஒன்றுக்கொன்று உராய்ந்து, தேவியின் சிறுத்த இடைபோன்று மின்ன, பிராட்டியின் காலில் அணிந்துள்ள சிலம்புகள் இடித்து ஏற்படுத்தும் ஓசையினை ஒத்த இடிகள் முழங்க; தேவியின் புருவத்தினைப் போன்று வளைந்த வானவில் ஆகாயத்தில் தோன்ற, தான் பிரியாது இருக்கும் பெருமானின் அன்பர்களுக்கு, உமையம்மை தானே முன் வந்து அருளுவதைப்போன்று, மழை பொழிந்து உலகம் செழிக்க வேண்டும்.




திருவெம்பாவை: பாடல் 17

First Published : 02 January 2016 12:00 AM IST

  செங்கணவன் பால் திசைமுகன் பால் தேவர்கள் பால்
  எங்கும் இலாததோர் இன்பம் நம் பாலதாக்
  கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
  இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
  செங்கமலப் பொற்பாதம் தந்தருளுஞ் சேவகனை
  அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
  நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
  பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்
பாடியவர் கரிவலம்வந்தநல்லூர் சுந்தர்
பாடியவர் சற்குருநாதன்


விளக்கம்
செங்கணவன் = திருமால். திசைமுகன் = நான்முகன். கொங்குண் = நறுமணத்தினை உடைய. ஒரு பெண்மணி தனது தோழிக்கு கூறுவதாக அமைந்த பாடல். சேவகன் = வீரன்.
பொருள்
நறுமணம் வீசும் கூந்தலை உடையவளே, திருமால், நான்முகன் மற்றுள்ள தேவர்கள் ஆகியோரிடத்தில் இல்லாத அன்பும் இன்பமும் எம்மிடம் வைத்துள்ள இறைவன், எங்களது குற்றங்களை நீக்கி, எமது இல்லங்களில் எழுந்தருளி, தனது பொன் போன்ற திருப்பாதங்களை எங்களது தலையில் சூட்டி அருள் புரிந்து, எங்களை பெருமைப் படுத்துகின்றான். அத்தகைய வீரனை, அழகிய கண்களை உடைய அரசினை, அடியார்களுக்கு ஆரமுதமாகத் திகழ்பவனை, எங்கள் பெருமானை, நமக்கு எல்லா நலங்களும் வாய்க்குமாறு, புகழ்ந்து பாடி, தாமரைப் பூக்கள் நிறைந்த குளத்தில் பாய்ந்து நீராடுவோமாக.




திருவெம்பாவை: பாடல் 18

First Published : 03 January 2016 12:00 AM IST

   அண்ணாமலையான் அடிக்கமலம் சென்று இறைஞ்சும்
  விண்ணோர் முடியின் மணித் தொகை வீறு அற்றாற்போல்
  கண் ஆர் இரவி கதிர் வந்து கார் கரப்பத்
  தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாம் அகலப்
  பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கு ஒளி சேர்
  விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
  கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல் பாடிப்
  பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்

பாடியவர் கரிவலம்வந்தநல்லூர் சுந்தர்
பாடியவர் சற்குருநாதன்


விளக்கம்
வீறு அற்றாற்போல் = ஒளி மழுங்கிக் காணப்படுதல். கண் ஆர் இரவி = கண்களில் நிறைந்து நாம் காண்பதற்கு உதவும் சூரியன். கரப்ப = மறைக்க. தாரகை = நட்சத்திரம்.

பொருள்
அண்ணாமலையான் ஆகிய இறைவனின் திருப்பாதங்களில், தங்களது தலைகளைச் சாய்த்து வழிபடும் தேவர்களின் கிரீடத்தில் உள்ள பலவகையான மணிகள், இறைவனின் திருப்பாதங்களின் ஒளியின் முன்னே தங்களது பொலிவை இழக்கின்றன. அது போன்று, நமது கண்களில் நிறைந்து நாம் காண்பதற்கு உதவும் சூரியன் உதிக்கும் சமயத்தில் இருள் அகலுகின்றது, மற்றும் வானில் அது வரை ஒளியுடன் திகழ்ந்த நட்சத்திரங்கள் ஒளி மழுங்கி அகல்கின்றன. பெண்ணாகவும், ஆணாகவும், அலியாகவும், ஒளி நிறைந்த ஆகாயமாகவும், நிலமாகவும் இருக்கும் இறைவன், மேலே குறிப்பிட்ட பொருட்களிலிருந்து வேறாகவும், நமது கண்களில் நிறைந்த அமுதமாகவும் உள்ளான். அவனது திருவடிகளைப் பாடியவாறு, தாமரைகள் நிறைந்த இந்த குளத்தினில் நாம் பாய்ந்து நீராடுவோம்.






திருவெம்பாவை: பாடல் 19

First Published : 04 January 2016 12:00 AM IST

  உங்கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
  அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
  எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
  எம் கொங்கை நின்னன்பர் அல்லார் தோள் சேரற்க
  எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
  கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க
  இங்கு இப் பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல்
  எங்கெழில் என் ஞாயிறு எமக்கு ஏல் ஓர் எம்பாவாய்
பாடியவர் கரிவலம்வந்தநல்லூர் சுந்தர்
பாடியவர் சற்குருநாதன்

விளக்கம்
பாவை நோன்பு நோற்பதன் நோக்கமே, தங்களது விருப்பபடி, கண் நிறைந்த கணவன் அமைய வேண்டும் என்று வேண்டுவது தான். எத்தகைய கணவன் தங்களுக்கு அமைய வேண்டுமென்று, தங்களது விருப்பத்தை இறைவனிடம் சமர்ப்பித்து, வேண்டும் பாடல். நமது இந்து மதத் திருமணங்களில் தொன்றுதொட்டு சொல்லப்படும் ஒரு சொல், இங்கே பாடலின் முதல் பகுதியாக வருகின்றது. தனது பெண்ணை, தனது மருமகனிடம் தாரை வார்த்துக் கொடுக்கும் தகப்பனார், சொல்லும் வார்த்தை தான் அது. தான் இத்தனை நாள் பாதுகாத்து வந்த பெண்ணை, இன்று உன்னிடம் அடைக்கலமாகத் தருகின்றேன், இனி வரும் நாட்களில் அவளை பாதுகாக்க வேண்டியது உன்னுடைய பொறுப்பு என்பதுதான் அது. தனக்கு வரும் கணவர், சைவநெறியினை பின்பற்றுவராக இருக்க வேண்டும் என்ற கவலை நீராடும் பெண்களுக்கு ஏற்படுகின்றது. தாங்கள் அந்நாள் வரை செய்து வந்த சிவ வழிபாடு, தங்களது திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடக்க வேண்டும் என்ற ஆசையில் விளைந்த கவலை இது,
பொருள்
எங்களை, உனது அடைக்கலப் பொருளாக ஏற்று நீ காக்க வேண்டும், என்று எங்களது தந்தைமார்கள் நாளை எங்கள் திருமணத்தில், எங்களுக்கு கணவராக வாய்க்கவிருக்கும் ஆண்மகனிடம் சொல்லப்போகும் சொல். பரம்பரை பரம்பரையாக அனைத்து தந்தையரும் சொல்லும் அந்தச் சொல், எங்களது உள்ளத்தில் அச்சத்தை தோற்றுவிக்கின்றது. ஒருகால் எங்களது கணவர், உன்னுடைய அடியாராக இல்லாமல் இருந்துவிடுவாரோ என்ற அச்சம் எங்களுக்கு எழுகின்றது. உன்னிடம் எங்களது விருப்பமான தீர்மானத்தை உரைக்கின்றோம், நீ அதனைக் கேட்டு அந்த விருப்பம் நிறைவேறுமாறு அருள் புரிவாயாக. எங்களது மார்புகள், உனது அன்பர் அல்லாதவரின் தோள்களைச் சேரக்கூடாது. எங்களது கைகள் உன்னைத் வேறு எந்த தெய்வத்திற்கும் பணி செய்யக்கூடாது. இரவும் பகலும் எப்போதும் எங்களது கண்கள் உன்னைத் தவிர வேறு எவரையும் காணக்கூடாது. இத்தகைய பரிசினை, நீ எங்களுக்கு அருளினால், நாங்கள் எந்த கவலையும் இன்றி வாழ்வோம். தினமும் கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கில் உதிப்பது போன்று, உலகினில் நடக்கும் நிகழ்வுகள் மாறினாலும் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை.




திருவெம்பாவை: பாடல் 20

First Published : 05 January 2016 12:00 AM IST

   போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
  போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
  போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
  போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
  போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
  போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
  போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
  போற்றியாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.

பாடியவர் கரிவலம்வந்தநல்லூர் சுந்தர்
பாடியவர் சற்குருநாதன்

விளக்கம்
இந்தப் பாடல் முழுவதும் இறைவனின் திருவடிப் பெருமையை பேசுகின்றது. ஐந்து தொழில்களையும் இறைவன் செய்யும் தன்மையை, இறைவனின் திருவடிகளுக்கு ஏற்றி, தோற்றமாகவும், போகமாகவும் (இன்ப துன்பங்களை அளித்து காக்கும் நிலை), ஈறாகவும், மறைந்து இருக்கும் பொருளாகவும், அனைத்து உயிர்களும் உய்வதற்கான வழியாகவும் விளங்கும் தன்மை இங்கே கூறப்படுகின்றது. திருவடிகளை நாம் பற்றிக்கொண்டால் தான் உய்ய முடியும் என்பதால், இறைவன் கருணை கூர்ந்து அவனது திருவடிகளை, நாம் பற்றிக்கொள்வதற்கு ஏதுவாக, நமக்கு அருள வேண்டும் என்ற கோரிக்கை இங்கே வைக்கப்படுகின்றது.

பொருள்
எங்கள் தலைவனே, அனைத்துப் பொருட்களுக்கும் ஆதியாகத் திகழும் உனது திருவடித் தாமரையை எங்களுக்கு அருள்வாயாக. அனைத்துப் பொருட்களுக்கும் இறுதியாக இருக்கும் சிவந்த மலர் போன்ற திருவடிகளை எங்களுக்கு அருள்வாயாக. அனைத்து உயிர்களையும் தோற்றுவிக்கும் பொன்னான திருவடிகளை எங்களுக்கு அருள்வாயாக. அனைத்துப் பொருட்களையும் காத்தும், இன்ப துன்பங்களை நுகரச் செய்தும் அருள் புரியும் பூ போன்ற திருவடிகளை எங்களுக்கு அருள்வாயாக. ஊழிக்காலத்தில் அனைத்து உயிர்களும் ஒடுங்குவதற்கு உரிய இடமாக விளங்கும் திருவடியை எமக்கு அருள்வாயாக. திருமாலும் நான்முகனும் கண்டு அறிய முடியாத தாமரை போன்ற திருவடிகளை எங்களுக்கு அருள்வாயாக. எங்களை எல்லாம் ஆட்கொண்டு உய்விக்கும் பொன் மலர் போன்ற திருவடிகளை எமக்கு அருள்வாயாக. நாங்கள் செய்யும் மார்கழி நீராடலும், பாவை நோன்பும் உமது அருள் எங்களுக்கு கிட்டுவதற்கு வழி வகுக்க வேண்டும். மார்கழி நீராடலையும், உம்மையும், உமது திருவடிகளையும், இறைவனே நாங்கள் போற்றுகின்றோம்.



































































































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக