ராதே கிருஷ்ணா 30-06-2015
திருமங்கை ஆழ்வார்
*திருவரங்கத்தில் மதில்கட்டும் திருப்பணியில் ஆழ்ந்திருந்தபோது பொருள் தட்டுப்பாடு! நாகப்பட்டினத்தில் புத்தரின் தங்கச்சிலை இருப்பதை அறிந்து அதனைக் கவரும் சூத்திரத்தை இலங்கை வரை சென்று அறிந்தார். சிலையை அறம்பாடி உருக்கினார்.
ஈயத்தாலாகாதோ இரும்பினா லாகாதோ
பூயத்தால்மிக்க தொரு பூதத்தா லாகாதோ
பித்தளை நற்செம்புகளா லாகாதோ - மாயப்
பொன்னும் வேண்டுமோ மதித்துன்னை பண்ணுகைக்கு!
திருவரங்கத்து மதில் பணிகளைக் குறைவின்றி நிறைவேற்றினார்.
ஒவ்வொரு திவ்யதேசத்திலும் ஆழ்வாருக்கு விதவிதமான அனுபவங்கள்! அவற்றிலிருந்து:
திருமணக்கோலத்தில் தாயாருடன் வந்து கலியனுக்குக் காட்சியளித்து அவன் அகஇருளை நீக்கியது வயலாளி மணவாளன்!
நீலன், வைணவனுக்கு உரிய ஐந்து அடையாளங்களைப் பெற்றுத் திருமங்கை ஆழ்வாராய் மிளிர்ந்தது திருநறையூர் நம்பியிடம்!
திருஎட்டெழுத்து மந்திரத்தைக் கற்றறிந்தது திருக்கண்ணபுரம் சௌரிராஜனிடம்!
திருமங்கையாழ்வார் பாடல் தேடி ஓடிவந்த பெருமாள் திருநின்றவூர் பக்தவத்ஸலன்!
ஆறு மாதம் ஆழ்வாரைக் காக்கவைத்துக் காட்சியளித்தவன் திருநீர்மலை நீர்வண்ணப் பெருமாள்!
நாடிவந்த ஆழ்வாருக்கு முதலில் கதவடைத்துப் பின்னர் உரையாடி மகிழ்ந்து காட்சியளித்தது திருஇந்தளூர் பரிமள ரங்கநாதன்.
வழிப்போக்கனாக வந்து திருக்காட்சி நல்கியது திருக்கண்ணங்குடி ச்யாமளமேனிப் பெருமாள்!
மூன்று நாட்கள் காக்கவைத்துக் காட்சி கொடுத்தது நந்திபுர விண்ணகரம் ஜெகந்நாதப் பெருமாள்!
அறியாமல் சென்ற ஆழ்வாரை அழைத்துக் காட்சிதந்து உணவளித்தவன் தேரெழுந்தூர் ஆமருவியப்பன்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக