ராதே கிருஷ்ணா 30-11-2016
அகண்டநாம ஜபம்
அகண்டநாம ஜபம்
ஸ்வாமி சில இடங்களில் அகண்டநாம ஜபம் என சொல்லி வால்போஸ்டர் அடித்து பங்குகொள்ள சொல்லுகிறார்களே அகண்டநாம ஜபம் என்பது இராம நாமாவை உச்சரிப்பதா?
ஸ்வாமி ஜபம் என்பது ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை அல்லது நாமாவை உச்சரிப்பது என்பதாகும்
ஜபத்தில் பலவகை உண்டு அது தபஸ் என்பதுவரை அதாவது பலவருடங்கள் மனதை ஒருநிலை படுத்தி செய்வது
அடியேனுக்கு தெரிந்த குறிப்பிட்ட ஏழு வகை ஜபத்தை மட்டும் இங்கே தெரிவிக்கிறேன்
வாசிக ஜபம் – உரக்க வாய்விட்டு { பிறர் கேட்கக் கூடிய அளவுக்கு } ஜபம் செய்வது வாசிக ஜபம் எனப்படும்.
உபாம்சு ஜபம் – ஒலி வெளியே எழுப்பாமல், உதடுகளும் நாக்கும் அசைய மந்திரத்தை உச்சரிப்பது உபாம்சு ஜபம் எனப்படும்.
மானஸ ஜபம் – இந்த முறையில் புனித மந்திரம் மனதிற்குள்ளேயே ஜபிக்கப்படுகிறது.
பொதுவாக பெரியவர்கள் காயத்ரி உட்பட எந்த ஒரு ஜபத்தையும் தரையில் ஒரு ஆசனம் போட்டு அமர்ந்து கொண்டு கண்ணை மூடிக்கொண்டு மனத்திற்குள்ளேயே சொல்ல சொல்வார்கள்
காரணம்
சாதாரண வீட்டில் செய்யும் அல்லது பல இடங்களில் செய்யும்பூஜையைக் காட்டிலும் வாசிக ஜபம் பத்து மடங்கு மேலானது.
அதைவிட உபாம்சு ஜபம் பத்து மடங்கு உயர்ந்தது,
உபாம்சு ஜபத்தைக் காட்டிலும் மானஸ ஜபமானது 1000 மடங்கு உயர்ந்தது. அதிகமான விரைவாக பலனை தர கூடியது. என்று “ மனு சம்ஹிதை “ என்ற நூல் கூறுகிறது.
எனவே தான் மானஸ ஜபம் செய்ய பெரியோர்கள் சொல்வர்.
எனவே தான் மானஸ ஜபம் செய்ய பெரியோர்கள் சொல்வர்.
லிகித ஜபம் – புனித மந்திரத்தை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை எழுதுவது என்பது லிகித ஜபமாகும். உதாரணமாக பல பெரியவர்கள் அல்லது ஆஸ்திக ஜமாஜங்கள் நோட்டுகளில் "ஶ்ரீராமஜெயம்" என எழுதி வரச்செயவார்கள்.இதை லிகித ஜபம் என்பர்
தேவரீர் கேட்ட அகண்ட ஜபம் –
இதில் புனித மந்திரமானது அல்லது நாமமானது ஒரு குறிப்பிட்ட நேரம் இடைவிடாமல் ஜபிக்கப்படுகிறது.
ஹோமங்கள் செய்யும் போது இத்தனை ஆகுதிகளாக செய்ய சங்கல்பம் செய்வதும்
ஹோமங்கள் செய்யும் போது இத்தனை ஆகுதிகளாக செய்ய சங்கல்பம் செய்வதும்
மேலும் பல இடங்களில் இதை கூட்டு வழிபாடாகவும் செய்வது வழக்கம்.
அஜபா ஜபம் – இறைவன் நாமத்தை எந்த நேரமும் ஒவ்வொரு மூச்சுடனும் இடைவிடாமல் ஓதி வருவதே அஜபா ஜபமாகும்.
ஆதார சக்ரங்களில் ஜபம் – புரஸ்சரணம்: இதை சில யோகா மையங்கள் சொல்லி தருகின்றன
இந்த முறையில் நமது உடலிலுள்ள மூலாதாரத்தில் தொடங்கி, சக்ஸ்ராரம் வரையிலுள்ள ஒவ்வொரு சக்ரத்திலும் மனதை நிலைநிறுத்தி ஜபமும், தியானமும் பழகப்படுகிறது.
இதில் ஒவ்வொரு நிலையையும் தாண்டி சக்ஸ்ராரத்தை அடைந்தவுடன்
சாதகனானவன், மீண்டும் சகஸ்ராரத்தில் தொடங்கி ஒவ்வொரு ஆதாரமாக மனதை நிறுத்தி ஜபம் செய்து மூலாதாரத்தில் முடிப்பது புரஸ்சரணம் எனப்படும்.
பொதுவாக ஜபம் செய்ய சுத்தமான இடம் தேவை என்பர் ஆனால் நாம் ஜபம் செய்து பழக பழக மனம் நாம் தூங்கும் போதும் நடக்கும்போதும் பயணம் செய்யும் போது ஏன் நாம் அலுவலகவேலையாக இருக்கும் போதும் அன்னிச்சையாக செய்ய தொடங்கிவிடும். அப்போது மனமே சுத்தமாகி உள்ளதால் வேறு சுத்தம் தேவையில்லை,
எல்லா ஜபங்களையும் விட காயத்ரி ஜபம் ரொம்ப முக்கியமானது
இதை சொல்ல ஒருவனுக்கு கண்டிப்பாக யக்ஞோபவீதாரணம் மற்றும் பிரம்மோபதேசம் ஆகியிருக்க வேண்டும் எனவே தான் பெண்கள் இதை உச்சாடணம் செய்ய கூடாது என்கின்றனர்
அப்படி இல்லாமல் இம்மந்திரத்தை உச்சாடணம் செய்தால் பலனில்லாமல் ரிவர்ஸ் எபெக்ட் ஆக காரணமாகி விடும்
காயத்ரி ஜபத்தை எந்த காரணத்தை கொண்டும் மானஸ ஜபமாக அன்றி வாசிக உபாம்சுவாக கூட சொல்லக்கூடாது .
இந்த காரணத்தை முன்னிட்டுதான் உபநயனத்தில் தந்தை பிரும்மாவாகவும் தாய் பிரும்ம பத்னியாகவும் அமர்ந்து வாத்யார் தந்தைக்கு மெதுவாக சொல்ல அதை தந்தை உபநயன குழந்தைக்கு வெளியே சப்தமே வராமல் காதில் உபதேசமாக செய்யும் ( பிரம்மோபதேசம்) முறையில் முன்னோர் அமைத்துள்ளனர்.
நம்மில் சிலர் காயத்ரி மந்திரத்தை பலர் காதுபட உரக்க, மொபைல் ரிங் டோன் ஆக வீட்டில் ஒரு மந்த்ரம் சொல்லும் மெஷின் மூலமாக சொல்லுவது கேட்பது என்பது கூடாத ஒன்று எந்தவித பலனும் தரயியலாத்து.
எனவே தான் பல அகண்டஜபம் செய்யும் இடங்களில் கலந்து கொள்ளும் அணைவருக்கும் பயன்படும்படியாக "கம்பன்" அறுதியிட்டு சொன்ன
"நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே ஜென்மமும் மரணமும் இன்றி தீருமே இம்மையே
இராமா என்ற இரண்டு சொல்லினால்"
இராமா என்ற இரண்டு சொல்லினால்"
என்ற கூற்றுபடி இராம நாமாவை அகண்டநாம ஜபமாக பெரியோர்கள் சொல்கிறார்கள். தன்யோஸ்மி.
ஜெய் ஶ்ரீராம்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக