புதன், 21 அக்டோபர், 2015

HRE-16: நம்மாழ்வார்

ராதே கிருஷ்ணா 22-10-2015





HRE-16: நம்மாழ்வார்


ஆழ்வார்கள்-ஆசாரியர்களின் வரிசை

1.திருமால், 2. திருமகள், 3. சேனை முதலியார்,
4. நம்மாழ்வார், 5.நாதமுனிகள்,  6. உய்யக்கொண்டார்,
7. மணக்கால் நம்பி, 8. ஆளவந்தார்,9.பெரியநம்பி,
10. இராமாநுசர்.
1-Namalwar
நம்மாழ்வார்
    முதல் மூவரும் பரமபதத்தைச் சார்ந்தவர்கள். புவியைச் சார்ந்த ஆச்சாரியர்களின் பட்டியலில் நம்மாழ்வாரே முதல் ஆச்சாரியராக அமைந்துள்ளார்.
   வைணவப் பெரியார்கள் ஆழ்வார்கள் எனவும், ஆச்சாரியர்கள் எனவும் இரு திறத்தினராக வகுத்துள்ளளார்கள்.
   நம்மாழ்வார், ஆழ்வார்களுள் அவயவி (உறுப்பி) எனவும், ஏனைய ஆழ்வார்களை இவருக்கு அவயங்கள் (உறுப்புக்கள்) என்றும் கூறுவார்.
2-AllAlwars
பன்னிரு ஆழ்வார்கள்
   ஆழ்வார்கள் அனைவருக்கும் குருபோல நம்மாழ்வார் விளங்கிய காரணத்தால் மற்ற ஆழ்வார்களைத் தனது அங்கங்களாகக் கொண்டிருந்தார்.
  அந்த வகையில், பூதத்தாழ்வாரை தலையாகவும், பொய்கையாழ்வார், பேயாழ்வாரை கண்களாகவும், பெரியாழ்வாரை முகமாகவும், திருமழிசையாழ்வாரை கழுத்தாகவும், குலசேகர ஆழ்வார், திருப்பாணாழ்வார் என இருவரையும் கைகளாகவும், தொண்டரடிப் பொடி ஆழ்வாரைத் திரு மார்பாகவும், திருமங்கையாழ்வாரை வயிறாகவும், மதுரகவி ஆழ்வாரை பாதமாகவும் கொண்டு விளங்கினார்.

நம்மாழ்வார் அவதார பரம்பரை

     நம்மாழ்வார் தகப்பனார் காரியார். காரியாரது தகப்பனாராகிய பொற்காரியார் திருவண்பரிசாரத்தில் வாழ்ந்தவரும், தம்மோடு ஒத்தவரும், வேளாளர் குலச் செல்வரும் ஆகிய திருவாழ் மார்பரது அருந்தவச் செல்வியாகிய உடைய நங்கையாரைக் காரியாருக்கு இல்வாழ்க்கைத் துணைவியாக்கினார்.
   கற்புடை நல்லாளும், கணவனைத் தொழுதேத்தும் பெண்பாலும் ஆகியஉடையநங்கையார், தம் கணவராகிய காரியாருடன் திருக்குறுங்குடியை அடைந்து, அப்பதியில் எழுந்தருளியிருக்கும் நம்பியைச் சேவித்து வணங்கி, ‘மக்கட் பேறு உண்டாகும்படி எம்பெருமான் அருள் புரிய வேண்டும்’ என வேண்டினார். அதனால் உதித்த புதல்வரே உண்மைப்பொருள் உணர்த்திய செம்மலாம் நம்மாழ்வார்.

நம்மாழ்வார் அவதாரம்

    நம்மாழ்வார், ஆழ்வார் திருநகரி என்னும் ஊரில், அதாவதுதிருக்குருகூரில் கலி பிறந்த 43 வது நாளில், காரியார் மற்றும் உடைய நங்கைக்கு, திரு மகனாராக, சூத்திர (வேளாளர் குலத்தில்) குலத்தில் பிரமாதி ஆண்டு, வைகாசித் திங்கள், பன்னிரண்டாம் நாள், வளர்பிறையில், பௌர்ணமி திதியில், வெள்ளிக்கிழமை அன்று, விசாக நட்சத்திரத்தில், கடக லக்னத்தில், விஷ்வக்ஸேனரின் அம்சமாக , அவதரித்து அருளினார்.

 குரு ஸ்தலமாக விளங்கும் ஆழ்வார் திருநகரி

இறைவன்: ஆதிநாதன், பொலிந்து நின்ற பிரான்
இறைவி: ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி
தல தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், திருச்சங்கண்ணி துறை
விமானம்: கோவிந்த விமானம்
கிரகம்: குரு ஸ்தலம்
தல விருட்சம்: உறங்காப்புளி
      ஆழ்வார் திருநகரி தலத்திற்கு முன்னொரு காலத்தில் குருகூர் என்னும் பெயரே மிகவும் பிரசித்திபெற்றதாக இருந்தது.    ஒரு சமயம் பிரம்மா திருமாலை நோக்கி பூவுலகில் தவம் செய்வதற்கு ஒரு சிறந்த இடத்தை தெரிவிக்க வேண்டுமென வேண்ட, திருமால் தாமிரபரணியாற்றங்கரையில் ஆதிபுரி என்ற இனியதோர் இடத்தை படைத்து ஆதிப்பிரான் என்ற திருநாமத்தோடு எழுந்தருளியுள்ளோம். மனதுக்கினிய ரம்யமான சோலைகளும் வாவிகளும் சூழ்ந்த அந்த இடத்தில் சென்று தவம் செய் என்றார்.
    திருமாலை ஆதிநாதனாகக் கொண்டு கடுந்தவமியற்றிய பிரம்மாவுக்கு திருமாலே குருவாக உபதேசித்ததால் மகிழ்ந்த பிரம்மன்“குருகாத்தர மதர்ச்சனம்” என்றருளியதால் அதன் நினைவாக இவ்வூர்க்கு குருகூர் என்ற பெயர்.

நம்மாழ்வார்அதிசய பிறப்பு

    இவர் பிறந்த உடன் அழுதல், பால் உண்ணுதல் முதலியானவைகளை செய்யாமல் உலக இயற்கைக்கு மாறாக இருந்ததால் அவரை “மாறன்” என்றே அழைத்தனர். மாயையை உருவாக்கும் “சட” எனும் நாடியினாலே குழந்தைகள் பிறந்தவுடன் அழுகிறது. ஆனால் விஷ்வக்சேனரின் அம்சமாகப் பிறந்த இவர் சட நாடியை வென்றதால் “சடகோபன்” என்றும் அழைக்கப்பட்டார். யானையை அடக்கும் அங்குசம் போல, பரன் ஆகிய திருமாலை தன் அன்பினால் கட்டியமையால் “பராங்குசன்” என்றும், தலைவியாக தன்னை வரித்துக் கொண்டு பாடும்போது “பராங்குசநாயகி” என்றும் அழைக்கப்படுகிறார்.
    இறைவன் முன் குழந்தையைக் கிடத்தி, அதற்கு ‘மாறன்’ என்னும் திருநாமத்தைச் சூட்டி, அப்பெருமானைச் சேவித்து வணங்கிப் போற்றிக் குழந்தைக்கு அருள் புரிய வேண்டினார்கள்.அக்குழந்தை தவழ்ந்து சென்று, அங்கிருந்த புளியமரப்பொந்தில் தியான நிலையிலேயே அமர்ந்து கொண்டது.
  ஆழ்வார் அவதரித்தற்கு முன்னதாக ஆதிசேடன் அப்பதியின் திருக்கோயிலின்கண் ஒரு புளிய மரமாய்த் தோன்றி விளங்கலானான். உலகம் உய்ய அவதரித்த ஆழ்வாருக்குத் திருமகள் நாதன் ஞானமாகிய அமுதத்தை ஊட்டியருளிச் சென்றனன். அதனால் ஆழ்வார் உலகத்தில் பிறக்கும் குழந்தைகளின் செயலினின்றும் வேறுபட்ட நிலையில் வைகுந்தவாசனின் திருவடிகளையே தமது திருவுள்ளத்தில் கொண்டிருப்பாராயினார். இதனை அறியாத பெற்றோர்களின் வருத்தம் எல்லை கடந்ததாயிற்று.
    வைகுந்தத்த இறைவன் சேனை முதலியாரை நோக்கி, ‘மாறானாகிய நம்மாழ்வாருக்கு உண்மைப் பொருள்களை யெல்லாம் உபதேசித்து வருவீராக’ எனப் பணிக்க, அங்ஙனமே அவர் திருக்குருகூருக்குச் சென்று பிறர் அறியாதபடி ஆழ்வாருக்குத் தத்துவப் பொருள்களை உபதேசிக்க, ஆழ்வார் அக்கோயிலின் கண் உள்ள புளிய மரத்தின் அடியிலே பதினாறு ஆண்டுகள் வரையிலும் யோகத்தில் எழுந்தருளியிருந்தார்.

மதுர கவியாழ்வார்-நம்மாழ்வார் சந்திப்பு

       வட நாட்டில், அயோத்தியில், மதுர கவியாழ்வார் தங்கி இருக்கையில் ஒரு புது விதமான பேரொளியைக் கண்டார். அவ்வொளி, தென்திசையில் இருந்து வருகிறது என்பதை அறிந்து, தென்னகத்தை நோக்கிப் பயணித்தார்.
   தமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீரங்கத்திலுள்ள கோவிலிலிருந்து அந்த ஒளி வருகிறது என்று எண்ணி, மதுரகவியாழ்வார், திருவரங்கத்தை அடைந்தார். ஆனால், அந்த ஒளி மேலும் தென்திசையில் இருந்து வந்தது. எனவே, அவ்வொளி வந்த திசையை நோக்கிச் சென்ற போது, அது நம்மாழ்வார் வீற்றிருந்த புளியமரத்தை அவருக்குக் காட்டியது.
3-Nam & MKavi
மதுர கவியாழ்வார்-நம்மாழ்வார்
    மதுரகவியார், ஆழ்வாரை நோக்கி, ‘உயிரற்றதாகிய பிரகிருதியினால் ஆகிய உடம்பில் அணு வடிவாயுள்ள ஆன்மா புகுந்தால் எதனை அனுபவித்துக்கொண்டு எவ்விடத்தில் இன்பம் உண்டென்று எண்ணியிருக்கும்?’ என்ற பொருள் அடங்கிய, செத்தத்தின் வயிற்றிற்சிறியது பிறந்தால், எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?” என்று கேட்டார்.
   அதற்கு ஆழ்வார், “அந்த உடலின் தொடர்பினால் ஆகும் சுவை, ஒளி, ஊறு, ஒசை, நாற்றம் என்னும் இவ்வைந்தினால் வரும் இன்ப துன்பங்களை அநுபவித்துக்கொண்டு அவ்விடத்திலேயே ‘இன்புற்றேன்; இளைத்தேன்’ என்று சொல்லிக் கொண்டே கிடக்கும்” என்ற பொருள் அடங்கும்படி,அத்தை தின்று அங்கே கிடக்கும்”என்று திருவாய்மலர்ந்தருளினார்.
     அதாவது, செத்தது என்பது உடல்; சிறியது என்பது உயிர். உயிரானது உடலினுள் இருக்கும் பொழுது அதற்கென்று தனியான இன்பம், துன்பம் எதுவும் கிடையாது. உடல் நொந்தால், உயிரும் நோகும்; உடல் இன்புற்றால், உயிரும் அப்படியே இன்புறும். அதனால், உயிரானது உடலின் இன்ப, துன்பங்களைத் தின்று, அங்கேயே இருக்கும். என்று, அந்த உயிர் உண்மையை(தன்னிலை அறிதல்) உணர்கிறதோ, அன்று அது இறைவனைப் பற்றிய எண்ணங்களையே உணவாக உண்டு, அவரது திருவடி நிழலிலே நீங்கா நிலைத்துவிடும்.
   பிறப்பின் போது, ஒரு ஆன்மா எந்த வகையான உடலுள் புகுகிறதோ அந்த உடலுக்கேற்ப அதன் தோற்றத்திற்கேற்ப மட்டுமே சுகதுக்கங்களை அடைய முடியும் என்றும், மெய்ஞ்ஞானத்தை உணர்வதென்பது அந்த உடம்புடன் சம்மந்தப்பட்ட குணநலன்களையும் சார்ந்தது.
    முக்தி அடைவதற்கு, ஆன்மாவுக்கு கிடைக்கும் கூடும் முக்கியமாகிறது ! ஆன்மா உய்வுற ஒரு ஜென்மமும் ஆகலாம், பல ஜென்மங்களும் ஆகலாம்! இங்கே, உடல் ‘செத்தது’ ஆகவும், ஆன்மா ‘சிறியது’ ஆகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளது.என்று சொன்ன ,நம்மாழ்வாரின் அந்த பதிலைக் கேட்ட கணத்திலிருந்து, மதுரகவி அங்கேயே தங்கி, நம்மாழ்வாரின் பிரதான சீடராகி, அவருடைய திருவடிகளிலே தம்முடைய முடியுற வணங்கிக் கைகூப்பி, நின்று, “அன்புடையீர், அடியேனை ஆட்கொண்டருள்வீர்”என்று வேண்டினார்.
    நம்மாழ்வார் மதுரகவியாரைப் பார்த்து, “நாம் பகவானை அனுபவித்து அருளிச் செய்யும் திவ்யப்பாசுரங்களை பட்டோலையில் பதிவு செய்ய வேண்டும் எனத் திருவாய்மலர்ந்தருள, மதுரகவியாரும் பட்டோலையை அலங்கரிக்க, நம்மாழ்வாரும் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி எனும் நான்கு தமிழ் மறைகளை அருளினார்.
   ஆனால், அதற்கு பிறகும் கூட, நம்மாழ்வார் அந்த இடத்தை விட்டு நகரவேயில்லை.எம்பிரானின் அவதாரம் தானே நம்மாழ்வார், அவருக்கே அவர் இருக்கின்ற இடங்கள் எல்லாம் தெரியாதா, என்ன? நம்மாழ்வார், திருவாய் திறந்து பாசுரங்களை எல்லாம் பாடத்துவங்கின போது, திருமாலின் திவ்ய தேசங்கள் அனைத்தும் அவர் மனக்கண்ணில் தோன்றின.

நம்மாழ்வார் திவ்யப் பிரபந்தங்கள்

    நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் 1000 க்கும் மேற்பட்ட பாடல்கள் நம்மாழ்வாரால் பாடப்பெற்றவை ஆகும். அவரது திருமொழிகள் மொத்தம் 4 ஆகும். அவை,
திருவிருத்தம்-100 பாசுரங்கள் (ரிக் வேத சாராம்)
திருவாசிரியம்-7 பாடல்கள் (யசூர் வேத சாராம்)
பெரிய திருவந்தாதி87 பாடல்கள் (அதர்வண வேத சாராம்)
திருவாய்மொழி-1102 பாடல்கள் (சாம வேத சாராம்)
      இவ்வாறு, ரிக், யசூர், சாம, அதர்வண என்னும் 4 வேதத்தினையும், தமிழில் படைத்து, தமிழ் மக்களும் வேதத்தின் அர்த்தங்களைப் புரிந்து அதன் பலனை அடைய அருளிச்செய்ததினால், நம்மாழ்வார், வேதம் தமிழ் செய்தமாறன் என்று அழைக்கப்படுகின்றார். இவரது பாடல்கள் அனைத்திலும் வேதத்தின் சாரம் செறிந்து இருப்பதை, அவரது பாடல்களை உளமார ஓதும் வேளையில் உணரலாம். இவர், இறைவனை தலைவனாகவும், தன்னை தலைவியாகவும் வைத்து பாடினார்.
உயர்வற வுயர்நலம்முடையவன் யவனவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவனவன்
துயரறு சுடரடி தொழுதெழென் மனனே
. (திருவாய் மொழி:1.1.1)
   உலகு உய்யச் பாமாலைகளால் பரந்தாமனைப் பாடிய நம்மாழ்வார் , திருப்புளியடியில் முப்பத்தோராண்டு எழுந்தருளியிருந்தார்.
    வைணவர்களின் தமிழ் வேதமாகிய நாலாயிரத்துள் முதல் மூன்றும்மூன்றாம் ஆயிரத்துள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. திருவாய்மொழி நான்காம்ஆயிரமாக அமைக்கப்பட்டிருக்கின்றது.
   நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி (தெய்வப் பேச்சு, பகவத்விஷயம்“) என்று அழைக்கப் படுகிறது. வைணவ பாரம்பரியத்தில் திருவாய்மொழிக்கு மிக உயரிய இடம் தரப்பட்டுள்ளதற்கு, இராமனுசரும், அவருக்கு பின்னால் வந்த வேதாந்த தேசிகரும், மணவாள மாமுனிகளும் போற்றினாரகள். இராமானுசரின் முதன்மைச் சீடரான திருக்குருகைப் பிரான் பிள்ளான் திருவாய்மொழிக்கு உரை எழுதியுள்ளார்.
    வியாசாவதாரம் எடுத்துப் பிரம்ம சூத்திரங்களை இயற்றிய இறைவனே நம்மாழ்வாராக அவதரித்துத் அந்தப் பிரம்ம சூத்திரத்தினுடையவும், வேத வாக்கியங்களினுடையவும் அர்த்தங்களை விளக்க வேண்டி திருவாய்மொழியை அருளிச் செய்ததாக வைணவர்கள் நம்புகின்றனர். ‘மன்னும் வழுதி வளநாடன் மாறன் திருக்குருகூர் சடகோபன் தமிழ்’ என்று நாதமுனி குறிப்பிடுவதை வைத்து இவ்வாழ்வார் பாண்டிய மரபினர் என்று கூற முடியும்.
குறுமுனிவன் முத்தமிழும் எம் குறளும்
சிறுமுனிவன் வாய் மொழியின் சேய்
   என்று வள்ளுவர், நம்மாழ்வார் பாசுரங்கள் குறித்து, கூறியதாகச் சொல்லப்படுகிறது. மாறன், இப்படி இறைவனைப் பற்றிய இன்சிந்தனையோடு 35 ஆண்டு காலம் இப்பூவுலகில் வாழ்ந்து வந்தார். அதன் பிறகு இவர் விருப்பத்திற்கிணங்க, இறைவனும் வைகுண்ட ஏகாதசி அன்றுசொர்க்கவாசலைத் திறந்து நம்மாழ்வாரைத் தம்மொடு இரண்டறக் கலக்கச் செய்துவிட்டார்.

கண்ணிநுண்சிறுதாம்பு-மதுர கவியாழ்வார்

   நம்மாழ்வாரிடம் பட்டோலையை அலங்கரித்த மதுரகவி ஆழ்வார் வைகுந்தநாதனைப் பாடாமல் மதுரமானதும், அன்பு நிறையப் பெற்றதுமான,”கண்ணிநுண் சிறுத்தாம்பு என்று தொடங்கும், பதினொரு பாசுரங்களால் நம்மாழ்வாரைப் பாடியுள்ளார்.
    நூல் இயற்றப் புகுவோர் முதலில் விநாயகருக்கு வணக்கம் கூறுதலைப் போன்று, நம்மாழ்வாருக்கு வணக்கம் கூறுதல் மரபாயிற்று.
   இதனால்தான், கம்பர் ராமாயணத்தை ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றும்போது,ம் சடகோபனைப் (நம்மாழ்வார்) பாடினாயோ?‘ என்று கேட்டாராம்பெருமாள். கம்பர் உடனடியாக நம்மாழ்வாரைப் போற்றி, ‘சடகோபரந்தாதி‘ பாடினார்.

ஸ்ரீசடாரி-நம்மாழ்வார்

    நம்மாழ்வாரையே தெய்வமாகப் போற்றிய “மதுர கவி ஆழ்வார்”, ‘தேவு மற்றறியேன் குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித் திரிவனே’ என்று ‘எனக்கு வேறு எந்தத் தெய்வமும் தேவை இல்லை. குருகூர் நம்பியான நம்மாழ்வாரின் பெயரைச் சொன்னபடியே இருப்பேன்’ என்று சொல்கிறார்.
5-Sadari
ஸ்ரீசடாரி
     திருமால் கோவில்களில் ‘ஸ்ரீ சடாரி’ என்னும் திருமால் பாதங்கள் சடகோபன் (நம்மாழ்வார்) என்றே வழங்கப்படுகின்றன.

நம்மாழ்வாரின் பிறபெயர்கள்

  1. சடகோபன்
  2. மாறன்
  3. காரிமாறன்
  4. பராங்குசன்
  5. வகுளாபரணன்
  6. குருகைப்பிரான்
  7. குருகூர் நம்பி
  8. திருவாய்மொழி பெருமாள்
  9. பெருநல்துறைவன்
  10. குமரி துறைவன்
  11. பவரோக பண்டிதன்
  12. முனி வேந்து
  13. பரப்ரம்ம யோகி
  14. நாவலன் பெருமாள்
  15. ஞான தேசிகன்
  16. ஞான பிரான்
  17. தொண்டர் பிரான்
  18. நாவீரர்
  19. திருநாவீறு உடையபிரான்
  20. உதய பாஸ்கரர்
  21. வகுள பூஷண பாஸ்கரர்
  22. ஞானத் தமிழுக்கு அரசு
  23. ஞானத் தமிழ் கடல்
  24. மெய் ஞானக் கவி
  25. தெய்வ ஞானக் கவி
  26. தெய்வ ஞான செம்மல்
  27. நாவலர் பெருமாள்
  28. பாவலர் தம்பிரான்
  29. வினவாது உணர்ந்த விரகர்
  30. குழந்தை முனி
  31. ஸ்ரீவைணவக் குலபதி
  32. பிரபன்ன ஜன கூடஸ்தர்
  33. மணிவல்லி
  34. பெரியன்

நம்மாழ்வாரால் பாடப்பெற்ற தலங்கள்

1. திருவரங்கம், 2. திருப்பேர்நகர், 3. கும்பகோணம், 4. திருவிண்ணகர், 5. திருக்கண்ணபுரம், 6. திருமாலிருஞ்சோலைலை, 7. திருமோகூர், 8. திருக்குருகூர், 9. ஆழ்வார் திருநகரி, 10. ஸ்ரீவரமங்கை, 11. திருப்புளிங்குடி, 12. திருப்பேரை, 13. ஸ்ரீவைகுந்தம், 14. வரகுணமங்கை, 15. பெருங்குளம், 16. திருக்குறுங்குடி, 17.திருக்கோவலூர்,18. திருவநந்தபுரம்,19. திருவண்பரிசாரம், 20. திருக்காட்கரை, 21. திருமூழிக்களம், 22. திருப்புலியூர், 23. திருச்செங்குன்றூர், 24. திருநாவாய், 25. திருவல்லவாழ், 26. திருவண்வண்டூர், 27. திருவட்டாறு, 28. திருக்கடித்தானம், 29. திருவாறன்விளை, 30. திருவேங்கடம், 31. திருவயோத்தி, 32. துவாரகை, 33. வடமதுரை, 34. திருப்பாற்கடல், 35. பரமபதம், முதலியனவாகும்.

திருப்புளிய மர வரலாறு

   ஸ்ரீராமர் தனது அவதாரப் பயனை உலகத்திற்கு வழங்கி வைகுண்டம் செல்வதற்கு சில நாட்களுக்கு முன்பாக, அயோத்தியில் ஸ்ரீராமரைக் காண எமதர்மராஜா வந்திருந்தார். நாங்கள் இருவரும் உரையாடிக் கொண்டிருக்கும் போது யார் வந்தாலும் உள்ளே விட வேண்டாம் என ராமர், இலக்குவனுக்குஆணையிட்டார்.
    அந்த சமயத்தில், துர்வாச முனிவர் அங்கு வர, அவரது கோபத்தை அறிந்த இலக்குவன், ராமரது ஆணையை மீறி முனிவரை உள்ளே விட்டான். ராமன் முனிவரை நல்ல விதமாக உபசரித்து வழியனுப்பி தனது பேச்சை மீறிய இலக்குவன் மீது கோபம் கொண்டார். எமதர்மராஜரும் சென்றபின், இலக்குவனைப் பார்த்து “நீ அசையாப் பொருளாக ஆவாயாக” என சாபமிட்டார்.
    இலக்குவன் தன் சகோதரனிடம் மன்னிப்பு கோரினார். மனமிரங்கிய ராமர், நான் அளித்த சாபம் நடந்தே தீரும் எனக் கூறினார். உனக்கு மட்டுமல்ல, இந்தப் பிறவியில் நிரபராதியும், கர்ப்பிணியுமான சீதா தேவியை காட்டுக்கு அனுப்பிய காரணத்தால் நான், “உறங்காப் புளியாக, அசையாப் பொருளாக மாறப் போகும் உன் அருகிலேயே, ஐம்புலன்களையும் வென்ற பிரம்மச்சாரியாக சடகோபன் என்ற பெயருடன் அவதரிக்கப் போகிறேன்” எனக் கூறினார்.
  கற்பக விருட்சம் போல் இந்த உறங்காப்புளி மரம் அமைந்துள்ளது. இதன் இலைகள் இரவிலும் மூடாது. உறங்காமல் இவ்வுலகைக் காக்கும். இந்த உறங்காப் புளியமரம், ஸ்ரீ இலக்குவனின் அவதாரமாகவே காட்சி அளிக்கிறது. இந்தப் புளிய மரம் பூக்கும், காய்க்கும், ஆனால் ஒருபோதும்பழுத்ததில்லை.
   பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்து இன்றும் நமக்குக் காணக் கிடைக்கிறது நம்மாழ்வார் தவம் செய்த இம்மரம், சுமார் 5100 ஆண்டுகள் பழைமை உடையது. ஆனால் இன்றும் செழுமையுடன் உள்ளது என்பது ஆச்சர்யம் அளிக்கிறது. இந்த மரத்தினைச் சுற்றி 36 திருக்கோயில்களின் பெருமாள் திருவுருவங்கள் பொறிக்கப் பட்டுள்ளதால், இங்கு வந்து வழிபட 36 திவ்விய தேசங்களுக்கு சென்று வந்த பலன் கிடைக்கும்.
4-Pulliam Tree
ஆழ்வார் திருநகரி தலம்-திருப்புளிய மரம்
கம்பர், ராமானுஜர் வழிபட்ட, இந்த குருகூர் ஸ்தலம், மணவாள மாமுனிகள் அவதரித்த தலமும் ஆகும்.
    இந்தக் கோவிலில் ஆதிசேஷனே (இலக்குவனன்)புளியமரமாகவீற்றிருப்பதால் இத்தலத்திற்கு ‘சேஷ-ஷேத்திரம்‘ என்று பெயர். நாகதோஷம் உள்ளவர்கள் இத்தல பெருமாள், நாச்சியார்கள், கருடன், நம்மாழ்வார் மற்றும் இத்தல புளிய மரத்துக்கு நெய் விளக்குகள் ஏற்றி வழிபட்டால், நாக தோஷங்கள் உனடியாக விலகும்.
****திருப்பதி ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்***. 

நம்மாழ்வார் பக்தி.

    எனக்கு பக்தி ஒன்றும் இல்லை. உலக பற்று ஒன்றும் விடவில்லை. கண்ணா, உன்னை எப்படி வணங்க வேண்டும் என்று கூட எனக்குத் தெரியாது. எல்லோரும் செய்கிறார்களே என்று நானும் உன்னை புகழ்ந்தேன். என்ன ஆச்சரியம், என் பொய்யான பக்தியைக் கூட உண்மை என்று கொண்டு எனக்கு நீ அருள் புரிந்தாய். உன் அருளைப் பெற்று விட்டேன். இனி மேல் நீ என்னை விட்டு போவதானால் போய் கொள். எனக்கு ஒன்றும் கவலை இல்லை. ஆனால், உன்னால் போக முடியாதே என்று ஆனந்தத்தில் மிதக்கிறார் அவர்.
கையார் சக்கரத்து என் மாணிக்கமே என்றென்று,
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி,
மெய்யே பெற்று ஒழிந்தேன் , விதிவாய்கு இன்று காப்பார் யார் ,
ஐயோ கண்ணபிரான் அறையோ இனிப் போனாலே.
     பொருள் : கையில் சக்கரத்தைக் கொண்ட என் கரு மாணிக்கமே என்று என்று பொய்யாகச் சொல்லி உலக விஷயங்களில் மூழ்கி இருந்தாலும், உண்மையான உன்னை பெற்றேன் உன் அருள் பெறுவதை யார் தடுக்க முடியும். ஐயோ கண்ணபிரான் நீ என்னை விட்டுப் போய் விடுவாயா ? (போகமாட்டாய், போக முடியாது)
    பொய்யாகவேனும் பக்தி செய்தால்.நாளடைவில் அதுவே உண்மையாக மாறிப் போகும். விரும்பாமல் சாப்பிட்டாலும் லட்டு இனிக்கத்தானே செய்கிறது.

நாதமுனிகளின் தமிழ்த் தொண்டு(Please refer Article HRE-10)

மதுரகவி ஆழ்வாரின் காலத்திற்குப் பிறகு நாலாயிர திவ்யபிரபந்தப் பாடல்களும் எங்கு போனதென்று தெரியவில்லை.
    நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தை நாதமுனிகளுக்கு, நம்மாழ்வாரே பிரத்யட்சமாகி அனைத்து பாக்களையும் அருள, நாதமுனிகள் அவற்றை ஏட்டில் எழுதித் தொகுத்தார்
    கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள வீரநாராயணபுரம்என்று அழைக்கப்படும் காட்டுமன்னார்  கோயில் என்ற ஊரில் அவதரித்தநாதமுனிகள் என்ற வைணவ ஆச்சாரியாரின் பெரும் முயற்சியால் அனைத்து நாலாயிர திவ்வியபிரபந்த பாடல்களும் கிடைக்கப் பெற்றன. அவரது சீரிய தொண்டினால் நாடெங்கும் நாலாயிர திவ்வியப் பிரபந்தப் பாடல்கள் பரவின.
அடியார்கள் வாழ அரங்க நகர் வாழ,
சடகோபன் தண்தமிழ்நூல் வாழ, கடல் சூழ்ந்த,
மன்னுலகம் வாழ, மணவாள மாமுனியே,
இன்னுமொரு நூற்றாண் டிரும்.
நம்மாழ்வார் திருவடிகளே சரணம்
மதுரகவியாழ்வார் திருவடிகளே சரணம்.
HRE-16: நம்மாழ்வார்
Please go  to CONTENTS for all the Articles in HRE:

HRE-17: மதுரகவியாழ்வார்


மதுரகவியாழ்வார்-அவதாரம்

     பாண்டிய நாட்டில் திருக்கோளூரில் கி.பி. 8 ம் நூற்றாண்டு (745 – 805 AD) ஈசுவர ஆண்டு சித்திரைத் திங்கள் வளர்பிறை சதுர்த்தசி திதியில் வெள்ளிக்கிழமையன்று சித்திரை நட்சத்திரத்தில் கருடனின் அம்சமாய் மதுரகவியாழ்வார் திருவவதரித்தருளினார்.
இவர்தம் சிறுவயதிலேயே சிறந்த பாடல்கள் இயற்றவும், கேட்போரின் செவியும் மனமும் குளிரும் வண்ணம் இனிய பாடல்களைத் தன் மதுரமான குரலில் பாடவும் வல்லவர்.

புனித யாத்திரை

     நிலையற்ற இப்பூலோக வாழ்வின் மீது பற்றின்றி, எம்பெருமானின் திருப்பாதத்தைத் தேடிப் புனித யாத்திரை மேற்கொண்டு, அனைத்து திருத்தலங்களுக்கும் சென்றார்.
     கயா, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகை சென்று ஸ்ரீமன், நாராயணனைத் தரிசித்து, இறுதியாக அயோத்யாவை அடைந்தார். அங்கு அவர் தம் திருப்பயணத்தை முடித்துவிட்டு, தாம் பிறந்த ஊருக்கு வர புறப்பட்ட போதுதான், நம்மாழ்வாரிடம் அவரை அழைத்துச் சென்ற அந்த பேரொளியைக் கண்டார்.

நம்மாழ்வார் பேரொளி

     அயோத்தியில் தங்கியிருந்தபோது தெற்கே ஒரு பேரொளியைக் காணுற்று வியப்படைந்தார். மறுநாளிரவிலும் அதே ஒளி அவ்வாறே தோன்றிற்று. மதுரகவிகள் ‘தெற்கே ஓர் அதிசயம் நிகழ்ந்துள்ளது; அதைச் சென்று காணவேண்டும்’ என்று தீர்மானித்து தெற்கு நோக்கிப் புறப்பட்டார். அவ்வொளி தோன்றிய இடமாகிய திருக்குருகூரை அடைந்தார்.
           ஆழ்வார் திருநகரி வந்தவுடன் அந்த ஜோதியைக் காணாத ஆழ்வார், அந்த ஊர் மக்களிடம் இந்த ஊரின் சிறப்பு என்ன எனக் கேட்டார். ஊர் மக்களும், அந்த ஊர் புளிய மரத்தின் கீழ் பத்மாசனத்தில் சின் முத்திரையோடு அமர்ந்திருக்கும் நம்மாழ்வாரைப் பற்றி கூறினார்கள்.

மதுரகவியாழ்வார்-நம்மாழ்வார் சந்திப்பு
(Pl Refer HRE-16 ; Click the LINK below)

HRE-16: நம்மாழ்வார்: 5-7-2015https://drdayalan.wordpress.com/2015/07/05/hre-16
புளியமரத்தின் கீழ் எழுந்தருளியிருந்த அவ்வொளியாகிய நம்மாழ்வாரை சமாதியிலிருக்கக் கண்டார். முதலில் ஒரு பெரிய கல்லை கீழே போட்டு அந்த சத்தத்தினால் அவர் சமாதியைக் கலைத்தார். மேலும் அவர் நிலையை அறிய விரும்பி, உடம்பில் ஆத்மா வந்து புகுந்து எதனைஅனுபவித்து எங்கே இருக்கும் ?என்று நினைத்து,
3-Nam & MKavi
மதுரகவியாழ்வார்-நம்மாழ்வார்
     “செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத்தின்று எங்கேகிடக்கும்? என்று வினவினார்.
     “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என்று விடை வந்தது.
பிறந்தது முதல் பெற்றவர்களிடம்கூட பேசாத நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வாரிடம் அத்தைத் தின்று அங்கேயே கிடக்கும் (அந்த உடலின் தொடர்பால் ஏற்படும் இன்ப துன்பங்களை அனுபவித்தபடி அங்கேயே இருக்கும்) என்று பதில் உரைத்தார்.
      இந்த வினா-விடை இரண்டிலும் தத்துவம் புதைந்துள்ளது. ‘சூட்சுமமாயிருக்கும் ஜீவன் பிறப்பெடுத்தால் அதன் வாழ்வு எப்படி இருக்கும்?’ என்பது கேள்வி. ‘தன் புண்யபாவங்களின் பயன்களை நுகர்வதே அதன் வாழ்க்கையாக இருக்கும்’ என்பதே விடை.
    மதுரகவிகள் அக்கணமே அவரை தன் ஆசாரியராக வரித்தார். நம்மாழ்வாரும் இவரை அடிமை கொண்டு, மூவகைத் தத்துவங்களின் இயல்பையும் மற்றும் அறியவேண்டிய யோக இரகசிய உண்மைகளையும் சீடனுக்கு உபதேசித்தார்.
   சிறந்த குரு பக்திக்கு, மதுரகவியாழ்வாரே சிறந்த எடுத்துக்காட்டு .உண்ணும் சோறும்பருகும் நீரும்திண்ணும் வெற்றிலையும் எல்லாம்கண்ணனே என்று இருந்தவர் நம்மாழ்வார். ஆனால் மதுரகவியாழ்வாருக்கு எல்லாமும் நம் நம்மாழ்வாரே ஆவார். மதுரகவியாழ்வார், கடவுள் மேல் கொண்ட பக்தியைக் காட்டிலும், தன் குரு மேல் கொண்ட பக்தியே அதிகம்.

கண்ணி நுண் சிறுத்தாம்பு-மதுரகவியாழ்வார்

     நாளடைவில்  நம்மாழ்வார் தமக்கு செய்த மாபெரும் அனுக்ரஹத்தை நினைந்து உருகி அவரைக் குறித்து பதினோரு பாசுரங்களால் ஆன ஒரு பாமாலை இயற்றினார். அப்பாமாலையின் முதற்பா, “கண்ணிநுண் சிறுத்தாம்பு என்று தொடங்குவதால் அதற்கு  “கண்ணிநுண் சிறுத்தாம்பு” என்பது பெயராயிற்று.
கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணி 
யபெரு மாயன்என் னப்பனில்
நண்ணித் 
தென்குரு கூர்நம்பி யென்றக்கால்
அண்ணிக் 
கும்அமு தூறுமென் நாவுக்கே….1
  முடிகளையுடைத்தாய் நுட்பமாய் கயிற்றினால் யசோதைப்பிராட்டி தன்னைக்கட்டும்படி பண்ணுவித்துக்கொண்ட விசேஷ ஆச்சரிய சக்தியுக்தனாய் எனக்கு ஸ்வாமியான ஸர்வேச்வரனை விட்டு கிட்டி ஆச்ரயித்து தெற்குத் திசையிலுள்ள (ஆழ்வார் திருநகரியென்னும்) குருகூர்க்கு நிர்வாஹகாரன ஆழ்வார் என்று சொன்னால். பரமபோக்யமாயிருக்கும் என் ஒருவனுடைய நாவுக்கே அம்ருதம் ஊறா நிற்கும்.
    நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் நம்மாழ்வாரைப் பற்றி அமைந்த இந்த 11 பாடல்களும் இறைவனைக் குறிப்பவை அல்ல. இந்த கண்ணிநுண் சிறுத்தாம்பு என்னும் பாடல்தான், அந்த 4000 திவ்ய பிரபந்த பாடல்கள்என்னும் பொக்கிஷத்திற்கான திறவுகோல் ஆகும்.
       நம்மாழ்வாரை நாம் அழைக்கும், வேதம் தமிழ் செய்த மாறன்என்னும் பெயர் மதுரகவியாழ்வார் அளித்ததே! அதோடு ‘அளவில்லாஞானத்து ஆசிரியர் என்றும் தம் குருவை மதுரகவியாழ்வார் அழைத்தார்.
    தம் குருவுக்காக அவர் ஒரு விக்ரகம் செய்து, அவருக்கு அணுதினமும் அபிஷேகம், ஆராதணை செய்து வணங்க வேண்டுமென்று எண்ணி, தாமிரபரணி ஆற்று நீரைக் காய்ச்சி ஒரு விக்ரகமும் செய்தார்.
    நம்மாழ்வார், மதுரகவியாழ்வாரிடத்தில் கனவில் தோன்றி, ‘இவ்விக்ரகம் தன்னுடையது அல்லவென்றும், இது பின்னாளில் வரப்போகும் ஸ்வாமிராமானுஜரின் (பவிஷ்யத் ஆச்சார்யார்) விக்ரகம் என்று கூறினார். அதன் பிறகு, நம்மாழ்வாருக்குத் தனியாகப் புது விக்ரகம் செய்தார்.
    நம்மாழ்வார் காலத்துக்குப் பின் அவரது விக்ரகத்தை ஆழ்வார் திருநகரியில் எழுந்தருளச் செய்தார்.இவை இரண்டும் இன்னும் இருக்கின்றன.அதனால் மதுரகவியாழ்வார், ஆழ்வார்க்கடியன் என்று அழைக்கப்படுகிறார்.

ஆச்சாரியனுக்கே முதலிடம்

    வைணவ சம்பிரதாயத்தில் ஆச்சாரியனுக்கே முதலிடம். அப்படி ஆச்சாரியனான நம்மாழ்வாரைப் போற்றித் துதித்தவர் மதுரகவி ஆழ்வார். தூணிலும் துரும்பிலும் வியாபித்திருந்த பெருமாளை ‘உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே’, என்று துதித்திருந்தவர் நம்மாழ்வார்.
    நம்மாழ்வாருக்குக் கண்ணன் உயிர் தெய்வம் என்றால், மதுரகவி ஆழ்வாருக்கோ நம்மாழ்வாரே உயிர். ஸ்ரீபிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரியார் போன்ற பெரியவர்கள், பகவத் பக்திகூடவந்துவிடும், பாகவத பக்தி வருதல் அபூர்வம் என்று குறிப்பிட்டுச் சொல்வார்கள்.
அன்பன் தன்னை அடைந்தவர் கட்கு எல்லாம்
அன்பன் 
தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் 
மதுர கவி சொன்ன சொல்
நம்புவார் 
பதி வைகுந்தம் 
காண்மினே –11
    இப்பாசுரத்தில் மதுரகவி ஆழ்வார் அன்பன் என்ற சொல்லை மூன்று முறை பயன்படுத்தியிருக்கிறார். மூன்று இடங்களிலும் மூன்று வெவ்வேறு பொருள்களை இந்தச் சொல் தருகிறது. முதல் அன்பன் என்ற சொல்லுக்குப் பொருள் கருணை. இரண்டாம் அன்பன் என்பது ஆச்சார்யன் பெயர் (அதாவது தென் குருகூர் நம்பியான நம்மாழ்வார்). மூன்றாம் அன்பனுக்குப் பொருள் அடியவன், அதாவது தன்னையே சொல்லிக்கொள்கிறார்.

தமிழ்ச் சங்க புலவர்கள்

    மதுரகவி, ஆழ்வார் தம் குருவான நம்மாழ்வாரின் பெருமைகளையும் பிரபந்தங்களையும் உலகெங்கும் பரப்பி உயர்வுற்றார்.
     நம்மாழ்வார் திருநாடு அலங்கரித்த பின்னர், அவருடைய அர்ச்சை வடிவ உருவத்தைத் திருக்குருகூர் நகரில் எழுந்தருளச் செய்து போற்றி வந்தார்.
மதுரகவியார்,  நம்மாழ்வாருக்கு நித்திய நைமித்திக விழாக்களையெல்லாம் சிறப்புற நடத்தி வந்தார். அத்திரு விழாக்களில் வேதம் தமிழ் செய்த மாறன் வந்தார்;  திருமாலுக்குரிய தெய்வப் புலவர் வந்தார்;  அளவிலா ஞானத்து ஆசிரியர் வந்தார் என்பவை முதலாகப் பல விருதுகளைக் கூறித் திருச்சின்னம் முழங்கினார்.
    இதனைக் கேள்வியுற்ற மதுரைச் சங்கத்தாரது மாணாக்கர்கள் எதிரில் வந்து, ”உங்கள் ஆழ்வார் பக்தரே அன்றி பகவானல்லரே. இவர் சங்கமேறியபுலவரோ? இவர் பாடிய திருவாய்மொழி சங்கமேறிய செய்யுளன்று.இவரை வேதம் தமிழ் செய்தவர் என்று புகழ்வதும் தகுமோ?” என்று பலவாறு பேசி விருதுகளைத் தடுத்துரைத்தனர்.
    அதற்கு மதுரகவிகள் மனம் பொறாமல் வருந்தி,  ”இவர்களின் கர்வம் பங்கமாகும்படி தேவரீர் செய்தருள வேண்டும்” என்று நம்மாழ்வாரைத் துதித்தார்.
நம்மாழ்வாரும் ஒரு கிழ வடிவம் ஏந்தி ,  திருவாய்மொழியில் கண்ணன்கழலிணை நண்ணும் மனமுடையீர் எண்ணுந் திருநாமம் திண்ணம்நாரணமே’ என்ற பாசுரத்தின் முதலடியை ஒரு சிற்றேட்டில் எழுதி ,  சங்கப் பலகையின் மீது வைத்தால் அவர்கள் செருக்கு அடங்கும் என்று கூறியருளினார்.
     சங்கப் பலகையில் ஒரு முனையில் கண்ணன் கழலிணை பாசுரம் எழுதி வைத்த நறுக்கு ஓலை வைக்கப்பட்டது.  மறுமுனையில் புலவர்கள் ஏறி அமர்ந்தனர்.  சங்கப் பலகை, பொற்றாமரைப் பொய்கையில் மூழ்கி, தன் மேலிருந்த புலவர்களையெல்லாம் நீரில் வீழ்த்தி, மேலெழுந்து தன்மீது வைத்த சிறு முறியை மாத்திரம் ஏந்திக் கொன்டு மிதந்தது.
       நீரில் விழுந்து எழுந்து, நீந்திக் கரை சேர்ந்த சங்கப் புலவர்கள், வேதம், வேதத்தின் முடிவுப் பொருட்கள் முதலான யாவற்றையும் பிறரால் கற்பிக்கப்படாமல் தாமேயுணர்ந்த நம்மாழ்வாரது இறைமை எழில் பொருந்திய திறனைத் தெரிந்து செருக்கு அழிந்தனர்.  மதுரகவியாழ்வாருடன் சேர்ந்து நம்மாழ்வாரின் விருது கூறல் முதலியவற்றை முன்னிலும் சிறப்பாக நடத்தி வந்தனர்.
    தொடர்ந்து, மதுரகவியாழ்வார் தமது குருவாகிய நம்மாழ்வாருக்கு பலவகை விழாக்களையும் ஆராதனைகளையும் நடத்தி வந்ததோடு, ஆழ்வாரது அருந்தமிழ் மறைகளின் பொருட்களைப் பலரும் உணரும்படி உரைத்து சிலகாலம் எழுந்தருளியிருந்து பின்பு பேரின்பப் பெருவீட்டை அடைந்தார்.
மதுரகவிகளை ஆழ்வார்கள் வரிசையில் சேர்த்துக் கொள்வதற்கு முக்கியக் காரணம், அவர் நம்மாழ்வாரின் பிரதம சீடராக இருந்து திருவாய்மொழியை நெறிப்படுத்தினார் என்பதோடு, அதைப் பரப்பி ஒழுங்காகப் பாராயணம் செய்ய ஏற்பாடுகளும் செய்தார் என்பதனால்தான்!
    மதுரகவியாரும், நம்மாழ்வாரின் அருளிச்செயல்களான திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்று நான்கு பிரபந்தங்களை  ஓலைகளில் எழுதினார். இவை நான்கும் வேத சாரமாக கருதப்படுகின்றன.
“மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள்
`நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்”
    என்பது மதுரகவி ஆழ்வார் வாக்கு.

நாதமுனிகள்(Pl Refer HRE-10 ; Click the LINK below)

HRE-10: நாதமுனிகள்:7-3-2015https://drdayalan.wordpress.com/2015/03/07/hre-10
மதுரகவியாருக்கு பிறகு நம்மாழ்வாரின் பாசுரங்களை இவரது சீடர்கள் அனுசந்தித்து வந்தார்கள்.  எனினும் நாளடைவில் அவை வழக்கில் காணாமல் போயின.
       ஆழ்வார்கள் காலத்திற்குப் பிறகு தமிழகத்தில் தோன்றிய முதல் வைணவ ஆச்சாரியாரான நாதமுனிகள் (ஸ்ரீ ராமானுஜருக்கு முற்பட்டவர்) ஒரு சமயம் கும்பகோணம் நகரில் அமைந்த ஸ்ரீ ஆராவமுதப் பெருமாள்திருக்கோயிலில் தரிசனம் செய்தபோது பக்தர்கள் சிலர் நம்மாழ்வார் திருவாய்மொழிப்பதிகம் ஒன்றை ஓதியதைக் கேட்டார். அப்பதிகத்தின் இறுதியில் ஓராயிரத்துள் இப்பத்தும் என்று அமைந்ததைக் கேட்டு, மீதியுள்ள 990 பாசுரங்களை அறிவீரா என்று வினவ, அந்த பக்தர்களோ இந்த ஒரு பதிகத்தை மட்டுமே செவிவழியாக அறிந்து ஓதி வருகிறோம் என்று பதில் கொடுத்தனர்.
       நம்மாழ்வாரின் அவதாரத் தலமாகிய ஆழ்வார் திருநகரிக்கே சென்று அறிந்து வர எண்ணி, அங்கு சென்றார் நாதமுனிகள்.
    அந்தத்தலத்து வைணவர்களோ, நம்மாழ்வாரின் சீடராகிய மதுரகவியாழ்வார் இயற்றிய கண்ணிநுண்சிறுத்தாம்புப் பதிகத்தின் பெருமையைக் கூற, நாதமுனிகளும் அந்தப் (பதினோரு பாசுரங்கள்) மட்டும் அறிந்து கொண்டு பதிகத்தை இடைவிடாது பன்னீராயிரம் முறை ஓதினார்.
  இதனால் மகிழ்ந்து காட்சியளித்த நம்மாழ்வார், தமது திருவாய்மொழிப்பாசுரங்கள் ஆயிரம் மட்டுமின்றி, மற்ற ஆழ்வார்களின் பிரபந்தங்களையும் நாதமுனிகளுக்குப் போதிக்க, நம்மாழ்வார் அருளினைப் பெற்று திவ்ய பிரபந்தத்தை மீட்டார்  , அவர் மூலமே திவ்வியப் பிரபந்தம் தமிழ் மக்களைச் சென்றடைந்தது.
    இவ்வாறு மதுரகவியாழ்வாரின் குருபக்தி, அவரையும் ஆழ்வார் ஆக்கி, நம் அனைவரையும் ஆழ்வார் பாசுரங்களை ஆழ்ந்து அனுபவிக்க வைத்த திறம் பெருமையிலும் பெருமை மிக்கதாகும்.
    ஆச்சார்யனுடைய கைங்கர்யமே பரமபதத்திலும் பேறு அளிப்பதாகும். அந்த ஆச்சார்யன் மீது கொள்ளும் பக்தியே அதைப் பெறுவதற்கான வழியும் ஆகும் என்பதுதான் கண்ணிநுண் சிறுத்தாம்பு அளிக்கும் விளக்கமாகும்.
Please go  to CONTENTS for all the Articles in HRE:


















HRE-18:குலசேகர ஆழ்வார் (குலசேகர பெருமாள்)


1-Kulas Alwar

குலசேகரர் அவதாரம்

     குலசேகர ஆழ்வார், சேர மன்னரும் சந்திர குலத்தவருமான, திருடவிரதற்கு மகனாக,கொல்லி நகரில் (திருவஞ்சிக்களம்(கேரளம், (திருச்சூர் அருகில்) பிரபவ வருடம் ( 750 – 780AD) மாசி மாதம் சுக்ல பக்ஷம் துவாதசி வெள்ளிக் கிழமை, புனர்பூச நட்சத்திரத்தில்ஸ்ரீகௌஸ்துபாம்ஸராய் (பெருமாள் அணியும் இரத்தின மாலையின் அம்சம்) பிறந்தார்.
      குலசேகர ஆழ்வார் நால்வகைப் படை கொண்டு பகைவர்களை வென்று நீதிநெறி பிறழாமல் செங்கோல் செலுத்திக் கொல்லி நகரை அரசாண்டு வந்தார். தனதாட்சிக்குட்பட்ட தமிழ் மண்டலங்களான திருவிதாங்கூர் , குட்டநாடு (மலபார்), தென்பாண்டிநாடு (நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகள்) ஆகியவற்றின் தலங்களைச் தரிசித்துள்ளார்.

குலசேகர பெருமாள்

    இவருக்கு இறைவன் காட்சி தந்தமையால் இன்பமும், செல்வமும், அரசாட்சியும் தமக்கு வேண்டாமென்று துறவினை மேற்கொண்டார். இவர் பெரிய பெருமாளாகிய ராமபிரானிடத்தில் அன்பு பூண்டவரானதால் ‘குலசேகரப் பெருமாள்’ என்றே பெயர் வழங்கலாயிற்று.
சிங்க மராத்தியர்தம் கவிதைக் கொண்டுசேரத்துத் தந்தங்கள்பரிசளிப்போம் என்னும் பாடலுக்கேற்ப்ப அங்கு யானைத்தந்தம் மட்டுமல்ல மாலின் மாலையாய் ஒரு மன்னவன் குலசேகரப் பெருமாள் அவதரித்துள்ளார்.
    குலசேகர பெருமாள் சாதாரண மாந்தராய் மண்ணில் பிறக்கவில்லை. அவர் மூவேந்தர்களில் ஒருவரான சேரப் பேரரசின் செல்வக் குமரனாய் அவதரித்தார். அரச குடும்பத்தில் பிறந்த இவர், மன்னனாய், மண்ணைக் கைப்பற்றி வாழாமல், மாலவனின் மனதைக் கைப்பற்ற எண்ணி வாழ்ந்த உத்தமர்.
      பாலகனாய் இருந்த காலத்திலே இவர் வேதங்கள், வெவ்வேறு மொழிகள் என்று கல்விகேள்விகளில் சிறந்து விளங்கியதோடல்லாமல், வாள் வீச்சு, அம்பெய்தல், குதிரையேற்றம், யானை ஏற்றம், தேரோட்டல், கதை, கம்பு, சிம்பு என்று அனைத்திலும் அவர் வல்லவராய் இருந்தார். உரிய காலத்தில் அரச பதவியேற்ற இவர், செவ்வனே அரசாட்சி நடத்தி அனைவரின் அன்பையும் மதிப்பையும் பெற்றார். முகிலும் மாதம் மும்மாரி மாறாமல் பெய்து எல்லா நலமும், வளமும், செல்வமும் பெற்று சேரநாடு பொன்விளையும் பூமியாய் பொலிவுற்று விளங்கியது.
      இவர் போர்க்களத்தில் சென்றால், வாகை மாலையன்றி வேறு எதையும் சூடமாட்டார். தன் தோள் வலிமையாலும், அறிவுக்கூர்மையினாலும், ஸ்ரீரங்கநாதரின் அருளினாலும் எதிரிகளைப் புறமுதுகிட்டு ஓடச்செய்தார். அவரது திறமையையும், பேராண்மையையும் கண்டு, பாண்டிய மன்னன் தன் மகளை அவருக்கு மணம் செய்து வைத்தார்.
      மன்னன் குலசேகரருக்கு ஒரு ஆண்மகவும், பெண்பிள்ளை ஒன்றும் பிறந்தது. தன் மகனுக்கு திடவிரதன் என்று தன் தந்தையாரின் பெயரையேச் சூட்டினார். இவ்வாறு வீட்டையும், நாட்டையும் கருத்துடன் ஆண்டு வந்த குலசேகரருக்கு, போரில் பல உயிர்கள் இறப்பது அவருக்கு வெறுப்பை உருவாக்க ஆரம்பித்தது. அதனால், நாளாக நாளாக அரச வாழ்வில் விருப்பங்குறைய ஆரம்பித்தது.

இராமனின் கதைகள்

      எம்பிரான் இராமராசனின் வாழ்வியலிலும், மழலைக்கண்ணனின் கள்ளக் குறும்புக் கதைகளிலும் காலத்தைக் கழிக்க ஆரம்பித்தார்.
     ஒவ்வொரு நாளும் பண்டிதர்களை அழைத்து, எம்பிரான் இராமனின் கதைகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். அதில் தம்பி இலக்குவனனை சீதாப் பிராட்டிக்குக் காவல் வைத்து விட்டு, அசுரர்களை எதிர்க்கத் தனியே சென்றார், இராமர் என்று சொல்லக்கேட்டார்.2-Raman      இதைக்கேட்ட, குலசேகரர், தனியே இருக்கும் இராம்பிரானுக்கு அசுரர்களால் ஏதேனும் துன்பம் நேருமோ என்று அஞ்சி, தன் நால்வகைப்படைகளையும் இராமபிராணுக்குத் துணையாய் அனுப்ப எத்தனித்தார். அப்பொழுது, அந்த பண்டிதர், இராமர் ஒருவரேத் தனியாய் அவர்களை எல்லாம் வென்றுவிட்டார், என்று கூறி சமாதானப் படுத்தினார்.
   அவரது பற்றும் பக்தியும் இத்துடன் நின்று விடவில்லை. அவர் இராமபிரானுக்காக ஒரு பொற்சிலையை நிர்மாணித்து, அதை தினமும் வழிபட்டு வந்தார்.

அமைச்சர்கள் சூழ்ச்சி

      மன்னனின் நிலையை அறிந்த அவரது அமைச்சர்கள், இந்நிலை நீடித்தால், நாட்டின் நிலைமை மிகவும் மோசமாகி விடும் என்று எண்ணி, அவருக்கு ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி மேலும், விஷ்ணு பக்தர்கள் மேலும் இருந்த மதிப்பையும் மரியாதையையும் அகற்றுவதற்கு ஒரு ஏற்பாடு செய்தனர்.
       அரன்மனையுள் அரசன் வணங்கும் பெருமாளின் திருவாபரணப்பெட்டியில் இருந்தவற்றுள் மிக அழகான ஒரு நவரத்தின மாலையை எடுத்து மறைத்து அரசனிடம் ஆபரணத்தைத் திருடியதுவிஷ்ணு பக்தர்கள் தான் என்று பழி சுமத்தினர்
      இதைக்கேட்ட குலசேகரர், செந்தனலில் தன்னைச் சுட்டது போல் துடித்தார். ஒருநாளும் எம்பிரானின் பக்தர்கள் , வெறும் பொன், பொருள் மீது பற்று கொண்டவர்கள் அல்ல, என்று அவர் தீவிரமாக நம்பினார்.
       ஒரு குடத்தினுள் நச்சுப் பாம்பொன்றை இட்டு மூடினர். அடியவர் தாம் குற்றம அற்றவர் எனில் அக் குடத்தில் கை விட்டு மீள வேண்டும் என்றனர். அரசரோ அடியவரைத் தடுத்து அவர்கள் சார்பாக “பேரனன்பர் கொள்ளார்” என்று கூறி கோவிந்தனை வேண்டிக் குடத்தில் கை விட்டு வெற்றிகரமாக மீண்டார். அமைச்சர்கள் மனம் வருந்தி மன்னன் தாள் பணிந்து நவரத்தின மாலையை சமர்ப்பித்து மன்னிக்க வேண்டினர்.

ஆட்சிப்பொறுப்பை துறத்தல்

    இதனால் மனம் நொந்த குலசேகரரும், தன் ஆட்சிப்பொறுப்பை மகன் திடவிரதனிடம் ஒப்படைத்து விட்டு, அடியாரை மதிக்காத, மக்களிடையே வாழ விருப்பற்ரவராய்ஆனான செல்வத்து அரம்பையர்கள் தற்சூழவானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன் என்று தன் விருப்பத்திற்குரிய அடியார் குழாத்தோடு திருவரங்கம் சென்றடைந்து, அடியவர் குழாத்தொடு, அணியரங்கத்தம்மானுக்கு பணி செய்து, 105 பாசுரங்களைக் கொண்டத பெருமாள் திருமொழி என்ற திவ்யப்ரபந்தத்தை பாடியருளினார்.
     இராமபிரானின் பல்வேறு புனிதத்தலங்களுக்கும் புனித யாத்திரை மேற்கொண்டு, பல்வேறு பாடல்கள் பாடினார்.
   இராமபிரானைப் போலவே இவரும் திருவரங்க பெருமானை வழிபட்டார். இராமபிரானைப் பெருமாள் எனவும், திருவரங்கப் பெருமானை பெரியபெருமாள் எனவும், திருவரங்கப் பெருமான் வீற்றிருந்த திருக்கோயில்பெரிய கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. இவ்வாறு, பெருமாளை மட்டுமே இவர் வணங்கியதால் குலசேகரப் பெருமாள் என்று அழைக்கப்பட்டார். குலசேகரப் பெருமாள், பெருமாள் மீது பக்திச்சுவைச் சொட்ட பாடிய பாடல்கள் பெருமாள் திருமொழி ஆகும்.

குலசேகர ஆழ்வார் வணங்கிய திருத்தலங்கள்

  திருவரங்கம், திருவேங்கடம், திருவித்துவக்கோடு,திருஅயோத்தி, திருக்கண்ணபுரம்,திருசித்திரக்கூடம்.
       திருவரங்கம் சென்று திருவரங்கப் பெருமானை வாயார வாழ்த்தி நின்று தம் அனுபவத்தைப் பெருமாள் திருமொழியில் 31 பாசுரங்கள் பாடியருளினார். இவர் திருவேங்கடம், திருக்கண்ணபுரம் முதலான திருத்தலங்களையும் பாடியுள்ளார்.
    பெருமாள் திருமொழியில் பத்து பாசுரங்கள் ராமபிரானுக்காகப் பாடப்படும் தாலாட்டுப் பாடல்களாக அமைந்துள்ளன. இதனிலுள்ள முதற்பாடல் தெய்வபக்தி உள்ள அத்தனை தமிழ்த்தாய்மார்களும் தங்கள் சேய்களுக்காகப் பாடியிருக்கக்கூடிய பாடல்:
மன்னு புகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே
தென்னிலங்கைக் கோன் முடிகள் சிந்துவித்தாய் செம்பொன்சேர்
கன்னி நன் மா மதில் புடைசூழ் கணபுரத்து என் கருமணியே!
என்னுடைய இன்னமுதே இராகவனே! தாலேலோ!

குலசேகரப்படி

   திருமலை ஆண்டவன் சன்னிதியில் ஆண்டவனின் பவளவாயை எக்காலும் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டுமென்றும், அதற்காக தன்னை அவர் கோயில் வாசற்படியாகவே வைத்துக்கொள்ளவேண்டுமென்றும் குலசேகரர் மனமுருக வேண்டிக்கொண்ட பாசுரம்:
3-Kulas Padiசெடியாய் வல்வினைகள் தீர்க்குந்திருமாலே
நெடியானே வேங்கடவா ! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவருமரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க்கிடந்துன் பவளவாய் காண்பேனே.
      இதனால் இன்றும் வெங்கடேசப் பெருமாளின் வாசற்படிக்குகுலசேகரப்படி என்ற பெயர் வழங்குகிறது.
    இவர் திருவேங்கடவனிடம் இவ்வாறு வேண்டிநின்றாலும் ஆண்டவன் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன் என்ற காரணத்தால் ஸ்ரீரங்கநாதன்கோயிலிலும் கர்ப்பகிருகம் முன்னிருக்கும் படி குலசேகரன் படி என்று அழைக்கப்படுவதைப் பார்க்கலாம்.

 திருவரங்க பணி

    திருவரங்கம் பெரிய கோயிலில் மூன்றாவதாக இருக்கும் திருச்சுற்றிலே சேனைவென்றான் திருமண்டபம் என்பதைக் கட்டினார். இத்திருச்சுற்றையும் செப்பம் செய்தார். இதனாலேயே இம்மூன்றாவது சுற்றுக்கு இவரது பெயர் இன்றும் வழங்குகிறது. குலசேகராழ்வாரால் ”பவித்ரோற்சவ மண்டபம்” கட்டப்பட்டது. இந்த மண்டபம் உள்ள பிராகாரத்தை திருப்பணி செய்தவரும் இவரே!.
 4-SriRangam       அஞ்சனமா மலைப்பிறவி ஆதரித்தன் வாழியே
   அணியரங்கர் மணத்தூணை யமர்ந்த செல்வன் வாழியே
       வஞ்சிநக ரந்தன்னை வாழ்வித்தான் வாழியே
         மாசிதனிபற் புனர்பூசம் வந்துதித்தான் வாழியே
       அஞ்சலெனக் குடப்பாம்பில் கையிட்டான் வாழியே
         அநவாத மிராமகதை யகமகிழ்வான் வாழியே
       செஞ்சொல்மொழி நூற்றஞ்சுஞ் செப்பினான் வாழிய
         சேரலர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே
              குலசேகராழ்வார் திருவடிகளே சரணம்

Please go  to CONTENTS for all the Articles in HRE:

HRE-19: சிரஞ்சீவிகள்


*மாபலிசக்ரவர்த்தி, பரசுராமர், விபீஷணன்,ஹனுமான், மார்க்கண்டேயர், வியாசர், அஸ்வத்தாமன்இவர்கள் அனைவரும் சிரஞ்சீவிகள்.
*இவர்கள் உலகில் பல நன்மைகள் புரிந்து ஆலையங்களையும் பாதுகாப்பவர்கள்.
*நாம், ஆலைய தரிசனம் முடித்ததும், கோயிலில் அமர்ந்துவிட்டு கிளம்புவோம். அப்போது அவர்கள் நம்முடன் வீடுவரை வருவார்களாம்.
*அதனால்தான், கோயிலுக்குச் சென்று விட்டு நேரே தம் வீட்டிற்கு வந்து விளக்கேற்றி, ஆண்டவனையும் சிரஞ்சீவிகளையும் வரவேற்க வேண்டும்என்பது ஐதீகம்.

19.1: மகாபலி சக்கரவர்த்தி

    மகாபலி சக்கரவர்த்தி, பிரகலாதனின் பேரனும், விரோசனனின் மகனுமான, பலி அரசனானவுடன் இந்திராதி தேவர்களை வென்று மூவுலகையும் கைப்பற்றினான். தேவர்கள், பலிச்சக்கரவர்த்தியை அடக்க விஷ்ணுவை வேண்ட, விஷ்ணு, வாமன அவதாரம் எடுத்து, பலிச்சக்கரவர்த்தியிடம் தனக்கு நித்திய அக்கினி ஹோத்திரம் செய்ய, மூவடி நிலம் தானமாக கேட்டார்.
    பலிச்சக்கரவர்த்தி, மூவடி நிலத்தை வாமனனுக்கு தாரை வார்த்து தருகையில், அசுரகுல குருவான சுக்கிராச்சாரியார், நீரைத் தாரை வார்த்து தரும் சொம்பின் மூக்கில் வண்டு வடிவத்தில் அமர்ந்து நீர் வராமல் தடை செய்தார்.
    இதனை அறிந்த வாமனர் தருப்பைப் புல்லினால் தடையை நீக்கிட, சொம்புலிருந்து நீர் வர தானம் முடிந்தது. வாமனன் ஓங்கி உயர்ந்து ஒரடியால் மண்ணையும், இரண்டாவது அடியால் விண்ணையும் அளந்தார். மூன்றாவது அடிக்கு நிலம் தருமாறு பலிச்சக்கரவர்த்தியிடம் கேட்க, பலி மூன்றாவது அடியை தன் தலை மீது வைக்குமாறு வேண்டிட, அவ்வாறேசெய்த வாமனன், பலிச்சக்கரவர்த்தியை பாதாள உலகத்திற்கு அனுப்பினர்.
       மகாபலி, வாமனரிடம் தான், ஒவ்வொரு ஆண்டும் தன் நாட்டு  மக்களை காண வருவதற்கு அனுமதி தரவேண்டும் என்று வரம் கேட்டார், மகாவிஷ்ணுவும் அந்த வரத்தை மாவலிக்கு அளித்தார். இப்படி மகாபலி சக்கரவர்த்தி ஒவ்வொரு ஆண்டும் தன் நாட்டு மக்களை காண வரும் நாளேஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
     அடுத்து வரும் சார்வாணி மனுவந்திரத்திலே பலியே இந்திரனாக விளங்கப் போகிறான். அதுவரை விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப்பட்ட சுதல லோகத்தில் சகல சம்பத்துகளும் பெற்று பலி அங்கு இருந்து வரட்டும் என்றார்,மகாவிஷ்ணு.

19.2:பரசுராமர்

  பரசுராமர் (பரசுராம பார்கவர்)விஷ்ணுவின் ஆறாவது அவதாரம். திரேத யுகம் காலம் ஜமதக்கினி – ரேணுகா மகன் ஆவார் (பரசு=கோடாலி). கடுந்தவம் செய்து சிவ பெருமானிடம் இருந்து கோடாலியைப் பெற்றார். அதனால் இவர் பரசுராமர் என்று அழைக்கப்படுகிறார். கடல் கொந்தளித்த போது அதனை அடக்கி கொங்கணக் கடற்கரைப் பகுதிகளைக் காத்தார்.
2-Parasram
19.2:பரசுராமர்
    ராமர் சீதையைத் திருமணம் செய்து கொண்டு மிதிலையில் இருந்து அயோத்திக்குப் போகும் வழியில், பரசுராமர் அவரை சண்டைக்கு இழுக்கிறார். தம்முடைய தவவலிமை முழுவதையும் ராம பாணத்திற்கு இரையாக்கிவிட்டு, “நீ எண்ணிய பொருள் எல்லாம் இனிது முற்றுக” என்று ராமருக்கு ஆசிர்வாதம் செய்கிறார்.
     சத்திரியர்கள் மீது கோபம் கொண்டு சத்திரிய குல மக்களை குறிப்பாக கார்த்தவீரிய அருச்சுனனை அழித்தவர். இவரது சீடர்களில் புகழ்பெற்றவர்கள்பீஷ்மர்துரோணர் மற்றும் கர்ணன் ஆவர்.
     இவரை ராமாவதாரத்திலும் கிருஷ்ணாவதாரத்திலும் தரிசிக்கலாம். ஸ்ரீராமனுக்கு வைஷ்ணவதனுசை அளித்தருளினார் பரசுராமன். அறம் தவறிய அரசனான ராவணனை அழிக்க ஸ்ரீராமனுக்கு உதவி புரிந்தார்.

19.3: விபீஷணன்

    விபீஷணன் ராவணனின் இளைய சகோதரன். பிரம்மாவிடமிருந்து என்றும் நிலைத்திருக்கும் தன்மையை (மரணமில்லா வாழ்வு) வரமாக பெற்றவன். தர்மத்திற்காக வாழும் அவன் ஒரு சிரஞ்ஜீவி. எங்கெல்லாம் நேர்மை இருக்கிறதோ அங்கெல்லாம் விபீஷணன் இருப்பான்.
3-Vibis
19.3:விபீஷணன் பட்டாபிஷேகம்
    சிறந்த ஞானியான விஸ்ரவஸுக்கும் அசுர குல கைகேசிக்கும்பிள்ளைகளாக பிறந்தவர்கள் ராவணன், கும்பகர்ணன், சூர்ப்பனகை மற்றும் விபீஷணன். விஸ்ரவஸ், பிரம்மனின் பிள்ளையான புலஸ்தியரின் புதல்வனாவார். ஆகையால், பிரம்மாவின் ஞானமும் நற்குணமும் தன் தந்தையிடம் இருந்து மரபின் வழியில் விபிஷணன் பெற்றான்.
   ராவணனும் கும்பகர்ணனும் வளர அச்சமும் விபீஷணன் வளரும் பொழுதில் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் மலர்ந்தது.
   ஒரு நாள், விஸ்ரவஸ்ஸின் மூத்த மகனும் செல்வத்திற்கு அதிபதியுமானகுபேரன் தன் தந்தையின் ஆஸ்ரமத்திற்கு வருகைப் புரிந்தான். அவனுடைய செல்வமும் மகிமையும் ராவணனுக்கு பொறாமையை உண்டாக்கியது. தானும் தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரனைப் போல் விளங்க வேண்டும் என்று விரும்பினான். சக்தியும் மகிமையும் பெற தவம் ஒன்றே வழி என்று தன் பிள்ளைகளுக்கு உரைத்தார் விஸ்ரவஸ்.
   விஸ்ரவஸ்ஸின் பிள்ளைகள் மூவரும் கடுந்தவம் இயற்றத் தொடங்கினர். விபீஷணன் ஒற்றைக் காலில் நின்றபடி ஐயாயிரம் வருடங்கள் கடுந்தவம் செய்தான். அவனுடைய தவம் கடவுளர்களை திருவுளங்கொள்ள வைத்து அவன் மேல் பூமாரி பொழியச் செய்தது.
பிரம்மன் விபீஷணனுக்கு, மரணமிலா பெருவாழ்வை, விபீஷணன் வாழும் வரை தர்மம் அழிந்து போகாது என்று வரமாக வழங்கினார்.
   உண்மைக்கும் நீதிக்குமான வழி அத்தனை எளிதானது அல்ல. அதுவே சகோதரர்களை, குடும்பத்தை மற்றும் அரசாட்சியை விட்டு விபிஷணனை விலகும்படி செய்து இராமனிடம் தஞ்சத்தைக் கோரியது.

19.4:அநுமான்

       மிகவும் பசியுடன் இருந்த குழந்தை ஆஞ்சநேயன், சூரியனை ஒரு பழம்என்று நினைத்து வானில் பாய்ந்தார். ஆனால், அன்றைக்குச் சூரிய கிரகணம். சூரியனைப் பிடிக்க விரும்பிய அனுமன், ராகுவையும் பிடிக்க முயன்றார்.
    ராகு, இந்திரனிடம் சென்று முறையிட  இந்திரன், குழந்தை என்றும் பார்க்காமல், அனுமனைத் தனது வஜ்ராயுதத்தால் அடித்தார். அடியுண்ட அனுமன் தாடை உடைபட்டு விழுந்தார்.
    தனது மகன் இந்திரனால் தாக்கப்பட்டு கிடந்ததைக் கண்டு வருந்திய வாயு பகவான், தனது இயக்கத்தை நிறுத்திவிட்டார். வாயுவின் இயக்கம் இல்லாததால், அனைத்து ஜீவராசிகளும் மிகவும் துன்பப்பட்டனர். தேவர்களும் அனைவரும் பிரம்மாவிடம் சென்று முறையிட, பிரம்மா தனது கரத்தால் தடவிக் கொடுக்க, அனுமன் மீண்டு எழுந்தார்.
     பிரம்மா அனைத்து தேவர்களையும் நோக்கி, ‘இந்தக் குழந்தையால்தான், ராவணன் முதலிய அரக்கர்களால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பத்தைத் தீர்க்க முடியும். அதனால் இவனுக்கு வேண்டிய அளவு நல்ல வரமளியுங்கள். அதன்மூலம் வாயு பகவானும் திருப்தி அடைவார்’ என்று சொன்னார்.
    இதன்பின்னர் சூரியன், தனது ஒளியில் 100-ல் ஒரு பங்கை ஆஞ்சநேயருக்கு அருளினார். மேலும், தானே அனுமனுக்கு வேதங்கள், சாஸ்திரங்கள் அனைத்தையும் போதித்து, கல்வியில் சிறந்தவனாகச் செய்வதாக ஒப்புக்கொண்டார்.
   வருணன்-காற்றாலோ, நீராலோ அவருக்கு மரணம் ஏற்படாது என்றார். யமதர்மன், யம தண்டத்திலிருந்தும் நோய்களினின்றும் அனுமன் பாதிக்கப்பட மாட்டார் என வரமருளினார். குபேரன், அனுமன் யுத்தத்தில் சோர்வே அடைய மாட்டார் என்றார். சிவபெருமான், தனது அஸ்திரங்களினாலோ, தனது கரங்களினாலோ மரணம் ஏற்படாது என்றார்.
    விஸ்வகர்மா, தன்னால் இதுவரை செய்யப்-பட்ட ஆயுதங்களாலோ, இனிமேல் தான் செய்யும் ஆயுதங்களாலோ ஆஞ்சநேயர் பாதிக்கப்பட மாட்டார் என்றார். பிரம்மதேவர், ஆஞ்சநேயர் சிரஞ்சீவியாக இருப்பார்என்று அருளினார். மேலும், அனுமன் தான் விரும்பிய வடிவம் எடுக்கவும், நினைத்த இடத்துக்கு நினைத்த வேகத்தில் செல்ல முடியும் என வரமளித்தார். இந்த வரங்களினால் திருப்தியுற்ற வாயு பகவான் தனது இயக்கத்தைத் தொடங்கினார்.
4-Hanuman
19.4: அநுமான்
    ராமராவண யுத்தம் நடக்கிறது. அப்போது தேவேந்திரனையே வெற்றி கொண்ட ராவணனின் குமாரனான இந்திரஜித் பிரம்மாஸ்த்திரத்தைப்போட்டு வானர சைன்யங்கள் எல்லாவற்றையும் மயக்க நிலையை அடைந்தார்கள்.
   பிரம்மாஸ்ஸ்திரத்துக்கு கட்டுப்படாதவர்கள் : அநுமன், விபீஷணன்,ஜாம்பவான் .இரவு வேளை, இரண்டுபேரும் யார் யார் எங்கெங்கே கிடக்கிறார்கள் என்பதைப் பார்த்துக்கொண்டே வந்தார்கள். ஓரிடத்தில்ஜாம்பவான் படுத்திருந்தார். அவர் பிரம்மாவின் புத்திரர். எனவே அவரை பிரம்மாஸ்திரம் பாதிக்கவில்லை. அவருக்கு விபீஷணரை மட்டுமே பார்க்க முடிந்தது. விபீஷணரைப் பார்த்து, ‘அநுமார் உயிரோடு இருக்கிறாரா?’ என்று கேட்டார். விபீஷணருக்கோ ஒரே ஆச்சரியம். ராமர், லட்சுமணர், சுக்ரீவன், அங்கதன் போன்ற போர் வீரர்கள் பலர் இருக்கையில் அநுமனை மட்டும் குறிப்பாகக் கேட்கிறாரே என்று. உடனே அநுமார் ஜாம்பவானின் முன் சென்று அவரை வணங்கினார். விபீஷணரின் சந்தேகத்தைப் போக்கும் வகையில் ஜாம்பவான் கூறுகிறார்.
        அநுமார் உயிர் பெற்றிருந்தால் போதும், மற்றவர் உயிர் பெற்று எழந்து விடலாம். அநுமார் உயிரை இழந்துவிட்டாலோ மற்றவர் உயிருடன் இருந்தாலும் மடிந்து போனது போல்தான்.
    ஜாம்பவான் தான் அநுமாருக்கு ஊக்கத்தையும் உற்சாத்தையும் ஊட்டி இமயமலையிலிருந்து ஸஞ்ஜீவி மூலிகையைக் கொண்டுவரச் சொன்னார். அநுமார் அந்த மூலிகையைத் தேடுவதில் நேரத்தை வீணடிக்காமல் ஸஞ்ஜீவி பர்வதத்தையே பெயர்த்து கொண்டு வந்து வானர சைன்யங்களுக்கு மத்தியில் வைத்து லட்சுமணர் உள்பட அனைவரும் உயிர் பெற்று எழுந்தார்கள்.
      சீதையைவிடுத்து உன் ஆவியைக் காத்துக் கொள்’ என்று ராமபிரான் விடுத்த அறிவுரையை ராவணனின் தர்பாரிலேயே அவனுக்கு எடுத்துக் கூற ராவணன் அதைக் கேட்டு வெகுண்டு எழுகிறான். ஹநுமன் வாலில் தீயிடச் சொல்லுகிறான். அந்த தீயைக் கொண்டே இலங்கையை எரிக்கிறார்.
      ஸஞ்ஜீவி பர்வதத்தை விளையாட்டுப் போலத் தூக்கிக் கொண்டு பறந்தோடி வந்த அநுமான் என்று தோன்றும்படி ராம நாமம் ஒலிக்குமிடமெல்லாம் பணிவாக அமர்ந்து ராமரஸத்தில் மதுர ரஸத்தில் மூழ்கித்திளைத்திருப்பார். அந்த அடக்கம்தான் அவரை உச்சநிலைக்கு உயர்த்தியது.

 19.5: மார்கண்டேயர்

     மார்கண்டேயர் தந்தை மிருகண்டு முனிவர் தாயார் மருத்துவதிஇவர்களுக்கு அப்போது உள்ள ஊர் காசி அருகே உள்ள தொண்டி என்ற கிராமம். இந்த ரிஷி தம்பதிகளுக்கு புத்ரபாக்யம் இல்லாமல் நீண்ட நாட்களாக இறைவனை வணங்கினார்கள்.
5-Markand
19.5:மார்கண்டேயர்
    திருக்கடவூர் திருக்கோவிலை வந்து சேர்ந்தார்கள். தம்பதி சமேதராய் அங்கு எல்லா இறைவனையும் ஒருசேர பார்த்து ரசித்தார். விநாயகர் இருக்கக் கூடிய நைருதிபாகம் (கன்னிமூலை) இடத்தில் ஓர் குழலை அமைத்து கொண்டு ஒரு மண்டலம் ஆத்மார்த்த சிவபூஜை செய்ய தம்பதிகளுக்கு பிள்ளைபாக்கியம் அருளியது.
   சிவபெருமான்,16வயது மட்டுமே வாழக்கூடிய ஒரு குழந்தை தங்களுக்கு குழந்தை பேறாக அமையும் வரத்துடன் மட்டுமல்லாமல் அக்குழந்தை நிறைந்த ஞானத்தொடு அமையும் என்ற வரத்துடன் பிள்ளை பாக்கியம் அளித்தார்.
   குறிப்பிட்ட 16வயது வந்தவுடன் மார்கண்டேயன் தனக்கு அளிக்கப்பட்ட ஞானவரத்தின் காரணமாக சிவன் நோக்கி பூஜை செய்ததன் காரணமாக தனக்காக உக்ர மூர்த்தியாக காலனை காலால் உதைத்தார். தனது கொடுக்கப்பட்ட வரம் மாறாமல் என்றும் 16 வயதிலேயே (சிரஞ்சீவி வரம்) இருப்பதற்கும் அருள் பாலித்தார் ஈசன்.

19.6:வியாசர்

  1. வேதங்களை ரிக்,யஜுர்,சாம,அதர்வண என நான்காகப் பகுத்தவர் வேதவியாசர்
  2. மகாபாரதம் அளித்த கவி-ரிஷி கிருஷ்ண த்வைபாயனர்.
  3. பதினெட்டு புராணங்களையும், அவற்றுடன் கூடிய உப புராணங்களையும் இயற்றியவர் வியாசர்
  4. வேதாந்த தரிசனத்தின் மூல நூல்களில் ஒன்றான பிரம்ம சூத்திரம்இயற்றியவர்.
     வசிஷ்ட மரபில் வந்த பராசர முனிவருக்கும், சத்யவதி என்ற மீனவப் பெண்ணுக்கும் மகனாகப் பிறந்தவர் கிருஷ்ண துவைபாயனர். கிருஷ்ண=கருப்பு நிறமுடையவர்.துவைபாயனர்=“தீவில் வளர்ந்தவர்” அல்லது தீவின் வழி வந்தவர்.
         சத்யவதி பின்னர் குரு வம்சத்தில், பரத மன்னரின் மரபில் வந்த சாந்தனுவைத் திருமணம் செய்து கொண்டதால், வியாசரின் வாழ்க்கை குரு வம்சத்துடன் தொடர்பு கொண்டதாகிறது.  வியாசருடன் நியோக முறை மூலம் இணைந்து குரு வம்சத்து ராணிகள் திருதராஷ்டிரன், பாண்டு, விதுரன் ஆகிய மூவரைப் பெறுகிறார்கள். எனவே, பாண்டவர்கள், கௌரவர்கள் இருவருக்கும் மூதாதையாக இருப்பவர் வியாசர் என்றாகிறது.
          திரௌபதி சுயம்வரத்திற்குப் பிறகு அவள் ஐவருக்கு மனைவி ஆவது தர்மமா என்று குழம்பி நிற்கும் இடத்தில் வியாசர் வந்து விளக்கம் அளிக்கிறார்.
6-Vyasa
19.6: வியாசர் உபதேசம்
      ராஜசூய யாகத்தின் முடிவில் சிசுபால வதம் நிகழ்கிறது. அது ஒரு அபசகுனமோ என்று கவலை கொண்டிருக்கும் தருமனுக்கு வியாசர் அறிவுரை வழங்குகிறார்.
         யுத்தம் உறுதி என்று இரு தரப்பும் முடிவு செய்தபிறகு திருதராஷ்டிரனிடம் வந்து வியாசர் பேசுகிறார். யுத்தக் காட்சிகளைக் கண்டு உரைக்கக் கூடிய ஞான திருஷ்டியை சஞ்சயனுக்கு வழங்குகிறார். போர்க்களத்திற்கும் வியாசர் வருகிறார். அபிமன்யு மரணத்திற்குப் பின் கலங்கி நிற்கும் பாண்டவர்களுக்கு ஆறுதல் சொல்கிறார்.
    போரின் இறுதிக் கட்டத்தில் அர்ஜுனனும் அஸ்வத்தாமனும் உலகை அழிக்கும் அஸ்திரங்களை ஏவ, இருவரையும் அமைதிப் படுத்தி அவற்றைத் திரும்பப் பெற அறிவுறுத்துகிறார்.
      வியாசர் கிருஷ்ண-வாசுதேவனும் இரு தனித்த தெய்வீக அவதாரங்களானாலும், சிந்தனை அளவில் ஒருவரே தான். ஒரே தத்துவ ஞான விருட்சத்தின் இரு கிளைகள். தர்மத்தையும், மானுட வாழ்க்கையையும் குறித்த அவர்களது பார்வைகள் ஒன்றே.
           ஒருவர் மகரிஷியாக உலக நலனுக்காக தர்மத்தைப் போதித்துக் கொண்டே இருக்கிறார்.  மற்றொருவரும், எப்போதும் பற்றற்ற யோக சமநிலையுடன் நடைமுறையில் யாதவ மன்னனாக, பாண்டவர்களின் துணைவனாக, அதர்மத்தை அழிக்க போர்க்களத்தில் இறங்குகிறார்.  இந்த மண்ணின் அழியாத தெய்வீக ஞானம் இவர்கள் இருவரது சிந்தனையும் மொழியும் ஒன்று கூடும் மகத்தான தருணத்தில், பகவத்கீதையாக வெளிப் படுகிறது.

19.7: அஸ்வத்தாமன்

    அஸ்வத்தாமன், துரோணர் மற்றும், கிருபரின் உடன்பிறந்த சகோதரியின் மகன்.  தனது தவத்தால் ஈசனை மகிழ்வித்த துரோணாச்சார்யர், இறையருள் அம்சத்துடன் இணைந்த மகனைப் பெற்றார். அஸ்வத்தாமன் பிறந்ததும், உச்சை ஸ்ரீவஸ்ஸீ என்ற தேவலோக குதிரையின் சத்தம் போன்ற ஒலியை எழுப்பியதால், அஸ்வத்தாமன் எனப் பெயர் அமைந்தது.
7-Asvathama
19.7:அஸ்வத்தாமன்
       கிருஷ்ணா! நீயிருக்கும்வரை பாண்டவர்களைக் கொல்லமுடியாது. சலனமற்று ஓடும் நதிபோன்ற வாழ்க்கையில் துரோகம் ஒரு சுழிப்பை ஏற்படுத்திச் செல்கிறது. அதன் சுழலில் சிக்குபவர் எப்போதும் இறப்பதில்லை. அவர் கண்கள் என்றும் மூடுவதில்லை. துரோகிக்கப்பட்டவரது தீனக்குரலால்தான் பூமியெங்கும் நிரம்பியிருக்கின்றது. அதன் ஒலியில் நான் கலந்திருப்பேன் கிருஷ்ணா! பாண்டவர்களின் செவிப்பறையை அந்த ஒலி காலாகாலத் துக்கும் கதவடைத்துப் போடட்டும். அவர்களின் நெஞ்சம் இருளால் பீடிக்கப்பட்டதாய் இருக்கட்டும்”
          அஸ்வத்தாமன் காற்றோடு கரைந்துபோனான். யுகாந்திரங்களைத் தாண்டியும் அவன் அலைந்துகொண்டே இருக்கின்றான். துரோகத்தாலும் வஞ்சனையாலும் யாரெல்லாம் பீடிக்கப் பட்டிருக்கின்றனரோ அவர்களில் தன்னை உயிர்ப்பித்துக் கொள்கிறான். தன் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்கிறான்.
         மஹாபாரத போரின் போது நடுநிவை வகித்தவர்கள்:பலராமன், விதுரன், மற்றும் விதர்ப்ப நாட்டு மன்னர் உருக்மி.
      போர் முடிவில் கௌரவர் தரப்பில் கிருபாச்சாரியார், அசுவத்தாமன், கிருதவர்மன், கர்ணனின் மகன் விருச்சகேது ஆகிய நால்வர் மட்டுமே உயிருடன் எஞ்சினர்.
        பாண்டவர் தரப்பில் ஐந்து பாண்டவர்கள், ஸ்ரீகிருஷ்ணர், சாத்தியகி மற்றும் யுயுத்சு ஆகிய எட்டு பேர்கள் மட்டும் உயிருடன் எஞ்சினர்.
        கிருபாச்சாரியார்கிருதவர்மன் அதர்மத்தின் பக்கம் நின்று தர்மத்தையும் தர்மத்தின் பககம் நின்ற கண்ணனுக்கு எதிரே ஷத்திரிய தர்மத்தின்படி போர் செய்து தர்மம் வென்ற போரின் இறுதியிலும் விளங்கியபடியால் இவ்விருவரையும் சிரஞ்சீவிகளுடன் கருதுவது பொருந்தும்

19.8: கிருபாச்சாரியார்

       கௌதம ரிஷியின் வழித்தோன்றலாக வந்தவர். சரத்வான் கடுமையான தவங்களைச்செய்து , பலவிதமான அஸ்திரங்களை ஏவும் பயிற்சியைப் பெற்றார். ஒரு முறை சரத்வான் தவம் செய்து கொண்டிருந்த போது, இந்திரன் அவ்ரின் தவ வலிமையைக் கண்டு நடுங்கி,அவருடய தவத்தைக் கலைக்க ப்ஸரஸ் பெண்ணை அனுப்பினான்.
   அப்ஸரஸ் மங்கையின் நடனத்தால் சரத்வான் தவநிலைகலைந்து,கண்விழித்தார். மங்கையின் மீது அவர் மயக்கம் கொண்டார். தவத்தை விடுத்து அவளுடன் வாழலானார். அவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகள் பிறந்ததும் சரத்வான் மீண்டும் தவத்தில் ஆழ்ந்தார். அப்ஸரஸ் விண்ணுலகம் சென்றாள். ஆணும், பெண்ணும் ஆகிய இரு குழந்தைகளும் வனத்தில் விலங்குகளால் வளர்க்கப்பட்டனர்.
    ஒருமுறை சந்தனு மகாராஜா வனத்திற்கு வந்தபோது விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளைக் அழைத்து வந்து தம் அரண்மனையில் வளர்த்துவந்தார். அவர் கிருபையுடன் (கருணையுடன்) அழைத்து வந்ததால் அக்குழந்தைகளுக்குக் கிருபர்கிருபி என்று பெயரிட்டு வளர்த்தனர்.
        கிருபர், தம் தந்தை சரத்வான் போலவே அஸ்திர வித்தைகளை நன்கு கற்றுத் தேர்ந்தார். தாம் கற்றறிந்தவற்றைப் பிறருக்கும் கற்றுத்தரும் ஆற்றலும் அவரிடம் இருந்ததை அறிந்த பீஷ்மர் அவரைப் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் ஆசிரியராக நியமித்தார்.
       கிருபருடைய சகோதரி கிருபியை துரோணருக்கு மணம் செய்வித்தார். பல ஆண்டுகள் கழிந்த பின்னர் சரத்வான் தம் குழந்தைகள் இருக்கும் இடத்தை தவவலிமையால் அறிந்து அஸ்தினாபுரம் வந்தார். தம் கற்றறிந்த கல்விச் செல்வங்களை யெல்லாம் கிருபருக்குக் கற்றுத் தந்தார்.
      போரின் போது நடுநிவை வகித்தவர்கள்:பலராமன், விதுரன், மற்றும் விதர்ப்ப நாட்டு மன்னர் உருக்மி. கிருபர், துரியோதனனிடம் நன்றியுடன் வாழ்ந்து வந்தவர், மகாபரதப் போரில் கௌரவப் படையின் பதினோறு படைத்தலைவர்களுள் ஒருவராக இருந்தார்.
8-Kiru
19.8:கிருபாச்சாரியார் வில்வித்தை பயிற்ச்சி
  மூவரும் பாண்டவர்கள்அடைந்த வெற்றிக்குப் பிறகு, காட்டில் மறைந்திருந்தார்கள். துரியோதனின் வீழ்ச்சியால் மனம் கொதித்த அஸ்வத்தாமா,பாண்டவர்களை வேரோடு அழிக்க நினைத்தான்.
    கிருபர் அவ்னுக்குப் பல அறிவுரைகளைக் கூறினார். “துரியோதனன் பெரியோர்களை மதிக்கத் தெரியாதவனாக, பலரால் தூண்டப்பட்டுத் தவறான பாவச்செயல்களைச் செய்தான். ஆகையால் அவன் இந்த நிலையை அடைந்தன். நாமும் அவனைப் போல,நடந்தால் நமக்கு அவனுடைய நிலையே கிடைக்கும், நாம் திருதராஷ்ட்ர மன்னனைக் கலந்து ஆலோசித்துவிட்டு, அவ்ர்கள் சொல்படி நடப்போம்” என்றார். கிருத வர்மா என்ற யாதவ மன்னரும் அவ்வாறே கூரினார். ஆனால், கிருபரின் யோசனையை அவன் ஏற்கவில்லை.
      கிருபர் அஸ்தினாபுரத்தில் அனைவராலும் போற்றத் தக்கவராக வாழ்ந்தார். அபிமன்யுவின் புத்திரன் பரிக்ஷித்து இளவரசனுக்கு கிருபரே ஆசிரியராக இருந்து அஸ்திர வித்தைகளைக் கற்றுத் தந்தார்.

19.9:கிருதவர்மன்

         கிருதவர்மன் கண்ணனின் குலமான யாதவ குலத்தைச் சேர்ந்த ஒரு மன்னன். மகாபாரதம் தவிர விஷ்ணுபுராணம்,பாகவதம் மற்றும் அரிவம்சம் பழங்கதைகளிலும் இவன் பேசப்படுகிறான்.
     குருச்சேத்திரப் போரில் கௌரவர்கள் பக்கம் கண்ணனின் நாராயணி சேனையுடன் சேர்ந்து போரிட்டவன்.போரின் முடிவில் கௌரவர்கள் பக்கம் எஞ்சியிருந்தவர்கள் மூவரில் ஒருவன்.
  அசுவத்தாமன் பழிக்குப் பழியாக இரவில் தூங்கிக்கொண்டிருந்த திருஷ்டத்யும்னன்,சிகண்டி,பாஞ்சாலியின் ஐந்து சிறுவர்கள் என படுகொலை செய்த அநீதிக்கு துணை நின்றவன்.
போர் துவங்குவதற்கு முன், ஒரு அணியிலிருந்து வேறு அணிக்கு மாற விரும்புபவர் மாறலாம் என தருமர் கூற, திருதராட்டினரின் இரண்டாம் மனைவியின் மகன் யுயுத்சு கௌரவர் அணியிலிருந்து, பாண்டவர் அணிக்கு மாறி அவர்கள் சார்பாக போரிட்டான்.
       சாத்யகி, கண்ணனிடமும், அருச்சுனனிடமும் மிகுந்த மதிப்பு வைத்திருந்தான். சாத்யகியும், அருச்சுனனும் துரோணரிடம் ஒன்றாகப் போர்ப் பயிற்சி பெற்றவர்கள். பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்கில், சாத்தியகி பாண்டவர்களை ஆதரித்தான். கண்ணன் பாண்டவர்களுக்காகக் கௌரவர்களிடம் தூது சென்ற போது சாத்தியகியும் உடன் சென்றிருந்தான்.
    பாரதப் போரில் கலந்துகொண்ட யாதவ குல வீரர்களுள் சாத்தியகியும், கிருதவர்மனும் முக்கியமானவர்கள். எனினும், இருவரும் எதிர்த் தரப்புகளில் சேர்ந்து போரிட்டனர். சாத்தியகி பண்டவர்களுடன் சேர்ந்து போரிட, கிருதவர்மன் கௌரவர்கள் பக்கம் நின்றான்.
 Please go  to CONTENTS for all the Articles in HRE:

HRE-20:ஸ்ரீஆண்டாள் நாச்சியார்


* அரங்கன் மகிழும் மங்கை, ராமாநுஜர் தங்கைஆண்டாள்
* திருஆடிப் பூரத்தில் ஜெகத்தில்(பூமியில்)உதித்தாள்
*ஆண்டாள், ஆண்டவனையே (ஆளும் அவனையே) ஆண்டவள்-ஆள்பவள்

1.ஆண்டாள் அவதாரம் (ஆடி-பூரம்)

     பூதேவி நாச்சியார்  ஸ்ரீமன் நாராயணானிடம், பூலோகத்தில் தாங்கள்  யார் மீது மிக்க அன்பு கொள்வீர்?  என்று வினவினாள்.  அதர்க்கு பகவான்  மனம் மகிழ்ந்து “யார் அழிவிர்க்கு உரிய உடலில் பற்று  வைக்காமல், நம் மீது பக்தி கொண்டு   பாமாலை பாடி பூமாலை சூட்டி வணங்குகிறானோ அவன் மேல் மிக்க பிரீதி என்று கூறுகிறார்.1-Andal    ஏழாம் நூற்றாண்டு, நள ஆண்டு, ஆடி மாதம் செவ்வாய்க்கிழமை, பூரம் நட்சத்திரம், சுக்லபட்சம் பஞ்சமி திதி, பெரியாழ்வார் தன் வழக்கமான மலர்க் கைங்கரிய சேவையைச் செய்ய ஒரு நாள் நந்தவனத்திற்கு சென்று மலர்க் கொய்து கொண்டிருக்கையில், ஒரு துளசிச் செடியின் அடியில் பூதேவியின் அம்சமாக அந்த குழந்தையைக் கண்டெடுத்து பெரியாழ்வார்-விரஜைதம்பதியர் அக்குழந்தைக்கு “கோதை” என பெயர் சூட்டி வளர்த்து வந்தார்.
     கோதையும் பெரியாழ்வாருடன் சேர்ந்து இறைவனுக்கு மலர்க்கைங்கரியம் செய்வதிலும், இறைவனுக்குத் தொண்டுகள் புரிவதிலும் துணையாய் இருந்தாள்.
    பெரியாழ்வார், நாள்தோறும் கோதைக்கு, கண்ணனின் குழந்தைப் பருவ குறும்புகள் முதல் அவரது ஒவ்வொரு அருட்செயல்களையும் கதையாய்க் கூறுவார். இதனால் இறைவனைப் பற்றிய சிந்தனையே உள்ளத்தில் பதிந்து, தன் ஒவ்வொரு அசைவிலும் இறைவன் இருப்பதை இதயப்பூர்வமாக உணர்ந்தாள்.

2.சூடிக்கொடுத்த சுடர்க்கொடி

     கோதையின் பக்தி, காதலாக மலர்ந்தது. கோதை வளர, தான், தன் தலைவனுக்கு ஏற்ற துணையாய் இருக்க முடியுமா என்று யோசிக்க ஆரம்பித்தாள். அதனால் அவள், இறைவனுக்குச் சூட்டுவதற்காக பெரியாழ்வார் கோர்த்து வைத்திருந்த பூமாலையை, தன் தந்தைக்குத் தெரியாமலேயே எடுத்து அணிந்து கண்ணாடி முன் நின்று தன்னைப் பார்த்துக் கொள்வாள்.2-Andal     ஒரு நாள், மாதவனுக்கான மாலையில் மங்கையின் முடி ஒன்று இருப்பதைப் பார்த்துப் பதறினார், பெரியாழ்வார்.
     அதைக் கண்டறிய வழக்கம் போல், தன் வழக்கமான இடத்தில் மாலையை வைத்து விட்டு மறைந்து நின்று கவனிக்கையில் கள்வனின் காதலியின் கள்ளத்தனம் வெளிப்பட்டுவிட்டது.
     அவர், கோதையைக் கடிந்து கொண்டு, மீண்டும் புதியதொரு மாலையை மாலவனுக்கு அணிவித்தார்.ஆனால் இறைவன் அதை ஏற்கவில்லை.
    பெரியாழ்வாரின் கனவிலே பெருமாள் தோன்றி, தனக்குக் கோதையின் மாலையை அணிவித்தலே பிடித்தம் என்றார் பெரியாழ்வாரும் மகிழ்ந்து அதன்படியே நடந்தார். இதனாலேயே சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்றும் இறைவனையே ஆண்டவள் என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறாள்.
Andal-Varanam       மணப்பருவம் எய்திய மகள் ”மானிடவர்க் கென்று பேச்சுப்படில் வாழ்கில்லேன்” என்றும் ”மற்றவர்க்கு என்னைப் பேசலொட்டேன் மாலிருஞ் சோலை எம் மாயற்கல்லால்” என்றும் கூறுவதைக் கேட்டு மனம் வருந்தினார் விஷ்ணு சித்தர்.ஒருவாறு மனதைத் தேற்றிக் கொண்டு “நூற்றியெட்டுத் திருப்பதிகளிலே வாழும் எம்பிரான்களில் எவரை மணக்க விரும்புகிறாய்?” என மகளிடம் கேட்டார். அவர்கள் குண நலன்களைக் கூறுமாறு ஆண்டாள் கேட்டுக் கொண்டாள். அதற்குஇணங்கிய ஆழ்வார் வில்லிப்புத்தூரில் தொடங்கி பாண்டி மண்டலம்,தொண்டை மண்டலம், மலைநாடு, சோழநாடு, வட திசைத்திருப்பதிகளில் உறையும் எம்பிரான்கள் மற்றும் திருவேங்கடவன், அழகர்,திருவரங்கன் ஆகியோரது பெருமைகளை விரிவாக கூறினார்.
      இவற்றுள் அரங்கத்துறையும் அழகிய மணவாளனின் கண்ணழகு குழலழகு ஆகியவற்றால் கவரப் பட்ட கோதை அவரையே தன் மணாளராக வரித்து அம் மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து கைத்தலம் பற்றும் கனாக்காணலானாள்.
    ஆழ்வாரும் அரங்கத்து எம்மானே தன் மகளுக்கேற்ற மணவாளன் என ஒப்பினாலும் இது எப்படி நடக்கும் என்ற கவலையில் ஆழ்ந்தார். கோதை தன் தந்தையிடம் தான் மணந்தால், அந்த மாளவனைத்தவிர வேறு யாரையும் மனதாலும் நினைக்க மாட்டேன் என்று அடம் பிடிக்க, அரங்கத்து எம்மான் அவர் கனவில் தோன்றி “கோதையை திருவரங்கத்துத்திருமுற்றத்துக்கு அழைத்து வருக. அங்கே தக்க முறையில் அவள் கைத்தலம் பற்றுவோம்.” என்று சொல்ல மன மகிழ்ச்சியுற்றார்.

3.திருவரங்கனுடன்-ஆண்டாள் சங்கமம்

       ஒரு நாள் அரங்கத்துக் கோயில் பரிவாரம் முற்றும் எம்பிரானின் சத்திரம் சாமரம் போன்ற வரிசைகளோடு வில்லிபுத்தூர் வந்து பெரியாழ்வரைப் பணிந்து ஆண்டாளை அழைத்து வர அரங்கன் பணித்ததாகச் சொன்னார்கள். ஆழ்வாரும் அகமகிழ்ந்து வட பெருங் கோயில் உடையானை வணங்கி அரங்கம் செல்ல அவன் அனுமதி பெற்றார்.ஆழ்வாரும் அவர் அணுக்கர்களும் ஆண்டாளை பட்டுத் திரையிட்ட பல்லக்கில் ஏற்றி பல்வகை இசைக்கருவிகள் இசைத்து “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி வந்தாள் சுரும்பார்க் குழற்கோதை வந்தாள். திருப்பாவை பாடிய செல்வி வந்தாள். தென்னரங்கனைத் தொழும் தேசியள் வந்தாள்.” ஆகிய முழக்கங்களோடு அழகிய மணவாளன் திருமண்டபத்தை அடைந்தனர்.        அங்கே பாண்டிய மன்னன் வல்லபதேவன் போன்ற சீடர்களும் கோவிற் பரிவாரமும் பார்த்திருக்க பல்லக்கின் திரைச்சீலையை ஆழ்வார் திறந்தார்.
3-Andal     அங்கே திருவரங்கப் பெருமானுடன், ஆண்டாள் சங்கமம் ஆனாள்.ஸ்ரீ ரங்கநாதரையே மனதால் தினம் அணிந்து அழகு பார்த்து சூடிக்களைந்த மாலைகளையே ரங்கனுக்கு மாலையாக்கி ஆண்டவனையே ஆண்டவள்ஆண்டாள்.
      பெரியாழ்வார், இறைவன் துணைவியாருக்கு (கோதை) தாயாய்-தந்தையாய் இருந்து, தாரை வார்த்துக் கொடுத்த மாமன் ஆவார்.
       அரங்கனின் மாமனாரான ஆழ்வார் அவன் தீர்த்தப் பிரசாதங்களைப் பெற்று வில்லிபுத்தூர் திரும்பி வட பெருங் கோயில் உடையான் பொன்னடி பூண்டு வாழ்ந்தார்.

4.ஆண்டாள்-பாசுரங்கள்

சூடித்தந்த நாச்சியாரான கோதை, இறைவன் மேல் பக்திச் சுவைச் சொட்டச் சொட்ட பாடிய:
நாலாயிர திவ்யபிரபந்த பாசுரங்கள்
திருப்பாவை: 30 பாசுரங்கள்
நாச்சியார் திருமொழி: 143 பாசுரங்கள்-14 திருமொழிகள் (பதிகங்கள்)
திருப்பாவை:
பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதைத்தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு.
(ஐயைந்தும்), ஐந்தும் : (5×5) +5= 30
இந்த 30 பாசுரங்களும் மார்கழி மாதம் 30 நாட்களும் அதிகாலையிலேபாடப்படுகின்றன.
திருப்பாவை (பாடல்-1)
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்
    ஆண்டாளின் இவ்விரு படைப்புகளும் குறிப்பாக திருப்பாவை அனைத்து வைணவதலங்களிலும் வைணவர்களின் இல்லங்களிலும் தினந்தோறும் ஓதப்பட்டுவருகின்றது. மேலும் வைணவதலங்களில் நடைபெறும் முக்கிய விழாக்களிலாயினும் வைணவர்களின் இல்லவிழாவாயினும் வடமொழி மறைகளுக்கு நிகராக தவறாமல் ஓதப்படுகின்றது.
     எம்பெருமானுக்கு உகந்த மார்கழி மாதக் காலைகளில் அனைத்து வைணவக் கோயில்களிலும் இசைக்கப்படுவதே இதன் பெரும் சிறப்பு.
    தமிழறியா அடியார்கள் கொண்ட வைணவத் தலங்களிலும், மார்கழி மாதக் காலைகளில் திருப்பாவை இசைக்கப்படுவதும், இந்தியாவில் எங்கெல்லாம் பெருமானின் திருக்கோயில்கள் உள்ளனவோ அங்கெல்லாம், கோதை தனக்கும் ஒரு தனிச் சந்நதி கொண்டுள்ளதும் வேறு எந்த ஒரு அடியவருக்கும் காணப் பெறாத தனிச் சிறப்பாகும்.
     ஓரே அடிகொண்டு உலகையே அளந்த பரந்தாமனின் புகழைப் பாடுவதனாலேயே புவியோர் தமது துன்பம் நீங்கி இன்புற்றிருக்க இயலும் என இப்பாடலின் மூலம் இயம்புகிறாள் கோதை:
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்கு சாற்றுநீ ராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்குபெரும் செந்நெல் ஊடு கயலுளக
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்

5.ஸ்ரீவில்லிப்புத்தூர்

     பூமாதேவி ஆண்டாளாகவும், கருடாழ்வார் அம்சமாக பெரியாழ்வாரும் இத்தலத்தில் அவதரித்தனர். ஆதலால் இந்த ஊர், கோதை பிறந்த கோவிந்தன் வாழும் ஊர்.
கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணிமாடம் தோன்றுமூர்,நீதியால்
நல்லபத்தர் வாழுமூர், நான்மறைகளோதுமூர்,
வில்லிபுத்தூர் வேதக்கோனூர்.
பாதகங்கள் தீர்க்கும் பரம னடிகாட்டும்,வேத மனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ்
      கோதை பிறந்த ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிந்தன்(பெருமாள்) வாழும் ஊர்; பெருமை வாய்ந்த அவ்வூரிலே மணிமாடங்களில் ப்ரகாசமான விளக்குகள் ஏற்றி வைக்கப் பட்டுள்ளன; நீதியை கடை பிடிக்கும் சிறந்த பக்தர்கள் வாழும் ஊர் ; நான்கு மறைகள் ஓதப்படும் ஊர். வேதாத்யயனம் பண்ணிய பண்டிதர்கள் உள்ள ஊர். அம்மண்ணை மிதித்தாலே முன் செய்த, செய்துக் கொண்டிருக்கும், செய்யப் போகும் பாபங்கள் அனைத்தும் ஒழிந்து, பரமனாகிய நாராயணனின் திருவடியினை அடையலாம்.
     ஸ்ரீவராக அவதாரம் நிகழ்ந்த தலமாக ஸ்ரீவில்லிப்புத்தூர் கருதப்படுவதால், இதை வராக ஷேத்திரம்’ என்பர். இதையட்டி, இங்கு ஸ்ரீவராகர் சந்நிதி திகழ்கிறது.
    தமிழக அரசின் அதிகார பூர்வமான சின்னமாகத் திகழ்வதுஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் ஆலய ராஜ கோபுரம். இந்தக் கோபுரத்தை தமிழக அரசின் சின்னமாக ஏற்பது என்று அன்றைய சென்னை மாகாண முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்தது. ‘மதச்சார்பற்ற நாட்டில் குறிப்பிட்ட ஒரு மதத்தைச் சார்ந்த கோயில் கோபுரத்தை அரசு சின்னமாக அறிவிக்கக் கூடாது!’ என்று சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.அப்போதைய பிரதமர் நேருஜி இது குறித்து ஓமந்தூராரிடம் விளக்கம் கேட்டார். ‘இந்தக் கோபுரத்தை சமயச் சின்னமாகப் பார்க்காமல், திராவிடக் கட்டடக் கலையின் எடுத்துக்காட்டாகக் கொள்ள வேண்டும்!’ என்று விளக்கம் அளித்தார் ஓமந்தூரார். இதன் பின் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம் அரசின் சின்னமாக ஏற்கப்பட்டது.
   வைணவ திவ்ய தேசங்கள் நூற்றியெட்டில் முதலாவது ஸ்ரீரங்கம். இது ஆண்டாளின் புகுந்த வீடு. கடைசித் தலம் ஸ்ரீவில்லிப்புத்தூர். இது அவளது தாய் வீடு.
     சித்ரா பௌர்ணமி அன்று கள்ளழகர், ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை மற்றும் பரிவட்டங்களை அணிந்த பிறகே வைகையில் இறங்குகிறார்.
    வெள்ளி எழுதலும், அதே சமயம் வியாழன் உறங்குதலும் அபூர்வ நிகழ்ச்சி. 8 ஆம் நூற்றாண்டில் இம்மாதிரி நிகழ்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். 731 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி அதிகாலை 3.50 மணி முதல் 4.00 மணிக்குள் அந்த மார்கழி பௌர்ணமியே திருப்பாவை தோன்றியதாக கூறப்படுகிறது.
5.1.வடபத்ரசாயி & ஆண்டாள் திருக்கோயில்கள்
        இது இரட்டைக் கோயிலாக அமைந்துள்ளது. வட கிழக்கில் மிகப் பழைமையான வடபத்ரசாயி கோயில். மேற்கில் ஆண்டாள்திருக்கோயில். 11 நிலைகளுடன் 11 கலசங்கள் கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ராஜ கோபுரம், 196 அடி உயரமுடையது.

4-Andal5.2.பெரியாழ்வார் நந்தவனம்

        இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருப்பதே பெரியாழ்வார் உருவாக்கிய நந்தவனம். இங்கு ஆண்டாளுக்குத் தனிச் சந்நிதி ஒன்றும் அதன் முன்புறம் துளசி மாடம் ஒன்றும் உள்ளது.
5-Nanthavanam    இங்கிருக்கும் மண்ணை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டாலோ, சிறிதளவு எடுத்துச் சென்று வீட்டில் பத்திரப்படுத்தினாலோ திருமணத் தடை நீங்கி செல்வம் சேரும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். மாடத்தின் அடியில் ஆண்டாளின் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.
5.3.மூலவர்-வடபத்ர சாயி
     கருவறையில் விமலாக்ருதி விமானத்தின் கீழ் அரவணைப் பள்ளியில்ஸ்ரீதேவி & பூதேவி சமேதராக உள்ள வடபத்ர சாயியை மூன்று வாசல்களின் வழியாக தரிசிக்கலாம். தலைமாட்டில் பிருகு முனிவரும், கால்மாட்டில் மார்க் கண்டேயரும் வணங்கி நிற்கின்றனர். மேலும் பஞ்ச மூர்த்திகள், தும்புரு, நாரதர், சனத்குமாரர், கின்னரர், சூரியன், சந்திரன், மது& கைடபர் ஆகியோரும் காணப்படுகின்றனர்.
    சம்ஸ்கிருதத்தில் வடபத்ரம் எனப்படும் ஆலிலையில் பள்ளி கொண்ட பரமன் ஆதலால், இவர் ‘வடபத்ர சயனர்’ எனப்படுகிறார்.
5.4.ஸ்ரீவில்லிப்புத்தூர் உற்சவர்:ரங்கமன்னார் (ராஜ மன்னார்)
      ஸ்ரீவில்லிப்புத்தூர் உற்சவர் விரத நாட்கள் தவிர மற்ற நாட்களில், மாப்பிள்ளைக் கோலத்தில் காட்சி தருகிறார். அப்போது நிஜார் மற்றும் சட்டை அணிவார். அருகில் மணப்பெண் அலங்காரத்தில் ஆண்டாள்.‘மன்னாருக்கு தொடை அழகு’ என்பர். ஆண்டாளின் மாலையை (தொடைமாலை) அணிந்து கொண்டு அவர் காட்சி அளிப்பது உலகப் பிரசித்தம்

6-Andal

      நந்தவனத்துக்கும் வடபெருங் கோயிலுக்கும் இடையில்சக்கரத்தாழ்வார் சந்நிதி உள்ளது.அந்நிய படையெடுப்பால் ஏற்படும் ஆபத்தைத் தவிர்க்க ஒரு முறை ஆண்டாள் திருவுருவை திருவனந்தபுரத்துக்கு எடுத்துச் சென்றனராம். அதுவரை அங்கு உக்கிரமாக விளங்கிய சக்கரத்தாழ்வார், ஸ்ரீஆண்டாள் வந்ததும் சாந்தம் அடைந்தாராம். பிறகு ஸ்ரீஆண்டாள் ஸ்ரீவில்லிப்புத்தூர் திரும்பியபோது சக்கரத்தாழ்வாரும் உடன் வந்ததாகக் கூறுவர்.
      தண்ணீர் பஞ்ச காலத்திலும்கூட இந்தத் திருக்கோயிலின் முன்புறமுள்ள நூபுர கங்கையில் நீர் வற்றுவது இல்லை.

6.ஸ்ரீராமானுஜர்

      கள்ளழகருக்கு நூறு குடம் வெண்ணெயும், அக்கார வடிசலும்சமர்ப்பிப்பதாக தனது விருப்பத்தை ஆண்டாள் பாடினாள். அதைஸ்ரீராமானுஜர் நிறைவேற்றினார். பின்னர் ஸ்ரீராமானுஜர் ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்தபோது ‘என் அண்ணன் அல்லவோ!’ என்று அசரீரி ஒலியுடன் ஆண்டாள் விக்கிரகம் முன்னோக்கி நகர்ந்து ஸ்ரீராமானுஜரை வரவேற்றது.

Ramanujar & Alagar7.ஆண்டாள் வைபவங்கள்

    தினமும் விடியற் காலையில் பிராட்டியின் சந்நிதியில் காராம்பசு ஒன்று வந்து நிற்கும். தேவியின் திருப்பார்வை காரம்பசுவின் பின்புறம் விழும். தேவி தினமும் கண் விழிப்பது இப்படித்தான்.
   வேங்கடாசலபதி ஆண்டாள் மாலையை ஆசையுடன் அணிகிறார். திருப்பாவையில் முதல் பத்தில் ‘அவன் திருநாமத்தைச் சொல்லு’ என்றும், இரண்டாவது பத்தில், ‘உயரியதான அவன் திருவடியை அர்ச்சனை செய்’ என்றும், கடைசி பத்து பாட்டுக்களில் ‘அவன் திருவடியில் உன்னை அர்ப்பணி’ என்றும் வலியுறுத்துகிறாள் ஆண்டாள்.
      ஆண்டாளுக்குச் சாத்தப்படும் மாலை, மறு நாள் காலையில் வடபெருங்கோயில் உடையவருக்கு சாத்தப்படுகிறது. ஆண்டாள் உலா வரும்போது, ‘நாலாயிர திவ்யப் பிரபந்தம்’ பாடப்படுகிறது.
7.1.பெருமாள் அருகில் கருடாழ்வார்
     பொதுவாக பெருமாள் தலங்களில் கருடாழ்வார், சுவாமி சன்னதியின் எதிரே அவரை நோக்கி வணங்கியபடிதான் இருப்பார். ஆனால், இத்தலத்தில் பெருமாளுக்கு அருகிலேயே வணங்கிய கோலத்தில் இருக்கிறார். இத்தலத்தில் பிறந்த பெரியாழ்வார், கருடாழ்வாரின் அம்சமாக பிறந்ததாக ஐதீகம். தன் மகளை, திருமாலுக்கு திருமணம் செய்து தந்தபோது,மாப்பிள்ளைக்கு அருகில் நின்றுகொண்டாராம்.
Andl-Mannar-Garudan     ஆண்டாளின் திருமணத்துக்கு பெருமாளை விரைவாகச் சுமந்து வந்தவர்கருடன். அதனால் அவர் இங்கு மாப்பிள்ளைத் தோழனாக பெருமாளின் அருகிலேயே இருக்கிறார்.
7.2.ஆண்டாள் கிளி வைபவம்
    மதுரை ஸ்ரீமீனாட்சிக்கு வலத் தோளில் கிளி. இறையாட்சி புரியும்.ஸ்ரீஆண்டாளுக்கு இடத் தோளில் கிளி. இதைப் பிரசாதமாகப் பெறுவோர் பெரும் பாக்கியசாலிகள். இந்தக் கிளி தினமும் புதிதாகச் செய்யப்படுகிறது. கிளி மூக்கு-மாதுளம் பூ; மரவல்லி இலை-கிளியின் உடல்; இறக்கைகள்-நந்தியாவட்டை இலையும் பனை ஓலையும்; கிளியின் வால்-வெள்ளை அரளி மற்றும் செவ்வரளி மொட்டுகள்; கட்டுவதற்கு வாழை நார்; கிளியின் கண்களுக்கு காக்காய்ப் பொன்.
     ஸ்ரீஆண்டாள் சுகப்பிரம்மம் என்ற ரிஷியை கிளி ரூபத்தில் ரங்கநாதரிடம் அனுப்பியதாகவும், தூது சென்று வந்த கிளியிடம், ‘என்ன வரம் வேண்டும்?’ என்று ஆண்டாள் கேட்க, சுகப்பிரம்மம், ‘இதே கிளி ரூபத்தில் உங்கள் கையில் தினமும் இருக்க அருள் புரிய வேண்டும்!’ என்று வேண்டிக் கொண்டார் , அதனால் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றிருப்பதாகவும் புராணம் கூறுகிறது.
     தான் அணிந்து கொண்ட பூமாலையுடன், கோதை இங்குள்ள கிணற்று நீரில் அழகு பார்த்துக் கொள்வது வழக்கமாம். அதனால் இங்குள்ள கிணறு ‘கண்ணாடிக் கிணறு என அழைக்கப்படுகிறது.
7.3.ஆண்டாள் வைபவம்-ஸ்ரீரங்க மன்னார்
    ஸ்ரீஆண்டாளின் மடியில் ஸ்ரீரங்க மன்னார் படுத்திருக்கும் ‘சயன உற்சவம்’ அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் கோயிலிலும், ஸ்ரீகிருஷ்ணரின் சயன உற்சவம் ஆண்டாள் கோயிலிலும் நடைபெறும்.
7-Andal  ஸ்ரீரங்கம் தலத்தில் நடப்பது போலவே இங்கும் ‘அரையர் சேவைநடைபெறுகிறது. அப்போது ஆழ்வார் பாசுரங்களைப் பக்தி சிரத்தையுடன், பாவம், லயம், இசை, சந்தத்துடன் பாடுகிறார்கள்.
     மார்கழியில் சாற்று மறையின்போது ஆண்டாள் முன்பாக பதிமூன்று தீர்த்தக் காரர்களும், அரையர்களும், திருப்பள்ளி யெழுச்சி பாடக் காத்திருப்பர். மற்றொரு பக்கம் வேதபிரான் பட்டர்கள் நிற்பர். அப்போது அரையர்கள், தொண்டரடிப் பொடியாழ்வாரது பத்துப் பாசுரங்களைப் பாடித் திருப்பள்ளி எழுச்சி செய்கின்றனர். தொடர்ந்து பெரியாழ்வாருக்கும், சுவாமிக்கும் திருமஞ்சன சேவை நடைபெறுகிறது.
   பங்குனி மாதம் ஆண்டாள் திருக்கல்யாணம், ஆனி மாதம் பெரியாழ்வார் உற்சவம், புரட்டாசி மாதம் பெரிய பெருமாள் உற்சவம்,
7.4.ஆண்டாள் வைபவம்- பஞ்ச கருட சேவை.
     பங்குனி உத்தரத்தன்று ஸ்ரீரங்கமன்னார்-ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இதன் ஐந்தாம் நாளன்று பஞ்ச கருட சேவைநடைபெறும். ஸ்ரீபெரிய பெருமாள்ஸ்ரீநிவாசன்சுந்தரராஜன்,திருத்தண்கால் அப்பன் ரெங்கமன்னார் ஆகியோர் ஆண்டாளை திருமணம் செய்யப் போட்டி இடுவர். இவர்களுடன் ஸ்ரீரங்கநாதரும் போட்டியில் கலந்து கொள்வார். முதலில் வரும் ஸ்ரீரங்கநாதரையே ஆண்டாள் திருமணம் முடிப்பாள்.
Garudasevai-9    பங்குனி உத்திர-திருக்கல்யாணத்தின்போது, திருப்பதி ஸ்ரீவேங்கடாசலபதி கோயிலிலிருந்து பரிவட்டமும் , ஆடிப்பூரத் தேரோட்டத்துக்கு, மதுரை அழகர் கோயில் கள்ளழகர் திருக்கோயிலிருந்து பட்டுப் புடவையும் அனுப்பி வைக்கப்பட்டு ஆண்டாளுக்கு சாத்துப்படி செய்வது வழக்கம்.
        பெரியாழ்வார் இந்த ஆலயத்தின் முதல் தர்மகர்த்தாவாகப் போற்றப் படுகிறார். அவர் தர்மகர்த்தாவாக இருந்த போது, வரவு-செலவை ஒப்புவிப்பாராம்! இந்த நிகழ்ச்சி, வருடம்தோறும் ஆடி மாதம் 7-வது நாளில் வைபவமாக நடைபெறுகிறது.
7.5.ஆண்டாள் வைபவம்- ஆண்டாள் அருள்
    நாடகக் குழுவை நடத்தி வந்த கன்னையா, கடன் சுமை தாங்காமல் ஸ்ரீஆண்டாளை தரிசிக்க ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்தார். அன்றிரவு கனவில் தோன்றிய ஆண்டாள், தனது கதையை நாடகமாக்குமாறு அருளி மறைந்தாள்.
      அப்படியே செய்தார் கன்னையா. அந்த நாடகத்தைக் கண்டு மகிழ்ந்த ஒருவர், நாடகக் குழுவைச் சிங்கப்பூர் அழைத்துச் சென்றார். கன்னையாவுக்குப் பொருளும் புகழும் சேர்ந்தது. இதற்கு நன்றிக் கடனாக யானை, ஒட்டகம் மற்றும் அபிஷேகத்துக்குத் தங்கக் குடம் என்று பல காணிக்கைகளைச் செலுத்தினார் கன்னையா. அவர் அளித்த குடம், ‘கன்னையா குடம்’ என்றே குறிப்பிடப்படுகிறது.
  திருவிழாவின்போது ஆண்டாளுக்கு எண்ணெய்க் காப்பு உற்சவம் நடத்தப்படுகிறது. சுமார் 61 மூலிகைகளை உள்ளடக்கிய இந்தத் தைலத்தைக் காய்ச்ச 40 நாட்கள் ஆகின்றன. இரண்டு இதை ‘சர்வ ரோக நிவாரணி’ என்பர்.
7.6.ஆண்டாள் வைபவம்-மூக்குத்தி சேவை
    மூக்குத்தி சேவை நடைபெறும் நாளன்று ஆண்டாளின் மூக்கருகே, தங்க மூக்குத்தியைக் கொண்டு சென்றதும், அது தானாகவே ஆண்டாளின் மூக்குடன் ஒட்டிக் கொள்கிறது
     கவிச்சக்ரவர்த்தி கம்பர் ஒரு முறை ‘மார்கழி நீராடல்’ உற்சவத்தைக் காண ஸ்ரீவில்லிப்புத்தூருக்குக் கிளம்பினார். ஆனால், குறித்த நேரத்துக்குள் அவரால் திருமுக்குளத்துக்கு வந்து சேர இயலவில்லை. ‘நீராடல் வைபவத்தை தரிசிக்க முடியாதோ’ என்ற ஆதங்கத்துடன் உற்சவ மண்டபத்துக்கு வந்து சேர்ந்த கம்பருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அதுவரை விழா ஆரம்பமாகவில்லை. காரணத்தை கம்பர் கேட்டபோது, ‘‘எண்ணெய்க் காப்பு நீராடல் முடிந்ததும், ஸ்ரீஆண்டாளுக்கு வைர மூக்குத்தி சேவை நடைபெறும். அந்த மூக்குத்தியைக் காணோம்’’ என்று பதில் அளித்தனர் விழாக் குழுவினர்.
     உடனே, கம்பர் தன் கையிலிருந்து மூக்குத்தி ஒன்றை எடுத்து அவர்களிடம் காட்டி, ‘‘இதுவா பாருங்கள்?’’ என்றார். எல்லோருக்கும் ஆச்சரியம். ‘ஸ்ரீஆண்டாளின் வைர மூக்குத்தி கம்பரிடம் எப்படி வந்தது?’ எனக் கேட்டனர். கம்பர், ‘‘திருமுக்குளம் கரை ஏறியபோது ஏதோ ஒன்று மின்னியதைக் கண்டு எடுத்து வந்தேன்!’’ என்றார். நீராடல் வைபவத்தைக் கம்பர் காண வேண்டும் என்பதற்காக ஸ்ரீஆண்டாள் நடத்திய திருவிளையாடலே இது என்று அனைவரும் உணர்ந்தனர்.
7.7.ஆண்டாள் வைபவம்-ஆடிப் பூரம் (அம்மனுக்கு வளைகாப்பு)
   ஸ்ரீஆண்டாளின் அவதார தினமான ஆடிப் பூரம் அன்று தேர்த்திருவிழா நடைபெறுகிறது. தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேராகக் கருதப்படும் தேர்த் திருவிழாவன்று ஸ்ரீஆண்டாளும், ஸ்ரீரங்கமன்னாரும் இந்தத் தேரில் எழுந்தருளி வீதி உலா வருவார்கள்.
   ஆடிப் பூர தினத்தில் அம்பிகைக்கு வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.அம்பிகை வளையல் அலங்காரத்தின் மனம் மகிழ்ந்து, தன் மக்கள் அனைவருக்கும் அருள் பாலிப்பாள். அம்பிகைக்கு வளையல்கள் வழங்கி சார்த்துவதும், வளையல் காப்பு அலங்காரத்தை தரிசனம் செய்வதும் – அற்புதமான பலன்களை வாரி வழங்கக் கூடியது.

12-Andalஆண்டாள் வாழித்திருநாமம்

      திரு ஆடிப்பூர நாளில் பிறந்த கோதை-திருப்பாவை-30 உலககிற்கு அளித்தவள்-பெரியாழ்வார் கண்டெடுத்த பெண்பிள்ளை-ஸ்ரீபெரும்புதூர் மாமுனி யின் (ராமாநுஜரின்) தங்கை- நாச்சியார் திருமொழி 143 பாசுரங்கள் சொன்னவள்-அரங்கனை தமக்குரியவனாக ஆக்கிக்கொண்டவள்-மல்லி (ஸ்ரீவில்லிபுத்தூர்)-என்னும் வன்மை-இளமை தங்கிய ஸ்ரீவில்லிபுத்தூரில் உதித்த மங்கையின் தாமரைத் திருவடிகள் வாழ்க!
திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே!
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே!
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!
ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!
உயரரங்கர்க் கேகண்ணி யுகந்தளித்தாள் வாழியே!
மருவாரும் திருமல்லி வளநாடு வாழியே!
வண்புதுவை நகர்க்கோதை மலர் பதங்கள் வாழியே!
     ####################################################
*திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே!(ஆடிபூரம் அவதாரம்)
*திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே! (திருப்பாவை-30)
*பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே!(பெரியாழ்வார் மகள்)
*பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!(இராமாநுஜர் தங்கை)
*ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!(நாச்சியார்திருமொழி-143)
*உயரரங்கர்க் கேகண்ணி யுகந்தளித்தாள் வாழியே!(அரங்கனைகொண்டவள்).
*மருவாரும் திருமல்லி வளநாடு வாழியே!(ஸ்ரீவில்லிபுத்தூர்)
*வண்புதுவை நகர்க்கோதை மலர் பதங்கள் வாழியே!(ஸ்ரீஆண்டாள்)
ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்
     &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
(1) திவ்யபிரபந்த பாடல் வரிசைக்கு please CLICK below
(2) Please go to CONTENTS for all the Articles in HRE: please CLICKbelow
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

HRE-22:பிரசித்தி பெற்ற{பஞ்ச பூத, ஜோதிர்லிங்க & முக்தி தரும்) சிவ தலங்கள்


(I)பஞ்ச பூத தலங்கள்-5 (TN=4 ; AP=1)

(A)நிலம்-பிருத்வி தலம் – காஞ்சி: {ஏகாம்பரநாதர் ; ஏகாம்பரேஸ்வரர்) & காமாட்சி (ஏலவார்குழலி)
     காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கம் மூலஸ்தானமாகும். அம்பாள் கட்டியணைத்தற்கான தடம் லிங்கத்தில் உள்ளது.
(A) Ekabreswarar(B)நீர்-அப்புத்தலம்- திருவானைக்கா: ஜம்புகேசுவரர் & அகிலாண்டேஸ்வரி
        ஒரு வெண் நாவல் மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. சிவகணங்களில் இருவர் தாங்கள் பெற்ற சாபம் காரணமாக இக்காட்டில் ஒரு யானையாகவும், சிலந்தியாகவும் பிறந்தனர்.
       சிவலிங்கம் கூரையில்லாமல் கிடந்தது. சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெய்யில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின் மேல் விழாமல் காத்தது.(B) Jabukeswarar         யானை காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை சிலந்தி பின்னிய வலையை அசிங்கமாகக் கருதி அதை அழித்துவிட்டுச் செல்லும். சிலந்தி மறுபடியும் வலைபின்னி தன் வழிபாட்டைத் தொடரும்.
      தினந்தோறும் இது தொடர, யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி யானையின் துதிக்கையில் புக, யானையும், சிலந்தியும் போராட கடைசியில் இரண்டும் மடிந்தன. இவைகளின் சிவபக்திக்கு மெச்சி சிவபெருமான் யானையை சிவகணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார்.
(C) அக்னி தலம்-திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர், அண்ணாமலையார் & அபீதகுஜாம்பாள், உண்ணாமுலையம்பாள்
     அருணகிரி நாதரின் வாழ்வில் அருள் திருப்பம் ஏற்படக் காரணமாக இருந்த பதி.ரமண மகரிஷி தவம் இருந்து அருள் பெற்ற தலம். (ரமணர் ஆசிரமம் இத்தலத்தில் உள்ளது).
(C) Anamali
(D)காற்று, 
வாயு தலம் – திருக்காளத்திகாளகத்தீசுவரர் & ஞானபிரசுனாம்பிகை.
        இது சீகாளத்தி எனவும் கூறப்பெறும். சிலந்தி, பாம்பு, யானை இவை மூன்றும் வழிபட்டு வீடுபேறு அடைந்த தலம் ஆதல் பற்றி இப்பெயர் எய்திற்று என்பர். (சீ = சிலந்தி, காளம் = பாம்பு, அத்தி = யானை)
(D) KathiNathar(E)ஆகாயதலம்- சிதம்பரம்: நடராஜர் & சிவகாமசுந்தரி
      மனிதரின் உடம்பும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராசர் கோயில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுக்களைக் (கோசங்கள் என்னும் கொண்டது. அதற்கு ஈடாக சிதம்பரம் நடராசர் கோவிலில் ஐந்து திருச்சுற்றுகள்.
       மனிதருக்கு இதயம் இடப்புறம் அமைந்திருக்கிறது. அதேபோல அக்கோயிலில் மூலவர் இருக்கும் கருவறை கோயிலின் நடுப்புள்ளியில் இல்லை. இடதுபுறமாகச் சற்று நகர்ந்து இருக்கிறது.
    ஒரு மனிதர் ஒரு நாளைக்கு 21,600 முறை இதயத்தில் உதவியால் மூச்சுவிடுகிறார். கோயிலின் கருவறையின் மீதுள்ள கூரை 21600 ஓடுகளால் வேயப்பட்டு இருக்கிறது.
      மனிதருக்குள் 72000 நாடிகள் ஓடுகின்றன. அதேபோல அக்கூரையில் 72000 ஆணிகள் அறையப்பட்டு உள்ளன. இதயத்தின் துடிப்பே நடராசரின் நடனமாக உருவகிக்கப்பட்டு இருக்கிறது

(E) Chid-Natarajar(II)ஜோதிர்லிங்க தலங்கள்-12 (TN=1 ; AP=1;Guj=1;Maha=5;MP=2;UP=2)

       ஒளிமயமான லிங்கம் என்னும் பொருள் . இந்தியாவில் 12 சோதிலிங்கத் திருத்தலங்கள் உள்ளன.
      திருவாதிரை நட்சத்திர நாளில் சிவன் தன்னை சோதிலிங்க வடிவில் வெளிப்படுத்தியதாக நம்புகிறார்கள். இதனால் திருவாதிரை நாள் சோதிலிங்கத்தை வணங்குவதற்கு உரிய சிறப்பு நாளாகக் கருதப்படுகிறது.
       பொதுவாக சோதிலிங்கத்துக்கும், பிற லிங்கங்களுக்கும் இடையே எவ்வித தோற்ற வேறுபாடுகளும் தெரிவதில்லை. எனினும், உயர்ந்த ஆன்மீக நிலையை அடைந்தவர்கள் புவியைத் துளைத்துக் கிளம்பும்தீப்பிழம்பாக சோதிலிங்கத்தைக் காண்பார்கள்.
 (i) சோமநாதம்-குஜராத்-சோமநாதர் & பார்வதி, சந்திரபாகா
i      கடற்கரை தலம். சந்திரன் சாபம் தீர்த்த தலம். அமாவாசை கூடிய திங்கட்கிழமை தரிசனம் மிகவும் சிறப்பு.
(ii) வைத்தியநாதம்-மகாராஷ்டிர:வைத்தியநாதர் & தையல்நாயகி
iiதிருமாலின் லீலையால் ராவணன் கொண்டுவந்த லிங்கம் தங்கி விட்ட தலம்.
(iii) பீமசங்கரம்-மகாராஷ்டிர: பீமாசங்கரர் & கமலாட்சிபச்சிஷ்டா தேவி
iiiகருவறைக்கு முன் நந்திக்கு பதில் ஆமை. அவசரப்படாமல் வழிபட வேண்டும்.
(iv) நாகேசம்-மகாராஷ்டிர-நாகநாதர் & நாகேஸ்வரி
ivதெற்கு நோக்கிய லிங்கம். நாமதேவர் வணங்குவதற்காகத் திரும்பிய கோலம்
(v) த்ரயம்பகம்-மகாராஷ்டிர:திரியம்பகேஸ்வரர் & ஜடேசுவரி
vகருவறையில் எப்பொழுதும் நீர் ஊறுகிறது. சிவனே மலையாக இருப்பதாக தலம், கோதாவரி உற்பத்தி ஸ்நானம்
(vi) குஸ்மேசம்-மகாராஷ்டிர:குஷ்மேஸ்வரர் (குங்குமணேசுவரர், கிருஷ்ணேஸ்வரர்) & குங்குமணேசுவரி
viஅம்பிகை குங்குமப்பூவால் வழிபட்ட தலம். (குஸ்ருணம்=குங்குமம்) .
(vii) ஸ்ரீசைலம்-ஆந்திராமல்லிகார்ஜுனர், பர்ப்பதநாதர் , ஸ்ரீசைலநாதர், & பிரமராம்பாள்,
    சிலாதர் என்ற மகரிஷி குழந்தை வரம் வேண்டி சிவனைக்குறித்து தவம் இருந்தார். சிவனின் அருளால் நந்தி, பர்வதன் என்ற இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகளைப் பார்க்க சனகாதி முனிவர்கள் வந்தனர். அவர்கள், நந்திதேவர் சில காலம் தான் பூமியில் வாழ்வார் என சிலாதரிடம் தெரிவித்தனர்.
vii         சிலாதர் மிகவும் வருந்தினார். நந்தி,”தந்தையே!நான் சிவனைக்குறித்துக் கடும் தவம் இருந்து சாகா வரம் பெறுவேன்” என்றார். தவத்தில் மகிழ்ந்த சிவன், நந்தியை தன் வாகனமாக்கியதுடன், அவரது அனுமதியின்றி யாரும் தன்னைக் காண வர முடியாது என்று உத்தரவும் பிறப்பித்தார்.
       நந்தி தவம் செய்த “நந்தியால்” என்ற இடம் மலையின் கீழே உள்ளது. பர்வதனும் தவமிருந்தான். சிவபெருமான் பாதம் எப்போதும் தன் மீது இருக்க வேண்டும் என்ற வரம் பெற்றான். ஆதன்படிப் பர்வதனை ஒரு மலையாக ஆக்கி ஸ்ரீ பர்வதம் என்னும் பெயரிட்டு தாம் சிவலிங்கமாக அம்மலையின் மீது அமர்ந்து எழுந்தருளினார்.ஸ்ரீபர்வதமே நாளடைவில் ஸ்ரீசைலம் என வழங்கலாயிற்று. சைலம் என்றால் மலை எனப்பொருள்படும்.
     சிலாதமுனிவர் தவம் செய்தமையால் இம்மலை சிலாத முனி மலை எனப்பெயர் பெற்று நாளடைவில் ஸ்ரீ சைலம் எனப் பெயர் மருவிவிட்டது எனவும் கூறப்படுகிறது.
      மல்லிகாபுரி என்ற பகுதியை ஆண்ட சந்திரகுப்தனின் மகள், சந்திரரேகா மல்லிகைப்பூவாலும், அர்ஜுனா மலர்களாலும் இறைவனைப் பூஜித்து வந்தாள். இதனால் இங்குள்ள இறைவன் “மல்லிகார்ஜுனர்” எனப்படுகிறார்.
(viii) ஓங்காரம்-மத்தியப் பிரதேசம்:ஓம்காரேஷ்வரர் & அமலேஸ்வரி
viii  மலைமுகட்டில் சுயம்புலிங்கம். பாணாசுரன் ஒவ்வொரு நாளும் 2000 லிங்கங்களை பூஜித்து நர்மதை நதியில் விடப்பட்டவையே சாளக்கிராமங்களாக மாறியதாக வரலாறு
(ix)உஜ்ஜையினி-மத்தியப் பிரதேசம்:மகாகாளேஸ்வரர்&சங்கரி, ஹரசித்திதேவி,
ix     கார்த்திகை பவுர்ணமி தரிசனம் விசேஷம். 5 அடுக்கு கோயில். தோல்வியாதிகளை நீக்கும் கோடித் தீர்த்தம்.
(x) விச்வேசம் (வாரணாசி)-உத்திரப் பிரதேசம்:விஸ்வநாதர் & விசாலாட்சி
x       இங்கு இறப்பவருக்கு ஈசனே தாரக மந்திரம் ஓதுகிறார். தாங்களே அபிஷேகம் செய்யலாம். சிவராத்திரி தரிசனம் விஷேசம். ராமேஸ்வரத்திலிருந்து கொண்டு வந்த மணலை த்ரிவேணியில் கரைப்பது வழக்கம்.
(xi) கேதாரம்-உத்திரப் பிரதேசம்:கேதாரீஸ்வரர் & கேதார கவுரி
xiஇமயமலையில் பனிலிங்கம். அம்மன் ஈசனின் இடப்பாகம் பெற்ற தலம். 6 மாத மானிட பூஜை. 6 மாதம் தேவ பூஜை.
(xii) இராமேசுவரம்-தமிழ்நாடுராமநாதர்-பர்வத வர்த்தினி
        சிவபக்தனான ராவணனை அழித்ததால் ராமருக்கு பிரம்மஹத்திதோஷம் உண்டானதுதோஷம் நீங்க ராமேஸ்வரம் கடற்கரையில் சிவபூஜை செய்ய விரும்பினார்இதற்காக சிவலிங்கம் கொண்டு வரும்படிஆஞ்சநேயரை அனுப்பினார்அவர் வர தாமதமாகவேசீதை கடற்கரைமணலில் லிங்கம் அமைக்க,ராமர் அந்த மணல் லிங்கத்தை பூசித்தார்.

xii

      கங்கை நீரை கொண்டு அபிஷேகிப்பது வழக்கம். இங்கு மட்டும் கடலில் எந்நாளும் என்நேரமும், நீராடலாம். ஆஞ்சனேயர் கொண்டு வந்த லிங்கத்திற்கும், சீதை மணலால் செய்த லிங்கத்திற்கும் ராமர் பூஜை செய்தது சிறப்பு

(III) முக்தி தர வல்ல சிவலங்கள்:7(TN=6 ; UP=1)

  1. திருவாரூர்பிறக்க முக்தி –தியாகராஜர்(வன்மீகநாதர்) & கமலாம்பிகை
1
  1. சிதம்பரம்தரிசிக்க முக்தி : நடராஜர் & சிவகாமசுந்தரி
2
  1. திருவண்ணாமலைநினைக்க முக்தி : அருணாசலேஸ்வரர், அண்ணாமலையார் & அபீதகுஜாம்பாள் (உண்ணாமுலையம்பாள்)
3
  1. காசிஇறக்க முக்தி –விஸ்வநாதர் & விசாலாட்சி
         இவ்வூருக்கு வாரணாசிபனாரஸ், ஆனந்த பவனம், அபிக்தம்,மகாமயானம் ஆகிய பெயர்களும் உள்ளன.
4            புதன் காசிவிஸ்வநாதரைப் பூஜித்ததன் பயனாக நவக்கிரக பதவி பெற்றார். மாணவர்கள் காசிவிஸ்வநாதரை வழிபாடு செய்வது சிறப்பாகும்.
       சூரியனின் புத்திரர்கள் எமனும், சனி பகவானும் சிவபெருமானை நோக்கி இப்பதியில் தவம் செய்து, எமன் தென்திசைக் காவலனாகவும், எமலோகத்திற்கு அதிபதியாகவும், சனிதேவன் நவக்கிரகங்களில் கிரகமாகப் பதவி பெற்றார்.
5. காஞ்சிவாழ முக்தி-{ஏகாம்பரநாதர் (ஏகாம்பரேஸ்வரர்) & காமாட்சி (ஏலவார்குழலி)56.மதுரைசொல்ல முக்தி-மீனாட்சி சுந்தரேசுவரர்7
  1. அவிநாசிகேட்க முக்தி-தட்சிண வாரணாசி (கோயமுத்தூர்) அவிநாசியப்பர் & கருணாம்பிகை
7&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
##################################################

































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக