சனி, 8 பிப்ரவரி, 2014

அபிவாதயே.. ஒரு உரத்த சிந்தனை ‘அபிவாதனத்தை’பற்றி:

ராதே கிருஷ்ணா 09-02-2014







Follow · February 6 · Edited 

அபிவாதயே..
ஒரு உரத்த சிந்தனை ‘அபிவாதனத்தை’பற்றி:

தற்போதெல்லாம் ஒரு வினோதத்தை ஆங்காங்கு பார்த்து வருகின்றேன்.

சிறியவர்களை விட்டுத்தள்ளுங்கள்; வயாதானவர்களில் (வைதிகத்திலும் ஆச்சார அனுஷ்டானத்திலும் நம்பிக்கையிருப்பவர்கள் கூட) பலர் பெரியோர்களுக்கு நமஸ்காரம் செய்யும்போது ‘அபிவாதயே’ சொல்லும் கட்டத்தில் தினறி போய் மனதுற்குள்ளாகவே ’ அபிவாதயே’ சொல்லுவதாக பாவனை செய்வார்கள்; கிடுகிடுவென சொல்லி முடித்தது போல் ‘ஆக்ட்’ தருவார்கள். இதை நீங்களும் கவணித்திருக்கலாம்.

அபிவாதனம் என்ன அவ்வளவு சிரமமானதா என்றால் கிடையவே கிடையாது. ரொம்ப சுலபம் மாத்திரம் அல்ல; ‘அபிவாதயே’ முழுவதும் சொல்லுவதற்கு ஒரு நிமிஷம் போதுமே.

இதை ஒழுங்காக சொல்ல பழக வேண்டாமா?

பெரியோர்களுக்கு நமஸ்காரம் செய்யும்போது அவசியம் ‘அபிவாதயே’ சொல்லித்தான் ஆசிகள் பெற வேண்டும். சாஸ்திர விதி இது. ‘அபிவாதயே‘யில் வணங்குபவரின் பூர்வோத்தரமே அடங்கி இருக்கும். தான் யார், தன் கோத்திரம் என்ன, தான் எந்த வேத சாகையை சார்ந்தவன், தனது பெயர், பூர்வீகம் என்ன என்கிற அத்தனை விவரங்களும் அதில் உள்ளடக்கம்.

இதில் இன்னுமொரு சூக்ஷ்மமும் அடங்கியுள்து. அபிவாதயே சொல்லும்போது வேதகாலத்து ரிஷிகள், அதுவும் குறிப்பிட்ட கோத்திரத்தின் மூல புருஷர்கள் எனப்படும் ரிஷிகளது பெயர்கள் வருகின்றதல்லாவா (Eg.’த்ரயார்ஷயே’ என்ற பதத்திற்குமுன் வருகின்ற பெயர்கள்), இந்த ரிஷிகளின் பாரம்பரியத்தை ‘நான் சார்ந்தவன்’ என்று நமக்கு நாமே ஞாபகப்படுத்திக் கொள்ளுகின்றோம். இதில் நாம் பெருமைப் பட வேண்டாமா! அதுவுமல்லாமல் இந்த குறிப்பிட்ட ’ஸூத்ரத்தை சார்ந்தவன் நான்’ என்று கூறும்போது நமக்கு ஏற்படுகின்ற ஆனந்தத்தை நாம் அனுபவிக்கத் தவறலாமா ?























































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக