ராதே கிருஷ்ணா 21-04-2014
சனாதன தர்மமும்(ஹிந்து மதமும்) கிறிஸ்துவ மதமும் பாகம் 14:
(கடைசி பாகம்)
மதங்களுக்கெல்லாம் தாய் மதம் என்று ஹிந்து மதத்தைச் சொல்லலாம். உலகில் தோன்றியுள்ள மதங்கள் அனைத்துக்கும் இது முதலில் தோன்றியது. அப்போதைக்கப்போது உருவெடுத்துவரும் சன்மார்க்கங்களை யெல்லாம் தன்னகத்து அடக்கி வைப்பது ஹிந்துமதத்தின் சிறப்பு. பண்டையகாலம் தொட்டு இக்காலம் பரியந்தம் கணக்கற்ற சான்றோர்களை ஹிந்து மதம் ஈன்றேடுத்துக் கொண்டே வந்துள்ளது. நல்ல மரம் ஒன்றில் நல்ல கனிகள் கொண்டே ஒரு மரத்தின் தரத்தை அறியலாம். அதே பாங்கில் ஒரு மதம் உண்டுபண்ணும் சான்றோர்களை கொண்டே அந்த மதத்தின் சிறப்பையும் உள்வலிவையும் அறிந்து கொள்ளலாம்.
வலிவுற்றிருப்பது, தளர்வுற்றிருப்பது ஆகிய இருநிலைகள் வாழ்க்கையை ஒட்டியவைகள். ஒரு விதத்தில் இந்த இரண்டு நிலைகள் ஒவ்வொரு மதத்துக்கும் வந்தமைகின்றன. இடைக்காலத்தில் சில நூற்றாண்டுகளாக ஹிந்து மதம் தளர்வுற்றிருந்தது. இப்பொழுது அது புத்துயிர் பெற்று வருகிறது. நெறியில் சீர்கேடு அடைந்துள்ள காலத்திலும் கூட ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், தயானந்த சரஸ்வதி, இராமலிங்க வள்ளலார், அரவிந்த கோஷ், ரமண மகரிஷி போன்ற பெருமக்களை ஈன்றெடுத்திருக்கிறது. புற நாடுகளிலும் பேறிஞர்களுக்கிடையில் ஹிந்து மதத்திலுள்ள சிறந்த கோட்பாடுகள் இடம் பெற்றுவருகின்றன.
இந்தியாவுக்குள் புதியவைகளாக இஸ்லாமிய மதமும், கிறிஸ்துவ மதமும் வந்திருக்கின்றன. நாளடைவில் இவ்விரண்டு மதங்களும் ஹிந்து மதத்தில் இணைக்கப்பெற்று இடம்பெறும் அறிகுறிகள் இப்பொழுதே தென்படுகின்றன. Time Bomb காலக்கிரமத்தில் வெடிக்கும் வெடிகுண்டு வைத்து ஹிந்து மதத்தை ஒழித்துவிடுவது தங்களுடைய சீரிய செயல் என்று கத்தோலிக்க சகோதரர்கள் இறுமாப்பு எய்துகின்றனர். ஆனால் ஹிந்து மதமோ Time Balm நாளடைவில் சிகிச்சை செய்யும் அன்பு என்னும் அருமருந்தை வழங்கி எல்லா மதங்களுக்கிடையில் சகோதர பாவனையை உண்டுபண்ணும். அவரவர்க்கேற்ற உணவை மக்கள் உண்பதுபோன்று அவர்வர்க்கேற்ற மதத்தையும் மக்கள் கையாளலாம். நதிகள் எம்மலையில் உற்பத்தியானாலும் கடைசியில் கடலை போய்ச் சேர்கின்றன. அங்ஙனம் எல்லாச் சமயங்களும் கடைசியில் மக்களைக் கடவுளிடத்து எடுத்துச் செல்லுகின்றன. இப்பேருண்மையை சான்றோர் அறிந்திருக்கின்றனர். ஆதலால் அவர்கள் உலகில் சாந்தியை வழங்குகின்றனர். சான்றோர்களைப் பின்பற்றி அன்பையும் ஒற்றுமையையுமே வளர்த்து வருவது நல்லார்களுடைய கடமையாகிறது.
நன்றி .......

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக