வியாழன், 14 ஆகஸ்ட், 2014

பன்னிரண்டாம் நாள் யுத்தம் -1

ராதே கிருஷ்ணா 15-08-2014


பன்னிரண்டாம் நாள் யுத்தம் -1
=====================================
மஹா பாரத யுத்தம் பதினெட்டு நாட்கள் நடந்தது.

Status Update
By ஸ்ரீ விஸ்வரூப இதி த்யானம்
பன்னிரண்டாம் நாள் யுத்தம் -1
=====================================
மஹா பாரத யுத்தம் பதினெட்டு நாட்கள் நடந்தது.
துரியோதனாதிகளின் பதினோரு அக்ரோணி சேனையும் பாண்டவர்களின் 7 அக்ரோணி சேனையும் சண்டையிட்டு அழிந்து விட்டன.
இதிகாசங்களில் இத்துணை சிறப்பாக இந்த பாரத போர் வர்ணிக்கப்பட்டிருப்பட்டிருப்பது பெரும் சிறப்பு.
இதில் பங்கெடுத்திருந்த அத்தனை பேரும் பெரும் வீரர்கள். நமக்கு அவ்வளவாக பரிச்சியமில்லாவிட்டாலும் இவர்களின் சக்தி மிக அதிகம்.
கிருஷ்ண பரமாத்மாவின் துணை இல்லாவிட்டால் அர்ஜுனன் பன்னிரண்டாம் நாளே கொல்லப்பட்டிருப்பான்.
அர்ஜுனனுன் பெரும் சூரனே. தனி ஒரு ஆளாக போய் விராட நாட்டின் ஆனிரையை மொத்த கௌரவர்களையும் வென்று மீட்டு வந்தவன்,ஒரு உத்திரனின் துணையுடன்!
அப்போது ஏற்பட்ட விரோதம் பாரத யுத்த்ம் நடக்கும் போது சம்சப்தக விரதம் எடுத்து அர்ஜுனனுடன் போரிட செய்தது.
மற்றும் இந்த பன்னிரண்டாம் நாளில் நரகாசுரனின் மகனும் ப்ரக்ஜோதிஷ மன்னனுமான பக தத்தன் புரிந்த போர் சிறப்பு வாய்ந்தது. இவனையும் த்ரிகர்த்த மன்னன் சுசர்மனையும் அவன் ஒரு அக்ஷௌரணி சேனையையும் பகதத்தனின் ஒரு அக்சௌரணி சேனையையு அர்ஜுனன் அழித்ததை மிக பெரும் சாதனை யாக சொல்லலாம்.
முதலில் இந்த படை பகுப்பு எப்படி செய்யப்பட்ட்டது என்பதையும் அந்த வீரர்களின் தர வரிசை நிர்ணய முறைகளையும் பார்க்கலாம்.
1 பட்டி= 1 யானை+1 ரதம்+3 குதிரை+5 காலாட்படை வீரர்கள்
3 பட்டிகள்= 1 சேனா முகம்
3 சேனா முகம் = 1 குல்மா
3 குல்மா= 1கணம்
3 கணம்= 1 வாஹினி
3 வாஹினி=1 ப்ருத்தனா
3 ப்ருத்தனா= 1 சாமு
3சாமு=1 அனிகினி
10 அனிகினி= 1 அக்ஷௌரணி
ஒரு அக்ஷௌரணியில் 21870 யானைகள் 21870 ரதங்கள் 65610 குதிரைகள் 109350 காலாட்படைகள் உண்டு.
அந்த வீரர்களின் தகுதி:
அதிரதன்- 10000 போர் வீரர்களை ஒரே சமயத்தில் எதிர்த்து வெல்ல கூடிய ரத வீரன்
யுயுத்ஸு,உத்தரன், சிகண்டி,துச்சாதனன்,விகர்ணன், சகுனி,ஜயத்ரதன்
மஹாரதன்- 60000 வீரர்களை ஒரே சமயத்தில் அழிக்கக்கூடிய ரத வீரன்
கம்சன், யுதிஷ்ற்றன்,பீமன், நகுல சஹா தேவர்கள், துரியோதனன்,சல்யன், அஸ்வத்தாமன்,விராடன்,கிருபாச்சார்யா,அபிமன்யு
அதிமஹாரதன்: 12 மஹா ரதர்களை எதிர்த்து வெல்ல கூடியவன்
பரசுராமன் வாலி ராவணன் ஜாம்ப வான் இந்திரஜித் கர்ணன் அர்ஜுனன் துரோணர்
மஹா மஹா ரதன்; 24 அதி மஹா ரதர்களை ஒரே சமயத்தில் வெல்ல கூடியவன்
யாருமில்லை/24 அதி மஹா ரதர்கள் ஒரே சமயத்தில் இது வரை இருந்ததாக புராணமோ சரித்தரமோ இல்லை!
பன்னிரண்டாம் நாள் துரோணர் தர்மரை கைதியாக பிடிக்க திட்ட மிட்டார். அப்போது அர்ஜுனனை திசை திருப்ப வேண்டியிருந்தது. அனைவருமே அர்ஜுனனுக்கு பயந்தே யுத்தம் செய்தார்கள்! பீமனுக்கு கூட அவ்வளவு பயமில்லை.
அப்போது த்ரிகர்த்த நாட்டு மன்னன் சுசர்மன் தானும் தன் வீரர்களும் அர்ஜுனனை திசை திருப்புவதாக முன் வந்தான். அவர்கள் எல்லாரும் அக்னி சாக்ஷியாக வேள்வி செய்து அர்ஜுனனை கொல்லாமல் யுத்த களத்தை விட்டு விலகுவதில்லை என்று சத்தியம் செய்து கொண்டார்கள்.
ஏன் அவனுக்கு அவ்வளவு ஆர்வம்? விராட நாட்டில் பாண்டவர்கள் அஞ்ஞாத வாசம் செய்தார்கள். அந்த விராட மன்னனும் சுசர்மனும் பகைவர்கள்.
விராட மன்னன் அர்ஜுனனின் மகனுக்கு தன் மகளை மணமுடித்து சம்பந்தியும் ஆகி விட்டான். இந்த சந்தர்ப்பம் சுசர்மனுக்கு நல்ல வாய்ப்பாக தெரிந்தது.

யுத்த காட்சிகளை அடுத்த பதிவில் பார்ப்போம்.

























































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக