ஞாயிறு, 11 ஜூன், 2017

ஷஷ்டியப்த_பூர்த்தி

ராதே கிருஷ்ணா 11-06-2017




12.06.17 Monday
தாலியின் ஒன்பது இழைத் தத்துவம்!
🌀 தாலி என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே திருமண பந்தத்தை ஏற்படுத்தும் ஓர; அடையாளம் ஆகும். தாலி, குங்குமம், மெட்டி அணிந்துள்ள ஒரு பெண் திருமணமானவள் என்பதை வெளிப்படுத்துகிறது.
🌀 இந்த தாலி பொன்னால் இருக்க வேண்டியது அல்ல. மகிமை நிறைந்த மஞ்சளால் கூட ஆகியிருக்கலாம்.
🌀 இந்துக்களுக்கு மஞ்சள் நிறம் புனிதமான நிறம் என்பதால் அந்த திருமணப் பரிசும் மஞ்சள் நிறத்தில் தரப்பட்டது. தமிழர் திருமணங்களில் ஆரம்பத்தில் தாலி இருந்ததாக, இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை.
🌀 சங்க காலத்தின்போது நடந்த திருமணங்களில் புதுமணல் பரப்பி, விளக்கு ஏற்றி, வயதில் மூத்த பெண்கள், மணப்பெண்ணை நீராட்டி வாழ்த்தி அவள் விரும்பியவனுடன் அவளை ஒப்படைத்தனர். நாளடைவில் 'தாலம்" என்ற பெயர்தான் தாலியாக மாறியிருக்கிறது.
🌀 பதினோராம் நு}ற்றாண்டில்தான் தாலி என்ற பெயர் உபயோகப்படுத்தப்பட்டது என்கிறது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டிருக்கும் 'தமிழர் திருமணம்" என்கிற புத்தகம். மாங்கல்யச் சரடானது ஒன்பது இழைகளைக் கொண்டது.
ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களைக் குறிக்கிறது :
🌀 திருமணத்தின் போது பெண் கழுத்தில் கட்டுப்படுகிற மாங்கல்ய தாலிக் கயிறானது ஒன்பது நு}ல் இழைகளைக் கொண்டது. அந்த ஒன்பது இழைகளுக்கும் ஒவ்வொரு பொருளுண்டு.
தெய்வீகக் குணம்
தூய்மைக் குணம்
தொண்டு
தன்னடக்கம்
ஆற்றல்
விவேகம்
உண்மை
உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல்
மேன்மை.
🌀 இத்தனைக் குணங்களும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்பது இழைகள் கொண்ட திருமாங்கல்யச்சரடு அணியப்படுகிறது.





Anantha Narayanan shared his post to the group: Friends For us.
Anantha Narayanan added 9 new photos.Follow
ஷஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகங்கள் போன்ற சடங்குகளை நடத்திக் கொள்வது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை.
பெரும் பாக்கியமும் பூர்வ புண்ணியமும் செய்தவர்களுக்கே இந்த மண விழா காணும் பாக்கியம் அமைகிறது.
இது போன்ற வைபவங்கள் பொதுவாக ஆயுள் விருத்தியைப் பிரதானமாக்க் கொண்டே அமைகின்றன.
சகல தேவர்களையும் மகிழ்விக்கும் பொருட்டு அன்றைக்கே வேத பாராயணங்களும், ஹோமங்களும் நடைபெறுகின்றன.
உறவு முறைகள் கூடி நின்று குதூகலப்படும் போது, ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியரின் மனம் மகிழும். நமக்கென்று இத்தனை சொந்தங்களா என்கிற சந்தோஷம் அவர்களின் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும்.
பூமி 360 பாகைகளாகவும் அந்த 360 பாகைகளும் 12 ராசி வீடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
இந்த 360 பாகைகளையும் கடந்து சென்று ஒரு வட்டப் பாதையை பூர்த்தி செய்வதற்கு சூரியனுக்கு ஓர் ஆண்டும், செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டும், சந்திரனுக்கு ஒரு மாதமும், புதனுக்கு ஒரு வருடமும், வியாழனுக்கு 12 வருடங்களும், வெள்ளிக்கு ஒரு வருடமும், சனி பகவானுக்கு 30 வருடங்களும், ராகுவுக்கு ஒன்றரை வருடங்களும், கேதுவுக்கு ஒன்றரை வருடங்களும், ஆகின்றன.
இந்த சுழற்சியின் அடிப்படையில் ஒருவர் ஜனித்து, அறுபது வருடங்கள் நிறைவடைந்த தினத்துக்கு அடுத்த தினம், அவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்புகளும் வருடம், மாதம் போன்றவையும் மாறாமல் அப்படியே அமைந்திருக்கும்.
மிகவும் புனித தினமான அன்றுதான், சம்பந்தபட்டவருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி வைபவம் மிகவும் ஆச்சாரமான முறையில் தெய்வாம்சத்துடன் நிகழ வேண்டும்.
ஷஷ்டியப்த பூர்த்தி தினத்தன்று வேத பண்டிதர்களின் முன்னிலையில் நிகழ்த்தப்படும்
பூஜையின் போது 64 கலசங்களில் தூய நீரை நிரப்பி மந்திரங்களை உச்சரித்து ஹோமங்கள் நடைபெறும்.
அங்கே உச்சரிக்கப்படும் வேத மந்திரங்களின் சத்தம் மூலம் கலசத்தில் உள்ள நீர் தெய்வீக சக்தி பெற்று, புனிதம் அடைகிறது.
பின்னர், அந்தக் கலசங்களில் உள்ள நீரைக் கொண்டு ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியினருக்கு அபிஷேகம் நடைபெறும்.
அபிஷேகத்துக்குப் பயன்படும் இந்த 64 கலசங்கள் எதைக் குறிக்கின்றன?
தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது என்பதை நாம் அறிவோம்.
இந்த அறுபது ஆண்டுகளுக்கான தேவதைகளையும், இந்த தேவதைகளின் அதிபதிகளாகிய அக்னி, சூரியன், சந்திரன், வாயு ஆகில நால்வரையும் சேர்த்துக் குறிப்பதற்காகத்தான் 64 கலசங்கள் என்பது ஐதீகம்.
பிரபவ முதல் விரோதிகிருது வரையான 15 ஆண்டுகளுக்கு அக்னி பகவானும், ஆங்கிரஸ முதல் நள வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சூரிய பகவானும், ஈஸ்வர முதல் துன்பதி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சந்திர பகவானும், சித்திரபானு முதல் அட்சய வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு வாயு பகவானும் அதிபதிகள் ஆவார்கள்.
தன்னுடைய 60-வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வென்ற மனிதன் 60 வயதில் இருந்து தான், தனது என்ற பற்றையும் துறக்க முயல வேண்டும்.
தன்னுடைய மகன், மகள், சொந்த பந்தம் என்ற கண்ணோட்டம் மறைந்து உற்றார் உறவினர்
அனைவரும் தன் மக்களே…. எல்லோரும் ஒரு குலமே என்கிற எண்ணம் 70 வயது நிறைவில் பூர்த்தி ஆக வேண்டும்.
தான், தனது என்ற நிலை மறந்து அனைவரையும் ஒன்றாகக் காணும் நிலை பெற்றவர்களே 70-வது நிறைவில் பீஷ்ம ரத சாந்தியைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறார்கள்.
காமத்தை முற்றிலும் துறந்த நிலையே பீஷ்ம ரத சாந்திக்கான அடிப்படை தகுதியாகும்.
70-வது வயதில் இருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி உள்ள எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண முயல வேண்டும்.
ஒவ்வொரு உயிரிலும் உறையும் இறைவனுடன் உரையாடப் பழகிக் கொள்ள வேண்டும். அவனுக்கு ஜாதி, மதம், இன பேதம் எதுவும் இல்லை. இப்படி அனைத்திலும் இறைவனை – அனைத்தையும் இறைவனாகக் காணும் நிலையைஒரு மனிதன் 80 வயதில் பெறும் போது தான் சதாபிஷேகம் (ஸஹஸ்ர சந்திர தர்ஸன சாந்தி – ஆயிரம் பிறை கண்டவன்) காணும் தகுதியை அவன் அடைகிறான்.
...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக