வியாழன், 14 மே, 2015

ஆன்மீகத்திற்கு ஒரு அடையாளம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடபரமாச்சாரிய சுவாமிகள்!

ராதே கிருஷ்ணா 15-05-2015



ஆன்மீகத்திற்கு ஒரு அடையாளம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடபரமாச்சாரிய சுவாமிகள்!
ஆன்மீகம் என்றால் என்ன, உண்மையான ஆன்மீக ஞானிகள் எப்படி இருப்பார் என்று நம் குழந்தைகள் கேட்டார்களேயானால் அதை விளக்கவோ, உண்மையான ஒரு ஆன்மீக ஞானியை அடையாளம் காட்டவோ சிரம்பப்படும் கால கட்டத்தில் நாம் இருக்கிறோம். பகட்டு, படாடோபம், நடிப்பு, விளம்பரம், தந்திரம் என்று பல வடிவங்களை எடுத்துக் கொண்டு இன்றைய ஆன்மீகம் நம்மை படாத பாடு படுத்துகிறது. எது ஆன்மீகம் என்று கிட்டத்தட்ட மறந்தே போய் விட்ட நிலையில் நாம் இருக்க...
Continue Reading





ஆன்மீகத்திற்கு ஒரு அடையாளம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடபரமாச்சாரிய சுவாமிகள்!

ஆன்மீகம் என்றால் என்ன, உண்மையான ஆன்மீக ஞானிகள் எப்படி இருப்பார் என்று நம் குழந்தைகள் கேட்டார்களேயானால் அதை விளக்கவோ, உண்மையான ஒரு ஆன்மீக ஞானியை அடையாளம் காட்டவோ சிரம்பப்படும் கால கட்டத்தில் நாம் இருக்கிறோம். பகட்டு, படாடோபம், நடிப்பு, விளம்பரம், தந்திரம் என்று பல வடிவங்களை எடுத்துக் கொண்டு இன்றைய ஆன்மீகம் நம்மை படாத பாடு படுத்துகிறது. எது ஆன்மீகம் என்று கிட்டத்தட்ட மறந்தே போய் விட்ட நிலையில் நாம் இருக்கிறோம் என்றால் அது மிகையாகாது.
ஆனால் ஆன்மீகத்திற்கும், ஒரு சிறந்த ஆன்மீக ஞானிக்கும் ஒரு நல்ல அடையாளமாய் 1994 வரை இந்த உலகில் ஒரு மாமனிதர் நம்மிடையே நிறைவான வாழ்க்கை ஒன்றை வாழ்ந்து விட்டுப் போயிருக்கிறார். சுமார் நூறாண்டுகள் வாழ்ந்த அவரது வாழ்க்கையில் சின்னக் களங்கம் கூட இல்லை. ஜனாதிபதிகள், பிரதமர்கள், அரசர்கள், மந்திரிகள், வெளிநாட்டு உள்நாட்டு மேதைகள் எல்லாம் அவர் இருக்கும் இடம் தேடி வந்து வணங்குவதைத் தங்கள் பாக்கியமாகக் கருதியிருக்கிறார்கள். ஆனால் அந்த மனிதர் அது போன்ற பக்தர்கள் தனக்கிருப்பதில் எள்ளளவும் பெருமிதம் கொண்டதோ, அகங்காரம் அடைந்ததோ இல்லை. அவர் தான் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியாக இருந்த ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். மகாசுவாமிகள் என்றும் பரமாச்சாரியார் என்றும் எல்லோராலும் அழைக்கப்பட்ட மகான்.
மகாசுவாமிகள் எளிமையே உருவானவர். காஞ்சி மடத்தின் பீடாதிபதி என்ற பட்டத்திற்குரிய எல்லா வசதிகளும் அவருக்கு இருந்தன. தரிக்க கிரீடம், அமர சிம்மாசனம், அமர்ந்து செல்ல சிவிகை, புடைசூழ்ந்து வர யானைகள், குதிரைகள் எல்லாம் இருந்தன. ஆனால் அவருக்கு அவற்றைப் பயன்படுத்துவதில் ஆர்வம் இருக்கவில்லை. தன் யாத்திரைகளை கால்நடையாகவே அவர் நடந்து செல்வார். தயிரிலோ, பாலிலோ ஊற வைக்கப்பட்ட நெற்பொறியை ஓரிரு கவளம் சாப்பிடுவது தான் அவரது பகல் உணவு. இரவில் சிறிது பால் மட்டுமே சாப்பிடுவார். பொதுமக்களுக்கு தரிசனம் தரும் வேளைகளில் தான் அவர் நாற்காலி அல்லது மனையில் அமர்வார். மற்ற வேளைகளில் சாதாரண கோணிச் சாக்கு மட்டுமே அவருக்குப் போதும்.
பரமாச்சாரிய சுவாமிகளுக்கு பல துறைகளில் நல்ல ஞானமும், ஆர்வமும் இருந்தது. பல நூல்களைப் படித்த அவர் சம்பந்தப்பட்ட துறையாளர்களிடமும் எதையும் நுட்பமாகக் கேட்டுத் தெரிந்து கொள்வார். விஞ்ஞானம், கணிதம், வானவியல், வரலாறு, பூகோளம், சமூக இயல் போன்ற துறைகளில் அவருக்கு இருந்த அறிவு அபாரமானது. புகைப்படக்கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை ஆகியவற்றிலும் எதையும் நுட்பமாக ஆராய்ந்து விளக்குவார். பல மொழிகளை அறிந்திருந்தார். இந்த அபார அறிவும் அவருக்கு துளியும் கர்வத்தை ஏற்படுத்தியதில்லை.
தமிழகத்தின் முன்னால் கவர்னராக இருந்த டாக்டர் பி.சி.அலெக்சாண்டர் ஒரு முறை பரமாச்சாரிய சுவாமிகளை தரிசிக்கச் சென்றார். ஜனாதிபதிகளும், பிரதமர்களும், அரசர்களும் தொழும் மகா சுவாமிகள் அவரது குடிலில் கோணிச் சாக்கை விரித்து அமர்ந்திருந்ததைக் கண்ட அலெக்சாண்டருக்கு வியப்பு தாளவில்லை. இப்படி ஒரு எளிமையையும், பணிவையும் அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. அலெக்சாண்டரும் அவர் எதிரே பாயில் காளை மடித்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார்.
பேசும் போது அலெக்சாண்டர் எதில் டாக்டர் பட்டம் பெற்றார் என்பதை மகா சுவாமிகள் கேட்டார். அலெக்சாண்டர் தான் ஒரு சிரியன் கிறிஸ்துவர் என்றும் சிரியன் கிறிஸ்துவர்கள் பற்றி ஆராய்ந்து டாக்டர் பட்டம் வாங்கியதாகவும் சொன்னார். உடனே பேச்சு சிரியன் கிறிஸ்துவர்களைப் பற்றி எழுந்தது. அலெக்சாண்டர் ஆராய்ச்சி செய்து அறிந்ததைக் காட்டிலும் அதிகமாக மகா சுவாமிகள் சிரியன் கிறிஸ்துவர்களுடைய சமூகப் பின்னணி, பழக்க வழக்கங்கள், சமூகத் தொண்டுகள், கேரளத்தில் அவர்கள் வேரூன்றிய சரித்திரம் பற்றியெல்லாம் அறிந்திருந்தார். கவர்னர் அலெக்சாண்டர் அடைந்த வியப்புக்கு அளவேயில்லை. வேறொரு மதத்தின் ஒரு சிறு பிரிவைப் பற்றி இவ்வளவு விரிவாக அவர் அறிந்து வைத்திருந்தது அவருக்கு மிகவும் பிரமிப்பாக இருந்தது.
அவருடைய அறிவு ஞானம் இப்படி பல மதங்கள், பல நாடுகள் என்று விரிந்து இருந்தது. ஆன்மீகத்தில் அவர் அடைந்திருந்த ஞானம் அளப்பரியது. இதையெல்லாம் அவருடைய சொற்பொழிவுகளின் தொகுப்பான “தெய்வத்தின் குரல்” படித்தவர்கள் நன்றாக உணரலாம். அவர் சடங்குகள், சம்பிரதாயங்கள் பற்றி அதிகம் விவரிக்காமல் மனித தர்மத்தைப் பற்றியும், ஞான மேன்மைக்கான வழிகளைப் பற்றியும் பேசியது அதிகம். பாமரனுக்கும் புரியும் படியாக பெரிய பெரிய விஷயங்களை மிக எளிமையாக விளக்கும் திறன் படிப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும்.
பால் ப்ரண்டன் என்ற இங்கிலாந்து தத்துவஞானி யோகிகளைத் தேடி இந்தியா வந்த போது பரமாச்சாரிய சுவாமிகளைச் சந்தித்ததை விளக்கமாக எழுதியுள்ளார். பரமாச்சாரிய சுவாமிகளின் ஞானத்தால் அவர் வெகுவாகவே கவரப்பட்டார். தான் இந்தியா வந்த காரணத்தை அவர் சொன்ன போது பரமாச்சாரிய சுவாமிகள் நீ தேடி வந்த யோகி நான் தான் என்று நேரடியாகவோ, மறைமுகமாகவோ சொல்லிக் கொள்ளவில்லை. (இப்போதைய ஆன்மீகக் குருக்கள் பலர் கண்டிப்பாக அதைச் செய்திருக்கக் கூடியவர்களே). ’நீங்கள் காண வந்த யோகியை நிச்சயம் காண்பீர்கள். மேலும் பயணியுங்கள்” என்றே சொன்னார். அது போலவே பின்னர் பால் ப்ரண்டன் ரமண மகரிஷியிடம் தன் தேடலை முடித்தார்.
உபதேசங்கள் செய்வது சுலபம். அந்த உபதேசங்கள் படி வாழ்ந்து ஒரு உதாரணமாய் திகழ்வது கஷ்டம். பரமாச்சாரியார் அப்படியே வாழ்ந்தும் காட்டியவர். அவருடைய கனகாபிஷேக நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் காணும் பாக்கியம் எனக்குக் கிட்டியது. நேபாள மன்னர், இந்திய ஜனாதிபதி முதற்கொண்டு பல பெரிய மனிதர்கள் கைகூப்பி நிற்க பரமாச்சாரியருக்கு பொற்காசுகளால் அபிஷேகம் செய்தார்கள். மற்றவர்களின் கட்டாயத்திற்கு அமர்ந்திருந்த அவர் சிறு சலனம் கூட இல்லாமல், எதிலும் பாதிக்கப்படாமல், பற்றற்ற நிலையில் கடவுளை தியானித்தவராய் கரம் குவித்து அமர்ந்திருந்தார். ”ஏதோ சிறியவர்கள் ஆசைப்படுகிறார்கள், செய்கிறார்கள், செய்து விட்டுப் போகட்டும்” என்பது போல் பொறுமையாக சகித்துக் கொண்டு அமர்ந்திருந்த ஒரு புண்ணியாத்மாவை அன்று என்னால் பார்க்க முடிந்தது.
வாழ்ந்த நாட்களில் அவர் விளம்பரம் தேடியதில்லை. அனாவசிய சர்ச்சைகளில் ஈடுபட்டதில்லை. நடித்ததில்லை. நல்ல அறிவைப் பெறுவதும், ஞான வழிகளில் ஆழமான நாட்டமும், அறிந்ததையும், உணர்ந்ததையும் போதிப்பதுவுமே அவர் வாழ்க்கையாக இருந்தது.
அவர் 1994 ஜனவரி எட்டாம் நாள் மறைந்த போது அவருடைய பக்தர்கள் மட்டுமல்ல மற்ற மதத்தலைவர்களும், நாத்திகர்களும் கூட அவரை மனதாரப் பாராட்டியது அவர் வாழ்ந்த களங்கமில்லாத வாழ்க்கைக்கு மிகப்பெரிய பாராட்டுப் பத்திரம் என்றே சொல்ல வேண்டும். உண்மையான ஞானி, ஆன்மீகத் தலைவர் என்ற சொற்களுக்கெல்லாம் இனி வரும் சந்ததியருக்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், ஒரு அடையாளம் காட்ட வேண்டுமென்றால் தயக்கம் சிறிதும் இல்லாமல் பரமாச்சாரிய சுவாமிகளை நாம் காட்டலாம்.





PLEASE DONT MISS

தர்மத்துக்காக வாழ்ந்தவா ரெண்டு பேர். ஒருத்தரைப் பார்த்தோம். இன்னொருத்தரைப் பார்க்க முடியலே! நாம பார்க்காதது ஸ்ரீராமரை; பார்த்தது, மகா பெரியவாளை! சந்நியாச தர்மம், யதி தர்மப்படி வாழ்ந்து ஸித்தி அடைஞ்சவர் மகா பெரியவர். அரச தர்மத்துக்குன்னு வாழ்ந்தவர் ஸ்ரீராமர்”னு சொல்லிட்டு, ”ஆத்ம பூஜை பண்ணினவா ரெண்டு பேர். ஒருத்தரைப் பார்த்திருக்கோம். இன்னொருத்தரைப் பார்த்ததில்லே. யார் சொல்லுங்கோ?” என்று கேட்டார் கி.வா.ஜ. தொடர்ந்து, அவரே பதிலும் சொன்னார்…

”ஒருத்தர் ஆஞ்சநேயர். ஆத்ம லிங்கம் பண்ணி, தானே பூஜை பண்ணினார். இது ராமேஸ்வரத்தில் இருக்கு. ஆத்ம பூஜை பண்ணின மகா பெரியவாளை இப்போ பார்க்கறோம். ஆத்மாவை உயர்த்திண்டவா எத்தனை பேர்? இவர் ஒருத்தர்தான்! அவர் தனக்குத்தானே பூஜை பண்ணிண்டார். அதை நாம எல்லோரும் பார்த்து ஆனந்தப்பட்டோம்!”

எத்தனை சத்தியமான வார்த்தை!

பெரியவாளுடன் இருந்து, அவருக்குக் கைங்கர்யம் செய்யும் பாக்கியம் பெற்ற பட்டாபி சார், உண்மைச் சம்பவம் ஒன்றை நினைவுகூர்ந்தார்…

அதுவொரு மார்கழி மாசம். கும்பகோணத்தில் என் தகப்பனாருக்குச் சிராத்தம் பண்ணிட்டு, பக்கத்துல 12 கி.மீட்டர் தொலைவுல இருக்கிற கோவிந்தபுரத்துக்குப் போனேன். அங்கே, காமகோடி பீடத்தின் ஆச்சார்யரான ஸ்ரீபோதேந்திராளின் அதிஷ்டானம் இருக்கு.

‘ராம ராம’ன்னு சொல்லியபடியே, அந்த அதிஷ்டானத்தை 108 தடவை பிரதட்சிணம் பண்ணினேன். அங்கே, ராம நாமத்தை ஜெபித்தால், ஸித்தி கிடைக்கும்னு சொல்லுவா.

அதிஷ்டானத்திலேருந்து எதிரொலி மாதிரி, ‘ராம்… ராம்’னு குரல் கேட்கும். ரொம்ப விசேஷம். அதுக்காகவே நான் அங்கே அடிக்கடி போவேன்.

இப்படித்தான் 94-ஆம் வருஷம், ஜனவரி 2-ஆம் தேதி… அங்கே தியானத்திலே உட்கார்ந்திருந்தேன். அப்ப, அதிஷ்டானத்திலேருந்து திடீர்னு ஒரு குரல் கேட்டாப்ல இருந்தது எனக்கு. ‘ஏய், இனிமே என்னை நீ இதேமாதிரிதான்டா பாக்கணும்’னு சொல்லித்து அந்தக் குரல். அது, பெரியவா ளோட குரல் மாதிரியே இருந்துது.

அப்படியே அதிர்ந்து போயிட்டேன் நான். சாதாரணமா அதிஷ்டானத்துல, ‘ராம்… ராம்’னுதானே குரல் கேக்கும்! இதென்ன விசித்திரமா இருக்குன்னு தோணித்து எனக்கு. ‘இதேமாதிரிதான்டா பாக்கணும் என்னை’னு பெரியவா சொல்றாளே… அப்படின்னா, ஸித்தியான மாதிரிதான் பார்க்கணுமா, பெரியவாளை?!’

யோசிக்கும்போதே தலை சுத்தித்து எனக்கு. மனசு ஒடிஞ்சு, நொந்து போயிட்டேன்
சாப்பிடத் தோணலை. கண்ணை மூடிண்டு சித்த நேரம் தூங்கினா தேவலைன்னு பட்டுது. படுத்தா தூக்கம் வரலை. மனசுல இதே கேள்வி குடைஞ்சு, ஹிம்ஸை பண்ணிண்டிருந்தா எங்கேர்ந்து தூக்கம் வரும்? பேசாம பஸ் பிடிச்சுக் கும்பகோணம் வந்துட்டேன். உடனே காஞ்சிபுரம் போய்ப் பெரியவாளைத் தரிசிக்கணும்னு தோணித்து.

”என்ன அவசரம்… ரெண்டு நாள் இருந்துட்டுத்தான் போயேன்! ஏன் பித்துப் பிடிச்சாப்பல இருக்கே? வீட்ல ரெண்டு நாள் அமைதியா படுத்து ரெஸ்ட் எடுத்தா, எல்லாம் சரியாப் போயிடும்!”னு அம்மா சொன்னாள். சரின்னு, நானும் ரெண்டு நாள் கழிச்சுதான் காஞ்சிபுரம் போனேன். பெரியவரைப் பார்த்து, வழக்கம்போல் சேவைகள் பண்ணிண்டிருந்தேன்.

அதன்பிறகு, சில நாள் கழிச்சு… அதாவது 94-ஆம் வருஷம், 8-ஆம் தேதி மகா பெரியவா ஸித்தியாயிட்டா!

அன்னிக்கு, அதிஷ்டானத்துல பெரியவா சொன்னது நிஜமாயிட்டுது. பெரியவா ளைத் தவிர, வேற யாராலேயாவது இத்தனை தீர்க்கமா சொல்லமுடியுமா? தெரியலை.

அப்புறம்… எனக்கு மூணு, நாலு மாசத்துக்கு சுய நினைவே இல்லை. அப்படியே பெரியவாளோட நினைப் புலயே ஆழ்ந்துபோயிட்டேன். ‘பெரியவா முகத்தை இனி பார்க்க முடியாதே’ன்னு மனசு தவியாய்த் தவிச்சுது. சமாதானம் ஆகவே இல்லை. எப்படி ஆகும்?!


யோக நிலையில இருந்த பெரியவாளைப் பார்த்தேன். எந்தவித சரீர அவஸ்தையும் அவருக்கு இருக்கவே இல்லே! படுக்கைப் புண்ணுனு சொல்வாளே, அது மாதிரி எல்லாம் அவருக்குக் கிடையவே கிடையாது. ரோஸ் கலர்ல, தாமரை புஷ்பம் மாதிரிதான் அவரோட உடம்பு இருந்துது.

விஸர்ஜன துர்வாசனை எதுவுமே அவரிடம் இல்லை. காம- க்ரோதாதிகளுக்கு உட்பட்டவாளுக்குதான் அந்த மாதிரி துர்வாசனை எல்லாம் வரும்.

பெரியவாளுக்கு உடம்பு வேர்க்கவே வேர்க்காது, தெரியுமோ? மே மாசத்துல, ‘மேனா’ல படுத்துண்டு, படுதாவைப் போட்டுண்டிருப்பார்! அப்பவும்கூட அவருக்கு வேர்க்காது. நானே பிரத்யட்சமா பார்த்திருக்கேன்.

ஸித்தியாகிறதுக்கு முன்னால, பெரியவா என்னைக் கூப்பிட்டார். ”நான் படுத்துக்கப் போறேன். நீ என்ன பண்ணப் போறே?”ன்னு கேட்டார்.

”நான் என்ன பண்ணணும்னு எனக்குத் தெரியலையே! பெரியவாதான் சொல்லணும்”னு அழுதுட்டேன்.

பெரியவா என்னைக் கருணையோடு பார்த்தார். ”கவலைப்படாதே! என் ஸ்மரணை உன்னைக் காப்பாத்தும்! சஹஸ்ர காயத்ரி சொல்லு. கங்கையிலே ஸ்நானம் பண்ணிட்டு, கங்கைக் கரையிலே உட்கார்ந்து சொல்லு. அது போறும்!”னார்.

அந்தப் பிரபுவோட ஸ்மரணையிலே என்னோட காலத்தைக் கழிச்சிண்டிருக்கேன். அதுவும் அவரோட அனுக்கிரஹம்தான்.

ஆனா, அன்னிக்குக் கோவிந்தபுரம் அதிஷ்டானத்துல அவர் குரல் கேட்டுதே… அதை மட்டும் என்னால மறக்கவே முடியலே. நான் மனசு சஞ்சலப்பட்டு எதுவும் செஞ்சுடப்படாதுன்னு என்னைத் தயார் பண்ணத்தான் அன்னிக்கு அவர் சொல்லியிருப்பார்ங்கறதுல எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லே!” – சொல்லி நிறுத்திய பட்டாபி சார், பெரியவாளின் நினைவுகளில் குலுங்கிக் குலுங்கி அழத் துவங்கினார்

Jaya Jaya Shankara, Hara Hara Shankara!
 — withKunchithapatham Kashyap.


சத்குரு தாயவரைக் காண காஞ்சி அதிஷ்டானம் வாரீர்!




மஹா பெரியவா நமக்கு (நாம் சௌக்யமாக இருப்பதற்கு உதவ) சொன்னது நிறைய நிறைய மஹா சமுத்ரமாக இருக்கிறது.

இனி அதில் இருந்து தினமும் பத்து அல்லது பதினைந்தாக தரட்டுமா? இதோ ஆரம்பித்தாகி விட்டது. இனி இது தினமும் வரும்!

1. உடம்பினால் நல்ல காரியம் செய்யவேண்டும். கோயிலுக்குப் போய் பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்ய வேண்டும். தண்டம்சமர்ப்பித்தல் என்று சமஸ்காரத்தைச் சொல்லுவார்கள். தடியைப்போல் விழுவது தான் அது. இந்த உடம்பு நமதன்று, அவருடையது என்று நினைத்து அவர் சந்நிதியில் போட்டு விட வேண்டும்.

2. இந்த ஜென்மத்திற்குப் பின்பும் உபயோகப்படக் கூடிய சில காரியங்கள் செய்யப்பட வேண்டியது அவசியம். விபூதி இட்டுக் கொள்ளுதல், ருத்ராக்ஷம் அணிதல், ச்ராத்தம் செய்தல் முதலிய காரியங்கள் நாம் எப்பொழுதும் சௌக்யமாக இருப்பதற்கு உதவுங்காரியங்கள்.

3. நாமாவும் ரூபமும் இல்லாத மதம் நமது மதம். பேர் ஏன் இல்லை? அடையாளம் ஏன் இல்லை? மற்ற மதங்களுக்கெல்லாம் இருக்கிறதேஎன்று ஒரு சமயம் யோசித்துப் பார்த்தேன். அப்புறம் எனக்கு நிரம்ப சந்தோஷமாக இருந்தது. பேரில்லாமல் இருப்பது ஒரு கௌரவம் என்பது ஏற்பட்டது.

4. நம்முடைய மதம் எவ்வளவோ யுகங்களாக நீடித்து வாழ்ந்து வருகிறது. நமக்குத் தெரியாமல் ஏதோ ஒன்று இதைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. எவ்வளவோ வித்யாசங்கள் இருந்தாலும் இந்த மதம் அழியாமல் நிற்கிறது. லோகம் புரண்டு போனாலும் நம்முடைய கடமைகளைச் செய்து கொண்டு பயமின்றி அன்புடன் சாமாண்ய தர்மங்களை நன்றாக ரக்ஷித்து விசேஷதர்மத்தைக் கூடியவரை ரக்ஷிக்க வேண்டும். அதற்குரிய சக்தியைப் பகவான் அளிப்பாராக.

5. மூன்று மூர்த்திகளுக்கும் மேலே அதீதராகப் பரமசிவன் இருக்கிறார். அவர் ப்ரம்மாவுக்கு அனுக்ரஹம் பண்ணுகிறார். காமேச்வரனாக அருள் புரிகிறார். பராசக்தி காமேச்வரியாக அனுக்ரஹிப்பாள். பரமேச்வரனுடைய அனுக்ரஹத்தால் ப்ரம்மா வேதங்களை அறிந்து கொள்கிறார். நான்கு வேதங்களையும் நான்கு முகத்தில் சொல்லிக் கொண்டு சிருஷ்டியைச் செய்து கொண்டிருக்கிறார்.

6. வேதத்திலிருப்பதை எல்லோருக்கும் நன்றாக விளங்க வைப்பது பதினெட்டு புராணங்கள். பதினெட்டு உப புராணங்கள் வேறேஇருக்கின்றன. பதினெட்டு புராணங்களும் சேர்ந்து நான்கு லட்சம் கிரந்தம். ஒரு கிரந்தம் என்பது 32 எழுத்துக்ள் கொண்டது. பதினெழு புராணங்கள் மூன்று லட்சம் கொண்டவை. மிகுதியுள்ள ஒரு லட்ச கிரந்தம் ஸ்காந்த புராணம். பரமசிவனைப் பற்றிச் சொல்பவை பத்து புராணங்கள், அவைகளுள் ஒன்றே லட்சம் கிரந்தம் உடையது.

7. பாபத்தை ஒரேக்ஷணத்தில் துவம்சம் பண்ணும் ஒரு வஸ்து உண்டு. இரண்டு எழுத்துக்களாலான பெயர் அது. வேதங்களின் ஜீவரத்னம் அதுவே. கோயிலில் மஹாலிங்கம் போலவும் தேகத்தில் உயிர் போலவும் அது வேதங்களின் மத்தியில் இருக்கிறது. (''சிவ'' என்ற இரண்டு எழுத்துக்களே அது) அதை ஒருதரம் சொன்னால் போதும். வேறு ஒரு காரியத்துக்கு நடுவிலும் சொல்லலாம். சொன்னால் அந்த க்ஷணத்திலேயே பாபத்தைப் போக்கிவிடும்.

8. வேதங்களுள் யஜுர் வேதம் முக்கியமானது. அதற்குள் அதன் மத்திய பாகமாகிய நாலாவது காண்டம் முக்கியமானது. அதற்குள்ளும் மத்திய பாகமான நாலாவது ப்ரச்னம் முக்கிய மானது. அதுதான் ஸ்ரீருத்ரம். அதற்குள்ளும் ‘நம: சிவாய’ என்ற பஞ்சாக்ஷர வாக்கியம் மத்தியில் இருக்கிறது. அதன் மத்தியில் ‘சிவ’ என்ற இரண்டு அக்ஷரங்கள் அடங்கியுள்ளன. இதையே ஜீவரத்னம் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். இந்த அபிப்பிராயத்தை அப்பய்ய தீக்ஷிதர் ப்ரம்மதர்க்க ஸ்தவத்தில் சொல்லியிருக்கிறார்கள். அந்த ப்ரம்மம் சிவஸ்வரூபம் என்று தெரிகிறது.

9. அப்படிப்பட்ட ஸ்வரூபத்தை ஆராதிப்பதற்கு அடையாளமாகச் சிவபக்தர்கள் எல்லோரும் ஐந்து வித காரியங்களைச் செய்து கொண்டிருக்க வேண்டும். அவைகளாவன: (1) விபூதி தரித்தல், (2) ருத்ராக்ஷம் அணிதல், (3) பஞ்சாக்ஷர மந்திரத்தை ஜபம் செய்தல், பஞ்சாக்ஷர மந்திரம் உபதேசமாகாதவர்கள் ‘சிவ’ என்ற பதத்தை ஜபம் செய்தல், (4) வில்வ தளத்தால் பரமேச்வரனைப் பூசித்தல், (5) இருதயத்தில் சதா சிவத்யானம் செய்தல் இவைகள் ஒவ்வொன்றும் ஈச்வரனுக்கு விசேஷப்ரீதியைக் கொடுக்கக் கூடியது.

(குறிப்பு: பஞ்சாக்ஷர மந்திரத்தை உபதேச பெற்று ஜபம் செய்தல் சிறப்பு. எனினும் உபதேசம் பெறாதவரும் இம்மந்திரத்தைத் தாராளம் சொல்லலாம். ''கொல்வாரேனும், குணம் பல நன்மைகள் இல்லாரேனும் இயம்புவராயிடின் எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் நல்லார் நாமம் நமச்சிவாயவே'' - சம்பந்தர்.)

10. பரமேச்வரனுடைய கீர்த்தியை நாம் வாக்கினால் சொல்லுவதனாலும் கேட்பதனாலும் பவித்திரர்களாக ஆகிறோம். அவருடைய ஆக்ஞையை யாரும் மீறமுடியாது. அகம்பாவமாக இருக்கும்போது அவர் சிக்ஷிக்கிறார். குழந்தைகள் ஏதாவது தப்பு செய்தால் நாம்அடிக்கிறோம். அதுபோல பரமேச்வரன் தேவதைகளை சிக்ஷித்தார். ஹாலஹால விஷம் பாற்கடலில் உண்டானபொழுது அதைச் சாப்பிட்டு ரக்ஷித்தார். சகல தேவதைகளும் பரமேச்வரனுடைய குழந்தைகள்.

11. பரமேச்வரன் ஓங்காரம், ஸ்வரூப ப்ரம்மமும் ஓங்காரந்தான். அதனுடைய அர்த்தத்தை விசாரிக்கும் ஓர் உபநிஷத்தே தனியாக இருக்கிறது. அதற்கு மாண்டூக்யோபநிஷத் என்று பெயர். அதில் ‘சாந்தம் சிவம் அத்வைதம் சதுர்த்தம் மன்யந்தே’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. சிவஸ்வரூபம் தான் பரப்பிரம்மம். ப்ரதோஷ காலத்தில் ஈச்வர தரிசனம் செய்ய வேண்டும். ஈச்வரன் கோயிலில் ப்ரதோஷ காலத்தில் எல்லாத் தேவர்களும் வந்து ஈச்வர தரிசனம் செய்கிறார்கள்.

12. சாங்க்ய சூத்திரத்தில் மூன்று கண் உள்ளவன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அமரமும் அப்படியே சொல்லுகிறது. லோகத்தில் ஈச்வரன் என்ற சப்தம் சிவனுக்கே வழங்கப்படுகிறது. அவன் மஹாபுருஷன், ப்ரம்ம சூத்திரத்தில் ‘சப்தாதேவப்ரமித’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஈசானன் என்னும் சப்தத்திற்கு எது அர்த்தமோ அதுதான் பரமேச்வர ஸ்வரூபம்.

13. நம்முடைய ஆசார்ய ஸ்வாமிகள் ப்ரச்நோத்தர ரத்ன மாலிகா என்ற க்ரந்தத்தில் ஒரு கேள்வி கேட்கிறார். ‘கோ ப்ராம்மணை ருபாஸ்ய:?’ ‘காயத்ரி அர்க்காக்னி கோசர: சம்பு:’ எந்த வஸ்து காயத்ரி, அக்னி, அர்க்கன் (சூரியன்) என்னும் மூன்றிலும் ப்ரகாசிக்கிறது? சிவன் தான். காயத்ரியின் பரமதாத்பர்யமாயிருப்பவர் அவரே. சூரியனிடத்தில் பிரகாசிப்பவரும் அவர் தான். ஸ்ரீருத்ரத்தில் பரமேச்வரன் அக்னி ஸ்வரூபியாக இருக்கிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. எனவே இந்த மூன்றிலும் பரமேச்வரனை ஆராதிக்க வேண்டும்.

14. விவாஹ காலத்தில் அம்பாளை அவசியம் ஆராதிக்க வேண்டும். ருக்மணி ஸ்ரீகிருஷ்ணன் பர்த்தாவாக வரவேண்டுமென்று அம்பிகையை ஆராதித்தாள். அம்பிகையின் ஆராதனத்தால் பதிபக்தியும் குருபக்தியும் உண்டாகிறது. அதற்காகத்தான் ருக்மணி பூஜை செய்தாள்.

15. ஜகத்துக்குத் தாயாகவும் கருணையுடையவளாகவும் இருக்கும் பரதேவதையிடம் பக்தி இருக்க வேண்டும். எப்படி குழந்தைக்கு வேண்டியதைத் தாய் தருவாளோ அப்படி அம்பிகை லோகத்தில் வித்தை, செல்வம் முதலியவைகளை அடையச் செய்து பின்பு தானாகப் பழுத்துப் பரமானந்தத்தைப் பெறும்படி அனுக்ரஹம் செய்வாள்.

சத்குரு தாயவரைக் காண காஞ்சி அதிஷ்டானம் வாரீர்!
 — with Radha Balasubramanian.



“மஹா பெரியவாளை நம்பினார் கெடுவதில்லை”- ஆம்!
எல்லார் மனஸையும் நெகிழவைக்கும் மஹா பெரியவா பேரருள்!
மஹா பெரியவா சாதாரணமாக ரொம்ப கூட்டம் இல்லாவிட்டால் கூட
, இரவு பத்து மணியானாலும் பக்தர்களின் குறைகளை கேட்டு உபாயமோ
ஆறுதலோ சொல்லுவது வழக்கம்.
ஒருநாள் எல்லாரும் போனதும், பெரியவா ஸயனிக்க உள்ளே போனார். எனவே சிப்பந்திகள் தாழ்ந்த குரலில் ஏதோ பேசிக் கொண்டிருந்தபோது
“நான் பெரியவாளை தர்சனம் பண்ணனும்” குரல் கேட்டு யாரென்று
பார்த்தால், ஒரு 12 வயஸ் பையன் மிகவும் பரிதாபமான கோலத்தில்
நின்று கொண்டிருந்தான்.
“இப்போல்லாம் பெரியவாளை பாக்க முடியாது……..சாப்டுட்டு ஒரு
பக்கமா இங்கியே படுத்துக்கோ….காலேல தர்சனம் பண்ணு” பாரிஷதர்
சொன்னார். இப்படி ஒரு பரிதாபமான கோலத்தில் ஒரு பையன்
வந்திருக்கிறான் என்று பெரியவாளை எழுப்ப முடியாது. சிறுவன்
விடுவதாயில்லை.
“எனக்கு இப்போ பசிக்கலை…பெரியவாளை மட்டும் எப்பிடியாவது
தர்சனம் பண்ணனும் அண்ணா…” என்று சொல்லிவிட்டு, மிகவும்
களைத்துப்போய் இருந்ததால், ஒரு பக்கமாக படுத்துக் கொண்டுவிட்டான். மறுநாள் காலை மஹா பெரியவா சிறுவனை தன்னிடம் அழைத்தார்.
“ஏம்பா….எங்கேர்ந்து வரே? ஓம்பேரென்ன? ஒங்கப்பா அம்மா யாரு?
எங்கேயிருக்கா?……..” ஸ்ரீ மாதாவின் குரலை அந்த கன்று இனம்
கண்டுகொண்டது. கண்களில் நீர் பெருக அந்த குழந்தைப் பையன்
சொன்னான்.
“பெரியவா…..நான் மெட்ராஸ்ல ஒரு ஸ்கூல்ல
படிச்சிண்டிருக்கேன்..எங்கப்பா, அம்மா, தங்கை மூணுபேரும்
வெளியூர்ல இருந்தா. அப்பா திடீர்னு செத்துப் போய்ட்டார். அம்மாவும் தங்கையும் ரொம்ப கஷ்டப்பட்டா…பாவம்! அப்புறம் பம்பாய்ல ஒரு பெரிய பணக்கார மாமாவாத்ல சமையல் வேலை பண்ணிண்டு
இருந்தா…..[சிறுவன் மேலே பேச முடியாமல் விம்மினான்]
.திடீர்னு எங்கம்மாவும் செத்துப் போய்ட்டா பெரியவா..” இதற்கு மேல் குழந்தையால் தொடர முடியாமால், விக்கி விக்கி அழ ஆரம்பித்தான்.
அப்பா அம்மா ரெண்டுபேரையுமே என்னால கடைசி வரைக்கும் பாக்க முடியலை பெரியவா. அவாளுக்கு கார்யம் பண்ணக்கூட என்னால முடியாது. நேக்கு இன்னும் பூணூல் போடலை..ங்கறதால பண்ண முடியாதுன்னு சொல்லிட்டா…எனக்கு ரொம்ப அழுகையா வருது
பெரியவா…..இப்போ அந்த பம்பாய்ல இருக்கற மாமா வேற, “ஒன்னோட தங்கையை வந்து அழைச்சிண்டு போ!” ன்னு எப்போப்பாத்தாலும் ஆள் விட்டுண்டே இருக்கார்……பெரியவா. நானே கவர்ன்மென்ட் ஸ்கூல் ஹாஸ்டல்ல இருக்கேன். என் அப்பா அம்மாக்கு கர்மாக்களைப் பண்ணனும், என் தங்கையை நன்னா வெச்சுக்கணும்..ன்னு நேக்கும்
ரொம்ப ஆசையாத்தான் இருக்கும் பெரியவா. ஆனா, நானே சோத்துக்கு வழி இல்லாம இருக்கேனே! அதான்…..ஒங்களை தர்சனம் பண்ணினா எனக்கு வழி சொல்லுவேள்னு மடத்துக்கு வந்தேன்…..” அழுகையோடு தட்டுத் தடுமாறி சொன்னான். அவனையே சிலவினாடிகள் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அவன் சொல்லித்தானா அவருக்கு தெரியவேண்டும்? அவனைக் காப்பாற்றத்தானே இங்கே வரவழைத்திருக்கிறார்!
“சரி. கொழந்தே! நீ கொஞ்ச நாள் இங்கியே இரு. என்ன?”
“சரி” என்று சந்தோஷமாக தலையாட்டியது அந்த குழந்தை. நாலைந்து நாட்களுக்குப் பிறகு, நெய்வேலியிலிருந்து சில உயர் அதிகாரிகள் மஹா பெரியவா தர்சனத்துக்கு வந்தார்கள். அவர்கள் கிளம்பும்போது, எதேச்சையாக அந்த பையன் அந்தப் பக்கம் வர, மஹா பெரியவா அவனிடம் ” சட்னு போய், அந்த நெய்வேலிலேர்ந்து வந்தவா போய்ட்டாளான்னு பாரு! போகலைனா, நான் கூப்டேன்னு சொல்லு”……….அவருடைய திருவிளையாடலை யாரறிவார்?
அவர்கள் கிளம்பவில்லை. ஒவ்வொருவராக மஹா பெரியவா
முன்னால் வர வர, “நீ இல்லை, நீ இல்லை” என்று திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார். கடைசியாக வந்தவரைப் பார்த்ததும் மஹா பெரியவா முகத்தில் ஒரு புன்சிரிப்பு. “ம்ம்ம்ம்..இவரைத்தான் கூப்ட்டேன்.
இந்தாடா! கொழந்தே! ஒன்னோட கதையை இவர்கிட்ட சொல்லு” என்று சொன்னார். பையன் சொல்ல சொல்ல அதிகாரியின் முகத்தில் ஒரே ப்ரகாசம்!
“பெரியவா……..என்னோட அக்கா பம்பாய்ல இருக்கா.அவாத்துலதான் இந்த பையனோட அம்மா சமையல் வேலை பாத்துண்டு இருந்தா. அந்த அம்மா செத்துப் போனதும், என் மூலமாத்தான் இந்த பையனுக்கு தகவல் போச்சு! இவன் தங்கையை அழைச்சிண்டு போகணும்..ன்னு என் மூலமாத்தான் அவா சொல்லிண்டு இருந்தா…….” என்று மனஸார
ஒப்புக்கொண்டார்.
“ரொம்ப நல்லதாப் போச்சு! இங்க பாரு. இந்த கொழந்தை பெத்தவாளை பறிகுடுத்துட்டு தவிக்கறான்…..இவனோட, இவன் தங்கையையும் ஒன்னோட அழைச்சிண்டு போய், அவாளை படிக்கவெச்சு, ஆளாக்கறது ஒன்னோட பொறுப்பு! மொதல்ல இவனுக்கு உபநயனம் பண்ணி வை. அவனைப் பெத்தவாளுக்கு கர்மாக்களை அவன் கையால பண்ண வை.
ஆகக்கூடி, இவா ரெண்டு பேரோட எதிர்காலத்துக்கு நீதான் எல்லாம் பண்ணனும். என்ன செய்வியா?”
அதிகாரிக்கோ சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை! பிரமிப்போ அதை விட பன்மடங்கு ! என்ன ஒரு லீலை! எப்படி கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்! எல்லாரையும் விட்டுவிட்டு தன்னிடம் அவர் கட்டளை இட்டது, தனக்கு கிடைத்த பெரும் பாக்யம் என்று பூரித்துப் போனார்.
அக்ஷணமே மஹா பெரியவா பாதத்தில் விழுந்து அந்த பையனையும், அவன் தங்கையையும் தன் சொந்தக் குழந்தைகள் போல் பாதுகாப்பதாக உறுதி மொழி குடுத்தார். "மஹா பெரியவாளை நம்பினார் கெடுவதில்லை"
என்று அந்த குட்டிப் பையனுக்குக் கூட



ஸ்ரீ காஞ்சி காமகோடீ பீட த்ரீ ஜகத்குரு நாத காயத்ரீ!
(1)ஸ்ரீ காஞ்சி காமகோடீ சந்திர சேகரேந்திர ஸரஸ்வதீ ஜகத்குரு காயத்ரீ!
ஸ்ரீ மஹா பெரியவா காயத்ரீ!
...See More




ஸ்ரீ காஞ்சி காமகோடீ பீட த்ரீ ஜகத்குரு நாத காயத்ரீ!

(1)ஸ்ரீ காஞ்சி காமகோடீ சந்திர சேகரேந்திர ஸரஸ்வதீ ஜகத்குரு காயத்ரீ!

ஸ்ரீ மஹா பெரியவா காயத்ரீ!

ஓம் காஞ்சீ வாஸாய வித்மஹே
சாந்த அத்வைத ஸ்வரூபாய தீமஹி |
தன்னோ சந்த்ரசேகரேந்த்ர ப்ரசோதயாத் ||

(2)ஸ்ரீ காஞ்சி காமகோடீ ஜயேந்திர ஸரஸ்வதீ ஜகத்குரு காயத்ரீ!

ஸ்ரீ புதுப் பெரியவா காயத்ரீ!

ஓம் காஞ்சீ வாஸாய வித்மஹே
சாந்த ஸ்வரூபாய தீமஹி |
தன்னோ ஜயேந்திர ப்ரசோதயாத் ||

(3)ஸ்ரீ காஞ்சி காமகோடீ விஜயேந்திர ஸரஸ்வதீ ஜகத்குரு காயத்ரீ!

ஸ்ரீ பால பெரியவா காயத்ரீ!

ஓம் காஞ்சீ வாஸாய வித்மஹே
சத்குண ஸ்வரூபாய தீமஹி |
தன்னோ விஜயேந்திர ப்ரசோதயாத் ||

ஹரஹரசங்கர ஜெயஜெயசங்கர ! ஹரஹரசங்கர ஜெயஜெயசங்கர !
ஹரஹரசங்கர ஜெயஜெயசங்கர ! ஹரஹரசங்கர ஜெயஜெயசங்கர!
Courtesy: Dr.Krishnamoorthi Balasubramanian,34/26,5th Main Road,Nanganallur.
(KANCHI ACHARYAS,THE MAHAN OF THIS MILLINEUM)
In Connection with Sri Maha Periyava 122nd Jayanthi Mahotsav.


ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட மஹா பெரியவா திருக்கவசம்
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட மஹா பெரியவா திருக்கவசம் யான் பாடக் கார்மேனி ஐங்கரனே காப்பு
1. திருவளரும் காஞ்சி வாழ் ஸ்ரீ காமகோடி
நாதனவர் சிரசைக் காக்க...
See More



ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட மஹா பெரியவா திருக்கவசம்

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட மஹா பெரியவா திருக்கவசம் யான் பாடக் கார்மேனி ஐங்கரனே காப்பு
1. திருவளரும் காஞ்சி வாழ் ஸ்ரீ காமகோடி
நாதனவர் சிரசைக் காக்க
அருள்வளரும் ஸ்ரீ மஹா பெரியவா அமலனவர்
நெற்றியினை அமர்ந்து காக்க
பொருள் வளரும் ஸ்ரீ மஹா பெரியவா புனிதரவர்
வதனமதைப் பொலிந்து காக்க
தெருள்வளரும் ஸ்ரீ மஹா பெரியவா தேவரவர்
கண்ணிரண்டும் தினமும் காக்க
2. புவியிறைஞ்சும் ஸ்ரீ மஹா பெரியவா புருவங்கள்
இரண்டினையும் புகழ்ந்து காக்க
செவியிரண்டும் ஸ்ரீ மஹா பெரியவா பக்த சேவகர்தான்
எந்நாளும் சேர்ந்து காக்க
தவமுனிவர் ஸ்ரீ மஹா பெரியவா என்
தலைமயிரைத் தழைந்து காக்க
நவமணியார் ஸ்ரீ மஹா பெரியவா என்
நாசியினை நயந்து காக்க
3. கண்கண்ட ஸ்ரீ மஹா பெரியவா என் தெய்வமவர்
இருகன்னம் கனிந்து காக்க
விண்கண்ட ஸ்ரீ மஹா பெரியவா விமலரவர்
கண்டமதை விரைந்து காக்க
பண்கண்ட ஸ்ரீ மஹா பெரியவா பரமரவர்
தோளிரண்டும் பரிந்து காக்க
மண்கண்ட ஸ்ரீ மஹா பெரியவா மாதவர் என்
மார்பகத்தை மகிழ்ந்து காக்க
4. தூயசுடர் வடிவான ஸ்ரீ மஹா பெரியவா அண்ணல்
வலதுகரம் துணிந்து காக்க
நேயமுறும் ஸ்ரீ மஹா பெரியவா நவநீதரவர்
இடதுகரம் நிதமும் காக்க
ஆயமறை முடிவான ஸ்ரீ மஹா பெரியவர்
மணிவயிற்றை அறிந்து காக்க
தேயமெலாம் துதிசெய்யும் ஸ்ரீ மஹா பெரியவா வள்ளல்
இடுப்பதனைத் தெரிந்து காக்க
5. குரு ஸ்ரீ மஹா பெரியவா பகவனவர் கரவிரல்கள்
ஈரைந்தும் குழைந்து காக்க
உரு வோங்கும் ஸ்ரீ மஹா பெரியவா உத்தமர் என்
பற்களினை உவந்து காக்க
கருவோங்கும் ஸ்ரீ மஹா பெரியவா என்
வளர்நாவை களித்துக் காக்க
பெருமானாம் ஸ்ரீ மஹா பெரியவா போதனென்றன்
நெஞ்சமதைப் பெரிதும் காக்க
6. கனிவுமிகு ஸ்ரீ மஹா பெரியவா கடவுளவர்
குறியதை எக்காலும் காக்க
இனிமைமிகு ஸ்ரீ மஹா பெரியவா இறையவர் என்
வலக்காலை இனிது காக்க
தனிமைமிகு ஸ்ரீ மஹா பெரியவா பதியவர் என்
இடக்காலைத் தாவிக் காக்க
பனி இருள்தீர் ஸ்ரீ மஹா பெரியவா என்
பாதவிரல் பத்தும் காக்க
7. இருதொடையும் ஸ்ரீ மஹா பெரியவா ஈசரவர்
எஞ்ஞான்றும் இறங்கிக் காக்க
திருமுதுகைப் பிடரியினை ஸ்ரீ மஹா பெரியவா
வானவர்தான் சிறந்து காக்க
தருமதுரை ஸ்ரீ மஹா பெரியவா என் வாயும்
இதழ் இரண்டும் தவழ்ந்து காக்க
அருநிதியாம் ஸ்ரீ மஹா பெரியவா ஆண்டவர் என்
அங்கமெலாம் அழகாய்க் காக்க
8. கரியவிழி படைத்தநமன் வருங்காலம்
ஸ்ரீ மஹா பெரியவா கடிதிற் காக்க
பெரியபகை வஞ்சகர்கள் எதிர்த்திடுங்கால்
ஸ்ரீ மஹா பெரியவா பேணிக் காக்க
அரியகொடும் பிணிபூதம் அணுகிடுங்கால்
ஸ்ரீ மஹா பெரியவா அமைந்து காக்க
உரியவிஷப் பூச்சிகளால் இடரின்றி
ஸ்ரீ மஹா பெரியவா உடனே காக்க
9. எத்திக்கும் எப்போதும் எவ்விடத்தும்
ஸ்ரீ மஹா பெரியவா என்னைக் காக்க
பக்தியுடன் பணிபுரியும் வேலையெல்லாம்
ஸ்ரீ மஹா பெரியவா காக்க
முத்திநலங் கொடுத்தென்னை ஸ்ரீ மஹா பெரியவா
ஸ்ரீ சிவனவன் முன்னே காக்க
சித்தியெல்லாம் தந்தென்னைச் காஞ்சி சேர்
ஸ்ரீ மஹா பெரியவா சித்தர் காக்க.
ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா மூல மந்திரம்
ஓம் ஸ்ரீ காஞ்சி சங்கர! ஓம் ஸ்ரீ காமகோடி சங்கர !ஜெய ஜெய சங்கர!
ஓம் ஸ்ரீ காஞ்சி சங்கர! ஓம் ஸ்ரீ காமகோடி சங்கர! ஜெய ஜெ


" என் வயித்து வலியைக் கொண்டு போய், அந்த
வைத்தீஸ்வரன்கிட்ட விட்டுட்டு வந்துட்டயாக்கும்!''
(நெல்லை அன்பரின் வயிற்று வலியை தான் வாங்கிக் கொண்ட மகா பெரியவாள்.)
சொன்னவர்-அகிலா கார்த்திகேயன்.
தொகுப்பு-சாருகேசி
'நன்றி-பால ஹனுமான் & சக்தி விகடன்.
காஞ்சி மகான், பக்தர்களைக் கைவிடமாட்டார். அவர்களது துன்பங்களைத் தானே ஏற்று, அவர்களைக் காப்பார் என்பது சத்தியம்'' எனும் பீடிகையுடன், உருக்கமானதொரு சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டார் எழுத்தாளர் அகிலா கார்த்திகேயன்.
''ஒரு நாள், 34- 35 வயதுள்ள அன்பர் ஒருவர், தன் பெற்றோருடன் திருநெல்வேலியிலிருந்து வந்திருந்தார். அவர்களுக்குக் காஞ்சி மடம் புதிய இடமாதலால், பக்தர்கள் கூட்டத்தில் இருந்து சற்று விலகி நின்றிருந்தனர்.
அந்த அன்பர் வலியால் துடித்துக்கொண்டு இருந்ததை, அவரது முகம்காட்டிக்கொடுத்தது.இதை மகாபெரியவாளும்ககவனித்திருக்கவேண்டும். தயக்கத்துடன் விலகி நின்றிருந்த அந்தக் குடும்பத்தாரை அருகில் வரும்படி அழைத்தார். அருகில், காஞ்சி மகானுக்குக் கைங்கர்யம் செய்துவந்த பாலு என்பவரும் இருந்தார்.
பெரியவாளின் அருகில் வந்த நெல்லை அன்பர், ''எனக்குத் தீராத வயித்து வலி சுவாமி! உயிர் போற மாதிரி வலிக்குது. பார்க்காத டாக்டர் இல்லே; பண்ணாத வைத்தியம் இல்லே! கொஞ்சமும் குணம் தெரியலே. பரிகாரம்கூட பண்ணியாச்சு. ஒரு பலனும் கிடைக்கலே. எங்க குருநாதர் சிருங்கேரி சுவாமிகளைத் தரிசனம் பண்ணி, அவர்கிட்ட என் வயித்து வலி பத்திச் சொன்னேன். 'காஞ்சிப் பெரியவரை உடனே போய்த் தரிசனம் பண்ணு; உன் கஷ்டத்தைச் சொல்லு. அவர் தீர்த்துவைப்பார்’னு சொன்னார். அதான், இங்கே வந்தோம்'' என்றார் குரல் தழுதழுக்க.
''ஓஹோ... அப்படியா சொன்னார்..?'' என்று ஏதுமறியாதவராகக் கேட்டுக்கொண்டார் பெரியவா.
அவரின் திருமுகத்தைத் தரிசித்ததுமே, நெல்லை அன்பருக்கு நம்பிக்கை பிறந்ததுபோலும்! தொடர்ந்து... ''எங்கே போயும் தீராத வயித்து வலி, என்னை விட்டுப் போகணும், பெரியவா! நீங்களே கதின்னு வந்திருக்கேன். உங்க அனுக்கிரகம் கிடைக்கலேன்னா... இந்த வலியோடயே நான் இருக்கணுங்கறதுதான் விதின்னா... தினம் தினம் வலியால துடிதுடிச்சுக் கொஞ்சம் கொஞ்சமா சாகறதைவிட, இங்கேயே இப்பவே என் உயிரை விட்டுடலாம்னு வந்துட்டேன். பெரியவாதான் என்னைக் காப்பாத்தணும்'' என்று கதறினார்.
பெரியவா, சிறிது நேரம் கண்மூடித் தவம் செய்யும் பாவனையில் அமர்ந்திருந்தார். அங்கிருந்த எல்லோரும் அவரையே கவனித்துக்கொண்டிருக்க... நெல்லை அன்பர் தனது வயிற்று வலி மெள்ள மெள்ள விலகுவதுபோல் உணர்ந்தார். சிறிது நேரத்தில், ''இப்ப என் வயித்து வலி பூரணமா போயிடுத்து, பெரியவா!'' என்று வியப்பும் கண்ணீருமாகச் சிலிர்த்துச் சொன்னவர், பெரியவாளை சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தார். அவருடைய பெற்றோரும் நமஸ்கரித்தனர். பிறகு, பெரியவாளிடம் அனைவரும் விடைபெற்றுக் கொண்டு, திருநெல் வேலிக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
ஆனால், அன்றிலிருந்து பெரியவா என்னவோபோல் சோர்ந்து காணப்பட்டார். கருணையே உருவான காஞ்சி மகான், தனது வயிற்றில் ஏதோ வேதனை வந்தாற்போல் துன்பப்படு கிறார் எனத் தெரிந்தது. பெரியவா அடிக்கடி சுருண்டு படுப்பதையும், புரண்டு தவிப்பதையும் கண்ட மடத்து பாலு, செய்வ தறியாது கலங்கினார்.
பெரியவாளுக்கு பி¬க்ஷ தயார் செய்யும் கைங்கர்யத்தைச் செய்து வந்தவர் பாலுதான். பெரியவா படும் பாட்டைப் பார்த்து, தான்தான் பி¬க்ஷயில் ஏதேனும் தவறு இழைத்து விட்டோமோ என்கிற குற்ற உணர்ச்சியில் அவர் மருகத் தொடங்கினார். தன் குலதெய்வமான ஸ்ரீவைத்தீஸ்வரனைத் தரிசித்துப் பிரார்த்தித்தால் தேவலை என்று அவருக்குத் தோன்றியது.
மறுநாள் ஏகாதசி என்பதால், சௌகரியமாகி விட்டது பாலுவுக்கு. அன்றைய தினம், பெரி யவாளுக்கு பி¬க்ஷ செய்து வைக்க வேண்டாம். ஆகவே, வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் செல்வது எனத் திட்டமிட்டார். எனவே, பெரியவாளிடம் சென்று, ''எனக்கு என்னவோ, எங்க குல தெய்வத்தைத் தரிசனம் பண்ணிட்டு வந்தா தேவலைன்னு தோணறது. பெரியவா உத்தரவு தரணும்!'' என்று தயக்கத்துடன் அனுமதி வேண்டினார் பாலு.
உடனே, '''என் குலதெய்வமான வைத்தீஸ்வரன் வேற யாருமில்லே, பெரியவாதான்’னு அடிக்கடி சொல்வியே பாலு... இப்ப ஏன் போகணும்கறே?'' என்று குறும்புச் சிரிப்புடன் கேட்டார் பெரியவா.
எப்படியேனும் உத்தரவு வாங்கி விடுவதில் பரபரப்பாக இருந்தார் பாலு. ''இல்லே பெரியவா... சின்ன வயசுல முடி இறக்கினப்ப போனது. அப்புறம், குலதெய்வத்தை தரிசனம் பண்ணப் போகவே இல்லை. அதான்...'' என்று கெஞ்சாத குறையாகச் சொன்னார் பாலு. பெரியவா புன்னகையோடு உத்தரவு கொடுக்க, பாலு கிளம்பிச் சென்றார்.
வைத்தீஸ்வரனுக்கு நேர்ந்துகொள்ப வர்கள், நோய் தீருவதற்காக கை, கால் என வெள்ளியாலான உறுப்புகளை வாங்கி, ஸ்வாமிக்குக் காணிக்கையாகச் செலுத்துவார்கள். பெரியவாளின் வயிற்று வலி குணமாக வேண்டும் என்று வேண்டிக் கொண்ட பாலு, வெள்ளியில் 'வயிறு’ வாங்கக் கடை கடையாக அலைந்தார். 'வயிறு’ கிடைக்கவே இல்லை.
உடலும் மனமும் சோர்ந்துபோனவ ராகக் கடை வீதியில் நடந்து கொண்டிருந்த பாலுவின் அருகில், கிழவி ஒருத்தி வந்து நின்றாள்.
''என்ன சாமி, வைத்தீஸ்வரருக்கு கொடுக்குறதுக்கு வயிறு தேடறியா? அது கடைகள்ல கிடைக்காது. ஆபீஸ்ல போய் கேளு. யாரோ விசேஷமா சாமிக்குப் போட்டதை எடுத்துப் பத்திரமா வெச்சிருக்காங்க. முக்கியமானவங்க யாருனா வந்து கேட்டா கொடுப்பாங்க. நீ கேட்டுப் பாரு, சாமி! உனக்குக் கொடுத்தாலும் கொடுப்பாங்க!'' என்று சொல்லிவிட்டு, அந்தக் கிழவி நகர்ந்தாள்.
பாலுவுக்கு ஒரே குழப்பம். 'யார் இந்தக் கிழவி? நான் வெள்ளியில் 'வயிறு’ வாங்க அலைவது இவளுக்கு எப்படித் தெரியும்? வழியும் காட்டிவிட்டுச் செல்கிறாளே!’ என வியந்தவர், கோயில் அலுவலகத்துக்குச் சென்றார்.
'பெரியவாளுக்கு வயிற்று வலி’ என்று சொல்லமுடியுமா? ஆகவே, சாதாரண பக்தரைப் போல, கோயில் அதிகாரியிடம் பேசினார் பாலு. பேச்சின் ஊடே... பாலு சிறு வயதில் படித்த மன்னார்குடி பள்ளியில்தான் அந்த அதிகாரியும் படித்தார் என்பது தெரிய வந்தது. சக பள்ளி மாணவர்கள் என்கிற இந்த சிநேகிதத்தால், கஜானாவில் பத்திரமாக வைத்திருந்த வெள்ளி வயிற்றை, 750 ரூபாய் ரசீதுடன் பாலுவுக்குக் கொடுத்தார் அந்த அதிகாரி.
பிறகென்ன... சந்நிதிக்குச் சென்று, ஸ்வாமியைத் தரிசித்து, மனதாரப் பிரார்த்தித்து, காணிக்கையைச் செலுத்திவிட்டுக் காஞ்சிபுரம் வந்துசேர்ந்தார் பாலு.
மடத்தை அடைந்தவர், ஆச்சரியத்திலும் ஆனந்தத்திலும் திளைத்தார். பெரியவாளின் வயிற்று வலி முற்றிலுமாக நீங்கியிருந்தது. அவரது முகத்தில் பழைய மலர்ச்சி குடிகொண்டு இருந்தது.
''பெரியவா அனுக்கிரகத்தால், குல தெய்வத்தை தரிசனம் பண்ணிட்டு வந்துட்டேன்'' எனச் சொல்லி நெகிழ்ந்த பாலுவை ஏறிட்ட மகா பெரியவா, ''சரிதான்... என் வயித்து வலியைக் கொண்டு போய், அந்தவைத்தீஸ்வரன்கிட்ட விட்டுட்டு வந்துட்டயாக்கும்!'' என்றார் புன்னகைத்தபடி!
சிலிர்த்துப்போனார் பாலு. நெல்லை அன்பரின் வயிற்று வலியை தான் வாங்கிக் கொண்ட மகா பெரியவாளுக்கு, பாலுவின் 'வைத்தீஸ்வரன்கோவில் பிரார்த்தனை’ மட்டும் தெரியாமல் போய்விடுமா, என்ன?!



”நான்தான் அவரைக் காப்பாத்தினேன்னு சொன்னாராக்கும்! அசடு. நான் எங்கேடா காப்பாத்தினேன்! அந்தப் பரமேஸ்வரன்தானே அவரைக் காப்பாத்தினான்!”
சொன்னவர்-பட்டாபி
தொகுப்பு-சாருகேசி
'நன்றி-பால ஹனுமான் & சக்தி விகடன்.
திருநெல்வேலி பக்கத்துக்காரர் ஒருத்தரோட கதைதான் இதுவும். அவர் பேர் சிவன். அந்தப் பக்கத்து கிராமத்துலே இருந்து மடத்துக்கு அடிக்கடி வந்து போவார் அவர்.
வீர சைவர் பிரிவைச் சேர்ந்தவர். நெத்தியிலே பட்டை பட்டையா விபூதி பூசிண்டு, ‘சிவப் பழம்’ மாதிரி இருப்பார். சுத்தம் என்றால் அவ்வளவு சுத்தம். ஆசாரம் என்றால் அவ்வளவு ஆசாரம். சாப்பாட்டுல வெங்காயம் கூடச் சேர்த்துக்க மாட்டார்! அப்படி ஒரு கட்டுப்பாடு.
சிவன் காஞ்சிபுரம் வந்தார்னா, பெரியவாதான் அவருக்கு எல்லாம். அவருக்கு 80 வயசு. பெரும் பணக்காரர். மகா பெரியவாதான் அவருக்கு தெய்வம். பெரியவா சொல்றதுதான் அவருக்கு வேத வாக்கு!
காஞ்சிபுரம் வரபோது, கையிலே ஒரு மஞ்சள் பை எடுத்துண்டு வருவார். அதில் துண்டு, வேட்டி, விபூதி பிரசாதம், கொஞ்சம் போல பணம்… இவ்வளவுதான் இருக்கும்.
பெரியவாளோட சந்நிதானத் துல போய் உட்கார்ந்தார்னா, அவருக்கு நேரம்- காலம் போறதே தெரியாது. பத்து நாள் தரிசனம் பண்ணினாலும், அவருக்குப் போறாது.
சரி, பெரியவா கிட்டே பேசுவா ரோ? ஊஹூம்.
சந்தேகம் ஏதாவது கேட்பாரோ? அதுவும் இல்லை.
”பெரியவர் எங்கிட்டே பேச ணும்னு அவசியமே இல்லீங்க! அவர் மனசுல நான்நிறைஞ்சிருக்கேன்கிறதுதான் எனக்கு முக்கியம்”னுவார்.
வெளியிடத்துக்கு வந்தார்னா சாப்பிட மாட்டார்; அவ்வளவு ஏன், ஒரு வாய் ஜலம்கூட வாங்கிக் குடிக்க மாட்டார்.
ஒரு தடவை தரிசனம் எல்லாம் முடிஞ்சு, பெரியவாகிட்டே உத்தரவு வாங்கிக்கப் போனார் சிவன்.
வழக்கமா கை அசைச்சு ஆசீர்வதிச்சு அனுப்பி வைக்கிறவர் அன்னிக்கு என்னவோ, ”கிளம்பியாச்சா ஊருக்கு? சோடாவாவது வாங்கி ஒரு வாய் குடிக்கலாமோல்லியோ? சரி, போறச்சே அதையாவது பண் ணுங்கோ!”ன்னு குறிப்பா சொல்லி விடை கொடுத்தார் பெரியவர்.
செங்கல்பட்டுலே பஸ் ஏறி, திருநெல்வேலிக்குப் புறப் பட்டுட்டார் சிவன். அதே பஸ்ஸூல நாலு பேர், வயசுப் பசங்க உட்கார்ந்திருந்தாங்க. பஸ்ஸூக் குள்ளே கத்தலும் கூச்சலுமா அவங்க பண்ணின அமர்க்களம் தாங்க முடியலை. ஆனா, அந்த முரட்டுப் பசங்களை யாரு கண்டிக்கிறது!
மதுரை நெருங்குறப்போ, ஒரு குக்கிராமத்துல பஸ்ஸை நிறுத்தினார் டிரைவர். அங்கே ஒரு பெட்டிக்கடை இருந்தது. பஸ்ஸின் ஜன்னல் வழியா பார்க்குறப்போ, அந்தப் பெட்டிக் கடையில சோடா பாட்டில்கள் அடுக்கி வெச்சிருக்கிறது சிவன் கண்ணுல பட்டுது. உடனே, ”ஒரு சோடாவாவது வாங்கிக் குடியுங்க”ன்னு பெரியவா சொன்ன வார்த்தைகள்தான் சட்டுனு ஞாபகத்துக்கு வந்துது.
சிவனுக்குத் தண்ணீர் குடிக்கவும் வேண்டியிருந்தது. அதே நேரம், பெரியவா உத்தரவை நிறைவேத்தின மாதிரியும் ஆச்சுன்னு கீழே இறங்கிப் போய், அந்தப் பெட்டிக் கடையில ஒரு சோடா வாங்கிக் குடிச்சுட்டு வந்தார் சிவன்.
பஸ்ஸூக்குள்ள வந்து ஸீட்டைப் பார்த்தால், அவரோட மஞ்சள் பையைக் காணோம். அதுலே பெரிசா சாமானோ பணமோ இல்லேன்னாலும், அவரோட ஸீட்டுல இருந்ததாச்சே!
அப்போ அந்த நாலு முரட்டுப் பசங்களும், ”யோவ் பெரிசு! ஒன்னோட மஞ்சப் பையத் தேடறியா? அதா பார்… பின்னால ஸீட்டுல கிடக்குது. அங்கே போய் உக்காரு!”ன்னு கேலியா சொன்னாங்க.
மஞ்சள் பை பத்திரமாக கடைசி ஸீட்டுக்கு முன் ஸீட்டுல இருந்துது. ‘சரி, ஊர் போய்ச் சேர்ந்தா போதும்; இவங்களோடு நமக்கு என்ன வாக்குவாதம்!’னு அங்கே போய் உட்கார்ந்துட்டார் பெரியவர் சிவன்.
அந்த நாலு பசங்களில் ரெண்டு பேர், சிவன் இதுவரைக்கும் உட்கார்ந்து வந்த அந்த ஸீட்டுல போய் உக்கார்ந்துண்டாங்க.
ராத்திரி வேளை. பஸ் கிளம்பிச்சு. புறப்பட்டு ஒரு மணி நேரம் ஆகியிருக்கும். என்ன ஆச்சுன்னே தெரியலே, எதிர்ல அசுர வேகத்துல வந்த லாரி ஒண்ணு இந்த பஸ் மேல மோதிடுத்து.
சிவனோட இடத்துல அடமா போய் உட்கார்ந்துண்டு, ”யோவ் பெரிசு, பின்னால போய் உட்காரு”ன்னு எகத்தாளமா சொன்ன அந்த ரெண்டு இள வயசுப் பசங்களும், அங்கேயே ஆன் த ஸ்பாட் செத்துப் போயிட்டாங்க. பெரியவர் சிவன் சின்ன காயம்கூட இல்லாம தப்பிச்சுட்டார்!
‘ஒரு சோடாவாவது வாங்கிச் சாப்பிட்டுப் போங்க’ன்னு பெரியவா ஏன் சொன்னார்? மதுரை குக்கிராமத்துலே, டிரைவர் சரியா ஒரு பெட்டிக்கடை முன்னாடி எதுக்காக பஸ்ஸை நிறுத்தினார்? அங்கே சிவன் கண்ணுல படற மாதிரி சோடா பாட்டில்கள் அடுக்கி வெச்சிருப்பானேன்? பெரியவர் சொன்னாரேங்கிறதுக்காக ராத்திரி அகால வேளையில சோடா சாப்பிட பஸ்ஸை விட்டு சிவன் இறங்கக்கொண்டுதானே, அவரோட உயிர் தப்பிச்சுது?
இதெல்லாம் எப்படி நடக்கிறது! யோசிக்க, யோசிக்க… சிவன் அப்படியே ஓன்னு அழுதுட்டாராம். தான் உயிர் தப்பிச்சது ஒருபுறம் இருக்க, வயசுப் பசங்க ரெண்டு பேரும் அந்த ஸ்தலத்துலயே செத்துப்போனது அவர் மனசை என்னவோ பண்ணிடுத்து.
ஆனா, அவருக்கு ஒண்ணு மட்டும் புரிஞ்சுது. தனக்கும் இன்னிக்குக் கண்டம்தான். பெரியவரை பத்து நாள் தரிசனம் பண்ணிய புண்ணியம்தான் அந்தக் கண்டத்துலேர்ந்து தன்னைக் காப்பாத்தியிருக்கு. யோசிக்க யோசிக்க, அந்த மகான், ‘ஒரு சோடாவானும் சாப்பிட்டுட்டுப் போங்கோ’னு சொன்னது, தெய்வமே நேர்ல வந்து சொன்ன குறிப்பு மாதிரி தோணுச்சு அவருக்கு.
1983-ல், மகா பெரியவா யாத்திரை எல்லாம் போயிட்டுக் காஞ்சிபுரம் திரும்பினப்போ நடந்த சம்பவம் இது.
சிவனோடு நான் பேசிண்டிருந்தபோது, அவர்தான் உடம்பெல்லாம் சிலிர்க்க இந்தச் சம்பவத்தை விவரிச்சு சொன்னார். அதை நான் பெரியவாகிட்டே வந்து சொன்னேன்.
”சிவன் சௌக்கியமா இருக்காரோ?”ன்னு விசாரிச்சார் பெரியவா. தொடர்ந்து, ”நான்தான் அவரைக் காப்பாத்தினேன்னு சொன்னாராக்கும்! அசடு. நான் எங்கேடா காப்பாத்தினேன்! அந்தப் பரமேஸ்வரன்தானே அவரைக் காப்பாத்தினான்!”னார் பெரியவா.
அதைக் கேட்டு எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்துப்போச்சு!



தீக்ஷை பெற்று தவம் செய்தே இறைவனை அடைய வேண்டும்.
இதுவே இறை விதி.
குருவின் முக்கியதுவத்தை உணர்த்தவே அவதாரங்களான ஸ்ரீ ராமரும் , கிருஷ்ணரும் குருவை தேடி சென்று நல்ல சீடர்கள இருந்தார்கள்.
இயேசு நாதர் யோவானிடம் ஞானஸ்தானம் பெற்றார்.
அருணகிரிநாதருக்கு முருக பெருமானே குருவாக வந்தார்.
வள்ளலார், மாணிக்கவாசகர் போன்ற பிறவி ஞானிகளுக்கு இறைவனே குருவாக வந்தார்.
குருவின் முக்கியதுவத்தை உணர்த்த சிவபெருமானே “ஆதி குரு தக்ஷினாமூர்த்தியாய் “ சனகாதி முனிவர்களுக்கு அருளினார்.
இங்கு நன்றாக கவனியுங்கள் யாருக்கும் இறைவன் நேரடியாக அருளவில்லை , முதலில் தானே குருவாகி தன்னை அடைய வழி கட்டினான். நம் அனைவர்க்கும் இது பொருந்தும்.
நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நமது சுற்றம், தாய் தந்தையர், நண்பர்கள், ஆசிரியர்கள் மற்றும் இயற்கை நமக்கு பல விசயங்களை கற்று கொடுத்துள்ளது. இவைகளை எல்லாம் நமக்கு உலகியல் விசயங்களை மட்டும் தான் கற்று கொடுத்துள்ளது. இவைகள் எல்லாம் ஆண்டவனிடம் நம்மை அழைத்து செல்லாது.
யார் ஒருவர் நம்மை இறைவனிடம் கொண்டு சேர்கிறரோ அவரே ஒருவற்கு குரு ஆவார். நம் உடலில் உள்ள “சத்”யத்தை (உயிர் – இறை அம்சம் ) பற்றி சுரிதி, யுக்தி மற்றும் வாக்கியத்தால் புரிய வைத்து அந்த இறைவன் துலங்கும் இடத்தை (கண்களை) கூறுகிறாரோ அவரே சத்குரு. இந்த சத்யத்தை உணர நம் கண்களுக்கு உணர்வு கொடுத்து(தீக்ஷை) , தவம் செய்ய வழி காட்டுபவரே ஞான சற்குரு. இப்படி பட்ட ஞான சற்குருவை பெற்றவனே பாக்கியவான். அவனே தவம் செய்து இறை அருள் பெறுவான்

மானஸ தீக்ஷையாகி இவனைத் தூக்கிவிட்டு விடும்- ஸ்ரீ மஹா பெரியவா
தீக்ஷை - குரு கடாக்ஷம்
குரு--சிஷ்யாளுக்கு இடையில் ஏற்படும் தொடர்பை ''உபதேசம'' என்று சொன்னாலும் சாஸ்த்ரத்தில் இதற்குச் சொல்லியிருக்கிற வார்த்தை ( technical term ) ''தீக்ஷை'' என்பதேயாகும்.
'தீக்கை' என்று தமிழில் சொல்லியிருக்கும். 'இனிஷியேஷன்' என்கிறார்கள். குருவிடமிருந்து எது புறப்பட்டுப் போய், சிஷ்யனுக்குள்ளே புகுந்து, அவனை ஒரு மார்க்கத்தில் தீவிரமாக தூண்டிச் செலுத்துகிறதோ அதற்கு ''தீக்ஷை" என்று பெயர். இப்படி ஒரு மார்க்கத்தில் சிஷ்யன் பிரவேசிப்பதற்கு ஆரம்ப சக்தியாக இருப்பதால்தான் 'இனிஷியேட்' பண்ணுவது என்கிறார்கள். ஆனால் ஆரம்பித்து வைத்துவிடுவதோடு (இனிஷியேட் பண்ணுவதோடு) அந்த சக்தி தீர்ந்து போய்விடுவதில்லை. ஆரம்பித்து வைத்த பிறகு வழி நெடுகவும் கூட வந்து துணை செய்து, மேலே மேலே போகப் பண்ணி, லக்ஷ்யத்தை அடைந்து ஸித்தி பெறவும் வைக்கிறது.
மந்த்ர ரூபமாகவோ, ஒரு கடாக்ஷமாகவோ, ஸ்பர்சமாகவோ, அநுக்ரஹ ஸ்மரணத்தினாலோ க்ஷண காலம் இப்படி ஒரு குரு ஒருத்தனோடு 'லிங்க்' பண்ணிக் கொண்டு விட்டாலும், அதுவே சாஸ்வதமாக அவருடைய அநுக்ரஹத்தை இவனுக்குக் கொடுத்துக் கொண்டு 'பெர்மனென்ட் கனெக்க்ஷ'னாக இருக்கும் -- ஒரு தடவை ஸ்விட்சைத் தட்டிவிட்டு விட்டால் பல்ப் அது பாட்டுக்கு எரிந்து கொண்டேயிருக்கிறாற்போல! 'கைவல்ய நவநீதம்' முதலான புஸ்தகங்களில் இந்த ஸ்பர்ச, கடாக்ஷ, ஸ்மரண தீக்ஷைகளை [முறையே] ஹஸ்த, நயன, மானஸ தீக்ஷைகள் என்று சொல்லியிருக்கிறது.
ஆசார்யர் என்பவர் ஸ்தூலமாக சிஷ்யனிடம் long-term contact (நீண்டகாலத் தொடர்பு) வைத்துக் கொண்டு அவனைப் படிப்பிலும் நடத்தையிலும் train பண்ண வேண்டியவர். குருவுக்கோ சிஷ்யனிடம் ஸ்தூலத் தொடர்பு ரொம்பவும் கொஞ்சகாலம் இருந்தால் போதும்; அல்லது அதுவுங்கூட இல்லாமலுமிருக்கலாம். ஆனால் தீக்ஷையின் மூலமாக அவருக்கும் சிஷ்யனுக்கும் ஏற்பட்ட ஸூக்ஷ்மமான contact --ஓ (தொடர்போ) long term க்கும் மேலே; அது life -long ஆனது [வாழ்க்கை முழுதற்குமானது] ; life circle எல்லாம் போய், ஜன்மங்கள் எல்லாம் தீர்ந்து சிஷ்யன் ஸித்தி பெறுகிற வரையில் நீடிக்கிற contact இது.
இப்படி தீக்ஷை தருகிறதுதான் குருவுக்கு முக்யமான லக்ஷணமாய் நினைக்கப்படுகிறது. தீக்ஷா குரு, குருதீக்ஷை என்றே சொல்கிறது வழக்கம். தீக்ஷை கொடுப்பவரையே குரு என்பது வழக்காயிருக்கிறது. பழையகால இதிஹாஸம், புராணம், காவியம் இவைகளைப் பார்த்தால் தகப்பனாரையே குரு என்று சொல்லியிருக்கும். தகப்பனாராக இருக்கப்பட்டவனுக்கு குருவுக்கு இருக்க வேண்டிய உள்பெருமை, கனம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், புத்ரனைப் பொறுத்தமட்டில் பிதா தெய்வத்துக்கு ஸமானமல்லவா? ''முன்னறி தெய்வம்'' அல்லவா? அதனால் இப்படி அவரை குரு என்று உயர்த்திச் சொல்லியிருக்கலாம். இதே மாதிரி, பாடம் சொல்லிக் கொடுக்கிற வாத்தியாரும், ''எழுத்தறிவித்தவன் இறைவன்'' என்கிறாற்போல தெய்வமாக நினைக்கப்பட வேண்டியவர்; ''பித்ரு தேவோ பவ'' வுக்கு அடுத்தே ''ஆசார்ய தேவோ பவ'' என்றும் வேதம் ஆக்ஞை செய்திருக்கிறது! அதனால் இவரையும் 'குரு' என்று பெருமைப்படுத்துவதாக ஏற்பட்டிருக்கலாம். பிதாவை குரு என்பதற்கு இன்னொரு காரணமும் தோன்றுகிறது. ஒரு ஜீவனுக்கு முதல் உபதேசம் எது? காயத்ரீதான். அந்த மந்த்ரத்தை உபதேசம் (ப்ரஹ்மோபதேசம்) செய்வது பிதா தானே? அதாவது காயத்ரீ மந்த்ர தீக்ஷை அப்பாதான் பண்ணுகிறார். இப்படி தீக்ஷை தருவதாலேயே அவரை 'குரு' என்கிற வழக்கம் உண்டாயிருக்கலாம். காயத்ரீ உபதேசத்தில் அதிகாரமில்லாதவர்களுக்கும்கூட அக்ஷராப்யாஸம் என்பது இருக்கிறது. அப்போது அஷ்டாக்ஷரமோ, பஞ்சாக்ஷரமோ உபதேசித்து அப்பன்காரன்தான் பிள்ளையை 'ஆனா' எழுத வைக்கிறான். இந்த மந்த்ரோபதேசத்தாலேயே குரு ஆகிவிடுகிறான்.
உள்ளநுபவ கனமும் பெருமையும் இல்லாதவனான தகப்பனாரையோ, வாத்தியாரையோ குருவாக நினைத்து சரணாகதி செய்து விட்டாலும், அந்த சரணாகதியின் கனத்தாலும் பெருமையாலுமே இப்படிப்பட்ட யோக்யதைக் குறைச்சலான குருவிடமிருந்தும் ஞானத்தைப் பெற்றுவிடலாம். அதாவது அநுக்ரஹிக்க வேண்டும் என்ற எண்ணங்கூட இல்லாத மஹா அநுபவியான குரு மூலம் அநுக்ரஹத்தைச் செய்கிற அந்த பகவானே, கொஞ்சங்கூட அநுக்ரஹ சக்தி இல்லாத இந்த குரு மூலமாகவும் சிஷ்யனுடைய சரணாகதியை மெச்சி அருள் புரிந்து விடுவான்*. குரு என்று ஆச்ரயிக்கப்படுபவர் அபாத்ரராயினும் அவரிடம் அந்தரங்க விஸ்வாஸம் வைத்து, அவர் என்ன செய்தாலும் அவருடைய பெருமைக்குக் குறைவாகப் பேசாமலும் நடக்காமலும் ஒரு சிஷ்யன் இருந்துவிட்டால், அந்த குரு உய்வு பெற்றாலும் பெறாவிட்டாலும், இந்த சிஷ்யன் உய்வு பெற்று விடுவான்.
இப்படிப்பட்ட குரு பக்தியை நினைக்கும்போது எனக்கு ஒரு ஸம்பவம் ஞாபகம் வருகிறது. ஒரு தரம் மடத்துப் பாடசாலைப் பசங்கள் -- சின்ன வயசுப் பசங்கள் -- இரண்டு பேரிடம், வாத்தியார் வந்துவிட்டாரா என்று கேட்டேன். ஒரு பையன் வரவில்லை என்றான். மற்றவன் வந்துவிட்டார் என்றான். அப்புறம் முதல் பையன் சொன்னதுதான் நிஜம் என்று தெரிந்தது. நான் இரண்டாவது பையனிடம், ''ஏன் பொய் சொன்னே? பொய் சொன்னா தப்பில்லையா?'' என்று கேட்டேன். அதற்கு அவன் தைரியமாக, ''பாட நேரம் வந்தும் வாஸ்தவத்தில் வாத்தியார் வராமலிருந்தாரென்றாலும், அவர் வரவில்லை என்று சொன்னால் குருவின் தப்பை வெளியிலே சொன்னதாகும். பொய் சொல்வதைவிட இப்படி குருவுக்குத் தப்பு சொல்வதுதான் பெரிய தப்பு என்பதாலேயே அப்படிச் சொன்னேன்'' என்றான். நானும் அவன் பண்ணினதை ஸரி என்று ஒப்புக் கொண்டேன். குரு பக்தி விசேஷத்துக்காகச் சொன்னேன். குரு எப்படியிருந்தாலும் அவருக்கு ஆத்மார்ப்பணம் பண்ணிவிட்டால், குருவால் எது கிடைக்க வேண்டுமோ அது ஈஸ்வர ப்ரஸாதமாகச் கிடைத்துவிடும்.
நாமே ஒன்றைப் படித்துத் தெரிந்துகொள்ளும் போது அதில் இந்த சரணாகதி, ஸமர்ப்பண புத்தி surrender பண்ணுவதில் இருக்கிற humility (விநயம்) இதெல்லாம் இல்லை. நாமாகவே படித்துப் புரிந்து கொள்வதில் இதற்கெல்லாம் நேர்மாறாக அஹங்காரமே உண்டாக இடமிருக்கிறது. வித்யை நிஜமான வித்யையாக இருந்தால் அஹங்காரத்தைப் போக்கத்தான் வேண்டும். அதனால்தான், தானே ஒரு வித்தையைக் கற்பது, தானே ஒரு மந்த்ரத்தை எடுத்துக் கொள்வது, தானே ஒரு புண்ய கர்மாவைப் பண்ணுவது எல்லாம் சாஸ்திரத்தில் விலக்கப்பட்டு, குரு முகமாக உபதேசம் வாங்கிக் கொண்டே இவற்றைச் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. தானாகவே படித்தும் தெரிந்து கொள்ளலாம் தான்; ஆனாலும் இந்த அறிவு ஆத்மாபிவிருத்திக்குப் பிரயோஜனப்படாது என்பதை ஒரு உபமானத்தால் சுரீலென்றே மனஸில் தைக்கிறாற்போலச் சொல்லியிருக்கிறது -- இது ஜாரபுருஷனிடம் புத்ரனைப் பெற்றுக் கொள்கிற மாதிரி; புத்ரன்தான் என்றாலும் அவன் வைதிக கர்மா எதற்கும் உதவாதது போல என்று.
பூர்ண யோக்யதை பெற்ற குரு --அதாவது கனமான உள்ளநுபவம் பெற்றவர் -- எந்த விதமான தீக்ஷையும் தரவேண்டுமென்றில்லா விட்டாலுங்கூட rare exception [அஸாதரணமான விதிவிலக்கு] தவிர அவராலும் ஏதாவது ஒரு தீக்ஷை நடக்கிறதென்று சொன்னேன் அல்லவா? இதில் வாக்கால் கொடுக்கிற தீக்ஷைதான் மந்த்ரோபதேசம்; மந்த்ர தீக்ஷை என்பது. த்ருஷ்டியால் (பார்வையால்) தீக்ஷை தருவது சக்ஷு தீக்ஷை; நயன தீக்ஷை என்றும் சொல்வார்கள். தொடுவதால் தீக்ஷை தருவது ஸ்பர்ச தீக்ஷை. ஹஸ்த தீக்ஷை என்று சொல்வது இதைத்தான்.
இதிலே பல வகை உண்டு. குரு சிஷ்யனின் தலையைத் தம் கையால் தொட்டுத் தம் spiritual energy --யை [ஆத்ம சக்தியை] அவனுக்குள் செலுத்துவதற்கு ஹஸ்த மஸ்தக தீக்ஷை என்று பெயர். (எல்லா தீக்ஷையிலுமே குரு தம்முடைய அநுபவ சக்தியை சிஷ்யனுக்கு ஊட்டுகிற தியாகத்தைதான் செய்கிறார்.) பாதத்தால் சிஷ்யனை ஸ்பர்சிப்பது பாத தீக்ஷை. (கபீர்தாஸ் ராமாநந்தரிடம் பாத தீக்ஷை, மந்த்ர தீக்ஷை இரண்டும் பெற்றதாகிறது!) குரு தம்முடைய பாதத்தை சிஷ்யனுடைய அங்கங்களில் குறிப்பாக சிரஸில் வைப்பதைத்தான் ரொம்பப் பெரியப் பேறாகக் கருதுவது. 'திருவடி தீக்கை' என்று இதைச் சொல்வார்கள். குருபாதம் எப்போதுமே சிரஸில் இருப்பதாக தியானம் செய்ய வேண்டும். இது வெறும் வார்த்தையாக, பாவனையாக இல்லாமல், எல்லா குருவுக்கும் மூலகுருவான ஈசனின் இணையடிகள் தங்கள் தலையிலேயே இருப்பதை அநுபவித்து அறிந்தவர்களைத் தான் ''அடியார்'' என்பது; 'பாதர்', 'ஸ்ரீசரணர்' என்று ஸம்ஸ்க்ருதத்திலும் சொல்கிறது வழக்கம். 'பகவத்பாதர்' என்றால் பகவானின் பாதத்தை தரித்து அதுவாகவே ஆனவர். அதனால் அந்த பகவத்பாதரையே நாம் சிரஸில் தரிக்கணும்.
ரொம்ப உயர்ந்த, பக்வ நிலையில் குரு நேரே வாயால் உபதேசிக்க வேண்டாம், பார்க்க வேண்டாம், தொடவேண்டாம், அவர் எங்கேயோ இருந்துகொண்டு ஒருத்தனை நினைத்துவிட்டாலே அது மானஸ தீக்ஷையாகி இவனைத் தூக்கிவிட்டு விடும்.



















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக