திங்கள், 14 அக்டோபர், 2013

என் அப்பாவின் உடல் நிலை

ராதே கிருஷ்ணா 14-10-2013

என் அப்பாவின் உடல் நிலை

  • Parthu Rowvey Vmp shared Proud To Be Tamil's photo.
    என் அப்பாவின் உடல் நிலை மோசமாகி அவரை ICU வில் சேர்த்திருக்கிறோம். ஹார்ட் ஃ பைல்யுர். 40% பம்பிங் மட்டுமே நடக்கிறது. 83 வயது நடக்கிறது. ஆசுபத்திரியில் இருக்கையில் ஒரு 45 வயது மதிக்கத் தக்க ஒருவரை தள்ளு வண்டியில் வைத்து எமர்ஜென்சி என்று கூறி கேத் லேபிற்கு கொண்டு சென்றார்கள். உற்று நோக்கினேன். அவன் என் பால்ய சிநேகிதன் அனந்த பாபு. நாங்கள் காவேரிப் பட்டினம் எனும் ஊரில் பிறந்து வளர்ந்து விளையாடிக் களித்தவர்கள். இரண்டு பெண் குழந்தைகள். முதல் பெண் இப்போதுதான் +2 கடந்து முதல் வருட CA படிக்கிறாள். இரண்டாம் பெண் 9ஆம் வகுப்பு. இவரது மனைவி, +2 வரை மட்டுமே படித்து வீட்டை கவனித்து வரும் பெண்மணி. என் நண்பனோ ஒரு டயர் கம்பெனியில் சாதாரண சேல்ஸ் வேலை. ஆஞ்சியோகிராம் முடிந்து வெளியே வருகையில் தான் தெரிந்தது அவனது நிலை கிரிட்டிகல் என்று.கேத் என்று சொல்லப் படும் ஊசி கூட உள்ளே நுழைந்தால் அவனது இருதயம் நின்று விடும் என்று உள்ள நிலைமையில் டாக்டர் சுந்தர் (நங்கநல்லூர்) சட்டென்று நிறுத்தி விட்டு உடனடியாக காமாட்சி ஆசுபத்திரியில் ஒரு எமர்ஜென்சி அறுவை சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார். நம்மில் பலர் போலத்தான் இந்த நோயாளி அனந்த பாபுவும். 1. பத்து நாளாக மார்பில் வலி இருந்தும் அதை அஜீரணம் என்று தவறாக நினைத்து அஜீரணத்திற்கு வைத்தியம் பார்த்தது. 2. அவன் 10 டாக்டர்களை பார்த்திருக்கிறான், ஒருவர் கூட அவனுக்கு இருதய நோய் இருப்பதாகத் தெரிவிக்கவில்லை. பத்தாவது டாக்டர் சந்திரிகா ரகுநாதனுக்கு மட்டும் என்னவோ அலாரம் அடித்தது போல சட்டென்று டாக்டர் சுந்தரிடம் அனுப்பி வைத்தார். மற்ற டாக்டர்கள் ஃ பீசை மட்டும் மறக்காமல் வாங்கிக் கொண்டு ஈசீஜிக்கு காசும் பெற்றுக் கொண்டு 'ஒன்றும் இல்லை செத்துப் போ' என்று சொல்லி விட்டார்கள். 3. அனந்த பாபு, மனைவி தன சொந்தக் கால்களில் நிற்கக் கற்றுக் கொடுக்கவில்லை. ஆசுபத்திரி வளாகத்தில் இரண்டு குழந்தைகளுடன் அவளும் அழுது கொண்டு நின்றது தவிர அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. 4. 'எனக்கென்ன ? என் உடல் நிலை நன்றாகத் தானே இருக்கிறது? எக்சர்சைஸ் பாடி' என்று பெருமிதத்துடன் நடந்த அனந்த பாபு இந்த தவறான சிந்தனையால் தனக்கென்றோ குடும்பத்திற்கென்றோ, எந்த ஒரு சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தையும் எடுத்துக் கொள்ளவில்லை. 5. சட்டென்று இந்த அறுவை சிகிச்சைக்கு ரூ 2.5 இலட்சம் தேவைப் பட்ட போது இந்த நடுத்தர வகுப்பு குடும்பத்தினரால் எப்படி புரட்ட முடியும்? 6. ஏதாவது வெளியூர் கிராமம் என்று இருந்தால் கூட 'சரி தெரியவில்லை' என்று பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் சென்னையில் 20 வருடங்களாக வாழும் இவர்களுக்கு ஏன் இது போல காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றவில்லை? நண்பர்களே! நான் உங்களுக்குக் கூறும் அறிவுரை இதுதான்.... 1. தயவு செய்து உங்கள் மனைவியை தன காலில் நிற்கவும், ஒரு அவசர நிலை என்று வரும்போது எப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஒரு கண்டின்ஜென்சி ப்ளான் ஐ அவருக்கு தெளிவாக சொல்லி வைக்கவும். அவசர நிலையில் எவ்வாறு இமொஷனலாக ஆகாமல், முடிவுகளை 'பட் பட்'டென்று எடுத்து அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ஆலோசனை கூறுங்கள். 2. உங்கள் வயது 38 ஐ கடந்திருந்தால், தயவு செய்து உங்களை ஒரு காப்பீட்டு திட்டத்திற்குள் சேர்த்துக் கொள்ளுங்கள். குடும்ப காப்பீடு என்றால் மிகவும் உத்தமம். இது செலவு அல்ல என்று மட்டும் நினைத்துக் கொள்ளுங்கள். இது அத்தியாவசியமான காலக் கட்டங்களில் யாரையும் எதிர் பார்க்காமல் உதவிக்கு வந்து நிற்கும் என்பதை மறவாதீர்கள். 3. காப்பீடு என்பது செலவு அல்ல, அது ஒரு முதலீடு என்பதை மறவாதீர்கள். கூடியவரை இந்திய அரசின் காப்பீடு நிறுவனங்களில் சேருங்கள். காரணம் அங்குதான் சில நேரங்களில் தேவைப் படும் எனில் சட்டங்களையே வளைத்து, உங்களுக்கு உதவும் நல்ல குணம் கொண்ட பணியாளர்கள் இருக்கிறார்கள். தனியார் நிறுவனங்கள் உங்க காசுக்கு ஆசைப் படுவார்களே ஒழியே, தேவை என்று வரும்போது 'அது சொட்டை இது சொள்ளை' என்று கூறி உங்கள் குடும்பத்தினரை அலைகழிப்பார்கள். 4. உங்கள் குழந்தைகளுக்கும் அவசர நிலையில் எவ்வாறு முடிவெடுக்க வேண்டும் என்று கூறுங்கள். அது குழந்தை தானே என்று அலட்சியமாக இருக்காதீர்கள். பல நேரங்களில் நம் குழந்தைகளே நமக்கு தெய்வீகமான தீர்ப்புகளைக் கொடுக்கிறார்கள். 5. 37 வயது கடந்தவர்கள் அனைவரும் (ஆண் மற்றும் பெண் இருபாலரும்) தயவு செய்து தற்காலம் கூவிக் கூவி விற்கும் ஆரோக்கிய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இதன் செலவு ரூ 800 முதல் 1000 மட்டுமே. முன்கூட்டி நமது ஆரோக்கியம் குறித்து அறிந்து கொள்வது என்பது நவரத்னா நிறுவனத்தில் முதலீடு செய்வது போல. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...... நிற்க, அனந்த பாபுவின் அறுவைச் சிகிச்சை நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு நடந்து முடிந்து அவர் நன்றாக இருக்கிறார். கூடவே அவரது செலவுக்கான பணத்திற்கு ஒரு வழி முறையும் கண்டு பிடிக்கப் பட்டது. அந்தக் குடும்பம் நிர்கதியாக போகாமல் செய்த கடவுளுக்கு என் மனமார்ந்த நன்றி. இனியாவது அனந்த பாபு தன குடும்பத்திற்காக எதையாவது செய்வான் என்று எதிர் பார்ப்போம். உங்களின் நிறைய அனந்த பாபுக்கள் இருக்கிறீர்கள்..... அதுதான் என் வருத்தம். தயவு செய்து உங்கள் உடல் ஆரோக்கியத்தில் முதலீடு செய்யுங்கள். உங்கள் குடும்பம் நடுத்தெருவில் வராமல் காப்பாற்றுங்கள்.....இந்த தகவலை நீங்களும் ஷேர் செய்து முடிந்தவரை எல்லோரிடமும் விழிப்புணர்வை ஏட்படுத்துங்கள்...... நன்றி; டிமிடித் பெட்கோவ்ஸ்கி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக