From the album: Timeline Photos
By Varagooran Narayanan
“கல்யாண விஷயத்ல, பொண், பையன் ஜாதகப் பொருத்தத்துக்கு ஜாஸ்தி importance குடுக்காம, குலம், கோத்ரம், மனப் பொருத்தம் இருந்தா போறும்"
ஜோஸ்யர் ஒருத்தர் பெரியவாளை தரிசிக்க வந்தார்.
“பெரிய குடும்பம், வருமானம் போறலை, ஜோஸ்யம் சொல்லறதிலே வரும்படி ரொம்ப கொறைச்சல், ரொம்ப கஷ்டம்..” என்று முறையிட்டார்.
“நீ…. ஒங்கஅப்பா இருந்த பூர்விக கிருஹத்லதானே இருக்கே?”
“இல்லே….அதுல அண்ணா இருக்கான். அதுக்கு மேற்கு பக்கம் ஒரு ஆத்துல இருக்கேன்”
“நீ அங்கே இருக்க வேணாம். பூர்விக க்ருஹத்துலேயே கிழக்கு பக்கத்துல பழையமாட்டுகொட்டாய் இருக்கோன்னோ? அந்த எடத்ல ஒரு குடிசை போட்டுண்டு இரு. பரம்பரையா அம்பாளை பூஜை பண்ணின குடும்பம். மாட்டுக் கொட்டகைல இருங்கோ. அதோட, இன்னொண்ணும் கேளு. எல்லா க்ரஹங்களையும் நன்னா. திட்டறயோன்னோ ! ….உங்க ஜாதகத்ல குரு நீசன், சனி பாபி, புதன் வக்கிரம்!…இப்பிடியெல்லாம் வாயால சொல்லக் கூடாது”.
“குரு…ங்கறது பெரிய கிரகம். தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபம்….அவரைப் போய்நீசன், பாபி, வக்கிரம்..ன்னெல்லாம் திட்டக் கூடாது. சனி, சூர்யனோட புத்திரன். ஈஸ்வரபட்டம் வாங்கிண்டவர். அவரைப் போய் பாபிங்கறே! கிரகங்கள் சரியான எடத்ல இல்லை…..கால பலன் சரியில்லைன்னு சொன்னா போறுமே!”
“பொண்பிள்ளை ஜாதக பொருத்தம் பாக்க வரவா கிட்டே “பொருத்தமில்லை” ன்னு நிர்தாட்சண்யமா சொல்ல வேணாமே! பொண்ணுக்கு விவாக காலம் வர நாளாகும், பையனுக்கு புத்திர பாக்கியம் கேள்விக் குறிங்கற மாதிரி சொல்லலாம். முப்பது வயசாகியும் நெறைய பொண்கள் கல்யாணம் ஆகாம இருக்கா. அப்பிடிப்பட்டவாளுக்கு வரன், ஜாதகபொருத்தம் பாக்க வந்தா, முடிஞ்சவரை நிராகரிக்காம பதில் சொல்லணும்”.
“கல்யாண விஷயத்ல, பொண், பையன் ஜாதகப் பொருத்தத்துக்கு ஜாஸ்தி importance குடுக்காம, குலம், கோத்ரம், மனப் பொருத்தம் இருந்தா போறும். பழங்காலத்ல ஜாதகப்பொருத்தம் அவ்வளவு முக்யமா இருந்ததில்லை”.
ஜோஸ்யர் திருப்தியோடு, “இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்” என்று சொல்லி பிரசாதம் வாங்கிக் கொண்டு போனார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக