ராதே கிருஷ்ணா 12-08-2012
லண்டன் ஒலிம்பிக் 2012 சாதனைகள்
முதல் பக்கம் » சாதனைகள்
லண்டன்: லண்டன் ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் இரண்டு வெள்ளி, ஒரு தங்கம் உட்பட மொத்தம் 3 பதக்கம் வென்ற அமெரிக்க நீச்சல் வீரர் ... மேலும்
ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக பளுதூக்குதல் பிரிவில் பெண்கள் பங்கேற்றனர். இந்த வாய்ப்பை சூப்பராக பயன்படுத்தினார் ... மேலும்
1972ல் ஜெர்மனியின் முனிக்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்காவின் நீச்சல் வீரரான மார்க் ஸ்பிட்ஸ் 7 தங்கம் வென்று சாதனை ... மேலும்
19 பதக்கம் வென்று வரலாறு படைத்தார் பெல்ப்ஸ்
லண்டன்: லண்டன் ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் இரண்டு வெள்ளி, ஒரு தங்கம் உட்பட மொத்தம் 3 பதக்கம் வென்ற அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ், ஒலிம்பிக் வரலாற்றில் அதிக பதக்கம் வென்றவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து புதிய வரலாறு படைத்தார்.
லண்டன் ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் அமெரிக்க வீரர் மைக்கேல் பெல்ப்ஸ், 400 மீ., தனிநபர் "மெட்லே' பிரிவில் நான்காவது இடம் பெற்று, பதக்க வாய்ப்பை இழந்தார். பின் 4*100 மீ., "பிரீஸ்டைல் ரிலே' போட்டியில், இவரது அமெரிக்க அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. அடுத்து நடந்த 200 மீ., தனிநபர் "பட்டர்பிளை' போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார். பின், 4*200 மீ., "பிரீஸ்டைல் ரிலே' பிரிவில் இவரது அமெரிக்க அணி தங்கம் வென்றது.
ஏற்கனவே பெல்ப்ஸ் ஒலிம்பிக்கில் 16 பதக்கம் (2004 - 6 தங்கம், 2 வெண்கலம் மற்றும் 2008 - 8 தங்கம்) வென்றிருந்தார். இம்முறை இதுவரை கிடைத்துள்ள மூன்று பதக்கத்தையும் சேர்த்து மொத்தம் 19 பதக்கம் வென்றுள்ளார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் அதிக பதக்கம் வென்ற அப்போதைய சோவியத் யூனியன் (ரஷ்யா) "ஜிம்னாஸ்டிக்' வீராங்கனை லாரிசா லடினைனாவின் சாதனையை (1956 முதல் 64 வரை, மொத்தம் 18 பதக்கம்) முறியடித்து முதலிடம் பிடித்தார்.

மல்லேஸ்வரி சாதனை
ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக பளுதூக்குதல் பிரிவில் பெண்கள் பங்கேற்றனர். இந்த வாய்ப்பை சூப்பராக பயன்படுத்தினார் ஆந்திராவை சேர்ந்த "இரும்பு பெண்' கர்ணம் மல்லேஸ்வரி. ஏற்கனவே, உலக சாம்பியன், ஆசிய சாம்பியன் பட்டங்களை வென்றிருந்த இவர், சிட்னியில் மீண்டும் திறமை நிருபித்தார். 69 கி.கி., எடைப்பிரிவில் அசத்திய மல்லேஸ்வரி வெண்கலப்பதக்கம் வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற மகத்தான சாதனை படைத்தார்.
பெல்ப்ஸ் சாதனை
1972ல் ஜெர்மனியின் முனிக்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்காவின் நீச்சல் வீரரான மார்க் ஸ்பிட்ஸ் 7 தங்கம் வென்று சாதனை படைத்தார். இதை அமெரிக்கா நீச்சல் வீரரான மைக்கேல் பெல்ப்ஸ், பீஜிங் ஒலிம்பிக்கில் 8 தங்கப்பதக்கம் (400 மீ., தனிநபர் மெட்லே, 4*100 மீ., பிரீஸ்டைல் ரிலே, 200 மீ., பிரிஸ்டைல், 200 மீ., பட்டர்பிளை, 4*200 மீ., பிரீரிஸ்டைல் ரிலே, 200 மீ., தனிநபர் மெட்லே, 100 மீ., பட்டர்பிளை, 4*100 மீ., மெட்லே ரிலே) வென்று முறியடித்தார்.
* 2004ல் ஏதென்சில் நடந்த 28வது ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த மைக்கேல் பெல்ப்ஸ் நீச்சலில் அசத்தினார். 100 மீ., பட்டர்பிளை, 200 மீ., தனிநபர் மெட்லே, 400 மீ., தனிநபர் மெட்லே, 4*200 மீ., பிரிஸ்டைல் ரிலே, 4*100 மீ., மெட்லே ரிலே பிரிவுகளில் தங்கம் வென்றார். 200 மீ., பிரிஸ்டைல், 4*100 மீ., பிரிஸ்டைல் ரிலே பிரிவுகளில் தலா ஒரு வெண்கலம் வென்றார். 6 தங்கம் உட்பட 8 பதக்கங்களை வென்ற இவர் ஒரே ஒலிம்பிக்கில் அதிக பதக்கம் வென்ற ரஷ்யாவின் அலெக்சாண்டர் டிட்யாட்டின் (1980, ஜிம்னாஸ்டிக்சில் 8 பதக்கம்) சாதனையை சமன் செய்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக