வியாழன், 22 அக்டோபர், 2015

சரஸ்வதியின் பிற வடிவமும் சிறப்பும்.

ராதே கிருஷ்ணா 22-10-2015







சரஸ்வதியின் பிற வடிவமும் சிறப்பும்..

22-10-2012-போஸ்ட்

வளையல் அணியும் சரஸ்வதி: நாகை மாவட்டம் கடலங்குடி சிவாலயத்தில் சரஸ்வதி வளையல்கள், கொலுசுகள், முத்துச்சரங்கள், நெற்றிப்பட்டம், கிரீடம் ஆகியவற்றுடன் சகல ஆபரண பூஷணியாகக் காட்சியளிக்கிறாள்.

கலஞ்சன்: இந்தோனேஷியாவிலும், பாலித்தீவிலும் புத்தகங்களை அலங்கரித்து பூஜிக்கும் வழக்கம் இருக்கிறது. இப்பூஜைக்கு கலஞ்சன் என்று பெயர். விஜயதசமி நாளில் பாலித்தீவில் தம்பாத்ஸைரிம் என்னும் குளத்தில் நீராடி புத்தகங்களை வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம் என்று மக்கள் நம்புகிறார்கள்.

மாணவி வடிவில் சரஸ்வதி: சிருங்கேரியில் ஆதிசங்கரர் சாரதாம்பாளை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இங்கு தற்போதும் தேவி ஒரு மாணவியைப் போல் படிக்கின்ற கோலத்தில் அமர்ந்திருக்கிறாள். கைகளில் சுவடி, ஜபமாலை, கெண்டி, ஞானமுத்திரை கொண்டு சர்வ ஆபரணங்களுடன் பத்மாசனத்தில் காட்சி தருகிறார். இங்கு சாரதா நவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

லட்சுமியின் வாகனம் ஆந்தை: வங்க தேசத்தில் லட்சுமியின் வாகனமாக ஆந்தையைப் போற்றி வழிபடுகின்றனர். நவராத்திரி நாட்களில் தங்களது வீட்டு மேற்கூரையில் ஆந்தை அமர்வது அதிர்ஷ்டம் என்கின்றனர். ஆந்தை குரல் எழுப்பினால் சுபகாரியங்களுக்கு திருமகள் சம்மதம் தெரிவித்து விட்டதாக நம்புகின்றனர்.

ஒரு மணி நேரம் மட்டும் தாயாரைப் பிரியும் பெருமாள்: உப்பிலியப்பன் கோயிலில் பெருமாள் தாயாரை விட்டு எங்கும் பிரிவதில்லை. எல்லா விழாக்களிலும் சேர்ந்தே காட்சி தருவாராம். ஆனால் நவராத்திரி அம்பு போடும் வைபவத்தின்போது ஒரு மணி நேரம் மட்டும் தாயாரைப் பிரிந்து தனியே இருப்பாராம்.

ஞான சரஸ்வதி: வேதகாலத்து தெய்வங்களுள் சரஸ்வதி தேவியும் ஒருத்தி. ரிக்வேதம் தோன்றிய காலத்தில் அவள் நதி தேவதையாகத்தான் போற்றப்பட்டாள். வங்காளத்தில் கங்கை மற்றும் சரஸ்வதி நதியை தெய்வமாகக் கொண்டாடுகிறார்கள். பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவராலும் சரஸ்வதிக்கு சிறப்பு உண்டு. நதிகளுள் உயர்வானது சரஸ்வதி; தேவியருள் உயர்வானவள் சரஸ்வதி என்று போற்றுகிறது ரிக் வேதம். யாகங்கள் செய்யப்பட்டு வந்த போதெல்லாம் கூட சரஸ்வதி தேவி ஒரு முக்கிய தேவதையாகப் போற்றப்பட்டு வந்திருக்கிறாள்.

காலப்போக்கில்தான் சரஸ்வதி தேவியானவள் ஞான சரஸ்வதி -சொல்லின் செல்வி-வித்தைக்குரிய தேவதை என்றெல்லாம் பொறுப்புகளைப் பெற்றாள். வேதகாலத்தில் சரஸ்வதி இடா, பாரதி ஆகிய இரண்டு வாக் தேவியருடன் இணைத்து வணங்கப்பட்டு வந்திருக்கிறாள். கலையின் முப்பெரும் தேவிகள் என்று அம்மூவரையும் போற்றி வந்தார்கள். கந்தர்வர்களும், தேவர்களும்கூட பாடல்களைப் பாடி கலைவாணியின் அருளைப்பெற முனைந்தனர் என்பது புராணம். இவையெல்லாம் நதிதேவதையான சரஸ்வதி எவ்வாறு படிப்படியாக கலை மகளாக உருப்பெற்றாள் என்பதைக் காட்டுகிறது.

வெள்ளாடை உடுத்தி, வெண் ஆபரணங்கள் தரித்து, வெண்தாமரையில் இவள் தோன்றுவதாகக் காட்டுவது, தூய்மைக்குக் குறியீடு. சரஸ்வதியின் வாகனம் அன்னப்பட்சி என்றாலும் சிங்கமும் இவளது வாகனமாக வடநாட்டுக் கோயில் சிற்பங்களில் வடிக்கப்பட்டுள்ளது. தென்னாட்டில் சரஸ்வதிக்கு மயிலையும் வாகனமாக அமைத்துள்ளனர். சந்தியா வந்தனம் செய்யும் போது காயத்ரி தேவியைக் காலையிலும், சாவித்ரியை மத்தியானத்திலும், சரஸ்வதியை சாயங்காலத்திலும் வணங்க வேண்டும் என்பது முறை. வாணி, வாக்தேவி என்றெல்லாம் குறிப்பிடப்படும் கலைமகளை வழிபடுவோர், கலையில்-வித்தையில்-ஞானத்தில்-மேம்பட்டு விளங்குவர்!




மூகாம்பிகா - கொல்லூர்






மகாபகவதி - கொடுங்களூர்





பாலாம்பிகா - கன்னியாகுமரி





தமிழ்நாடு ஆன்மிகம் added 3 new photos.
March 20
பஞ்சபகவதி ஷேத்திரங்கள் :
பரசுராமர் ஸ்தாபித்த தேவி ஸ்தலங்கள் ஐந்தாகும் . ஐந்தும் பஞ்சபகவதி ஷேத்திரங்கள் என அழைக்கப்படுகின்றன .அவை
1) மூகாம்பிகா - கொல்லூர் 
2) ஹேமாம்பிகா - பாலக்காடு (ஓலவக்கோடு)
3) லோகாம்பிகா - வடகரை
4) மகாபகவதி - கொடுங்களூர்
5) பாலாம்பிகா - கன்னியாகுமரி
















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக