திங்கள், 20 ஜூலை, 2015

நினைத்ததை நிறைவேற்றும் துளசி பூஜை

 ராதே கிருஷ்ணா 21-07-2015




நினைத்ததை நிறைவேற்றும் துளசி பூஜை

:
செவ்வாய், ஜூலை 21,2015, 5:45 AM IST
பதிவு செய்த நாள்:
திங்கள் , ஜூலை 20,2015, 5:05 PM IST
பிஷேக பிரியரான சிவபெருமானுக்கு உகந்த இலை வில்வம். அதைப்போல் அலங்கார பிரியரான திருமாலுக்கு உகந்தது துளசி. திருமாலின் திருமார்பில், மாலையாக மகிழ்வோடு காட்சி தருபவள் துளசி தேவி. ‘துளசி’ என்ற சொல்லுக்கு ‘தன்னிகரற்றது’ என்று பொருளாகும்.

‘துளசி தீர்த்தத்தால் எனக்கு அபிஷேகம் செய்தால், பல ஆயிரம் அமிர்தக் குடங்களால் அபிஷேகம் செய்த ஆனந்தமடைவேன்’ என்று மகாவிஷ்ணுவே கூறியுள்ளார்.

துளசி செடியின் நுனியில் பிரம்மாவும், அடியில் சிவபெருமானும், மத்தியில் திருமாலும் வாசம் செய்கின்றனர். இவர்கள் தவிர சூரியன், தேவர்கள், கங்கை உள்ளிட்ட புனித நதிகளும் துளசி செடியில் வசிப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

துளசி இலை பட்ட தண்ணீர், கங்கை நீருக்கு சமமானதாக கருதப்படுகிறது. துளசி பூஜை செய்வதால் எட்டு வகை செல்வங்களும் கிட்டும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும். துளசி திருமாலுக்கும், திருமகளுக்கும் மிகவும் பிடித்தமானது. துளசி இருக்கும் இடத்தில் மகாவிஷ்ணு நிறைந்து இருப்பார் என்பது ஐதீகம்.

பார்வதி தேவி, துளசி பூஜை செய்ததால் சிவபெருமானின் இடப்பாகத்தைப் பெற்றாள். அதைப்போல் துளசி பூஜை செய்ததால் அருந்ததிதேவி வசிஷ்டரை மணந்தாள். ருக்மணி கிருஷ்ணரை மணவாளனாக அடையும் பேறு பெற்றாள். கருட பகவான் விஷ்ணுவுக்கு வாகனமாக மாறியதும், அவர் செய்த துளசி பூஜையின் மகிமையால் தான். சாவித்திரி துளசி பூஜை செய்ததால் தான் தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்தாள். விநாயகர் கஜாக சூரனை வென்று விக்னேஷ்வரன் என்ற பட்டத்தை பெற்றதும் துளசி பூஜையால் தான்.

துளசியின் கதை

இத்தனை மகிமையும் மகத்துவமும் வாய்ந்த துளசி, பூலோகம் வந்த கதை தெய்வீகமானது.

துளசித்தாய் பூமியில் ‘பிருந்தை’ என்ற பெயரில் பிறந்து, ஜலந்தரன் என்ற அரக்கனை திருமணம் செய்து இருந்தாள். ஜலந்தரன் கடும் தவம் செய்து அதனால் பெற்ற வரத்தால் தேவர்களை கொடுமைப்படுத்தினான். இதனால் தங்களை காப்பாற்றும்படி தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர்.

இதைத்தொடர்ந்து, ஜலந்தரன் சிவனிடம் போரிட வேண்டி கயிலைக்கு புறப்பட்டு கொண்டு இருந்தான். அவன் முன் ஒரு அந்தணர் வேடத்தில் தோன்றிய சிவன் அவனிடம் பேசினார். அப்போது ஜலந்தரன் தன்னால் எதையும் செய்யமுடியும். என்னால் முடியாதது எதுவும் இல்லை என்று இறுமாப்புடன் கூறினான்.

உடனே அந்தணர் வடிவில் இருந்த சிவபெருமான் தன் கால் பெருவிரலால் மண்ணில் ஒரு வட்டமிட்டு, அந்த வட்டத்தை பெயர்த்து எடுத்து தலைமீது வைக்கவேண்டும் என்று கூறினார். ஜலந்தரன் அந்த வட்டத்தை பெயர்க்கும் முயற்சியில் ஈடுபட்டான். இருகரங்களாலும் அதனைப் பெயர்த்து தலைக்கு மேல் தூக்கி தாங்கினான். உடனே அந்த வட்ட சக்கரம் அவன் உடலை இரு கூறுகளாக பிளந்து, மீண்டும் அனல்கக்கும் தீப் பிழம்பாக மாறி சிவனின் திருக்கரத்தை சென்றடைந்தது. இதற்கிடையில் கயிலைக்குச் சென்ற கணவன் திரும்பி வராததை கண்ட பிருந்தை கவலை அடைந்தாள். அவளது கற்பு என்று அழிகிறதோ அன்று தான் ஜலந்திரன் அழிவான் என்ற நிலை இருந்தது. இதைத் தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் தெரிவித்தனர். உடனே அவர் பிருந்தையின் கற்பைச் சோதிக்க ஒரு தவ முனிவர் வடிவில் பிருந்தை முன் சென்றார். அப்போது அவர் ஜலந்தரன் இருகூறாகி இறந்து விட்டதை கூறி அவள் முன் அந்த இருகூறுகளும் மாயையினால் வரும்படி செய்தார்.

பிருந்தை தன் கணவன் மீண்டும் உயிர் பெற்று வர வேண்டும் என மன்றாடி கேட்டுக்கொண்டாள். உடனே திருமால் ஜலந்தரனின் உடற்கூறுகளை ஒன்றாகச் சேர்த்து, தான் அந்த உடலில் புகுந்து ஜலந்தரனே மீண்டும் வந்து விட்டதாக நம்பும்படி செய்தார்.

பின்னர் திருமால் சிலகாலம் பிருந்தையுடன் குடும்பம் நடத்தினார். காலப்போக்கில் தன்னுடன் வாழ்பவர் தன் கணவன் இல்லை. மாயையில் வந்தவர் என்பதை அறிந்து கொண்ட பிருந்தை தீயில் புகுந்து உயிர் துறந்தாள்.

இதனால் மிகவும் மனம் வருந்திய திருமால் பிருந்தை தீக்குளித்த இடத்திலேயே அமர்ந்து இருக்க, இதை பார்த்த பார்வதி தேவி தனது இடது கை சிறு விரலில் இருந்து ஒரு விதையை உண்டாக்கி சிவபெருமானிடம் கொடுக்க, அதை பிரம்மா பெற்று பிருந்தை இறந்த இடத்தில் ஊன்றி தண்ணீர் வார்த்தார். அங்கே துளசி செடி உண்டாயிற்று. திருமால் அந்தத் துளசியை எடுத்து தன்மேல் அணிந்து மீண்டும் சகஜ நிலையை அடைந்தார்.

இந்தச் சம்பவம் நடந்த இடம் ‘திருவிற்குடி’ என்றத் திருத்தலமாகும். துளசித்தாய் தோன்றிய திருவிற்குடி சிவதலம் நாகப்பட்டினத்தில் இருந்து திருவாரூருக்கு செல்லும் வழியில் உள்ளது. ஜலந்தரனை சம்ஹாரம் செய்த திருவிற்குடி சிவபெருமானின் அட்டவிராட்டான தலங்களுள் ஒன்றாகும். திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற இக்கோவில் பிருந்தையை திருமால் துளசியாக ஏற்றுக் கொண்ட தலம். இக்கோவிலில் இறைவன் பெயர் விரட்டானேசுவரர். இறைவியின் நாமம் ஏலவார் குழலி பரிமளநாயகி. தலமரம் துளசி.

துளசி வழிபாடு

கார்த்திகை மாதம் பவுர்ணமி தினத்தன்று துளசித்தாய் அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. அன்று துளசித்தாய்க்கு பூஜை செய்வது மிகுந்த பலனை தரும். துளசி பூஜை செய்ய வாரத்தில் செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும், கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசியும் ஏற்ற நாட்கள் ஆகும்.

கார்த்திகை மாதம் ஏகாதசிக்கு மறுநாள் துவாதசி அன்று மகாவிஷ்ணு துளசியைத் திருமணம் செய்து கொண்டார். அந்த நாளை ‘‘பிருந்தாவன துளசி’’ அல்லது ‘துளசிக்கல்யாணம்’ எனக் கொண்டாடுவார்கள். அன்று காலை சுமங்கலிப் பெண்கள் குளித்துவிட்டு, துளசி மாடத்தை சுற்றி மெழுகி, கோலமிட்டு காவி பூச வேண்டும்.

சாதம், பால் பாயாசம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பழங்கள், தேங்காய் வைத்து பூஜை செய்ய வேண்டும். ஒரு விளக்கு திரியை நெய்யில் வைத்து, தீபம் ஏற்றி வணங்க வேண்டும். துளசி லட்சுமி வடிவானவள். துளசி செடியுடன் நெல்லிமரக்குச்சி (மகாவிஷ்ணு வடிவம்) சேர்த்து வைக்க வேண்டும்.

வீட்டில் சாளகிராமம் இருந்தால் அதனையும் துளசி மாடத்தில் வைத்து பூஜை செய்ய வேண்டும். நிவேதனமாக சர்க்கரை பொங்கல் வைத்து வணங்க வேண்டும். துளசி பூஜைக்கு முன்னர் விக்னேஸ்வர பூஜை செய்ய வேண்டும். பூஜை முடிந்ததும் பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, பூ, கண்ணாடி வளையல்கள் வைத்து கொடுக்க வேண்டும். ஒரு ஏழை அந்தண சிறுமியை மனையில் அமரவைத்து சந்தனம் பூசி, குங்குமம், புஷ்பம், புதுத்துணி கொடுக்க வேண்டும். பால் பாயாசத்தை பாத்திரத்துடன் தானம் கொடுக்கலாம்.

துளசியை ஒவ்வொரு இலையாக இட்டு பூஜை செய்ய வேண்டும். ஒரே இலையை கிள்ளி கிள்ளி போடக்கூடாது. பவுர்ணமி, அமாவாசை, துவாதசி, ஞாயிற்றுக்கிழமை, கிரகண காலம், மதியம், சந்தியா காலம், இரவு முதலிய காலங்களில் துளசியை பறிக்கக் கூடாது.

கார்த்திகை மாதம் துளசி பூஜை செய்பவர்களுக்கும், துளசியால் பகவானை அர்ச்சனை செய்பவர்களுக்கும் அவர்கள் நினைத்தது நிறைவேறும். அவர்களின் எல்லா கோரிக்கைகளும் நிறைவேறப் பெறுவார்கள் என புராணம் கூறுகிறது.

கீழ்க்கண்ட நாமாவளிகளை கூறி குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்

ஓம் ஸ்ரீம் பிருந்தா தேவ்யை நம
ஓம் விஸ்வ பூஜதாயை நம
ஓம் விஷ்ணுப்ரியாயை நம
ஓம் தேவ மூலிகாயை நம
ஓம் கிருஷ்ண ப்ரியாயை நம
ஓம் சவுபாக்ய நிலயாயை நம
ஓம் புஷ்பசாராயை நம
ஓம் நந்தவன நாயகாயை நம
ஓம் விஸ்வ பாவணாயை நம
ஓம் தான ப்ரதாயின்யை நம
ஓம் மகாலட்சுமி வாசாயை நம
ஓம் சகல மாட கலாலங்கார்யை நம
ஓம் ஸ்ரீராமப்ரியாயை நம
ஸ்ரீதுளசி தேவ்யை நமோ நம.


பக்தியுடன் துளசி பூஜை செய்து வழிபடுபவர்கள் வீட்டில் செல்வம் கொழிக்கும். துர்மரணங்கள் ஏற் படாது. இப்பிறவியில் அனைத்து நலன்களும் கிடைக்கப்பெற்று முக்தி பேற்றினை பெறுவார்கள்.


சிறுவனுக்காக கோவில் அமைத்த பெருமாள்

மாற்றம் செய்த நாள்:
செவ்வாய், ஜூலை 21,2015, 6:00 AM IST
பதிவு செய்த நாள்:
திங்கள் , ஜூலை 20,2015, 5:12 PM IST
ரூர் நகருக்குத் தெற்கே நான்கு கிலோமீட்டர் தொலைவில் குஜிலியம்பாறை செல்லும் வழியில் உள்ளது தான்தோன்றிமலை. இங்கு அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. தான்தோன்றிமலை ஒரு தலைசிறந்த புனிதத்தலம் மட்டுமின்றி, மக்களின் அபிமான பிரார்த்தனைத் தலமாகவும் விளங்குகிறது.

தாமான்தோன்றிக்கோன் என்னும் குறுநில மன்னன் இந்த மலையையும், சுற்றியுள்ள பகுதிகளையும் எல்லைப் பகுதியாக வரையறுத்துக்கொண்டு ஆண்டு வந்தான். ஆகவே இவ்வூர் அம்மன்னனின் பெயரால் அழைக்கப் படுவதாகவும் கூறப்படுகிறது.

தான்தோன்றி மலை குடவரையாக அமைக்கப்பட்டுள்ளது. இது கொங்குநாட்டு குடவரைகளுள் மிகவும் பிரசித்தி பெற்றது எனலாம். இந்த மலை கி.பி. 775–ம் ஆண்டில் குணசீலன் எனும் ஆதியேந்திரன் என்பவனால் குடையப் பெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இக்குடவரை, கன்னியாகுமரி மாவட்டம், அழகிய பாண்டியபுரம், விழுப் புரம் மாவட்டம் கீழ்மாவிலங்கை ஆகிய இடங்களில் உள்ள குடவரைகளுடன் ஒத்திருக்கிறது. நாமக்கல்லில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி குடவரையுடன் ஒத்த அமைப்பில் இருந்தாலும், தான்தோன்றிமலை குடவரை சற்று பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

கருவறைக்குள்ளே தஞ்சை மாமணி நரசிம்ம திவ்ய தேசத்தை நினைவுப்படுத்தும் வகையில் மூலவர் அமைந்துள்ளார். மேலும் 16 வகையான செதுக்கப்பட்ட சிற்பங்கள், வாத்தியம் இசைப்பது போல் அமைந்துள்ளது. மதுரை திருமலை நாயக்கர் இந்தக் கோவில் திருப்பணிக்கு உதவியுள்ளதாக குறிப்புகள் காணப்படுகின்றன.

கோவில் அமைப்பு

இந்த வைணவத்தலமானது குன்றின்மேல் கிழக்கில்இருந்து மேற்காக அரை பர்லாங்கு தூரத்தில் மேல்புறம் உயர்ந்தும், கீழ்ப்புறம் தாழ்ந்தும் உள்ளவாறு கட்டப்பட்டுள்ளது. மேல்புறம் குடையப்பட்டுள்ள அழகிய குடவரையில் மேற்கு நோக்கி நின்ற நிலையில் அருள்மிகு கல்யாண வெங்கடரமண சுவாமி திருமகளை தனது மார்பில் தாங்கிய நிலையில் பக்தர்களுக்குக் காட்சி தந்து கொண்டிருக்கிறார். தாயாருக்கு தனி சன்னிதி கிடையாது. அர்த்த மண்டபம், நுழைவு மண்டபம் ஆகியவை பிற்காலத்தில் விஸ்தீரமாகக் கட்டப்பட்டவை ஆகும்.

வேலைப்பாடுகளற்ற இரண்டு பெரிய தூண்களுடன் கூடிய உயர்ந்த மேடை உள்ளது. இந்த மேடையைச் சுற்றி மூன்று புறமும் பள்ளமாக்கப்பட்டு உள்ளது. பெருமாள் மேடையில் புடைப்புச் சிற்பமாகக் காட்சி தருகிறார். மகாமண்டபம் மற்றும் பிற சன்னிதிகள் பிற்காலத்தில் கி.பி.12, 13–ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது.

இத்தலம் ‘தென்திருப்பதி’ என அழைக்கப்படுகிறது. இத்தலத்தின் பெருமைகளை தான்தோன்றிமலை மஹாத்மியம், விஷ்ணுதர்மோத்ரம், வெங்கடேச பராக்கிரமம் மற்றும் பாகவத புராணம் போன்ற நூல்கள் மூலம் நன்கு அறியலாம்.

மலை உருவான கதை

ஒரு சமயம் திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருந்த திருமால், திருமகளுடன் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருந்தார். வெளியே ஆதிசேஷன் காவல் புரிந்து கொண்டிருந்தார். அங்கு வந்த வாயு பகவான் உள்ளே செல்ல வேண்டுமெனக்கூற, ஆதிசேஷன் மறுக்க, இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. அது இருவரில் யார் பெரியவர்? என்ற சண்டையாக மாறியது. வெளியே வந்த பகவான் இருவரையும் சமாதானம் செய்தார். பின்னர் யார் பெரியவர் என்பதை அறிவதற்காக ஒரு போட்டி வைத்தார். அதாவது, ‘ஆதிசேஷன் திருவேங்கடமலையை தனது உடலால் அழுத்திப் பிடித்துக்கொள்ள வேண்டும். வாயு பகவான் அதைத் தன் பலத்தால் அசைத்துப் பிடுங்க வேண்டும்’ என்பதே போட்டி.

இருவரின் பலப்பரீட்சையில் மலையின் சில பாகங்கள் பெயர்ந்து நாலா பக்கமும் சிதறின. அவ்வாறு சிதறிய பாகத்தில் ஒன்றுதான் தற்போது உள்ள தான்தோன்றி மலை என்று கூறப்படுகிறது.

கோவில் உருவான விதம்


மூன்றாம் குலோத்துங்கச் சோழன் கரூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தான். அவன் அரசவையில் டங்கணாச்சாரி என்ற தேர்ச்சி பெற்ற சிற்பி ஒருவர் இருந்தார். இவரது மனைவி சுந்தராம்பாள். இவர்களுக்கு குழந்தைப் பாக்கியம் இல்லாதது கவலை அளித்தது. ஒரு முறை சிற்பியின் வீட்டு முன்பாக ‘கோவிந்தா! கோவிந்தா!’ என்று உச்சரித்தபடி ஒரு குழு சென்று கொண்டிருந்தது. அதில் ஒரு பெண், சுந்தராம்பாளிடம், ‘திருப்பதி வெங்கடேசப் பெருமாளை வேண்டிக்கொள். குழந்தை பிறந்து 5 வயதானதும் திருப்பதி சென்று வழிபடு’ என்று கூறிச் சென்றார். சிவன் மீது அதீத பற்று கொண்ட தன் கணவனுக்குத் தெரியாமல், சுந்தராம்பாள் பெருமாளை வேண்டி வந்தாள்.

அந்த பிரார்த்தனையின் பலனாக அவளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு குண்டலாச்சாரி என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். மகனுக்கு 5 வயதானதும் பிரார்த்தனை குறித்து, தன் கணவரிடம் கூறினாள் சுந்தராம்பாள். ஆனால் டங்கணாச்சாரியோ, ‘சிவனைத் தவிர தெய்வம் இல்லை. திருப்பதி செல்ல அனுமதிக்க மாட்டேன்’ என்று கூறி சென்றுவிட்டார். அப்போது அருகில் இருந்த சிறுவன், ‘தாயே! திருப்பதி பெருமாளை நம் மலைக்கே வரவழைக்கிறேன்’ என்று கூறினான். ஆனால் அவனது பேச்சை லட்சியம் செய்யாமல், சுந்தராம்பாள் அங்கிருந்து அகன்றாள்.

அன்றிரவு குண்டலாச்சாரி தனது தந்தையின் தச்சு சாமான் மூட்டையை எடுத்துக்கொண்டு மலைக்குச் சென்று கோவில் கட்ட முயன்றான். அப்போது அங்கு வந்த சன்னியாசி ‘என்ன செய்கிறாய்? என்றதும், அந்தச் சிறுவன், கோவில் கட்டும் விவரத்தைக் கூறினான். அவர் ‘உன்னால் இது இயலாத காரியம். என்னிடம் ஆட்கள் இருக்கிறார்கள். நாளை வருவார்கள். கோவில் கட்டலாம்’ என்று கூறி சிறுவனை அனுப்பிவைத்தார்.

மறுநாள் அவன் மலைக்குச் சென்றபோது கோவில் அமைந்து, பிம்ப பிரதிஷ்டை செய்வதற்கு தயாராக இருந்தது. இதுபற்றி மன்னனுக்கும் தெரியவந்தது. அவன் சினம் கொண்டு, இதை செய்தவர்களை தண்டிக்க உத்தரவிட்டான். அன்று நள்ளிரவில் டங்கணாச்சாரி மலைமீது சென்றார். அப்போது குண்டலாச்சாரியை யாரென்று அறியாமல் வெட்டி வீழ்த்தினார். மறுநாள் மகனைக் காணாமல் தேடினார். ஆனால் அவர் மகன் மலை மீது இறந்து கிடப்பதை சிலர் பார்த்து வந்து கூறினர்.

டங்கணாச்சாரி மலைக்கு சென்று மகன் இறந்து கிடப்பதை பார்த்து துடித்தார். அப்போது அங்கு வந்த சன்னியாசி, டங்கணாச்சாரியை பார்த்து, ‘ஒரு பிடி துளசி கொண்டு வா. நான் உன் மகனை பிழைக்க வைக்கிறேன்’ என்றார். ஆனால் அது முடியாது என்று டங்கணாச்சாரி மறுத்தார். கூடியிருந்த மக்கள் வற்புறுத்தலின் பேரில் வேறு வழியின்றி துளசி தழைகளைப் பறித்து வந்து சன்னியாசியிடம் கொடுத்தார். அவர் அதை சாறு பிழிந்து, குண்டலாச்சாரியின் மீது விட்டார். அவன் உயிர்த்தெழுந்தான். சன்னியாசி மறைந்தார்.

எழுந்த குண்டலாச்சாரி, கோவில் அமைந்த விதம் பற்றி கூற, எல்லோரும் குகையின் நடுவே திருப்பதி பெருமாளை தரிசனம் செய்தனர். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. ‘குண்டலாச்சாரியின் பக்திக்காக இங்கு வந்துள்ளேன். இனி இந்த மலை மீதும் என் பிரியம் இருக்கும்’ என்றது அந்த அசரீரி.

சிறப்புச் சமர்ப்பணம்

எந்தக் கோவிலிலும் இல்லாத ‘செம்மாளி’ (செருப்பு) சமர்ப்பணம், இங்கு பக்தர்களால் நடத்தப்படுகிறது. பகவான், பக்தர்களின் கனவில் காட்டும் காலின் அளவிற்கேற்ப செருப்பைத் தைத்து, அதை அலங்காரம் செய்து பூமாலை சூட்டி, சுற்றம் சூழ, தாரை தப்பட்டை முழங்க, மலையைச் சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்து சமர்ப்பணம் செய்கின்றனர். இவ்வாறு வரும் செருப்புக்கள் பெரும்பாலும் சரியான அளவில் அமைகிறது. இது இந்தக் கோவிலைத் தவிர வேறு எங்கும் காணமுடியாத சமர்ப்பணம் ஆகும்.

இத்தலத்தில் திருமணமாகாதவர்கள், குழந்தைப் பேறு இல்லாதவர்கள் மற்றும் பலவித பிரச்சினைகளின் இருப்பவர்கள், திருக்கல்யாண உற்சவம் செய்து பயனடைகின்றனர்.

இந்தத் திருக்கோவிலில் விஸ்வரூபம், காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை என நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. புரட்டாசி மற்றும் மாசி மாத திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாக்கள் ஆகும். காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை, மற்றும் மாலை 6 மணி முதல் 8.30 மணி வரைக்கும் பக்தர்கள் தரிசனத்திற்காக கோவில் திறந்திருக்கும்.

பெருமாள் தோன்றிய கல்

சோமசர்மா என்ற பக்தர், குழந்தை பாக்கியம் இல்லையென்ற ஏக்கத்துடன் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் நள்ளிரவில் இறைவனை நினைத்து அவர் தியானித்துக் கொண்டிருந்த போது, அவர் முன்பாக நாரத முனிவர் தோன்றினார். ‘உமது முற்பிறவிப் பாவம் நீங்க, திருப்பதி பாத யாத்திரை மேற்கொள்ள வேண்டும். அதற்கு முன்பாக நீ அமராவதி கூடுதுறைக்குச் செல்’ என கூறினார். சோமசர்மாவும் அவரது மனைவியும் நாரதர் கூறியபடி அங்கு சென்றனர். அங்கு வசித்து வந்த கல் தர்ச்சர் களுக்கு, சோமசர்மா நுணுக்கமான வேலைகளைக் கற்றுத்தந்தார். ஒருமுறை சோமசர்மா தனது மனைவியுடன் அங்கிருந்த மலையை சுற்றி வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு தோன்றிய ஒளியைக் கண்டு, அதன் வழியே சென்றார். திடீரென்று மலையில் பிளவு ஏற்பட்டு, அங்கு திருப்பதி வெங்கடேசப் பெருமாள் தோன்றி காட்சியளித்தார். ‘நீ புத்திரபாக்கியம் அடைந்து மகிழ்வாய். மேலும் பல காலம்  வாழ்ந்து பின் என்னை வந்தடைவாய்’ என்று அருளாசி கூறினார். சோமசர்மாவுக்கு காட்சியளிக்க வெங்கடேசப் பெருமாள் தோன்றியபோது பிளந்த பாறையை, இன்றும் பெருமாள் சன்னிதிக்கு வடபக்கத்தில் பார்க்கலாம்.


















































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக