ராதே கிருஷ்ணா 21-04-2014
1 hr ·
குசேலர் கிருஷ்ண பகவானைப் பார்க்கச் சென்ற நாள் அட்சய திரிதியைத் திருநாள்!
சித்திரை மாத அமா வாசையை அடுத்து வரும் திரிதியை நாளே அட்சய திரிதியை எனப்படும். அன்று திருத்தலங்களுக் குச் சென்று இறை வழிபாடு செய்தால் வாழ்வு வளம் பெறும்.
திரிதியை என்றால் மூன்றாவது நாள் என்று அர்த்தம். அட்சயம் என் றால் வளருதல் என்று பொருள்படும். அள்ள அள் ளக் குறையாமல் வளர்ந்து கொடுக்கும் தன்மை கொண்டது அட்சய பாத் திரம். அதுபோல் அட்சய திரிதியை என்பது செல் வத்தினை மேன்மேலும் வழங்கக்கூடிய நாள் என்பர். அன்று இறை வனுக்குப் பூஜை செய்தால் அனைத்துச் செல்வங் களும் கிடைக்கும்.
ஒவ்வொரு மூன்றாம் பிறையின்போதும் அம்பாள் காட்சி கொடுத்து அருள்புரிவதாகவும், அன்று சித்தர் பெருமக் கள் வானத்தில் வலம் வருவதாகவும் புராணங் கள் சொல்கின்றன. அத னால்தான் மூன்றாம் பிறையைத் தரிசிப்பது மிகவும் சிறப்பு என்பர். மூன்றாம் பிறையைத் தரி சித்தபின் அம்பாளை வழி பட்டு, எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் அது வெற்றி தரும் என்று சாஸ்திரம் கூறுகிறது. அன்று எதை வாங்கினா லும் அச்செல்வம் பெருகும்.
குசேலர் கிருஷ்ண பரமாத்மாவின் குருகுல நண்பர். அவர் வறுமையில் வாடிய சமயம், அவரது மனைவியின் ஆலோசனைப் படி கிருஷ்ணரிடம் உதவி கேட்கச் சென்றார். குசேலரை அன்புடன் வரவேற்ற கிருஷ்ணன், ""எனக்கு என்ன கொண்டு வந்திருக்கிறாய்?'' என்று குசேலரிடம் கேட்டுக் கொண்டே, அவர் துண்டில் முடிந்து வைத்திருந்த மூன்றுபிடி அவலை எடுத்து சுவைத்து உண்டார். கிருஷ்ணர் குசேலரின் அவலை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் வேளையில், குசேலரின் இல்லத்தில் செல்வங்கள் குவிந்தன. ஏழையின் குடிசை மாளிகையாக மாறியது. குசேலர் கிருஷ்ண பகவானைப் பார்க்கச் சென்ற நாள் அட்சய திரிதியைத் திருநாள்!
இந்நாளில் ஏழைகளுக்கு தர்மம் செய்தால் எதிர்காலம் செழுமையாக இருக்கும்; வசதியான வாழ்வு கிட்டும்.
அட்சய திரிதியை நாளில் ஆடைகளையும் பழங்களையும் தானம் செய்தால் சிறப்பான வாழ்வு அமையும். அன்னதானம் செய்தால் வாழ்நாள் முழுவதும் உணவு கிடைத்துக் கொண்டிருக்கும். தயிர் சாதம் தானம் செய்தால் பாவங்கள் அழியும். எனவே, அட்சய திரிதியை நாளில் முடிந்த அளவு ஏழை களுக்குத் தானம் செய்யுங்கள்.
பாண்டவர்களிடம் அட்சயப் பாத்திரம் இருந்ததாக மகாபாரதம் கூறுகிறது. இந்தப் பாத்திரத்தை பாண்டவர்களுக்குக் கொடுத்த வர் சூரியன். அள்ள அள்ளக் குறையாமல் எத்தனை பேர்களுக்கு வேண்டுமானாலும் உணவைக் கொடுக்கும் இந்தப் பாத்திரத்தை திரௌபதி ஒரு நாளைக்கு ஒருமுறைதான் பயன்படுத்துவாள். உணவு பரிமாறியபின் அந்தப் பாத்திரத்தைக் கழுவி வைத்து விடுவாள்.
ஒருசமயம் அட்சய திரிதியை அன்று உணவு உண்டபின் பாத்திரத்தைக் கழுவி வைத்ததும், அங்கு கண்ணபிரான் வந்தார். அவர் திரௌபதியிடம், "பசியாற ஏதாவது உணவு கொடு' என்று கேட்க, என்ன செய்வதென்று புரியாமல் வருந்திய திரௌபதி மகாவிஷ்ணு வைப் பிரார்த்தித்து, கழுவி வைத்த அட்சய பாத்திரத்தைப் பார்த்தாள். அதில் ஒரே ஒரு கீரைத் துண்டு ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருந்தது. அதை எடுத்து கிருஷ்ண பரமாத்மாவுக்குக் கொடுத்தாள். திரௌபதி அளித்த அந்தக் கீரைத்துண்டினைச் சாப்பிட்ட கிருஷ்ணரின் வயிறு நிறைந்தது; அவரது மனமும் மகிழ்ந்தது என்று மகாபாரதக் கதை கூறுகிறது.
இந்தப் புனித நாளில்தான் பிரம்மன் இந்தப் பூவுலகைப் படைத்தார் என்று புராணங்கள் பேசுகின்றன. அன்றுதான் திரேதாயுகம் பிறந்தது என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.
இத்தனை சிறப்புகள் மிக்க அட்சய திரிதியை நாளில் தெய்வ வழிபாடு செய்து வாழ்க்கையில் வளம் பெறுவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக