ஞாயிறு, 1 ஜூன், 2014

ஏழு வகை தீட்சை

ராதே கிருஷ்ணா 02-06-2014






From the album: Timeline Photos
By முகநூல் இந்து இராணுவம்-Hindu Cyber Army
ஏழு வகை தீட்சை

1. பட்டாடை போட்டு மறைத்துச் சீடனின் வலக்காதில் திருவைந்தெழுத்தை உபதேசிப்பது வாசக தீட்சையாகும்.

2. பறவை தனது முட்டையைச் சிறகினால் அணைத்து வெப்பமூட்டி, குஞ்சு வெளிப்பட செய்வது போல, குரு தனது சீடனைத் தன் திருக்கரத்தால் ஸ்பரிசிப்பது ஸ்பரிச தீட்சையாகும்.

3.மீன் தனது முட்டைகளைப் பார்வையினால் பொரிக்கச் செய்து, அவற்றின் பசியையும் போக்குவது போல, குருநாதர் தம் சீடனை அருள் பார்வையால் ஞானமீந்து அருளல் சட்சு தீட்சை அல்லது நயன தீட்சை எனப்படுகிறது.

4. ஆமை கரையிலிருந்தவாறே தனது முட்டையைத் தனது மனத்தில் நினைக்க, ஆமைக்குஞ்சு வெளிப்படுவது போல, குரு தம் சீடனை அருள் உருவாய் பாவிப்பது மானச தீட்சையாகும்.

5. பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருளின் உண்மையினையும், இயல்பினையும், ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களும் நீங்கி முக்திப் பேறடைய சிவாகமங்கள் வழியில் நின்று தெளிய போதிப்பது சாத்திரத் தீட்சையாகும்.

6. சிவயோகம் பயில உபதேசிப்பது யோக தீட்சையாகும்.

7. குண்ட மண்டலமிட்டு அக்நி காரியம் செய்து, பாசத்தைப் போக்குவது அவுத்திரி தீட்சையாகும்.


காஞ்சி மஹா பெரியவர் : -


From the album: Timeline Photos
By Chinthamani
காஞ்சி மஹா பெரியவர் : -

" துன்பத்தைப் பற்றி வருந்திக் கொண்டிருப்பது
மதத்தின் வழியாகாது. நாம் சங்கடமான
நிலைமையில் இருக்கும் போது தீய எண்ணங்கள் 
நம் மனதில் புகாமல் இருக்க பிராத்தனை செய்ய
வேண்டும். அவ்வாறு செய்தால் சமாளிக்கும்
திறமை வலுப்பெற்று துன்பமே அர்த்தமற்றதாகிவிடும்.
அத்தகைய நோக்கு ஞானத்தில் பிறப்பதாகும்.
ஒவ்வொருவரும் தத்தம் முயற்சியாலேயே
ஞானத்தை அடைய வேண்டும். ஆகவேதான்,
நம் மதம் தனி மனிதனை அடிப்படையாகக்
கொண்டது. நம்மைச் சேர்ந்த, நாம் செய்யும்
ஒவ்வொன்றையும் ஆண்டவனுக்கு அர்ப்பணித்து
விட்டால் சுக துக்கங்களால் பாதிக்கப்படாமல்
இருப்பதற்கான சமமான மன நிலையை நாம் பெறலாம்."

-காஞ்சி மகான், காஞ்சிப் பெரியவர்.




















































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக