திங்கள், 2 ஏப்ரல், 2012

முடங்கிக் கிடக்கும் தேசத்தை முன்னேற்ற வேண்டும் , வாருங்கள்

ராதே கிருஷ்ணா 03-04-2012




முடங்கிக் கிடக்கும் தேசத்தை 


முன்னேற்ற வேண்டும் , வாருங்கள்


அன்புடையீர் , வணக்கம்

மணிக் கணக்கு மாறி
இப்பொழுது நாட்கணக்கில் மின்வெட்டு
தொழில் முடக்கம் , விவசாய முடக்கம்
மாணவர் படிப்பு முடக்கம்
வியர்வையிலும் இருட்டிலும் முடங்கிக் கிடக்கிறது தமிழகம்

அழும் பிள்ளைக்கு பாலில்லை - அய்யோ !
அன்னை மார்பும் வற்றிப் போச்சு
பால் விளையும் ஏறிப் போச்சு


கால்களுக்கு வலுவில்லை - இன்னும்
எவ்வளவு தூரம் நடந்து போக
பஸ் டிக்கட்டும்  ஏறிப் போச்சு
பசியிலும் வலியிலும் முடங்கிக் கிடக்கிறது தமிழகம்

விபத்து, கொலை, கொள்ளை, ஆட்கடத்தல்
பள்ளிக்குப் போன பிள்ளைகள் வரும் வரை
மனசு தவிக்குது - அரசோ
வீதிக்கு வீதி மதுக்கடை திறந்து
போதையை விற்குது
தவிப்பிலும் போதையிலும் முடங்கிக் கிடக்கிறது தமிழகம்


விண்வெளியில் ஏறி நடந்து போகலாம் - மீறி
உள்ளூர் வீதியில் நடந்தால்
உயிரே போகலாம்
சாதிக் கொடுமையில் ஆதிதமிழர்கள்

ஊர்வலம் போனால் உரிமைகள் கேட்டால்
சுட்டுத் தள்ளுது
ஊழலில் திளைத்து திமிர் பிடித்து
போலீஸ் சீரழியுது


வெற்றிலைப் பாக்கு பீடி விற்க
வெளிநாட்டுக் கம்பெனி
விஷக் கொடுக்கு அமெரிக்காவிற்கு
சல்யுட் அடிக்குது
முதலாளிகள் முன்னே கரணம் போட்டு
ஊழியம் செய்யுது

இந்திய அரசும் தமிழக அரசும்
ஏழைகள் வாழ்வை முடக்கிப் போடுது
இதனால் ....... இந்தியதேசமே முடங்கிக் கிடக்குது

விவசாய நிலங்கள்....
சிறப்பு பொருளாதார மண்டலங்களாக
பண்ணை நிலங்களாக
முதலாளிகளுக்கு தாரைவார்ப்பு
பல லட்சம் மக்கள் குடிமனைப்பட்டா
கேட்டு பரிதவிப்பு


கல்வியை சரக்காக்கி சந்தைக்கு
அனுப்பிவிட்டு ஏழைகளுக்கு சமாதி கட்டும் அரசு!




ஒருவர் கையை ஒருவர் பிடித்து ஒன்று சேரணும்             
உழைக்கும் மக்கள் ஒன்றாய் சேர்ந்து எதிர்த்து நிக்கணும்
முடங்கிக் கிடக்கும் தேசத்தை
முன்னேற்ற வேண்டும் வாருங்கள்!!


நன்றி : CPI ( M )














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக