ராதே கிருஷ்ணா 24-04-2014
Narasimman Nagarajan shared Sarma Sastrigal's status update.
11 hrs ·
'வேதமும் பண்பாடும்’ நூலில் ச்ராத்தத்தை பற்றி விரிவான ஒரு அத்யாயம் உள்ளது. அதிலிருந்து ஒரு சில வரிகள்:
நம்பிக்கை:
அவரவர்கள் அவரவர் சூத்திரப்படி ச்ராத்தம் செய்வதுதான் முறை. ஒரு வேளை குறிப்பிட்ட சூத்திரம் பண்ணிவைக்க ஆசாரியன் கிடைக்காத பக்ஷத்தில் எந்த சூத்திர வாத்தியார் கிடைப்பாரோ அந்த சூத்திரப்படியாவது ச்ராத்தம் செய்யலாம்.

கர்மாவை விடக்கூடாது.
அதே மாதிரி சாஸ்திரிகளை குறை சொல்லவும் தேவையில்லை. அவரவர்கள் கர்மா அவரவர்களுடையது. நமது ச்ரத்தையும், பார்வையும் தான் முக்கியம். அதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சம்பாவனை:
ச்ராத்தத்தில் இப்பொழுதெல்லாம் இன்னொரு விஷயமும் பிரச்னையாகி வருகின்றதை நாம் சில இடங்களில் பார்க்கின்றோம். அது சம்பாவனை விஷயத்தில். “எங்கள் அப்பா அப்போதெல்லாம் இவ்வளவுதான் கொடுப்பார்” என்ற ஆர்க்யுமெண்ட். சிறிது யோசித்தால் நமக்கே புரியும், இது எவ்வளவு அபத்தமென்று. சிலர் குறிப்பிடுகின்ற அந்த காலத்தின் ஒரு ரூபாய் என்பது இன்று கிட்டத்தட்ட 100 ரூபாய்க்கு சமமல்லவா? ஆதலால் இப்படியெல்லாம் வாதிடாமல் தன்னால் முடிந்ததை த்ருப்தியாக சம்பாவனை அளிப்பது உசிதம். சாஸ்திரிகளை தேவதாஸ்வரூபமாக நினைப்பதுதான் நமது பாரம்பரியம்.

சாப்பிடும் ப்ராம்ஹணாள்:
எக்காரணம் கொண்டும் வரிக்கப்பட்ட பிராம்ஹணாளை அவமானப்படுத்தும் எண்ணமே நமக்கு வரக்கூடாது. வரிக்கப்ப்ட்ட பிறகு எதை பற்றியும் சிந்திக்கக்கூடாது என பெரியவர்கள் வழி காட்டியுள்ளார்கள்.

நாம் தயாரா?
நாம் எல்லோருமே ப்ராம்மணார்த்தம் சாப்பிட வேண்டிய குலத்தில் பிறந்தவர்கள்தானே! நம் முன்னோர்களும் ஒரு காலத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள்தானே! ஆனால் இன்று நம்மில் எத்தனை பேர் இன்னொரு வீட்டில் போய் ப்ராம்மணார்த்தம் சாப்பிடத் தயார்? நம்மால் முடியாதல்லவா? அப்படி இருக்கும் போது மற்றவர்களை குறை கூறுவதில் நமக்கு என்ன யோக்யதை இருக்கு?

ப்ராம்மணார்த்தம் சாப்பிடுபவர்களும் ஒரு வகையில் பொது சேவை செய்பவர்கள்தான். அவர்கள் இல்லாவிடில் கர்மா எப்படி நடக்கும்?
நாம் யோசிக்க வேண்டிய விஷயம்.
வைதிகம்:
வைதிகத்தில் நம்பிக்கை வளர வேண்டும். அதற்கு வைதிகாளிடம் நம்பிக்கையும், மரியாதையும் வைப்பதுதான் ஒரே வழி. வைதிக தர்மத்தை அனுஷ்டிப்பது நமது கடமையாக இருப்பதால் மிக முக்கியமான மந்திரங்களையாவது நாம் ஒவ்வொருவரும் அத்யயனம் செய்ய வேண்டும். கேசட்டுக்களை நம்பக்கூடாது. ஏனெனில் அது நம்மைத் திருத்தாது. மேலும் கேசட்டுக்களைக் கேட்கும் போது நம்மை அறியாமலே நமக்கு ஒரு “திருப்தி” மாயை ஏற்பட்டு விடுகின்றது. நாம் வாயை திறந்து சொன்னால்தான் பலன் கிடைக்கும்.

ஒரு நாளும் ஸந்தியாவந்தனம் செய்யாமல் இருக்க வேண்டாம். குறிப்பாக ஸந்தியாவந்தனத்தில் வரும் ப்ராணாயாமம், சூர்ய த்யானம், தர்ப்பணம், காயத்ரி ஜபம் போன்றவைகளை கவனமாக செய்ய பழகுவது நல்லது.
கூடியமானவரை ஆசார நியமங்களை நாம் கடைப் பிடித்தால் நமக்கு ச்ரேயஸ் உண்டாகும் என்பதில் சந்தேகமில்லை.
எண்ணங்கள்:
நமது எண்ணங்கள் முக்கியம். எண்ணங்கள் (thoughts) எப்போதுமே மிகவும் சக்திவாய்ந்தவை (powerful). நாம் நமது எண்ணத்தை எவ்வாறு ஓட்டுகிறோமோ அவ்வாறே அனைத்து நிகழ்ச்சிகளும் நம்மை சுற்றி பொதுவாக நடைபெறும். எந்த நற் கர்மாவை நாம் எண்ணி, நினைத்து நினைத்து வாழ்கின்றோமோ, அதுவே நம்மை ஒரு கட்டத்தில் நல் வழிப்படுத்தி வழிகாட்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக