ராதே கிருஷ்ணா 29-06-2015
RIP -இரங்கல் செய்தி - நாம் சொல்லுவது சரியா? யோசிப்போம்.
மனதை உறுத்துகிற விஷயம் என்னவென்றால், யாருக்காவது மரணம் நேர்ந்து தங்களது துக்கத்தை உறவினர்களுக்கு வெளிப்படுத்தும்போது பெரும்பாலோர் கடைசியில் ‘ இறந்தவரின் ஆன்மா சாந்தியடைய ப்ரார்த்திக்கின்றேன்’ (May the soul rest in peace) என்று முடிப்பதுதான்.
நமது சம்ப்ரதாயத்தில் இந்த RIP அணுகுமுறை கிடையாது.
ஆனால் நமது ஹிந்து மத சித்தாந்தத்தின்படியும், நம்பிக்கையின்படியும், கலாச்சாரத்தின்படியும் ’ஆன்மா சாந்தியடைவது’ என்பது அபத்தமான ‘கான்செப்ட்’ ஆகும். நாம் இதை புரிந்துக்கொள்ள வேண்டும்.
இது உங்களுக்கே தெரிந்திருக்கும். சுமார் 40,50 வருஷங்கள் முன்பு வரை நமது பெரியோர்கள் யாரும் ’ஆன்மா சாந்தியடையட்டும்’ என்பது போன்ற சொற்றொடர்களை உபயோகப்படுத்தியதே இல்லை.
மேற்கத்திய கண்ணோட்டத்தில் வேண்டுமானால் இது சரியாக இருக்கலாம். அதை பற்றி நான் எதுவும் சொல்லுவதற்கில்லை.
இறந்தவர் நல்லகதியை அடைய வேண்டித்தான் நாம் இறுதி சடங்குகளை (அபர கர்மா) அவரவர்களது குலாச்சாரப்படி செய்கின்றோம். இந்த அபர கர்மா என்பது ஒரு இஷ்டிக்கு சமம். ஆதலால்தான் இந்த கர்மாவிற்கு ‘அந்த்யேஷ்டி’ என்ற ஒரு பெயரும் உண்டு.
அநித்யமான உடலே நீங்கியது என்பதே சத்யம். ஜீவன் நல்ல கதியை அடைந்துவிட்டான் என்பதில்தான் இறந்தவரின் பந்துக்களுக்கு மனச்சாந்தி உண்டாகிறது. ஒரு ஜீவன் பாபியாக இருந்தால் பாப பலனை அனுபவிக்க நரகத்தை அடைவான் என்றும், புண்ணியவானாக இருந்தால் புண்யபலனை அனுபவிக்க ஸ்வர்கத்தை அடைவான் என்றும் வேதம் சொல்கிறது.
அதாவது 100 சதவிகிதம் புண்யம் செய்தால் ஸ்வர்க்கம், 100 சதவிகிதம் பாபம் செய்திருந்தால் நரகம். பாதி புண்யம். பாதி பாபம் என்றால் மனுஷ ஜன்மம். பாபமே மிகுதியாக செய்திருந்தால் மிருக ஜன்மம் என்று பொதுவாக கூறலாம்.
மேலும் பல ஜன்மாக்களில் செய்யும் தபஸ், புண்ய குவியலினால் தேவதைகளுடைய லோகத்தை அடைவது ஸாலோக்யமாகும். தேவதைகளின் ஐஸ்வர்யத்தை அடைவது ஸார்ஷ்டிதமாகும். தேவதைகளாகவே ஆகிவிடுவது ஸாயுஜ்யமாகும். இவ்வாறு அவரவர் புண்ணியத்திற்கு தக்கபடி பலன் கிடைக்கும்.
இறந்து போனவன் நரகத்தையடையாமல் புண்ணிய லோகத்தையோ அல்லது மறுபிறவியில் சுகானுபவம் பெற உதவி புரிவதற்காகவே அபா கர்மா செய்யப்படுகிறது.
நமக்கு வினைப்பயனிலும், மறு பிறவியிலும் நம்பிக்கையுண்டு. அது மாத்திரம் அல்ல. விசிஷ்டாத்வைதியாக இருந்தாலும் அல்லது அத்வைதியாக இருந்தாலும் நமக்கு ’ஆன்மா சாந்தியடைவது’ என்ற பேச்சே இல்லை.
சரி, அப்போ, எனன சொற்களை உபயோகப்படுதினால் பொருத்தமாக இருக்கும் என்று நீங்கள் கேட்கலாம். “அவரது ஆன்மா நற்கதியடைய பிரார்த்திக்கின்றேன்’ எனும் பொருள்பட சொல்லுவதுதான் சரி. இதுதான் நமது ‘கான்செப்ட்’ ஆகும்.
ஆதலாம் இந்த மாதிரி சந்தர்ப்பம் ஏற்பட்டால், நம்மில் சில பேராவது இனிமேல் மேற்கத்திய ‘கான்செப்டான’ சொற்றொடர்களை உபயோகப்படுத்தாமல் அதற்கு பதிலாக “ஆன்மா நல்லா கதியை அடையப் பிரார்த்திக்கின்றேன்...” என்பது போன்ற வார்த்தைகளை உபயோகப்படுத்துவோம்.
There can be alterations in this for specific sampradaya's: Vaishnava-s can say "Acharyan thiruvadi prapti" or "Vaikunta prapti" while Smartha-s can say "Sivaloka prapti".
I hope I do not appear to be hair-splitting or being hung on semantics. The idea to be conveyed varies, and hence my proposal.
அன்புடன்
சர்மா சாஸ்திரிகள்

Kvs Seshadri Iyengar posted in 2 groups.
- भगवद्गीता किंचिदधिता गङगाजललवकणिका पीता ।
सकृदपि येन मुरारि समर्चा क्रियते तस्य यमेन न चर्चा ।।எவனொருவன் பகவத்கீதையை சிறிதாவது படிக்கிறானோ (பகவத் கீதா கிஞ்சித் அதீதா), கங்கா தீா்த்தம் எவனொருவனால் சிறிதளவாவது பானம் செய்யப்பட்டிருக்கிறதோ, எவனொருவன் ஒருதடவையாவது முராாியான ஸ்ரீ க்ருஷ்ணனை ஆராதனை செய்திருந்தானோ அவனைப் பற்றிய பாவ புண்ணியம் யமதா்மராஜாவால் விசாரணை செய்யப்படுவதில்லை (யம பயம் நீங்கிவிடும்).(பஜ கோவிந்தம் சா்படபஞ்ஜாிகா ஸ்தோத்ரம் - ஸ்ரீ ஆதிசங்கரா் அருளியது)
ஸ்வாமி என்றால் என்ன?-(ஸ்ரீ மஹா பெரியவா)
ஸ்வம் என்கிற வார்த்தைக்கு உடைமை சொத்து என்று அர்த்தம். ஸ்வம் என்பதே தெலுங்கில் ஸொம்மு என்றாகியிருக்கிறது. ஸொம்மு என்றால் சொத்து. ஸ்வந்தம் - நமக்குச் சொந்தமானது - அதுவே நம் சொத்து. கோயிலைச் சேர்ந்த சொத்தைக் கேரளத்தில் தேவஸ்வம் என்கிறார்கள் அல்லவா? உடைமைக்கு சொந்தக்காரர் யாரோ அந்த உடையவர்தான் ஸ்வாமி. ஸ்வாமி என்பதற்கு நேர் தமிழ் வார்த்தை உடையார் என்பது. முன் காலத்தில் கோயில் சுவர்களில் வெட்டப்பட்ட கல்வெட்டுக்களிலெல்லாம் திருச்சிற்றம்பலமுடையார், திருவேங்கடமுடையார், திருநாகேஷ்வரமுடையார், கபாலீஷ்வரமுடையார் என்பது போலவே உடையார் என்ற பெயரில்தான் தெய்வங்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
குருவும் ஸ்வாமியும் ஒன்று என்பதால்தான் வைஷ்ணவர்கள் ஸ்ரீ ராமாநுஜரை உடையவர் என்றே சொல்கிறார்கள்.
ஸ்வாமி என்றால் சொத்துக்கு உரிமைக்காரர் என்றேன். எந்தச் சொத்து. சகலப் பிரபஞ்ஜமும்தான். அதிலுள்ள நாமும் அவன் சொத்துத்தான். உள்ளதனைத்தும் அவன் ஒருவனுக்கே சொந்தமாகும். எல்லாம் என் உடமையே என்று தாயுமானவரும் பாடினார். நம் சொத்து, பிறர் சொத்து என்றெல்லாம் பாத்தியதை கொண்டாடுகிறோமே, உண்மையில் இந்தச் சொத்தெல்லாம்- அவற்றுக்கும் பாத்தியதை கோரும் நாம், பிறர் எல்லோருமே - அவனுடைய சொத்துதான். அவன் இல்லாவிட்டால் இந்தப் பிரபஞ்சமும் இல்லை. நாமும் இல்லை. நாம் பாத்தியதை கோருகிற சொத்துக்களும் இல்லை.
நாம் வீடு, வண்டி போன்ற சில சொத்துக்களைப் புதிதாக உண்டாக்கினதாக நினைக்கிறோம். விஞ்ஞானிகள் புதிது புதிதாக இயந்திரங்கள் செய்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் அடிப்படையில் எந்த மூலப் பொருட்களை வைத்துக் கொண்டு செய்கிறோமோ, அவை ஸ்வாமி செய்ததுதான். நாம் அவரது சொத்தை எடுத்து வேறு ஒரு ரூபத்தில் மாற்றுகிறோமே தவிர புதிதாக எதுவும் செய்யவில்லை. மூலப் பொருட்களை (element) செய். அணுவை (atom) உண்டாக்கு என்றால் எந்த விஞ்ஞான நிபுணராலும் அது முடியாத காரியம். இத்தனை மெஷின்கள், குண்டுகள் செய்கிற விஞ்ஞானியால் ஒரு சின்னஞ் சிறிய இலையைச் செய்ய முடியுமா?
எல்லாவற்றையும் செய்கிற ஒரே ஒருத்தருக்குத்தான் அவையெல்லாம் சொந்தம். அதனால்தான் அவர் உடையவர். என்று ஸ்வாமி என்று அழைக்கப்படுகிறார். நாமும் அவரது உடமைகள்தான். நம் சொத்து என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பதை நம் இஷ்டப்படி விநியோகிக்க உரிமை பெற்றிருக்கிறோம் அல்லவா? அப்படியே ஸ்வாமியின் சொத்தாகிய நாமும், நம்மை அவன் இஷ்டப்படி நடத்தப்படும் என்று விட்டுவிட்டால் நமக்கு எந்த பாரமும் இல்லை. ஒர் ஆனந்தம்தான்.
இப்போது, நான் நான் என்று எதையோ சொல்லிக்கொண்டு அலைகிறோமே, உண்மையில் இது அவனுக்குதான் சொந்தம் என்று புரிந்து கொண்டுவிட்டால் அப்புறம் நாமாகக் கிடந்து அலையமாட்டோம். நமக்கென்று சொந்தமாக ஒரு ஆசையும் ஒரு துவேஷமும் பாராட்டுவதற்கு உரிமையில்லை என்று தெரிந்து கொண்டுவிட்டால், அப்புறம் ஒரு அலைச்சலும் இல்லை. ஒரே நிம்மதிதான். ஸ்வாமி என்கிற வார்த்தையே, நமக்கு நம்மிடம் எந்த சொந்தமும் இல்லை. நாமம் அவன் தன்னிஷ்டப்படி விநியோகிக்க உரிமை பெற்றிருக்கிற அவனுடைய சொத்துத்தான் என்பதை உணர்துவதாக அமைந்திருக்கிறது. இப்படி உணர்த்துவது பக்தியின் பரம லக்ஷியமான சரணாகதி என்பது.

திருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு நடத்தணும்; ஏற்பாடு செய் –(மஹா சுவாமிகள்)
1949, மஹா சுவாமிகள் திருவிடமருதூரில் தங்கியிருந்தார்கள்.
மகாலிங்கஸ்வாமி கோவிலில், செட்டியார் வகுப்பைச் சேர்ந்த ஓர் அம்மையார் கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு நாள்தோறும் பாடி வருவதைப் பெரியவா கவனித்துவிட்டர்கள்.
‘அந்த ஆச்சி என்ன பாடிக்கொண்டிருக்கா தெரியுமோ?’
உடன் வந்துக்கொண்டிருந்த பக்தர் ராமமூர்த்தியையும் கைங்கர்யபரர் கண்ணனையும் பார்த்துக் கேட்டார்கள். மஹா பெரியவா.
ஒரே குரலில்,‘தெரியாது’ என்று பதில் வந்தது.
‘அந்த ஆச்சி அம்மாள், திருவெம்பாவை படிச்சிண்டிருக்கா – நல்ல ராகத்தோட..’
இரண்டு நிமிஷ நடை.
‘இந்தப் பாடல்களை எல்லோரும் பாட வேண்டும் என்று பிரசாரம் செய்தால், யாரவது பாடுவார்களா ?..’
‘ஒருவரும் பாட மாட்டார்கள். இது, யாருக்குத் தெரியும்?..’
மஹா பெரியவாள் சிந்தனையில் ஆழ்ந்தார்கள். அவர்கள் மனத்திரையில் மணிவாசகரும் ஆண்டாளும் காட்சி தந்தார்கள் போலும் !
அற்புதமான பாடல்கள், அறைக்குள்ளேயே கிடக்கின்றன, அரங்கத்துக்கு வந்தால் லோகோபகாரமாக இருக்குமே ?..
‘ராமமூர்த்தி.. திருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு நடத்தணும்; ஏற்பாடு செய் ..’
அவ்வாறே ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ்நாட்டின் முன்னணிப் பாடகர்கள், சொற்பொழிவாளர்கள் கலந்துகொண்டார்கள், ஏகப்பட்ட விளம்பரம்!
திருவெம்பாவை – திருப்பள்ளிஎழுச்சி – திருப்பாவை புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் அச்சிடப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்பட்டன.
பாவைப் பாடல்களின் பண் நயமும் இலக்கிய நயமும் அறிஞர்களால் விளக்கி மொழியப்பட்டன. அவற்றின் பக்தி ரசத்தைச் சுவைத்து மயங்காதவரே இல்லை.
பாவைப் பாடல் இசைத்தட்டுக்கள் அமோகமாக விற்பனை ஆயின.
மார்கழி மாதம் வந்தது.
மஹா பெரியவா, வெறும் உபதேசியார் அல்லர். உபதேசங்களை நத்திக் காட்டுபவர்கள்.
‘மார்கழி விடியற்காலையில் பாவைப் பாடல்களைப் பாட வேண்டும்‘ என்று சொல்லிவிட்டால் மட்டும் போதுமா ?
‘பிரகலாதன்’ என்று ஒரு யானை ஸ்ரீமடத்தில் இருந்தது. ராமமூர்த்தியையும் கண்ணனையும் அதன் மேல் உட்கார்ந்துகொண்டு, கையில் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில், புத்தகத்தைப் பார்த்துப் பாவைப் பாடல்களைப் பாடிக்கொண்டு, திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலின் நான்கு வீதிகளிலும் பவனி வரச் செய்தார்கள்.
அப்புறம் கேட்பானேன்!
தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் பாவை வெள்ளம் பாய்ந்தது; பக்திப் பயிர் வளர்ந்தது; நாயன்மார் – ஆழ்வார் பக்கம் மக்கள் பார்வை திரும்பியது. தமிழ் பக்தி இலக்கியத்துக்கு அடித்தது யோகம்!
ஓரிரு ஆண்டுகள் சென்றன.
ராமமூர்த்தியையும் கண்ணனையும் அழைத்தார்கள், மஹா பெரியவாள்.
‘ஞாபகம் இருக்கா? — திருவெம்பாவை யாருக்குத் தெரியும்? அதை யாரும் பாடமாட்டா – ன்னு சொன்னேளே? — இப்போ யாரவது பாடராளா?…’
இது, மஹா பெரியவாள் கொடுத்த குட்டு இல்லை; அன்புடன் வழங்கிய ஷொட்டு!
ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக