ராதே கிருஷ்ணா 01-12-2013
உயிருக்கும் உயிர் எது?
உயிருக்கும் உயிர் எது?
உயிருக்கும் உயிர் எது?
* ரோஜாவிடமிருந்து பூக்களைத்தான் பறிக்க வேண்டுமே ஒழிய, அதிலுள்ள முள்ளைச் சீவ வேண்டியதில்லை. அதுபோல, படிக்கும் சாஸ்திரங்களில் இருந்து சாரத்தை மட்டும் தான் எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, சாரமில்லாத வேண்டாத விஷயங்களைத் தள்ளிவிட வேண்டும்.
* கடலில் ஒரு அலை முடிந்ததும் மற்றொரு அலை கிளம்பிக் கொண்டே இருக்கும். அதுபோல குதர்க்கபுத்தி கொண்டவர்களின் உள்ளத்தில் பலவிதமான சந்தேகங்கள் கிளம்பியபடியே இருக்கும். அதை தீர்த்து வைப்பது என்பது சமுத்திரத்தை கட்டுப்படுத்துவது போலத்தான்.
* கடிகாரம் ஓடிக்கொண்டே இருப்பது போலத் தோன்றினாலும், அதை சாவி கொடுத்து இயக்கியவன் ஒருவன் இருக்கிறான் அல்லவா? அதுபோல, உலகவாழ்க்கை இயற்கையாகவே நடப்பது போல கண்ணுக்குத் தோன்றினாலும், அதை இயக்குவிப்பவன் ஒருவன் இருக்கிறான். அவனையே பகவான் என்று அழைக்கிறோம்.
* உயிருக்கும் உயிராக இருப்பவர் கடவுள். உடலுக்குள் இருக்கும் உயிரையே யாராலும் காணமுடியவில்லை. அப்படியிருக்க உயிரின் உயிரை இவ்வுலகில் அறியவல்லவர் தான் யார்?
* ஈரமண்ணில் செடி கொடிகள் வளரும். காய்ந்த மண்ணில் செடி பட்டுவிடும். அதுபோல, இரக்கம் கொண்ட மிருதுவான இதயத்தில்தான் பக்தி வளரும். கடினமான இதயத்தில் பக்திக்கு இடமே இருப்பதில்லை.
- கிருஷ்ணப்ரேமி சுவாமிகள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக