வியாழன், 7 ஆகஸ்ட், 2014

இனி பட்டினத்தாரின் சில முக்கியப் பாடல்களைக் காண்போம்.

ராதே கிருஷ்ணா 07-08-2014


Devarajan Natarajan added 2 new photos.
ார்ந்த நோக்கங்கள் ஒவ்வொரு ஆன்மாவுக்கும் வெவ்வேறாக இருப்பினும், முக்தி நிலையை அடையும் ஆன்மீக நோக்கமானது அனைவருக்கும் பொதுவான ஒன்று.
*
'குறிக்கோள் இலாது கெட்டேன்' என்று பாடுகிறார் திருநாவுக்கரசு சுவாமிகள். ஆன்மீக நோக்கத்தை முற்றிலும் விடுத்து, உலகியல் நோக்கத்தில் மட்டுமே நாட்டம் கொண்டு உழலும் ஆன்மாக்களுக்காக பாடி வைத்த வரிகள் அவை.
*
இனி பட்டினத்தாரின் சில முக்கியப் பாடல்களைக் காண்போம்.
************************************************************************************
உண்டதே உண்டு, உடுத்ததே உடுத்து, அடுத்தடுத்து உரைத்ததே உரைத்து, கண்டதே கண்டு, கேட்டதே கேட்டுக் கழிந்தன கடவுள் நாள் எல்லாம்!!!
--
ஒரே மாதிரியான செய்கைகளைப் புரிந்தும், ஒரே வகையான அனுபவங்களை திரும்பத் திரும்பப் பெற்றும், மனமானது மீண்டும் அவற்றிலேயே நாட்டம் கொண்டு உழலும் தன்மையை இப்பாடலில் சாடுகிறார் பட்டினத்தார்.
************************************************************************************
எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும்
முத்தர் மனம் இருக்கும் மோனத்தே - வித்தகமாய்க்
காதி விளையாடி இரு கை வீசி வந்தாலும்
தாதிமனம் நீர்க்குடத்தே தான்!!!
--
பேசிச் சிரித்து கை வீசி நடந்து செல்லும் நிலையிலும், ஒரு பணிப்பெண்ணின் மனம், அவள் சுமந்து வரும் நீர் குடத்திலேயே நிலைத்து நிற்கும் (நீர் தளும்பாது இருக்கும் பொருட்டு). அது போன்று, உலகியலில் எச்செயலைப் புரியும் நிலையிலும் மனம் 'ஆன்ம குறிக்கோளான முக்தி நிலையிலேயே நிலைத்து நிற்றல் வேண்டும்' என்று அறிவுறுத்துகிறார் பட்டினத்தார்.
************************************************************************************
மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா
இருப்பையூர் வாழ் சிவனே இன்னம்ஓர் அன்னை
கருப்பையூர் வாராமற் கா!!!
--
இது வரையில் எண்ணற்ற பிறவிகளில், அடியேனை ஈன்ற அன்னையரும் உடலால் வருத்தமுற்று சோர்ந்தனர்; கர்ம வினையில் உழன்று அடியேனின் கால்களும் சலிப்புற்றன; மேலும் அடியேனின் தலையில் விதியை மீண்டும் மீண்டும் எழுதிய தன்மையால் பிரமனின் கைகளும் சலிப்புற்றுத் தளர்ந்து விட்டன.
*
'இருப்பையூர்' தலத்தில் கோயில் கொண்டருளும் சிவபெருமானே 'இனியும் ஒரு அன்னையின் கருப்பை வாசம் வாராது காத்தருள்வாய்' என்று பிறவிப் பிணிக்கு பெரிதும் அஞ்சிப் பாடுகிறார் பட்டினத்தார்.
************************************************************************************
LikeLike ·  · 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக