சனி, 12 ஏப்ரல், 2014

தில்லானா மோகனாம்பாள்

ராதே கிருஷ்ணா 13-04-2014


தில்லானா மோகனாம்பாள்

Parthu Rowvey Vmp commented on this.
Follow
கலையரசன் சிவாஜி கணேசனின் ஆசிகளுடன் அனைவருக்கும் இக்குழுவின் காலை வணக்கங்கள்.


கலையரசன் சிவாஜி கணேசனின் ஆசிகளுடன் அனைவருக்கும் இக்குழுவின் காலை வணக்கங்கள்.
தில்லானா மோகனாம்பாள் - ஆனந்த விகடனில் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய தொடரை வைத்து எடுக்கப்பட்ட
திரைப்படம்.சிக்கல் சண்முகசுந்தரம் (சிவாஜி) ஒரு சிறந்த நாதஸ்வரக் கலைஞர். ஆனால் முன்கோபம் உடையவர். அவர் நாட்டியக்கலைஞர் மோகனாமபாளை (பத்மினி) சந்திக்க நேரிடுகிறது. இருவரும் காதல் வயப்படுகிறார்கள்.ஆனால் பத்மினி சிவாஜியை தான் ஆடும் தில்லானாவுக்கு அவர் நாதஸ்வரம் வாசிக்க முடியுமா என்று சவால் விடுவதால் . அவரது சுய மரியாதை மேற்கொண்டு காதலை தொடர முடியாமல் தடுக்கிறது. பத்மினியின் தாயார் அவரை பெரும்பணக்காரர் யாருக்காவது திருமணம் செய்து வைத்து விட்டால் அவர் வசதியான வாழ்க்கை வாழலாம் என்று எண்ணுகிறார். ஜமீன்தாரின் மருமகனான பாலாஜி பத்மினியின் வீட்டுக்கு வருவதை பார்த்த சிவாஜி அவரை தவறாக எண்ணி மனமுடைந்து தான் தனது தங்கை போல என்னும் ஜில் ஜில் ரமாமணி (மனோரமா) என்ற நாட்டுபபுற நடனக்களைஞருடன் நாட்டை விட்டே வெளியேற முடிவு செய்கிறார். இதை தடுக்க எண்ணிய மனோரமா பத்மினியை சந்தித்து அவரை எப்படியாவது தடுக்குமாறு வேண்டுகிறார். பத்மினி அவரை தனது சவாலை ஏற்றுக்கொள்ள பயந்து நாட்டை விட்டு ஓடுவதாக பரிகாசம் செய்யவே சிவாஜி அவருடன் போட்டியில் கலந்து கொள்கிறார். இது ஊர் பெரியவர்கள் முன்னிலையில் ஒரு கோவிலில் நடக்கிறது. இரண்டு பேரும் சரிசமமாக தத்தம் கலைகளில் பரிமளிப்ப்பதால் வெற்றி தோல்வி இன்றி முடிகிறது. சிவாஜி பத்மினியை பாராட்டி அவருக்கு தில்லானா மோகனாம்பாள் என்ற பட்டத்தை அளிக்கிறார். இது மேலும் அவர்களிடையே காதலை வலுப்படுத்துகிறது. அப்போது பத்மினியை அடைய துடிக்கும் மைனர் ஒருவன் வீசிய விஷம் தோய்ந்த கத்தியால் சிவாஜிக்கு காயம் ஏற்படுகிறது
முழுவதுவமாக குணம் அடையுமுன் சிவாஜியும் பத்மினியும் சென்னை தமிழிசை சங்கத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிடுகிறது, அதற்க்கு தலைமை தாங்கிய மதன்பூர் மகராஜாவை (நம்பியார்) சவடால் வைத்தி என்றழைக்கப்படும் நாகேஷ் சந்தித்து மோகனம்பாள் அவரது அரச சபையில் நாட்டியமாட வேண்டியவர் என்று ஆசை காட்டி சம்மதம் வாங்கி விடுகிறார். சிவாஜியிடமும் பத்மினியிடமும் ஒருவரிடம் அடுத்தவர் மதன்பூர் வர சம்மததித்து விட்டதாக பொய் கூறி சம்மதிக்க வைத்துவிடுகிறார். .அங்கே வைத்தி சிவாஜியின் குழுவினரை அவமானபடுத்த சிவாஜி மதன்புரை விட்டு வெளியேற முடிவு செய்கிறார். அப்போது பத்மினி நம்பியாரின் அறைக்குள் செல்வதை பார்த்த சிவாஜி தவறான முடிவுக்கு வந்து விடுகிறார். நம்பியார் பத்மினியை தனது ஆசை நாயகியாக இருக்குமாறு கூற பத்மினி அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். நம்பியார் அதன் பின்விளைவுகளை பத்மினி சந்திக்க நேரிடும் என்று கூறி கட்டயபடுத்த அங்கு வந்த மதன்பூர் மகாராணி நம்பியாரை சாடி பத்மினியை காப்பாற்றுகிறார் நம்பியாரும் தன தவறை உணர்ந்து பத்மினியிடம் மன்னிப்பு கேட்கிறார். நடந்தது எதுவும் அறியாத சிவாஜி பத்மினியை கேவலமாக பேச பத்மினி தனது அறைக்குள் சென்று கதவை தாளிட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயற்ச்சிக்கிறார். நம்பியார் சிவாஜியிடம் நடந்ததை கூறி பத்மினி சிவாஜியைத்தான் காதலிப்பதாக கூறுகிறார். சிவாஜி விரைந்து சென்று கதவை உடைத்து பத்மினியை காப்பாற்றி இனி எந்நிலையிலும் அவரை சந்தகப்பட மாட்டேன் என்று உறுதி கூறி அவரிடம் மன்னிப்பு கேட்கிறார். பத்மினியின் தாயாரும் மனம் திருந்தி சிவாஜிக்கே பத்மினியை மணமுடிப்பதாக உறுதி கூறுகிறார். ஏமாற்ற்றுக்காரரான நாகேஷை போலீஸ் கைது செய்கிறது.
இந்த படத்தில் பாலய்யாவின் நடிப்பும் நாகேஷின் நடிப்பும் மிகவும் அருமையாக இருந்தன. இரயில் பயணத்தின்போது பாலய்யாவின் நகைச்சுவையும், ஜில் ஜில் ரமாமணியாக வரும் மனோரமாவின் நகைசுவையும் மிகவும் அருமையாக இருந்தன. மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன, நலம்தானா போன்ற பாடல்கள் செவிக்கு மட்டுமன்றி கண்ணுக்கும் விருந்தாக அமைந்தன. இந்த படம் கலை உலகில் ஒரு மைல் கல் என்றால் அது மிகையாகாது.
வாழ்க நடிகர் திலகத்தின் கலை. வளர்க அவரது புகழ். ஜெய் ஹிந்த்!



























































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக