ராதே கிருஷ்ணா 14-08-2014
சிவகங்கை வரலாறு
1674 முதல் 1710ம் ஆண்டு
சிவகங்கை வரலாறு
1674 முதல் 1710ம் ஆண்டு
சிவகங்கை
|
சிவகங்கை வரலாறு
வரலாறு
1674 முதல் 1710ம் ஆண்டு வரை ரகுநாத சேதுபதி என்றழைக்கப்படும் கிழவன் சேதுபதி ராமநாதபுரத்தின் 7வது மன்னனாக இருந்தார். ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் முதலில் ராமநாதபுரமாக இருந்தது. சிவகங்கையிலிருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சோழபுரம் அருகே <உள்ள நாலுகோட்டையை சேர்ந்த பெரிய உடைய தேவர் வீரத்திலும், துணிவிலும் சிறந்து விளங்கினார். அவருக்கு சேதுபதி ஒரு பகுதி நிலத்தை வழங்கி 1000 வீரர்களையும் கொடுத்தான். பின்னர் ஆண்ட விஜய ரகுநாத சேதுபதி தனது மகள் அகிலாண்டேஸ்வரி நாச்சியாரை உடைய தேவரின் மகன் சசிவர்ண தேவருக்கு மணமுடித்து கொடுத்தான்.மேலும் அவர்களுக்கு நிலங்களையும், 1000 வீரர்களை பராமரிப்பதற்கு தேவையான பொருட்களையும், வரி விலக்கையும் அளித்தார். பிறன்மலை கோட்டை, திருப்பத்தூர், சோழபுரம் மற்றும் திருப்புவனம், தொண்டி துறைமுகம் ஆகிய பகுதிகளுக்கு நிர்வாகியாக நியமித்தார். இதற்கிடையில் கிழவன் சேதுபதியின் மகன் பவானி சங்கரன் ராமநாதபுரத்தை தன்வசம் கொண்டுவந்து 9வது மன்னனான சுந்தரேஸ்வர ரகுநாத சேதுபதியை கைது செய்தான். பின்னர் பவானி சங்கரன் ராமநாதபுர மன்னனாக முடிசூடி கொண்டு 10வது மன்னனாகினான். 1726ம் ஆண்டு முதல் 1729ம் ஆண்டு வரை இவரது ஆட்சி நடைபெற்றது. இவர் சசிவர்ம பெரிய உடைய தேவரிடம் கொண்ட விரோதத்தால் அவரை நாலுகோட்டை பாளையத்தை விட்டு விரட்டியடித்தார். சுந்தரேஸ்வர ரகுநாத சேதுபதியின் சகோதரர் கட்டயதேவன் தஞ்சாவூர் மன்னன் துல்ஜாஜியிடம் தஞ்சம் அடைந்தார். சசிவர்ம பெரிய உடைய தேவர் காட்டு பகுதியில் சென்று கொண்டிருந்த போது சாத்தப்பையா என்ற முனிவரை சந்தித்தார். அவர் மரத்தடியில் தவம் செய்து கொண்டிருந்தார். அதன் அருகில் சிவகங்கா என்ற ஊற்று இருந்தது. முனிவரிடம் சசிவர்மர் தனது வாழ்வில் நடந்தவைகளை கூறினார். பின்னர் அந்த முனிவர் ஒரு மந்திரத்தை அவரது காதில் கூறினார். அதாவது அவரை தஞ்சாவூர் சென்று அங்கு ராஜா வளர்க்கும் புலியை கொன்று வீரத்தை நிரூபிக்கமாறு கூறினார். அதன் படி சசிவர்ம தேவர் தஞ்சாவூர் சென்றார். ஏற்கனவே தஞ்சை ராஜாவிடம் அடைக்கலம் புகுந்த கட்டயதேவனிடம் நல்ல பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டார். இருவரது திறமை மற்றும் நன்நடத்தையை கண்டு வியந்த தஞ்சாவூர் ராஜா அவர்களுக்கு அவர்களது ராஜ்ஜியத்தை மீட்க உதவி செய்ய நினைத்தார். பின்னர் உறையூரில் நடந்த போரில் பவானி சங்கரனை வீழ்த்தி 1730ம் ஆண்டு மீண்டு தங்கள் ஆட்சியை கைப்பற்றினர். கட்டய தேவன் 11ம் ராமநாதபுர மன்னனாகினான்.
சிவகங்கையின் முதல் மன்னர் சசி வர்மர் (1730 முதல் 1750) : கட்டய தேவன் ராமநாதபுரத்தை ஐந்தாக பிரித்து 3 பகுதிகளை தன்வசமும் 2 பகுதிகளை சசிவர்ம தேவருக்கும் வழங்கினான். பின்னர் சசிவர்மதேவர், ராஜா முத்து விஜய ரகுநாத பெரிய உடைய தேவர் என்ற பெயரால் அழைக்கப்பட்டார்.
1750-1772 : 1750ம் ஆண்டு சசிவர்ம பெரிய உடைய தேவரின் மறைந்தார். அதன் பின்னர் அவரது மகன் முத்துவடுகபெரியஉடைய தேவர் சிவகங்கையின் 2வது மன்னரானார். அவரது மனைவி வேலுநாச்சியார் ஆட்சியிலும் பங்கேற்று நல்ல வழிகாட்டியாக திகழ்ந்தார். தாண்டவராய பிள்ளை என்பவர் அமைச்சராக இருந்தார். முத்து வடுகதேவர் டச்சுகாரர்கள் மற்றும் ஆங்கிலேயர்களுக்கு வர்த்தகம் செய்வதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தார். பின்னர் ஆங்கிலேயர்கள், வெளிநாடுகளுடன் தொடர்பு வைத்து கொள்ள வசதியாக நவாப்களின் கட்டுப்பாட்டில் பணிபுரிய வற்புறுத்தினர். இதற்காக 2 முக்கியமாக செயல்களை ஆங்கிலேயர்கள் செய்தனர்.1722ம் ஆண்டு சிவகங்கையின் கிழக்கு பகுதியில் இருந்து ஜோசப் ஸ்மித் தலைமையிலும், மேற்கிலிருந்து பென்ஜார் தலைமையிலும் படையெடுத்து வந்தனர். இந்த போரில் முத்துவடுக தேவர் உட்பட பல வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். வேலு நாச்சியார், அவரது மகள் வெள்ளச்சி நாச்சியார் அமைச்சர் தாண்டவராய பிள்ளை ஆகியோர் திண்டுக்கல் விருப்பாச்சி பகுதிக்கு தப்பி சென்று மருது பாண்டியர்களுடன் இணைந்தனர். இவர்கள் விருப்பாச்சியில் ஹைதர் அலியின் பாதுகாப்பில் தங்கியிருந்தனர். பின்னர் வேலுநாச்சியார், மருது பாண்டிய சகோதரர்கள் மீண்டும் சிவகங்கைக்கு வர நவாப்கள் அனுமதி அளித்தனர். ஆனால் அவர்களுக்கு கப்பம் கட்ட பணித்தனர். வேலுநாச்சியார் சிவகங்கையின் அரசியான பின், சின்னமருது அமைச்சராகவும், வெள்ளைமருது படை தளபதியாகவும் நியமிக்கப்பட்டனர். 1780ம் ஆண்டு வேலுநாச்சியார் ஆட்சியை மருது சகோதரர்களிடம் ஒப்படைத்தார். சில ஆண்டுகளில் அவர் மரணமடைந்தார். மருது சகோதரர்கள் வேல் கம்புகளையே ஆயுதமாக கொண்டிருந்தனர். அவர்களிடம் இருந்த 12 ஆயிரம் வீரர்களை கொண்டு நவாப்களின் இடத்தை சூறையாடினர். இதனால் 1789ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் கொல்லங்குடி நோக்கி படையெடுத்தனர். இந்த தாக்குதலை மருது சகோதரர்கள் முறியடித்து வெற்றி பெற்றனர். மருது சகோதரர்கள் பாளையங்கோட்டை மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனிடம் நல்ல நட்பு வைத்திருந்தனர். கயத்தாறில் கட்டபொம்மனை தூக்கிலிட்ட பின் அவரது சகோதரர் ஊமைத்துரைக்கு இவர்கள் அடைக்கலம் அளித்தனர். இதன் காரணமாக கோபமடைந்த ஆங்கிலேயர்கள் சிவகங்கை மீது படையெடுத்தனர். இதில் மருது சகோதரர்கள் தோல்வியடைந்தனர்,. 1801ம் ஆண்டு மருது சகோதரர்கள் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டார்கள்.
மருது சகோதரர்கள் சிறந்த வீரர்கள் மட்டுமல்ல, சிறந்த நிர்வாகிகளும் ஆவர். 1783ம் ஆண்டு முதல் 1801ம் ஆண்டு வரை மக்களின் நலனுக்காக பாடுபட்டுள்ளனர். காளையார் கோவில், ஊரணிகள் போன்றவை இவர்களால் அமைக்கப்பட்டதாகும். இறுதியாக சிவகங்கையை கார்த்திகேய வெங்கடாசலபதி ராஜா ஆண்டுள்ளார். இவர் 1986ம் ஆண்டு காலமானார். இவரது மகள் மதுராந்தகி நாச்சியார் இன்று சிவகங்கை எஸ்டேட், சிவகங்கை தேவஸ்தானம், சத்திரம் போன்றவற்றை நிர்வகித்து வருகிறார்.
கடல் மட்டத்தில் இருந்து 102மீ உயரத்தில் அமைந்துள்ளது.
மக்கள் தொகை : 2001ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 40,129. இதில் ஆண்கள் 50 %, பெண்கள் 50%. கல்வியறிவு பெற்றவர்கள் 82%. ஆண்கள் கல்வியறிவு 86%, பெண்கள் கல்வியறிவு 77%.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக