புதன், 20 மார்ச், 2013

சிவன், அனுமன், சக்தி இந்து கடவுள் அல்ல.. தீர்ப்பாயம் உத்தரவுக்கு பார்லியில் கண்டனம்!

ராதே கிருஷ்ணா 20-03-2013


முதல் பக்கம் » தகவல்கள்
சிவன், அனுமன், சக்தி இந்து கடவுள் அல்ல.. தீர்ப்பாயம் உத்தரவுக்கு பார்லியில் கண்டனம்!
மார்ச் 20,2013
அ-
+
Temple images
மும்பை: சிவன், அனுமன், சக்தி ஆகிய கடவுள்கள், எந்த மதத்திற்கும் உரியவர்கள் அல்ல; அவர்கள் பிரபஞ்சத்தின் ஆதிசக்தி என, வருமான வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயம் கூறியுள்ளதற்கு, லோக்சபாவில் நேற்று கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.நாக்பூரில் உள்ள, சிவன் கோவில் நிர்வாகம் மேற்கொண்ட செலவிற்கு, வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்க, வருமான வரித்துறை ஆணையர் மறுத்துள்ளார்.இதையடுத்து, இந்த விவகாரத்தை, வருமான வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயத்திற்கு, சிவன் கோவில் நிர்வாகம் எடுத்துச் சென்றது. கோவில் மற்றும் வழிபாட்டு செலவுகளுக்காக, கோவில் நிர்வாகம் செலவிட்ட தொகைக்கு, வருமான வரி விலக்கு அளிக்க முடியாது என, தீர்ப்பாயமும் உத்தரவிட்டது.இதுகுறித்த உத்தரவில், "மதம், ஜாதியைச் சேர்ந்த அமைப்புகள் அல்லது அறக்கட்டளைகள், வருமான வரி விலக்கு பெற முடியும். சிவன், அனுமன், சக்தி போன்ற கடவுள்கள், எந்த மதத்திற்கும் உரியவர்கள் அல்ல; அவர்கள், பிரபஞ்சத்தின் ஆதிசக்தி. எனவே, சிவன் கோவில் செலவுக்கு, வரி விலக்கு பெற முடியாது என, தெரிவிக்கப்பட்டது.மேலும், "கோவில்கள் தர்மத்தை பரப்புகின்றன. இந்து கலாசாரம் எந்த ஒரு வழிபாட்டு முறையையும் பின்பற்ற வலியுறுத்தவில்லை. இதே போல், குறிப்பிட்ட ஒரு கடவுள் தான், இந்து மதத்தின் அடையாளம் என்றும் இல்லை எனவும், வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் தெரிவித்தது.இந்த விவகாரம் நேற்று, லோக்சபாவில் எதிரொலித்தது. பாரதிய ஜனதா எம்.பி., யோகி ஆதித்யநாத் பேசியதாவது:இந்து கடவுள்களான சிவன், அனுமன், சக்தியை இந்து கடவுள்கள் அல்ல என, வருமான வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயம் கூறியுள்ளது. இது, இந்து மதத்திற்கு எதிரான உத்தரவு. பிற மதங்கள் மற்றும் கோவில்களுக்கு வழங்கப்படுவது போன்ற வருமான வரி விலக்கு, நாக்பூர் சிவன் கோவில் நிர்வாகத்திற்கும் வழங்கப்பட வேண்டும்.சர்ச்சைக்குரிய விதத்தில் உத்தரவிட்டுள்ள, தீர்ப்பாய அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து மத கடவுள்களை அவமரியாதை செய்துள்ளதை பொறுத்துக் கொள்ள முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக