ராதே கிருஷ்ணா 21-08-2015
கயாசுரன்
கயாசுரன்
நமது பாரத தேசத்தில் கயாசுரனுடைய உடல் மிகுந்த புண்ணியம் அடைந்ததாக கருதப்படுவதால் கயாசுரனுடைய தலை மற்றும் மார்பு பாகத்தில் ஸ்ரீ மகா விஷ்ணுவும் , தொப்புள் எனப்படும் இடத்தில் ஸ்ரீ பிரம்மனும் பாதம் அமைந்துள்ள இடத்தில் ஸ்ரீ மஹாதேவரான சிவபிரானும் அமைந்து யாகங்கள் செய்ததாக புராணங்களில் சொல்லப்படுகிறது ...கயா என்ற வுடன் அனைவருக்கும் பிஹார் மாநிலத்தில் அமைந்துள்ள கயா க்ஷேத்திரம் தான் அனைவருக்கும் தெரியும் ஆனால் மற்ற இரு கயா க்ஷேத்திரங்கள் பெரும்பாலானவர்களுக்கு வாய்ப்பு இல்லை என்பதுதான் நிதர்சனம் ...பிஹார் மாநிலத்தில் உள்ள கயா மாத்ரு கயா அதாவது ஸ்ரீமான் நாராயணன் கயாசுரனுடைய தலை மற்றும் மார்பு பாகத்தில் அமர்ந்து யாகம் செய்கிறார் ...நாபி கயா என்பது ஸ்ரீ பிரம்மன் அமர்ந்து யாகம் செய்யும் இடம் ..இது ஒரிசாவில் அமைந்துள்ளது எனப்படுகிறது ...பாத கயா என்பது ஸ்ரீ மஹாதேவர் கயாசுரனுடைய பாதத்தில் யாகசாலை அமைத்து யாகம் செய்கிறார் ..இது ஆந்திர பிரதேசத்தில் உள்ள பித்தாபுரம் என்கிற இடத்தில் அமைந்துள்ளது மிக அப்;அபூர்வமான ஆலயம் காரணம் இந்த கோவிலில் ஸ்ரீ விஷ்ணு பாதமும் கயாசுரனுடைய பாதமும் அமைந்துள்ளது அது மட்டுமின்றி அம்பாளுடைய பார்வதியுடைய பிருஷ்ட பாகம் விழுந்ததாக சொல்ல படும் இடம் ஆகவே இந்த ஸ்தலம் 18 சக்தி பீடங்களில் 10 வது இடமாக இருக்கிறது ...நம்முடைய முன்னோர்களுக்கு 64 தலைமுறைக்களுக்கு பிண்டம் தரும் இடமாக உள்ளது பாத கயா ...அதுமட்டுமின்றி உங்களுடைய ஆத்ம நண்பர்களுக்கும் சேர்த்து நீங்கள் இந்த ஆலயத்தில் தர்ப்பணம் செய்யலாம் ...இதற்காக காலை 6 மணி முதல் மதியம் 12 மணிவரை தினமும் இந்த ஆலயத்தில் திதி செய்யப்படுகிறது பல வைதீகர்களும் இருக்கின்றனர் ..சரி எப்படி செல்வது இந்த ஆலயத்திற்கு ? சென்னையிலிருந்து தினமும் மாலை கிளம்பும் சர்கார் எக்ஸ்பிரசில் ஏறினால் சாமல் கோட் ரயில் நிலையத்தில் இறங்குங்கள் அங்கிருந்து 12 கி மீ தூரத்தில் ஆட்டோவில் பித்தாரபுரம் சென்று விடலாம் , அங்கு தங்குவதற்கு இடமும் உள்ளது ஆலய நிர்வாகிகள் அதற்கு உதவி செய்கின்றனர் ....உங்களுடைய வாழ்நாளில் ஒரு முறையாவது பித்தாபுரம் ஆலயம் சென்று தரிசனம் செய்து உங்களுடைய பித்ருக்களுக்கு 64 பிண்டம் தாருங்கள் அவர்களுடைய ஆசிகளை பெறுங்கள் ...புகைப்படங்கள் : ஜெய் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக