ராதே கிருஷ்ணா 07-06-2014
Sri Prithyangira Devi added 2 new photos — with Iyyappanhinduannaiyarmunnai Nellai.
சனிக்கிரக தோஷம் நீக்கும் ஸ்ரீசத்குரு சம்ஹாரமூர்த்தி சுவாமிகள
திருச்செந்தூர் கடற்கரையில் சூரசமஹாரம் நடக்கும் இடத்தில் முருகனின் ஜெயந்தி மண்டபத்திற்கு அருகில் சுமார் பத்திற்கும் மேல் சித்தர் சமாதிகள் உள்ளன. அவற்றில் கடைசியாக தென்னை மரங்கள் சூழ்ந்த சோலையின் நடுவில் அமர்ந்து அருள்பாலித்துக் கொண்டிருந்தவர் தான ஸ்ரீசத்குரு சம்ஹாரமூர்த்தி சுவாமிகள்.
திருச்சி நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிழமரத்தடியில் அமர்ந்து தியானம் செய்து வந்தார்கள். இந்த காலத்தில்
குடுமியான்மலை குகையின் முன்னால் சுவாமிகள் ஒரு அத்திமரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்து கொண்டு இருந்தார். அப்பொழுது மலைக்கு வடக்கே 7 கி.மீ. தொலைவில் உள்ள வீரப்பட்டி என்ற ஊரில் உள்ள அடர்ந்த காட்டில் அதிசயிக்கத்தக்க தன்மைகொண்ட மரம் ஒன்று இடிவிழுந்து கருகி பட்டு போயிருப்பதைத் தன் ஞானதிருஷ்டியால் அறிந்தார். மகிமை பொருந்திய அம்மரத்தின் பெயர் தான்றிமரம். இந்த மரத்திற்கும் நளமகாராஜனுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருப்பதை இங்குக் காண்போம்.
நளன் எல்லாவற்றையும் சனி தோஷத்தால் இழந்து சமையல்காரனாகவும், தேரோட்டியாகவும் வந்து தேரோட்டி சென்ற பொழுது ராஜாவின் அங்கவஸ்திரமான மேலாடை கீழே விழுந்து விட்டது. அதனை தேடி எடுக்க ரதத்தை நிறுத்தி விட்டு கீழே இறங்கிய நளமகராஜன் தான்றி மரத்தின் மீது வஸ்திரம் இருப்பதைக் கண்டார். அந்த மரத்தில் நான்கு திசைகளுக்கும் நான்கு கிளைகள் செல்வதைக் கண்டார். அதில் ஏறி வஸ்திரம் எடுக்கும்முன்பு மரத்தை ஒருமுறை சுற்றி வணங்கிவிட்டு அதில் ஏறினார். மரத்தில் நான்கு கிளைகளுக்கும் கிளைக்கு ஒன்றாக நான்கு கனிகள் இருந்தன. அதை பறித்து சாப்பிட்டபொழுது ஒவ்வொன்றும் ஒருவித சுவையாக இருந்தது. அவைகளை நளன் பறித்து சாப்பிட்ட பொழுது இனிப்பு சுவையை உடைய கனியைச் சாப்பிட்ட பொழுது அங்கு ஒரு அசரீரி வாக்கு ஒலித்தது. அசரீரியாக சனிபகவான் நளனிடத்தில் இந்த தலத்திற்கு வந்து தான்றி மரத்தை நீ வணங்கியதால் நான் உன்னிடம் விட்டு விலகிக் கொள்கிறேன். நீ குடும்பமாக வந்து திருநள்ளாறில் என்னை வழிபடு என்று அருளினார்.இவ்வளவு சிறப்புப்பெற்ற நளமகாராஜனுக்கே சனி விலக செய்த இந்தத் தான்றி மரத்தின் சிறப்பை உலக மக்கள் அறியும்படி அதனை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்று சுவாமிகள் எண்ணினார். சுவாமிகள் குடுமியான மலையை விட்டு நீங்கி தான்றி வனத்தை அடைந்தார். அங்கு பட்டுப்போயிருந்த தான்றி மரத்தை அடைந்தார்கள். இந்த மரத்தின் தூரில் உள்ள பொந்தினுள்ளே சுவாமிகள் அமர்ந்து தியானத்தைத் தொடங்கி விட்டார்கள். சுவாமியின் ஆணைப்படி அன்பர்கள் வெளியே அடிமரத்தையும் அவர் அமர்ந்துள்ள பொந்தையும் சுற்றி களிமண்ணைக் கொண்டு முழுமையாகப் பூசிவிட்டார்கள். சிறிது நாட்கள் கழித்து பட்டுப்போன அந்த மரம் மெல்ல தளிர்க்க தொடங்கியது. புரவி படர்ந்து பூத்துக் குலுங்கியது. இதனைக்கண்ட மக்கள் சுவாமியின் சக்தியைக் கண்டு போற்றி வணங்கினர்.

சுவாமிகள் நடத்திக் காட்டிய அற்புதங்களும், அதிசயங்களும் ஏராளம் ஆகும். அவற்றை எல்லாம் எழுதினால் இக்கட்டுரை முடியாது. இவற்றில் சிகரம் வைத்தாற்போல் அமைந்த அதிசய செய்தியை மட்டும் இங்கு விவரிக்கின்றேன்.
மாமியார் கொடுமைக்கு ஆளான மருமகள் எத்தனையோ பேர்கள் ஸ்ரீசத்குரு சம்ஹாரமூர்த்தி சுவாமியை வணங்கி நல்ல வாழ்க்கை அமையப்பெற்றார்கள். கோர்ட் கேஸ் விவகாரங்களில்சனிக்கிரக தோஷம் உயிர் ஆபத்துக்களில் இருந்தும் நிவாரணம் பெற்றிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சுவாமியின் அருளையும் கருணையையும் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டு அவர்களும் தங்களது வாழ்க்கை துன்பங்களில் விடுதலை அடைய வேண்டும் என்று நல்ல என்னதில் தான் நான் இதில் பதிவு செய்கிறேன் .
நான் படித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்
விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள்!
நமது பிரபஞ்சம் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என் பஞ்சபூதங்களால் ஆனது. அந்தப் பிரபஞ்சத்தில் ஓர் அங்கமான நமது உடலும் இந்தப் பஞ்ச பூதங்களால் ஆனவையே. இந்த ஐந்து மூலங்களையும் உடலில் இருந்து பிரிக்க முடியாது. உடலின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு இந்த ஐந்து மூலகங்களே காரணமாக உள்ளன. இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமனநிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்.
நம்முடைய ஐந்து விரல்களும் ஐந்து மூலகங்களைக் குறிப்பிடுகின்றன.
கட்டை விரல் - நெருப்பையும் சுட்டுவிரல் -காற்றையும் நடுவிரல் - ஆகாயத்தையும் மோதிர விரல் - நிலத்தையும் சுண்டு விரல் - நீரையும் குறிக்கின்றன.
தினமும் காலையில் இருபது நிமிடங்கள் உங்களுக்கு உரிய முத்திரையைத் தேர்வு செய்து தியான நிலையில் அமருங்கள். நன்கு இழுத்து மூச்சை உள்ளேயும் வெளியேயும் விடுங்கள். மந்திரங்களோ வேறு சொற்களோ இதில் இல்லை.
சிந்தனைச் சக்தி வளர தியான முத்திரை!
தியானம் செய்பவர்கள் சுட்டுவிரல் கட்டை விரலைத் தொடும்படி வைத்துக் கொண்டு தியானம் செய்வார்கள் இதே நிலையில் இருபது நிமிடங்கள் கண்மூடி அமர்ந்தால் மூளையின் சக்தி அதிகரிக்கும். ஞாபகசக்தி, ஒரு முகப்படுத்தும் கவனம் முதலியவை அதிகரிக்கும். தூக்கமின்மை, டென்ஷன் முதலியவை அகலும். மன அமைதி கிடைக்கும்.
மூட்டு வலி குணமாக வாயு முத்திரை!
மூட்டுவலி, இரத்த ஓட்டக் குறைபாடு, பார்க்கின்சன் நோய், வாயுத்தொந்தரவு, செரிமானக் கோளாறு உள்ளவர்கள், விரல்களை இப்படி வைத்துக் கொண்டு தியான நிலையில் அமரவும். சுட்டு விரலைக் கட்டை விரலின் அடியைத் தொடும்படி வைத்துக் கொண்டு கட்டை விரல் லேசாகச் சுட்டு விரலை அழுத்தும்படி வைத்துக் கொள்ளவும்.
காது நன்கு கேட்க!
காதில் வலி என்றால் இது போலக் கட்டை விரலால் நடுவிரலை மடக்கி அழுத்திக் கொண்டு உட்காரவும். நாற்பது நிமிடங்கள் இதுபோல் அமர்ந்தால் காதுவலி பறந்து போகும். காது கேளாதவர்கள் இந்த ( shunya ) ஷன்ய முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தால் காது கேட்க ஆரம்பிக்கும்.
சுறுசுறுப்பாக வாழ பிருதிவி முத்திரை!
மனம் மிகவும் பதற்றமாக உள்ளதா? உடலும் உள்ளமும் சோர்ந்து போய்விட்டனவா? நோய் வாய்ப்பட்ட மனிதனுக்கு உடனடியாக திடவலிமையை அளிக்க வேண்டுமா? அனைத்திற்கும் பிருதிவி முத்திரை பயன்படும். மோதிர விரலைக் கட்டை விரல் நுனியின் மேல் வைத்துக் கொண்டு இருபது நிமிடங்கள் தியான நிலையில் அமருங்கள். அவ்வளவு தான். தேவையான ஆக்ஸிஜன் கிடைத்துவிடும். உற்சாகமும் புதுப்பிக் கப்பட்டு விடும். மதிய உணவுக்கு முன்பு இந்த முத்திரையை செய்து விட்டுச் சாப்பிட்டால் அதன் பிறகு வரும் பொழுதுகள் சுறுசுறுப்பான செயல் நிறைந்த நாளாக அமையும்.
இரத்தம் சுத்தமாக வருண் முத்திரை!
இரத்தம் சுத்தமாகவும் தோல் நோய்கள் குணமாகவும், தோல் மிருதுவாக மாறவும் சுண்டு விரல் நுனியையும் கட்டைவிரல் நுனியையும் இது போல வைத்துக் கொள்ளவும். வருண் முத்திரை என்று இதற்குப் பெயர். இரைப்பை குடல் சார்ந்த கோளாறுகள், உடலில் நீர் வற்றால் போன்ற கோளாறுகளையும் இந்த முத்திரை குணமாகும்.
கொழுப்பு கரைய சூரிய முத்திரை!
உடலுக்குத் தேவையான வெப்பம் கிடைக்கவும் செரிமானம் நன்கு நடக்கவும், உடலில் கொழுப்பு அளவு குறையவும் சூரிய முத்திரை உதவும். மோதிர விரலை மடக்கி அதன் மேல் கட்டை விரலை வைத்து அழுத்திக் கொண்டு தியான நிலையில் அமரவும்.
கண்ணாடியைத் தவிர்க்க பிராண முத்திரை!
நம் உடலில் ஷாக் அடிப்பதை உணர இந்தப் பிராண முத்திரை உதவும். பிராண முத்திரை செய்தால் நரம்புத் தளர்ச்சி, சோர்வு முதலியன அகலும். கண்ணாடி இன்றிச் சிறந்த கண்பார்வை பெற வாய்ப்பு அதிகரிக்கும். இதற்காகக் கட்டை விரல் நுனியைச் சுண்டுவிரல் மற்றும் மோதிரவிரல் நனிகள் தொடுமாறு வைத்துக் கொண்டு தியான நிலையில் அமரவும். பார்வைத் திறன் அதிகரிக்கும்.
காய்ச்சல் குணமாக லிங் முத்திரை!
இரண்டு உள்ளங்கைகளையும் விரல்களையும் இதுபோல் கோர்த்து இறுக்கிக் கொள்ளவும். இடக் கைப் பெருவிரல் நிமிர்ந்து நிற்க வேண்டும். அந்த விரலைச் சுற்றி வலக்கைப் பெருவிரல் இருக்க வேண்டும். பருவநிலை மாற்றத்தால் குளிர், ஜலதோஷம், தொற்று நோய் முதலியன பரவும். வெளியூரில் காய்ச்சல் வருவதுபோல் தோன்றினால் இது போல் நுரையீரல்களுக்கு வெப்பத்தை உண்டாக்கும் சக்தியை லிங் முத்திரை கொடுத்துவிடும். சளிக் காய்ச்சல், கொழுப்பு உள்ளவர்கள் இந்த முத்திரையால் பெரிய அளவில் நன்மை அடையலாம். காய்ச்சலின் போது இந்த லிங்( ling ) முத்திரையை அடிக்கடி பயன்படுத்தவும். இதனால் விரைந்து குணம் பெறலாம்.
நெஞ்சுவலியா? அபான் வாயு முத்திரை
நெஞ்சுவலி, இதயம் வேகவேகமாகத் துடித்தல் முதலியவற்றை அபான் வாயு(apan vayu) முத்திரை குணப்படுத்தும். சுட்டுவிரல், கட்டை விரலின் அடியில் இருக்க வேண்டும். அதன் பிறகு நடுவிரலும் மோதிர விரலும் கட்டைவிரல், நுனியைத் தொடுவது போல வைத்துக் கொண்டு தியானம் செய்யவும்.
மாரடைப்பு, பதற்றம் முதலியவற்றைத் தடுக்க....
வாயு முத்திரை, அபான் வாயு முத்திரை ஆகியவற்றுக்கு அடுத்து இப்படி விரல்களை வைத்துக் கொள்ளலாம்.
இரத்தக் கொதிப்பா? வியான முத்திரை
இரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்த கட்டைவிரல் நுனி மீது சுட்டுவிரல், நடுவிரல் நுனிகளை வைத்துக் கொண்டு அமரவும். வியான( vyana ) முத்திரை என்று இதற்குப் பெயர்.
எல்லா வயதுக்காரர்களும் தியான முத்திரையை மேற்கொள்ளலாம், பிறகு உங்கள் வியாதிக்குரிய முத்திரையைச் செய்ய வேண்டும். இதனால் நோய்கள் குணமாவதுடன் உடலில் எதிர்ப்புச்சக்தி வளரும். அது மட்டுமல்ல, மனவளமும் ஆரோக்கியமாகத் திகழும்.
இப்படிக்கு
பஞ்சபூதங்கள்
இப்படிக்கு
பஞ்சபூதங்கள்
22 mins ·
மனிதன் எந்தக் காரியத்தையும் இரகசியமாகச் செய்யமுடியாது.
சூரியன்,
சந்திரன்,
காற்று,
நெருப்பு,
ஆகாயம்,
பூமி,
நீர்,
இதயம்,
யாமம்,
இரவு,
பகல்,
தர்மம்,
நீதி,
இறைவன்
ஆகிய பதின்மூன்று சாட்சிகள்
சதா மனிதனின் நடத்தையைக்
கவனித்துக் கொண்டிருக்கின்றன.
சதா மனிதனின் நடத்தையைக்
கவனித்துக் கொண்டிருக்கின்றன.
இனிய காலை வணக்கங்கள் உரித்தாகுக ,
இன்று நாள் உங்கள் அனைவருக்கும் நல்லவைகளை தரட்டும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக