ராதே கிருஷ்ணா 26-02-2014
நெஞ்சை ஆழ தொடும் ஒரு நிகழ்ச்சி
நெஞ்சை ஆழ தொடும் ஒரு நிகழ்ச்சி
நெஞ்சை ஆழ தொடும் ஒரு நிகழ்ச்சி. நெடுங்காலத்திற்கு முன் நடந்தது.
ஒரு சிறுவனின் சருமத்தில் கரும் திட்டுகள் தோன்றி உடல் முழுவதும் பரவி விட்டது. பார்க்கவே ஓர் அருவருப்பு. உடன் படிப்பவர்கள் அவனை ஒதுக்கி ஓடினார்கள்.
உடல் வியாதி பாதியும் மனோ வியாதி மீதியுமாய் சாம்பி போன பிள்ளையை தாயார்க்காரி தயாமூர்த்தியிடம் அழைத்து வந்து உருகி வேண்டினாள்.
...
நம்ப வொண்ணாத அருள் வாசகம் ஐயன் திருவாயில் இருந்து வந்தது. 'கொழந்தே, இங்கே என்னோடே மூணு நாள் இருக்கியா?'
அவன் பதில் சொல்லும் முன்பே தாயார்க்காரி, 'பாக்கியம், மூணு என்ன, எத்தனை நாள் வேணுமானாலும் பையன் பெரிவாளோட இருக்கட்டும்' என்றாள்.
பையனும் மனமார ஒத்துக்கொண்டான்.
'நான் என்ன சாப்பிடறேனோ, அதைத்தான் நீயும் சாப்பிடணும். செய்வியா?' என்றார் ஸ்ரீ சரணர்.
'பெரியவா என்ன சொன்னாலும் செய்யறேன், உடம்பு சரியா போனா போறும்' என்றான் பையன்.
'நான் சாப்பிடறதுக்கு மேலே ஒண்ணே ஒண்ணு மட்டும் நீ அப்பப்போ சாப்பிடணும் - உப்பு போடாத மோர் அடிக்கடி சாப்பிடு. காபி, டீ வேண்டாம்'.
'பெரியவா சொல்றபடி'.
அடுத்த மூன்று நாள்கள் அந்த 'யாரோ பையன்' ஸ்ரீ மடத்தில் பெற்ற அதீத கவனிப்பு உண்டே! பார்த்து பார்த்து, மோர், MORE AND MORE மோர் கொடுத்தார்கள். பெரியவாளும் அது பற்றி அக்கறையுடன் விசாரித்த வண்ண இருந்தார்.
சாக்ஷாத் ஸ்ரீ பெரியவாள் திருவமுது கொண்ட ஆகாரத்தின் மிகுதி சிறுவனுக்கும் வழங்கப்பட்டது.
அது என்ன ஆகாரம் என்பதல்லவா முக்கியம்?
பச்சை வாழை தண்டித்தான் பொடிபொடியாக நறுக்கி எவ்வித தாளிப்பும் இல்லாமல், சிறிது தயிர் மட்டும் கலந்திருந்தது. அதுவே பெரியவாளுக்கு பிக்ஷை. சிறுவனுக்கு பிரசாதம். பெரியவாளின் பிரசாதம் ஆதலால், அதுவே சிறுவனுக்கு அறுசுவை விருந்தாக ருசித்தது.
மூன்று நாளில் நோய் நன்கு நிவர்த்தி ஆயிற்று. சாம்பி வந்த குழந்தை மலர்ச்சி கண்டான்.
'ஆத்துக்கு போனாவிட்டும் ஒரு மாசம், உப்பு, புளி, மொளகா, சேர்க்காம சாதுவா சாப்பிடு. இந்த 'ஒடம்பு' ஒரு நாளும் வராது.' என்று கூறி ஆசிர்வதித்து அனுப்பினார் வைத்தியநாதன்.
குஷியாக ஓடினான் பாலகன்.
பெரியவாளின் அன்பு கரிசனம் வாசகர் நெஞ்சை தொடவே செய்யும். ஆனாலும் 'ஆழ'த்தொடும் என்று அடைமொழி சேர்த்ததற்கு இதனினும் காரணம் உண்டு.
பெரியவாள் அக்காலத்தில் பச்சை வாழை தண்டே உண்டாராக்கும், அதையே பாலனுக்கும் பகிர்ந்து அளித்தாராக்கும் என்று வாசகர் எண்ணக்கூடும். உண்மை அது அல்ல. பெரியவாளின் பிக்ஷையை பையனின் உணவாக்கவில்லை. பையனுக்கான உணவைத்தான் பெரியவாள் தமது பிக்ஷை ஆக்கி கொண்டார்...
ஆம், அது பெரியவாள் ஓரளவு காய்கறிகளுடன் அன்ன பிக்ஷையும் அவ்வப்போது ஏற்று வந்த காலம் தான். அது போன்ற சமயத்தில் பையனுக்கு இந்த பத்தியம் அவசியம் என்று விதித்த மஹா ஆத்மன், ஒரு குழந்தை நாவை அவ்வாறு கட்டுபடுத்தும் போது தாமும் அந்த கட்டுபாட்டை ஏற்க வேண்டும் என்றே கருதி காரியத்தில் செய்து காட்டினார்.
சேய்க்கு வந்த நோய்க்கு அந்த அருட் தாயும் மருந்து உண்டாள் என்றும் சொல்லலாம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக