வியாழன், 10 ஜனவரி, 2013

18 அடி உயர ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழா! சுசீந்தரம் ஆஞ்சநேயர்


ராதே கிருஷ்ணா 10-01-2013

18 அடி உயர ஆஞ்சநேயருக்கு ஜெயந்தி விழா!    சுசீந்தரம் ஆஞ்சநேயர் 

Temple images

சுசீந்திரம்: சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலிலுள்ள 18 அடி உயர ஆஞ்சநேய சுவாமியின் ஜெயந்திவிழா நாளை கோலாகலமாக நடக்கிறது. சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் வடக்கு பிரகாரத்திலுள்ள 18 அடி உயர ஆஞ்சநேய சுவாமியின் ஜெயந்திவிழா இன்று காலை 5 மணிக்கு கணபதிஹோமத்துடன் துவங்குகிறது. காலை 8 மணிக்கு நீலகண்ட விநாயகருக்கு அபிஷேகம், 10.30க்கு தாணுமாலய சுவாமிக்கு அபிஷேகம், தொடர்ந்து உச்சகால பூஜை, மாலை 6க்கு உதய மார்த்தாண்ட விநாயகருக்கு தீபாராதனை, காலபைரவருக்கு தீபாராதனை நடக்கிறது. நாளை காலை 4க்கு ஸ்ரீராமபிரானுக்கு அபிஷேகம், 6க்கு ஆஞ்சநேய சுவாமிக்கு ஷோடச அபிஷேகம் நடக்கிறது. களபம், பால், தயிர், நெய், குங்குமம், பன்னீர், சந்தனம், தேன், இளநீர் உட்பட 16 வகையான பொருட்களால் சுவாமிக்கு அபிஷேகம், நடக்கிறது. காலை 10 முதல் இரவு 8 மணிவரை தொடர் அன்னதானம், பகல் 1க்கு ஆஞ்சநேய சுவாமிக்கு அலங்கார தீபாராதனை, மாலை 5க்கு பஜனையும் நடக்கிறது. மாலை 6க்கு ராமபிரானுக்கு புஷ்பாபிஷேகமும், தொடர்ந்து 18 அடி உயர ஆஞ்சநேய சுவாமியின் கழுத்தளவு வரை பலவித வண்ண வாசனை மலர்களால் புஷ்பாபிஷேகம் நடக்கிறது. இரவு 10க்கு சுவாமிக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினரும் ஸ்ரீராம ஆஞ்சநேய பக்தர்கள் டிரஸ்டியினரும் செய்து வருகின்றனர்.
சுசீந்திரம் ஆஞ்சநேயர் வரலாறு: 1740 ஜனவரி மாதம் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மா மகாராஜாவின் படைவீரர்களின் ஒரு பிரிவினர் குளச்சலில் டச்சுப்போர் வீரர்களுடனும், மற்றொரு பிரிவினர் வடக்கே காயங்குளம் மன்னரிடமும் போரிட்டு கொண்டிருந்த சமயம் பார்த்து ஆர்க்காடு நவாப்பான சந்தாசாகிப் அவரது சுகோதரர் போடாசாகிப் மற்றும் படைத்தளபதி சப்தர் அலிகான் ஆகியோர் நாஞ்சில் நாட்டை நோக்கி படையெடுத்து வந்தனர். ஆரல்வாய்மொழி கோட்டையை கடந்து அஞ்சுகிராமம் வழியாக வரும்போது அவர்கள் அறுவடைக்காக காத்து நின்ற நெற்பயிர்களையும், தானியங்களையும் சூறையாடி ஈத்தங்காடு என்னுமிடத்தில் வந்த போது அன்றைய வட்டப்பள்ளி ஸ்தானிகர் தலைமையில் ஊர் பொதுமக்கள் சேர்ந்து கடும் சண்டை நடத்தினர். இதில் வட்டப்பள்ளி ஸ்தானிகர் உட்பட பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர். வெற்றி பெற்ற நவாப் தனது படையோடு பழையாற்றை கடந்து சுசீந்திரத்தை வந்தடைந்தனர். மார்கழி திருவிழா முடிந்து மிக கம்பீரமாக நின்று கொண்டிருந்த அன்றைய சுவாமி தேரை தீயிட்டு கொளுத்தினர். கோயிலின் உட்பகுதியை சேதப்படுத்தினர். ஈத்தங்காட்டில் போர் நடந்து வந்த வேளையில் உள்ளூர் பொதுமக்கள் கோயில் சம்பந்தப்பட்ட பொருட்களை கருவறைக்குள் இட்டு பூட்டி சுவரெழுப்பி பாதுகாத்தனர். அந்த சமயம் 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலையை காப்பாற்ற மண்ணுக்குள் புதைத்து மறைத்து வைத்தனர். 2 நூற்றாண்டுகளாக யாருமே புதைந்து கிடந்த ஆஞ்சநேயரை எடுத்து நிறுத்தி வைக்க முன்வரவில்லை.
சித்திரை திருநாள் மன்னர் மகாராஜாவாக பொறுப்பேற்றதும் சி.பி.ராமசாமி ஐயர் திவானாக இருந்த சமயம், எம்.கே.மாங்கொம்பு நீலகண்ட ஐயர் தேவஸ்தான கமிஷனராகவும், கேரளவர்மா கண்காணிப்பாளராகவும், பரமேஸ்வர சர்மா வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகராக இருந்த சமயம் ஆஞ்சநேய சுவாமி மண்ணிற்குள் இருந்து எடுக்கப்பட்டு வட கிழக்கு மூலையில் ராமபிரானின் எதிரே 1930மே 2ம்தேதி (1105சித்திரை19) நிறுவப்பட்டார். பிரதிஷ்டை செய்யாவிட்டாலும் கூட அகில உலகம் முழுவதும் ஆஞ்சநேய சுவாமியின் புகழ் பரவியுள்ளது. இன்று ஆஞ்சநேய ஜெயந்தி விழாவையொட்டி அரசு நிர்வாகம் சார்பில், சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவிலில் இருந்து காலை முதல் இரவு வரை ஸ்பெஷல் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பக்தர்களின் நலன் கருதி குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
Share  
Bookmark and Share


 தினமலர் முதல் பக்கம்  கோயில் முதல் பக்கம்

























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக