புதன், 3 ஜூன், 2015

கீதையும் 18 அத்தியாயங்களும்:

ராதே கிருஷ்ணா 03-06-2015

பொது தகவல்கள்





கீதையும் 18 அத்தியாயங்களும்:

கீழே கொடுக்கப்பட்டுள்ள பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும் என்பதின் அடிப்படையில் கீதை 18 அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.

குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.

லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.

மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.

மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.

டம்பம் (வீண் பெருமை): அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.

அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.

சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.

ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.

தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.

ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.

மனம்: நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.

அஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.

கண்: ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.

காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.

மூக்கு: ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.

நாக்கு: கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.

மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.

பதினெட்டு அத்தியாயங்களின் தாத்பரியம் என்ன?

1. விஷாத யோகம். பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் புண்ணிய, பாவங்களை நிர்ணயிக்கும் என்று உணர வேண்டும். இறைவன் அருளால் முக்தியடைய வேண்டும் என்ற ஆத்மத் துடிப்பே விஷாத யோகம்.

2. சாங்கிய யோகம். பரமாத்மாவே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது.

3. கர்மயோகம். உபதேசம் பெற்றால் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யும் பக்குவம்.

4.ஞான கர்ம சன்னியாச யோகம். பாவம், புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன்மீதும் பற்று இல்லாமல், பரமனை அடையும் வழியில் முன்னேறுவது.

5. சன்னியாச யோகம். நான் உயர்ந்தவன் என்ற கர்வம் இல்லாமல் தான, தர்மங்கள் செய்வது.

6.தியான யோகம். கடவுளை அடைய புலனடக்கம் முக்கியம். மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த புலன்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக்கூடாது.

7. ஞானம். இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான்.. எல்லாமே கடவுள்தான் என உணர்வது.

8. அட்சர பிரம்ம யோகம். எந்நேரமும் இறைவனைப்பற்றிய நினைப்புடன் வேறு சிந்தனைகளே இல்லாமல் இருப்பது.

9. ராஜவித்ய, ராஜ குஹ்ய யோகம். கடவுள் பக்தி மட்டுமே இருந்தால் பயனில்லை. சமூகத்தொண்டாற்றி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான் உண்மையான பக்தி. உண்மையான ஆன்மிகம் என்று உணர்வது.ஒன்பதாம் படி.

10. விபூதி யோகம். அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாகவே காண்பது.பத்தாம் படி.

11. விஸ்வரூப தரிசன யோகம். ஆண்டவனில் உலகத்தையும் உலகில் ஆண்டவனையும் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது.

12. பக்தி யோகம். இன்பம் - துன்பம், விருப்பு-வெறுப்பு, ஏழை - பணக்காரன் என்பன போன்ற வேறுபாடுகளைக் களைந்து எல்லாவற்றிலும் சமத்துவத்தை விரும்புவது.

13. ஷேத்ரக்ஞ விபாக யோகம். எல்லா உயிர்களிலும் வீற்றிருந்து ஆண்டவனே அவர்களை இயக்குகிறார் என்பதை உணர்தல்.

14. குணத்ர விபாக யோகம். பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி, இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே.

15. தெய்வாசுர விபாக யோகம். தீய குணங்களை ஒழித்து, நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு, நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது.

16. சம்பத் விபாக யோகம். இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்று உணர்ந்து, அகங்காரம் வராமல் கவனமுடன் இருப்பது.

17. சிரித்தாத்ரய விபாக யோகம். சர்வம் பிரம்ம மயம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை பெறுவது.

18.மோட்ச சன்யாச யோகம். யாரிடமும் எந்த உயிர்களிடமும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் வீழ்ந்தால் அவன் அருள் செய்வான் என்று ஆண்டவனையே சரணடைவது.

சத்தியம் நிறைந்த இந்தப் பதினெட்டு அத்தியாயங்களையும் முழு மனதுடன் படித்து, அதன் படி வாழ்ந்து வந்தால், நமக்கு பகவான் தரிசனம் தருவார். நம் வாழ்வுக்கு வளம் சேர்ப்பார் என்பதே பதினெட்டு அத்தியாயங்கள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும்.
 — with Mari MacoVignesh WaranJagan RajaVijayan Andaman Krithivasan and Anu Gayathri.




கண்டுகொள்ளவில்லை . முனிவர் அல்லவா ?
கோபத்தில் சாபமிட்டார் அந்த
ஊருக்கு ..” இன்னும்
50வருடங்களுக்கு இந்த
ஊரில் மழையே பெய்யாது
.வானம் பொய்த்துவிடும் ” … இந்த சாபம் பற்றி கேள்விப்
பட்ட அனைவரும் என்ன
செய்வது என்றே தெரியாமல்
கவலையோடு அவரின்
காலடியில் அமர்ந்து
மன்னிப்பு கேட்டனர் .. சாபத்திற்கு விமோசனம்
கிடையாது என்று
கூறிவிட்டார் முனிவர்
.வேறு வழியின்றி
அனைவருமே அவரின்
காலடியில் அமர்ந்து இருந்தனர் …மேலிருந்து
இதைக் கவனித்த பரந்தாமன்
தனது சங்கினை எடுத்து
தலைக்கு வைத்து
படுத்துவிட்டான்
( பரந்தாமன் சங்கு ஊதினால் மழை வரும் என்பது
நம்பிக்கை ). இன்னும் 50
வருடங்கள்மழை பெய்ய
வாய்ப்பில்லை என்பதால்
இனி சங்குக்கு ஓய்வு
என்றே வைத்து விட்டான் …) அந்த ஊரில் ஒரு அதிசயம்
நடந்தது …ஒரே ஒரு உழவன்
மட்டும் கலப்பையைக்
கொண்டு தினமும்
வயலுக்குச் சென்று வந்து
கொண்டிருந்தான் .அவனை அனைவரும் பரிதாபமாகவே
பார்த்தனர் .மழையே
பெய்யாது எனும்போது
இவன் வயலுக்கு போய் என்ன
செய்யப் போகிறான் என்ற
வருத்தம் அவர்களுக்கு … அவனிடம் கேட்டே விட்டனர் . நீ செய்வது முட்டாள்தனமாக
இல்லையா என்று ..அதற்கு
அவனின் பதில்தான்
நம்பிக்கையின் உச்சம் ”’ 50
வருடங்கள் மழை பெய்யாது
என்பது எனக்கும் தெரியும் . உங்களைப் போலவே நானும்
உழுதிடாமல் இருந்தால் 50
வருடங்கள் கழித்து உழுவது
எப்பிடி என்றே எனக்கு
மறந்து போயிருக்கும்
..அதனால்தான் தினமும் ஒருமுறை உழுது
கொண்டு இருக்கிறேன் ”
என்றான் .
இது வானத்தில் இருந்த
பரந்தாமனுக்கு கேட்டது
.அவரும் யோசிக்க ஆரம்பித்தார் ..”50 வருசம்
சங்கு ஊதமால் இருந்தால்
எப்பிடி ஊதுவது என்று
மறந்து போயிருமே ”.என்றே
நினைத்து சங்கை எடுத்து
ஊதிப் பார்க்க ஆரம்பித்தார் …. இடி இடித்தது …மழை பெய்ய
ஆரம்பித்தது …நம்பிக்கை
ஜெயித்து விட்டது .
” தெய்வத்தால் ஆகாது
எனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும் ” self confiden










நமது இந்த சரீரமே ஒரு ரதம். இந்திாியங்கள் எல்லாம் குதிரைகள்; மனமானது ஒரு கடிவாளம்; புத்தியானது சாரதி.நமது புத்தியிலே ப்ரவேசித்து பரமாத்மா செயல்படுத்துகிறான். அா்ஜுனனுக்கு அருகிலேயே இருந்து வழிகாட்டினான். உண்மையை உணரச் செய்தான்.அதேபோல் நம் அருகிலேயே இருந்து நம்மையும் ரக்ஷிக்கிறான்.

கவனித்துப் பாா்த்தோமானால் விஷ்ணு என்கிறவன் எங்கேயோ இல்லை...சமீபத்திலேயே தான் இருந்து ரக்ஷிக்கிறான். அதனால்தான் திரௌபதி வஸ்த்ராபஹரணம் நடக்கிற போது " ஹே க்ருஷ்ணா! துவாரகா வாஸி ! யாதவ நந்தனா! " என்று அவள் அழைத்தாள்.

நீ வைகுண்டத்தில் இருக்கிற போது இந்த அக்கிரமம் நடந்தால்கூட நான் ஒப்புக் கொள்வேன். பூலோகத்தில், துவாரகையில் இருக்கிற போது இந்த மாதிாி தப்பு நடக்கிறதே! இது பாவ்யமா? நீ இவ்வளவு அருகாமையில் இருக்கிற போது தப்பு நடக்கலாமா..? என்று கேட்கிறாள்.

பரமாத்மா எங்கேயோ இல்லை; பக்கத்திலேயே இருக்கிறான்.அவள் வேண்டிக் கொண்டதும் அவளுக்குப் புடவை சுரந்தது...புடவை சுரந்தவுடனே அவள் ரக்ஷிக்கப்பட்டாள்.

ஒவ்வொரு அவதாரத்திலேயும் ஒரு குறை பகவானுக்கு. ராமாவதாரத்திலே ஒரு குறையாம்...

என்ன குறை?

மைத்துனன் பொாியிட்ட சம்பாவனை என ஒன்று கல்யாணங்களில் பண்ணுவதுண்டு.லாஜ ஹோமத்தின் போது மனைவியின் சகோதரன் பக்கத்தில் வந்து உட்காா்ந்து கொண்டு பொாியை எடுத்துக் கொடுக்க வேண்டும். அப்படி கொடுப்பதற்காக மைத்துனனை கௌரவிப்பதுதான் பொாியிட்ட சம்பாவனை.

ராமாவதாரத்தில் ஒரு கஷ்டமாம் பகவானுக்கு..சீதையோடு கூடப்பிறந்தவா்கள் ஒருத்தரும் இல்லை! அது க்ருஷ்ணாவதாரத்திலே தீா்ந்து போய்விட்டது! ஏகப்பட்ட மைத்துனா்கள் அந்த அவதாரத்திலே!

ஆனால் க்ருஷ்ணாவதாரத்தில் வேறு ஒரு குறை! அது என்ன? அன்றைய தினம் திரௌபதி அழைத்த பொழுது, நாம் போய் உடனே அவளை ரக்ஷிக்கவில்லையே. அந்தக் குறை கடன் அடைக்க முடியாமல் வட்டி ஏறிப் போன மாதிாி கலங்கடிக்கிறதாம் அவனை!

நான் கடன் பட்டு விட்டேனே, போய் ரக்ஷிக்கவில்லையே... என்கிறான்.

நீ ரக்ஷிக்கவில்லையா? பின யாா் ரக்ஷித்தாா்கள்? எப்படி புடவை சுரந்தது?

நான் ரக்ஷிக்கவில்லை;என் நாமாதான் ரக்ஷித்தது - கோவிந்த நாமா அவளை ரக்ஷித்தது என்கிறான்.

அதனால்தான் குறையொன்றுமில்லாத கோவிந்தா என்று ஆண்டாள் அவனைப் பாடினாள். அவனுக்கே குறையை நீக்கிய திருநாமம் நமக்கு நீக்காதா...?

ஆகையினாலே,திரௌபதி மூலம் அவன் உணா்த்துகிறான். அருகிலேயே இருந்து ரக்ஷிப்பேன் என்று உணா்த்துகிறான். ஆச்ரிதவத்ஸலன் அவன். அப்படிப்பட்ட அவனிடத்திலே நாம் நினைவுடையவா்களாக இருத்தல் வேண்டாமோ!...

(Sri Mukkur Lakshminarasimmachariar Swamy)













































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக