ராதே கிருஷ்ணா 02-06-2017
Srinivasan Nambi
திருமாங்கல்யம்- ஓர்வேண்டுகோள்
ஓரிரு தினங்களுக்கு முன் அடியேன் வைதீக்கர்மா நடத்திவைக்கும் என் ஆசாரியருடன் அவருக்கு உதவியாக சென்னையில் நடந்த ஒரு திருமண வைபவத்திற்க்கு மாப்பிள்ளை வீட்டினர் சார்பாக சென்றிருந்தேன்
அங்கு முதல்நாள் திருமணமாகபோகும் மாப்பிள்ளைக்கு நிச்சயதார்த்தம் செய்வித்து மறுநாள் காலை மாப்பிள்ளைக்கு விரதம் முடித்து வைத்து பஞ்சகச்சம் செய்வித்து காசியாத்திரை வரை அவருடன் சென்று விட்டு திருமணம் ஆன பின் மாப்பிள்ளையும் பெண்ணையும் கிரஹப்பிரவேசம் செய்து வைப்பதற்காக காத்திருந்தோம்
விஷயம் அதுவல்ல
பெண் வீட்டின் சார்பாக வந்திருந்த என் வைதீக ஆசாரியரை போல் வந்திருந்த வைதீக ஆசாரியார் மாப்பிள்ளைக்கு மணப்பெண்ணின் தகப்பானார் மூலம் தசதானம் கன்னியாதானம் செய்வித்து திருமாங்கல்ய தாரணம் செய்விக்க முதலில் பெண்வீட்டார் சார்பாக வாங்கிய திருமாங்கல்யத்தை கழுத்தில் அணிவிக்க சொன்னபோது அடியேனுடைய ஆசாரியர் அவரிடம் காதோரமாக சென்று முதலில் மணமகன் வீட்டு திருமாங்கல்யத்தை தான் அணிவிக்கனும் என்பதை எடுத்து கூறி முதலில் மணமகன் வீட்டு திருமாங்கல்யத்தை அணிவித்து மணமகன் சகோதரிகள் உதவியுடன் மூன்று முடிச்சு போட செய்தார்(கடந்த பதினைந்து இருபது வருட காலமாக பெண்வீட்டாரும் மாங்கல்யம் வாங்குவதால் வந்த குழப்பம் பூர்வத்தில் இப்பழக்கம் கிடையாது)
மணமகன் கன்னிகையை அவளது தகப்பனாரிடம் தானமாக பெற்று தன் மனைவியாக அவளை ஏற்றுக்கொண்டு ஆசீர்வதிக்கும் முகமாக அதாவது
என் ஜீவனாக வந்துள்ள நீ இந்த மங்கள நாணை கட்டிக்கொண்டு நூறாண்டு காலம் வாழ்க
என வாழ்த்தி தன்குடும்பத்தின் சார்பாக அவளுக்கு ஒரே ஒரு மங்கள நாணை மட்டும் அணிவிக்க அவரது சகோதரிகள் உதவியுடன் மூன்று முடிச்சு போட்டு தன்னுடன் இணைத்துக் கொள்வதே திருமாங்கல்ய தாரணம் இன்னும் சொல்லப்போனால் இது கலிகாலத்தில் நம்பிக்கையின் பால் கொண்டுவந்த ஒன்றே தவிர வேறு வைதீக முக்கியத்துவம் ஏதும் இருப்பதாக தெரிய இல்லை
பெண்ணை தானம் பெற்றவர் சபையினர் முன் தான் அதனை ஏற்றுக்கொண்டதற்கான அடையாளமாக ஒரே ஒரு முறை செய்விக்கும் ஒரு நிகழ்சி
இதில் ஆக்சன் ரீபிளே மாதிரி இன்னுமொரு திருமாங்கல்ய தாரணம் பெண்வீட்டார் சார்பாக செயவிப்பது பூர்வத்தில் கிடையாது என்றும்
திருமாங்கல்யம் செயவித்து அவளை மந்திரபூர்வமாக சப்தபதி ( ஏழு அடிகள் மணமகள் வலதுகையை தன் வலது கரத்தால் பற்றிக் கொண்டு இடது கையாள் அவளது வலதுகால் கட்டவிரலை பிடித்துக் கொண்டு நடக்க செய்து அம்மி மீது வைக்ச்செய்து பாணிக்கரணம் செய்து) செய்த பின் தான் அவள் அவனுக்கு மனைவியாகிறாள்
ஆண்டாள் ஆயனுக்காக தான் கண்ட கனாவில் கூட மந்திர கோடியுடுத்தி காப்பு கட்ட பின்னர் ஒரு காளை புகுவது போல் புகுந்து கைத்தலம் பற்ற கனா கண்டேன் மந்திரத்தால் பாசிலை நாணல் படுத்து பரிதிவைத்து என் கை மேல் அவர் கை வைத்து தீவலம் செய்ய கனாகண்டேன் அவன் கையாள் என் தாள் பற்றி அம்மி மிதிக்க கனா கண்டேன் என்றும் பாடியுள்ளாளே தவிர அப்பாடலில்
மாங்கல்ய தாரணம் அல்லது மங்களநாண் செய்து கொண்டது போல் கனா கண்டதாக கூட பாடவில்லை
இந்த மணமகன் கட்டும் திருமாங்கல்ய தாரணம் என்பது இந்த கலியுகத்தில் ஒரு நம்பிக்கையின் பாற்பட்டு வந்ததாக மட்டுமே கூட இருக்கலாம்
ஆனால் பெண்வீட்டார் மேலும் ஒரு திருமாங்கல்யம் கட்ட சொல்வது மணமகனே உனக்கு என் பெண்ணை தானமாக ( கன்னிகாதானம்) செய்வித்தாலும் எங்களுடனான அவளது உறவை மீண்டும் தொடருவோம் என்று கூறும் விதமாக அமைந்துள்ளதாகவே கருதவேண்டியுள்ளது
ஒரு இரண்டு மாத்த்திற்க்கு முன் திருக்குறுங்குடியில் எனது வைதீக ஆசாரியர் செய்து வைத்த திருமணத்தில் மணப்பெண் தாயார் தன்னால் பெண்வீட்டு திருமாங்கல்யம் வாங்க வசதியில்லாதது குறித்து மணமகன் பெற்றோருடன் பேச அவர்கள் திருமாங்கல்யம் மணமகன் வீட்டில் மட்டுமே வாங்கவேண்டிய ஒன்று அதனால் நீங்கள் வாங்கவேண்டியதில்லை என கூறி அந்த பெண்ணை தங்கள் மகனுக்கு திருமணம் செய்துகொண்டனர் எவ்வளவு நல்ல உள்ளம் இதுவும் எம் ஆசான் கூறியதே
நமது அன்பான வேண்டுகோள் திருமாங்கல்யம் என்பது மணமகன் வீட்டு பங்கே தவிர மணமகள் வீட்டிற்க்கு சம்பந்தமில்லாதது
இதனை இன்றய தலைமுறையினருக்கு புரியவைத்து முதியோர்கள் அவசியமில்லாத இந்த ஆடம்பர செலவை குறைத்து வேறு ஒரு நல்ல பொருளுக்கு தேவையானால் செலவழிக்கலாமே அல்லது இதற்கான செலவை மிச்சபடுத்தலாமே
பூர்வத்தில் இல்லாத ஒன்றை ஆக்சன் ரீபிளே செய்யவேண்டாமே!
ஜெய் ஶ்ரீராம்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக