வெள்ளி, 30 அக்டோபர், 2015

திருசெந்தூர் முருகன் கோவிலின் சிறப்பு பிரசாதம் இலை விபூதி.

ராதே கிருஷ்ணா 31-10-2015







திருப்பதிக்கு லட்டு, பழனிக்கு பஞ்சாமிர்தம்....
என்கிற வரிசையில் திருசெந்தூர் முருகன் கோவிலின் சிறப்பு பிரசாதம் இலை விபூதி. பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவது தான் இது. எந்த கோவிலிலும் இப்படி வழங்குவது இல்லை.
ஆதி சங்கரர் இந்த இலை விபூதியை உண்டு காச நோயை நீக்கிக்கொண்டதாகவும், அதனாலேயே அவர் ஸ்ரீசுப்பிரமணிய புஜங்கம் பாடியதாகவும் கூறப்படுகிறது.
இன்றும் இந்த விபூதி இலை தீராத பல நோய்களை தீர்க்கும் அருமருந்தாக விளங்கி வருகிறது. திருசெந்தூர் செல்பவர்கள் இதை தவறரது பெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
திருச்செந்தூரில் முருகன் சன்னதியில் விபூதி, சந்தனப் பிரசாதத்தை பக்தர்களுக்குத் தரும்போது, பன்னீர் இலையில் தான் தருவார்கள். முருகன் ஒருபக்கத்திற்கு ஆறு கரங்கள் என 12 கரங்கள் கொண்டவன்.
அது போலவே பன்னீர் மரத்தின் இலைகளிலும் ஒரு பக்கத்திற்கு ஆறு நரம்புகள் என ஈராறு பனிரெண்டு நரம்புகள் இருக்கும். பன்னீருக்கரத்தான் முருகனை சென்று வணங்கும் பக்தர்களுக்கு அவன் தனது பன்னீருதிருக்கரங்களாலேயே இங்கு விபூதி, சந்தன பிரசாதத்தை வழங்குவதாக ஐதீகமாகும். அதனால் இது பன்னீர் செல்வம் என்று பக்தர்களால் சொல்லப்படுகிறது.
பன்னீரு இலை விபூதி மகிமை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு பன்னீ(னி)ரு இலை விபூதி பிரசாதம் காலம் காலமாக வழங்கப்பட்டு வருகிறது. இலை விபூதியின் மகத்துவம்
அபிநபகுப்தர் என்ற சித்தர் ஒருவர் கெடுதல் செய்யும் நோக்கத்தில் ஆதிசங்கரருக்கு செய்வினை, ஏவல், பில்லி, சூனியம் செய்தார். இதனால் சூலைநோய் உள்பட பல்வேறு நோய்களுக்கு ஆதிசங்கரர் உட்பட்டார். மனமுடைந்த ஆதிசங்கரர் இறைவனை நாடி மனமுறுக வேண்டினார். இருந்தும் அவருக்கு நோய் குணமாகவில்லை. அவர் ஒவ்வொரு கோவிலாக சென்று இறுதியாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு வந்து மனமுறுக வேண்டினார். அப்போது ஆதிசங்கரர் கையில் பன்னீரு இலை விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. பிரசாதத்தை உடலில் பூசிக், அதை உள்கொண்டார். சில நாட்களில் அவரை தொற்றி இருந்த நோய்கள் அனைத்தும் முற்றிலும் குணமடைந்தது.
அதன் பின்னர் ஆதிசங்கரர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மீது அதிக பற்று கொண்டு மனமுறுகி 32 பாடல்கள் கொண்ட சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகம் பாடினார். அந்த 32 பாடல்களும் கோவிலில் சிறப்பு, சுவாமியின் பெருமை போன்றவை குறித்து இருந்தது. அதில் 25வது பாடலில் இலை விபூதியின் மகிமை பற்றி பெருமை பட பாடினார்.
சுப்பிரமண்யா! நின் இலை விபூதிகளை கண்டால் கால் கை வலிப்பு, காசம், கயம், குட்டம் முதலிய நோய்கள் நீங்கும். பூதம், பிசாசு, தீவினை யாவும் விட்டு விடும் என்று சுப்பிரம்மண்ய புஜங்கத்தில் ஆதிசங்கரர் செல்லி இருக்கிறார்.
பன்னீர் இலை என்பதற்கு அர்த்தம். இலையில் மொத்தம் 12 நரம்புகள் இருக்கும். முருக பெருமான் தனது 12 கரங்களால் இந்த பிரசாதத்தை வழங்கியதால் இந்த பன்னீர் இலையில் முருக பெருமானின் பன்னிரு கைகள் போன்று இருக்கும். பன்னிரு இலை என்ற பெயர் காலப்போக்கில் மருவி பன்னீர் இலை என்று கூறப்படுகிறது.
முருக பெருமானை பூஜித்த தேவர்கள் அனைவரும் இந்த பன்னீர் மரங்களாக இருப்பதாகவும், அதில் இருந்து இருந்த பெறப்படும் பன்னீர் இலைகள் பிரசாதமாக வழங்கப்படுவதால் அதற்கு தனி மகத்துவம் இருப்பதாக கருதப்படுகிறது.
இந்த பன்னீர் இலை விபூதி பிரசாதம் தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின் போது சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக திருச்செந்தூர் கோவிலில் இந்த இலை விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.
இந்த இலையை நேராக வைத்து பார்த்தால் முருக பெருமானின் வேல் போன்று காட்சி அளிக்கும்.
1.பன்னீர் இலையில் உள்ள பூவில் உள்ள சாந்த குண சக்தி நிறைவாக உள்ளது. அது நமது உடலுக்குச் சில நன்மைகளைத் தருகிறது என்று சித்தவைத்தியம் கூறுகிறது.
2.இறைவனுடைய பூஜைக்குறியது துளசி வில்வ இலை, வன்னி இலை. அதே போல் இறைவனுடைய பூஜைக்குரியதாகப் பன்னீர் இலை உள்ளது.
3.பன்னீர் இலையில் உள்ள 12 நரம்புகள் முருகப்பெருமானின் பன்னிரு திருக்கரங்களுச் சமம் என்று கூறுவர். 4.திருவாடுதுறை திருப்பனந்தாள் குரு மகாசந்நிதானங்கள் நடராஜப் பெருமானை வணங்குவோர்க்குப் பன்னீர் இலையில் விபூதிப் பிரசாதம் வழங்கி வருகிறார்கள்.
5.திருநீற்றைப்ப பன்னீர் இலையில் பத்திரமாக வைத்துக் கொள்வது செல்வத்தைச் சேமிப்பது போலாகும் என்று பக்தர்கள பன்னீர் இலை வீபூதியைப் பக்தியுடன் பத்திரமாக வைத்துக் கொள்கிறார்கள்.
6.பக்தர்கள் பன்னீர் இலை விபூதியுடன் இலையையும் உண்டு நோய்களிலிருந்து குணமடைகிறார்கள். அருளாளர் ஆதிசங்கரர் நோய் நீக்கும் உண்மையையும் பெருமையையும் வல்லமையையும் தனது பாடல்களில் எடுத்தியம்புகிறார். 7.பன்னீர் இலை விபூதியைப் பக்தர்கள் இல்லங்களுக்கு எடுத்துச் சென்று பூஜை அறைகளில் பத்திரப்படுத்தி வியாதிகள் வந்தால் செந்தில் முருகனை வேண்டி அணிந்து கொள்கிறார்கள். ஆடு, மாடுகள் நோய் கண்டால் நோய் நீங்க வழிபட்டுப் பன்னீர் இலை விபூதியினை மருந்தாகக் கொடுத்து நோய் நீங்கியதும் திருச்செந்தூர் முருகனுக்குக் காணிக்கையாக ஆடு மாடுகளைச் செலுத்திகிறார்கள். பன்னீர் இலை விபூதியினை மருந்தாக் கொடுத்து நோய் நீங்கியதும் திருச்செந்தூர் முருகனுக்குக் காணிக்கையாக ஆடு மாடுகளைச் செலுத்துகிறார்கள். பன்னீர் இலையும் நற்சந்தனமும் பக்தர்களுக்கு வழங்கபபடுகிறது.
"அபஸ்மார குஷ்டக்ஷ்யார்ச ப்ரமேஹ
ஜ்வரோந்மாத குல்மாதிரோகா மஹாந் தஹ
பிசாசஸ்ச சர்வே பவத் பத்ரபூதிம்
விலோக்ய க்ஷணாத் தாரகாரே த்ரவந்தே"
பொருள்
"தாரகாசுரனை வதம் செய்தவனே! வலிப்பு, காசம், குஷ்டம், சுரம், மேகவெட்டை, குடல்புண், புற்றுநோய், பிசாசு மற்றும் மனப்பயம் எனும் நோய்களனைத்தும் பன்னீர் இலையில் வைத்துத் தரப்படும் உன் திருநீற்றைப் பார்த்த மாத்திரத்தில் பறந்தோடி மறைந்துவிடும்."
ஆதி சங்கரர், திருச்செந்தூரில் பாடிய சுப்ரமண்ய புஜங்கத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார். பார்த்த மாத்திரத்திலேயே நோய்களைப் பறக்கடிக்கும் என்று அவர் குறிப்பிடும் 'பத்ர பூதி' என்பது என்ன?
விபூதியின் வரலாறு
'பத்ர' என்பது இலை. பூதி என்பது நீறு. செந்திலாண்டவன் திருக்கோயிலில் இறைவனது பிரசாதமாகிய திருநீறு, பன்னீர் இலையில் வைத்துத் தரப்படுகிறது. இதன் மணமே தனித்தன்மை உடையதாக இருக்கும்.
இலையினால் விபூதியின் மணம் இன்னும் அதிகரிக்கிறதோ என்று கூடத் தோன்றுகிறது. என்னவானாலும் சரி, இலை விபூதியில் செந்திலாண்டவனின் அருள் மணம் வீசுகிறது என்பதுதான் நிஜம்.
இலை விபூதியின் வரலாறு, என்னவென்று பார்ப்போம். செந்தூரில் சூரபத்மாதியர்களை ஒடுக்கிவிட்டு கடற்கரையில் கலங்கரை விளக்கம் போன்று ஒளி வீசி நின்றான் முருகப் பெருமான். அவனது பெருமையைத் துதித்த வேதங்களனைத்தும் ஒன்று சேர்ந்து செந்திலோனின் மகிமையை விளக்கும் பன்னீர் மரங்களாக இவ்விடத்தில் தோன்றின.
எனவே இவற்றின் இலைகளும் வேத மந்திர சக்தியை உடையவை என்கிறது புராணம். பன்னீர் இலையில் பத்திரப்படுத்தப்படும் விபூதியிலும் வேத மந்திர சக்திகள் நிறைந்து விடுகின்றன.தவிர, பன்னீர் இலையில் காணப்படும் 12 நரம்புகள் முருகனது பன்னிரு கரங்களை நினைவூட்டுவனவாக அமைந்துள்ளன.
தாடகை எனும் பெண்ணை ராமபிரான் மூலமாக வதம் செய்த காரணத்தினால் தனக்கு ஏற்பட்ட குன்மம் முதலான நோய்கள் தீர, ராமபிரான் தன் கனவில் கூறியபடி, செந்திலாண்டவன் இலை விபூதியைத் தரித்துக் கொண்டு நோய்கள் நீங்கப் பெற்றார் விசுவாமித்திர மகரிஷி.
ஆதி சங்கரரும் செந்திலாண்டவனின் நீறும்
ஆதி சங்கரரது வாழ்விலும் இலை விபூதி மகிமையை விளக்குவதான ஒரு சம்பவம் ஏற்பட்டது. அவருடன் ஏற்பட்ட வாதங்களில் தோற்ற அபிநவகுப்தர் என்பவர், ஆபிசார வேள்வி செய்து சங்கரருக்கு உடலை வருத்தும் நோய் உண்டாகச் செய்து விட்டார்.
அக்காலத்தில் அவர் வட கர்நாடகாவிலுள்ள கோகர்ணத் திருத்தலத்தில் தங்கி வழிபாடு செய்து வந்தார். ஒரு நாள் இரவு, இறைவன் அவர் கனவில் தோன்றி, "என் குமாரன் ஷண்முகன் குடியிருக்கும் புண்ணியத் தலமான செயந்திபுரம் எனும் திருச்செந்தூர் சென்று அவனைத் தரிசித்தால் உன் நோய் முற்றிலுமாக நீங்கப் பெறுவாய்" என்று கூறினார். உறங்கி எழுந்து பார்த்த சங்கரரின் அருகில் விபூதி இருந்தது.
கோகர்ணேஸ்வரர் ஆணைப்படி, செந்தூர் வந்தடைந்தார், ஆதிசங்கரர். கடலில் நீராடி, பின் இறைவன் சன்னதியில் மனமுருகி நின்றபோது, ஆதிசேஷனாகிய பாம்பு ஊர்ந்து ஊர்ந்து இறைவன் சன்னதியை அடைந்ததைக் கண்டார். அதே நேரம் அவருக்கும் இறை தரிசனம் கிட்டியது.
அவன் அருளாலே, மடை திறந்த வெள்ளம் போல அவர் திருவாயிலிருந்து சுலோகங்கள் வெளிவந்தன. வடமொழியில் பாம்பைப் புஜங்கம் என்பர். வடமொழி இலக்கணப்படி, புஜங்க விருத்தமாக அமைந்தன பாடல்கள். பாடி முடித்து இலை விபூதியைப் பெற்று அணிந்து கொண்ட சங்கரருக்கு வெகு விரைவில் நோய் குணமாயிற்று.
தெய்வ அவதாரமாகக் கருதப்படும் ஆதிசங்கரர் நினைத்திருந்தால், தானே நோயை விரட்டி இருக்க முடியும்.ஆனால் மானுட அவதாரத்தில், அத்துயரை, தானே அனுபவித்து உலகோருக்குப் பத்ர பூதியின் பெருமையை வெளிப்படுத்த அவர் நிகழ்த்திய திருவிளையாடலே இது என்று கூறலாம்.
விபூதியே கூலி
சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த ஸ்ரீலஸ்ரீ தேசிகமூர்த்தி தம்பிரானவர்கள் செந்தூர் மேலக் கோபுரத்தை நிர்மாணித்தார். பொருள் பற்றாக் குறை ஏற்படவே, கூலியாட்களுக்குக் கூலிக்குப் பதிலாக இலை விபூதியைக் கொடுத்து, தூண்டுகை விநாயகர் கோயிலைத் தாண்டிச் சென்றபின் திறந்து பார்க்கும்படிக் கூறினாராம். அதன்படி திறந்து பார்த்தபோது, தத்தம் வேலைக்குரிய கூலி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து மெய் சிலிர்த்தனர் என்கிறது கோயில் வரலாறு.
திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் பாடிய பகழிக் கூத்தர் வாழ்விலும் இலை விபூதி பெரும் அற்புதத்தை நிகழ்த்தியது. தீராத வயிற்று வலியால் துடித்த அவரது கனவில் கோயிலில் பூஜை செய்யும் உரிமையுடைய திரிசுதந்திரர் போல ஒருவர் தோன்றினார்.
"என் புகழைப் பிள்ளைத் தமிழால் பாடு, உன் நோய் குணமாகும்" என்று கூறி இலை விபூதியைக் கையில் கொடுத்திட்டு மறைந்தாராம். உரையாசிரியர் குகஸ்ரீ ரசபதி அவர்கள், திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் உரையில் இதுபற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
கந்தர் கலி வெண்பா பாடிய குமரகுருபரரின் சரித்திரத்தை எழுதியருளிய வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள், செந்தூர் ஆலயத்தில் அர்ச்சகர்கள் இலை விபூதிப் பிரசாதத்தை எடுத்து வழங்குவதைக் குமரகுருபரர், தான் கண்டபடி அழகாகப் பாடியுள்ளார்.
"இலையமில் குமரவேள் முன் வணங்குவார்க்கு என்றும் துன்பம்
இலை.அடுபகை சற்றேனும் இலை.படுபிணி நிரப்பும்
இலை,அளற்றுழன்று வீழ்தல் இலை,பல பவத்துச் சார்பும்
இலை என இலை விபூதி எடுத்தெடுத்துதவல் கண்டார்"
என்று பாடுகிறார்.
விபூதியின் மகிமையைப் பாடவந்த அருணகிரிநாதரும்,
"ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி
ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடும் அடியார்கள்
பதமே துணையதென்று..."
என்று பாடுகிறார். நாமும் "ஆறுமுகம்" என்று ஆறு முறை ஓதி இலை விபூதியைத் தரித்து செந்திலாண்டவன் திருவருளுக்குப் பாத்திரமாவோமாக.





















































செவ்வாய், 27 அக்டோபர், 2015

வேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா?

ராதே கிருஷ்ணா 28-10-2015





வேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா?
உத்தவர் கிருஷ்ணரிடம் கேட்டார் -- .கிருஷ்ணா! நீ முன்னதாகவே சென்று, 'தருமா! வேண்டாம்
இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன்
அப்படிச் செய்யவில்லை?
போகட்டும். விளையாட ஆரம்பித்ததும்,தருமன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து,வஞ்சகர்களுக்கு
நீதி புகட்டியிருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை. தருமன்
செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்; தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத் தண்டனையாக, அதோடு அவனை விட்டிருக்கலாம்.
தம்பிகளை அவன் பணயம் வைத்த போதாவது, நீ சபைக்குள்
நுழைந்து தடுத்திருக்கலாம்.அதையும் நீ செய்யவில்லை.'
திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம்வைத்து ஆடு.இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்’ என்று சவால் விட்டான் - துரியோதனன். அப்போதாவது, உனது தெய்வீக சக்தியால்,அந்த பொய்யான பகடைக்காய்கள் தருமனுக்குச் சாதகமாக விழும்படி செய்திருக்கலாம். அதையும் நீ செய்யவில்லை.
மாறாக, திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போதுதான் சென்று, ';துகில்தந்தேன், திரௌபதி மானம் காத்தேன்’என்று மார்தட்டிக் கொண்டாய்.
மாற்றான் ஒருவன்,குலமகள் சிகையைப் பிடித்து இழுத்து வந்து, சூதர்சபையில் பலர் முன்னிலையில், அவள் ஆடையில் கை வைத்த பிறகு, எஞ்சிய மானம் என்ன இருக்கிறது? எதனைக் காத்ததாக நீ பெருமைப் படுகிறாய்? ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத்பாந்தவன்? இந்த நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்? நீ செய்தது தருமமா?'
என்று கண்ணீர் மல்கக் கேட்டார் உத்தவர்.
பகவான் சிரித்தார். "உத்தவரே! விவேகம் உள்ளவனே ஜெயிக்க
வேண்டும் என்பது உலக தர்ம நியதி. துரியோதனனுக்கு இருந்த
விவேகம் தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன் தோற்றான்" என்றான் கண்ணன்.
உத்தவர் ஏதும் புரியாது திகைத்து நிற்க, கண்ணன் தொடர்ந்தான்.
"துரியோதனனுக்கு சூதாடத்தெரியாது.ஆனால், பணயம் வைக்க
அவனிடம் பணமும்,ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. 'பணயம்
நான் வைக்கிறேன். என் மாமா சகுனி, பகடையை உருட்டிச்
சூதாடுவார்’ என்றான் துரியோதனன். அது விவேகம்.
தருமனும் அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு,' நானும் பணயம் வைக்கிறேன். ஆனால், என் சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன் பகடைக்காயை உருட்டுவான்' என்று சொல்லியிருக்கலாமே? சகுனியும் நானும் சூதாடியிருந்தால், யார் ஜெயித்திருப்பார்கள்? நான் கேட்கும் எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக் காய்களில் போடத்தான் முடியுமா?
தருமன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும் தவறையும் செய்தான்.
'ஐயோ! விதி வசத்தால் சூதாட ஒப்புக் கொண்டேனே! ஆனால், இந்த விஷயம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மட்டும் தெரியவே கூடாது. கடவுளே! அவன்மட்டும் சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க வேண்டும்’ என்று வேண்டிக்கொண்டான். என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான் அங்கு வரக் கூடாதென
என்னிடமே வேண்டிக்கொண்டான்.
யாராவது தனது பிரார்த்தனையால் என்னைக் கூப்பிடமாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில் காத்துக் கொண்டு நின்றேன்.பீமனையும், அர்ஜுனனையும், நகுல-சகாதேவர்களையும் வைத்து இழந்தபோது, அவர்களும் துரியோதனனைத் திட்டிக் கொண்டும்,தங்கள் கதியை எண்ணி நொந்து கொண்டும் இருந்தார்களே தவிர,என்னைக் கூப்பிட மறந்து விட்டார்களே!
அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன்சென்று, திரௌபதியின் சிகையைப் பிடித்தபோது, அவளாவது என்னைக் கூப்பிட்டாளா? இல்லை.அவளும் தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து வாதங்கள் செய்து கொண்டிருந்தாளே ஒழிய, என்னைக் கூப்பிடவில்லை!
நல்லவேளை..துச்சாதனன் துகிலுரித்த போதும் தனது பலத்தால் போராடாமல், 'ஹரி...ஹரி...அபயம் கிருஷ்ணா! அபயம்’ எனக் குரல் கொடுத்தாள். பாஞ்சாலி. அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போதுதான் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன தவறு?" என்று பதிலளித்தான் கண்ணன்.
"அருமையான விளக்கம் கண்ணா! அசந்துவிட்டேன். ஆனால்,
ஏமாறவில்லை. உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?"
என்றார் உத்தவர்.
"கேள்" என்றான் கண்ணன்.
"அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ வருவாயா? நீயாக, நீதியை நிலை நாட்ட, ஆபத்துகளில் உன் அடியவர்களுக்கு உதவ வரமாட்டாயா?"
புன்னகைத்தான் கண்ணன். "உத்தவா, மனித வாழ்க்கை அவரவர் கர்ம வினைப்படி அமைகிறது. நான் அதை நடத்துவதும் இல்லை; அதில் குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும் 'சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில் நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே! அதுதான் தெய்வ தர்மம்" என்றான்.
"நன்றாயிருக்கிறது கிருஷ்ணா! அப்படியானால், நீ அருகில் நின்று,நாங்கள் செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக் குவித்து, துன்பங்களை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே?" என்றார் உத்தவர்.
"உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின் உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள். நான் சாட்சி பூதமாக அருகில் நிற்பதை நீங்கள் உணரும் போது, உங்களால் தவறுகளையோ தீவினை களையோ நிச்சயமாகச் செய்ய முடியாது. அதை நீங்கள் மறந்து விடும் போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச் செய்து விடலாம் என்று எண்ணுகிறீர்கள்.
பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள் நிகழ்வதும் அப்போதுதான். எனக்குத் தெரியாமல் சூதாடலாம் என்று தருமன் நினைத்தானே, அதுதான் அவனது அஞ்ஞானம். நான் சாட்சி பூதமாக எப்போதும், எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும் அல்லவா?" என்றான்
ஸ்ரீகிருஷ்ணன்.
உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தார். ஆகா!
எத்தனை ஆழமான தத்துவம்! எத்தனை உயர்ந்த சத்யம்!
பகவானைப் பூஜிப்பதும் பிரார்த்தனை செய்வதும், அவனை
உதவிக்கு அழைக்கும் ஓர் உணர்வுதானே! "அவனின்றி ஓர்
அணுவும் அசையாது" என்ற நம்பிக்கை வரும்போது, அவன்
சாட்சி பூதமாக அருகில் நிற்பதை எப்படி உணராமல் இருக்க
முடியும்? அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற முடியும்?
இந்த தத்துவத்தைதான் பகவத்கீதை முழுவதிலும் கண்ணன்
அர்ஜுனனுக்கு உபதேசித்தான்.
அர்ஜுனனுக்காகத் தேரைச் செலுத்தி வழி நடத்தினானே தவிர,
அர்ஜுனன் இடத்தில் தானே நின்று அவனுக்காகப் போராடவில்லை
அதுதான் பகவானின் மேன்மை!



































கோவிலில் செய்ய கூடாத சில தகவல்கள் ..........

ராதே கிருஷ்ணா 28-10-2015








கோவிலில் செய்ய கூடாத சில தகவல்கள் ..........

1.கோவிலில் தூங்க கூடாது ..
2.தலையில் துணி ,தொப்பி அணியகூடாது ...
3.கொடிமரம் ,நந்தி,பலிபீடம் ,இவைகளின் நிழல்களை மிதிக்க கூடாது ..
4.விளக்கு இல்லாமல் (எரியாத பொழுது )வணங்க கூடாது ..
5.அபிஷேகம் நடக்கும் பொழுது சுற்றி வரகூடாது ..
6.குளிக்காமல் கோவில் போககூடாது ...
7.கோவிலில் நந்தி மற்றும் எந்த முர்த்திகளையும் தொடகூடாது ..
8.கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டகூடாது..
9.மனிதர்கள் காலில் விழுந்து வணங்க கூடாது ...
10.கோவிலுக்கு சென்று திரும்பிய உடன் கால்களை கழுவ கூடாது..
11.படிகளில் உட்கார கூடாது .
12.சிவன் பெருமான் கோவில்களில் அமர்ந்து வரவேண்டும் ,பெருமாள் கோவில்களில் அமர கூடாது .
13.வாசனை இல்லாத மலர்களை பூஜைக்கு அல்லது தெய்வம்களுக்கு தர கூடாது .
14.மண் விளக்கு ஏற்றும் முன் அவைகளை கழுவி சுத்தம் செய்யாமல் ஏற்ற கூடாது .
15.கிரணம் இருக்கும் பொழுது கோவிலை வணங்க கூடாது .
16.கோவிலுக்கு சென்று விட்டு வெளியே வந்து தர்மம் செய்ய கூடாது .
17.புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில் நீரை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போடக்கூடாது
18.கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது.
19.தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது.
20. சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது.
21.தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்லக்கூடாது
22.எவருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் வைத்து பேசக்கூடாது..
கோவில் நூலில் இருந்து ......
 — with Thiyagaraja PandiyanAnginathan NathanMehnaga Sevanaisanand 39 others.






















































தனியன்கள்

ராதே கிருஷ்ணா 27-10-2015


தனியன்கள்


ஸ்ரீ சைலேச தயாபாத்ரம் தீபக்யாதி குணார்ணவம்

யதீந்த்ர பிரணவம் வந்தே ரம்யா ஜாமாத்ரம் முநிம்


லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் நாத யாமுத மத்யமாம்

அஸ்மதாசார்ய பர்யந்தம் வந்தே குரு பரம்பராம்



மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதி

ஸர்வம் ய தேவ நியமேன மத் அந்வயாநம்

ஆத்யஸ்யந: குலபதேர் வகுளாபிராமம்

ஸ்ரீ மத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்தா:



ராமாநுஜார்ய ஸச்சிஷ்யம் வேதசாஸ்த்ரார்த்த ஸம்பதம்

சதுர்தாச்ரம சம்பந்தம் தேவராஜம் முநிம் பஜே




ராமாநுஜார்ய ஸச்சிஷ்யம் ஸாளக்ராம நிவாஸினம்

பஞ்சமோபாய சம்பந்நம் ஸாலக்ராமார்யம் ஆச்ரயே































திங்கள், 26 அக்டோபர், 2015

சுகபிரம்மர்

ராதே கிருஷ்ணா 27-10-2015







சுகபிரம்மர்
******************
குருஷேத்திரத்தில் வேதவியாசர் ஹோமத்திற்கான அக்னியை தயார் கொண்டிருந்தார். அப்போது, கிருதாசீ என்ற தேவலோகப் பேரழகி அங்கு வந்தாள். அவளுடைய அழகில் மயங்கிய வியாசர், தான் ஒரு தபஸ்வி என்பதையும் மறந்து அவளது அழகில் மனதைப் பறி கொடுத்தார். கிருதாசீயும் அவருடைய மனநிலையைப் புரிந்துகொண்டாள். தவசிரேஷ்டரின் மனதில் சபலம் ஏற்பட்டால், சாபத்திற்கு ஆளாவோமே என்ற பயத்தில் தப்பியோட முயன்றாள்.

நினைத்த நேரத்தில் நினைத்த உருவத்தைப் பெறும் கிருதாசி வானத்தை நிமிர்ந்து பார்த்தாள். கிளிகள் கூட்டமாக ஓரிடத்தில் நின்றன. தானும் ஒரு பச்சைக் கிளியாக மாறினாள். கிளிக்கூட்டத்தோடு சேர்ந்து கொண்டாள். அவள் கிளியாக மாறிய பின்னும்கூட, வியாசரால் அவளை மறக்க முடியவில்லை. அவரது அந்த நினைவே, அந்தக் கிளியை கர்ப்பமாக்கியது.மீண்டும் சுயவடிவமெடுத்த கிருதாசீ தான் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்தாள். அவளுக்கு கிளி முகத்துடன் ஒரு பிள்ளை பிறந்தான். (வேறு சில வழிகளில் ஹோமகுண்டத்தில் அவர் பிறந்தார் என்றும் சொல்வதுண்டு) அப்பிள்ளை தான் சுகபிரம்மர். சுகம் என்றால் கிளி. தனது கிளி முகப் பிள்ளைக்கு சுகர் என்று பெயர் சூட்டினார்

வியாசர்.குழந்தையை புனிதமான கங்கை நதியில் நீராட்டினார். உடனே குழந்தை சிறுவனாக மாறினான். வேதவியாசரின் பிள்ளை என்பதால் தேவர்கள் பூமாரி பொழிந்து குழந்தையை வாழ்த்தினர். மங்கல வாத்தியங்கள் முழங்கின. மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுத் தரவேண்டுமா? வியாசரின் பிள்ளைக்கும் அவரைப் போலவே எல்லா ஞானமும் ஆற்றலும் அறிவும் இயல்பாக இருந்தன. இருந்தாலும் சம்பிரதாயத்திற்காக தேவகுரு பிரகஸ்பதி சுகருக்கு வேதங்களைக் கற்பித்தார்.

சுகபிரம்மத்தின் பெருமையை நமக்கு தெரியச் செய்த பெருமை பரீட்சித்து மகாராஜாவையே சாரும். பஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனனின் பேரன் இவர். பரீட்சித்துவின் தந்தை அபிமன்யு. இந்த மன்னன் பிறவியிலேயே விஷ்ணுவின் அருள்பெற்றவன். பாண்டவர்களின் வம்சத்தை அழிக்கும் எண்ணத்தில் இருந்த கவுரவர்கள், அபிமன்யுவின் மனைவி உத்தரையின் கர்ப்பத்தில் இருந்த பரீட்சித்து மீது பிரம்மாஸ்திரத்தை ஏவியபோது, விஷ்ணு தன் சக்கரத்தால் அதை தடுத்து நிறுத்தினார். பிறக்கும் முன்பே விஷ்ணுவால் காப்பாற்றப்பட்ட பரீட்சித்து, ஒரு சமயம் காட்டில் வேட்டைக்குச் சென்ற இடத்தில் தாகம் உண்டானது. தண்ணீர் தேடிச் சென்ற போது, வழியில் சமீகர் என்ற முனிவரின் ஆஸ்ரமத்தைக் கண்டார். வாசலில் நின்று தண்ணீர் கேட்டார்.

ஆனால், காதில் வாங்கிக் கொள்ளாமல் நிஷ்டையில் இருந்தார் சமீகர்.கோபம் கொண்ட மன்னன் பரீட்சித்து, காட்டில் கிடந்த செத்த பாம்பினை குச்சியால் எடுத்து மாலைபோல் அவருடைய கழுத்தில் போட்டார். பரீட்சித்தின் பாதகச் செயலை, அங்கு சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சமீகரின் பிள்ளை சிருங்கி பார்த்து விட்டான். அவனுக்கு கோபம் தலைக்கேறியது. ஏ! மன்னனே! நிஷ்டையில் இருந்த என் தந்தையை அவமதித்த நீ இன்னும் ஏழுநாளில் பாம்பால் அழிவாய், என்று சபித்துவிட்டான். உடனடியாக பரீட்சித்து தன் மகன் ஜன்மேஜயனுக்குப் பட்டம் கட்டி நாட்டுக்கு மன்னனாக்கினான். கங்கைக்கரையில் தவம் செய்து தன் உயிரைவிடுவது என்ற முடிவுக்கு வந்தான். விருப்பப்படியே கங்கையின் மத்தியில் அழகிய மண்டபத்தை அமைத்து அதில் தங்கினான்.

தகவல் அறிந்த அத்ரி, வசிஷ்டர், பிருகு, ஆங்கிரசர், பராசரர், தேவலர், பரத்வாஜர், கவுதமர், அகத்தியர், வியாசர் என்ற தவசிரேஷ்டர்கள் எல்லாம் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் அனைவரையும் பரீட்சித்து வணங்கினான். இந்த சமயத்தில் சுகபிரம்மர் பல தலங்களிலும் சிவபூஜை செய்தபடியே கங்கைக்கரைக்கு வந்து சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 16. சுகபிரம்மத்தைக் கண்ட ரிஷிகள் கூட தம்மை மறந்து எழுந்து நின்றனர்.

உயிர்பிரிய ஒரு வாரமே இருக்கும் சந்தர்ப்பத்தில், சுகபிரம்மரின் வருகை பரீட்சித்திற்கு மகிழ்ச்சியைத் தந்தது. ஈடுஇணையற்ற ஒரு பாக்கியம் கிடைத்து விட்டதாக கருதினான். ஒருவன் வாழ்வில் இறைவனை சற்று கூட நினைக்காத நிலையில்,அவனுக்கு மரணம் சம்பவிக்கும் என்ற நிலை ஏற்பட்டால், அந்த குறிப்பிட்ட காலத்திற்குள்ளாவது, கிருஷ்ணனின் பால பருவ லீலைகளைக் கேட்டால் முக்தி கிடைக்கும் என்ற சுகபிரம்மர், அந்த பரந்தாமனின் திவ்ய லீலைகளை அவனுக்கு எடுத்துரைத்தார். அதுவே பாகவதம் என்னும் நூல் ஆயிற்று. இவரைப் பற்றிய இன்னொரு சம்பவமும் சுவையானது. பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் நடத்திய ராஜசூய யாகத்தில் அன்னதானம் நடத்தப்பட்டது. அதில் ஒருலட்சம் பேர் சாப்பிட்டால் அதைதெரிவிக்கும் வகையில் ஒரு தெய்வீக மணி ஒலிக்கும்.

அதைக் கொண்டு ஒருநாளைக்கு எத்தனை பேர் சாப்பிட்டார்கள் என்று கணக்கிடுவார்கள். திடீரென்று ஒருநாள் அந்த மணி மிக வேகமாக ஒலிக்கத் தொடங்கியது. ஒரு தரம் அடித்தால் ஒருலட்சம் தானே கணக்கு!இதென்ன இப்படி தொடர்ந்து அடிக்கிறதே என்று நினைக்கும் அளவுக்கு, குறித்துக் கொள்ள முடியாதபடி தொடர்ந்து மணி அடித்துக் கொண்டிருந்தது. என்ன அதிசயம்! வேகம் தாளாமல் மணி அறுந்து விழுந்துவிட்டது. தெய்வீகமணியில் எவ்விதமான கோளாறும் இருக்க வாய்ப்பில்லை. அனைவரும் திகைத்து நின்ற வேளையில், எச்சில் இலைகளைப் போட்ட இடத்தில் பச்சைக்கிளி முகம் கொண்ட சுகர் ஒரு சில பருக்கைகளைக் கொத்திவிட்டுப் போனது தான் இதற்கு காரணம் என்பது பின்னால் தெரிய வந்தது. சுகப்பிரம்மருக்கு தயிர்சாதம் நைவேத்யம் செய்து வழிபட்டாலும், அவரது பெயரால் அன்னதானம் நடத்தினாலும் நமக்கு அளவற்ற செல்வமும், புண்ணியமும் கிடைக்கும்.










































சிதம்பர ரகசியம்

ராதே கிருஷ்ணா 27-10-2015








சிதம்பர ரகசியம் smile emoticon

பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன..Centre Point of World’s Magnetic Equator.எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனை கண்டறிந்த நமது தமிழன் எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்..? அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவன் சாதனை எப்பேற்பட்டது..?
இதனை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது..? புரிகிறதா..? தமிழன் யார் என தெரிகிறதா..? திருமூலரின் திருமந்திரம் மிகப்பெரிய உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும் இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்..வாழ்க தமிழ்..வெல்க... தமிழனின் நுண்ணறிவு!!
சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேளையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.
முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை அதனிலடங்கும். அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்.
(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Center Point of World's Magnetic Equator ).
(2) பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது, இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.
(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.
((4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).
(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.
(6) திருமந்திரத்தில் " திருமூலர்"
மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே
என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.
(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,
(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.
(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.
(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.
விஞ்ஞானம் இன்று சொல்வதை இந்துமதம் அன்றே smile emoticon




























































திருப்பதி - தினசரி சேவை முறைகள்!

ராதே கிருஷ்ணா 27-10-2015







திருப்பதி - தினசரி சேவை முறைகள்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும். காலையில் சுவாமியை எழுப்புவதற்கு 2 அர்ச்சகர்கள், 2 ஊழியர்கள், தீப்பந்தம் பிடிக்கும் ஒருவர், வீணை வாசிக்கும் ஒருவர் என 6 பேர் சன்னதி முன்னால் உள்ள தங்க வாசலுக்கு வந்து சேருவார்கள். முதலில் துவார பாலகர்களுக்கு நமஸ்காரம் செய்வார்கள். பின்னர் அர்ச்சகர் ஒரு ஊழியரிடம் சாவியை வாங்கி சன்னதியை திறப்பார். பின்னர் சுவாமியை வணங்கிவிட்டு சன்னதி கதவை சாத்திவிட்டு உள்ளே செல்வார்கள். அந்நேரத்தில் ""கவுசல்யா சுப்ரஜா ராம... என்ற சுப்ரபாதம் வெளியே நிற்கும் ஒரு குழுவினரால் பாடப்படும். சன்னதிக்குள் தீப்பந்தம் கொண்டு செல்பவர் அங்குள்ள விளக்குகளை எல்லாம் ஏற்றுவார். பின்னர் வீணையை இசைக்க வெங்கடாசலபதி அருகில் போக சீனிவாச மூர்த்தி என்பவரை கொண்டு வந்து அமர்த்துவார்கள். அவரை முதல்நாள் இரவில் ஒரு தொட்டிலில் படுக்க வைத்திருப்பார்கள். அந்த தொட்டிலிலிருந்து சுவாமியை எடுத்து மூலவர் அருகில் அமரவைப்பர். சுப்ரபாதம் பாடி முடித்ததும் சன்னதி திறக்கப்படும். சுவாமிக்கு பாலும் வெண்ணெயும் படைத்து "நவநீத ஹாரத்தி எனப்படும் தீபாராதனை செய்யப்படும். "விஸ்வரூப தரிசனம் என்றும் இதை சொல்வதுண்டு. இந்த சேவையைக் காண ஒரு நபருக்கு கட்டணம் ரூ.120/-. மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள்.திருப்பதி மலை யிலுள்ள ஆகாயகங்கை தீர்த்தத்திலிருந்து மூன்று குடங்களில் புனிதநீர் வந்துசேரும். ஒரு குடம் நீரை காலை பூஜைக்கும், மற்றொன்றை மாலை பூஜைக்கும், இன்னொன்றை இரவு பூஜைக்கும் எடுத்து வைப்பார்கள். (பிரம்மோற் ஸவ காலத்தில் மட்டும் யானைமீது தீர்த்தம் எடுத்து வரப்படும்). ஒரு குடம் தண்ணீரை ஐந்து வெள்ளி பாத்திரங்களில் நிரப்புவார்கள். பின்னர் உத்தரணி(ஸ்பூன் போன்றது)யில் தண்ணீர் எடுத்து சுவாமி முன்பு அர்ச்சகர் நீட்டுவார். சுவாமி அதில் முகத்தை அலம்பிக் கொள்வார் என்பது ஐதீகம். பின்னர் மீதி உள்ள தண்ணீரை சுவாமியின் பாதத்தில் அபிஷேகம் செய்வார்கள். முழு மூர்த்திக்கும் அபிஷேகம் நடப்பதில்லை. மூலவருக்கு பதிலாக அருகிலுள்ள போகசீனிவாச மூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்படும். அப்போது சுவாமியின் இடுப்பில் ஒரு துண்டை கட்டி வாசனை தைலம் தேய்த்து, மஞ்சள் கலந்த நீரால் அபிஷேகம் நடத்துவார்கள். பிறகு பசும்பால், சந்தனம், தேன், மீண்டும் மஞ்சள் தண்ணீர் என வரிசையாக அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு பிறகு வஸ்திரம் சாத்தப்படும். சுவாமிக்கு நெற்றியில் நாமம் இடுவார்கள். பிறகு அவர் முன்னால் கண்ணாடியை காட்டுவார்கள். குடைபிடித்து, சாமரத்தால் விசிறுவார்கள். இதன்பிறகு தீபாராதனை நடக்கும்.இத்துடன் காலை சுப்ரபாத பூஜை நிறைவடையும்.

சுப்ரபாத பூஜையை அடுத்து, காலை 3.30 முதல் 3.45 வரை சன்னதியை திரை போட்டு மறைத்து, சுத்தி எனப்படும் தூய்மை செய்யும் பணி நடக்கும். அந்த நேரத்தில் முதல் நாள் சுவாமிக்கு அணிந்த மாலைகளை கோயிலுக்கு பின்னால் உள்ள பூக் கிணறில் கொண்டு சேர்ப்பார்கள். பின்னர் புதிய மாலைகள் சுவாமிக்கு கொண்டு வரப்படும். இதைக் கொண்டுவர ஜீயங்கார் என்பவர் உள்ளார். ஜீயங்காருக்கு உதவியாக ஏகாங்கி என சொல்லப்படுபவர் இருக்கிறார். ஜீயங்கார் முன்னால் நடக்க ஏகாங்கி பின்னால் வருவார். கூடவே முரசு வாத்தியத்துடன் ஒருவர் செல்வார். இவர்களுக்கு பின்னால் பள்ளி எழுச்சி பாட இருவர், திருப்பாவை பாட இருவர், புருஷ ஸுக்தம் சொல்ல இருவர் என ஒரு கோஷ்டியே திரண்டு வரும். பூ கட்டுவதற்கு என யமுனாதுறை என்ற இடம் கோயிலில் இருக்கிறது. அங்கிருந்து பூமாலைகள் சுவாமிக்கு அணிவதற்காக எடுத்து வரப்படும். காலை 3.45 மணிக்கு தோமாலை சேவை ஆரம்பமாகும். சன்னதிக்கு பூக்கூடை வந்தவுடன் அர்ச்சகர் சுவாமியின் மார்பில் இருக்கும் மகாலட்சுமிக்கு முதலில் பூச்சரத்தை சாத்துவார். பின்னர் சுவாமிக்கு மாலைகள் சாத்தப்படும். பெருமாளுக்கு மாலை சாத்தி முடித்து அடுக்கு தீபாராதனை செய்யப்படும். இதற்கு 25 நிமிடம் ஆகும். அதுவரை ஜீயங்காரும் மற்றவர்களும் திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை பாசுரங்களை பாடுவார்கள். இதை பார்ப்பதற்கு ஒரு நபருக்கு கட்டணம் ரூ.220. இதற்கும் மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும். இந்த சேவை ராமானுஜர் காலத்தில், "தோள் மாலை சேவை என சுத்த தமிழில் அழைக்கப்பட்டது. பின்னர் தெலுங்கில் "தோமாலா சேவா என மாறிவிட்டது.

கொலுவு தர்பார்: ஏழுமலையான் கோயிலில் தோமாலை சேவை காலை 4.30 மணிக்கு நிறைவுபெறும். இதையடுத்து கொலுவு நிகழ்ச்சி 15 நிமிடங்கள் நடக்கும். இதற்காக கொலுவு ஸ்ரீநிவாச மூர்த்தி விக்ரகம் ஏழுமலையான் சன்னதிக்குள் இருக்கிறது. இந்த விக்ரகத்தை வெள்ளி பல்லக்கில் வைத்து, வெள்ளி குடை பிடித்து சன்னதியில் இருந்து வெளியில் எடுத்து வருவர். ஒரு மறைவிடத்தில் வைத்து, எள்ளுப்பொடி, வெல்லம், வெண்ணெய் நைவேத்தியம் செய்து அர்ச்சனை நடத்தி ஆரத்தி காட்டுவர். பிறகு அர்ச்சகர் ஒரு பஞ்சாங்கத்தை பிரித்து அன்றைய நாள், நட்சத்திரம், திதி உள்ளிட்ட விவரங்களை வாசிப்பார். அதன்பிறகு முதல்நாள் உண்டியலில் எவ்வளவு பணம் சேர்ந்தது, தங்கம், வெள்ளி வரவு ஆகிய விபரங்களை சுவாமியிடம் சொல்வர். மூலவரே கொலுவு ஸ்ரீநிவாசமூர்த்தியின் வடிவில் வெளியே வருவதாக ஐதீகம் உண்டு. மூலவரிடமே நேரடியாக கணக்கு வழக்குகளைச் சொல்வதாக நம்பிக்கை. இந்த காட்சியைக்காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

முதல் மணி: அர்ச்சனாந்திர தரிசனம் முடிந்ததும், வெங்கடாசலபதிக்கு முதல் நைவேத்தியம் படைக்கப்படும். அப்போது இரண்டு மணிகள் ஒலிக்கப்படும். அவருக்கு முதலில் தயிர்சாதம் படைக்கப்படும். மூலவருடன் விஷ்வக்சேனர், கருடன் மற்றும் நித்யசூரிகளுக்கும் (முக்தி பெற்றவர்கள்) இதே நைவேத்தியம் படைக்கப்படும்.

இரண்டாவது மணி: இதையடுத்து மீண்டும் மணி அடிக்கப்பட்டு 2வது முறையாக நைவேத்தியம் படைக்கப்படும். அப்போது வராக புராணத்தில் உள்ள 108 நாமாக்களை கொண்ட அஷ்டோத்திர நாமா வாசிக்கப்படும். இதை பக்தர்கள் யாரும் பார்க்க முடியாது. ஆனால், சுவாமிக்கு நைவேத்தியம் செய்யப்படும் செருப்புலு மற்றும் பணியார வகைகள் ஒரு குறிப்பிட்ட அளவு பக்தர்களுக்கு மட்டும் பிரசாதமாக வழங்கப்படும்.

சகஸ்ரநாம அர்ச்சனை: கொலுவு தரிசனத்தை அடுத்து சகஸ்ரநாம அர்ச்சனை நடக்கும். விஷ்ணு சகஸ்ரநாமம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் வெங்கடாசலபதிக்கென தனியாக ஆயிரத்தெட்டு பெயர் சொல்லி சகஸ்ரநாமம் இருக்கிறது. இதை செய்வதற்கு ஒரு நபருக்கு ரூ.120 கட்டணம். காலை 4.45 மணி முதல் 5.30 வரை இந்த அர்ச்சனை நடக்கும். நமது பெயர், குலம், கோத்திரம் ஆகியவற்றை முன் கூட்டியே சொல்லிவிட்டால் நமது பெயரில் அர்ச்சனை செய் வார்கள். இந்த தரிசனத்தின் போது பக்தர்களை அங்குள்ள ஊழியர்கள் யாரும் தள்ளி விட மாட்டார்கள். சகஸ்ரநாம அர்ச்சனை முடிந்து பூஜை நடத்தப்படும். இந்த பூஜைக்கு "அர்ச்சனாந்தர தரிசனம் என்று பெயர். இதை பார்க்க ஒரு நபருக்கு ரூ.200 கட்டணம். மூன்று மாதங் களுக்கு முன்பே பதிவு செய்துகொள்ள வேண்டும். காலை 5.30க்கு துவங்கும் இந்த பூஜை 6.30 மணி வரை நடக்கும்.

சகஸ்ர தீப அலங்கார சேவை: ஊஞ்சல் மண்டபத்தில் தினமும் மாலை 5.30 மணிக்கு சகஸ்ர தீப அலங்காரம் (ஆயிரம் தீபங்கள்) செய்யப்படும். அப்போது அன்னமயா சங்கீர்த்தனம் பாடப்படும். இதற்கும் ஆயிரம் ரூபாய் கட்டணம் உண்டு. 5 பேர் பங்கேற்கலாம். அவர்களுக்கு வஸ்திரம் பிரசாதமாக வழங்கப்படும். திருமணமானவர்கள் இந்த வைபவத்தில் பங்கேற்பது சிறப்பானது.

ஆபரணம் இல்லாத நாள்: வியாழக்கிழமைகளில் வெங்கடாசலபதிக்கு முக்கிய ஆபரணங்கள் எதுவுமின்றி வேட்டி மற்றும் வெல்வெட் அங்கி அணிவிக்கப் படும். அதன் மேல் அங்கவஸ்திரம் மட்டும் சாத்துவார்கள். இந்த நிகழ்ச்சிக்கு "சாலிம்பு என்று பெயர். மேலும் சுவாமிக்கு வழக்கமாக அணிவிக்கப்படும் திருநாமத்திற்கு பதிலாக நெற்றியின் மத்தியில் மெல்லிய நாமம் மட்டும் அணிவிக்கப்படும்.

கல்யாண உற்சவம்: திருப்பதி கோயிலில் உள்ள சம்பங்கி பிரகாரத்தில் திருமண ஹால் இருக்கிறது. அங்கு உற்சவரான மலையப்ப சுவாமிக்கும் ஸ்ரீதேவி, பூதேவிக்கும் திருமணம் நடத்தப்படும். பதினைந்தாம் நூற்றாண்டில் இருந்து இந்த திருமணம் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. திருமண தடை உள்ள ஆண், பெண்கள் இந்த நிகழ்ச்சியில் முக்கியமாக கலந்துகொள்கிறார்கள். சுவாமிக்கும் தாயார்களுக்கும் மத்தியில் ஒரு திரை போடப் படும். பின்னர் அந்த திரை அகற்றப்பட்டு ஹோமங்கள் நடக்கும். ஒரு புரோகிதர் தாயார்களுக்கும் சுவாமிக்கும் திருமணம் செய்துவைப்பார். விழாக்காலங்களில் மட்டும் இந்த திருமணம் நிறுத்தி வைக்கப்படும். நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு இரண்டு லட்டு, ஐந்து வடை, ஒரு பட்டு அங்கவஸ்திரம் மற்றும் ரவிக்கைத் துணி பிரசாதமாக தரப்படும். கல்யாண வைபவம் ஒருமணி நேரம் நடக்கும். பகல் 12 மணிக்கு திருமண உற்சவம் துவங்கும். திருமண உற்சவத்திற்கு கட்டணம் ரூ.1000/-. இரண்டுபேர் அனுமதிக்கப்படுவார்கள்.

ஊஞ்சல் சேவை: மாலை 4 மணிக்கு கோயிலுக்கு வெளியே உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஊஞ்சலில் ஆடும் காட்சியை பார்க்கலாம். இதை "டோலாத்ஸவம் என்பர். அப்போது வேத பாராயணம் செய்யப்படுவதுடன் மங்கள வாத்தியங்களும் முழங்கும். ஆயிரம் ரூபாய் செலுத்தி ஐந்து பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். அவர்களுக்கு 5 லட்டு, ஒரு அங்கவஸ்திரம் மற்றும் ரவிக்கைத்துணி தரப்படும். மாலை 5 மணிக்கு இந்த நிகழ்ச்சி நிறைவடையும்.

http://temple.dinamalar.com/news_detail.php?id=28785

நவவித பக்தி

ராதே கிருஷ்ணா 26-10-2015


நவவித பக்தி 

This nine types of devotion are Shravana, Kirtana, Smarana, Padasevena, Archana, Vandana, Dasya, Sakhyam, Atmanivedanam shrI vishhNostu shravane parIxidabhavat.h | vaiyAsakiH kIrtane prahlAdassmaraNe || tadanghribhajane laxmiH pR^ithuH pUjane | akrUrastvabhivandane kapipatirdAsye cha || sakhye.arjunaH sarvasvAtmanivedane | balirabhUt.h kaivalyameshhAm phalam.h || shravana - parIxit kIrtana - Shuka maharshhi smaraNa - Prahlada pAdasevana - Laxmi archana - pR^ithu (king) vandana - akrUra dAsya - Hanuman sakhya - Arjuna Atmanivedana - Bali

ஸ்ரவனம் , கீர்த்தனம் , ஸ்மரணம் , பாதசேவனம்அர்ச்சனம் , வந்த்னம் , தாஸ்யம் , ஸக்யம் . ஆத்மநிவேதனம்

ஸ்ரவனம் : பரிக்ஷித்          கீர்த்தனம் : ஷுக மகரிஷி 

ஸ்மரணம் : ப்ரஹ்லாதன்      பாத சேவனம் : லக்ஷ்மி 

அர்ச்சனம் : பிரிது (ராஜா)     வந்தனம் : அக்ரூர     

தாஸ்யம் : ஹனுமான்              ஸக்யம் : அர்ஜுனன்  

ஆத்மநிவேதனம்: பலிச்சக்ரவர்த்தி

























ஞாயிறு, 25 அக்டோபர், 2015

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்

ராதே கிருஷ்ணா 25-10-2015




ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்
கௌரவர்களில் மூத்தவரான பிதாமகன் பீஷ்மர் மஹாபாரத யுத்தத்தில் துரௌபதனின் மகன் சிக்கந்தன் முன் ஆயுதங்களை போட்டு விட்டு யோக தாரனையில் அமர்ந்து இருக்கின்ற போது அர்ஜுனனின் அம்புக்கு இரையாகி மரண படுக்கையில் அம்பு படுக்கையில் படுத்து இருந்தார்.
மஹாபாரத யுத்தம் பதினெட்டு நாட்கள் நடந்தது. அதில் பத்தாவது நாள் யுத்தத்தில் பிதாமகன் பீஷ்மர் அர்ஜுனனால் அம்புக்கு இரையானார். பதினெட்டு நாட்கள் யுத்தம் முடிந்ததும் கௌரவர்கள் எல்லோரும் கொல்லப்பட்டனர்.
யுதிஷ்திரர் ( தருமர் ) ஆட்சி அமைத்தார். ஆட்சி அமைத்த பிறகு மரண படுக்கையில் மரணத்துக்காக ( உத்தராயணம் வரும் வரை ) இரண்டு மாதம் வரை அம்பு படுக்கையில் இருக்கின்ற பிதாமகன் பீஷ்மரை காண சென்றார். அப்போது தனக்கு இருக்கின்ற சந்தேகங்களை பிஷ்மரிடம் கேட்டார்.
அனைத்து கேள்விகளுக்கும் பீஷ்மர் பதில் அளித்தார். அப்போது பகவான் ஸ்ரீ விஷ்ணு வின் ஆயிரம் பெயர்களையும் கூறினார்.
யுதிஷ்திரரின் கேள்விகள் :
1. யார் இந்த உலகத்தின் முக்கிய கடவுள் ?
2. யாருக்கு செய்கின்ற பிராத்தனை அனைவரின் புகலிடமாக இருக்கிறது?
3. எந்த கடவுளை வனங்குவதன் மூலம் ஒரு மனிதன் அமைதி மற்றும் நல்ல வாழ்க்கை கிடைகிறது?
4. எந்த கடவுளை புகழ்த்து படுவதால் ஒருவனுக்கு சந்தோசம் கிடைக்கும்?
5. உங்களை பொருத்தவரை எது தர்மம்,எது நல்ல செயல் ?
6. எல்லா ஜீவ ராசிகளும் பிறப்பு இறப்பு சுழலில் இருந்து விடுபட யாரை வணங்க வேண்டும் ?
பீஷ்மரின் பதில்:
இந்த உலகத்தின் கடவுள் ஸ்ரீ விஷ்ணு . எல்லா கடவுளின் கடவுள். முடிவில்லாதவர். புனிதமானவர். இவருடைய ஆயிரம் நாமங்களை பூஜிப்பதன் மூலன் ஒரு மனிதன் முக்தி அடையலாம்.
யார் ஒருவன் அந்த கடவுளை நிலையான புத்தியுடன் பூஜிக்கிறானோ தியானிக்கிரானோ அவன் அழிவை அடைவதில்லை.
அப்படிப்பட்ட கடவுளை எவன் ஒருவன் பணிந்து நமஸ்காரம் செய்கிறானோ அவன் அவருடைய அருளை பெறுவான்.
ஸ்ரீ விஷ்ணு ஆரம்பம் முடிவு இல்லாதவர். இந்த உலகத்தின் உச்ச கடவுள்.
இந்த உலகத்தை முற்றிலும் அறிந்தவர் அவரே. துக்கங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர். அவருடைய நாமத்தை எவன் ஒருவன் தொடர்ந்து பூஜிப்பானோ அவன் எல்லா கட்டுக்களில் இருந்தும் விடுபடுவான்.
..
ஸ்ரீ விஷ்ணு மிகவும் பிரகாசமானவர் . அனைத்தையும் கட்டுபடுத்துபவர். அவர் உச்சமான உண்மை. அடையப்பட வேண்டியவர்.
..
அவர் சுத்ததிற்கு எல்லாம் சுத்தமானவர். புனிதத்திற்கு எல்லாம் புனிதம். கடவுளுக்கு எல்லாம் கடவுள். அணைத்து ஜீவ ராசிகளின் தந்தை. அவர் தான் ஸ்ரீ விஷ்ணு பகவான்.
யுதிஷ்டிரர் ,ஸ்ரீ விஷ்ணுவின் அருள் பெறுவதற்கு பீஷ்மர் கொடுத்த அறிவுரை:
ஸ்ரீ விஷ்ணு தான் முதன்மை கடவுள். அவருடைய ஆயிரம் நாமங்களை பூஜிப்பதன் மூலம் பயதிலிருந்தும் பாவத்திலிருந்தும் விடுதலை பெறலாம்.
சஹஸ்ரநாமம் மூன்று பாகங்களாக சொல்லப்பட்டு இருக்கிறது. முதல் பாகம் முன்னுரை இரண்டாம் பாகம் ஸ்ரீ விஷ்ணுவின் ஆயிரம் நாமங்கள் மூன்றாம் பாகம் அந்த ஆயிரம் நாமங்களை பூஜிப்பதன் மூலம் கிடைக்கும் பலன்.
வியாச முனிவர் விஷ்ணு பகவானுக்கு உண்டான பிராத்தனை பற்றி எழுதி இருக்கிறார்.
தெய்வீக ரிஷி வியாசர் தன்னுடைய நமஷ்காரங்களை பகவான் ஸ்ரீ மஹா விஷ்ணு விற்கு செய்தார்.
..
முதன்மை கடவுளும் லக்ஷ்மி யின் இருப்பிடமும் மஹா விஷ்ணு, அவர் தான் பகவான் நாராயணன், அணைத்து பூஜையையும் அனுபவிப்பவர்.
சஹஸ்ரநாமம் சொல்வதன் மூலம் தெய்வீக சிந்தனையும் ஒழுக்கமும் நிலைத்த மனமும் கிடைக்கும். இந்த முதல் நிலை பிராத்தனை மனதை தயார் படுத்தி ஆயிரம் நாமங்களை பூஜிக்க வழி வகுக்கும்.
..
அமிர்தத்தின் சாறு என் மீது பாயட்டும் சூரிய கதிர்களை போல தேவகியின் மகன் என் மீது சக்தியை கொடுக்கட்டும்.
தெய்வீக மந்திரங்கள் என் மீது கருணை கொள்ளட்டும் .
சங்கும் ( பேச்சு ) சக்கரமும் ( நினைப்பு ) கத்தியும் ( செயலும் ) என்னுடன் இணையட்டும்.
தெய்வீக ஆயுதங்களான வில்லும் கதையும் என்னை காக்கட்டும்.
என்னோட பார்வை தேரோட்டியான ஸ்ரீ கிருஷ்ணரின் பார்வை போல இருக்கட்டும்.
மூன்று வேதங்களும் என்னை பாதுகாக்கும் கவசம் ஆகட்டும்.
என்னுடைய வாழ்கையின் ஆதாரம் தெய்வீக அருளை பெறட்டும்.
என்னுடைய பிராத்தனைகள் உண்மையாகட்டும்.
என்னுடைய பிராத்தனை பிரபஞ்சத்தின் உண்மையை நோக்கி போகட்டும்.
நான் விஷ்ணுவை வணங்குவதற்கு இந்த ஆயிரம் நாமங்களை பூஜிக்கிறேன்.
ஹரி ஓம் நமோ பகவதே வாசுதேவாய





































ஸ்ரீருத்ரம்.-வரிகள்

ராதே கிருஷ்ணா 25-10-2015






இன்று -ஞாயிறு-. பிரதோஷம்-25-10-2015
27-10-2015 செவ்வாய்-அன்னாபிஷேகம்

ஸ்ரீருத்ரம்.-வரிகள்
.(படித்தும் சொல்லியும் பயன் பெறுவீர்)

ஸ்ரீ கணபதி த்யானம்

. கணபதியைத் தொழுது நம் முன் எழுந்தருளச் செய்தல்

ஓம் கணானாம் த்வா கணபதி ஹவாமஹே கவிம் கவீனா-முபமஸ்ர- வஸ்தமம் ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத ஆ ந: ஸ்ருண்வன்னூதிபி: ஸீத ஸாதனம்

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம:

சாந்தி பாடம்

. வாழ்க்கை நலன்களைப் பெற வேண்டுகோளினை முன் வைத்தல்

ஸஞ்ச மே, மயஸ்ச மே, ப்ரியஞ்ச மே, னுகாமஸ்ச மே,

காமஸ்சமே, ஸெளமனஸஸ்ச மே, பத்ரஞ்ச மே,

ஸ்ரேயஸ்ச மே, வஸ்யஸ்ச மே, யஸஸ்ச மே, பகஸ்ச மே

, த்ரவிணஞ்ச மே, யந்தா ச மே, தர்தா ச மே, ÷க்ஷமஸ்ச மே,

த்ருதிஸ்ச மே, விஸ்வஞ்ச மே, மஹஸ்ச மே,

ஸம்விச்ச மே, ஜ்ஞாத்ரஞ்ச மே, ஸூஸ்ச மே,

ப்ரஸூஸ்ச மே, ஸீரஞ்ச மே, லயஸ்ச ம ருதஞ்ச மே,

ம்ருதஞ்ச மே, யக்ஷ்மஞ்ச மே, நாமயச்ச மே,

ஜீவாதுஸ்ச மே, தீர்காயுத்வஞ்ச மே,

நமித்ரஞ்ச மே, பயஞ்ச மே, ஸுகஞ்ச மே,

ஸயனஞ்ச மே, ஸூஷா ச மே, ஸுதினஞ்ச மே

ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி:

ஸ்ரீருத்ர ப்ரச்னம் (நமகம்)

. சினங்கொண்ட சிவனையும், அவரது ஆயுதங்களையும் வணங்கி, சாந்தமடைய வேண்டுதல்

ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - முதல் அனுவாகம்

ஓம் நமோ பகவதே ருத்ராய

நமஸ்தே ருத்ர-மன்யவ உதோத இஷவே நம:

நமஸ்தே அஸ்து தன்வனே பாஹுப்யா முத தே நம:

யாத இஷு: ஸிவதமா ஸிவம் பபூவ தே தனு:

ஸிவா ஸ ரவ்யா யா தவ தயா நோ ருத்ர ம்ருடயா

யா தே ருத்ர ஸிவா தனூ-ரகோரபாப காஸினீ

தயா நஸ்-தனுவா ஸந்தமயா கிரிஸந்தாபிசாகஸீஹி

யாமிஷும் கிரிஸந்த ஹஸ்தே பிபர்ஷ்யஸ்தவே

ஸிவாம் கிரித்ர தாம் குரு மா ஹிம் ஸீ: புருஷம் ஜகத்

ஸிவேன வசஸா த்வா கிரிஸாச்சா வதாமஸி

யதா ந: ஸர்வமிஜ்- ஜகதயக்ஷ்ம ஸுமனா அஸத்

அத்யவோசததி வக்தா ப்ரதமோ தைவ்யோ பிஷக்

அஹீஸ்ச ஸர்வான் ஜம்பயன்த்-ஸர்வாஸ்ச யாது தான்ய:

அஸெள யஸ்தாம்ரோ அருண உத பப்ரு: ஸுமங்கல:

யே சேமா ருத்ரா அபிதோ திக்ஷú ஸ்ரிதா:

ஸஹஸ்ரஸோ-வைஷா ஹேட ஈமஹே

அஸெள யோ-வஸர்ப்பதி நீலக்ரீவோ விலோஹித:

உதைனம் கோபா அத்ருஸன்-னத்ருஸன்னுதஹார்ய:

உதைனம் விஸ்வா பூதானி ஸ த்ருஷ்டோ ம்ருடயாதி ந:

நமோ அஸ்து நீலக்ரீவாய ஸஹஸ்ராக்ஷாய மீடுஷே

அதோ யே அஸ்ய ஸத்வானோ(அ) ஹம் தேப்யோக்ரந் நம:

ப்ரமுஞ்ச தன்வனஸ்த்வ-முபயோ-ரார்த்னியோர்-ஜ்யாம்

யாஸ்ச தே ஹஸ்த இஷவ: பரா தா பகவோ வப

அவதத்ய தனுஸ்த்வ ஸஹஸ்ராக்ஷ ஸதேஷுதே

நிஸீர்ய ஸல்யானாம் முகா ஸிவோ ந: ஸுமனா பவ

விஜ்யம் தனு: கபர்திநோ விஸல்யோ பாணவா உத

அநேஸந் நஸ்யேஷவ ஆபுரஸ்ய நிஷங்கதி:

யா தே ஹேதிர்-மீடுஷ்டம ஹஸ்தே பபூவ தே தனு:

தயா ஸ்மான் விஸ்வதஸ்த்வ-மயக்ஷ்மயா பரிப்புஜ

நமஸ்தே அஸ்த்வாயுதாயானாததாய த்ருஷ்ணவே

உபாப்-யாமுத தே நமோ பாஹுப்யாம் தவ தன்வனே

பரி-தே-தன்வனோ ஹேதி-ரஸ்மான்-வ்ருணக்து விஸ்வத:

அதோ ய இஷுதிஸ்தவாரே அஸ்மந்-நிதேஹி தம்

நமஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ்வராய மஹாதேவாய

த்ர்யம்பகாய த்ரிபுராந்தகாய த்ரிகாக்நி-காலாய காலாக்நி-

ருத்ராய நீலகண்டாய ம்ருத்யுஞ்ஜயாய ஸர்வேஸ்வராய

ஸதாஸிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நம:

. சிவபெருமானின் பெருமைகளைக் கூறிப் போற்றுதல்

(அடுத்த எட்டு அனுவாகங்களில்)

ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - இரண்டாவது அனுவாகம்

நமோ ஹிரண்ய பாஹவே ஸேனான்யே திஸாம் ச பதயே
நமோ நமோ

வ்ருக்ஷப்யோ ஹரிகேஸோப்ய:பஸூனாம்பதயேநமோநம:

ஸஸ்பிஞ்ஜராய த்விஷீமதே பதீனாம் பதயே நமோ நமோ

பப்லுஸாய விவ்யாதிநே ன்னானாம் பதயே நமோ நமோ

ஹரிகேஸாயோபவீதிநே புஷ்டானாம் பதயே நமோ நமோ

பவஸ்ய ஹேத்யை ஜகதாம் பதயே நமோ நமோ

ருத்ராயாததாவிநே ÷க்ஷத்ராணாம் பதயே நமோ நமோ

ஸூதாயாஹந்த்யாய வனானாம் பதயே நமோ நமோ

ரோஹிதாய ஸ்தபதயே வ்ருக்ஷõணாம் பதயே நமோ நமோ

மந்த்ரிணே வாணிஜாய கக்ஷாணாம் பதயே நமோ நமோ

புவந்தயே வாரிவஸ்க்ருதா யௌஷதீனாம் பதயே நமோ நம:

உச்சைர் கோஷாயாக்ரந்தயதே பத்தீனாம் பதயே நமோ நம:

க்ருத்ஸ்னவீதாய தாவதே ஸத்வனாம் பதயே நம:

ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - மூன்றாவது அனுவாகம்

நம ஸஹமாநா நிவ்யாதிநஆவ்யாதிநீனாம் பதயே நமோநம
:
ககுபாய நிஷங்கிணே ஸ்தேநானாம் பதயே நமோ நமோ

நிஷங்கிண இஷுதிமதே தஸ்கராணாம் பதயே நமோ நமோ

வஞ்சதே பரிவஞ்சதே ஸ்தாயூனாம் பதயே நமோ நமோ

நிசேரவே பரிசராயாரண்யானாம் பதயே நமோ நம:

ஸ்ருகாவிப்யோ ஜிகாகும் ஸத்ப்யோ முஷ்ணதாம் பதயே நமோ நமோ

ஸிமத்ப்யோ நக்தம் சரத்ப்ய: ப்ரக்ருந்தானாம் பதயே
நமோ நம:

உஷ்ணீஷிணே கிரிசராய குலுஞ்சானாம் பதயே நமோ நம:

இஷுமத்ப்யோ தன்வாவிப்யஸ்ச வோ நமோ நம

ஆதன்வானேப்ய: ப்ரதிததானேப்யஸ்ச வோ நமோ நம

ஆயச்சத்ப்யோ விஸ்ருஜத்ப்யஸ்ச வோ நமோ நமோ

ஸ்யத்ப்யோ வித்த்யத்ப்யஸ்ச வோ நமோ நம

ஆஸீநேப்ய: ஸயானேப்யஸ்ச வோ நமோ

நமஸ் திஷ்டத்ப்யோ தாவத்ப்யஸ்ச வோ நமோ நம::

ஸபாப்ய: ஸபாபதிப்யஸ்ச வோ நமோ நமோ

அஸ்வேப்யோ ஸ்வபதிப்யஸ்ச வோ நம:

ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - நான்காவது அனுவாகம்

நம ஆவ்யாதினீப்யோ விவித்யந்தீப்யஸ்ச வோ நமோ நம

உகணாப்யஸ்-த்ரு ஹதீப்யஸ்ச வோ நமோ நமோ

க்ருத்ஸேப்யோ க்ருத்ஸபதிப்யஸ்ச வோ நமோ நமோ

வ்ராதேப்யோ வ்ராதபதிப்யஸ்ச வோ நமோ நமோ

கணேப்யோ கணபதிப்யஸ்ச வோ நமோ நமோ

விரூபேப்யோ விஸ்வரூபேப்யஸ்ச வோ நமோ நமோ

மஹத்ப்ய: க்ஷúல்லகேப்யஸ்ச வோ நமோ நமோ

ரதிப்யோ ரதேப்யஸ்ச வோ நமோ நமோ

ஸேநாப்ய: ஸேநானிப்யஸ்ச வோ நமோ நம:

க்ஷத்த்ருப்ய: ஸங்க்ரஹீத்ருப்யஸ்ச வோ நமோ நமஸ்

தக்ஷப்யோ ரதகாரேப்யஸ்ச வோ நமோ நம:

குலாலேப்ய: கர்மாரேப்யஸ்ச வோ நமோ நம

புஞ்ஜிஷ்டேப்யோ நிஷாதேப்யஸ்ச வோ நமோ நம

இஷுக்ருத்ப்யோ தன்வக்ருத்ப்யஸ்ச வோ நமோ நமோ

ம்ருகயுப்ய: ஸ்வனிப்யஸ்ச வோ நமோ நம:

ஸ்வப்ய: ஸ்வபதிப்யஸ்ச வோ நம:

ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - ஐந்தாவது அனுவாகம்

நமோ பவாய ச ருத்ராய ச

நம: ஸர்வாய ச பஸுபதயே ச

நமோ நீலக்ரீவாய ச ஸிதிகண்டாய ச

நம: கபர்தினே ச வ்யுப்தகேஸாய ச

நம: ஸஹஸ்ராக்ஷõய ச ஸததன்வனே ச

நமோ கிரிஸாய ச ஸிபிவிஷ்டாய ச

நமோ மீடுஷ்டமாய சேஷுமதே ச

நமோ ஹ்ரஸ்வாய ச வாமனாய ச

நமோ ப்ருஹதே ச வர்ஷீயஸே ச

நமோ வ்ருத்தாய ச ஸம்வ்ருத்த்வனே ச

நமோ அக்ரியாய ச ப்ரதமாய ச

நம ஆஸவே சாஜிராய ச

நம: ஸீக்ரியாய ச ஸீப்யாய ச

நம ஊர்ம்யாய சாவஸ்வன்யாய ச

நம: ஸ்ரோதஸ்யாய ச த்வீப்யாய ச

ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - ஆறாவது அனுவாகம்

நமோ ஜ்யேஷ்டாய ச கனிஷ்டாய ச

நம: பூர்வஜாய சாபரஜாய ச

நமோ மத்யமாய சாபகல்பாய ச

நமோ ஜகன்யாய ச புத்னியாய ச

நம: ஸோப்யாய ச ப்ரதிஸர்யாய ச

நமோ யாம்யாய ச ÷க்ஷம்யாய ச

நம உர்வர்யாய ச கல்யாய ச

நம: ஸ்லோக்யாய சாவஸான்யாய ச

நமோ வன்யாய ச கக்ஷ்யாய ச

நம: ஸ்ரவாய ச ப்ரதிஸ்ரவாய ச

நம ஆஸுஷேணாய சாஸுரதாய ச

நம: ஸூராய சாவபிந்ததே ச

நமோ வர்மிணே ச வரூதினே ச

நமோ பில்மினே ச கவசினே ச

நம: ஸ்ருதாய ச ஸ்ருதஸேனாய ச

ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - ஏழாவது அனுவாகம்

நமோ துந்துப்யாய சாஹநன்யாய ச

நமோ த்ருஷ்ணவே ச ப்ரம்ருஸாய ச

நமோ தூதாய ச ப்ரஹிதாய ச

நமோ நிஷங்கிணே சேஷுதிமதே ச

நமஸ் தீக்ஷ்ணேஷவே சாயுதினே ச

நம: ஸ்வாயுதாய ச ஸுதன்வனே ச

நம: ஸ்ருத்யாய ச பத்யாய ச

நம: கட்யாய ச நீப்யாய ச

நம: ஸூத்யாய ச ஸரஸ்யாய ச

நமோ நாத்யாய ச வைஸந்தாய ச

நம: கூப்யாய சாவட்யாய ச

நமோ வர்ஷ்யாய சாவர்ஷ்யாய ச

நமோ மேக்யாய ச வித்யுத்யாய ச

நம ஈத்ரியாய சாதப்யாய ச

நமோ வாத்யாய ச ரேஷ்மியாய ச

நமோ வாஸ்தவ்யாய ச வாஸ்துபாய ச

ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - எட்டாவது அனுவாகம்

நம: ஸோமாய ச ருத்ராய ச

நம: தாம்ராய சாருணாய ச

நம: ஸங்காய ச பஸுபதயே ச

நம உக்ராய ச பீமாய ச

நமோ அக்ரே-வதாய ச தூரே-வதாய ச

நமோ ஹந்த்ரே ச ஹநீயஸே ச

நமோ வ்ரு÷க்ஷப்யோ ஹரிகேஸேப்யோ

நமஸ்தாராய

நம: ஸம்பவே ச மயோபவே ச

நம: ஸங்கராய ச மயஸ்கராய ச

நம: ஸிவாய ச ஸிவதராய ச

நம: தீர்த்யாய ச கூல்யாய ச

நம: பார்யாய சாவார்யாய ச

நம: ப்ரதரணாய சோத்தரனாய ச

நம ஆதார்யாய சாலாத்யாய ச

நம: ஸஷ்ப்யாய ச பேன்யாய ச

நம: ஸிகத்யாய ச ப்ரவாஹ்யாய ச

ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - ஒன்பதாவது அனுவாகம்

நம இரிண்யாய ச ப்ரபத்யாய ச

நம: கிஸிலாய ச க்ஷயணாய ச

நம: கபர்திநே ச புலஸ்தயே ச

நமோ கோஷ்ட்யாய ச க்ருஹ்யாய ச

நமஸ்தல்ப்யாய ச கேஹ்யாய ச

நம: காட்யாய ச கஹ்வரேஷ்டாய ச

நமோ ஹ்ரதய்யாய ச நிவேஷ்ப்யாய ச

நம: பாஸவ்யாய ச ரஜஸ்யாய ச

நம: ஸுஷ்க்யாய ச ஹரித்யாய ச

நமோ லோப்யாய சோலப்யாய ச

நம ஊர்வ்யாய ச ஸூர்ம்யாய ச

நம: பர்ண்யாய ச பர்ணஸத்யாய ச

நமோ பகுரமாணாய சாபிக்நதே ச

நம ஆக்கிததே ச ப்ரக்கிததே ச

நமோ வ: கிரிகேப்யோ தேவானா ஹ்ருதயேப்யோ

நமோ விக்ஷீணகேப்யோ,

நமோ விசின்வத்கேப்யோ

நம ஆநிர்ஹதேப்யோ

நம ஆமீவத்கேப்ய

. சினம் தணிந்த சிவனை, ஆயுதங்களின்றி வந்து, அருள வேண்டுதல்

ஸ்ரீ ருத்ர ப்ரச்னம் - நமகம் - பத்தவாது அனுவாகம்

த்ராபே அந்தஸஸ்பதே தரித்ரந்-நீலலோஹித

ஏஷாம் புருஷாணா- மேஷாம் பஸூனாம் மாபேர்மாரோ

மோ ஏஷாம் கிஞ்சநாமமத் யா தே ருத்ர ஸிவா தனூ

: ஸிவா விஸ்வாஹ பேஷஜீ ஸிவா ருத்ரஸ்ய பேஷஜீ

தயா நோ ம்ருட ஜீவஸே இமா ருத்ராய தவஸே கபர்தினே

க்ஷயத்வீராய ப்ரபராமஹே மதிம் யதா ந: ஸமஸத்

த்விபதே சதுஷ்பதே விஸ்வம் புஷ்டம் க்ராமே

அஸ்மின்னனாதுரம் ம்ருடா நோ ருத்ரோதநோ மயஸ்க்ருதி

க்ஷயத்-வீராய நமஸா விதேம தே யச்சம் ச யோஸ்ச

மனுராயஜே பிதா ததஸ்யா தவ ருத்ர ப்ரணீதௌ

மா நோ மஹாந்த-முத மா நோ அர்பகம் மா ந உக்ஷந்த

முத மா ந உக்ஷிதம் மா நோ வதீ: பிதரம் மோத

மாதரம் ப்ரியா மா நஸ்தனுவோ ருத்ர ரீரிஷ:

மாநஸ்-தோகே தநயே மா ந ஆயுஷி மா நோ கோஷு

மா நோ அஸ்வேஷு ரீரிஷ: வீரான் மா நோ ருத்ர

பாமிதோ- வதீர் ஹவிஷ்மந்தோ நமஸா விதேம தே

ஆராத்தே கோக்ன உத பூருஷக்னே க்ஷயத்-வீராய

ஸும்ன-மஸ்மே தே அஸ்து ரக்ஷõ ச நோ அதி ச தேவ

ப்ரூஹ்யதா ச ந: ஸர்ம யச்ச த்விபர்ஹா:

ஸ்துஹி ஸ்ருதம் கர்தஸதம் யுவாநம் ம்ருகந்த பீம-

முபஹத்னு முக்ரம் ம்ருடா ஜரித்ரே ருத்ர ஸ்தவாநோ

அந்யந்தே அஸ்மந்-நிவபந்து ஸேனா:

பரிணோ ருத்ரஸ்ய ஹேதிர்-வ்ருணக்து பரி-த்வேஷஸ்ய

துர்மதி- ரகாயோ: அவ-ஸ்திரா மகவத்ப்யஸ்-தனுஷ்வ

மீட்வஸ்-தோகாய தனயாய ம்ருடய

மீடுஷ்டம ஸிவதம ஸிவோ ந: ஸுமனா பவ பரமே வ்ருக்ஷ

ஆயுதம் நிதாய க்ருத்திம் வஸான ஆசர பிநாகம்

பிப்ரதாகஹி விகிரித விலோஹித நமஸ்தே அஸ்து பகவ:

யாஸ்தே ஸஹஸ்ர ஹேதயோ ன்ய-மஸ்மந்-நிவபந்து தா:

ஸஹஸ்ராணி ஸஹஸ்ரதா பாஹுவோஸ்-தவ ஹேதய:

தாஸா-மீஸானோ பகவ: பராசீனா முகா க்ருதி

. சிவகணங்களுக்கு அஞ்சலி செய்தல்

ஸ்ரீ ருத்ர ப்ரச்னம்-நமகம் - பதினொன்றாவது அனுவாகம்

ஸஹஸ்ராணி ஸஹஸ்ரஸோ யே ருத்ரா அதி பூம்யாம்

தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி

அஸ்மின் மஹத்யர்ணவே ந்தரி÷க்ஷ பவா அதி

தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி

நீலக்ரீவா: ஸிதிகண்டா: ஸர்வா அத: க்ஷமாசரா:

தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி

நீலக்ரீவா: ஸிதிகண்டா திவ ருத்ரா உபஸ்ரிதா:

தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி

யே வ்ரு÷க்ஷக்ஷú ஸஸ்பிஞ்ஜரா நீலக்ரீவா விலேஹிதா:

தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி

யே பூதானா மதிபதயோ விஸிகாஸ: கபர்தின:

தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி

யே அன்னேஷு விவித்யந்தி பாத்ரேஷு பிபதோ ஜனான்

தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி

யே பதாம் பதிரக்ஷய ஐலப்ருதா யவ்யுத:

தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி

யே தீர்தானி ப்ரசரந்தி ஸ்ருகாவந்தோ நிஷங்கிண:

தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி

ய ஏதாவந்தஸ்ச பூயா ஸஸ்ச சிஸோ ருத்ரா விதஸ்திரே

தேஷா ஸஹஸ்ர யோஜனே வதன்வானி தன்மஸி

நமோ ருத்ரேப்யோ யே ப்ருதிவ்யாம் யே ந்தரி÷க்ஷ யே திவி

யேஷாமன்னம் வாதோ வர்ஷ-மிஷவஸ்-தேப்யோ

தஸ ப்ராசீர்-தஸ தக்ஷிணா தஸ ப்ரதீசீர்-தஸோதீசீர்-

தஸோர்-த்வாஸ்-தேப்யோ நமஸ்-தே நோ ம்ருடயந்து

தேயம் த்விஷ்மோ யஸ்ச நோ த்வேஷ்டி தம் வோ ஜம்பே ததாமி

.

எங்குமாய் யாவுமாய் உள்ள முக்கண்ணனை நமஸ்கரித்தல்

த்ர்யம்பகம் யஜாமஹே ஸுகந்திம்

புஷ்டிவர்தனம் உர்வாருக - மிவ பந்தனான்

ம்ருத்யோ - முக்ஷீய - மாம்ருதாத்

யோ ருத்ரோ அக்னௌ யோ அப்ஸு ய ஓஷதீஷு

யோ ருத்ரோ விஸ்வா புவனா விவேஸ தஸ்மை ருத்ராய

நமோ அஸ்து தமுஷ்டிஹி ய: ஸ்விஷு: ஸுதன்வா

யோ விஸ்வஸ்ய க்ஷயதி பேஷஜஸ்ய யக்ஷ்வா

மஹேஸெள மனஸாய ருத்ரம் நமோபிர்-தேவ-மஸுரம் துவஸ்ய

அயம் மே ஹஸ்தோ பகவானயம் மே

பகவத்தர: அயம் மே விஸ்வ

பேஷஜோ-ய ஸிவாபிமர்ஸன:

யே தே ஸஹஸ்ர-மயுதம் பாஸா ம்ருத்யோ

மர்த்யாய ஹந்தவே தான் யஜ்ஞஸ்ய மாயயா

ஸர்வானவ யஜாமஹே

ம்ருத்யவே ஸ்வாஹா

ம்ருத்யவே ஸ்வாஹா

ஓம் நமோ பகவதே ருத்ராய விஷ்ணவே

ம்ருத்யுர்-மே பாஹி ப்ராணானாம் க்ரந்திரஸி ருத்ரோ மா விஸாந்தக:

தேனான்னேனாப்யாயஸ்வ

நமோ ருத்ராய விஷ்ணவே ம்ருத்யும்-மே பாஹி

ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி