புதன், 27 மே, 2015

மற்றும் பல ஸ்வாரஸ்ய விஷயங்கள் ஒரே கட்டுரையில்

ராதே கிருஷ்ணா 26-05-2015




‘அட அசடுகளா?! நாங்க ரெண்டு பேரும் பேசிண்டாச்சு; இப்பவும் பேசிண்டிருக்கோமேடா; இதுக்கா வருத்தமா இருக்கேள்?"-ரமண பகவான்.
(மற்றும் பல ஸ்வாரஸ்ய விஷயங்கள் ஒரே கட்டுரையில்)
”சொன்னவர்-பட்டாபி.
தொகுப்பு-சாருகேசி
'நன்றி-பால ஹனுமான் & சக்தி விகடன்
பெரியவா மடத்துக்கு வந்து பீடாரோகணம் பண்ணின காலத்துல, கஷ்டமான நிலைல இருந்தது மடம். பாங்க்ல கடன் வாங்கித்தான் நித்தியப்படி செலவுகளையே செய்யவேண்டியிருந்தது. எங்க தாத்தா மகாலிங்கய்யர்கிட்ட பெரியவா இதையெல்லாம் சொல்லியிருக்கார். அபர காரியத்துக்குதான் காய்கறி இல்லாம சமைப்பா. ஆனா இங்கே, நித்தியப்படி சமையலுக்கே காய் வாங்க வழியில்லாததால, ஆரஞ்சுப் பழத் தோலை எங்கேருந்தாவது தேடிக் கொண்டு வந்து, சாம்பார்ல போட்டுச் சமைக்கற நிலை இருந்துதாம்.
அப்பல்லாம் விவசாயிகள் நெல், வாழைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூன்னு தங்களால் முடிஞ்சதைக் கொண்டு வந்து கொடுப்பா. மத்தபடி காசா- பணமா கொடுக்கமுடியாது அவங்களால. ‘நாமளும் அதை எதிர்பார்க்கக்கூடாது’ம்பார் பெரியவா!
டீன் பருவத்துல பட்டத்துக்கு வந்தார் பெரியவா. கலவையில சேர்ந்தப்ப, அவருக்கு முன்னால பீடாதிபதியா இருந்த ஸ்ரீமகாதேவேந்திர சரஸ்வதி சுவாமிகள் முக்தி அடைஞ்சுட்டார். அதனால, ஆச்சார்யாள்கிட்டேருந்து படிக்கறதுக்கும் தெரிஞ்சுக்கறதுக்கும் வழியில்லாம போயிடுத்து. வைஷ்ணவ சம்பிரதாயத்துல ‘சுயம் ஆச்சார்ய புருஷன்’னு சொல்வாளே, அப்படித்தான் பெரியவாளும் வளர்ந்தார். முதல் நாள் காயத்ரி உபாசனை பண்ணிட்டு, மறுநாள் குருவுக்குப் பண்ணவேண்டிய காரியங்களைச் செஞ்சார் பெரியவா.
அந்தக் காலத்துல அந்தணக் குடும்பங்கள்ல, ‘நாடு பாதி, நங்கவரம் பாதி’ன்னு ஒரு வசனம் உண்டு. என்ன அர்த்தம் தெரியுமா இதுக்கு?
நங்கவரம் ஜமீன் ராஜப்ப ஐயர்னு ஒருத்தர்; அவருக்குக் காவிரிக்கரையில பதினஞ்சாயிரம் ஏக்கர் நிலம் இருந்துது. அடுத்தடுத்த காலங்கள்ல அதெல்லாம் போயிட்டுது. ஜமீனோட குடும்பத்தார், மகேந்திரமங்கலம்ங்கிற இடத்துல பாடசாலை ஒண்ணை ஏற்படுத்தி, வித்வான்கள்லாம் வர்றதுக்கு ஏற்பாடு பண்ணி, எல்லா கிரந்தங்களையும் படிச்சுத் தெரிஞ்சுக்கறதுக்கு வசதி பண்ணிக் கொடுத்தா. பெரியவா அதையெல்லாம் ‘மாஸ்டர்’ பண்ணிட்டார். அதாவது, நங்கவரம் ஜமீனும் உடையார்பாளையம் ஜமீனும்தான்மகாபெரியவாளோட வித்யாப்பியாசத்துக்கு ஏற்பாடு பண்ணினாங்கன்னு சொல்லுவா!
பெரியவாளோட தபஸ், யாத்திரை, பிரசங்கம், அவரோட புகழ்னு ஜனங்களுக்குத் தெரிய ஆரம்பிச்சப்ப… மடமும் செழித்து வளர ஆரம்பிச்சுது. அவரோட மகிமையைத் தெரிஞ்சுண்டு மடத்துக்கு உதவின மக்கள் ஏராளம். ஆனாலும், பண விஷயத்துல பெரியவாரொம்பக் கவனமா, ஜாக்கிரதையா இருப்பா. எத்தனையோ பெரிய மனுஷங்க எல்லாம் பணத்தைக் கட்டி எடுத்துண்டு வந்து பெரியவாகாலடியில கொட்டினாலும், எல்லாத்தையும் ஏத்துக்கமாட்டார். யார்கிட்டேருந்து வாங்கலாம்; யார்கிட்டே வாங்கக் கூடாதுன்னு அவருக்குத் தெரியும். அந்தக் காலத்துலேயே ஒரு பெரும் பணக்காரர் கோடி ரூபாயைக் கொடுக்க முன்வந்தப்பகூட, வேண்டாம்னு மறுத்த மகான் அவர்!
பழங்கள், அரிசி- பருப்புன்னு கொடுத்தா, வாங்கிப்பார். பணமா கொடுத்தா, தொடக்கூட மாட்டார். கிராமம் கிராமமா நடந்து போயிருக்கார். பஸ் ஸ்டாண்ட், ஸ்கூல், மரத்தடி, ஆத்தங்கரையோரம்னு, வசதி வாய்ப்புகளையெல்லாம் பார்க்காம, எங்கே இடம் கிடைக்கறதோ அந்த இடத்துல தங்கிப்பார், பெரியவா!
அவரோடயே நாங்களும் தங்குவோம்; சமைக்கிறதுக்கு அரிசி, பருப்பெல்லாம் கையோடு எடுத்துண்டு போயிடுவோம். ஒரு தடவை, சித்தூர் செக்போஸ்ட்ல இருந்த அதிகாரிகள் எங்ககிட்ட இருந்த ஒரேயரு அரிசி மூட்டையையும் பறிமுதல் பண்ணிட்டா. ‘அரசாங்கம் கேக்கறது; கொடுத்துடு’ன்னு சொல்லிட்டார் பெரியவா. ‘அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு என்ன பண்றது?’ன்னு எங்களுக்கெல்லாம் ஒரே கவலையா போச்சு! இந்த விஷயம் தெரிஞ்சதும், அப்ப ஆந்திர மாநில சீஃப் மினிஸ்டரா இருந்த என்.டி. ராமராவ் பதறிப்போயிட்டார். அரிசியைத் திருப்பிக் கொடுக்க உத்தரவு போட்டதோடு, ஓடி வந்துபெரியவாகிட்டே நேரில் மன்னிப்பும் கேட்டுண்டார். பெரியவா மேல அவருக்கு அபரிமித மரியாதை!
clip_image004உடனே பெரியவா, ‘இதுல மன்னிப்புக் கேக்க என்ன இருக்கு? அரசாங்க சிப்பந்திகள், அவாளோட கடமையைத்தானே செஞ்சா! அதுல குத்தம் சொல்லப்படாது. காஞ்சி மடத்துமேல நீங்க வைச்சிருக்கற அன்பும் மரியாதையும் என்னிக்கும் மாறாம இருக்கணும்’னு ஆசீர்வதிச்சார் கருணையுடன்!
என்.டி.ஆர், சென்னாரெட்டி, எம்.ஜி.ஆர்-னு எல்லாருமே பெரியவா மேல பெரிய பக்தியோடு இருந்தா. ‘அவா நம்ம மடத்துமேல மரியாதை வெச்சிருக்கிறது பெரிசில்லே; அந்த மரியாதையை நாம காப்பாத்திக்கணும். அதான் பெரிசு’ன்னு அடிக்கடி சொல்வார் பெரியவா!” என்று சிலிர்த்தபடி சொன்ன பட்டாபி சார், காஞ்சி மகானுக்கும் மற்ற மகான்களுக்குமான தொடர்புகளையும் விவரித்தார்.
”திருக்கோவிலூர் ஞானானந்தகிரி சுவாமிகள்னு பெரிய மகான் இருந்தார். அவர் வாழ்ந்த இடத்தைத் ‘தபோவனம்’னு சொல்வா. முக்காலமும் உணர்ந்த மகான் அவர்; உட்கார்ந்த இடத்துலேருந்தே எத்தனையோ பக்தர்களைக் காப்பாத்தி அருள்பாலிச்சிருக்கார்! எப்பவும் சிரிச்ச முகத்தோடு இருப்பார்; தெய்வாம்சம் உள்ள ஞானி. இன்னிக்குப் பிரபலமா இருக்கிற நாமசங்கீர்த்தனத்துக்கு மூல காரணம், அவர்தான்!
ஒருமுறை, அவரைத் தரிசனம் பண்ண வந்த ஜனங்களும், அங்கேயே இருக்கிறவங்களும் கவலைப்பட ஆரம்பிச்சுட்டா. ஏன்னா… சுவாமிகள் ஒரே இடத்துல உக்கார்ந்துண்டு, ஆடாம அசையாம அப்படியே ஸ்தம்பிச்சு இருந்தார். அதைப் பார்த்து என்னமோ, ஏதோன்னு பதறிப்போயிட்டா. அதுவும், சிலை மாதிரி அஞ்சாறு நாள் அசைவில்லாம உட்கார்ந்திருந்தா, பார்க்கிறவாளுக்குப் பதற்றம் வரத்தானே செய்யும்?!
யார்கிட்ட போய், என்னன்னு கேக்கறதுன்னு தெரியலை பக்தர்களுக்கு! அதே நேரம், சுவாமிகளை அந்த நிலையில் பார்க்கிறதுக்கும் மனசு சங்கடப்பட்டுது. அப்ப யாரோ சிலர், ‘எல்லாரும் உடனே காஞ்சிபுரம் போய், பெரியவாகிட்ட விஷயத்தைச் சொல்லி, என்ன பண்றதுன்னு கேளுங்கோ’ன்னு யோசனை சொல்ல… பக்தர்கள் சில பேர் கிளம்பி,பெரியவாகிட்ட வந்து, ஞானானந்தகிரி சுவாமிகள் பத்தி விவரம் சொன்னா.
எல்லாத்தையும் கேட்டுண்டபெரியவா,
‘கவலைப்படாதீங்கோ! அவருக்கு ஒண்ணும் ஆகலை. அவர் சமாதி நிலைல இருக்கார்; சாம்பிராணிப் புகை போடுங்கோ. அது ஒருவித ஆராதனை; சமாதி நிலையிலேர்ந்து எழுந்துடுவார்’னு சொன்னார். பக்தர்களுக்கு எல்லையில்லாத சந்தோஷம்.
‘சுவாமிக்கு ஒண்ணும் ஆகலே’ங்கிற மகிழ்ச்சியோடு திருக்கோவிலூருக்கு ஓடினா. பெரியவா சொன்னபடி, சாம்பிராணி புகை காட்டி, ஆராதனை பண்ணினா. அதன் பிறகு, ஞானானந்தகிரி சுவாமிகள் சமாதி நிலைலேருந்து மீண்டு வந்தார்.
ஒருமுறை, பெரியவா திருவண்ணாமலை போயிருந்தப்போ, கிரிப் பிரதட்சிணம் பண்ணினார். அவரோடு இன்னும் நாலஞ்சு பேர் போனா. கொஞ்ச நேரத்துல, பகவான் ரமணரோட சீடர்கள் சில பேர், கையில் பிட்சைப் பாத்திரத்தோடு எதிரே வந்துண்டிருந்தா. பெரியவாளைப்பார்த்ததும் நமஸ்காரம் பண்ணிட்டு, ‘நாங்க பகவான் ரமணரோட சீடர்கள். பகவான் அங்கே ஆஸ்ரமத்துல இருக்கார்’னு சொன்னா. உடனேபெரியவா, ‘அப்படியா’ங்கிறாப்பல தலை அசைச்சுக் கேட்டுண்டுட்டு, புன்னகையோடு அவங்களை ஆசீர்வாதம் பண்ணிட்டு, மேலே நடக்க ஆரம்பிச்சார்.
ரமண பக்தர்கள் கொஞ்சம் தயங்கி நின்னுட்டுக் கிளம்பிப் போனாங்க. அவாளுக்கு வருத்தம்… ரமணரைப் பத்தி, அவரோட சௌக்கியம் பத்தி,பெரியவா ஒண்ணுமே விசாரிக்கலையே; தெரிஞ்ச மாதிரியே காட்டிக்கலையேன்னு!
அந்த பக்தர்கள் மலையேறிப் போய், ஸ்ரீரமண பகவான்கிட்ட பிட்சையைக் கொடுத்துட்டு, வழியில காஞ்சிப் பெரியவாளைத்தரிசித்ததைச் சொல்லி, தங்களது வருத்தத்தையும் தெரிவிச்சாங்க.
அதைக் கேட்டதும் வாய் விட்டுச் சிரிச்சாராம், ரமண பகவான்! ‘அட அசடுகளா?! நாங்க ரெண்டு பேரும் பேசிண்டாச்சு; இப்பவும் பேசிண்டிருக்கோமேடா; இதுக்கா வருத்தமா இருக்கேள்?!’ன்னாராம். திகைச்சுப் போய் நின்னாளாம், பக்தர்கள்!
இதையெல்லாம் அப்போ நேர்ல இருந்து பார்த்த 87, 88 வயசு தாண்டின சுமங்கலி மாமி, எங்கிட்ட இதைச் சொன்னப்போ, அப்படியே நெகிழ்ந்துபோயிட்டேன்.
காஞ்சிப் பெரியவரும் ஸ்ரீரமணரும் மகா ஞானிகள்; தபஸ்விகள். அவங்களுக்குள்ளே எப்பவும் சம்பாஷணை நடந்துண்டிருக்குன்னு தெரிஞ்சபோது ஏற்பட்ட நெகிழ்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை!
பால் பிரன்ட்டன் என்பவர் ஆன்மிக விஷயமா பேசறதுக்கு மகா பெரியவாகிட்ட வந்தார். அப்ப பெரியவா, ‘அவர் ஞான மார்க்கத்துல போயிண்டிருக்கார். நான் கர்ம மார்க்கத்துலே போயிண்டிருக்கேன். உன்னோட கேள்விகளுக்கெல்லாம் பதில் தரக்கூடியவர், திருவண்ணாமலையில இருக்கார். உன் சந்தேகங்களையெல்லாம் அவராலதான் தீர்த்துவைக்க முடியும்’னு சொல்லி, பால் பிரன்ட்டனை ரமணர்கிட்டே அனுப்பி வைச்சார். பால் பிரன்ட்டனும் அதன்படியே ரமணரை வந்து சந்திச்சு, தன்னோட சந்தேகங்கள் எல்லாம் விலகி, அவரோட பக்தர் ஆகி, புஸ்தகமே எழுதினாரே!
பெரியவாளுக்கும் பகவான் ரமணருக்கும் பரஸ்பரம் அன்பு இல்லேன்னா இது நடந்திருக்குமா? மொத்தத்துல, காஞ்சி மகானும்ஸ்ரீரமண பகவானும் நம் தேசத்துக்குக் கிடைச்சது மாபெரும் பாக்கியம்!

காஞ்சி மாமுனி திருவுரு சரணம்!
ஜகமே புகழும் ஜகத்குரு - அவர்
எளிமை என்பதன் மறுவுறு
தெய்வத் தோற்றம் தான் திருவுரு - அவர்
சரணம் பாடி அருள் பெறு
சரணம் சரணம் சுவாமிகள் சரணம்
காஞ்சி மாமுனி மலர் பதம் சரணம் (ஜகமே)
மனத்தால் குணத்தால் பெரியவர்
பண்பால் அன்பால் பெரியவர்
அவர் பதம் சரண் என்று தினம் தினம் நீ பாட
துன்பமெல்லாம் துன்பம் கொண்டுகணத்தினில் ஓடி போகும் (சரணம் சரணம்)
மதத்தின் குருவாய் இரு ந்தவர்
மதச்சார்பின்றி சிற ந்தவர்.
நடமாடும் தெய்வமாய் நமக்கெல்லாம் அருள் செய்த
புனிதரான மனிதருக்கு மாலை சூடி பூஜை செய்வோம் (சரணம் சரணம்)
குருவே சரணம்! குருவடி சரணம்!
என்றோ செய்த புண்ணியப் பலனாய்,
எந்தன் உள்ளமும் இனிதென நிறைந்து,
அன்பே தனது அணிகலனாக்கி,
அகமும் புறமும் நிறைத்திட நின்றவர்!!
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!
கனிவுடன் பணிவாரைப் பணிவினில் வெல்வார்!
இனிமை ஒன்றே, தன் சொலில் வந்திட;
காணும் யாவிலும் கடவுளைக் காட்டும்,
காஞ்சி மாமுனி கழலினைப் பணிந்திட!!
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!
பழகிட எளிமை! பார்த்திட இனிமை!
அழகிய முகத்தின், அருளொளி இனிமை!
திகழும் புன்னகை, சிந்திட இனிமை!
புகலும் மொழிகள், கேட்டிட இனிமை!!
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!
இறைவன் இருப்பது இதயத்தில் உணர்ந்தேன்!
இதயம் விழைந்தவர் இணையடி பணிந்தேன்!
நாதனவன் சொல்லில் நான்மறை தெளிந்தேன்!!
நாடும் அடியவர் நற்சங்கம் சேர்ந்தேன்!
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!
குருவருள் இன்றித் திருவருள் இல்லை
குருவின் கருணையால் குறையெதும் இல்லை!
அகமதும் நிறைந்தவர் அடிமலர் பணிந்தனம்!!
அருளைப் பொழிந்திடும் அவர் தாள் சரணம்!!
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!
குருவடி சரணம்! திருவடி சரணம்!
குருவே எனத் தொழ, குறைகள் அகலும்!!
வருமொரு நாளும் வளமே அருளும்
வள்ளலவர் தாள் வணங்கியே தொழுவோம்!!
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!
காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!
காமகோடி சங்கர! காமாக்ஷி சங்கர!
— with Radha Balasubramanian and 3 others.


கடவுளுடன் ஐக்கியமாவோம்- காஞ்சி மஹா பெரியவா
* முதலில் அடக்கம் வெளியில் உண்டாக வேண்டும்.அதுவே கொஞ்சம் கொஞ்சமாக மனதிற்குள்ளும் சித்திக்கத் தொடங்கும்.
* மனம் எதை தீவிரமாக இடைவிடாமல் சிந்திக்கிறதோ அதுவாகவே மாறி விடும் தன்மை கொண்டது.
* கடவுளிடம் இருந்து பிரிந்து வந்துள்ள நாம் முடிவில் அவரிடமே ஒட்டிக் கொண்டு ஐக்கியமாக முயல வேண்டும்.
* பிறர் துன்பத்தைப் போக்க நம்மால் ஆன உதவியைச் செய்து வாழ்வது அவசியம்.
”அதிகாலை நான்கு மணி தரிசனத்தின்போது ஒருநாள், பிரதோஷம் மாமாவை அருகில் அழைத்த மகாபெரியவாள், ‘உனக்கு மாணிக்கவாசகர் பாடின திருவாசகம்- கோயில் திருப்பதிகத்துல வரிகள் ஏதாவது தெரியுமோ?’ என்று கேட்டார். பிறகு பெரியவாளே, ‘
.;தந்தது உன்தன்னைக் கொண்டது என்தன்னை சங்கரா ஆர்கொலோ சதுரர்-னு பாடியிருக்கார். எங்கே, நீ அதைத் திருப்பிச் சொல்லு!’ என்றார்.
அப்படியே பிரதோஷம் மாமா சொல்ல, மகா பெரியவாளும் அதைத் தொடர்ந்து சொல்ல… ஏதோ மந்திர உச்சாடனம்போல், ‘தந்தது உன் தன்னை, கொண்டது என்தன்னை’ என மாற்றி மாற்றி இருவரும் சொல்லிக்கொண்டே இருந்தனர். நிசப்தமான அதிகாலை வேளையில், இப்படிப் பெரியவாளும் பிரதோஷம் மாமாவும் சொல்வதைக் கேட்டு அனைவரும் அதிசயித்துப் போனார்கள். ‘இப்படியரு பாக்கியம் எவருக்குக் கிடைக்கும்?’ எனத் திளைத்தார் பிரதோஷம் மாமா. நிமிட நேரத்தில், கரகரவென வழிந்தது கண்ணீர்.
இந்தச் சம்பவம் நிகழ்ந்த பிறகு, அடுத்தடுத்துத் தொடர்ந்தன ஆச்சரியங்கள்!
கடம் வித்வான் விநாயக்ராம், அவரின் சகோதரர் சுபாஷ் சந்திரன், வயலின் கலைஞர்கள் கணேஷ்- குமரேஷ் போன்ற பக்தர்கள் பலரும் பிரதோஷம் மாமாவிடம் பேசும்போது, அவர் கட்டளை போலவோ, அறிவுறுத்துவது போலவோ ஏதேனும் சொல்வதைக் கேட்டனர். அடுத்து அவர்கள் மகா பெரியவாளைத் தரிசனம் செய்கிறபோது, பிரதோஷம் மாமா ஏற்கெனவே தங்களிடம் சொல்லிய அதே வார்த்தைகளையே மகா பெரியவாளும் சொல்வதைக் கேட்டு வியந்தனர்.
இப்படித்தான் ஒருமுறை சுபாஷ் சந்திரன், கணேஷ்-குமரேஷை அழைத்துக்கொண்டு பிரதோஷம் மாமாவின் இல்லத்துக்குச் சென்றார். சாந்நித்யம் நிறைந்த புனிதமான இடம் அது. வயலின் கலைஞர்கள் இரண்டு பேரும் அங்கேயிருந்த பெரியவாளின் திருவுருவப்படத்துக்கு முன்னே பவ்யமாக அமர்ந்து இசைத்தனர். பிறகு மாமாவை நமஸ்கரித்து, ‘உங்கள் கையால் தங்கக் காசு கிடைத்தால், அது எங்களுக்குப் பொக்கிஷம்’ என வேண்டினர். உடனே மாமாவும், ‘அதற்கென்ன குழந்தைகளா, அடுத்த மாசம் 23-ஆம் தேதி வாங்கோ; கட்டாயம் தரேன்!’ எனச் சொல்லி அவர்களை வாழ்த்தினார்.
அதன்படி அவர்கள், அந்தக் குறிப்பிட்ட தேதியில் காஞ்சிபுரம் வந்தபோது, பிரதோஷம் மாமாவின் வீட்டுக்குச் செல்லாமல், முதலில் பெரியவாளைச் சந்திக்க மடத்துக்குச் சென்றனர். பெரியவாளைத் தரிசித்து விடைபெறும் வேளையில், அவர்களைச் சற்றே காத்திருக்கச் சொல்லிவிட்டு, மடத்துச் சிப்பந்திகளிடம் ஏதோ சொன்னார் பெரியவா.
பெரியவாளின் ஆசீர்வாதமாகவும் பிரசாதமாகவும் பழங்கள் மற்றும் சால்வைகளைப் பெறுவது பக்தர்களின் வழக்கம். ஆனால், மூங்கில் தட்டில் வெற்றிலை-பாக்கு, பழங்களுடன் அந்த முறை தங்கக் காசுகளையும் அளித்தார், காஞ்சி மகான். ஆம், பிரதோஷம் மாமா தருவதாகச் சொன்ன தேதி; அதே தங்கக் காசு! இருவரும் அதிர்ந்தனர்.
‘தந்தது உன்தன்னை; கொண்டது என்தன்னை’ என மகாபெரியவா, தன்னுள் பக்தரை ஐக்கியமாக்கிக் கொண்டுவிட்டதுபோல அமைந்தது, அந்த நிகழ்வு!
இந்த வார்த்தைகளை மேலும் மெய்ப்பிப்பது போலான இன்னொரு சம்பவமும் நிகழ்ந்தது. அது…
கையில் ஏதுமின்றி, சிவனாருக்குக் கோயில் எழுப்பப் புறப்பட்டாரே, பூசலார்நாயனார்! அதே போல், பெரியவாளுக்கு கோயில் எழுப்ப வேண்டும் எனும் ஆசை, பிரதோஷம் மாமாவுக்கு. முதலில், கோயில் கட்டுவதற்கான நிலத்தைத் தேடினார் பிரதோஷம் மாமா. நண்பர்களிடமும் இதுகுறித்துச் சொல்லி வைத்திருந்தார். இப்படி, இரண்டு பக்தர்கள் இடம் தேடிச் சென்றபோது, காஞ்சிபுரத்தை அடுத்துள்ள ஓரிருக்கையில், பாலாற்றங் கரையில் கோயில் எழுப்பினால் பொருத்தமாக இருக்கும் என எண்ணினார்கள், அவர்கள்.
அன்று மாலை, பிரதோஷம் மாமா வின் வீட்டுக்குச் சென்றவர்கள், ‘பாலாற்றங்கரையில் ஓர் இடம் இருக்கு. ரம்மியமான சூழல் அங்கே நாலஞ்சு குடியானவப் பிள்ளைகள் விளையாடிண்டிருந்தாங்க. பக்கத் துலயே பாலாறு’ என்று தெரிவித்தனர். அப்போது, அந்த அறையின் மின் விளக்கு கொஞ்சம் ஒளி மங்கி, அந்த விநாடியே சட்டெனப் பிரகாசமானது. ‘இது நல்ல சகுனமா இருக்கே!’ என்று பூரித்துப்போன பிரதோஷம் மாமா, உடனே பெரியவாளைத் தரிசிக்கச் சென்றார். அப்போதைய அவரின் ஒரே பிரார்த்தனை… ‘கோயிலுக்கான நிலத்தை சூட்சுமமாக அங்கீகரிக்கணும், பெரியவா!’ என்பதுதான்.
மடத்தை அடைந்தபோது, பெரியவா விச்ராந்தியாக ஓய்வு எடுக்கச் சென்றுவிட்டதால், திரையிடப்பட்டிருந்தது. வருத்தமாகிப் போனார் பிரதோஷம் மாமா. அந்த வருத்தம், உள்ளே பெருங்கவலையாக மெள்ள மெள்ள வளர்ந்த நிலையில், மடத்தில் கைங்கர்யம் செய்துகொண்டிருந்த வேதபுரி என்பவரை, அருகில் வரும்படி அழைத்தார் மகாபெரியவா. அவரும் பெரியவாளுக்கு அருகில் செல்ல, அவரிடம் பெரியவாள் பேசுவது தெளிவாகக் கேட்டது.
‘காஞ்சியிலேருந்து நாலு கிலோ மீட்டர் தூரத்துல, வந்தவாசி போற வழியில நான் போயிண்டிருக்கேன். அங்கே ஒரு மணல் மேடு. நாலஞ்சு குடியானவப் பிள்ளைங்க விளையாடிண்டிருந்தா. திடீர்னு இருட்டிடுத்து. அப்புறம் சட்டுனு பிரகாசமாச்சு. நான் அங்கேயே தங்கிடறேன். அங்கே ஒரு பாட்டியம்மா இருந்தா!’ என்று தாம் கண்ட கனவை பெரியவா சொல்லச் சொல்ல… சிலிர்ப்பில் உடம்பே நடுங்கிப் போனது, வெளியே இருந்து கேட்டுக்கொண்டு இருந்த பிரதோஷம் மாமாவுக்கு. எதற்காக வந்தோமோ அதற்கான சம்மதத்தை, ‘நான் அங்கேயே தங்கிடறேன்’ என்று சூட்சுமமாக பெரியவாள் அருளினால், யாருக்குத்தான் தூக்கிவாரிப் போடாது?! தன்னைத் தன்னுள் இருந்தபடி இயக்குவது, அந்தக் கருணைத் தெய்வமே என நினைத்துப் பூரித்தார் மாமா.
தனது பக்தியாலும், பெரியவாளின் அனுக்கிரகத்தாலும், 1992-ஆம் வருடம், பிரதோஷம் மாமா வாங்கிய அந்த ஆறு ஏக்கர் நிலம், மகா பெரியவாளின் மணிமண்டபமாக இப்போது மாறியிருக்கிறது. அன்பர்களின் பேருதவியாலும் கடும் உழைப்பாலும் ஓரிருக்கையில் உருவாகியுள்ள அந்த மணிமண்டபத்தைத் தரிசியுங்கள்; காஞ்சி மகானின் பேரருளைப் பெறுங்கள்!


திருநீறு



திருநீறு

அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி, காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள்
வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.

அறுகம்புல் திருநீறு நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே.

எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக்கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்துமதத்தவர்களிடம் காணப்படுகின்றது.

இதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்வும் படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும். அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.

தனது உடலிலே சாம்பல் சத்துக் குறைந்துவிட்டால், வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள். புறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை நாடுகின்ற! அதே போல்த்தான் மனிதனும் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான்.

பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு. தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயன மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.

இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது.

சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு பார்த்தீர்களா!

நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து. இந்த உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள். மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் வென்றது, விளக்கம் மறைந்தது.

விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்

1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.

2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும்,

வீபூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும்
சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.
------------------------------------------------------------------------------------
தமிழ் வானொலிகளுள், ஓர் வித்தியாசமான இசைத் தொழில்நுட்பத்தில், மிகத் துல்லியமான ஒலித் தெளிவில் Tune in இல் புரட்சி எப்.எம் ஐக் கேட்டு மகிழ இங்கே கிளிக் செய்யுங்கள்

http://tunein.com/radio/Puradsi-Fm-s172414/
www.facebook.com/puradsifm 


‘இது மகாபெரியவா உத்தரவு;
நமக்கு ஒண்ணும் தெரியாட்டாலும் அவர் பாத்துப்பார்’
சொன்னவர்-பட்டு சாஸ்திரிகள்.
தொகுப்பு-சாருகேசி
'நன்றி-பால ஹனுமான் & சக்தி விகடன்”
”பிடில் சுந்தர சாஸ்திரிகள்ங்கிற பெரியவர் ஒருத்தர், ஆதிசங்கரரோட ஜயந்தியை ரொம்ப வருஷமா நடத்திண்டு வந்தார். மகாபெரியவா என்னைக் கூப்பிட்டு, ‘அவருக்கு ரொம்ப வயசாயிடுத்து. பாவம்… சிரமப்படறார். இனிமே நீ ஏத்துண்டு நடத்து’ன்னார்.
பெரியவா சொன்னபடி, கலவை கிராமத்துல சுமார் ஐம்பது வருஷமா, விடாம நடத்திண்டு வரேன். மகாபெரியவாளும் அந்த விழாவுல நிறைய முறை கலந்துண்டிருக்கா..!” – சிலிர்ப்புடன் விவரித்த பட்டு சாஸ்திரிகள், எந்த முன் அனுபவமும் இல்லாமல்,பெரியவாளின் அனுக்கிரகத்தால் மட்டுமே சமாளித்து, நல்ல பேரெடுத்த சம்பவம் ஒன்றையும் பகிர்ந்து கொண்டார்.
”சுமார் 40, 45 வருஷங்கள் இருக்கும். பாதயாத்திரை கிளம்பின மகாபெரியவா, சோளிங்கபுரத்துல வந்து தங்கினா. அது, மிகப்பெரிய நரசிம்ம க்ஷேத்திரம். அங்கே ஆஞ்சநேயர் ஆலயமும் உண்டு. ரொம்ப விசேஷமான தலம் அது.
மகாபெரியவா அங்கு முகாமிட்டிருக்கிறதைத் தெரிஞ்சுண்ட முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன், அவர் மனைவி ஜானகி, ஆந்திர தேசத்தோட ஐ.ஜி. ராமநாதன் எல்லோரும் அங்கே வந்திருந்தா. வாலாஜாபேட்டை லேருந்து கோட்டாசெட்டி, டாக்டர் வேணுகோபால்னு எல்லாரும் மகாபெரியவாளைத் தரிசிக்க வந்துட்டா.
ஸ்ரீகண்டன்னு ஒருத்தர், மடத்தைச் சேர்ந்தவர்தான். அவர்தான் மகாபெரியவாளுக்குபிக்ஷை பண்ணிப் போடுவது வழக்கம். அவர், பெரியவாளுக்கு மட்டும்தான் பிக்ஷை பண்ணுவார்; அது மட்டும்தான் அவரோட வேலை.
ஆனா, அன்னிக்கி மகாபெரியவாளுக்கு என்ன தோணித்தோ தெரியலை… என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். ”என்னைப் பார்க்கணும்கிறதுக்காகச் சிரமப்பட்டு எல்லாரும் இந்த ஊருக்கு வந்திருக்கா. அவாளைப் பசியும் பட்டினியுமா இருக்கவிடலாமா? தப்பில்லையோ! நீ என்ன பண்றே, அவாளுக்கெல்லாம் உன்னால முடிஞ்சதை சமைச்சுப் போட்டுடு”ன்னார்.
அதைக் கேட்டதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டுது. ஒரு நிமிஷம், அப்படியே பேச்சுமூச்சு இல்லாம நின்னுட்டேன். பின்னே… எனக்கு சமைக்கவே தெரியாது. ‘எனக்கு என்ன சமைக்கத் தெரியும்னு, மகாபெரியவாஎன்னைப் போய் சமைச்சுப்போடச் சொல்றார்?’னு தவிச்சுப்போயிட்டேன். ஆனா, அவர்கிட்டே போய், ‘எனக்குச் சமையல் தெரியாது. வேற யார் கிட்டேயாவது சொல்லுங்கோ’னு சொல்லமுடியுமா, என்ன? பத்து வயசுலேருந்து பெரியவாளைப்பார்த்துண்டிருக்கேன். யாரையும் எந்தச் சங்கடத்துலயும் மாட்டிவிடமாட்டார்னு தெரியும். அதனால அவரே இந்தக் காரியத்துக்கும் ஒத்தாசையா, பக்கபலமா இருப்பார்னு முழுசா நம்பினேன்.
சத்திரத்து மேனேஜர்கிட்டே போய், பாத்திரங்களைக் கேட்டு வாங்கிண்டு வந்தேன். அங்கே… பக்கத்துலயே இருந்த பெட்டிக் கடைல ஒரு தேங்காயும், கொஞ்சம் வெஞ்சனமும் வாங்கிண்டேன்.
அது ஒரு மலையடிவாரம். அந்த இடத்துல, அம்மிக்கல்லுக்கு எங்கே போறது? கொஞ்சம் நீட்டமா இருந்த கல்லு மேல பருப்பு, தேங்காய், மிளகாய்னு எல்லாத்தையும் சேர்த்து வெச்சு அரைச்சுத் துவையல் பண்ணினேன்.
அங்கங்கே கிடந்த கல்லைப் பொறுக்கிண்டு வந்து, அடுப்பு தயார் பண்ணிண்டேன். காஞ்ச குச்சிகளையெல்லாம் பொறுக்கி எடுத்துண்டு வந்து, அடுப்பை மூட்டி சாதம், ரசம் செஞ்சு இறக்கினேன். யாரோ அரிசி கொடுத்திருந்தா. அந்த அரிசியைக் காமிச்சு, ‘இதப் பார்… ராஜா மாதிரி இருக்கு அரிசி!’ன்னு எடுத்துக்கச் சொன்னார் பெரியவா.
ஒரு மலையின் மேல நரசிம்மர்; இன்னொரு சின்ன மலையின் மேல ஆஞ்சநேயர். ரெண்டு மலையிலேயும் ஏறி, தரிசனம் பண்ணினோம். பெரியவாளும் மலைகள் மீது ஏறி வந்து, ஸ்வாமி தரிசனம் பண்ணினார்.
கீழே இறங்கறதுக்கு மத்தியானம் ஆயிடுத்து. அவாளுக்கெல்லாம் நல்ல பசி. எல்லாரையும் உக்கார வெச்சு, சாப்பாடு பரிமாற ஏற்பாடு பண்ணினேன். வந்திருக்கிறவா எல்லாரும் பெரிய மனுஷா. தேசத்துல முக்கியப் பதவிகள்ல இருக்கறவா. இதுவரை, சமைக்கவே சமைக்காதவன் நான். என்னோட சமையல் அவாளுக்குப் பிடிக்குமோ, இல்லையோ?! பயத்தோடயே பரிமாறினேன். ஆனா, வந்தவா எல்லாரும் திருப்தியா சாப்பிட்டா. எனக்குப் பரம நிம்மதி.
‘வைதீக, சம்பிரதாய சாஸ்திரங்கள் மட்டும்தான் எனக்குத் தெரியும். சமைக்கத் தெரியாது’ன்னு பெரியவாகிட்ட சொல்லி, கையக் கட்டிண்டு சும்மா இருந்துடலை நான். ‘இது மகாபெரியவா உத்தரவு; நமக்கு ஒண்ணும் தெரியாட்டாலும் அவர் பாத்துப்பார்’னு அசைக்க முடியாத தைரியம் உள்ளுக்குள்ளே இருந்துது. அவருடைய அனுக்கிரகம்தான், என்னைக் காப்பாத்தித்து!
சமையல் நன்னா இருந்துதுன்னும், வயிறு நிறைய, ருசிச்சுச் சாப்பிட்டதாவும் எல்லாரும் சொன்னா. உத்தரவு வாங்கிக்கறதுக்காகப் போனப்ப, பெரியவாகிட்டயும் என்னைப் பத்தி சிலாகிச்சு ஏதோ சொன்னாப்போல இருக்கு. வந்தவா எல்லாரும் போனப்புறம், பெரியவா என்னைக் கூப்பிட்டா. உள்ளூர பயமா இருந்தாலும், பெரியவா எதிர்ல போய் நின்னேன்.
”ரொம்ப நல்ல காரியம் பண்ணினே! க்ஷேமமா இருப்பே!”ன்னு கையைத் தூக்கி, ஆசீர்வாதம் பண்ணினார் மகாபெரியவா. ”அது போதும் எனக்கு! அவரோட ஆசீர்வாதம் போதும், மனசு நிறையறதுக்கு! அதைவிட வேறென்ன வேணும்?!” – நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் பட்டு சாஸ்திரிகள்




"தர்மத்துக்கும் குந்தகம் இல்லாமல், பக்தர் மனமும் ஆனந்தப்படும்படி செயல்பட்ட கருணை",

'எள்ளுப் புண்ணாக்கும் தையல் இலையும்'

(முன்பு படித்த கட்டுரை சற்று விரிவாக)

”சொன்னவர்-அகிலா கார்த்திகேயன்.
(இவர் பிரதோஷம் மாமா உறவினர்)

தொகுப்பு-சாருகேசி

'நன்றி-பால ஹனுமான் & சக்தி விகடன்”

காஞ்சி மகா பெரியவாளின் பக்தர் ஒருவர்,
சாஸ்திர நியதிகளை உயிராகப் போற்றி வந்தார்.
இவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது.
குடும்பநலனையும் எதிர்காலத்தையும் கருத்தில்
கொண்டு,வெளிநாடு செல்லும் வாய்ப்பை
ஏற்றுக்கொண்டார். அந்த நாட்டின் சூழலும் பணியின்
தன்மையும் திருப்தியே என்றாலும்,
'சாஸ்திரத்தை மீறிவிட்டோமோ' என்கிற உறுத்தல்,
பக்தரை வாட்டியது.தனது மனக்கலக்கத்துக்கு
மருந்தாக...மகா பெரியவாளை அனுதினமும்
தியானித்து வந்தார்.

ஒரு விடுமுறையில் இந்தியா வருவதற்கான ஏற்பாடுகளை ஆசை ஆசையாகச செய்தார். குடும்பத்தாரைப் பர்க்கப் போகிறோம் என்பதைவிட,வெகு நாட்களுக்குப் பிறகு காஞ்சிமகானைத் தரிசிக்க போகிறோம் என்கிற குதூகலமே அவருக்கு அதிகம் இருந்தது.

சென்னை வந்ததும்,விமானநிலையத்தில் இருந்து டாக்சி பிடித்து காஞ்சிபுரம் சென்றார்.

காஞ்சிமடத்தில், அன்றைய சமையல் குறித்து சிப்பந்திகளிடம்பேசிக்கண்டிருந்தார் மகா பெரியவா. தரசனத்துக்காக வந்திருந்தஅடியவரகளுக்கு வியப்பு.'சமையல்'இன்னின்னமாதிரியெல்லம்இருக்க
வேண்டும்என்பதுமுதறகொண்டுபெரியவாசிரத்தைஎடுத்துக்கொள்கிறாரே? இதுவரை இப்படியல்லாம் சொன்னது கிடையாதே என்ற ஆச்சரியம் அவர்களுக்கு.

இந்த நிலையில்தான் மடத்துக்கு வந்துசேர்ந்தார் பக்தர். மகாபெரியவாளைக் கண்டதும் நெடுஞ்சாண்கிடையாக
வீழ்ந்து வணங்கினார். அவரை ஆசீர்வதித்த பெரியவா, சிப்பந்திகளைஅழைத்து, ”இவருக்கு, உடனே ஆகாரம் பண்ணி வையுங்கோ” என்றார்.

வந்ததும் வராததுமாக அந்தப் பக்தரை சாப்பிட அழைத்துச் செல்லும்படிபெரியவா சொல்வது ஏன் என்று ஊழியர் களுக்குப் புரியவில்லை. ஆனால்,கடல் கடந்து தன் பக்தன் வந்திருக்கிறான்; வந்ததும், தன்னைத் தரிசிக்க ஓடிவந்துவிட்டான். எனில், அவனுடைய நிலை என்ன என்பது பெரியவாளுக்குத்தெரியாதா?!

வயிறாரச் சாப்பிட்டு முடித்த பக்தர், மீண்டும் மகாபெரியவாளுக்கு எதிரில் வந்து நின்றார். அவரை உற்றுப் பார்த்த பெரியவா, ”என்ன… உன் விரதம் பூர்த்தி ஆயிடுத்தா?” என்றார் கருணையும் கரிசனமும்பொங்க..

அதைக் கேட்டு வியந்து நின்றார் பக்தர்; அவரிடமிருந்துவார்த்தைகளே வரவில்லை! ‘பெரியவா… பெரியவா…’ என்று திருப்பித்திருப்பிச் சொன்னபடியே இருந்தார்; கண்களில் கரகரவென நீர் வழிந்தது!

மெள்ளப் புன்னகைத்த காஞ்சி மகான், ”நானே சொல்லி டறேன்!” என்றுஆரம்பித்தார்… ”இவர், வெளிநாட்டுலே இருந்து வர்றார். அங்கேபுறப்பட்டதுலேருந்து எந்த ஆகாரமும் எடுத்துக்கல. என்னை வந்து பார்க்கறவரைக்கும் ஆகாரம் எடுத்துக்கறதில்லேன்னு ஒரு சங்கல்பத்தோட விரதமாஇருந்து, இங்க வந்து சேர்ந்திருக்கார்…” என்றவர், பக்தரைப் பார்த்து, ”என்னநான் சொல்றது சரியான்னோ?” என்று கனிவுடன் கேட்டார்.

அவ்வளவுதான்…தரிசனத்துக்காக நின்றிருந்த அனைவரும் அசந்துபோனார்கள். எனில், அந்தப்பக்தரை கேட்கவும் வேணுமா… நெக்குருகி நின்றார் அவர்!

இதற்கு நடுவில்இன்னொரு சம்பவமும் நடந்தது. அந்த பக்தர் சாப்பிடச் சென்றிருந்தநேரத்தில், தன்னை தரிசிக்க வந்திருந்த மற்றஅன்பர்களிடம்,”வெளிநாட்டுலேருந்து இப்ப இங்கே வந்திருக்காரே…அவர்கிட்டேயிருந்து நான் என்ன கேட்டு வாங்கலாம்னு சொல்லுங்கோ”என்று கேட்டாராம்

. இதுவும் அங்கேயுள்ளவர்களுக்கு ஆச்சரியத்தைஅளித்தது. ஏனெனில், எவரிடமும் ‘இதைக் கொடு, அதைக் கொடு’ என்றுஎதையும் கேட்டறியாதவர் பெரியவர். ஆகவே, பதில் சொல்லத் தெரியாமல் திகைத்துப் போனார்கள் அந்த அன்பர்கள்.

இந்த வேளையில்தான்… சாப்பிட்டுமுடித்து மீண்டும் பெரியவாளைத் தரிசிக்க வந்தார் அந்த பக்தர்! அவரையும்சுற்றியிருந்த மற்ற அடியவர்களையும் மெல்லிய சிரிப்புடன் பார்த்தமகாபெரியவா, ”இவருகிட்டேயிருந்து என்ன கேட்டு வாங்கலாம்னு யாருமேசொல்லலையே…” என்று கேட்டுவிட்டு, அவரே தொடர்ந்தார்…

”சரி சரி… இவரை அழைச்சுண்டு போய், எள்ளு புண்ணாக்கையும் தையல்இலையையும் எனக்காக வாங்கித் தரச் சொல்லி, வாங்கிக்கோங்கோ!”என்றார்.

அந்த பக்தர், பரம சந்தோஷத்தில் திளைத்தார். ‘தெய்வத்துக்குநிகரான காஞ்சி மகான், தன்னிடம் கேட்டு வாங்கிக்கொண்டாரே’ என்றுநெகிழ்ந்தார்..ஆனால், மடத்தில் கைங்கர்யம் செய்பவர்களுக்கு மட்டும் சற்றுதவிப்பு; ஆனால் பெரியவாளிடம் நேரே கேட்கவும் தயக்கம்!

இதையெல்லாம்உணராமல் இருப்பாரா பெரியவா. அவர்களைப் பார்த்து புன்னகைத்தவர், ”இந்த பக்தர், என் மேல ரொம்ப பக்தியா, அபிமானமா இருக்கார். எங்கிட்டஇருக்கற பிரியத்துனால எனக்கு எதையாவது சேர்ப்பிக்கணும்னு ரொம்பவும்ஆசைப்படறார். ஆனா கடல்கடந்து போனவாகிட்டேருந்து, அப்படி எதையும்வாங்கிண்டுட முடியாதபடி, தர்மம் தடுக்கறது. இருந்தாலும் எனக்குஎன்னோட பக்தர் முக்கியம் இல்லையா?! அவரோட மனசை நோகவிட்டுடமுடியுமா?” என்று கூறிவிட்டு சற்றே நிறுத்தியவர், மீண்டும் தொடர்ந்துபேசினார்.

”இப்போ அவர் வாங்கிண்டு வர எள்ளுப் புண்ணாக்கை, மடத்துல இருக்கிறபசு மாட்டுக்குக் கொடுங்கோ அந்தப் பசுகிட்டே இருந்து தினமும் கறக்கிறபாலை எனக்குக் கொடுங்கோ. நான் சந்தோஷமா ஏத்துக்கறேன். ஏன்னா,இப்போ அவர் கொடுத்த புண்ணாக்கைப் பசுமாடு சாப்பிட்டு, அது கொடுக்கறபாலில் அந்த தோஷம் எல்லாம் போயிடறதோன்னோ? பசு மாட்டு வழியாவந்தா எல்லாவிதமான தோஷமும் நிவர்த்தியாயிடும். அதனால அவர்மனசுல நெனச்சபடி,எனக்குக் கொடுத்த மாதிரியும் ஆச்சு. அதை நான்ஏத்துண்ட மாதிரியும் ஆச்சு. இல்லையா?” என்றார் விளக்கம் சொல்வதுபோல!

இப்படி, தர்மத்துக்கும் குந்தகம் இல்லாமல், தன் மீது அபிமானமும்பக்தியும் செலுத்தும் பக்தர் மனமும் ஆனந்தப்படும்படி செயல்பட்டகருணை,மகாபெரியவாளைத் தவிர வேறு யாருக்கு இருக்கும்

ஸ்ரீ மஹாபெரியவா தோடகாஷ்டகம்
அரும் நாயகனே, இறைத் தூதுவனே
கடும் காலனை வீழ்த்திய காவலனே |
சரணம் புகுந்தேன் அபயம் தருவாய்
ஸ்ரீ சந்திர சேகரரே சரணம் ||
ஹரணாய் தொழுதேன், அரணாய் அருள்வீர்
மருள் நீக்கியே காத்திடும் மாதவனே |
திரைகள் விலக்கி மறையை உணர்த்தும்
ஸ்ரீ சந்திர சேகரரே சரணம் ||
தவ மா முனிவா, இறைவா அருள் வா
அவ-தாரமாய் வந்தனை ஆதி சிவா |
புவி மேவிடும் பாவங்கள் போக்கிடுவாய்
ஸ்ரீ சந்திர சேகரரே சரணம் ||
கருணா நிதியே, அருள் மாமணியே
பிறை சூடியனே, குறை தீர்ப்பவனே |
உரை வாசகம் யாவிலும் ஈர்ப்பவனே
ஸ்ரீ சந்திர சேகரரே சரணம் ||
விழித் தாமரைகள் பழியை அழிக்கும்
பொழித்தேன் சுவையோ மகிழ்வை அளிக்கும் |
எழில் காஞ்சியை காத்திடும் ஜகத் குருவே
ஸ்ரீ சந்திர சேகரரே சரணம் ||
வேதத்தை காத்திட்ட வேந்தன் இவன் எங்கள்
வேதனை தீர்த்திட்ட நாதன் இவன் |
உருவே, அருவே, குருவே, திருவே
ஸ்ரீ சந்திர சேகரரே சரணம் ||
மறை நான்கினிற்கும் உரை ஆனவனே
கரை ஏதுமிலா அருட் சாகரமே |
சிறை வாழ்வினையே நிறை ஆக்கி அருள்
ஸ்ரீ சந்திர சேகரரே சரணம் ||
அந்த விண்ணுறை தேவரும் தேடி வர
இந்த மிண் விசை தெய்வமாய் நீர் இருந்தீர் |
எந்தக் காலமும் உம் பதம் சார்ந்திருப்போம்
ஸ்ரீ சந்திர சேகரரே சரணம் ||



ஸ்ரீஸ்ரீஸ்ரீ காஞ்சீ மஹா பெரியவா ஜகத்குரு அஷ்டகம்

நமஸ்தேஸ்து குரு நாதம்
காஞ்சீ பீடம் ஸுரபூஜிதம்
திவ்ய ஞான அபய ஹஸ்தம்
காஞ்சீம் ஜகத்குரும் நமோஸ்துதே ||

நமஸ்தே சிவப்ரகாசம்
புத்திமதாம் வரிஷ்டம்
லோக சமஸ்தக பாப ஹரே
காஞ்சீம் ஜகத்குரும் நமோஸ்துதே ||

ஜ்யோதிர்மயம் தேஜோமயம்
ரோகவிநாசன மோக்ஷப்ரதம்
ஸர்வ துக்க நிவாரணம்
காஞ்சீம் ஜகத்குரும் நமோஸ்துதே ||

ஆபத்பாந்தவம் அனாத ரட்சகம்
சம்ஸார மமதைவதம்
ஸகல சோக விநாசனம்
காஞ்சீம் ஜகத்குரும் நமோஸ்துதே ||

சந்த்ர மௌலீஸ்வரப்ரிய
சத்குருநாதம் ப்ரத்யக்ஷமதைவதம்
ஸர்வ தரித்ர விநாசனம்
காஞ்சீம் ஜகத்குரும் நமோஸ்துதே ||

ஸுமனோகரம் அபார கருணா மூர்த்திம்
பரமாத்மபாவம் பக்த ஜன மித்ரம்
சௌபாக்ய தாயக ஹரே
காஞ்சீம் ஜகத்குரும் நமோஸ்துதே ||

பாஸ்கர ப்ரகாசம் லோக நாயகம்
பரப்ரும்ம ஸ்வரூபம் சுபம்
கைவல்ய நவநீத ஸாதனம்
காஞ்சீம் ஜகத்குரும் நமோஸ்துதே ||

ஞான சாகரம் க்ருபா சாகரம்
மந்தஹாஸ அரவிந்த ஸங்காச வதனம்
ஸத்ய சம்ரட்சணம் குரு அவதாரம்
காஞ்சீம் ஜகத்குரும் நமோஸ்துதே ||

ஜகத்குரு அஷ்டக ஸ்தோத்ரம்
ய:படேதி பக்திமான் நர:
ஸர்வ மனோபீஷ்ட சித்திகரதேவம்
அஷ்ட சித்தி வரப்ரதம் ||

ப்ராத: கால படேந் நித்யம்
ரோக சோக சாந்தியே
ஏக கால படேந் நித்யம்
பாப சத்ரு விநாசனம் ||

த்விகாலம் ய:படேந் நித்யம்
ஆயு ஆரோக்ய ஸித்திம்
த்ரிகாலம் ய:படேந் நித்யம்
ஸர்வ கார்யேஷூ ஸித்திதம் ||

ஸ்ரீ ஜகத்குரும் நித்ய ஸ்மரணார்த்தம்
ஸர்வ மங்களானி பவந்து.
Courtesy: KANCHI ACHARYAS






"தென்கலை நாமம் போட்ட பிள்ளையார் இருக்காரேனு பிரமிச்சுட்டியோ? வைஷ்ணவ சம்பிரதாயப்படி அவரை ‘தும்பிக்கை ஆழ்வார்‘னு சொல்லுவா!”

சொன்னவர்-பட்டு சாஸ்திரிகள்.

தொகுப்பு-சாருகேசி

'நன்றி-பால ஹனுமான் & சக்தி விகடன்”

திருமழிசைஆழ்வார் பிறந்த க்ஷேத்திரம் திருமழிசை. அந்த ஊருக்குப் பக்கத்திலேயே நூம்பல்னு ஒரு கிராமம் இருக்கு. இங்கே, மகா பெரியவா ஒருமுறை முகாமிட்டிருந்தார்.

ஒருநாள்… திருக்குளத்துல ஸ்நானம் பண்ணிட்டு, பக்கத்திலேயே இருக்கிற பெருமாள் கோயிலுக்கு வந்தார் பெரியவா. அப்போ மணி 11 இருக்கும்; சுள்ளுனு வெயில் அடிச்சிண்டிருந்தது. சூடுன்னா அப்படியொரு சூடு!

கோயில் வாசல்ல பெரிய கதவும், அதுலேயே சின்னதா ஒரு கதவும் இருக்கும். அதைத் திட்டிவாசல்னு சொல்லுவா! அந்த வழியா உள்ளே போன பெரியவா, மதிலை ஒட்டி கொஞ்சம் நிழல் இருந்த இடத்துல போய் அப்படியே சாய்ஞ்சு உட்கார்ந்துட்டார். அவருக்கு எதிரே அடியேன்; பெரியவா கேக்கறதுக்கு எல்லாம் பதில் சொல்லிண்டு இருந்தேன்.

வெயில் நெருப்பா கொதிச்சிண்டு இருந்த இடத்துல நின்னுண்டிருந்தேன். இன்னும் கொஞ்ச நேரம் அப்படியே நின்னுண்டிருந்தா, காலே பொசுங்கிடும்போல இருந்துது. அப்படியரு சூடு! பெரியவாகிட்டே பேசிண்டிருந்த அதே நேரம், தரையோட சூடு பொறுக்கற வரைக்கும் ஒரு கால், அப்புறம் சட்டுன்னு அடுத்த கால்… இப்படியே கால்களை மாத்தி மாத்தி வெச்சு நின்னு சமாளிச்சுண்டிருந்தேன்!

மகா பெரியவா, நம்மோட மனசுல என்ன இருக்குங்கறதையே தெரிஞ்சுக்கற மகான். எதிர்ல நிக்கற என்னோட நிலைமை அவருக்குத் தெரியாம இருக்குமா? சட்டுன்னு பேச்சை நிறுத்தின பெரியவா, ”வெளியில என்னவோ பேச்சு சத்தம் கேக்கற மாதிரி இருக்கு. என்னன்னு போய்ப் பார்த்துட்டு வந்து சொல்லு!”ன்னார்.

விறுவிறுன்னு வெளியே வந்தேன். வாசல்ல நின்னு
எட்டிப் பார்த்தேன். அங்கே ஒரு நூத்தம்பது, இருநூறு பேர் நின்னுண்டிருந்தா.எல்லாரும்மகா பெரியவாளை
தரிசிக்கிறதுக்காகத்தான் நிக்கறாங்கன்னு தோணுச்சு. பெரியவாகிட்ட வந்து விவரத்தைச் சொன்னேன்.

ஆனா மகா பெரியவாளோ, ”அவா எதுக்கு வந்திருக்கா? ஸ்வாமி தரிசனத்துக்குதானே வந்திருக்கா?! சரியா கேட்டுண்டு வா!”ன்னு மறுபடியும் என்னை அனுப்பினார்.

‘அடடா… பெரியவா சொல்றதுபோல, வெளியில நிக்கறவா எல்லாரும் ஸ்வாமி தரிசனத்துக்கு வந்திருக்கலாம், இல்லையா? நமக்குத் தோணாம போச்சே!பெரியவாளை தரிசனம் பண்ணத்தான் வந்திருக்கானு நானாவே எப்படி நினைச்சுக்கலாம்?’ என்று யோசிச்சபடி, வாசல் பக்கம் நகர்ந்தேன்.

”அப்படியே கையோட, அவாள்லாம் வெயில்ல நிக்கறாளா, நிழல்ல நிக்கறாளானு பார்த்துண்டு வா”ன்னார் பெரியவா.

‘நீ மட்டும்தான் கால் சூட்டோட என்கிட்ட பேசிண்டு நிக்கறதா நினைக்கறியோ?! உன்னைப்போல எத்தனை பேரு வெயில்ல கால்கடுக்க நின்னுண்டிருக்கானு உனக்குத் தெரியவேணாமா?’ன்னுதான், மகா பெரியவா என்னை அனுப்பிவைச்ச மாதிரி தோணிச்சு எனக்கு.

ஜனங்க கூட்டமா நின்னுண்டிருந்த இடத்துக்கு வந்தேன். ”எல்லாரும் கோயிலுக்கு ஸ்வாமி தரிசனத்துக்கு வந்திருக்கேளா… இல்ல, மகா பெரியவாளை தரிசிக்க வந்திருக்கேளா?”ன்னு கேட்டேன்.

”பெரியவாளை தரிசனம் பண்ணி, ஆசீர்வாதம் வாங்குறதுக்குதான் வந்திருக்கோம்”னு கோரஸா பதில் சொன்னா. ஓடி வந்து பெரியவாகிட்ட விஷயத்தைச் சொன்னேன்.

அவர் உடனே எல்லாரையும் உள்ளே அனுப்பிவைக்கச் சொன்னார். ”இங்கே மதிலோட நிழல் விழறது. எல்லாரும் அப்படியே நிழல்ல உட்கார்ந்துக்குங்கோ”ன்னார்.

வெயிலின் உக்கிரத்தைத் தாங்கமுடியாம தவிச்ச என்னோட நிலைமையைக் கவனிச்ச அதே நேரம், வெளியே ஜனங்க நின்னுட்டிருக் கிறதையும், அவங்களும் வெயில்ல கஷ்டப் படுவாங்களேங்கிறதையும் பெரியவா யோசிச்சு, அவங்களை உடனே உள்ளே அனுப்பச் சொன்னார் பாருங்கோ, அதான்பெரியவாளோட பெருங்கருணை.

இதைக் கேட்கறதுக்கு ரொம்பச் சின்ன விஷயம்போலத் தெரியலாம். ஆனா, எந்த ஒரு சின்ன விஷயத்துலேயும் நுணுக்கமான பார்வையோடு, ஜனங்க மேல மகா பெரியவா காட்டின அன்பையும் அக்கறையையும்தான் நாம இங்கே முக்கியமா கவனிக்கணும்.

கூட்டத்தோடு பேசிண்டிருந்த நேரத்துல, ”நீ போய் கோயிலைச் சுத்திப் பார்த்துட்டு வா”ன்னு என்னை அனுப்பினார். பெரியவா உத்தரவு ஒவ்வொண்ணுக்கும் ஏதாவது உள் அர்த்தம் ஒண்ணு இருக்கும்.

நான் பிராகாரத்தை வலம் வந்தப்ப, அங்கே பிள்ளையார் சந்நிதியைப் பார்த்தேன். ஆச்சரியமும் குழப்பமுமா இருந்தது. தென்கலை நாமத்தோட காட்சி தந்தார் பிள்ளையார். பெருமாள் கோயில்ல பிள்ளையார் எப்படி? தலையைப் பிய்ச்சுண்டேன். யோசிக்க யோசிக்க, பதிலே கிடைக்கலை.

கோயிலைச் சுத்தி முடிச்சு, மகா பெரியவா எதிரே வந்து நின்னேன். என்னை ஒருகணம் உத்துப் பார்த்தார்.

”என்ன… தென்கலை நாமம் போட்ட பிள்ளையார் இருக்காரேனு பிரமிச்சுட்டியோ? வைஷ்ணவ சம்பிரதாயப்படி அவரை ‘தும்பிக்கை ஆழ்வார்‘னு சொல்லுவா!”னு விளக்கம் சொல்லிட்டுச் சிரிச்சார் பெரியவா



சங்கர பூஜா(Part-2)
நிர்வாணாஷ்டகம்

சங்கர பூஜா(Part-2)
நிர்வாணாஷ்டகம்
1. மனமும் நானல்ல; புத்தியும் நானல்ல; நான் என்ற அகங்காரமும் நானல்ல; அறிவும் சக்தியும் நானல்ல. உடலின் அங்கங்களும் நானல்ல; ஆகாயம், பூமியும் நானல்ல; ஜோதியும் நானல்ல; காற்றும் நான் அல்ல. ஆனந்த மயமான சிவனே நான் - நானே சிவன்.
2. உச் சுவாச, நிச் சுவாச மூச்சினால் ஆனவன் அல்ல, நான். கப, பித்தம் முதலிய ஏழு தாதுக்களால் ஆனவனுமல்ல; பஞ்ச (ஐந்து) கோசத்தால் ஆனவனும் அல்ல. வாக்க நான் அல்ல, கை கால்களும் நான் அல்ல. ஆனந்த மயமான சிவனே நான் - நானே சிவன்.
3. துவேஷம் எனக்கில்லை; ராகமும் (அன்பும்) எனக்கு இல்லை. லோபமும் எனக்கில்லை; மோகமும் எனக்கில்லை. மதமும் எனக்கில்லை, மாத்சர்யமும் (சினமும்) எனக்கில்லை, தர்மத்துக்கும் தொடிசு இல்லை, சம்பத்துக்கும் சம்பந்தமில்லை. ஆனந்தமயமான சிவனே நான் - நானே சிவன்.
4. புண்ணிய பாவமும் எனக்கேது? ஓதுவது, தீர்த்தாடனம் எனக்கேது? வேதம், வேள்வி எனக்கேது? சுகம் ஏது? துக்கம் ஏது? ஹவிஸ் நானல்ல; அனுபவிக்கிறவனும் நானல்ல; அனுபவிக்கப்படுபவனும் நானல்ல! ஆனந்தமயமான சிவனே நான்; நானே சிவன்.
5. மிருத்யுவிடம் (மரணத்திடம்) எனக்குப் பயமில்லை. ஜாதி வித்தியாசம் எனக்கில்லை. தகப்பனும் இல்லை; தாயும் இல்லை; பிறவியும் எனக்கில்லை; பந்துவும் இல்லை; சினேகிதனும் எனக்கில்லை. ஆசானும் இல்லை; சிஷ்யனும் எனக்கில்லை. ஆனந்தமயமான சிவனே நான் - நானே சிவன்.
6. சஞ்சலம் இல்லாதவன்; உருவங்களால் கட்டுப்படாதவன்; இந்திரியங்கள் அனைத்தையும் ஜயித்தவன்; பற்றை அறவே துறந்தவன்; எனக்கு முக்தியே. பந்தமோ விஷயமோ இல்லை. ஆனந்தமய சிவனே நான் - நானே சிவன். சொல்லும் அதன் பொருளும் போல் இணைபிரியாத ஜகத்துக்கே தாய் தந்தையராக விளங்கும் பார்வதி பரமேசுவரரை நான் வணங்குகிறேன். சொல்லும் அதன் பொருளும் நான் நன்றாக அறிவதற்கு அருள வேண்டும்.
பஜ கோவிந்தம்
பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் கோவிந்தம் பஜ மூடமதே
ஸம்ப்ராப்தே ஸன்னிஹிதே காலே நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே
மூட ஜஹீஹி தன ஆகம த்ருஷ்ணாம் குரு ஸத்புத்திம் மனஸி வித்ருஷ்ணாம்
யல்லபஸே நிஜ கர்மோபாத்தம் வித்தம் தேன வினோதய சித்தம் நாரீ ஸ்தனபர நாபி தேசம் த்ருஷ்ட்வாமாகா மோஹாவேசம்
ஏதன் மாம்ஸவஸாதி விகாரம் மன்ஸி விசிந்தய வாரம் வாரம்
நளினீ தள கத ஜலமதிதரளம் | தத்வஜ்ஜீவிதம் அதிசய சபலம்
வித்தி வ்யாத்யபிமானக்ரஸ்தம் | லோகம் சோகஹதம்ச ஸ்மஸ்தம்
யாவத் வித்தோபார்ஜன ஸக்த | தாவன்னிஜ பரிவாரோ ரக்த:
பச்சாத் ஜீவதி ஜர்ஜர தேஹே | வார்த்தாம் கோsபின ப்ருச்சதி கேஹே
யாவத் பவனோ நிவஸதி தேஹே | தாவத் ப்ருச்சதி குசலம் கேஹே
கதவதி வாயௌ தேஹாsபாயே | பார்யா பிம்ப்யதி தஸ்மின் காயே
பாலஸ்தாவத் க்ரீடா ஸக்த | தருணஸ்தாவத் தருணீ ஸக்த:
வ்ருத்தஸ்தாவத் சிந்தாsஸக்த | பரமே ப்ருஹ்மணி கோபினஸக்த:
காதே காந்தா கஸ்தே புத்ர | ஸம்ஸாரொயம் அதீவ விசித்ர:
கஸ்யத்வம் க: குத ஆயாத | த்த்வம் சிந்தய த்திஹ ப்ராந்த:
ஸத் ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம் | நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம்
நிர்மோஹத்வே நிச்சல தத்வம் | நிச்சல தத்வே ஜீவன் முக்தி:
வயஸி கதே க:காமவிகார | சுஷ்கே நீரே க:காஸார:
க்ஷீணே வித்தே க:பரிவார | ஞாதே தத்வே க:ஸம்ஸார:
மாகுருதன ஜன யௌவ்வன கர்வம் | ஹரதி நிமேஷாத் கால:ஸ்ர்வம்
மாயாமயம் இதம் அகிலம் ஹித்வா | ப்ரஹ்ம பதம் த்வம் ப்ரவிச விதித்வா
தினயாமின்யௌ ஸாயம் ப்ராத | சிசிர வ்ஸந்தௌ புனராயாத:
காலக்ரீடதி கச்சத்யாயு | ததபின முஞ்சதி ஆசாவாயு:
காதேகாந்தா தனகத சிந்தா | வாதுல கிம் தவ நாஸ்தி நியந்தா
த்ரிஜகதி ஸஜ்ஜன ஸங்க்திரேகா | பவதி பவார்ணவ தரணே நௌகா
ஜடிலோ முண்டீ லுஞ்சிதகேச: | காஷாயாம்பர பஹுக்ருத வேஷ:
பச்யன்னபி ச ந பஸ்யதி மூடோ | ஹ்யுதர நிமித்தம் பஹுக்ருத வேஷ:
அங்கம் கலிதம் பலிதம் முண்டம் | தசனவிஹீனம் ஜாதம் துண்டம்
வ்ருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம் | ததபின முஞ்சதி ஆசாபிண்டம்
அக்ரே வஹ்ன்னி: ப்ருஷ்டே பானூ | ராத்ரௌ சுபுக ஸமர்ப்பித ஜானு:
கரதல பிக்ஷஸ்தருதலவாஸ | ததபின முஞ்சதி ஆசாபாச:
குருதே கங்கா ஸாகர கமனம் \ வ்ருத பரிபாலனம் அதவா தானம்
ஞானவிஹீன: ஸர்வமதேன | முக்திம் ந பஜதி ஜன்மசதேன
ஸுர்மந்திர தருமூல நிவாஸ | சய்யா பூதலம் அசினம் வாஸ:
ஸர்வ பரிக்ரஹ பொகத்யாக | கஸ்ய ஸுகம் ந்கரோதி விராக
யோகரதோ வா போகரதோ வா | ஸங்க ரதோ வா ஸங்க விஹீன:
யஸ்ய ப்ரஹ்மணி ரமதே சித்தம் | நந்ததி நந்ததி ந்ந்தத்யேவ
பகவத் கீதா கிஞ்சிததீதா | கங்காஜல லவ கணிகா பீதா
ஸக்ருதபியேன முராரி ஸமர்ச்சா | க்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா
புனரபி ஜனனம் புனரபி மரணம் | புனரபி ஜனனீ ஜடரே சயனம்
இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே | க்ருபயா பாரே பாஹி முராரே
ரத்யா சர்பட விரசித கந்த | புண்யா புண்ய விவர்ஜித பந்த:
யோகீ யோக நியோசித சித்தோ | ரமதே பாலோன்மத்தவதேவ
கஸ்த்வம் கோஹம் குத ஆயாத | காமே ஜனனீ கோமே தாத:
இதி பரிபாவய ஸர்வம்ஸாரம் | விச்வம் த்யக்த்வா ஸ்வப்ன விசாரம்
த்வயி மயி சான்ய த்ரைகோ விஷ்ணு | வ்யர்த்தம் குப்யஸி மய்யஸஹிஷ்ணூ:
ஸர்வஸ்மின் அபி ப்ச்யாத்மானம் | ஸர்வத்ரோத்ஸ்ருஜ பேதாஞானம்
சத்ரௌ மித்ரே புத்ரே பந்தௌ | மாகுரு யத்னம் விக்ரஹஸந்தௌ
பவ ஸமசித்த: ஸர்வத்ர த்வம் | வாஞ்ஞஸ்ய சிராததி விஷ்ணுத்வம்
காமம் க்ரோதம் லோபம் மோஹம் | த்யக்த்வாஸ் ஸ்த்மானம் பாவய கோஸ்ஹம்
ஆத்ம ஞான விஹீனா மூடா | தே பச்யந்தே ந்ரக நிகூடா:
கேயம் கீதா நாம ஸஹஸ்ரம் | த்யேயம் ஸ்ரீபதி ரூபமஜஸ்ரம்
நேயம் ஸஜ்ஜன ஸங்கே சித்தம் | தேயம் தீனஜனாய ச வித்தம்
ஸுகத: க்ரியதே ராமாபோக | பச்சாத்தந்த சரீரே ரோக:
யத்யபி லோகே மரணம் சரணம் | தத்பி ந முஞ்ஞ்தி பாபா சரணம்
அர்த்தம் அனர்த்தம் பாவய நித்யம் | நாஸ்தி தத: ஸுகலேச: ஸத்யம்
புத்ராதபி தனபாஜாம் பீதி | ஸர்வத்ரைஷா விஹிதா ரீதி:
ப்ராணாயாமம் ப்ரத்யாஹாரம் | நித்யாSநித்ய விவேக விசாரம்
ஜாப்யஸமேத ஸமாதிவிதானம் | குர்வவதானம் மஹதவதானம்
குரு சரம்ணாம்புஜ நிர்பர பக்த | ஸம்ஸாரத் ஸ்சிராத்பவ முக்த:
ஸேந்த்ரியமானஸ நியமாதேவம் | த்ருக்ஷ்யஸி நிஜ ஹ்ருதயஸ்தம் தேவம்
மங்களம் (Mantra Pushpam)
மங்களம்
யோபம் புஷ்பம் வேதா புஷ்பவண் ப்ரஜவாந் பஸுவண் பவதி | சந்த்ரமவா ஆபாம் புஷ்பம் புஷ்பவண் ப்ரஜவாந் பஸுவண் பவதி | ய ஏவம் வேதா யோபா மாயதநம் வேதா ஆயதநம் பவதி
He who understands the flowers of water,He becomes the possessor of flowers, children and cattle. Moon is the flower of the water, He who understands this fact, He becomes the possessor of flowers, children and cattle. He who knows the source of water, Becomes established in himself.
மது வாதா ருதாயதெ | மது க்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர் நஸ் ஸந்த்வோஷதீ: || மது நக்த முதோஷஸி மதுமத் பார்திவ ரஜு: மது த்யௌரஸ்து ந: பித || மதுமாந் நொ வனஸ்பதி: | மதுமாந் அஸ்துஸூர்ய: மாத்வீர் காவோ பவந்து ந: மது மது மது
Let air do me good and rivers and medicinal plants give me sweetness. Let night and day do me good. Let earth give me sweetness and very good quality food. Let the sky , which is like my father not trouble me with no rain or excess rain and grant me pure pleasure. Let trees bless me by giving fruits. Let Sun god give me energy without much hot weather. Let cows give me sweet milk.
காயேந வாசா மநஸேந்த்ரியைர் வா புத்யாத்மநா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் | கரோமி யத்யத் ஸகலம் ப்ரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி ||



நமது ஸ்ரீ காஞ்சீ காமகோடி ஸர்வஜ்ஞ பீடத்தின் ஆசார்யர்களது புண்ய நாமங்களைக் கோத்து அவற்றை எளிதில் நினைவில் கொள்ளும்படி ஸ்லோகரூபமாக அமைக்கப்பட்ட ஸ்ரீ காமகோடி குரு பரம்பரா ஸ்மரணம் இன்றைய புண்ணியபொழுதினில் உங்கள் யாவருடனுமாக பகிரும் பாக்கியம் அளித்த குரு நாதர் ஸ்ரீ மஹாஸ்வாமிகளின் சரணாரவிந்தங்களில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கின்றேன்.

ஸ்ரீசரணாளின் 122-வது ஜெயந்தி மஹோத்ஸவத்தில் இந்த திவ்ய ஸ்லோகத்தை புத்தகவடினில் குருமஹாரத்தினங்களை த்யானித்து நமஸ்கரிக்கும் வகையிலே ஒரு ஸ்லோக புத்தகமாக வடிவமைத்து பக்தகோடிகளுக்கு கோவிந்தபுரம் தபோவனத்தினிலே வழங்கவிருக்கின்றோம். ஸ்ரீமஹாஸ்வாமிகள் அருளில் இது கிடைக்கும் அன்பர்கள் அருட்கூர்ந்து புத்தகத்தின் பிரதிகளெடுத்து அனைவருக்கும் வழங்கி குருவருளுக்கு பாத்திரமாகும்படி விண்ணப்பிக்கின்றோம்.
ஆச்சார்யர்கள் அருளில் அனைவரும் நலமோடு வாழ ப்ரார்த்தித்துக் கொண்டு இங்கே பகிர்கின்றேன்.
கு3ருர் ப்3ரஹ்மா கு3ருர் விஷ்ணுர் கு3ருர் தேவோ மஹேஶ்வர: |
கு3ரு: ஸாக்ஷாத் ப்ரம்’ ப்3ரஹ்ம தஸ்மை ஸ்ரீகு3ரவே நம: || 1 ||

குருவே பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனும் அவர்களின் மூல தத்துவமான பரம்பொருளும் ஆவார்; அத்தகைய குருவுக்கு வணக்கம்.

கு3ரவே ஸர்வ-லோகாநாம்’ பி4ஷஜே ப4வ-ரோகி3ணாம் |
நித4யே ஸர்வ-வித்3யாநாம்’ த3க்ஷிணாமூர்(த்)தயே நம: || 2 ||

அனைத்து உலகங்களுக்கும் குருவும், ஸம்ஸாரம் என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவரும், அனைத்து வித்யைகளுக்கும் இருப்பிடமுமான (ஆதிகுரு) தக்ஷிணாமூர்த்தியை வணங்குகிறேன்.

விஷ்ணுர் ப்3ரஹ்மா வஸிஷ்ட2ஶ்ச ஶக்தி: ப்ராஜ்ஞ-பராஶர: |
வ்யாஸ: ஶுகோ கௌ3ட3பதோ3 ஜய-கோ3விந்த3-தே3ஶிக: || 3 ||
இத்யேதே பூர்வ ஆசார்யா, ப4கவத்பாத3-ஶங்கர: |
ததோ’ப4வத், தஸ்ய ஶிஷ்யா: பத்3மபாத3: ஸுரேஶ்வர: || 4 ||
ப்ரு’த்வீத4வ: ஸர்வஜ்ஞாத்மா ஹஸ்தாமலக-தோடகௌ |
உத3ங்கஶ் சித்ஸுகோ2 விஶ்வரூபோ’ந்யே ச யதீஶ்வரா: || 5 ||

(தக்ஷிணாமூர்த்திக்குப் பிறகு) விஷ்ணு, பிரம்மா, வஸிஷ்டர், சக்தி, அறிவாளியான பராசர், வ்யாஸர், சுகர், கௌடபாதர், (ஜய கோவிந்த” என்று எப்பொழுதும் சொல்லிவந்த) கோவிந்த பகவத்பாதர் என்றவர்கள் (முறையே) முற்காலத்து ஆசார்யர்கள். அதற்குப் பிறகு ஸ்ரீ சங்கர பகவத்பாதர் அவதரித்தார். பத்மபாதர், ஸுரேச்வரர், ப்ருதிவீதவர், ஸர்வஜ்ஞாத்மா, ஹஸ்தாமலகர், தோடகர், உதங்கர், சித்ஸுகர், விஸ்வரூபர் மேலும் மற்ற (பல) யதீஸ்வரர்கள் அவரது சிஷ்யர்கள் ஆவர்.

காஞ்சீ-காமகோடி-பீடே2ஸ்வயம்’ ஸ்ரீஶங்கரோ கு3ரு: |
ஆஸீத் ப்ரத2ம ஆசார்ய: காமாக்ஷ்யாம்’ ச திரோத3தே || 6 ||
ஸர்வஜ்ஞ-பீட2 ஏதஸ்மிந் ஸுரேஶ்வர-ஸுரக்ஷித: |
ஸர்வஜ்ஞாத்மா’ ப4வத்3கோ3ப்தா ஸ்ரீஶங்கர-நிதே3ஶதா: || 7 ||

ஸர்வஜ்ஞபீடமான காஞ்சீ காமகோடி பீடத்தில் ஸ்ரீ சங்கர குருவே முதல் ஆசார்யராக இருந்தார். (இறுதியில்) காமாக்ஷியினிடம் ஐக்யமானார். அவரது உத்தரவுபடி ஸுரேச்வரரின் வழிகாட்டுதலில் ஸர்வஜ்ஞாத்மா இங்கு (அடுத்த) ஆசார்யராக ஆனார்.

ஸேந்த்3ரா ஸரஸ்வதீத்யாக்2யா யோக3-பட்ட: ப்ரகீர்(த்)திதா |
ஸர்வஜ்ஞாத்மந ஆரப்4ய தச்சிஷ்யாணாம்’ மஹாத்மநாம் || 8 ||

ஸர்வஜ்ஞாத்மா முதல் அவரது சிஷ்ய பரம்பரையில் வந்த மஹாத்மாக்களுக்கு இந்த்ர ஸரஸ்வதீ என்ற பெயர் யோகப்பட்டமாக அமைந்தது (ஸர்வஜ்ஞாத்மேந்த்ர ஸரஸ்வதீ என்றவாறு அமையும்).

காமகோடீ-பீட2-பாரம்பர்யம்’ கு3ருவராஶ்ரயம் |
ஸ்மராமி ஸம்ப்ரதா3யோக்தம்’ ஸ்மரதாம்’ சித்த-ஶுத்3தி4-த3ம் || 9 ||

உத்தமமான குருமார்களைக் கொண்டதும், நினைப்பவர்களுக்கு சித்தசுத்தியை அளிப்பதுமான காமகோடி பீட (ஆசார்ய) பரம்பரையை ஸம்ப்ரதாயப்படி சொல்லப்பட்டபடி நான் நினைவில் கொள்கிறேன். (இதன் பிறகு பெயர்கள் க்ரமப்படி சொல்லப்படுகின்றன).

(1-5) ஆதி3ம: ஶங்கராசார்ய: ஸுரேஸர-மஹாமநா: |
ஸர்வஜ்ஞாத்மா ஸத்யபோ3தோ4ஜ்ஞாநாநந்த3-முநீஶ்வர: || 10 ||

ஸ்ரீ ஆதி சங்கரர், மஹாத்மாவான ஸுரேச்வரர், ஸர்வஜ்ஞாத்மா, ஸத்யபோதர், சிறந்த முனிவரான ஜ்ஞானானந்தர்,

(6-10) ஶுத்3தா4நந்தா3நந்த3ஜ்ஞாநௌ கைவல்யாநந்த3-மஸ்கரீ
க்ரு’பா-ஶங்கர ஆசார்யோ விஶ்வரூப-ஸுரேஶ்வர: || 11 ||

சுத்தானந்தர், ஆனந்தஜ்ஞானர், முற்றும் துறந்த கைவல்யானந்தர், க்ருபா சங்கரர் என்ற ஆசார்யர், விஸ்வரூப ஸுரேச்வரர்,

(11-13) ஶிவாநந்த3-சித்3க4நஶ்ச ஸார்வபௌ4ம-வ்ரதீ தத: |
சந்த்3ரஶேக2ரஶ்ச காஷ்ட2-மௌநீ ஸச்சித்3க4நோ மஹாந்|| 12 ||

சிவானந்த சித்கனர், ஸார்வபௌம வ்ரதம் மேற்கொண்ட சந்த்ரசேகரர், காஷ்ட மௌனமே அனுஷ்டித்த மஹானான ஸச்சித்கனர்,

(14-16) பை4ரவ-ஜித்3 வித்3யாக4நோ க3ங்கா3தரஶ்ச கீ3ஷ்பதி: |
உஜ்ஜ்வலா ஷங்கரேந்த்3ரஶ்ச மஹாயதிரிதி ஸ்துத: || 13 ||

பைரவரையே அடக்கிய வித்யாகனர், சிறந்த கல்விமானான கங்காதரர், மஹாயதி என்று புகழ்பெற்று மிகப் பொலிவுடன் விளங்கிய உஜ்ஜ்வல சங்கரர்,

(17-20) கௌ3ட3: ஸதா3ஶிவேந்த்ரஶ்ச ஸ்ரீ-ஸுரேந்த்3ர-ஸரஸ்வதீ |
மார்(த்)தண்ட3-வித்3யாக4நஶ்ச மூக-ஶங்கர-ஸத்3கு3ரு: || 14 ||

கௌட ஸதாசிவர், ஸுரேந்த்ர ஸரஸ்வதீ, (ஸூர்யனை உபாஸித்த) மார்த்தண்ட வித்யாகனர், மூக சங்கரர் என்ற ஸத்குரு,

(21-24) ஜாஹ்நவீ-சந்த்3ரசூட3ஶ்ச பரிபூர்ணபோ3த4-யதி: |
ஸச்சித்ஸுகோ2த4ர்ம-கோ3ப்தா கோங்கண-ஸ்த2ஶ்ச சித்ஸுக2: || 15 ||

(கங்கைக் கரையிலேயே வசித்து ஸித்தியடைந்த) ஜாஹ்நவீ அந்த்ரசூடர், புலன்களை அடக்கிய பரிபூர்ணபோதர், தர்மத்தைக் கட்டிக்காப்பாற்றிய ஸச்சித்ஸுகர், கொங்கண தேசத்திலேயே இருந்து ஸித்தியடைந்த சித்ஸுகர்,

(25-29) ஸித்3தி4மாந் ஸச்சிதா3நந்த3க4ந: ப்ரஜ்ஞாக4நஸ் தத: |
சித்2விலாஸோ மஹாதே3வ: பூர்ணபோ3த4-கு3ருஸ்தத: || 16 ||

பல ஸித்திகள் கொண்ட ஸச்சிதானந்தகனர், அடுத்து ப்ரஜ்ஞாகனர், சித்விலாஸர், மஹாதேவர், அடுத்து பூர்ணபோதர் என்ற குரு,

(30-33) போ3தோ4 ப4க்தியோகீ3 ஶீலநிதி4ர்-ப்3ரஹ்மாநந்த3க4ந: |
சிதா3நந்த3க4ந ஸச்சிதா3நந்த3க4ந-வாக்பதி: || 17 ||

பக்தியோகத்தைப் பரப்பிய போதேந்த்ர ஸரஸ்வதீ, (உயர்சீலங்களின் இருப்பிடமாக இருந்ததால்) சீலநிதி எனப்பட்ட ப்ரஹ்மானந்தகனர், சிதானந்தகனர், பல மொழிகள் அறிந்திருந்த ஸச்சிதானந்தகனர்,

(34-37) சந்த்3ரஶேக2ர: பரிவ்ராட்3 ப3ஹூரூபஶ்ச சித்ஸுக2: |
சித்ஸுகா2நந்த3-யதிராட்3 வித்3யாக4ந-வஶீ தத: || 18 ||

எப்பொழுதும் (சிஷ்யர்கள் நலனுக்காக) ஸஞ்சரித்து வந்த சந்த்ரசேகரர், பல உருவங்கள் ஏற்க வல்லவரான பஹுரூப சித்ஸுகர், யதிகளுள் சிறந்த சித்ஸுகானந்தர், அனைவரையும் கவர்ந்த வித்யாகனர்,

(38-40) ஶங்கரோ’பி4நவோ தீ4ர-ஶங்கரேந்த்3ர-ஸரஸ்வதீ |
பூஜ்ய: ஸச்சித்3விலாஸஶ்ச மஹாதே3வஶ்ச ஶோப4ந: || 19 ||

அபிநவ சங்கரர் எனப்பட்ட தீர சங்கரேந்த்ர ஸரஸ்வதீ, மதிக்கத்தக்க ஸச்சித்விலாஸர், (மிகுந்த வனப்புடையவரான) சோபன மஹாதேவர்,

(41-45) க3ங்கா3த4ரோ மந்த்ரவிச்ச ப்3ரஹ்மாநந்த3த4நோ கு3ரு: |
ஆநந்த3க4நஶ்ச பூர்ணபோ3த4ஸ்தஸ்மாத்3 கு3ஹா-க்3ரு’ஹ: || 20 ||
(45-48) பரமஶிவோ போ3த4ஶ்ச ஸாந்த்3ராநந்தோ3த2 ஹைமஜித் |
ஸ்ரீ-சந்த்3ரஶேக2ரோ’த்வைதாநந்த3போத4: ஶிவாத்மக: || 21 ||

மந்த்ர சக்தி மிகுந்த கங்காதரர், ப்ரஹ்மானந்தகனர் என்ற ஆனந்தகனர், பூர்ணபோதர், அடுத்து குகைகளிலேயே வஸித்த பரமசிவர், ஸாந்த்ரானந்த போதர், அடுத்து (வேதத்தை எதிர்த்தவரான) ஹைமாசார்யரை வென்ற சந்த்ரசேகரர் (சிதம்பரத்தில்) சிவனிடம் ஐக்கியமான அத்வைதானந்த போதர்,

(49-51) மஹாதே3வ-சந்த்3ரசூடௌ3 து3ர்கா3-ஹோம-ப்ரவர்(த்)தகௌ: |
வித்3யாரண்ய-கு3ரு: ஸ்ரீ-வித்3யாதீர்(த்)தே3ந்த்3ர-ஸரஸ்வதீ || 22 ||

(பல கோடி) துர்கா ஹோமங்கள் செய்வித்த மஹாதேவரும் (அவரது சிஷ்யர்) சந்த்ரசூடரும், வித்யாரண்யரின் குருவான வித்யாதீர்த்தேந்த்ர ஸரஸ்வதீ,

(52-55) ஶங்கராநந்தோ3தீ4மாம்’ஶ்ச பூர்ணாநந்த3-ஸதா3ஶிவ: |
வ்யாஸாசல-மஹாதே3வஶ்சந்த்3ரசூட3-யதிஸ்தத: || 23 ||

சிறந்த அறிவாளியான சங்கரானந்தர், பூர்ணானந்த ஸதாசிவர், வ்யாஸாசல மஹாதேவர், அடுத்து சந்த்ரசூடர் என்ற துறவி,

(56-57) ஸ்ரீ-ஸதா3ஶிவ-போ3தே4ந்த்3ரோத்3விதீய: பரம: ஶிவ: |
ஸதா3ஶிவ-ஸ்ரீ-ப்3ரஹ்மேந்த்3ர-ஸரஸ்வத்யா குரு3ஸ்து ய: || 24 ||

ஸதாசிவ போதர், ஸதாசிவ ப்ரஹ்மேந்த்ரர் எனப்பட்ட ஸதாசிவேந்த்ர ஸரஸ்வதியின் குருவான இரண்டாவது பரமசிவர்,

(58-61) விஶ்வாதி4க ஆத்மபோ3தோ4 போ3தோ4ப4க3வந்நாம-த3: |
அத்3வைதாத்மப்ரகாஶஸ்ச மஹாதே3வஶ்ச பர்ண-பு4க் || 25 ||

விஸ்வாதிகர் எனப்பட்ட ஆத்மபோதர், (மோக்ஷத்திற்கு வழியாக) பவந்நாமத்தைக் கொடுத்த போதேந்த்ர ஸரஸ்வதீ, அத்வைதாத்ம ப்ரகாசர், (காய்ந்த) இலைகளையே புசித்து வந்த மஹாதேவர்,

(62-64) ஶிவ-கீ3தி-மாலிகா-க்ரு’ச்சந்த்3ரஶேக2ர-தே3ஶிக: |
த4ர்மவாக்ச மஹாதே3வ உத்தரஶ்சந்த்3ரஶேக2ர: || 26 ||

(சிவாஷ்டபதீ எனப்பட்ட) சிவகீதிமாலிகையை இயற்றிய சந்த்ரசேகரர், தர்மமே உருப்பெற்றதான சொல் கொண்டவராக ப்ரஸித்திபெற்ற மஹாதேவர், அடுத்து (வடகோடி ப்ருந்தாவனத்தவரான) சந்த்ரசேகரர்,

(65-67) ஸுத3ர்ஶந-மஹாதே3வஶ்சாத்3வைதீ சந்த்3ரஶேக2ர: |
ஸப்தாஹீ ச மஹாதே3வோ மஹாஸ்வாமீ தத:பர: || 27 ||
(68) பரமாசார்ய இத்யேவம்’ ஸஞ்ச்சரத்3தை3வம் இத்யபி |
யோகீ3ஶோ விஶ்ருதஸ்சந்த்ர3ஶேக2ரேந்த்3ர-ஸரஸ்வதீ || 28 ||

ஸுதர்சன மஹாதேவர், அத்வைதத்தைப் பரப்பிய சந்த்ரசேகரர், ஒரு வாரத்திலேயே ஸித்தியடைந்த மஹாதேவர், அவருக்கு அடுத்து மாஸ்வாமி என்றும் பரமாசார்யர் என்றும் நடமாடும் தெய்வம் என்றும் ப்ரஸித்தி பெற்ற யோகீஸ்வரரான சந்த்ரசேகரேந்த்ர-ஸரஸ்வதீ


(69-70) ஜயேந்த்3ர-ஸ்ரீ-குரு3ஶ்சாஸ்மதா3சார்யோ ம்ருது3ருஜ்ஜ்வல:
ஶங்கரோ விஜயேந்த்3ரஶ்ச தச்சி2ஷ்ய: ஸம்’ஶித-வ்ரத: || 29 ||

(பக்தர்களிடம்) மென்மையானவரும் (தர்மத்தைக் காப்பதில்) தீவிரமானவருமான நமது ஆசார்யர் ஸ்ரீ ஜயேந்த்ர குரு, நியமங்களைக் கடைபிடிப்பதில் சிறந்த அவரது சிஷ்யர் ஸ்ரீ சங்கர விஜயேந்த்ரர்,
ஸதா3ஶிவ-ஸமாரம்பா4ம் ஶங்கராசார்ய-மத்3யமாம் |
அஸ்மதா3சார்ய-பர்யந்தாம்’ வந்தே3 கு3ரு-பரம்பராம் || 31 ||
Courtesy: SAANU PUTRAN





ஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அருளிய ஸ்ரீசந்த்ர சேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்துதி!
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிஷ்வரர் ஜகத்குரு ஸ்ரீசந்த்ர சேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்துதி!
இந்த ஸ்லோகமானது நமது காஞ்சி காமகோடி பீடாதிபதி புது பெரியவாளான ஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அருளியதாகும்.
1. அபாரகருணா ஸிந்தும் ஞானதம் சாந்தரூபிணம்
ஸ்ரீசந்த்ரசேகர குரும் ப்ரணமாமி முதாந்வஹம்
2. குருவார ஸபாத்வாரா சாஸ்தா ஸம்ரக்ஷணம் க்ருதம்
அநூராதா ஸபாத்வாரா வேத ஸம்ரக்ஷணம் க்ருதம்
3. மார்கசீர்ஷ மாஸவரே ஸ்தோத்ரபாட ப்ரசாரணம்
வேதபாஷ்ய ப்ரசாரார்த்தம் ரத்நோத்ஸவ நிதி: க்ருத:
4. கர்மகாண்ட ப்ரசாரார்த்தம் வேததர்மஸபா க்ருதா
வேதாந்தார்த்த ப்ரசாரார்த்தம் வித்யாரண்ய நிதி: க்ருத:
5. சிலாலேக ப்ரசாரார்த்தம் உட்டங்கித நிதி: க்ருத:
கோப்ராஹ்மண ஹிதார்த்தாய வேதரக்ஷண கோநிதி:
6. கோசாலா பாடசாலா ச குருபிஸ் தத்ர நிர்மிதே
பாலிகாநாம் விவாஹார்த்தம் கந்யாதன நிதி: க்ருத:
7. தேவார்ச்சகாநாம் ஸாஹ்யார்த்தம் கச்சிமூதூர் நிதி: க்ருத:
பாலாவ்ருத்தாதுராணாம் ச வ்யவஸ்த்தா பரிபாலனே
8. அநாதப்ரேத ஸம்ஸ்காராத் அச்வமேத பலம் லபேத்
இதி வாக்யாநுஸாரேண வ்யவஸ்த்தா தத்ர கல்பிதா
9. யத்ர ஸ்ரீ பகவத்பாதை: க்ஷேத்ர பர்யடனம் க்ருதம்
தத்ர தேஷாம் சிலாமூர்த்திம் ப்ரதிஷ்ட்டாப்ய சுபம் க்ருதம்
10. பக்தவாஜிசாபி ஸித்த்யர்த்தம் நாம தாரக லேகனம்
ராஜதம் ச ரதம் க்ருத்வா காமாக்ஷ்யா: பரிவாஹணம்
11. காமாக்ஷ்யம்பா விமாநஸ்ய ஸ்வர்ணபத்ரைஸ் ஸமாவ்ருதி:
ததைவோத்ஸவ காமாக்ஷயா: ஸ்வர்ணவர்ம பரிஷ்க்ருதி:
12. லலிதாநாம ஸாஹஸ்ர ஸ்வர்ணமாலா விராஜதே
ஸ்ரீதேவ்யா: பர்வகாலேஷு ஸுவர்ண ரத சாஸனம்
13. சிதம்பர நடேசஸ்ய சுவைடூர்ய கிரீடகம்
கரே-அபயப்ரதே பாதே குஞ்சிதே ரத்னபூஷணம்
14. முஷ்டி தண்டுல தானேன தரித்ராணாம் ச போஜனம்
ருக்ணாலயே பகவத: ப்ரஸாத விநியோஜநம்
15. லோகக்ஷேம ஹிதார்த்தாய குருபிர் பஹுதத் க்ருதாம்
ஸ்மரன் தத்வந்தனம் குர்வன் ஜன்ம ஸாபல்யமாப்னுயாத்.
ஓம் ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ராய வித்மஹே,
சார்வ பௌமாய தீமஹி, தன்னோ ஸ்ரீ ஜகத்குரு ப்ரசோதயாத் ||






பெரியவா சரணம்.

நமது ஸ்ரீ காஞ்சீ காமகோடி ஸர்வஜ்ஞ பீடத்தின் ஆசார்யர்களது புண்ய நாமங்களைக் கோத்து அவற்றை எளிதில் நினைவில் கொள்ளும்படி ஸ்லோகரூபமாக அமைக்கப்பட்ட
ஸ்ரீ காமகோடி கு3ரு பரம்பரா ஸ்மரணம் இன்றைய புண்ணியபொழுதினில் உங்கள் யாவருடனுமாக பகிரும் பாக்கியம் அளித்த குரு நாதர் ஸ்ரீமஹாஸ்வாமிகளின் சரணாரவிந்தங்களில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கின்றேன்.

ஸ்ரீசரணாளின் 122-வது ஜெயந்தி மஹோத்ஸவத்தில் இந்த திவ்ய ஸ்லோகத்தை புத்தகவடினில் குருமஹாரத்தினங்களை த்யானித்து நமஸ்கரிக்கும் வகையிலே ஒரு ஸ்லோக புத்தகமாக வடிவமைத்து பக்தகோடிகளுக்கு கோவிந்தபுரம் தபோவனத்தினிலே வழங்கவிருக்கின்றோம். ஸ்ரீமஹாஸ்வாமிகள் அருளில் இது கிடைக்கும் அன்பர்கள் அருட்கூர்ந்து புத்தகத்தின் பிரதிகளெடுத்து அனைவருக்கும் வழங்கி குருவருளுக்கு பாத்திரமாகும்படி விண்ணப்பிக்கின்றோம்.

ஆச்சார்யர்கள் அருளில் அனைவரும் நலமோடு வாழ ப்ரார்த்தித்துக் கொண்டு இங்கே பகிர்கின்றேன்.

கு3ருர் ப்3ரஹ்மா கு3ருர் விஷ்ணுர் கு3ருர் தேவோ மஹேஶ்வர: |
கு3ரு: ஸாக்ஷாத் ப்ரம்’ ப்3ரஹ்ம தஸ்மை ஸ்ரீகு3ரவே நம: || 1 ||

குருவே பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனும் அவர்களின் மூல தத்துவமான பரம்பொருளும் ஆவார்; அத்தகைய குருவுக்கு வணக்கம்.

கு3ரவே ஸர்வ-லோகாநாம்’ பி4ஷஜே ப4வ-ரோகி3ணாம் |
நித4யே ஸர்வ-வித்3யாநாம்’ த3க்ஷிணாமூர்(த்)தயே நம: || 2 ||

அனைத்து உலகங்களுக்கும் குருவும், ஸம்ஸாரம் என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவரும், அனைத்து வித்யைகளுக்கும் இருப்பிடமுமான (ஆதிகுரு) தக்ஷிணாமூர்த்தியை வணங்குகிறேன்.

விஷ்ணுர் ப்3ரஹ்மா வஸிஷ்ட2ஶ்ச ஶக்தி: ப்ராஜ்ஞ-பராஶர: |
வ்யாஸ: ஶுகோ கௌ3ட3பதோ3 ஜய-கோ3விந்த3-தே3ஶிக: || 3 ||
இத்யேதே பூர்வ ஆசார்யா, ப4கவத்பாத3-ஶங்கர: |
ததோ’ப4வத், தஸ்ய ஶிஷ்யா: பத்3மபாத3: ஸுரேஶ்வர: || 4 ||
ப்ரு’த்வீத4வ: ஸர்வஜ்ஞாத்மா ஹஸ்தாமலக-தோடகௌ |
உத3ங்கஶ் சித்ஸுகோ2 விஶ்வரூபோ’ந்யே ச யதீஶ்வரா: || 5 ||

(தக்ஷிணாமூர்த்திக்குப் பிறகு) விஷ்ணு, பிரம்மா, வஸிஷ்டர், சக்தி, அறிவாளியான பராசர், வ்யாஸர், சுகர், கௌடபாதர், (ஜய கோவிந்த” என்று எப்பொழுதும் சொல்லிவந்த) கோவிந்த பகவத்பாதர் என்றவர்கள் (முறையே) முற்காலத்து ஆசார்யர்கள். அதற்குப் பிறகு ஸ்ரீ சங்கர பகவத்பாதர் அவதரித்தார். பத்மபாதர், ஸுரேச்வரர், ப்ருதிவீதவர், ஸர்வஜ்ஞாத்மா, ஹஸ்தாமலகர், தோடகர், உதங்கர், சித்ஸுகர், விஸ்வரூபர் மேலும் மற்ற (பல) யதீஸ்வரர்கள் அவரது சிஷ்யர்கள் ஆவர்.

காஞ்சீ-காமகோடி-பீடே2ஸ்வயம்’ ஸ்ரீஶங்கரோ கு3ரு: |
ஆஸீத் ப்ரத2ம ஆசார்ய: காமாக்ஷ்யாம்’ ச திரோத3தே || 6 ||
ஸர்வஜ்ஞ-பீட2 ஏதஸ்மிந் ஸுரேஶ்வர-ஸுரக்ஷித: |
ஸர்வஜ்ஞாத்மா’ ப4வத்3கோ3ப்தா ஸ்ரீஶங்கர-நிதே3ஶதா: || 7 ||

ஸர்வஜ்ஞபீடமான காஞ்சீ காமகோடி பீடத்தில் ஸ்ரீ சங்கர குருவே முதல் ஆசார்யராக இருந்தார். (இறுதியில்) காமாக்ஷியினிடம் ஐக்யமானார். அவரது உத்தரவுபடி ஸுரேச்வரரின் வழிகாட்டுதலில் ஸர்வஜ்ஞாத்மா இங்கு (அடுத்த) ஆசார்யராக ஆனார்.

ஸேந்த்3ரா ஸரஸ்வதீத்யாக்2யா யோக3-பட்ட: ப்ரகீர்(த்)திதா |
ஸர்வஜ்ஞாத்மந ஆரப்4ய தச்சிஷ்யாணாம்’ மஹாத்மநாம் || 8 ||

ஸர்வஜ்ஞாத்மா முதல் அவரது சிஷ்ய பரம்பரையில் வந்த மஹாத்மாக்களுக்கு இந்த்ர ஸரஸ்வதீ என்ற பெயர் யோகப்பட்டமாக அமைந்தது (ஸர்வஜ்ஞாத்மேந்த்ர ஸரஸ்வதீ என்றவாறு அமையும்).

காமகோடீ-பீட2-பாரம்பர்யம்’ கு3ருவராஶ்ரயம் |
ஸ்மராமி ஸம்ப்ரதா3யோக்தம்’ ஸ்மரதாம்’ சித்த-ஶுத்3தி4-த3ம் || 9 ||

உத்தமமான குருமார்களைக் கொண்டதும், நினைப்பவர்களுக்கு சித்தசுத்தியை அளிப்பதுமான காமகோடி பீட (ஆசார்ய) பரம்பரையை ஸம்ப்ரதாயப்படி சொல்லப்பட்டபடி நான் நினைவில் கொள்கிறேன். (இதன் பிறகு பெயர்கள் க்ரமப்படி சொல்லப்படுகின்றன).

(1-5) ஆதி3ம: ஶங்கராசார்ய: ஸுரேஸர-மஹாமநா: |
ஸர்வஜ்ஞாத்மா ஸத்யபோ3தோ4ஜ்ஞாநாநந்த3-முநீஶ்வர: || 10 ||

ஸ்ரீ ஆதி சங்கரர், மஹாத்மாவான ஸுரேச்வரர், ஸர்வஜ்ஞாத்மா, ஸத்யபோதர், சிறந்த முனிவரான ஜ்ஞானானந்தர்,

(6-10) ஶுத்3தா4நந்தா3நந்த3ஜ்ஞாநௌ கைவல்யாநந்த3-மஸ்கரீ
க்ரு’பா-ஶங்கர ஆசார்யோ விஶ்வரூப-ஸுரேஶ்வர: || 11 ||

சுத்தானந்தர், ஆனந்தஜ்ஞானர், முற்றும் துறந்த கைவல்யானந்தர், க்ருபா சங்கரர் என்ற ஆசார்யர், விஸ்வரூப ஸுரேச்வரர்,

(11-13) ஶிவாநந்த3-சித்3க4நஶ்ச ஸார்வபௌ4ம-வ்ரதீ தத: |
சந்த்3ரஶேக2ரஶ்ச காஷ்ட2-மௌநீ ஸச்சித்3க4நோ மஹாந்|| 12 ||

சிவானந்த சித்கனர், ஸார்வபௌம வ்ரதம் மேற்கொண்ட சந்த்ரசேகரர், காஷ்ட மௌனமே அனுஷ்டித்த மஹானான ஸச்சித்கனர்,

(14-16) பை4ரவ-ஜித்3 வித்3யாக4நோ க3ங்கா3தரஶ்ச கீ3ஷ்பதி: |
உஜ்ஜ்வலா ஷங்கரேந்த்3ரஶ்ச மஹாயதிரிதி ஸ்துத: || 13 ||

பைரவரையே அடக்கிய வித்யாகனர், சிறந்த கல்விமானான கங்காதரர், மஹாயதி என்று புகழ்பெற்று மிகப் பொலிவுடன் விளங்கிய உஜ்ஜ்வல சங்கரர்,

(17-20) கௌ3ட3: ஸதா3ஶிவேந்த்ரஶ்ச ஸ்ரீ-ஸுரேந்த்3ர-ஸரஸ்வதீ |
மார்(த்)தண்ட3-வித்3யாக4நஶ்ச மூக-ஶங்கர-ஸத்3கு3ரு: || 14 ||

கௌட ஸதாசிவர், ஸுரேந்த்ர ஸரஸ்வதீ, (ஸூர்யனை உபாஸித்த) மார்த்தண்ட வித்யாகனர், மூக சங்கரர் என்ற ஸத்குரு,

(21-24) ஜாஹ்நவீ-சந்த்3ரசூட3ஶ்ச பரிபூர்ணபோ3த4-யதி: |
ஸச்சித்ஸுகோ2த4ர்ம-கோ3ப்தா கோங்கண-ஸ்த2ஶ்ச சித்ஸுக2: || 15 ||

(கங்கைக் கரையிலேயே வசித்து ஸித்தியடைந்த) ஜாஹ்நவீ அந்த்ரசூடர், புலன்களை அடக்கிய பரிபூர்ணபோதர், தர்மத்தைக் கட்டிக்காப்பாற்றிய ஸச்சித்ஸுகர், கொங்கண தேசத்திலேயே இருந்து ஸித்தியடைந்த சித்ஸுகர்,

(25-29) ஸித்3தி4மாந் ஸச்சிதா3நந்த3க4ந: ப்ரஜ்ஞாக4நஸ் தத: |
சித்2விலாஸோ மஹாதே3வ: பூர்ணபோ3த4-கு3ருஸ்தத: || 16 ||

பல ஸித்திகள் கொண்ட ஸச்சிதானந்தகனர், அடுத்து ப்ரஜ்ஞாகனர், சித்விலாஸர், மஹாதேவர், அடுத்து பூர்ணபோதர் என்ற குரு,

(30-33) போ3தோ4 ப4க்தியோகீ3 ஶீலநிதி4ர்-ப்3ரஹ்மாநந்த3க4ந: |
சிதா3நந்த3க4ந ஸச்சிதா3நந்த3க4ந-வாக்பதி: || 17 ||

பக்தியோகத்தைப் பரப்பிய போதேந்த்ர ஸரஸ்வதீ, (உயர்சீலங்களின் இருப்பிடமாக இருந்ததால்) சீலநிதி எனப்பட்ட ப்ரஹ்மானந்தகனர், சிதானந்தகனர், பல மொழிகள் அறிந்திருந்த ஸச்சிதானந்தகனர்,

(34-37) சந்த்3ரஶேக2ர: பரிவ்ராட்3 ப3ஹூரூபஶ்ச சித்ஸுக2: |
சித்ஸுகா2நந்த3-யதிராட்3 வித்3யாக4ந-வஶீ தத: || 18 ||

எப்பொழுதும் (சிஷ்யர்கள் நலனுக்காக) ஸஞ்சரித்து வந்த சந்த்ரசேகரர், பல உருவங்கள் ஏற்க வல்லவரான பஹுரூப சித்ஸுகர், யதிகளுள் சிறந்த சித்ஸுகானந்தர், அனைவரையும் கவர்ந்த வித்யாகனர்,

(38-40) ஶங்கரோ’பி4நவோ தீ4ர-ஶங்கரேந்த்3ர-ஸரஸ்வதீ |
பூஜ்ய: ஸச்சித்3விலாஸஶ்ச மஹாதே3வஶ்ச ஶோப4ந: || 19 ||

அபிநவ சங்கரர் எனப்பட்ட தீர சங்கரேந்த்ர ஸரஸ்வதீ, மதிக்கத்தக்க ஸச்சித்விலாஸர், (மிகுந்த வனப்புடையவரான) சோபன மஹாதேவர்,

(41-45) க3ங்கா3த4ரோ மந்த்ரவிச்ச ப்3ரஹ்மாநந்த3த4நோ கு3ரு: |
ஆநந்த3க4நஶ்ச பூர்ணபோ3த4ஸ்தஸ்மாத்3 கு3ஹா-க்3ரு’ஹ: || 20 ||
(45-48) பரமஶிவோ போ3த4ஶ்ச ஸாந்த்3ராநந்தோ3த2 ஹைமஜித் |
ஸ்ரீ-சந்த்3ரஶேக2ரோ’த்வைதாநந்த3போத4: ஶிவாத்மக: || 21 ||

மந்த்ர சக்தி மிகுந்த கங்காதரர், ப்ரஹ்மானந்தகனர் என்ற ஆனந்தகனர், பூர்ணபோதர், அடுத்து குகைகளிலேயே வஸித்த பரமசிவர், ஸாந்த்ரானந்த போதர், அடுத்து (வேதத்தை எதிர்த்தவரான) ஹைமாசார்யரை வென்ற சந்த்ரசேகரர் (சிதம்பரத்தில்) சிவனிடம் ஐக்கியமான அத்வைதானந்த போதர்,

(49-51) மஹாதே3வ-சந்த்3ரசூடௌ3 து3ர்கா3-ஹோம-ப்ரவர்(த்)தகௌ: |
வித்3யாரண்ய-கு3ரு: ஸ்ரீ-வித்3யாதீர்(த்)தே3ந்த்3ர-ஸரஸ்வதீ || 22 ||

(பல கோடி) துர்கா ஹோமங்கள் செய்வித்த மஹாதேவரும் (அவரது சிஷ்யர்) சந்த்ரசூடரும், வித்யாரண்யரின் குருவான வித்யாதீர்த்தேந்த்ர ஸரஸ்வதீ,

(52-55) ஶங்கராநந்தோ3தீ4மாம்’ஶ்ச பூர்ணாநந்த3-ஸதா3ஶிவ: |
வ்யாஸாசல-மஹாதே3வஶ்சந்த்3ரசூட3-யதிஸ்தத: || 23 ||

சிறந்த அறிவாளியான சங்கரானந்தர், பூர்ணானந்த ஸதாசிவர், வ்யாஸாசல மஹாதேவர், அடுத்து சந்த்ரசூடர் என்ற துறவி,

(56-57) ஸ்ரீ-ஸதா3ஶிவ-போ3தே4ந்த்3ரோத்3விதீய: பரம: ஶிவ: |
ஸதா3ஶிவ-ஸ்ரீ-ப்3ரஹ்மேந்த்3ர-ஸரஸ்வத்யா குரு3ஸ்து ய: || 24 ||

ஸதாசிவ போதர், ஸதாசிவ ப்ரஹ்மேந்த்ரர் எனப்பட்ட ஸதாசிவேந்த்ர ஸரஸ்வதியின் குருவான இரண்டாவது பரமசிவர்,

(58-61) விஶ்வாதி4க ஆத்மபோ3தோ4 போ3தோ4ப4க3வந்நாம-த3: |
அத்3வைதாத்மப்ரகாஶஸ்ச மஹாதே3வஶ்ச பர்ண-பு4க் || 25 ||

விஸ்வாதிகர் எனப்பட்ட ஆத்மபோதர், (மோக்ஷத்திற்கு வழியாக) பவந்நாமத்தைக் கொடுத்த போதேந்த்ர ஸரஸ்வதீ, அத்வைதாத்ம ப்ரகாசர், (காய்ந்த) இலைகளையே புசித்து வந்த மஹாதேவர்,

(62-64) ஶிவ-கீ3தி-மாலிகா-க்ரு’ச்சந்த்3ரஶேக2ர-தே3ஶிக: |
த4ர்மவாக்ச மஹாதே3வ உத்தரஶ்சந்த்3ரஶேக2ர: || 26 ||

(சிவாஷ்டபதீ எனப்பட்ட) சிவகீதிமாலிகையை இயற்றிய சந்த்ரசேகரர், தர்மமே உருப்பெற்றதான சொல் கொண்டவராக ப்ரஸித்திபெற்ற மஹாதேவர், அடுத்து (வடகோடி ப்ருந்தாவனத்தவரான) சந்த்ரசேகரர்,

(65-67) ஸுத3ர்ஶந-மஹாதே3வஶ்சாத்3வைதீ சந்த்3ரஶேக2ர: |
ஸப்தாஹீ ச மஹாதே3வோ மஹாஸ்வாமீ தத:பர: || 27 ||
(68) பரமாசார்ய இத்யேவம்’ ஸஞ்ச்சரத்3தை3வம் இத்யபி |
யோகீ3ஶோ விஶ்ருதஸ்சந்த்ர3ஶேக2ரேந்த்3ர-ஸரஸ்வதீ || 28 ||

ஸுதர்சன மஹாதேவர், அத்வைதத்தைப் பரப்பிய சந்த்ரசேகரர், ஒரு வாரத்திலேயே ஸித்தியடைந்த மஹாதேவர், அவருக்கு அடுத்து மாஸ்வாமி என்றும் பரமாசார்யர் என்றும் நடமாடும் தெய்வம் என்றும் ப்ரஸித்தி பெற்ற யோகீஸ்வரரான சந்த்ரசேகரேந்த்ர-ஸரஸ்வதீ,

(69-70) ஜயேந்த்3ர-ஸ்ரீ-குரு3ஶ்சாஸ்மதா3சார்யோ ம்ருது3ருஜ்ஜ்வல:
ஶங்கரோ விஜயேந்த்3ரஶ்ச தச்சி2ஷ்ய: ஸம்’ஶித-வ்ரத: || 29 ||

(பக்தர்களிடம்) மென்மையானவரும் (தர்மத்தைக் காப்பதில்) தீவிரமானவருமான நமது ஆசார்யர் ஸ்ரீ ஜயேந்த்ர குரு, நியமங்களைக் கடைபிடிப்பதில் சிறந்த அவரது சிஷ்யர் ஸ்ரீ சங்கர விஜயேந்த்ரர்,

ஸதா3ஶிவ-ஸமாரம்பா4ம் ஶங்கராசார்ய-மத்3யமாம் |
அஸ்மதா3சார்ய-பர்யந்தாம்’ வந்தே3 கு3ரு-பரம்பராம் || 31 ||

(என்றிப்படி) தக்ஷிணாமூர்த்தியான ஸதாசிவனிடம் தொடங்கி ஸ்ரீ சங்கரரை நடுநாயகமாகக் கொண்டு நமது ஆசார்யர்கள் வரையிலும் (தொடர்ந்து வந்து மேலும் தொடரும்) குரு பரம்பரையை வணங்குகிறேன்.

*** இன்று வரையில் ஸம்பூர்ணம் ***

பெரியவா கடாக்ஷம்

நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.


தேவேந்திரனைப் பற்றிய பின் வரும் ஒரு கதை,
அட்சய திருதியையின் முக்கியத்துவத்தை நன்கு விளக்குகிறது. மகாபலிச்சக்கரவர்த்தியை வெற்றி கொண்ட தேவேந்திரன், தனது விமானத்தில் ஆகாய மார்க்கமாகச் சென்று கொண்டிருந்தான். அப்போது நுதத்யு என்ற முனிவரின் மனைவி எண்ணெய் தேய்த்துக் குளித்து விட்டு வீட்டின் பின்புறம் தலையைக் கோதிவிட்டு உலர்த்திக் கொண்டிருந்தாள்.
அவள் மீது ஆசை கொண்ட தேவேந்திரன், ஒரு நாள் அவளிடம் தவறாக நடக்க முயன்றான். ஆனால் அவள் வயிற்றில் ஏற்கனவே வளர்ந்து வந்த குழந்தையின் செயலால், இந்திரனின் அந்தத் தீய எண்ணம் நிறைவேறவில்லை. இந்த நேரத்தில் நுதத்யு முனிவர் ஆசிரமத்திற்குத் திரும்பிவந்தார்.
முனிவரின் சாபத்திற்கு அஞ்சிய தேவேந்திரன் ஆசிரமத்தை விட்டு ஓட ஆரம்பித்தான். அப்போது முனிவரின் ஆசிரமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் தேவேந்திரனைப் பார்த்துக் கேலி செய்தார்கள். இதனால் வேதனைப்பட்ட தேவேந்திரன், அவமானத்தால் மேருமலையில் சென்று ஒளிந்து கொண்டான்.
இந்திரனின் நிலையை அறிந்த அசுரர்கள் தேவலோகத்தைக் கொள்ளையடித்தார்கள். தேவலோகத்திற்கு நேர்ந்த கதியைக் கண்ட வருணன், குபேரன், அனலன், அநீலன், யமன் ஆகியோர் தேவகுருவாகிய பிரகஸ்பதியிடம் சென்று முறையிட்டனர். பிரகஸ்பதி தேவேந்திரனின் இருப்பிடத்தைத் தேவர்களுக்குத் தெரிவித்தார்.
தேவர்கள் தேவேந்திரனிடம் சென்று தேவலோகத்திற்குத் திரும்பி வரும்படி அழைத்தார்கள். ஆனால் தேவேந்திரன் புத்தி பேதலித்துக் காணப்பட்டான். அதனால் தேவலோகம் திரும்புவதற்கும் அவன் சம்மதிக்கவில்லை. பிரகஸ்பதியின் ஆலோசனைப்படி தேவர்கள் அட்சய திருதியையன்று தேவேந்திரனை நீராடச் செய்து, ஹரிமந்திரம் சொல்ல வைத்து தான தர்மங்கள் செய்யும்படி செய்தனர்.
இதனால் தேவேந்திரன் சுயநினைவு பெற்று அசுரர்களை வென்று தேவலோகத்தை ஆட்சி செய்ய ஆரம்பித்தான். இந்தக் கதையின் மூலம், மனநிலை சரியில்லாதவர்களுக்கும் கூட அட்சய திருதியையன்று மருத்துவ சிகிச்சையும் பரிகாரமும் செய்தால் நோய் குணமடையும் என்பது ஐதீகமாகும்.


அத்வைதம் ஆஸ்ரமங்களில் மட்டும் இல்லை, அடுப்பங்கரையிலும் இருக்கிறதா?- மகா பெரியவா!

கோயில்: கோ-இறைவன்; இல்- இருக்குமிடம் என்று நாமெல்லாம் அறிவோம்.
ஒரு புதிய பரிமாணத்தை எனக்குச் சொன்ன மகா பெரியவருக்கு மனதார நன்றி கூறி இதனைப் பகிர்கின்றேன்.
ஆலயம் - ஆன்மா லயிக்கும் இடம். ஆலயம் தாம் நமது மனதுக்கு சாந்தி கிடைக்கும் இடம்.
நாம் தூங்கும் போதும், ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போதும் மட்டும் தான் நமக்கு நிறைந்த மன அமைதி கிடைக்கும். அப்போது நம் மனதில் எந்த விதமான சலனமும் இருக்காது.
ஆனால் நாம் விழித்திருக்கும் நேரத்தில் - நமது மனம் பல விதமான எண்ணங்களுடன் குரங்குபோல் தாவிக்கொண்டிருக்கிறது.
இந்த உலகவாழ்விக்குத் தேவையானது பொருள்; அது மட்டும் போதுமா என்றால் இல்லை; இறைவனின் அருளும் தேவை.
இறைவன் அருள் இருந்தால், நமக்கு அனைத்து வகை நன்மைகளும் செல்வங்களும் வந்து சேரும். அந்த இறைவனை எங்கு வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும், எந்த வடிவத்திலும் வழிபடலாம். தூணிலும் துரும்பிலும் யாவிலும் உறைபவன் இறைவன் என்பதும் நாம் அறிந்தது தானே!
ஆனால் இறைவனை ஆலயத்திற்கு சென்று வழிபடும்போது, நமது மனம் இறைவனை எண்ணி எண்ணி அவனிடத்தில் ஈடுபாடு ஏற்பட்டு மனமானது அமைதியடையும். இறை எண்ணத்தைத் தவிர வேறு அனைத்தும் நம்மிலிருந்து விலகிவிடும். ஆகையால் தான் நமது நாட்டில் பல ஆலயங்கள் அமைக்கப்பட்டு இறைவனை வழிபட்டுக் கொண்டிருக்கின்றோம். நம்மில் ஊடுருவியிருக்கின்ற மற்ற எண்ணங்கள் கலைந்து போகவே பற்பல பிரஹாரங்களையும் கடந்து இறுதியில் இறைவனின் சன்னதிக்கு நுழைகின்றோம்.
ஒவ்வொரு நாளும் நமது வீட்டிற்கு அருகில் உள்ள ஏதாவது ஒரு ஆலயத்துக்குச் சென்று இறைவனை வழிபடுவது மிக்க நலம். வாரத்தில் ஒரு நாளாவது செல்லவேண்டியது அவசியம்.
நல்ல விஷயங்களைப் பேசும் எந்தவொரு நேரமும் நல்ல நேரம் தாம். இந்த காக்காயோட உபத்ரவம் ரொம்ப தாங்கலே பெரியவா! தெருவுல போறச்சே கூட எங்கேர்ந்தோ வந்து தலைல உக்காந்துக்கறது... என்னிக்கோ ஒரு நாள் இப்டி நடக்கறதுன்னு இல்லே.. தெனோமும் இப்டியே நடக்கறது; ரொம்ப வேதனையா இருக்கு... பெரியவாதான் எனக்கு ஒரு வழி சொல்லணும். கல்யாணத்துக்கு ஒரு பொண்ணு இருக்கா... ரெண்டு பசங்கள் படிச்சிண்டிருக்கா. .. அனாதைகளா
போயிடுமோ..ன்னு கவலையா இருக்கு"
"காக்காய்க்கு தெனோமும் சாதம் போடு !... தெனோமும் நல்லெண்ணெய் விளக்கு ஏத்தி வை! சனிக்கிழமையன்னிக்கு சிவன் கோவிலுக்குப் போய் ஸ்வாமி தர்சனம் பண்ணு !."
ப்ரஸாதம் வாங்கிக்கொண்டு நிம்மதியாக சென்றாள் அந்த பக்தை. மகா பெரியவா பாரிஷதர்களிடம் சொன்னார்...
"நம்ம மடத்துக்கு, யானை,பசு, பூனை, நாய், பெருச்சாளி, எலி, குருவி, கொரங்குன்னு எல்லா ப்ராணிகளும் வருது... ஆனா, காக்கா மட்டும் வரதேயில்லை! கவனிச்சேளோ ?"
"பெரியவா சாக்ஷாத் பரமேஸ்வரனாச்சே! அதுனால சனீஸ்வரனுக்கு மடத்துக்குள்ள நொழையக்கூட பயம்! அதான் தன்னோட வாஹனத்தை கூட அனுப்பறதில்லே !".... அழகாக பதில் சொன்னார் ஒரு பாரிஷதர். மகா பெரியவா புன்முறுவல் பூத்தார்.
"நம்ம அஹங்கள்ள காக்காய்க்கு சாதம் போடறச்சே, "காக்காய், காக்காய்..ன்னோ காகம் காகம்..வா!வா! ..ன்னோ கூப்டறதில்லே! கா....கா..ன்னுதானே சொல்றா?... அப்டீன்னா என்ன அர்த்தம்?"
"காக்கா...சாப்ட வா!..ன்னு அர்த்தம்" என்றார் ஒரு பாரிஷதர்.
"அதான் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கே! கா.....கா.....ன்னா, காப்பாத்து! காப்பாத்து..ன்னு அர்த்தம். நம்ம பித்ருக்கள் எல்லாருமே காக்கா ஸ்வரூபமா வர்றதா ஐதீகம்! கா....கா......ன்னா, பித்ருக்களே! எங்களை ரக்ஷியுங்கோ!..ன்னு அர்த்தம் சொல்லலாமோல்லியோ? அதுமட்டுமில்லே...பகவான் எல்லா ஜந்துக்கள்கிட்டயும் ஆத்மாவா இருக்கான். காக்காய்க்குள்ளேயும் இருக்கத்தானே செய்வான்? பகவானுக்கு நைவேத்யம் பண்ணறச்சே... அவன் சாப்டறதை நம்மளால பாக்க முடியலே! அவனே காக்காயா வந்து, நாம போடற சாதத்தை சாப்பிடறச்சே, நம்மளால பாக்க முடியறது. ஏதோ ஒரு ஜீவன், வினைப்பயனா,காக்காயா பொறந்திருக்கு. அந்த ஜீவனுக்கு, அதாவுது, நம்ம ஸரீரத்துக்குள்ள இருக்கற ஆத்மாவுக்கு, ஸ்வரூபம்தான் வேறே! சாதம் போடறோம்! இது அத்வைதம்தானே?"
அத்வைதம் இத்தனை எளிதா? அத்வைதம் ஆஸ்ரமங்களில் மட்டும் இல்லை, அடுப்பங்கரையிலும் இருக்கிறதா! அதைத்தான் மஹாகவி "காக்கை குருவி எங்கள் ஜாதி" என்று அனுபவத்தில் பாடியிருக்கிறார்!





ஸ்ரீ காஞ்சி காமகோடீ ஸ்ரீசந்திரசேகர சரஸ்வதி ஜகத்குருவே!
நின் பொற்பாதம் போற்றி! போற்றி!

சதாபிஷேகம் கண்ட சதாபிஷேகி!
சதாபிஷேகம் கண்ட சத்குரு ஸ்வாமியும் இவரே!!
இந்த ஸ்ரீ சுவாமிநாதனே வையம் கண்ட ஸ்ரீசந்திரசேகர சரஸ்வதி ஜகத்குரு!

ஸ்ரீ காஞ்சி காமகோடீ ஸ்ரீசந்திரசேகர சரஸ்வதி ஜகத்குரு!
ஸ்ரீ காஞ்சி காமகோடீ சற்குருவே நின் பொற்பாதம் போற்றி!.
எம் மனதில் நடமாடும் கருணா சாகர!
சற்குருவே நின் பொற்பாதம் போற்றி!
எல்லாமறிந்த அருட்சக்தி!
சற்குருவே நின் பொற்பாதம் போற்றி!
மன வேதனை விலக்கிய வித்தக!
சற்குருவே நின் பொற்பாதம் போற்றி!
குணம் பொலிவுற புகழை சூடியவ!
சற்குருவே நின் பொற்பாதம் போற்றி!
வையம் புகழும் அறம் வளர் குணசீல!
சற்குருவே நின் பொற்பாதம் போற்றி!
கதறி தொழுதிடுவார் குறை அகற்றும்
சற்குருவே நின் பொற்பாதம் போற்றி!
வேதமும் நாதமும் போற்றும் வித்தக!
சற்குருவே நின் பொற்பாதம் போற்றி!
வையம் புகழும் குணசீல!
சற்குருவே! நின் பொற்பாதம் போற்றி!
கருணா சாகர! தொண்டர் தொழும்
சற்குருவே! நின் பொற்பாதம் போற்றி!
எம் மன களிற்றின் மதம் நீக்கும்
சற்குரு வே! நின் பொற்பாதம் போற்றி!
எம் மாயை மன அறியாமை அகற்றும்
சற்குருவே! நின் பொற்பாதம் போற்றி!
எம் தாயான தந்தை! பொற்பாதம் போற்றி!
சற்குருவே நின் பொற்பாதம் போற்றி!
ஒளிரும் அருளுருவாகி நின்ற எம்
சற்குருவே! நின் பொற்பாதம் போற்றி!
உற்றார்ஆர்? பெற்றார்ஆர்? உடன்பிறப்புஆர்? பிள்ளைகள்ஆர்?
மற்றார் இருந்தால் என்? மாளும்போது உதவுவரோ?
அற்புதமாய் அவனிதனில் பவனிவரும் சற்குருவே! நின்
பொற்பதமே தந்திடும் பூவுலகின் மேன்மைதனை!!
கற்பகமாய் வந்தருளும் சற்குருவே! நின் ஆசியினால்
அற்பமான பிறவியிதும் அதிசயமாய் மாறிடுமே!!
ஸ்ரீ காஞ்சி காமகோடீ ஜகத்குரு! ஸ்ரீகாமகோடீ சற்குருவே!

ஸ்ரீ ஸ்ரீசந்திரசேகர சரஸ்வதி காயத்ரீ!

ஓம் காஞ்சீ வாஸாய வித்மஹே
சாந்த அத்வைத ஸ்வரூபாய தீமஹி |
தன்னோ சந்திரசேகர ப்ரசோதயாத் ||
ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா என்ற ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள்
சுவாமிநாதனே அன்று சதாபிஷேகம் கண்ட மஹா பெரியவா ஸ்ரீசந்திரசேகர சரஸ்வதி, (1973) காஞ்சி காமகோடி 68வது பீடாதிபதி
அந்த சுவாமிநாதன் கண்ட சுப்பிரமண்யனே இன்று சதாபிஷேகம் கண்ட ஜகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி (2014) காஞ்சி காமகோடி 69வது பீடாதிபதி.
சதாபிஷேகம் கண்ட சத்குரு ஸ்வாமியும் இவரே!!
சதாபிஷேகி கண்ட சதாபிஷேகி!
ஸ்ரீ காஞ்சி காமகோடீ மகான் ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதீ ஜகத்குருவே நின் பொற்பாதம் போற்றி! போற்றி!

ஸ்ரீ காஞ்சி காமகோடி மஹா பெரியவா தாசன்
DrKrishnamoorthi Balasubaramanian & Radha Balasubramanian.
FOUNDER OF KANCHI ACHARYAS,THE MAHAN OF THIS MILLINEUM FACEBOOK GROUPS





"ரட்ட வடத்துல எட்டு பவுன் சங்கிலி போடணுமா?"

"ஒரு அனுஷத்தில் நடந்த அதிசய சம்பவம்."

வைகாசி அனுஷம்-2 வது போஸ்ட்.02-06-2015.
(இன்று பெரியவா ஜெயந்தி)

(மெம்பர்களுக்கு; இது 11-01- 2012-ல் குருப்பில் பகுதி
பகுதியாக 3 முறை போட்ட ஒரு பெரிய கட்டுரை.
இது போல சுவையான மெய் சிலிர்க்கும் சம்பவம்
இரண்டு சம்பவங்கள் ஒருங்கே இணைந்து
விறுவிறுப்பாகப் போகும். கதைகளில் கூட இதை
காண முடியாது. பல முறை போஸ்டும் படித்தும்
அலுக்காத ஒரே போஸ்ட். நான் தட்டச்சு பழகிய
சமயத்தில் அடித்த ஒரு பெரிய கட்டுரை.)

கட்டுரையாளர்-எஸ்.ரமணி அண்ணா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்,

பல வருஷங்களுக்கு முன்பு, ஒரு நாள் விடியற்காலை,லேசாகமழை பெய்துகொண்டிருந்தது. காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தில்ஏகாந்தமாக அமர்ந்திருந்தார். மகா பெரியவா.தரிசனத்துக்குவந்திருந்த பக்தர்கள், தரிசித்துச் சென்றபின் அறைக்குச் செல்வதற்காக எழுந்தார் ஸ்வாமிகள். அப்போது வயதானபாட்டியும், இளம் வயதுப் பெண் ஒருத்தியும் வேக்வேகமாக ஓடிவந்து, பெரியவாளை நமஸ்கரித்து எழுந்தனர். சற்று கூர்ந்து நோக்கிய ஸ்வாமிகள்,மீண்டும் அப்படியே அமர்ந்துவிட்டார்.

சந்தோஷம் தவழ, "அடடே,மீனாட்சி பாட்டியா? என்ன அதிசயமா காலை வேளைல வந்திருக்கே?பக்கத்திலே ஆரு? ஒம் பேத்தியா...பேரென்ன?" என்று வினவினார் ஸ்வாமிகள்.

மீனாட்சி பாட்டி.."பெரியவா, நா எத்தனையோ வருஷமா
மடத்துக்கு வந்து ஒங்கள தர்சனம் பண்ணிண்டிருக்கேன்.
இதுவரைக்கும் ஸ்வாமிகள்கிட்டே "என்னைப் பத்தி
தெரிவிச்சுண்டதில்லே...அதுக்கான சந்தர்ப்பம் வரலே..
ஆனா,இப்போ வந்துருக்கு. இதோ நிக்கறாளே..இவ
எம் பொண் வயத்துப் பேத்தி.இந்த ஊர்ல பொறந்ததால
காமாட்சினு பேரு வெச்சுருக்கு.நேக்கு ஒரே பொண்ணு..
அவளும் பன்னண்டு வருஷத்துக்கு முன்னாலே,
இவளை எங்கிட்ட விட்டுட்டு கண்ண மூடிட்டா...
ஏதோ வியாதி... அவளுக்கு முன்னாலயே அவ புருஷன்
மாரடைப்புல போய்ச் சேர்ந்துட்டான்.

"அதுலேர்ந்து இவளை வெச்சுண்டு அல்லாடிண்டிருக்கேன்.
பள்ளிக்கூடத்துல சேத்துப் படிக்க வெச்சேன்.படிப்பு ஏறலே.
அஞ்சாங் கிளாஸோடு நிறுத்தியாச்சு.வயசு பதினஞ்சு ஆறது..இவளை ஒருத்தங்கிட்ட கையப் புடுச்சு குடுத்துட்டேன்னா எங்கடமை விட்டுது" என்று சொல்லி முடித்தாள்.

பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்த ஆச்சார்யாள்,
"நித்யம் கார்த்தால பத்து பத்தரை மணி சுமாருக்கு
சந்த்ரமௌலீஸ்வர பூஜைக்கு பாரிஜாத புஷ்பம்
கொண்டுவர நீ, இன்னிக்கு விடிய காலம்பற வந்து
நிக்கறதப் பார்த்த ஒடனேயே ஏதோ விசேஷத்தோடுதான்
வந்துருக்கேங்கறத புரிஞ்சுண்டேன். சரி..என்ன
சமாசாரம்?" என்று பளிச்சென்று கேட்டார் ஸ்வாமிகள்.

முதலில் தயங்கிய மீனாட்சி பாட்டி மெல்ல ஆரம்பித்தாள்.
"ஒண்ணுமில்லே பெரியவா, இவுளுக்கு ஏத்தாப்ல
ஒரு வரன் வந்திருக்கு.பையனும் இந்த ஊர்தான்.
பள்ளிக்கூட வாத்தியார்.அறுவது ரூவா சம்பளமாம்.
நல்ல குடும்பம்,பிக்கல் புடுங்கல் இல்லே.ரெண்டு பேர்
ஜாதகமும் நன்னா பொருந்தி இருக்குனு சொல்றா.
எப்படியாவது இத நீங்கதான் நடத்தி வெக்கணும்
பெரியவா..." என்று நமஸ்கரித்து எழுந்தாள் பாட்டி.

உடனே ஆச்சார்யாள் சற்று உஷ்ணமான குரலில்,
"என்னது? கல்யாணத்த நா நடத்தி வெக்கறதாவது...
என்ன பேசறே நீ.." என்று கடிந்து கொண்டார்.அடுத்த
சில வினாடிகளிலேயே சாந்தமாகி, "சரி...நா என்ன
பண்ணணும்னு எதிர்பாக்கறே?" என்றார்.

பாட்டி சந்தோஷத்தோடு, "ஒண்ணுமில்லே பெரியவா,
இவ கல்யாணத்துக்காக அப்டி இப்டினு ஐயாயிரம் ரூவா
சேத்து வெச்சுருக்கேன். அதுல கல்யாணத்த நடத்தி
முடுச்சுடுவேன். ஆனா, அந்த புள்ளயாண்டானோட அம்மா,
"பாட்டி,நீங்க என்ன பண்ணுவேளோ, ஏது பண்ணுவேளோ..
ஒங்க பேத்தி கழுத்துல எட்டு பவுன்ல ரட்ட [இரட்டை]
வட சங்கிலி ஒண்ணு போட்டே ஆகணும்'னு கண்டிஷனா
சொல்லிப்டா. பவுன்ல நகை நட்டுன்னு என் வருமானத்துல
இவுளுக்கு பெரிசா ஒண்ணும் பண்ணிவைக்க முடியலே.
தலா ஒரு பவுன்ல இவ ரண்டு கைக்கு மாத்ரம் வளையல்
பண்ணி வெச்சுருக்கேன்...அதான் என்னால முடிஞ்சது.
நா எட்டு பவுன் ரட்ட வட சங்கிலிக்கு எங்கே போவேன்
பெரியவா நீங்கதான்..." என்று முடிப்பதற்குள்...

ஸ்வாமிகள், "ரட்ட..வட சங்கிலிய எட்டு பவுன்ல பண்ணிப்
போடணும்கறயா, சொல்லு?" என்று சற்றுக் கோபத்துடனே
கேட்டார்.

உடனே மீனாட்சி பாட்டி, ஸ்வாமிகளை நமஸ்காரம் பண்ணி
எழுந்து கன்னத்தில் போட்டுக்கொண்டு, "அபசாரம்..அபசாரம்
பெரியவா,நா அப்டி சொல்ல வரலே.ஒங்களை தரிசனம்
பண்றதுக்கு நித்யம் எத்தனையோ பணக்காரப் பெரிய
மனுஷாள்ளாம் வராளே..அவாள்ள யாரையாவது நீங்க கை
காட்டி விட்டு இந்த எட்டு பவுன் ரட்ட வட சங்கிலிய பூர்த்தி
பண்ணித்தரச் சொல்லக்கூடாதா?" என்று ஏக்கத்தோடு
கேட்டாள்.

"தரிசனத்துக்கு வர பெரிய மனுஷாள்ட்ட கைகாட்டி விடறதாவது?அப்டியெல்லாம் கேக்கற வழக்கமில்லே. நீ வேணும்னா ஒன்சக்திக்குத் தகுந்த மாதிரி, எட்டு..பத்து பவுன் கேக்காத எடமாபார்த்துக்கோ.அதான் நல்லது" என்று சொல்லி எழுந்துவிட்டார் ஸ்வாமிகள்.

உடனே மீனாட்சி பாட்டி பதற்றத்தோடு, "பெரியவா அப்டி சொல்லிப்டுபோகக்கூடாதுனு பிரார்த்திக்கிறேன்.இப்ப பாத்திருக்கிறது ரொம்ப நல்ல எடம் பெரியவா, பையன் தங்கமான குணம்,அவாத்துலரெண்டு பொண்களுக்கும் கல்யாணம் பண்ணிக் கொடுக்கறச்சே எட்டெட்டு பவுன்ல ரட்ட வடச் சங்கிலி போட்டுத்தான் அனுப்பிச்சாளாம்.

அதனால வர்ற மாட்டுப்பொண்ணும் ரட்ட வடத்தோட வரணும்னுஆசைப்படறா..வேறு இண்ணுமில்லே பெரியவா,நீங்கதான் இதுக்கு வழிகாட்டணும்" என்று கெஞ்சினாள்.

எழுந்துவிட்ட ஆச்சார்யாள் மீண்டும் கீழே அமர்ந்தார். சற்று நேரம்யோசனையில் ஆழ்ந்தார். பிறகு கருணையோடு பேச ஆரம்பித்தார்,

"நா ஒரு கார்யம் சொல்றேன்....பண்றயா?"

"கண்டிப்பா பண்றேன்.என்ன பண்ணணும்னு சொல்லுங்கோ"
என்று பரபரத்தாள் பாட்டி.

உடனே ஆச்சார்யாள், "ஒம் பேத்தியை அழச்சிண்டு அஞ்சு
நாளைக்கு காமாட்சியம்மன் கோயிலுக்குப் போ.ரெண்டு பேருமாசேந்து, "எட்டு பவுன்ல ரட்ட வட சங்கிலி போட்டு கல்யாணம்ஜாம்ஜாம்னு நடக்கணும்....நீதாண்டி அம்மா நடத்தி வைக்கணும்னு பிரார்த்திச்சுண்டு ரெண்டு பேருமா சந்நிதியை அஞ்சு பிரதட்சணம்பண்ணுங்கோ, அம்பாளுக்கு முன்னாடி அஞ்சு தடவை நமஸ்காரம் பண்ணிட்டுக் கெளம்புங்கோ.இப்டி அஞ்சு நாளக்கி பண்ணுங்கோ...ஒம் மனசுல நெனச்சிண்டிருக்கறபடியே காமாட்சி நடத்தி வெப்பா" என்று சிரித்துக்கொண்டே அனுக்கிரகித்தார்.

நமஸ்காரம் பண்ணி எழுந்த மீனாட்சி பாட்டி, "அதென்ன
பெரியவா... எல்லாமே அஞ்சஞ்சா சொல்றேளே.அப்டி
பண்ணா பேத்தி காமாட்சிக்கு அம்பாள் காமாட்சி கல்யாணத்த நடத்தி வெச்சுடுவாதானே" என ஆர்வத்தோடு கேட்டாள்.

உடனே மகா ஸ்வாமிகள், "அஞ்சஞ்சுனு நானா சொல்லலே.
அம்பாளுக்கு, 'பஞ்ச ஸங்க்யோபசாரிணி'னு ஒரு பெருமை உண்டு.அஞ்சஞ்சா பண்ற உபசாரத்திலே சந்தோஷப்பட்டு அனுக்கிரகம்பண்றவ அவ,அதத்தான் சொன்னேனே தவிர, வேற ஒண்ணுமில்லே" எனச் சிரித்துக்கொண்டே சொன்னார்.

"இத நாங்க எப்ப ஆரம்பிக்கட்டும் பெரியவா?" என்று
பிரார்த்திதாள் பாட்டி.

ஸ்வாமிகள் சிரித்துக்கொண்டே, "சுபஸ்ய சீக்ரஹனு
சொல்லிருக்கு. இன்னிக்கு வெள்ளிக்கிழமை. ஏன், இன்னிக்கே ஆரம்பிச்சுடேன்" என உத்தரவு கொடுத்தார்.

"சரி பெரியவா.அப்டியே பண்றேன்" என்று சொல்லிப் பேத்தியுடன்நகர்ந்தார்.பெரியவா எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.ஸ்வாமிகள் சிரித்துக்கொண்டே, "சுபஸ்ய சீக்ரஹனுசொல்லிருக்கு. இன்னிக்கு வெள்ளிக்கிழமை. ஏன், இன்னிக்கேஆரம்பிச்சுடேன்" என உத்தரவு கொடுத்தார்.

"சரி பெரியவா.அப்டியே பண்றேன்" என்று சொல்லிப் பேத்தியுடன் நகர்ந்தார்.பெரியவா எழுந்து உள்ளே சென்றுவிட்டார்.

பேத்தியுடன் காமாட்சி அம்மன் கோயிலை நோக்கி நடந்தாள்
பாட்டி. வெள்ளிக்கிழமையானதால் கோயிலில் ஏகக் கூட்டம்.அன்னை காமாட்சி அன்று விசேஷ அலங்காரத்தில் ஜொலித்தாள்.

இருவரும் கண்களை மூடிப் பெரியவா சொன்னது போலவே
பிரார்த்தித்துக் கொண்டனர். பேத்தியின் நட்சத்திரத்துக்கு ஓர்
அர்ச்சனை செய்து பிரசதம் வாங்கிக்கொண்டாள் பாட்டி.

பிறகு பேத்தியும் பாட்டியும் அம்மனிடம், "எட்டு பவுன் ரட்ட
வட சங்கிலி'யையே பிரார்த்திதபடி ஐந்து பிரதட்சணம் வந்தனர்.ஸ்வாமிகள் சொன்னபடி அம்பாளுக்கு முன்பாக ஐந்து நஸ்காரம்பண்ணினார்கள். பிறகு நம்பிக்கையுடன் வீடு திரும்பினர்.

சனிக்கிழமை காலையில் பேத்தியை அழைத்துக்கொண்டு
வீட்டைவிட்டுப் புறப்பட்ட மீனாட்சி பாட்டி,பாரிஜாத
புஷ்பங்களைச் சேகரித்துக்கொண்டு சங்கர மடம் நோக்கி
விரைந்தாள்.மடத்தில் ஏகக் கூட்டம்.மீனாட்சி பாட்டி இருபது
முப்பது பக்தர்களுக்குப் பின்னால் பேத்தியுடன் நின்றிருந்தாள்.

பாட்டிக்கு முன்னால் நின்றிருந்தவர் தனக்கு அருகிலிருந்தவரிடம் சொல்லிக்கொண்டிருந்த விஷயம் பாட்டியின் காதில் விழுந்தது.

அவர், "இன்னிக்கு அனுஷ நட்சத்ரம். பெரியவாளோட
நட்சத்ரமாம். அதனால் ஸ்வாமிகள் இன்னக்கி மௌன விரதம்.யாரோடயும் பேசமாட்டாராம்.முக தரிசனம் மட்டும்தான்" என்று விசாரப்பட்டுக் கொண்டார்.

மீனாட்சி பாட்டிக்குக் கவலை தொற்றிக் கொண்டது.
இன்னிக்கும் பெரியவாளைப் பாத்து எட்டு பவுன் ரட்ட வட
சங்கிலியபத்திஞாபகப்படுத்தலாம்னுநெனச்சுண்டிருந்தேனே,அது இப்ப முடியாது போலருக்கே?" என்று கவலைப்பட்டாள்.

பெரியவா அமர்ந்திருந்த இடத்தை நெருங்கிய இருவரும்
ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தனர். எந்தவொரு சலனமுமின்றிஅப்படியே அமர்ந்திருந்தது,அந்த பரப் பிரம்மம்."எட்டு பவுன் ரட்டவட சங்கிலி" குறித்துச் சட்டென்று வாய் திறந்து ஸ்வாமிகள் ஏதும் சொல்லிவிட மாட்டாரா என ஏங்கினாள் பாட்டி.

மகா ஸ்வாமிகளுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தவர் சற்றுக்கடுமையாக,"பாட்டி,நகருங்கோ...நகருங்கோ..பெரியவாஇன்னிக்கு மௌன விரதம் பேசமாட்டார்.பின்னாலே எத்தனபேர் காத்துண்டுருக்கா பாருங்கோ" என்று விரட்டினார்.காமாட்சியம்மன்கோயிலை நோக்கி பேத்தியுடன் நடையைக்கட்டினாள்.அன்றைக்கும் காமாட்சியம்மன் சந்நிதியில் பெரியவா
கூறியபடி 'பஞ்ச ஸங்க்யோபசார'த்தை அர்ப்பணித்து வீடு
திரும்பினர் இருவரும்.அடுத்தடுத்து ஞாயிறு,திங்கள் இரு
நாட்களும் மகா ஸ்வாமிகள் மௌன விரதம் மேற்கொண்டார்.

இரு நாட்களும் மடத்துக்குப் போய் பெரியவாளை தரிசனம்
மட்டும் செய்துவிட்டுத் திரும்பினர் பாட்டியும் பேத்தியும்.
பாட்டி ரொம்பக் கவலைப்பட்டாள்."பெரியவா சொன்ன பிரகாரம் அஞ்சுல நாலு நாள் பூர்த்தியாயிடுத்தே,ஒண்ணுமேநடக்கலியே...அம்மா காமாட்சி கண் திறந்து பாப்பாளா,மாட்டாளா?" என்று தனக்குத்தானே அங்கலாய்த்துக் கொண்டாள் பாட்டி

செவ்வாய்க்கிழமை விடிந்தது.அன்று காஞ்சி ஸ்ரீ சங்கர மடம்
மிகவும் கலகலப்பாக இருந்தது.ஆரணியிலிருந்து வந்திருந்த
பஜனை கோஷ்டி ஒன்று மடத்தை பக்திப் பரவாத்தில்
ஆழ்த்திக்கொண்டு இருந்தது.

ஆச்சார்யாள் வழக்கமான இடத்தில் வந்து உட்கார்ந்தார்.
அன்றைய தினம் பெரியவா முகத்தில் அப்படி ஒரு மகா தேஜஸ்!

இன்று மௌனம் கலைத்துவிட்டார் ஸ்வாமிகள். பெரியவாளை தரிசிக்க ஏகக் கூட்டம். வரிசையில் வந்த நடுத்தர வயது மாமி,முகத்தில் மகிழ்ச்சி பொங்க ஸ்வாமிகளுக்கு முன் வந்து நமஸ்கரித்து
எழுந்தாள். அந்த அம்மா முகத்தில் அப்படி ஒரு குதூகலம். தான்கொண்டு வந்திருந்த பெரிய ரஸ்தாளி வாழைத் தார், மட்டைத்தேங்காய்கள்,சாத்துக்குடி,ஆரஞ்சு,பூசணி,மொந்தன்வாழைக்காய்வகையறாக்களை ஆச்சார்யாளுக்கு முன் சமர்ப்பித்துவிட்டு,மீண்டும் ஒரு தடவை நமஸ்கரித்தாள்.

எதிரிலிருந்த பதார்த்தங்களை ஒரு தடவை நோட்டம்விட்ட
ஸ்வாமிகள் சிரித்துக்கொண்டார். பிறகு கண்களை இடுக்கிக்கொண்டுஅந்த அம்மாவையே கூர்ந்து நோக்கியவர்,

நீ நீடாமங்கலம்மிராசுதார்கணேசய்யரோடஆம்படையா
[மனைவி] அம்புஜம்தானே? ரெண்டு மாசத்துக்கு முன்னாடி வந்திருந்தே..ஏதோ சொல்லிதுக்கப்பட்டுண்டே..இப்போ சந்தோஷமா பெரிய வாழத்தாரோடநீ வந்துருக்கறதைப் பாத்தா காமாட்சி கிருபையில அதெல்லாம் நிவர்த்தி ஆயிருக்கும்னு படறது.சரிதானே!" என்று கேட்டார்.

அம்புஜம் அம்மாள் மீண்டும் ஒருமுறை ஸ்வாமிகளை
நமஸ்கரித்துவிட்டு,"வாஸ்தவந்தான் பெரியவா. மூணு வருஷமாஎங்க ஒரே பொண் மைதிலிய அவ புக்காத்துல தள்ளி வெச்சிருந்தா.ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒங்ககிட்ட ஓடி வந்து இந்தஅவலத்தைச் சொல்லி அழுதேன்.நீங்கதான் இந்த ஊர்காமாட்சியம்மன் கோயில்ல அஞ்சு நாளக்கி,அஞ்சு பிரதட்சிணம்,அஞ்சு நமஸ்காரம் பண்ணி..அபிஷேக ஆராதனையும் பண்ணச் சொன்னேள்.

"சிரத்தையா பூர்த்தி பண்ணிட்டுப் போனேன்.என்ன ஆச்சரியம் பாருங்கோ..பதினஞ்சு நாளக்கி முன்னாடி,ஜாம்ஷெட்பூர் டாடாஸ்டீல்ல வேல பாக்கற எம் மாப்ள ராதாகிருஷ்ணனே திடீர்னுவந்து மைதிலிய அழைச்சிண்டு போய்ட்டார். எல்லாம் அந்த
காமாட்சி கிருபையும்,ஒங்க அனுக்கிரகமும்தான் பெரியவா"
என்று ஆனந்தக் கண்ணீர் மல்கக் கூறினாள்.

உடனே பெரியவா, "பேஷ்..பேஷ்..ரொம்ப சந்தோஷம்.தம்பதி
க்ஷேமமா இருக்கட்டும். ஆமா...இவ்ளவு பெரிய வாழத்தார் எங்க புடிச்சே. பிரமாண்டமா இருக்கே!" என்று கேட்டுவிட்டு
இடிஇடியென்று சிரித்தார்.

அம்புஜம் அம்மாள் சிரித்துக்கொண்டே,"இது நம்ம சொந்த
வாழைப் படுகையில வெளஞ்சது பெரியவா.அதான் அப்டி
பெரிய தாரா இருக்கு" என்று பவ்யமா பதில் சொன்னாள்.
ஸ்வாமிகள் மகிழ்வோடு," சரி...சரி..ஒம் பொண்ணு,மாப்ளய
திருப்பியும் அம்மா காமாட்சிதான் சேத்து வெச்சிருக்கா,அதனால்நீ இந்தப் பெரிய வாழத்தார எடுத்துண்டு போயி அவளுக்குஅர்ப்பணம் பண்ணிட்டு அங்க வர பக்தாளுக்கு விநியோகம் பண்ணிடு" என்று கட்டளையிட்டார்.

உடனே அம்புஜம் அம்மாள், "இல்லே பெரியவா...இது இந்த
சந்நிதானத்துலயே இருக்கட்டும். அம்பாளுக்கு அர்ப்பணிக்க
இதே மாதிரி இன்னொரு வாழத்தார் கொண்டு வந்திருக்கேன்.பெரியவா.... நா உத்தரவு வாங்கிண்டு அம்பாளை தரிசனம் பண்ணிட்டு பிரார்த்தனையைப் பூர்த்தி பண்ணிட்டு வந்துடறேன்" என்று நமஸ்கரித்தாள்
.
"பேஷா,பிரார்த்தனையை முடிச்சுண்டு வந்து மத்யானம்
நீ மடத்ல சாப்டுட்டுத்தான் ஊருக்கு திரும்பணும்..ஞாபகம்
வெச்சுக்கோ"என்று உத்தரவு கொடுத்தார் ஸ்வாமிகள்.
_______________________________________________________
அன்று காமாட்சியம்மன் கோயிலில் அவ்வளவாகக்
கூட்டமில்லை. காலை 11 மணி வழக்கத்தைவிட நேரமாகிவிட்டதால்பேத்தியுடன் கோயிலை நோக்கி வேகமாக நடையைக்கட்டினாள் மீனாட்சி பாட்டி. கோயில் வாசலில் அர்ச்சனைத் தட்டுவியாபாரம் செய்கிற கடைக்கு முன் நின்ற பாட்டி, பேத்தியிடம்,"அடியே காமாட்சி, இன்னிக்கு பூர்த்தி நாள்டீ. அதனால எல்லாத்தயுமே ஆச்சார்யாள் சொன்னபடி அஞ்சஞ்சா பண்ணிடுவோம்.

நீ என்ன பண்றே..அர்ச்சனைக்கு அஞ்சு தேங்கா,அஞ்சு ஜோடி
வாழப்பழம்,வெத்தல பாக்குனு எல்லாமே அஞ்சஞ்சா வாங்கிண்டு ஓடி வா,பார்ப்போம் என்று காசைக் கொடுத்தாள்.

பாட்டி சொன்னபடி யே வாங்கி வந்தாள் பேத்தி. அம்பாளுக்கு
அர்ச்சனை பண்ணி, கண்களில் நீர் மல்கப் பிரார்த்தித்துக் கொண்டாள்

பாட்டி: "அம்மா காமாட்சி, ஒன்னைத்தாண்டியம்மா பூர்ணமா
நம்பிண்டிருக்கேன். ஒன்னையும் ஸ்வாமிகளையும் விட்டா
வேற கதி நேக்கு இல்லேடிம்மா.நீதான் எப்டியாவது அந்த
எட்டு பவுன் ரட்ட வட சங்கிலிக்கு ஏற்பாடு பண்ணித் தந்து
பேத்தி கல்யாணத்தை நல்ல படியா முடிச்சு வெக்கணும்.."
பாட்டி விசும்ப, பேத்தியும் விசும்பினாள். பாட்டி முன் செல்ல
பேத்தி பின் தொடர இருவரும் பிராகார வலத்தை ஆரம்பித்தனர்.

நான்காவது பிரதட்சிணம், வடக்குப் பிராகாரத்தில் வலம்
வந்து கொண்டு இருந்தனர் இருவரும்.

"பாட்டீ...பாட்டீ....பாட்டீ...!" பேத்தியின் உயர்ந்த குரலைக் கேட்டுத்திரும்பிப் பார்த்த பாட்டி,ஆத்திரத்தோடு, "ஏன் இப்டி கத்றே? என்ன பறிபோயிடுத்து நோக்கு? என்று கடுகடுத்தாள்.
"ஒண்ணும் பறிபோகலே பாட்டி,கெடச்சிருக்கு! இப்டி ஓரமா
வாயேன் காட்றேன்!" என்று சொல்லி பாட்டியை ஓரமாக
அழைத்துப் போய்த் தன் வலக்கையைத் திறந்து காண்பித்தாள்.

பேத்தி.அதில் முகப்புடன் கூடிய அறுந்த இரட்டை வட
பவுன் சங்கிலி!

"ஏதுடி இது?" பாட்டி ஆச்சரியத்தோடு கேட்டாள். பேத்தி,
"நோக்குப் பின்னால குனிஞ்சுண்டே வந்துண்டிருந்தேனா..
அப்போ ஓரமா கெடந்த இந்த சங்கிலி கண்ண்ல பட்டுது...
அப்டியே 'லபக்'னு எடுத்துண்டுட்டேன். ஒருத்தரும் பார்கலே!
இது அறுந்துருக்கே பாட்டி..பவுனா..முலாம் பூசினதானு
பாரேன்" என்றாள்.

அ'தைக் கையில் வாங்கி எடையைத் தோராயமாக அனுமானித்த பாட்டி,"பவுனாத்தான் இருக்கணும்னு தோண்றதுடி,காமாட்சி, எட்டு..எட்டரை
பவுன் இருக்கும்னு நெனக்கிறேன்.இது பெரியவா கிருபைல
காமாட்சியேநமக்குஅனுக்கிரகம்பண்ணியிருக்கா.சரி...சரி....வா,வெளியே போவோம்,மொதல்லே" என்று சொல்லியபடி அதைத்தன்புடவைத் தலைப்பு நுனியில் முடிந்துகொண்டு, வேக வேகமாகவெளியே வந்துவிட்டாள்.அன்று பிரதட்சிணத்தில், "பஞ்சஸங்க்யோபசார'த்தை [5 முறை வலம் வருவதை] மறந்து விட்டாள்.

மதியம் ஒரு மணி, ஆச்சார்யாளை தரிசிக்க மடத்தில் நான்கோ அல்லது ஐந்து பேரோ காத்திருந்தனர்.பேத்தியுடன் வந்த மீனாட்சி பாட்டி ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தாள்.பாட்டியைப் பார்த்த ஸ்வாமிகள் சிரித்தார். ஸ்வாமிகளிடம் பவுன் சங்கிலி கண்டெடுத்தவிஷயத்தைச் சொல்லலாமா...வேண்டாமா என்று குழம்பினாள்.

அதற்குள் ஸ்வாமிகளே முந்திக்கொண்டு, "இன்னியோட நோக்குகாமாட்சியம்மன் கொயில்ல பஞ்ச ஸங்க்யோபசார பிரதட்சிணம்கிரமமா பூர்த்தியாகி இருக்கணும்.....ஆனா ஒம் பேத்தி கைலகெடச்ச ஒரு வஸ்துவால அது பூர்த்தியாகாம போயிடுத்து!அந்த சந்தோஷம்....நாலு பிரதட்சிணத்துக்கு மேல ஒன்னபண்ண விடலே. காமாட்சி பூர்ணமா அனுக்கிரகம்பண்ணிப்டதா நெனச்சுண்டு வேகமா வந்துட்டே..என்ன நான் சொல்றது சரிதானே?"என யதார்த்தமாகக் கேட்டார்.

பாட்டிக்குத் தூக்கிவாரிப் போட்டது. மென்று விழுங்கினாள்.
கை கால் ஓடவில்லை. "ஸ்வாமிகள் என்னை தப்பா
எடுத்துண்டுடப்டாது. பேத்தி கைல அது கிடச்ச ஒடனே,
அம்பாளே அப்டி பிராகாரத்துல போட்டு பேத்திய எடுத்துக்கச்
சொல்லியிருக்கானு நெனச்சுண்டுட்டேன்....அந்த சந்தோஷத்துலஇன்னொரு பிரதட்சிணம் பண்ணணும்கறதையும் மறந்துட்டேன்" என்று தயங்கித்தயங்கிச் சொன்னாள்.

உடனே பெரியவா, "அது மட்டும் மறந்துட்டயே ஒழிய, அந்த
வஸ்துவ எடுத்துண்டுபோய் காசுக்கடை ரங்கு பத்தர்ட்ட
எட போடறத்துக்கோ....அறுந்தத பத்த வக்கறத்துக்கோ
மறக்கலியே நீ?" என்று சற்றுக் கடுமையாகக் கேட்டுவிட்டு,
"அது போகட்டும்.... எட போட்டயே....சரியா எட்டு
இருந்துடுத்தோல்லியோ" என முத்தாய்ப்பு வைத்தார்.

கிடுகிடுத்துப் போய்விட்டனர் பாட்டியும் பேத்தியும்.
"நீங்க சொன்னதெல்லாம் சத்யம் பெரியவா" என்றாள் பாட்டி.

ஸ்வாமிகள் அமைதியாகக் கேட்டார், "நியாயமா சொல்லு,
அந்த பதார்த்தம் யாருக்குச் சொந்தம்?"

"அம்பாள் காமாட்சிக்கு."

"நீயே சொல்லு...அத ரகசியமா எடுத்து ஒம் பொடவ தலப்ல
முடிஞ்சிக்கலாமா?"

"தப்பு...தப்புதான்! என்ன மன்னிக்கணும், தெரியாம அப்டிப்
பண்ணிப்டேன்" என்று மிகவும் வருத்தப்பட்ட பாட்டி,
அந்த ரட்ட வட பவுன் சங்கிலியை எடுத்து,கை நடுங்க
ஸ்வாமிகளுக்கு முன்பிருந்த பித்தளை தாம்பாளத்தில்
வைத்தாள். சிரித்தார் ஸ்வாமிகள்.

இப்போது மணிஇரண்டு,மீனாட்சிபாட்டியையும்,
பேத்தியையும் எதிரில் அமரச் சொன்னார் ஸ்வாமிகள்.. அப்போது,கலையில் புறப்பட்டுச் சென்ற நீடாமங்கலம் கணேசய்யரின் தர்மபத்தினிஅம்புஜம் அம்மாள், சொகமே உருவாகத் திரும்பி வந்துஆச்சார்யாளை நமஸ்கரித்து எழுந்தாள்.பொலபொலவென்று கண்களில் நீர் வழிந்தது. இதைப் பார்த்த ஸ்வாமிகள்,

"அடடா...எதுக்கம்மா கண் கலங்கறே? என்ன நடந்தது?"
என வாத்ஸல்யத்துடன் வினவினார்.

உடனே அம்புஜம் அம்மாள் கண்களைத் துடைத்துக்கொண்டே,

"வேற ஒண்ணுமில்லே பெரியவா,ரண்டு மாசத்துக்கு முன்னாடிஒங்க உத்தரவுபடி காமாட்சியம்மன் கோயில்ல அஞ்சு நாள் சேவைபண்றச்சே,'பிரிஞ்சிருக்கிற எம் பொண்ணையும் மாப்பிள்ளையையும் ஒண்ணா சேத்து வெச்சயானா, எங்கழுத்துல போட்டுண்ருக்கறஎட்டு பவுன் ரட்ட வட சங்கிலிய நோக்கு அர்ப்பணம் பண்றேன்'னு அம்பாள்ட்ட மனப்பூர்வமா பிரார்த்திச்சுண்டேன்.

தம்பதிய ஒண்ணா சேத்து வெச்சுட்டா அம்பாள். வேண்டிண்டபடிஅந்த ரட்ட வடத்த சேத்துடலாம்னு கார்த்தால கோயிலுக்குப்போனேன். அந்த செயின் கழுத்லேர்ந்து நழுவி எங்கேயோ விழுந்துடுத்து. போன எடத்தெல்லாம் தேடிப் பார்த்துட்டேன்.

ஒரு எடத்லயும் கிடைக்கலே...இப்ப என்ன பண்ணுவேன் பெரியவா?"என்று புலம்ப ஆரம்பித்துவிட்டாள்.

ஸ்வாமிகள் மீனாட்சி பாட்டியின்பக்கம் தன் பார்வையைத் திருப்பி, அர்த்தபுஷ்டியுடன் பார்த்தார்.
ஸ்வாமிகளை அப்படியே நமஸ்கரித்துவிட்டு, விருட்டென்று எழுந்தாள் பாட்டி. பெரியவாளுக்கு முன் பித்தளைத் தாம்பாளத்தில்

இருந்த ரட்ட வட பவுன் சங்கிலியைக் கையில் எடுத்தாள்.

மகிழ்ச்சியுடன், "அம்மா பங்கஜம்... நீ தவறவிட்ட ரட்ட வடம்
இதுவா பாரு?" என்று காண்பித்தாள்.

அதைக் கையில் வாங்கிப் பார்த்த அம்புஜம் அம்மாள்
"இதேதான்....இதேதான்.....பாட்டி..இது எப்படி இங்கே வந்தது?

ஆச்சரியமா இருக்கே!" என்று வியந்தாள்.நடந்த விஷயங்கள்அத்தனையையும் ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் பாட்டி.

மீனாட்சி பாட்டியை கட்டியணைத்துக் கொண்ட அம்புஜம் அம்மாள்....

"பாட்டி, நீங்க கவலையே படாதீங்கோ. ஆச்சார்யாளுக்கு முன்னால ஒங்ககிட்ட இதத் தெரிவிச்சுக்கிறேன்.எட்டு பவுன்ல ஒங்க பேத்திக்கு புதுசா ரட்ட வட சங்கிலி போட்டுக் கல்யாணம் 'ஜாம்ஜாம்'னு நடக்கும், நா கழுத்தில போட்டுண்டிருந்த இந்த ரட்ட வடத்தத்தான் அம்பாளுக்கு
அர்ப்பணிக்கறதா வேண்டிண்ருக்கேன். இன்னிக்கு சாயந்தரமேஒங்களையும், பேத்தி காமாட்சியையும் இந்த ஊர் நகைகடைக்கு அழச்சிண்டு போய்,எட்டு பவுன் ரட்ட வட சங்கிலி ஒண்ணு வாங்கித்தரேன்.அதோட கல்யாணச் செலவுக்காக ஐயாயிர ரூபாயும் தரேன்"
என்று ஆறுதல் அளித்தாள். ஸ்வாமிகள் இந்த காட்சியை
பிரத்யட்ச காமாட்சியாக அமர்ந்து பார்த்துக்கொண்டு இருந்தார்.அனைவரும் ஆச்சார்யாளை நமஸ்கரித்து எழுந்தனர்.

ஆச்சார்யாள்,மீனாட்சி பாட்டியைப் பார்த்து,,"இன்னிக்கு நீயும்ஒம் பேத்தியும் கொயில்ல அஞ்சு பிரதட்சிணம் பண்ணலே.சாயந்தரமா போயி அஞ்சு பிரதட்சிணம்,அஞ்சு நமஸ்காரம்பண்ணி அம்பாள பார்த்துட்டு வாங்கோ" என்று விடை கொடுத்தார்.மீனாட்சி பாட்டியும் அவள் பேத்தியும் அப்போது அடந்த சந்தோஷத்தையும் சிலிர்ப்பையும் வார்த்தைகளில் சொல்லி விட முடியாது.!




காஞ்சி மாநகர் போக வேண்டும்-எங்கள்
காருண்ய மூர்த்தியைக் காண வேண்டும் (கா)
உத்தமர் வணங்கும் ,,,,,,,,,குருபீடம்
சித்தர்கள் போற்றும்..........குருபீடம்
கற்றவர் கூடும் ...குருபீடம் காஞ்சி
காமகோடி ஜகத்...................குருபீடம்
அத்வைதம் வணங்கும்......குருபீடம்
தத்துவம் நிறைந்த................குருபீடம்
கருணையின் சிகரம் ..குருபீடம் காஞ்சி
காமகோடி ஜகத் .........குருபீடம்
தவநிலை வளர்க்கும்..............குருபீடம்
தன்னிகரில்லா .....குருபீடம்
கவலைகள் போக்கும்.............குருபீடம் காஞ்சி
காமகோடி ஜகத் .......குருபீடம்
எளிமை நிறைந்த .....குருபீடம்
யாவரும் வணங்கும்..................குருபீடம்
கலைகள் வளர்க்கும் குருபீடம் ..காஞ்சி
காமகோடி ஜகத் .........குருபீடம்
மடமையைப் போக்கும் குருபீடம்
திடமான ஞானம் ....குருபீடம்
நடமாடும் தெய்வம்........................குருபீடம்..காஞ்சி
காமகோடி ஜகத் ......குருபீடம்



















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக