ராதே கிருஷ்ணா 24-10-2019
மகாபாரதம்
தொடரின் ஒரு பகுதி |
இந்து புனித நூல்கள் |
---|
மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது இராமாயணம் ஆகும். வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது. இந்தியத் துணைக்கண்டப் பண்பாட்டைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இதிகாசம் இந்து சமயத்தின் முக்கியமான நூல்களில் ஒன்று.
அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் மனிதனுடைய நால்வகை நோக்கங்களையும், சமூகத்துடனும், உலகத்துடனும் தனிப்பட்டவருக்கு உரிய உறவுகளையும், பழவினைகள் பற்றியும் இது விளக்க முற்படுகின்றது. இது 74,000க்கு மேற்பட்ட பாடல் அடிகளையும், நீளமான உரைநடைப் பத்திகளையும் கொண்டு விளங்கும் இந்த ஆக்கத்தில் 18 இலட்சம் சொற்கள் காணப்படுகின்றன. இதனால் இது உலகின் மிக நீண்ட இதிகாசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது இலியட், ஒடிஸ்சி ஆகிய இரண்டு இதிகாசங்களும் சேர்ந்த அளவிலும் 10 மடங்கு பெரியது. தாந்தே எழுதிய தெய்வீக நகைச்சுவை (Divine Comedy) என்னும் நூலிலும் ஐந்து மடங்கும், இராமாயணத்திலும் நான்கு மடங்கும் இது நீளமானது.
நவீன இந்து சமயத்தின் முக்கிய நூல்களிலொன்றான பகவத் கீதையும் இந்த இதிகாசத்தின் ஒரு பகுதியே. பாண்டு, திருதராட்டிரன் என்னும் இரு சகோதரர்களின் பிள்ளைகளிடையே இடம் பெற்ற பெரிய போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதே இந்தக் காப்பியமாகும்.
இதனைத் தமிழில் இலக்கியமாகப் படைத்தவர் வில்லிபுத்தூரார் ஆவார். பாரதியார் மகாபாரதத்தின் ஒரு பகுதியை பாஞ்சாலி சபதம் எனும் பெயரில் இயற்றினார். வியாசர் விருந்து என்ற பெயரில் இராஜகோபாலாச்சாரி அவர்கள் மகாபாரதத்தினை உரைநடையாக இயற்றியுள்ளார்.[1]
பொருளடக்கம்
தோற்றம்
இதன் முற்பட்ட பகுதிகள் வேதகாலத்தின் இறுதிப் பகுதியைச் (கிமு 5ஆம் நூற்றாண்டு) சேர்ந்தவையாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. கிபி நான்காம் நூற்றாண்டில் தொடங்கிய குப்தர் காலத்தில் இது இதன் முழு வடிவத்தைப் பெற்றிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. நீண்ட காலமாகப் படிப்படியாக வளர்ச்சியடைந்தே இது இதன் முழு நீளத்தை அடைந்ததாகச் சொல்கிறார்கள். முறையான பாரதம் எனக் கூறப்படும் இதன் மூலப் பகுதி 24,000 அடிகளைக் கொண்டது என மகாபாரதத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளது. வியாசரால் இயற்றப்பட்ட பாரதத்தின் மூலப் பகுதி 8,000 அடிகளைக் கொண்டிருந்தது என மகாபாரதத்தின் ஆதி பர்வம் கூறுகிறது இது ஜெயம் என அழைக்கப்பட்டுள்ளது. பின்னர் வைசம்பாயனரால் ஓதப்பட்டபோது இது 24,000 அடிகளைக் கொண்டிருந்தது. உக்கிராஸ்ராவ சௌதி ஓதியபடி இது 90,000 அடிகளை உடையதாக இருந்தது.
இவ்விதிகாசத்தை எழுதியவராக மரபுவழியாக நம்பப்படும் வியாசர் இதில் ஒரு கதை மாந்தராகவும் உள்ளார். வியாசரின் வேண்டுகோளுக்கு இணங்கி, அவர் பாடல்களைச் சொல்ல, இந்துக் கடவுளான பிள்ளையாரே ஏட்டில் எழுதினார் என மகாபாரதத்தின் முதல் பகுதியில் கூறப்பட்டுள்ளது. இடையில் நிறுத்தாமல் தொடர்ச்சியாகப் பாடல்களைச் சொல்லிவரவேண்டும் எனப் பிள்ளையார் நிபந்தனை விதித்தாராம். வியாசரும் எழுதுமுன் தன் பாடல் வரிகளைப் பிள்ளையார் புரிந்து கொண்டு எழுதினால் அந் நிபந்தனைக்கு உடன்படுவதாகக் கூறினாராம்.
"மகாபாரதம்" என்னும் நூல் தலைப்பு, "பரத வம்சத்தின் பெருங்கதை" என்னும் பொருள் தருவது. தொடக்கத்தில் இது, 24,000 அடிகளைக் கொண்டிருந்தபோது அது வெறுமனே "பாரதம்" எனப்பட்டது. பின்னர் இது மேலும் விரிவடைந்தபோது "மகாபாரதம்" என அழைக்கப்பட்டது.
உள்ளடக்கப் பரப்பு
இது, குருச்சேத்திரப் போர் எனப்படும், பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையிலான பெரும் போரை மையப்படுத்திய கதையாக இருந்தபோதிலும், இதில், பிரம்மம், ஆத்மா என்பன தொடர்பானமெய்யியல் உள்ளடக்கங்களும் பெருமளவில் உள்ளன. பகவத் கீதை, மனித வாழ்வின் நால்வகை நோக்கங்கள் தொடர்பான விளக்கங்கள் போன்றவை இவற்றுள் அடக்கம்.
மகாபாரதம் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கியிருப்பதாகக் கூறுகிறது. இதன் முதலாம் பர்வம், "இதில் காணப்படுபவை வேறிடங்களிலும் காணப்படலாம். இதில் காணப்படாதவை வேறெங்கும் காணப்படா" என்கிறது. இவ்விதிகாசத்தினுள் அடங்கியுள்ள முக்கிய ஆக்கங்களும் கதைகளும் கீழே பட்டியலிடப்படுகின்றன.
- பகவத் கீதை: பகவத் கீதை, மகாபாரதத்தின் ஆறாவது பர்வமான பீஷ்மபர்வத்தில் அடங்கியுள்ளது. குருச்சேத்திரப் போரின் தொடக்கத்தில், அப்போர் தேவைதானா என அருச்சுனனுக்கு ஏற்பட்ட ஐயத்தையும், தொய்வையும் நீக்குவதற்காகக் கண்ணன் கூறிய அறிவுரைகளை உள்ளடக்கியது இது.
- விதுர நீதி: இது ஐந்தாம் பருவமான உத்யோக பருவத்தில் வருகிறது. திருதராட்டிரனுக்கு, விதுரன் ஓர் இரவு முழுவதும், மனிதன் எப்படி இருக்க வேண்டும்; எப்படி இருக்கக் கூடாது; என்னென்ன செய்ய வேண்டும்; என்னென்ன செய்யக் கூடாது என்கிற வாழ்வியல் நீதிநெறிகளை விளக்கிக் கூறும் பகுதி இது.
- நளன், தமயந்தி கதை: இதிகாசத்தின் மூன்றாம் பர்வமான ஆரண்யகபர்வத்தில் காணப்படுகின்றது. இது நளன் என்னும் அரசனும், தமயந்தி என்னும் இளவரசியும் காதலித்து மணம்புரிந்து கொள்வதையும், பின்னர் நளன் சனியால் பீடிக்கப்பட்டு நாடிழந்து பல ஆண்டுகள் அல்லலுற்று மீண்டும் இழந்த அரசுரிமையைப் பெறுவதையும் கூறும் கதை.
- இராமாயணத்தின் சுருக்கம்: மூன்றாம் பர்வமான ஆரண்யகபர்வத்தில் உள்ளது.
- மேலும் தேவயானி - கசன், யயாதி, நகுசன், சாரங்கக் குஞ்சுகளின் கதை, அகஸ்தியரின் கதை, யவக்ரீவன் கதை, தருமவியாதன் என்னும் கசாப்புக் கடைக்காரனின் கதை, சத்தியவான் சாவித்திரி கதை, துஷ்யந்தன் - சகுந்தலை கதை, நளாயினி கதை, அரிச்சந்திரன், கந்த பெருமான், பரசுராமர் மற்றும் கலைக்கோட்டு முனிவர் வரலாறுகள் என்று பலவும் ஆரண்யக பருவத்தில் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு வித வாழ்வியல் நீதி அல்லது நியதியை மையப்படுத்திய அற்புதக் கதைகள் ஆகும். இவை தம்மளவில் தனி ஆக்கங்களாகவும் கருதப்படத் தக்கவை.
வரலாறும் அமைப்பும்
இவ்விதிகாசம் கதைக்குள் கதை சொல்லும் அமைப்பை உடையது. இவ்வமைப்பு, பழங்கால இந்தியாவின் ஆக்கங்களில் பரவலாகக் காணப்படுவதாகும். வியாசரால் எழுதப்பட்ட இது பின்னர் பல ஆண்டுகளுக்குப் பின்னர் அவருடைய சீடரான வைசம்பாயனர் என்பவரால், அருச்சுனனின் கொள்ளுப்பேரனான சனமேசயன் என்னும் அரசனுக்குச் சொல்லப்பட்டது. இது மேலும் பல ஆண்டுகள் கடந்த பின்னர் கதைசொல்லியான உக்கிரசிரவஸ் என்பவரால் நைமிசாரண்யம் எனும் காட்டில் வாழும் முனிவர்கள் குழுவொன்றுக்குச் சொல்லப்பட்டது.
மகாபாரதத்தின் பல்வேறு பகுதிகளின் காலத்தை அறிந்துகொள்ளும் முயற்சியில் பல அறிஞர்கள் நீண்ட காலத்தைச் செலவு செய்துள்ளனர். 20 ஆம் நூற்றாண்டின் இந்தியவிலாளர் பலர், இது குழப்பமாகவும், ஒழுங்கற்ற முறையிலும் அமைந்துள்ளதாகக் கூறுகின்றனர். மகாபாரதம் தொடர்பான மிக முற்பட்ட குறிப்புக்கள், கிமு நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் பாணினியின் அட்டாத்தியாயி என்னும் இலக்கண நூலிலும், அசுவலாயன கிருகசூத்திரம் என்னும் நூலிலும் காணப்படுகின்றன. இதனை அடிப்படையாகக் கொண்டு 24,000 அடிகளுடன் கூடிய பாரதமும், விரிவாக்கப்பட்ட மகாபாரதத்தின் தொடக்க வடிவங்களும், கிமு நான்காம் நூற்றாண்டளவில் இருந்திருக்கக்கூடும் என அறிஞர்கள் கூறுகின்றனர். இதன், 8,800 அடிகளைக் கொண்ட மூல வடிவம் கிமு 9-8 நூற்றாண்டுகளிலேயே தோன்றியிருக்கக் கூடும் என்பது சிலரது கருத்து.
வியாச பாரதத்தின் அமைப்பு
மொத்தம் 18 பெரும் பருவங்கள் கொண்ட வியாச பாரதம் நான்கு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
- ஆத்ய பஞ்சகம்: ஆதி, சபா, ஆர்ண்ய, விராட மற்றும் உத்யோக ஆகிய 5 பர்வங்கள்
- யுத்த பஞ்சகம்: பீஷ்ம, துரோண, கர்ண, சல்ய மற்றும் செளப்திக ஆகிய போர் நிகழ்ச்சிகளை விவரிக்கும் 5 பர்வங்கள்
- சாந்தி த்ரையம்: ஸ்த்ரீ, சாந்தி மற்றும் அனுசாஸன் ஆகிய அமைதி திரும்பியதை விவரிக்கும் 3 பர்வங்கள்
- அந்த்ய பஞ்சகம்: அஸ்வமேதிக, ஆச்ரமவாஸிக, மெளஸல, மஹாப்ரஸ்தானிக மற்றும் ஸ்வர்க்காரோஹண ஆகிய இறுதி நிகழ்ச்சிகளை விவரிக்கும் 5 பர்வங்கள்
18 பர்வங்கள்
மகாபாரதத்தின் 18 பர்வங்கள் பின்வருமாறு:
- ஆதி பருவம்: 19 துணைப் பருவங்களைக் (1-19) கொண்டது. நைமிசக் காட்டில் முனிவர்களுக்கு சௌதி மகாபாரதத்தைச் சொல்லியது பற்றியும், வைசம்பாயனரால் முன்னர் இக்கதை சனமேசயனுக்குச் சொல்லப்பட்டது பற்றியும் இப் பருவத்தில் விளக்கப்படுகிறது. பரத இனத்தின் வரலாறு பற்றி விளக்கமாகக் கூறும் இப்பருவம், பிருகு இனத்தின் வரலாற்றையும் கூறுகிறது. குரு இளவரசர்களின் பிறப்பு, அவர்களது இளமைக்காலம் என்பனவும் இப் பருவத்தில் எடுத்தாளப்படுகின்றன.
- சபா பருவம்: 20 - 28 வரையான 9 துணைப் பருவங்கள் இதில் உள்ளன. இந்திரப்பிரஸ்தத்தில் மயன் மாளிகை அமைத்தல், அரண்மனை வாழ்க்கை, தருமன் இராஜசூய யாகம் செய்தல் என்பன இப் பருவத்தில் சொல்லப்படுகின்றன. அத்துடன், தருமன் சூதுவிளையாட்டில் ஈடுபட்டு இறுதியில் நாடிழந்து காட்டில் வாழச் செல்வதும் இப் பருவத்தில் அடங்குகின்றன.
- ஆரண்யக பருவம்: 29 - 44 வரையான 16 துணைப் பருவங்கள் இதில் அடங்குகின்றன. இது பாண்டவர்களின் 12 ஆண்டுக்காலக் காட்டு வாழ்கை பற்றிய விபரங்களைத் தருகிறது.
- விராட பருவம்: 45 - 48 வரையான 4 துணைப் பருவங்களைக் கொண்ட இப் பருவம், பாண்டவர்கள், மறைந்து விராட நாட்டில் வாழ்ந்த ஓராண்டு கால நிகழ்வுகளைக் கூறுவது.
- உத்யோக பருவம்: 49 - 59 வரையான 11 துணைப் பருவங்களைக் கொண்டது இது. கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே அமைதி ஏற்படுத்த எடுத்த முயற்சிகளையும், அம்முயற்சிகள் தோல்வியுற்ற பின்னர் இடம்பெற்ற போருக்கான நடவடிக்கைகள் பற்றியும் எடுத்தாள்கிறது.
- பீஷ்ம பருவம்: இது 60 - 64 வரையான 5 துணைப் பர்வங்களைக் கொண்டுள்ளது. இப்பருவத்தில் தான் பகவத் கீதை கிருஷ்ணரால் அருச்சுனனுக்கு அருளப்பட்டது. பீஷ்மர் கௌரவர்களின் தளபதியாக இருந்து நடத்திய போரின் முதற்பகுதியையும், அவர் அம்புப் படுக்கையில் விழுவதையும் இது விவரிக்கிறது.
- துரோண பருவம்: 65 - 72 வரையான 8 துணைப் பர்வங்களில், துரோணரின் தலைமையில் போர் தொடர்வதை இப் பர்வம் விவரிக்கின்றது. போரைப் பொறுத்தவரை இதுவே முக்கியமான பர்வமாகும். இரு பக்கங்களையும் சேர்ந்த பெரிய வீரர்கள் பலர் இப் பர்வத்தின் முடிவில் இறந்துவிடுகின்றனர்.
- கர்ண பருவம்: 73 ஆம் துணைப் பர்வத்தை மட்டும் கொண்ட இப் பர்வத்தில் கர்ணனைத் தளபதியாகக் கொண்டு போர் தொடர்வது விவரிக்கப்படுகின்றது.
- சல்லிய பருவம்: 74 - 77 வரையான 4 துணைப் பர்வங்களைக் கொண்டுள்ளது. சல்லியனைத் தளபதியாகக் கொண்டு இடம் பெற்ற இறுதிநாள் போர் இப் பர்வத்தில் கூறப்படுகின்றது. இதில் சரஸ்வதி நதிக்கரையில் பலராமனின் யாத்திரையையும், போரில் துரியோதனனுக்கும், வீமனுக்கும் இடையில் நடைபெற்ற இறுதிப் போரும் விளக்கப்படுகின்றது. வீமன் தனது கதாயுதத்தால் துரியோதனனின் தொடையில் அடித்து அவனைக் கொன்றான்.
- சௌப்திக பருவம்: 78 - 80 வரையான 3 துணைப் பர்வங்களை இது அடக்குகிறது. அசுவத்தாமனும், கிருபனும், கிருதவர்மனும், போரில் எஞ்சிய பாண்டவப் படைகளில் பலரை அவர்கள் தூக்கத்தில் இருந்தபோது கொன்றது பற்றி இப் பர்வத்தில் கூறப்பட்டுள்ளது. பாண்டவர் பக்கத்தில் எழுவரும், கௌரவர் பக்கத்தில் மூவரும் மட்டுமே போரின் இறுதியில் எஞ்சினர்.
- ஸ்திரீ பருவம்: 81 - 85 வரையான 5 துணைப் பர்வங்கள் இதில் அடங்குகின்றன. இப் பர்வத்தில் காந்தாரி, குந்தி முதலிய குரு மற்றும் பாண்டவர் பக்கங்களைச் சேர்ந்த பெண்கள் துயரப் படுவது கூறப்படுகின்றது.
- சாந்தி பருவம்: 86 - 88 வரையான மூன்று துணைப் பர்வங்களை அடக்கியது இப் பர்வம். அஸ்தினாபுரத்தின் அரசனாகத் தருமருக்கு முடிசூட்டுவதும், புதிய அரசனுக்கு சமூகம், பொருளியல், அரசியல் ஆகியவை தொடர்பில் பீஷ்மர் வழங்கிய அறிவுரைகளும் இப் பர்வத்தில் அடங்கியுள்ளன. மகாபாரதத்தின் மிகவும் நீளமான பர்வம் இது.
- அனுசாசன பருவம்: 89, 90 ஆகிய இரண்டு துணைப் பர்வங்களை அடக்கியது. பீஷ்மரின் இறுதி அறிவுரைகள்.
- அசுவமேத பருவம்: தருமர் அசுவமேத யாகம் செய்வதையும், அருச்சுனன் உலகைக் கைப்பற்றுவதையும் இது உள்ளடக்குகிறது. கண்ணனால் அருச்சுனனுக்குச் சொல்லப்பட்ட கீதையும் இதில் அடங்குகிறது.
- ஆசிரமவாசிக பருவம்: 93 - 95 வரையான 3 துணைப் பர்வங்கள் இதில் உள்ளன. திருதராட்டிரன், காந்தாரி, குந்திமற்றும் விதுரன் ஆகியோர் இமயமலையில் வனப்பிரஸ்தம்ஆச்சிரமத்தில் வாழ்ந்தபோது காட்டுத் தீக்கு இரையானது இப் பர்வத்தில் கூறப்படுகின்றது.
- மௌசல பருவம்: 96 ஆவது துணைப் பர்வம். யாதவர்கள் தங்களுக்குள் நிகழ்த்திய சண்டையில் அவர்கள் அழிந்துபோனதை இப் பர்வம் கூறுகிறது.
- மகாபிரஸ்தானிக பருவம்: 97 ஆவது பர்வம்: தருமரும் அவரது உடன்பிறந்தோரும் நாடு முழுதும் பயணம் செய்து இறுதியில் இமயமலைக்குச் சென்றது, அங்கே தருமர் தவிர்த்த ஏனையோர் இறந்து வீழ்வது ஆகிய நிகழ்ச்சிகள் இப் பர்வத்தில் இடம்பெறுகின்றன.
- சுவர்க்க ஆரோஹன பருவம்: 98 ஆவது துணைப் பர்வம். தருமரின் இறுதிப் பரீட்சையும், பாண்டவர்கள் சுவர்க்கம் செல்வதும் இதில் சொல்லப்படுகின்றன.
99, 100 ஆகிய துணைப் பருவங்களை உள்ளடக்கிய அரிவம்ச பருவம் எனப்படும் பருவம் முற் கூறிய 18 பர்வங்களுள் அடங்குவதில்லை. இதில் முன் பர்வங்களில் கூறப்படாத, கண்ணனின் வாழ்க்கை நிகழ்வுகள் கூறப்படுகின்றன.
வரலாற்றுச் சூழல்
வரலாற்று நோக்கில் குருச்சேத்திரப் போர் பற்றித் தெளிவு இல்லை. இப்படி ஒரு போர் நிகழ்ந்திருப்பின் அது கிமு 10 ஆம் நூற்றாண்டளவில் இரும்புக் காலத்தில் நடைபெற்று இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. கிமு 1200 - 800 காலப்பகுதியில், குரு இராச்சியம் அரசியல் அதிகார மையமாக இருந்திருக்கலாம். இக்காலத்தில் இடம்பெற்ற வம்சம் சார்ந்த பிணக்கு ஒன்று தொடக்ககால பாரதம் எழுதுவதற்குத் தூண்டுகோலாக இருந்திருக்கக் கூடும்.
புராண இலக்கியங்கள் மகாபாரதத்துடன் தொடர்புடைய மரபுகளின் பட்டியல்களைத் தருகின்றன.[2]
தொல்வானியல் முறைகளைப் பயன்படுத்தி நிகழ்வுகளின் காலத்தைக் கணிக்க எடுத்த முயற்சிகள் போர்க் காலத்தை கிமு நான்காம் ஆயிரவாண்டு முதல் கிமு இரண்டாவது ஆயிரவாண்டின் நடுப்பகுதிவரை குறிக்கின்றன.ஆனாலும் இதில் தவறு இருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது ஆரியர்களின் காலம் கி.மு 1300 க்கு பிறகே வருவதாலும் ,அதற்கு பிறகே நடந்திருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.
கதைச் சுருக்கம்
மகாபாரதத்தின் அடிப்படைக் கதை குரு குலத்தவரால் ஆளப்பட்டு வந்த அஸ்தினாபுரத்தின் ஆட்சி உரிமை குறித்து பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே உண்டான பிணக்கு ஆகும். திருதராட்டிரன் மற்றும் பாண்டு ஆகிய சகோதரர்களின் வழிவந்தவர்களான கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையிலேயே இப் பிணக்கு நிகழ்ந்தது. கௌரவர்களே இவர்களுள் மூத்த மரபினராக இருந்தாலும், கௌரவர்களில் மூத்தோனாகிய துரியோதனன், பாண்டவர்களில் மூத்தோனாகிய தருமனிலும் இளையவனாக இருந்தான். இதனால் துரியோதனன், தருமன் இருவருமே ஆட்சியுரிமையை வேண்டி நின்றனர். இப்பிணக்கு இறுதியில் குருக்ஷேத்திரப் போராக வெடித்தது. இதில் பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது.[3] இப்போர் உறவுமுறை, நட்பு போன்றவை தொடர்பான சிக்கலான நிலைமைகளை ஏற்படுத்தியது.
மகாபாரதம் கண்ணனின் இறப்புடனும் தொடர்ந்த அவருடைய மரபின் முடிவுடனும், பாண்டவர்கள் சுவர்க்கம் செல்வதுடனும் நிறைவடைகிறது. அத்துடன் இதன் முடிவுடன் கலியுகம் தொடங்குகிறது.
தமிழில் மகாபாரதம்
பாரதம் பாடிய பெருந்தேவனார் எட்டுத்தொகை நூல்கள் தொகுக்கப்பட்ட காலத்தில் பாரதத்தை தமிழ்ப்படுத்தினார். இவரின் காலமும் உறுதியாகத் தெரியாகவில்லை. இவர் தமிழ் மொழிப்படுத்திய பாரதமும் கிடைக்கவில்லை.
பின்னர் தொண்டைமண்டலத்து திருமுனைப்பாடி நாட்டு சனியூரைச் சேர்ந்த வில்லிப்புத்தூரார் தனது புரவலரான வக்கபாகை வரபதியாட்கொண்டான் வேண்டிக்கொண்டதற்கு இணங்க பாரதத்தைப் பாடினார். வில்லிப்புத்தூரார் இயற்றிய பாரதத்தில் பத்துப் பருவங்களே (மொத்தப்பாடல்கள் 4350) இருக்கின்றன. மகாபாரதத்தின் பதினெட்டாம் நாள் போரின் இறுதியுடன் தர்மன் முடி சூட்டுதல், பாண்டவர் அரசாட்சி என்று முடித்து விடுகிறார். 14ஆம் நூற்றாண்டில் வில்லிபுத்தூராரால் உருவாக்கப்பட்ட வில்லிபாரதமும் 18ஆம் நூற்றாண்டில் நல்லாப்பிள்ளையால் உருவாக்கப்பட்ட நல்லாப்பிள்ளை பாரதமும் மட்டுமே முழுமையாகக் கிடைத்த பிரதிகள்.
இதன் பின்னர் மகாபாரதத்தை வேறு சிலரும் உரைநடையில் மொழியாக்கம் செய்துள்ளனர். அவற்றுள் முழுமையானதாக திருத்தமிகு பதிப்பாகக் கருதப்படுவது, 1903 இலிருந்து இருபத்தைந்து ஆண்டு காலம், ம. வீ. இராமானுஜச்சாரியார் தலைமையில் பல வடமொழி தமிழ் மொழி வித்வான்களால் மொழிபெயர்க்கப் பட்ட மகாபாரதப் (கும்பகோண) பதிப்பாகும். 9000 பக்கங்களைக் கொண்ட இந்நூல் 1930களிலும் 1950களிலும் 2008இலும் பதிப்பிக்கப் பட்டன.
அதைத் தவிர குறிப்பிடத்தக்கவர் ராஜாஜி. அவருடையது "வியாசர் விருந்து" குறிப்பிடத் தகுந்தது.
அ. லெ. நடராஜன் "வியாசர் அருளிய மகாபாரதம்" என்ற பெயரில் நான்கு பாகங்களாக எழுதி வெளியிட்டுள்ளார்.
பத்திரிக்கையாளர் சோ "மஹாபாரதம் பேசுகிறது" என்ற பெயரில் வியாச பாரதத்தை இரு பாகங்களாக எழுதியுள்ளார்.[4]
இராமகிருஷ்ண தபோவனத்தின் நிறுவனர் சுவாமி சித்பவானந்தர் அவர்கள் வியாசரைத் தழுவி எழுதிய மகாபாரதம் குறிப்பிடத்தகுந்தது. 2013ஆம் ஆண்டு வெளியான பத்தொன்பதாம் பதிப்பு வரை 2,35,000 பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன.
ஜெயமோகன் மகாபாரதத்தை வெண்முரசு என்ற பெயரில் நாவல் வடிவில் எழுதிக்கொண்டிருக்கிறார். அவரது இணையதளத்தில்[5] தினமும் தொடராகப் பதிவேற்றப்படுகிறது. மொத்தம் பத்து தொகுதிகளாக வெளியிடத் திட்டமிட்டு, அதன் முதல் தொகுதி முதற்கனல், நற்றிணை பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது ஆங்கில மொழி மகாபாரதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு முழு மகாபாரதம் எனும் இணையத்தில் வெளி வந்து கொண்டிருக்கிறது.[6]
இதனையும் காண்க
மேற்கோற்கள்
- ↑ MAHABHARATA retold by C. Rajagopalachari
- ↑ கிருஷ்ணமாச்சாரியார். பதினெண் புராணங்கள். சென்னை 17: நர்மதா பதிப்பகம்.
- ↑ THE MAHABHARATA
- ↑ சோ. மஹாபாரதம் பேசுகிறது. சென்னை 04: அல்லயன்ஸ் பதிப்பகம்.
- ↑ வெண்முரசு
- ↑ இணையத்தில் மஹாபாரதம்
பிற இணைப்புகள்
- மஹாபாரதம் - கால அட்டவணை - 1
- The Mahabharat Chronology
- மகாபாரத கால நாடுகளின் வரைபடம்
- மகாபாரதம் தார்பரிய விளக்கங்கள்
- சங்க இலக்கியத்தில் மகாபாரதப் பதிவுகள்
ஆதி பருவம்
மகாபாரதம் புத்தகம் 1 ஆதி பருவம் (புத்தகத்தின் ஆரம்ப பருவம்) இந்த புத்தகத்தில், நைமிசாரண்ய வனத்தில் உக்கிரசிரவஸ் அல்லது சௌதி என்ற சூத முனிவரால் மகாபாரதம் எப்படி உரைக்கப்பட்டது என்பது சொல்லப்படுகிறது. ஜனமேஜயன் நடத்திய பாம்பு வேள்வியில் வைசம்பாயானரால் உரைக்கப்பட்ட மகாபாரதத்தை சௌதி கேட்டு நைமிசாரண்யத்தில் சௌனகருக்கும் அவருடன் இருந்த முனிவர்களுக்கு அதைத் திரும்ப உரைத்தார். இந்த பருவத்தில் குரு பரம்பரையின் தோற்றம், பாண்டவர், கௌரவர் பிறப்பு, அரக்கு மாளிகை, திரௌபதி சுயம்வரம், காண்டவ வனத்தை எரித்தல் குறித்து சொல்லப்படுகிறது.[1] [2]
மேற்கோள்கள்
உப பருவங்கள்
மொத்தம் 19 உப பருவங்களைக் கொண்டது ஆதி பருவம். அதில் 100 உள் உப பருவங்கள் உள்ளன. உப பருவங்களின் பட்டியல் பின் வருமாறு:
- 1. அனுக்ரமானிகா பருவம் - மன்னன் திருதராஷ்டிரனால் சஞ்சயனுக்கு ஒப்பாரியாகச் சொல்லப்பட்ட மகாபாரதச் சுருக்கம்.
- 2. பௌசிய பருவம்
- 3. பௌலோம பருவம்
- 4. ஆஸ்திக பருவம்
- 5. ஆதிவம்சவதரனா பருவம்
- 6. சம்பவ பருவம்
- 7. ஜடகிருஹா பருவம்
- 8. இடும்ப வதை பருவம்
- 9. பகன் வதை பருவம்
- 10. சைத்ரரத பருவம்
- 11. சுவயம்வர பருவம்
- 12. விவாக பருவம்
- 13. விதுரகாமன பருவம்
- 14. ராஜ்யலாப பருவம்
- 15. அர்ஜூன வனவாச பருவம்
- 16. சுபத்ராஹரண பருவம்
- 17. ஹரன ஹரிகா பருவம்
- 18. காண்டவ பருவம்
சபா பருவம்
மகாபாரதம் புத்தகம் 2 சபா பர்வம் - அசுரத்தச்சன் மயன் எப்படி இந்திரபிரஸ்தத்தில் அரண்மனையையும் சபையையும் கட்டினான் என்பதும், தர்மன் சூதாட்டத்தையும், பாண்டவர்கள் வனவாசம் செல்வதையும் விபரிக்கிறது.[1]
கிருஷ்ணன், அர்ஜூனன் மற்றும் பீமன் சேர்ந்து எப்படி, எதற்காக ஜராசந்தனைக் கொன்றார்ள் என்பதையும். தருமன் நடத்திய இராசசூய வேள்விக்காக அருச்சுனன், வீமன், நகுலன் மற்றும் சகாதேவன் பரத கண்டத்தின் நான்கு திசைகளில் உள்ள நாட்டு மன்னர்களுடன் போரிட்டு, திறை வசூலித்த செய்திகளும், கிருஷ்ணன் எவ்வாறு சிசுபாலனைக் கொன்றான் என்பதும், கௌரவர்களுடன் தருமன் ஆடிய சூதாட்டத்தில் தன் நாட்டை எவ்வாறு இழந்தான் என்பதை இப்புத்தகத்தில் விபரிக்கப்படுகிறது.
உப பர்வங்கள்
இந்தப் புத்தகம் 9 உப பர்வங்களும் 80 பகுதிகளும் கொண்டது. கீழ்க்கண்டவை சபா பர்வத்தின் உப பர்வங்களாகும்.
- 1. சபகிரியா பர்வம் (பகுதி: 1-4)
- 2. லோகபாலா சபகயனா பர்வம் (பகுதி: 5-13)
- 3. ராஜசுயம்வரம்பா பர்வம் (பகுதி: 14-19)
- 4. ஜராசந்த வதை பர்வம் (பகுதி: 20-24)- இந்த உப பர்வத்தில்தான் கிருஷ்ணன், அர்ஜூனன், பீமன் மூவரும் சேர்ந்து, எப்படி ஏன் ஜராசந்தனைக் கொன்றார்கள் என்பது வருகிறது.
- 5. திக்விஜய பர்வம் (பகுதி: 25-31)
- 6. ராஜசுயிகா பர்வம் (பகுதி: 32-34)
- 7. ஆர்கியஹரனா பர்வம் (பகுதி: 35-38)
- 8. சிசுபால வதை பர்வம் (பகுதி: 39-44) - இந்த உப பர்வத்தில், ராஜசுய யாகத்தில் கிருஷ்ணன் சிசுபாலனைக் சபையின் நடுவே கொலவது
- 9. தியுதா பர்வம் (பகுதி: 45-80) - இந்த உப பர்வத்தில்தான், துரியோதனனின் வற்புறுத்தலால் திருதராஷ்டிரன் பாண்டவர்களை சூதாட அழைப்பதும், சகுனி எவ்வாறு யுதிஷ்டிரனைத் தூண்டி அனைத்தையும் கவர்கிறான் என்பதும், பாண்டவர் 12 வருடம் வனவாசம் செல்லவும், ஒரு வருடம் தலைமறைவு வாழ்வு வாழவும் முடிவெடுக்கப்படுகிறது.
வன பருவம்
மகாபாரதத்தின் 18 பருவங்களில் மூன்றாவது பருவம் வன பருவம். ஆரண்யக பருவம் அல்லது ஆரண்ய பருவம் என்றும் இது குறிப்பிடப்படுவது உண்டு. பாண்டவர்களின் 12 வருடக் காட்டு வாழ்வை விபரிக்கும் பருவம் இது.
மகாபாரதத்தின் 18 பருவங்களில் மிக நீளமானது இதுவே. தருமன் சூரிய பகவானிடமிருந்து அட்சயப் பாத்திரம் பெறுதல், கிருஷ்ணன் அருளால் திரௌபதி, துர்வாச முனிக் கூட்டத்தவர்களின் பசியை போக்குதல், அரிச்சந்திரன், ஆணி மாண்டவ்யர் கதை, நளாயினி கதை, நள - தமயந்தி கதை, திரௌபதியை கவர்ந்து சென்றசெயத்திரதனை பாண்டவர்களால் அவமானப்படல், தருமனுக்கு மார்கண்டயே முனிவர் இராமாயண காவியம் கூறுதல்[1], துரியோதனன் அவமானப்படல், அருச்சுனன் இந்திரலோகம் செல்தல் மற்றும் சிவனிடமிருந்து பாசுபத அஸ்திரம் பெறல், வீமன் அனுமரைக் காணல், இயட்சன் கேள்விகளுக்கு தருமன் பதில் கூறி, இறந்த தன் உடன்பிறந்தவர்களை உயிர்ப்பித்தல், வியாசர் மற்றும் நாரதர் தருமனை சந்தித்து மன ஆறுதல் கூறல், சத்தியபாமா திரௌபதிக்கு கூறுதல் ஆகியவை இதில் விவரிக்கப்படுகிறது.[2][3]
உப பருவங்கள்
இந்தப் புத்தகத்தில் 13 உப பருவங்களும் 312 அத்தியாயங்களும் உள்ளன. கீழ்க்கண்டவை சபா பருவத்தின் உப பருவங்களாகும்.
- 1. ஆரண்யக பருவம் (பகுதி: 1-10)
- 2. கிர்மிரபதா பருவம் (பகுதி: 11)
- 3. அர்ஜூனாபிகமன பருவம் (பகுதி: 12-37)
- 4. கைராத பருவம் (பகுதி: 38-41)
- 5. இந்திரலோகமன பருவம் (பகுதி: 42-51)
- 6. நளோபாக்கியான பருவம் (பகுதி: 52-79)
- 7. தீர்த்த யாத்ர பருவம் (பகுதி: 80-180)
- 8. மார்கண்டேய சமஸ்ய பருவம் (பகுதி: 181-230)
- 9. திரௌபதி-சத்யபாமா சம்வத பருவம் (பகுதி: 231-233)
- 10. கோஷ யாத்ர பருவம் (பகுதி: 234-258)
- 11. திரௌபதி-ஹரண பருவம் (பகுதி: 259-290)
- 12. பதிவிரதா-மஹாத்மய பருவம் (பகுதி: 291-308)
- 13. ஆரண்ய பருவம் (பகுதி: 309-312)
மேற்கோள்
வெளி இணைப்புகள்
விராட பருவம்
மகாபாரதத்தின் 18 பருவங்களுள் நான்காவது விராட பருவம். இப்பருவத்தில், 12 ஆண்டுகள் வனவாசம் முடித்து, ஒராண்டு தலைமறைவு வாழ்க்கை வாழ, பாண்டவர்கள், மத்சய நாட்டின் மன்னர் விராடன் அரண்மனையில், தருமர் விராட மன்னருடன் சொக்கட்டான் ஆடும் நண்பனாக கங்கன் எனும் பெயரிலும்,[1], திரௌபதி, விராட இராணி சுதேஷ்ணையின் சிகை அலங்காரம் செய்யும் பணிப்பெண்னாக சைரந்திரி என்ற பெயரிலும், வீமன் விராட அரண்மனை சமையல் கலைஞராக வல்லபன் எனும் பெயரிலும், அருச்சுனன் விராட இளவரசி உத்தரைக்கு நடனம் கற்றுத் தரும் ஆசிரியராக பிருகன்னளை எனும் பெயரிலும், நகுலன் அரண்மனை குதிரைகளை பராமரிக்கும் கிரந்திகன் எனும் பெயரிலும், சகாதேவன் அரண்மனை பசுக்களை பராமரிக்கும் தந்திரிபாலன் எனும் பெயரிலும் வாழ்ந்தனர்.
பொருளடக்கம்
விராட பருவச் சம்பவங்கள்
சைரந்திரி எனும் திரௌபதி மேல் காமம் கொண்ட கீசகனை பீமன் கொல்லுதல், விராட நாட்டின் எல்லைப்புறத்தை முற்றுகையிட்ட திரிகர்த்தர்களை வல்லபன் வேடத்தில் இருந்த வீமன் விரட்டி அடித்தல், கௌரவர்கள் விராட நாட்டில் புகுந்து பசுக்களைக் கவர்ந்து போதல், பிருகன்னளை வேடத்தில் இருந்த அருச்சுனன் உத்தரனுடன் கௌரவர்களை போரில் விரட்டியடித்தல், விராடனின் மகள் உத்தரையுடன் அபிமன்யுவின் திருமணம் ஆகியன விவரிக்கப்படுகிறது.[2]
விராட பருவம் கேட்பதன் சிறப்பு
பயிர்த்தொழில் சிறக்க, மழை பொழிய வேண்டி ஊர்களில், பாகவதர்கள் மூலம் விராட பருவத்தை சொல்லக் கேட்பது தமிழ்நாட்டு இந்து மக்களின் தொல்நம்பிக்கையாகும்.
உப பர்வங்கள்
- பாண்டவ பிரவேச பருவம்
- சமய பாலன பருவம்
- கீசக வதை பருவம்
- கோ கிரகண பருவம்
- வைவாகிக பருவம்
பிரபல கலாசாரத்தில்
இதனையும் காண்க
மேற்கோள்
வெளி இணைப்புகள்
உத்யோக பருவம்
உத்யோக பருவம் (சமக்கிருதம்: उद्योग पर्व) மஹாபாரதத்தின், 18 பருவங்களுள் ஐந்தாவது பருவமாகும். இதில் கிருஷ்ணனிடம் துரியோதனனும் அர்ஜூனனும் உதவி கோருவது. கௌரவர்கள் சார்பாக சஞ்சயன் மற்றும் பாண்டவர் பொருட்டு ஸ்ரீகிருஷ்ணர் சமாதானத் தூது செல்வது, படை திரட்டுவது ஆகியன அடங்கும்.
ஆதி பருவத்தில் வரும் பருவசங்கிரகப் பகுதியில் சொல்லியிருப்பது போல, 186 பகுதிகளும் 6,698 ஸ்லோகங்கள் அடங்கியது இந்தப் பருவமாகும். [1]
சிறப்பு
ஒப்பற்ற விதுர நீதி இந்தப் பருவத்தில்தான் வருகிறது. இந்த நீதி குருக்ஷேத்திரப் போருக்கு முன்பு விதுரரால், திருதராஷ்டிரனுக்குச் சொல்லப்பட்டது.
விதுரனின் வேண்டுதலின் பேரில் சனத்குமாரர் திருதராட்டினுக்கு, இறவாப் பெரு நிலையை அடைய பிரம்ம வித்தை அருளப்பட்டது.
References
உத்யோக பருவம்
உத்யோக பருவம் (சமக்கிருதம்: उद्योग पर्व) மஹாபாரதத்தின், 18 பருவங்களுள் ஐந்தாவது பருவமாகும். இதில் கிருஷ்ணனிடம் துரியோதனனும் அர்ஜூனனும் உதவி கோருவது. கௌரவர்கள் சார்பாக சஞ்சயன் மற்றும் பாண்டவர் பொருட்டு ஸ்ரீகிருஷ்ணர் சமாதானத் தூது செல்வது, படை திரட்டுவது ஆகியன அடங்கும்.
ஆதி பருவத்தில் வரும் பருவசங்கிரகப் பகுதியில் சொல்லியிருப்பது போல, 186 பகுதிகளும் 6,698 ஸ்லோகங்கள் அடங்கியது இந்தப் பருவமாகும். [1]
சிறப்பு
ஒப்பற்ற விதுர நீதி இந்தப் பருவத்தில்தான் வருகிறது. இந்த நீதி குருக்ஷேத்திரப் போருக்கு முன்பு விதுரரால், திருதராஷ்டிரனுக்குச் சொல்லப்பட்டது.
விதுரனின் வேண்டுதலின் பேரில் சனத்குமாரர் திருதராட்டினுக்கு, இறவாப் பெரு நிலையை அடைய பிரம்ம வித்தை அருளப்பட்டது.
References
பீஷ்ம பருவம்
"பீஷ்ம பருவம்" மகாபாரதத்தின் 18 பருவங்களில் 6வது ஆகும். இது குருச்சேத்திரப் போரில் பீஷ்மர் படைத்தலைவராகப் பங்குபெற்ற காலத்து நிகழ்வுகளைக் கூறும் பகுதியாகும். சஞ்சயன், போரின் முதற் பத்து நாட்கள் குறித்துத் திருதராஷ்டிரனுக்குச் சொல்வதாக இப்பகுதி அமைகிறது. வாசுதேவன் அர்ஜூனனின் மயக்கத்தைப் போக்கி போருக்குத் தயார் படுத்துதல் இந்தப் பகுதியிலேயே வரும். கிருஷ்ணன் அர்ஜூனனை இகழ்ந்து, பீஷ்மரைக் கொல்ல எத்தனித்தல், சிகண்டியை முன்னிறுத்தி அர்ஜூனன் பீஷ்மரை வீழ்த்துதல் போன்றவை இந்தப் பகுதியில் விபரிக்கப்படுகிறது. இந்தப் பர்வத்தின் முடிவில் பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுக்கிறார்.[1]
இந்த ஆறாவது பருவமான பீஷ்ம பருவத்தில் 117 பகுதிகளும், 15,884 சுலோகங்களும் உள்ளன.
மேற்கோள்
வெளி இணைப்பு
துரோண பருவம்
துரோண பருவம் (சமசுக்கிருதம்: द्रोण पर्व) இந்தியாவின் இதிகாசமான மகாபாரதத்தின் 18 பருவங்களுள் 7 ஆவது பருவம் ஆகும். பத்தாம் நாட்போரில் வீடுமர் இறந்தபின்னர் துரோணர் கௌரவப் படைகளின் தலைமைப் பொறுப்பை ஏற்பதுடன் இப்பருவம் தொடங்குகிறது. இப்பருவத்தில் பல முக்கியமான நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. துரியோதனின் வேண்டுகோளுக்கு இணங்க அவனைத் திருப்திப்படுத்துவதற்காகத் தருமபுத்திரனை உயிரோடு பிடிப்பதாகத் துரோணர் சூளுரைக்கிறார்.
அருச்சுனனின் மகன் அபிமன்யு, எதிரிகளின் வியூகத்தை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்து மீள முடியாமல் கொல்லப்பட்டான். இதற்குக் காரணமாக இருந்த செயத்திரதனைக் கொல்வதாக அருச்சுனன் சூளுரைத்தல், இதனைக் கேள்வியுற்ற கௌரவப் படைகள் சயத்திரதனுக்குக் கடுமையான பாதுகாப்பு வழங்குதல், சயத்திரதனைத் தேடி அருச்சுனன் எதிரிப் படைக்குள் புகுந்து நீண்ட தூரம் செல்லல், தருமரின் கட்டளைப்படி வீமனும், சாத்தியகியும் அருச்சுனனைத் தேடி எதிரிப் படைக்குள் புகுந்து போராடுதல், இறுதியில் சயத்திரதனை அருச்சுனன் கொல்லுதல் போன்ற நிகழ்வுகள் இந்தப் பருவத்தில் மிகவும் முக்கியமானவை. [1]
துரோணரின் முடிவு
பதினைந்தாம் நாள் போரின் போது, துரோணர் உயிருக்கு உயிரான தன் மகன் அஸ்வத்தாமன் மீது கொண்ட பாசத்தை உணர்ந்த கண்ணனின் ஆலோசனையின் படி, போர்க்களத்தில் அஸ்வத்தாமன் இறந்து விட்டான் என்ற பொய்ச் செய்தியை தருமன் மூலம் துரோணரிடம் அறிவிக்கப்பட்டதால், மனத்துயரமடைந்த துரோணர் ஆயுதங்களை எறிந்து விட்டு போர்க்களத்திலே தியானத்தில் அமர்ந்து விட்டார். அந்நிலையில், திருட்டத்துயும்னன் வாளால் துரோணரின் தலையைச் சீவிக் கொன்றான்.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
கர்ண பருவம்.
கர்ண பருவம் மகாபாரதத்தின் எட்டாவது பருவம் ஆகும். போரில் கர்ணன் கௌரவப் படைகளுக்குத் தலைமை தாங்கிய காலப்பகுதியின் நிகழ்வுகள் இப்பருவத்தில் எடுத்தாளப்பட்டுள்ளன. கர்ணன் படைத் தலைவனாகப் பொறுப்பு ஏற்பது, மதுராவின் மன்னன் சல்லியன் கர்ணனுக்குத் தேரோட்டியாவது, கர்ணனும் சல்லியனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது, பாண்டியனும், தண்டசேனன், தார்தா ஆகியோரும் போரில் மடிவது, கர்ணன் தருமனுடன் போர் புரிவது போன்ற நிகழ்வுகள் இப்பருவத்தில் நிகழ்வனவாகும்.
துரியோதனனின் தம்பியான துச்சாதனனின் மார்பைக் கிழித்து இரத்தத்தைக் குடிப்பதன் மூலம் பீமன் தனது சபதத்தை நிறைவேற்றிக் கொள்வதும் இப்பருவத்திலேயே ஆகும். இறுதியாக அருச்சுனன் கர்ணனுடன் போர் புரிவதும், அருச்சுனன் கர்ணனைக் கொல்வதும் இப்பருவத்தின் இறுதிப்பகுதியில் வருகின்றன. 69 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ள இப்பருவத்தில் 4964 பாடல்கள் உள்ளன.[1]
குறிப்புகள்
- ↑ அருட்செல்வப் பேரரசன், சோ. (மொழிபெயர்ப்பு), முழு மகாபாரதம் - ஆதிபர்வம், பக். 25
இவற்றையும் பார்க்கவும்
- துரோண பருவம் (முந்தியது)
- சல்லிய பருவம் (அடுத்தது)
வெளியிணைப்புக்கள்
சல்லிய பருவம்
சல்லிய பருவம் மகாபாரதத்தின் 18 பருவங்களுள் ஒன்பதாவது பருவம் ஆகும். கர்ணன் போரில் இறந்த பின்னர் சல்லியன் படைத் தலைமைப் பொறுப்பு ஏற்றுப் போரிட்ட காலப் பகுதியின் நிகழ்வுகளை இப்பருவம் விளக்குகின்றது. சல்லியன் ஒரு நாள் மட்டுமே படைத் தலைமைப் பொறுப்பில் இருந்து அன்றே தருமரின் கையால் மடிகிறான். இதனால் இப்பருவம் இறுதி நாளான ஒரு நாட் போர் நிகழ்வுகளை மட்டுமே விபரிக்கிறது. சகுனியும் இதே நாளில் சகாதேவனுடன் போரிட்டு இறக்கிறான். பெரும்பாலானோர் இறந்து மிகச் சிலரே எஞ்சியிருந்த நிலையில், துரியோதனன் ஏரியொன்றுக்குட் சென்று மறைந்து கொள்கிறான். வீமன் அப்பகுதிக்குச் சென்று துரியோதனனை இழிவாகப் பேசி அவனை வெளியே வரவைத்து அவனுடன் கதாயுதப் போர் செய்கிறான். கண்ணனின் தூண்டுதலால், போர் முறைக்கு மாறாக, வீமன் துரியோதனனைத் தொடையில் அடித்துக் கொல்கிறான்.[1]
இப்பருவத்தில் 59 பிரிவுகளில் 3220 பாடல்கள் உள்ளன.
குறிப்புகள்
- ↑ அருட்செல்வப் பேரரசன், சோ.(மொழிபெயர்ப்பு), முழு மகாபாரதம் - ஆதிபர்வம், பக். 25
இவற்றையும் பார்க்கவும்
- கர்ண பருவம் (முந்தியது)
- சௌப்திக பருவம் (அடுத்தது)
சௌப்திக பருவம்
சௌப்திக பருவம் மகாபாரதத்தின் 18 பருவங்களுள் 10 ஆவது பருவம். பாண்டவர்களுக்குச் சாதகமாகப் போர் முடிந்துவிட்ட 18 ஆம் நாள் இரவில் நிகழ்ந்தவற்றை இப்பருவம் எடுத்தாள்கிறது.
முக்கியமான நிகழ்வுகள்
போரிடாமலேயே ஏராளமான பாண்டவர் தரப்பு வீரர்கள் இறந்துபட்ட நிகழ்வை இப்பருவம் உள்ளடக்குகிறது. இரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்த துரியோதனனைக் காணும் கௌரவர் தரப்பு வீரர்களான கிருதவர்மன், கிருபர், அசுவத்தாமன் ஆகியோர் மிகுந்த கோபம் அடைகின்றனர். இவர்களுள் துரோணரின் மகனான அசுவத்தாமன் பாண்டவர்களையும் அவர்களோடு சேர்ந்த அனைவரையும் கொல்வதாகச் சபதம் எடுக்கிறான். இரவு வேளையில், திரௌபதியின் மக்களும், திரௌபதியின் அண்ணனான திருட்டத்துயும்னன், சிகண்டி உள்ளிட்ட பிற பாஞ்சாலர்களும் தங்கியிருந்த பாசறைக்குச் சென்ற அசுவத்தாமன் தூக்கத்தில் இருந்த அனைவரையும் கொன்றுவிடுகிறான். இந்த நிகழ்வில், பாண்டவர்கள், சாத்தியகியையும் தவிர்த்து எஞ்சியிருந்த பாண்டவர் தரப்பினர் அனைவரும் இறந்துவிடுகின்றனர்.[1]
பிள்ளைகளையும், உறவினர்கள் அனைவரையும் இழந்த திரௌபதி மிகுந்த துயருற்று, இதற்குப் பழி வாங்குவார் யாரும் இல்லையா என்று கதறுகிறாள். கோபம் கொண்ட பாண்டவர்கள், கண்ணனுடன், அசுவத்தாமனைத் தேடிச் செல்கின்றனர். கங்கைக் கரையில், வியாசரின் பின்னால் மறைந்திருந்த அசுவத்தாமனைக் காண்கின்றனர். பாண்டவர்களைக் கண்ட அசுவத்தாமன் புல்லொன்றை எடுத்து மந்திரம் ஒன்றைச் சொல்லிப் "பாண்டவர் வம்சத்தை இது அழிக்கட்டும்" எனக்கூறி ஏவுகிறான். அது நேராக கருவுற்றிருந்த அபிமன்யுவின் மனைவியான உத்தரையின் வயிற்றில் இருந்த கருவைத் தாக்குகிறது. இதுவே பாண்டவர்களின் எஞ்சியிருந்த ஒரே வாரிசு. ஆனால், கண்ணன் இக்குழந்தையைக் காப்பாற்றிப் பாண்டவர் வம்சம் தொடர வழிவகுக்கிறான்.[2]
தோல்வியை ஏற்றுக்கொண்ட அசுவத்தாமனை, பிறப்பிலேயே அவனது தலையில் ஒட்டியிருந்த மணி ஒன்றை அறுத்து எடுத்துக்கொண்டு பாண்டவர்கள் துரத்திவிடுகின்றனர்.
குறிப்புகள்
- ↑ அஸ்வத்தாமன் செய்த படுகொலைகள்! - சௌப்திக பர்வம்
- ↑ Rajagopalachari, C., Mahabharata, Bhavan's Book University, 2009 (54th Edition), p. 404, 405.
இவற்றையும் பார்க்கவும்
- சல்லிய பருவம் (முந்தியது)
- ஸ்திரீ பருவம் (அடுத்தது)
பெண்கள் பருவம்
பெண்கள் பருவம் (ஸ்திரீ பருவம்) மகாபாரதத்தின் 18 பருவங்களுள் பதினோராவது பருவம். போர் முடிவுக்கு வந்த பின்னர் திருதராட்டினனும் காந்தாரி, குந்தி, திரௌபதி உள்ளிட்ட அரச குடும்பப் பெண்களும், பிற சத்திரிய குடும்பப் பெண்களும் துயருறும் நிகழ்வுகளை எடுத்துக்கூறுவது இப்பருவம்.[1]
முக்கிய நிகழ்வுகள்
போரில் தனது 100 புதல்வர்களும் இறந்துபட்டதைச் சொல்லக்கேட்ட திருதராட்டினன் மிகுந்த கோபமும் துயரமும் அடைகிறான். விதுரர், வியாசர் போன்றோர் அவனுக்கு ஆறுதல் சொல்கின்றனர். பாண்டவர்கள் திருதராட்டிரனைக் காண வருகின்றனர். வணங்கி நின்ற தருமனை விருப்பமின்றியே திருதராட்டிரன் தழுவிக்கொள்கிறான். அடுத்து வீமனைத் தேடுகிறான். தனது புதல்வர்கள் அனைவரையும் கொன்ற வீமன் மீது மிகுந்த கோபத்தில் இருந்த திருதராட்டிரன் வீமனைத் தழுவுவதால் ஏற்படக்கூடிய விளைவுகளை உணர்ந்த கிருட்டிணன் வீமனைத் தள்ளிவிட்டு அவனுக்குப் பதிலாக வீமனது இரும்புச் சிலையை வைக்கிறான். இரும்புச் சிலையைத் இறுகத் தழுவிய திருதராட்டிரன் அதைத் துண்டு துண்டாக உடைத்து விடுகிறான். இதன் பின்னர் பாண்டவர்கள் காந்தாரியைச் சந்தித்தல், அவளது துயரம், கோபம், வியாசரின் அறிவுரைகள் என்பன இப்பருவத்தில் பேசப்படுகின்றன.
பின்னர் திருதராட்டிரனையும், அரச குடும்பத்துப் பெண்களையும் வியாசர் போர்களத்துக்கு அழைத்துச் செல்கிறார். அங்கே இறந்து கிடக்கும் அரசர்களையும், இளவரசர்களையும், பிற வீரர்களையும் ஒவ்வொருவராகப் பார்த்துப் பெண்கள் துயருறும் நிகழ்வுகள் சொல்லப்படுகின்றன. தருமன் இறந்தவர்கள் அனைவருக்கும் இறுதிச் சடங்குகளைச் செய்கிறான்.
குறிப்புகள்
- ↑ அருட்செல்வப் பேரரசன், சோ.(மொழிபெயர்ப்பு), முழு மகாபாரதம் - ஆதிபர்வம், பக். 26
இவற்றையும் பார்க்கவும்
- சௌப்திக பருவம் (முந்தியது)
- சாந்தி பருவம் (அடுத்தது)
சாந்தி பருவம்
சாந்தி பருவம் மகாபாரதத்தின் 18 பருவங்களில் பன்னிரண்டாவது பருவம். தருமபுத்திரன் போரில் தனது உறவினர்களையும் பெரியவர்களையும் கொன்றதை நினைத்து வருந்தும் நிகழ்வுகள் இப்பருவத்தில் இடம் பெறுகின்றன. அரசரின் கடமைகள் குறித்து இறக்கும் தறுவாயில் வீடுமர் வழங்கிய அறிவுரைகளும் இப்பகுதியிலேயே எடுத்தாளப்பட்டு உள்ளன.[1]
அமைப்பு
இப்பருவம் மூன்று துணைப் பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை பின்வருமாறு:
- அரசதர்ம அனுசாசன பருவம்
- அபத்தர்ம அனுசாசன பருவம்
- மோட்சதர்ம பருவம்
இவற்றில் முதல் துணைப் பருவம் பிற விடயங்களுடன் அரசர்களது, தலைவர்களதும் கடமைகளை எடுத்துக் கூறுகிறது. இரண்டாவது துணைப்பருவம் பாதகமான நிலைமைகளை எதிர்கொள்ளும்போது ஒருவர் நடந்துகொள்ள வேண்டிய முறைகள் பற்றிச் சொல்கிறது. இறுதித் துணைப் பருவம் மோட்சம் அடைவதற்கான நடத்தைகள், விதிமுறைகள் என்பன பற்றிக் கூறுகின்றது.
முக்கிய நிகழ்வுகள்
சாந்தி என்பது அமைதி என்னும் பொருளுடையது. போர் முடிந்து அமைதி ஏற்பட்டு தருமர் முழு இராச்சியத்துக்கும் அரசனாகி ஆளத் தொடங்கினார். ஆனாலும், போரில் ஏற்பட்ட இழப்புக்கள் குறித்து மன அமைதி இல்லாது தவித்தார். நாரதர் தருமருக்குக் கூறிய ஆறுதல் வார்த்தைகள் இப்பருவத்தில் இடம்பெறுகின்றன. நாளாக ஆகத் தருமபுத்திரன் மனத்தில் சஞ்சலம் அதிகரிக்கிறது. கொல்லப்பட்டவர்கள் குறித்துத் துயரம் மேலோங்குகிறது. உலக ஆசைகளைத் துறந்து துறவறம் மேற்கொள்ள விரும்புகிறார். உடன்பிறந்தோரும், திரௌபதியும், வியாசர் முதலியோரும் தருமரை அமைதிப்படுத்துகின்றனர்.
அமைதிக்கால ஆட்சிக்குரிய விடயங்கள் பல இப்பருவத்தில் பேசப்படுகின்றன. போரில் காயம்பட்டு அம்புப் படுக்கையில் இருந்தபடி அரசருக்குரிய கடமைகள் குறித்தும், அறம், சிறந்த ஆட்சிமுறை என்பன குறித்தும், வீடுமர் கூறியவையும் இக்கட்டத்திலேயே வருகின்றன
குறிப்புகள்
- ↑ அருட்செல்வப் பேரரசன், சோ.(மொழிபெயர்ப்பு), முழு மகாபாரதம் - ஆதிபர்வம், பக். 26
இவற்றையும் பார்க்கவும்
- பெண்கள் பருவம் (முந்தியது)
- அனுசாசன பருவம் (அடுத்தது)
அனுசாசன பருவம்.
அனுசாசன பருவம் (சமசுக்கிருதம்: अनुशासन पर्व) என்பது மகாபாரதத்தின் பதினெட்டுப் பருவங்களுள் பதின்மூன்றாவது பருவம் ஆகும். அனுசாசனம் என்பது அறிவுறுத்தல் அல்லது ஆணை என்னும் பொருள் தருவது. இப்பருவத்தின் கருப்பொருளும் இதற்கு முந்திய சாந்தி பருவத்தின் தொடர்ச்சியே. அரசனுக்கு உரிய கடமைகள், சட்டத்தின் ஆட்சி, தலைவனுக்கு நெருங்கியவர்களுக்கான அறம் குறித்த அறிவுரைகள் என்பன இப்பருவத்திலும் காணப்படுகின்றன.[1]
அமைப்பு
இப்பருவம் மொத்தம் 168 பிரிவுகளைக் கொண்ட இரண்டு துணைப் பருவங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை பின்வருமாறு:
- தன தரும பருவம்
- பீஷ்ம சுவர்க்காரோகண பருவம்
தன தரும பருவத்தில் பொருள், அறம் ஆகியவை தொடர்பான உரையாடல்களும் அறிவுறுத்தல்களும் அடங்கியிருக்க, பீஷ்ம சுவர்க்காரோகண பருவத்தில் வீடுமர் (பீஷ்மர்) இவ்வுலகை விட்டு நல்லுலகம் செல்வது தொடர்பான விடயங்கள் சொல்லப்படுகின்றன.
குறிப்புகள்
- ↑ அருட்செல்வப் பேரரசன், சோ.(மொழிபெயர்ப்பு), முழு மகாபாரதம் - ஆதிபர்வம்
அசுவமேத பருவம்.
அசுவமேத பருவம் மகாபாரதத்தின் 18 பருவங்களுள் பதினான்காவது பருவமாகும்.அசுவமேத யாகம் என்பது குதிரை வேள்வி எனப் பொருள்படும். பிற விடயங்களுடன், தருமர் குதிரை வேள்வி செய்வது முதன்மையான நிகழ்வாகச் சொல்லப்படுவதால் இப்பருவத்துக்கு இந்தப் பெயர் வழங்கப்பட்டது.
அமைப்பு
இப்பருவம் பின்வரும் இரண்டு துணைப் பருவங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது:
- அசுவமேதிக பருவம்
- அனுகீதா பருவம்
இப்பருவங்கள் பாண்டவர்கள் செய்த குதிரை வேள்வி தொடர்பான நிகழ்வுகளையும், அனுகீதா பருவத்தில், முன்னர் கண்ணன் அருச்சுனனுக்குச் சொன்ன கீதையின் பல விடயங்களை மீண்டும் அருச்சுனனுக்குச் சொல்வதாகவும் அமைந்துள்ளன.
நிகழ்வுகள்
போரின் போது தம்மால் செய்யப்பட்ட பாவச் செயல்கள் குறித்துத் தொடர்ந்தும் வருந்துகிறான் தருமன். வியாசர் அவனைத் தேற்றி. வேள்வி செய்வதன் மூலம் எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுபட்டுவிடலாம் என்று கூறி, குதிரை வேள்வி நிகழ்த்தும்படி ஆலோசனை கூறுகிறார். இதற்கான நிதியைப் பெறுவதற்காக, ஒரு காலத்தில் மாருதன் என்னும் அரசன் இமயமலைப் பகுதியில் செய்த வேள்வியில் தானமாக அளிக்கப்பட்ட செல்வங்களில் பெரும்பகுதியைப் பிராமணர்கள் அங்கேயே விட்டுச் சென்றார்கள் என்றும் அதனை எடுக்கும்படியும் வியாசர் கூறுகிறார்.[1] இவ்விடத்தில் மாருதனுடைய கதையையும் வியாசர் தருமனுக்குக் கூறுகிறார். பாண்டவர்கள் அப்புதையலை அடைகிறார்கள். போரின் இறுதி நாளில் அசுவத்தாமன் செலுத்திய கணையின் தாக்கத்தால், அருச்சுனனின் மகனான அபிமன்யுவின் மனைவி உத்தரைக்குக் குழந்தை இறந்து பிறப்பதும், கண்ணன் அக்குழந்தையை உயிர்ப்பிப்பதுமான நிகழ்வும் இப்பருவத்தில் சொல்லப்படுகின்றன. இதன் பின்னர் குதிரை வேள்வி நடப்பது, இதன்போது அருச்சுனன் பல அரசர்களுடன் போரிட்டு நாடுகளைப் பிடிப்பது ஆகிய நிகழ்வுகளும் இப்பருவத்தில் இடம்பெறுகின்றன.[2]
குறிப்புகள்
- ↑ Ganguli, Kisari Mohan. (translator), The Mahabharata of Krishna Twaipayana Vyasa - Book 14.
- ↑ அருட்செல்வப் பேரரசன், சோ.(மொழிபெயர்ப்பு), முழு மகாபாரதம் - ஆதிபர்வம், பக். 27
இவற்றையும் பார்க்கவும்
- அனுசாசன பருவம் (முந்தியது)
- ஆசிரமவாசிக பருவம் (அடுத்தது)
வெளியிணைப்புக்கள்
ஆசிரமவாசிக பருவம்
ஆசிரமவாசிக பருவம் மகாபாரதத்தின் 18 பருவங்களுள் பதினைந்தாவது பருவம். தருமபுத்திரனின் முதல் பதினைந்து ஆண்டுக்கால நல்லாட்சியும், அதன் பின் திருதராட்டிரன், காந்தாரி, குந்தி, விதுரர் ஆகியோர் துறவு வாழ்வை மேற்கொண்டு காட்டுக்குச் செல்வதும் இந்தப் பருவத்தில் சொல்லப்படுகின்றன.
அமைப்பு
இப்பருவம் பின்வரும் மூன்று துணைப் பருவங்களைக் கொண்டது:
- ஆசிரமவாச பருவம்
- புத்திரதர்சன பருவம்
- நாரதகமன பருவம்
இவற்றுள் முதல் துணைப்பருவம் தருமரின் 15 ஆண்டுக்கால நல்லாட்சி பற்றியும், திருதராட்டிரன் முதலானோர் காட்டுக்குச் செல்வது பற்றியும் கூறுகிறது. இரண்டாவது துணைப்பர்வம், பாண்டவர்கள் காட்டுக்குச் சென்று திருதராட்டிரன் முதலானோரைச் சந்திப்பது பற்றியும், வியாசர் அனைவருக்கும் போரில் இறந்து போனவர்களை வரவழைத்துக் காட்டியது பற்றியும் கூறுகிறது. இறுதித் துணைப் பர்வத்தில், திருதராட்டிரன், குந்தி, காந்தாரி ஆகியோரின் இறப்புப் பற்றியும், நாரதர் துயரில் வாடுவோருக்கு ஆறுதல் சொல்வதும், தருமர் இறுதிக் கடன்களைச் செய்வதும் அடங்குகின்றன.
குறிப்புகள்
இவற்றையும் பார்க்கவும்
- அசுவமேத பருவம் (முந்தியது)
- மௌசல பருவம் (அடுத்தது)
மௌசல பருவம்
மௌசால பருவம் (சமசுக்கிருதம்: मौसल पर्व) மகாபாரதத்தின் 18 பருவங்களுள் பதினாறாவது பருவம். ஒன்பது பிரிவுகளை மட்டும் கொண்ட இப்பருவம் மகாபாரதத்தில் உள்ள மிகச் சிறிய மூன்று பருவங்களுள் ஒன்று. கிருஷ்ணரின் மகன் சாம்பனின காரணமாக, யாதவர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு முற்றாக அழிந்துபோதல், கண்ணனின் இறப்பு, வசுதேவர், பலராமன் ஆகியோரின் இறப்பு, துவாரகை கடலுள் அமிழ்தல், ஆகியவை இப்பருவத்தில் சொல்லப்படுகின்றன.
பொருளடக்கம்
அமைப்பு
ஒன்பது பிரிவுகளைக் கொண்ட சிறிய இப்பருவத்தில் துணைப் பருவங்கள் எதுவும் இல்லை. 80,000 பாடல்களைக் கொண்ட மகாபாரதத்தில் 0.25% அளவு பாடல்களே இந்தப் பருவத்தில் உள்ளன. இதனால் இது மாகாபரத்தில் உள்ள மிகச் சிறிய பருவங்களில் ஒன்றாக உள்ளது.
மௌசல பருவ நிகழ்வுகளுக்கான பின்னணி
குருச்சேத்திரப் போர் முடிவுக்கு வந்த பின்னர் கிருட்டிணர் காந்தாரியைக் காணச் சென்றிருந்தார். தனது நூறு புதல்வர்களையும், உறவினர்களையும் இழந்த காந்தாரி துயரத்திலும் கோபத்திலும் இருந்தாள். கிருட்டிணன் நினைத்திருந்தால் போரைத் தடுத்துப் பல இலட்சம் பேர்களின் உயிரிழப்புக்களைத் தடுத்திருக்கலாம் என அவள் நம்பினாள். இதனால் கிருட்டிணன் மீது கோபமுற்ற காந்தாரி, தனது பிள்ளைகள் எவ்வாறு இறந்தார்களோ அது போலவே யாதவர் குலமும் அழியும் என்று சாபம் கொடுத்தாள்.[1]
நிகழ்வுகள்
இப்பருவத்தில் நிகழ்பவை குருசேத்திரப் போர் முடிந்து 36 ஆண்டுகளுக்குப் பிந்தியவை.
குறிப்புகள்
- ↑ John Murdoch (1898), The Mahabharata - An English Abridgment, Christian Literature Society for India, London, pages 107-108
இவற்றையும் பார்க்கவும்
- ஆசிரமவாசிக பருவம் (முந்தியது)
- மகாபிரஸ்தானிக பருவம் (அடுத்தது)
வெளியிணைப்புக்கள்
மகாபிரஸ்தானிக பருவம்
மகாபிரஸ்தானிக பருவம் (Mahaprasthanika Parva), வியாச மகாபாரத்தின் 17வது பர்வம். இப்பர்வத்தில் தர்மன் தவிர இதர பாண்டவர் மற்றும் திரௌபதியின் இறப்புகளை விளக்கும் பகுதி.
பரிட்சித்திற்கு அத்தினாபுர அரச மகுடம் சூட்டியபின், பாண்டவர் மற்றும் திரௌபதி துறவு பூண்டு காணகம் செல்கையில் ஒரு நாயும் அவர்களுடன் சென்றது. இமயமலை மற்றும் மேரு மலை கடந்து சென்று தேவ உலகம் செல்லும் வழியில் முதலில் திரௌபதி சேர்வடைந்து இறந்தாள். பின் சகாதேவன், நகுலன், அருச்சுனன் மற்றும் வீமன் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக இறந்தனர்.
தருமரை மட்டும் சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல தேவேந்திரனே தேவ விமானத்துடன் வந்தார். தன் சகோதரர்களும், திரௌபதியும் இல்லாமல் நான் மட்டும் வர இயலாது என தருமர் பதில் உரைத்த போது, விமானத்தில் நாய் ஏற முற்பட்டது. அப்போது இந்த நாய்க்குச் சுவர்க்கத்தில் இடமில்லை என்று கூறித் தடுத்தான் இந்திரன்.
என்னிடம் அடைக்கலம் அடைந்த நாயை விட்டு சுவர்க்கலோகம் வர மாட்டேன் என்றார் தருமர். அப்போது நாய் வடிவத்தில் இருந்த தர்மதேவதை, தருமருக்கு காட்சியளித்து மறைந்தது. தருமர் மட்டும் ரதத்தில் ஏறிச் சுவர்க்கலோகம் சென்றார்.[1]
மேற்கோள்கள்
வெளியிணைப்புக்கள்
சுவர்க்க ஆரோஹன பருவம்
சுவர்க்க ஆரோஹன பருவம் (சுவர்க்கத்தில் ஏற்றம் பெறுவது) (Svargarohana Parva) என்பது மகாபாரத இதிகாச காவியத்தின் 18வது மற்றும் இறுதி பர்வமாகும். இப்பர்வத்தில் துரியோதனன், சகுனி, மற்றும் துச்சாதனன் ஆகியோர் சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக இருப்பதையும், பீஷ்மர், துரோணர், கர்ணன், வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் மற்றும் திரௌபதி நரகத்தில் துயர் அடைவதையும் காண்கிறான் தருமர் . தர்ம வழியில் வாழ்ந்தவர்கள் நரகத்திலும், அதர்ம வழியில் வாழ்க்கையை நடத்தியவர்கள் சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக இருக்க என்ன காரணம் என்று தருமர் கேட்க, அதற்கு எமதர்மராசன், குருச்சேத்திரப் போரில் துரோணர் மரணத்திற்கு காரணமாக நீ (தருமர்) கூறிய பொய்யே சிறிது நேரம் நரக லோக காட்சியை காண வேண்டிய கட்டாயம் உண்டாயிற்று எனக் கூறினார். மேலும் நீ, கண்ட காட்சி வெறும் மாயையே அன்றி உண்மையல்ல என தருமனுக்கு உணர்த்தினார் எமதர்மராசன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக